ஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)

ஆயுத மனிதன்

(The Man of Destiny)

(ஓரங்க நாடகம்)

ஆங்கில மூலம் :ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

 

“எனது ஓய்வு காலத்தில் நான் எனது உடைவாளை மயிலிறகாக மாற்றிக் கொள்வேன். என் அரசாட்சி வரலாற்றில் அது வியப்பூட்டலாம். இதுவரை அவர் எனது போலி நிழல் வடிவை மட்டுமே கண்டிருக்கிறார். இப்போது என் நிஜ உருவத்தைக் காட்டப் போகிறேன். எத்தனை தோற்றங்களைத் தான் நான் வெளிப்படுத்த முடியும் ? பல மனிதருக்கு என் பொய்யுருவே தெரிந்திருக்கிறது. ஆயிரக் கணக்காக நான் வெறுக்கத் தக்கவற்றை நாட்டுப் பாரமாக நிரப்பி வந்திருக்கிறேன். முடிவில் எனக்கு அவை என்ன செய்துள்ளன ? என்னை நயவஞ்சகத்தில் எல்லாம் தள்ளிவிட்டன !”

நெப்போலியன் (1769–1821)

“எனது வணிக யுத்தம் வெற்றி பெறுவது ! நான் அதில் கைதேர்ந்தவன் ! நானே என் இலியட் இதிகாசத்தை (Greek Epic Iliad -The Siege of Troy) உருவாக்குகிறேன் ! அனுதினமும் அதைத்தான் நான் ஆக்கி வருகிறேன்.”

“படைவீரன் ஒருவன் வர்ண நாடா (Coloured Ribbon) ஒன்றைப் பெறக் கடுமையாக நீண்ட காலம் போரில் சண்டை செய்வான்.”

“இரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒற்றர்களின் வாயிலிருந்து அவற்றை வரவழைக்கத் துன்புறுத்தும் காட்டிமிராண்டித்தனமான பழக்க முறை தவிர்க்கப் பட வேண்டும். இம்மாதிரி அவரைச் சித்திரவதை செய்து கேள்விகள் கேட்பதால் பயனுள்ள எதுவும் விளையாது.”

நெப்போலியன், “யுத்தக் கலை” (1798)

நூற்றாண்டுகளாய்

மங்கலாகச் சிந்தித்து

தோற்றம் பெற்ற வற்றை

நெப்போலியன் உள்ளம்

ஒளிமயத் தெளிவுடன் ஆய்ந்து

உளவு செய்யும் !

அற்ப மானவை எல்லாம்

ஆவி யாகப் போகும் !

கடலும் புவியும் தவிர இவரிடம்

கனத்தது எதுவு மில்லை !

நெப்போலியனைப் பற்றி ஜெர்மன் மேதை காதே (Goethe)

“அரசக் கிரீடம் என்பது வெல்வெட்டுத் துணியால் சுற்றப்பட்ட ஒரு வெறும் மரக்கட்டை !”

“போரில் தோல்வி அடைவதற்குக் காரணம் போரிடும் படைவீரர் அல்லர். அவரை வழி நடத்திச் செல்லும் போர்த் தளபதிகள்தான்.”

“போர்ப் படை வீரர்கள் தமது வயிறு நிரம்பியதைப் பொருத்தே போரில் தீவிரப் பங்கு கொள்வார்”

“போரின் வெற்றிக்குப் படைவீரர் போர்க் குணமும் ஒருவருக் கொருவர் இணைந்த தொடர்பும் முக்கால் பங்கு. படையாளர் எண்ணிக்கையும், தளவாடச் சாதனங்களும் மீதிக் கால் பங்கு.”

நெப்போலியன்

“ஆறு வயதில் நானொரு சமையல்காரனாக ஆக ஆசைப்பட்டேன். ஏழு வயதில் நெப்போலியனாக ஆக விரும்பினேன். அதற்குப் பிறகு என் பேராசை பெருகிக் கொண்டே போகிறது.”

“என்னைக் கொல்லக் போகும் அந்த ஒரு புல்லட் இன்னும் உருவாக்கப்பட வில்லை.”

“மேலிருந்து கேலிக்குட்பட்டுத் தடுமாறி விழ ஒரு படிக்கட்டு போதும்.”

நெப்போலியன்

 

நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:

ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெஃப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெஃப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் சக்ரவர்த்தி (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெஃப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலன் : ஓர் ஆஸ்டிரியப் பெண் (21 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உணவை வேகமாய் எடுத்து விழுங்குகிறான் நெப்போலியன்.  மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெஃப்டினென்ட்) தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான்.  வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான்.  வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான்.  ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான்.  அந்த முயற்சியில் இறுதியில் கடிதங்களைப் பெற்று கொள்கிறான். பிறகு லெஃப்டினென்டை எழுப்பி அரசாங்கக் கடிதங்களைக் களவாடிய கள்வனைப் பிடித்து வர அனுப்புகிறான்.)

கியூஸெப்: (மலர்ந்த முகத்தோடு) இன்று எங்களுக்கு ஒரு பொன்னாள் ! மேன்மை தங்கிய சக்ரவர்த்தி தங்கள் வருகையால் எங்கள் விடுதி பெருமைப் படுகிறது !

நெப்போலியன்: (படத்தில் முழுக் கவனத்தைச் செலுத்திக் கொண்டு) எதுவும் பேசாதே ! என் கவனத்தைக் கலைக்காதே !

கியூஸெப்: தங்கள் ஆணைப்படி செய்கிறேன் பிரபு .

நெப்போலியன்: (சட்டெனத் திரும்பி) கொஞ்சம் சிவப்பு மை கொண்டு வா !

கியூஸெப்: ஐயோ சக்ரவர்த்தி ! என்னிடம் சிவப்பு மை இல்லையே !

நெப்போலியன்: (கடுமையாக) எதையாவது கொன்று குருதியைக் கொண்டு வா !

கியூஸெப்: (தயங்கிக் கொண்டு) மேதகு சக்ரவர்த்தி ! என்னிடம் எதுவும் இல்லை ! வெளியே உங்கள் குதிரை ! சிப்பாய் ! விடுதியில் என் மனைவி ! மாடி அறையில் ஓரிளம் பெண் !

நெப்போலியன்: (கோபத்துடன்) உன் மனைவியைக் கொல் !

கியூஸெப்: மேதகு சக்ரவர்த்தி ! அது முடியாத காரியம் ! என் மனைவிக்கு என்னை விடப் பலம் உள்ளது ! அவள்தான் என்னைக் கொன்று போட்டு விடுவாள் !

நெப்போலியன்: அப்படியானாலும் சரி ! அல்லது போ வெளியே சிட்டுக் குருவி, காக்கா எதையாவது சுட்டுக் கொண்டு வா ?

கியூஸெப்: எனக்குச் சுடத் தெரியாது பிரபு ! துப்பாக்கியும் கிடையாது ! நான் கொஞ்சம் சிவப்பு ஒயின் கொண்டு வரட்டுமா ?

நெப்போலியன்: ஒயினா ? வேண்டாம். அதை வீணாக்கக் கூடாது !

கியூஸெப்: ஒயின் குருதியை விட மலிவானது பிரபு !

நெப்போலியன்: (ஒயினைக் குடித்துக் கொண்டு) உன்னைப் போன்றவர்தான் உலகில் அதிகம். ஒயினை வீணாக்காதே !

(உருளைக் கிழங்கு மேல் ஊற்றிய குழம்பை எடுத்து வரைப்படத்தில் குறியிட்டுக் கொள்கிறான். வாயைத் துண்டால் துடைத்துக் கொண்டு காலை நீட்டிச் சாய்கிறான்.)

கியூஸெப்: (மேஜைத் தட்டுகளை எடுத்துக் கொண்டு) எங்கள் விடுதியில் ஒயின் பீப்பாய்கள் நிறைய உள்ளன. நாங்கள் எதையும் வீணாக்குவ தில்லை. உங்களைப் போன்ற உயர்ந்த ஜெனரல்கள் மலிவான குருதியை நிரம்ப வைத்திருப்பீர் ! ஆனால் நீங்களும் இரத்தம் சிந்துவதில்லை !

(மேஜை மீது யாரோ விட்டுச் சென்ற ஒயின் மிச்சத்தைக் குடிக்கிறான்)

நெப்போலியன்: கியூஸெப் ! குருதிக்குப் பண மதிப்பில்லை ! அதுதான் மலிவு ! ஆனால் பணம் கொடுத்துத்தான் ஒயினை வாங்க வேண்டியுள்ளது ! (கனல் அடுப்பு அருகில் செல்கிறான்)

கியூஸெப்: நான் கேள்விப் பட்டிருக்கிறேன் ! நீங்கள் எதன் மீதும் கவனமாக இருப்பீராம் மனித உயிரைத் தவிர !

நெப்போலியன்: (புன்னகையுடன்) தோழனே ! மனித உயிர் ஒன்றுதான் தானே தன்னைக் கவனித்துக் கொள்கிறது ! (ஆசனத்தில் அமர்கிறான்) உயிருக்குப் பயந்தவன் வாழ முடியாது. சுதந்திரம் வேண்டுமென்றால் கில்லட்டினால்தான் முடியும் ! அமைதியை நிலைநாட்டப் புரட்சியை உண்டாக்க வேண்டும் ! பிரெஞ்ச் புரட்சி நினைவிருக்கிறதா ?

கியூஸெப்: எங்களுக் கெல்லாம் அறிவு மட்டம் உங்களோடு ஒப்பிட்டால் ! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் உங்கள் சாதிப்புகளின் ரகசியம் என்ன ? தெரியாது எங்களுக்கு !

நெப்போலியன்: நீ இத்தாலியின் சக்ரவர்த்தியாய் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள் ! என்ன புரியுதா ?

கியூஸெப்: அது நிரம்பத் தொல்லை சக்ரவர்த்தி ! அரசாங்கப் பொறுப்பு வேலை யெல்லாம் உங்களுக்குத்தான் ! நான் இத்தாலிக்குச் சக்ரவர்த்தி யானால் என் விடுதியை யார் நடத்துவது ? நான் பரபரப்பாய் விடுதியில் வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தாங்கள் ஐரோப்பாவுக்கே மகா சக்ரவர்த்தியாகி இத்தாலிக்கும் வேந்தரானால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் !

நெப்போலியன்: (புன்னகை புரிந்தவாறு) என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்துக் சொல்கிறாயே ! ஐரோப்பியச் சக்கரவர்த்தியா ? ஐரோப்பாவுக்கு மட்டும்தானா ?

கியூஸெப்: தவறிச் சொல்லி விட்டேன். உலகத்துக்கே சக்ரவர்த்தியாக வர வேண்டும் தாங்கள் ! ஒருத்தனைப் போல் மற்றொருவன் ! ஒரு நாட்டைப் போல் மற்றொரு நாடு ! ஒரு போரைப் போல் மற்றொரு போர் ! உங்களுக்கு இருக்கும் போர் அனுபவம் யாருக்குள்ளது ? ஒரு நாட்டை முறியடிப்பது போல்தான் அடுத்த நாட்டை பிடிப்பதும் !

நெப்போலியன்: கியூஸெப் ! நீ எனக்கு மந்திரியாக இருக்கத் தகுதி உள்ளவன் ! போரிட்டு அடிமையாக்க வேண்டும் நான் எல்லா நாடுகளையும் ! ஒவ்வொரு நாட்டுக்கும் நான் அதிபதியாய் ஆக வேண்டும் ! ஆசிய நாடுகள் மீதும் எனது கண்ணோட்டம் உள்ளது ! குறிப்பாக பிரிட்டீஷ்காரரை விரட்டி இந்தியாவுக்கும் வேந்தனாக வேண்டும் ! அதற்காக சூயஸ் கால்வாயை வெட்ட நான் திட்டங்கள் தீட்டி வருகிறேன் ! இந்தியாவின் ஏகச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! மகா அலெக்ஸாண்டர் அப்படித்தான் செய்தார் ! அவர் தரை வழியாகப் போனார் ! நான் கடல் வழியாகப் போகத் திட்டமிடுகிறேன் !

கியூஸெப்: நல்ல யோசனை பிரபு ! ஆனால் அதற்கு முதலில் கால்வாய் வெட்ட வேண்டுமே எகிப்தில் !

நெப்போலியன்: அந்தப் பெரிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற எனது எஞ்சினியரை நியமித்திருக்கிறேன். இந்த பிரிட்டீஷ் வணிக நரிகளை எல்லா நாடுகளிலிருந்தும் விரட்டி அடிப்பது எனது குறிக்கோள்களில் ஒன்று. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எதுவும் சொல்லாதே !

கியூஸெப்: (அருகில் வந்து குனிந்து பணிந்து) மன்னிக்க வேண்டும் பிரபு. நான் ஒரு சாதாரண விடுதிக்குச் சொந்தக்காரன் ! நீங்கள் பிரான்சின் மாபெரும் தளபதி. இப்படி யெல்லாம் நான் தங்களிடம் பேசக் கூடாது. மேன்மை மிகும் நீங்கள் மற்ற வீரத் தலைவரைப் போன்றவர் அல்லர். யுத்தக் கலையில் உங்களுக்கு நிகர் வேறு யார் ? நீங்கள் ஒருவரே !

நெப்போலியன்: அப்படியா ? என்னைப் பற்றி இத்தாலியச் சிற்றூரில் கூடப் பரவியுள்ளதே ! வேறென்ன சொல்கிறார் என்னைப் பற்றி !

கியூஸெப்: ஆஸ்டிரியப் படைகளை முறியடித்து இத்தாலியைக் காத்த மாவீரர் அல்லவா தாங்கள் ! ஒன்று உங்களிடம் கேட்க வேண்டும் பிரபு ! உங்களுக்குத் தெரியுமா மேல் மாடியில் புதிதாய் இன்று வந்து தங்கியுள்ள ஓரிளம் பெண்ணை !

நெப்போலியன்: (நிமிர்ந்து தலைதூக்கி) இளம் பெண்ணா ? அந்தப் பெண்ணுக்கு வயதென்ன ?

கியூஸெப்: நல்ல வனப்பான வாலிப வயதுதான் !

நெப்போலியன்: வயதை எண்ணிக்கையில் சொல் ! பதினாறா அல்லது இருபதா ?

கியூஸெப்: முப்பது வயது இருக்கலாம் பிரபு !

நெப்போலியன்: பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருப்பாளா ?

கியூஸெப்: அழகு ஒப்புமையானது பிரபு ! அது அவரவர் விழியைப் பொருத்தது ! உங்கள் கண் மூலம் நான் காண முடியாது ! ஒவ்வொரு மனிதனும் அழகைத் தீர்மானிக்க வேண்டும். என் கருத்து அவள் ஒரு கவர்ச்சியான பெண் என்பது. இந்த மேஜைக்கு அவள் வந்து அமர நான் ஏற்பாடு செய்யவா ?

நெப்போலியன்: (எழுந்து நின்று) வேண்டாம். இந்த மேஜையில் எதுவும் செய்யாதே. நான் வரைப்படத்தை விரித்து வைத்துள்ளேன் ! யாரும் அதைப் பார்க்கக் கூடாது. நான் காத்திருக்கும் என் படையாள் வரும் வரை யாரையும் நான் சந்திக்க விரும்ப வில்லை. (தன் சங்கிலிக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். இங்குமங்கும் பரபரப்பாய் நடக்கிறான்.)

கியூஸெப்: ஓ உங்கள் படையாளியா ? இத்தனை நேரமாக வராமல் இருப்பதற்குக் காரணம் ? பிரபு ! வழியில் அவனை ஆஸ்டிரியப் பகைவர் பிடித்திருப்பார். தப்பி வந்திருந்தால் இப்படித் தாமதம் செய்வானா ?

நெப்போலியன்: (கோபத்துடன்) அப்படி நடந்திருந்தால் என் ஆறாக் கோபத்துக்கு சிலர் ஆளாவார் ! முதலில் அப்படி சொன்ன உன்னைத் தூக்கிலிடுவேன் ! அடுத்து உன் மனைவி. அப்புறம் மேல்மாடி அழகி. அத்தனை பேர் தலைகளும் தரையில் உருண்டோடும் !

கியூஸெப்: தூதரைக் கொல்வீரா ? ஆனால் தயவு செய்து என் மனைவியை விட்டு விடுங்கள் ! அப்பாவி அந்த இளம் பெண் இதில் ஒன்றும் பங்கெடுக்காதவள் !

நெப்போலியன்: உன்னை ஒருபோதும் தூக்கிலிட மாட்டேன். உயிரை இழக்க எதிர்ப்புக் காட்டாதவனைக் கொல்வதில் என்ன பயன் ?

கியூஸெப்: உண்மைதான் பிரபு ! என்னுயிர் பிழைத்தது ! ஐயமின்றி நீங்கள் பெரிய மனிதர் ! பொறுப்பதில் உங்களை மிஞ்சுவோர் இல்லை. நியாயத்தை நிறுத்துப் பார்ப்பதில் நீங்கள்தான் உயர்ந்த நியாதிபதி !

நெப்போலியன்: போதும் உமது முகத்துதி ! வாயை மூடு. போ வெளியே நில் ! என் படையாளி வந்தவுடன் உள்ளே அவனை அழைத்து வா ! (மறுபடியும் வரைப்படத்தில் கவனம் செலுத்து கிறான்)

கியூஸெப்: அப்படியே செய்கிறேன். அவன் வருகையை உடனே தெரிவிக்கிறேன் (வெளியே போகிறான்)

நெப்போலியன்: (வரைப்படத்தைப் பார்த்து மௌனமாக முணுமுணுத்து) முதலில் இத்தாலி, அடுத்து ஆஸ்டிரியா, அப்புறம் ஹாலண்டு. அடுத்த ஆண்டுக் கடைசியில் எகிப்து ! சூயஸ் கால்வாய்த் திட்டம் துவங்க வேண்டும். இந்தியாவுக்குப் புதிய கடல் மார்க்கம் சூயஸ் வழியாக !

Napoleon Europe

 

பெண்ணின் குரல்: (தூரத்திலிருந்து இனிமையான குரலில்) கியூ……..ஸெப் ! ஹலோ ! கியூஸெப் ! எங்கே இருக்கிறாய் ? காது கேட்கிறதா ?

நெப்போலியன்: யார் குரல் அது ?

கியூஸெப்: (உள்ளே எட்டிப் பார்த்து) அதுதான் பிரபு ! மேல்மாடி அழகி ! அவள் பேசுவது இசைபோல் இனிக்கும் !

நெப்போலியன்: மேல்மாடி மங்கையா ?

கியூஸெப்: அவள் ஓர் அதியசப் பெண் ! புதிரானவள் ! பிரபு !

நெப்போலியன்: அதியசப் பிறவியா ? பெண் எப்போதும் புதிரானவள்தானே ! அவள் எந்த நாட்டுக்காரி ? எப்படி வந்தாள் ?

கியூஸெப்: யாருக்குத் தெரியும் ? தாங்கள் குதிரை வாகனத்தில் வந்து தங்குவதற்குச் சற்று முன்னேதான் அவள் வந்தாள். யாரும் அவளுடன் வரவில்லை. ஒரு பெட்டி, கைப் பையுடன் வந்தாள். அவள் வாகனத்தை ஓட்டி வந்தவன் அவள் குதிரையை “கோல்டன் ஈகிள்” விடுதியில் விட்டு வந்ததாகச் சொல்கிறான். அவளது குதிரை அலங்கார அணிகள் பூண்டிருந்ததாம்.

நெப்போலியன்: என்ன ? அணிசெய்த குதிரையோடு ஓரிளம் மங்கையா ? அவள் ஆஸ்டிரிய நாட்டிச் சேர்ந்தவளா ? அல்லது பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவளா ?

கியூஸெப்: பிரெஞ்ச் நாடாக இருக்கலாம்..

நெப்போலியன்: ஐயமின்றி அது அவளது கணவனின் குதிரை ! லோதி யுத்தத்தில் செத்துப் போயிருப்பான் ! பாவம் !

பெண்ணின் குரல்: (இனிமையாக) கியூஸெப் !

நெப்போலியன்: (எழுந்து நின்று) நேற்றுப் போரில் இறந்தவன் மனைவி, வாயில் வரும் குரல் இல்லை அது !

கியூஸெப்: கணவர்கள் செத்துப் போவது எப்போதும் துக்கமாக இருப்பதில்லை பிரபு ! (பெண் குரல் வரும் திசை நோக்கி) இதோ வருகிறேன் பெண்ணே ! (உள்ளெ போகிறான்)

நெப்போலியன்: (அவனைத் தடுத்து நிறுத்தி) நில் போகாதே ! அவளே இங்கு வரட்டும்.

பெண்ணின் குரல்: (பொறுமை இழந்து) கியூஸெப் ! இங்கு சற்று வருகிறாயா ?

கியூஸெப்: பிரபு ! என்னை அனுமதியுங்கள். என் கடமை அது ! யாரும் என்னுதவியைத் தேடி விடுதியில் அழைத்தால் நான் உடனே போக வேண்டும்.

ஆடவன்: (அப்போது வெளியிலிருந்து ஆடவன் ஒருவன் குரல் கேட்கிறது) விடுதியின் அதிபரே ! எங்கிருக்கிறீர் ? (தடதட வென்று பூட்ஸ் சத்தமுடன் ஓர் இராணுவ அதிகாரி நுழைகிறான்.)

நெப்போலியன்: (அவசரமாய்த் திரும்பி) அதோ ! என் படையாளி வந்து விட்டான். போ நீ உள்ளே ! அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சனை என்று கேள் !

(கியூஸெப் உள்ளே போகிறான்.  உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் வருகிறான். நெப்போலியனைக் கண்டதும் நிமிர்ந்து நின்று சல்யூட் செய்கிறான்.)

நெப்போலியன்: (பொறுமை இழந்து) கடைசியாய் வந்து சேர்ந்தாயே ! என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ? காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ? ஏன் தடுமாறுகிறாய் ? என்ன நடந்தது ? குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ? விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ ! குதிரைக்கு ஒரு கால் போனதா ? அல்லது உனக்கு ஒரு கை போனதா ?

லெஃப்டினென்ட்: (நடுங்கிக் கொண்டு) குதிரை காணாமல் போனது பிரபு ! நடந்து வர வில்லை ! ஓடி வந்தேன் ! களைத்துப் போய் வாய் குழறுகிறது.

நெப்போலியன்: எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?

லெஃப்டினென்ட்: (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !

நெப்பொலியன்: கடிதங்களுக்கு இறக்கை இல்லை ! அவை எப்படிக் களவு போகும் ?

லெ·ப்டினென்ட்: எனக்குத் தெரியாது பிரபு !

நெப்போலியன்: உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?

லெஃப்டினென்ட்: நான் பண்ணியது தவறுதான் பிரபு ! தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு ! படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை ! அதுதான் எனக்கு உகந்தது பிரபு !

நெப்போலியன்: என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே ! உன் வேலை என்ன ?

லெஃப்டினென்ட்: தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !

நெப்போலியன்: அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?

French War Uniform

லெஃப்டினென்ட்: பிரபு ! என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான். அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் ! வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் ! பார்த்தால் ஆடுபோல் தெரிவான் ! பாசாங்குக்காரன் !

நெப்போலியன்: எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ? குதிரை எப்படிக் காணாமல் போனது ? இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ? அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது ! ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடுபோல் வந்து நிற்கிறாய் !

லெஃப்டினென்ட்: அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு ! அதுதான் எனது முதல் வேலை !

நெப்போலியன்: உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது. போ முதலில் அதைச் செய் ! நான் காத்திருக்கிறேன். போ ! நில்லாதே என் முன்பு !

லெஃப்டினென்ட்: அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான். அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் ! என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் ! ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் ! ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !

நெப்போலியன்: அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !

லெஃப்டினென்ட்: அது மட்டுமில்லை ! அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !

நெப்போலியன்: ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?

லெஃப்டினென்ட்: என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !

நெப்போலியன்: அறிவு கெட்டவனே ! உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?

லெஃப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் ! என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !

நெப்போலியன்: மதி கெட்டவனே ! அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு ! உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே ! எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?

லெஃப்டினென்ட்: அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு ! அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் ! அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் ! காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !

நெப்போலியன்: அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ? போ போய் அவன் காலில் விழுந்து நமது கடிதங்களைப் பெற்று வா ! கையை முறிக்கவும் வேண்டாம். காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் ! அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?

லெஃப்டினென்ட்: அவனைப் பிடித்து வந்தவுடன் கேட்டுச் சொல்கிறேன் பிரபு ! அவனைப் பிடித்து வராமல் அதை எப்படி என்னால் சொல்ல முடியும் ?

நெப்போலியன்: ஒற்றன் ஒருபோதும் தான் யாரென்று சொல்ல மாட்டான் ! அவன் நகத்தை உரித்தாலும் சரி அல்லது தோலை உரித்தாலும் சரி யாருக்கும் சொல்ல மாட்டான் ! நீதான் மூடத்தனமாக ஒற்றனிடம் மாட்டித் தோல்வி அடைந்திருக்கிறாய் !

லெஃப்டினென்ட்: அத்தனை பழியையும் என்மேல் போடாதீர் பிரபு ! அவன் எப்படிப் பட்டவன் என்று முதலிலே நான் எவ்விதம் அறிய முடியும் ? நான் இரண்டு நாள் பட்டினி பிரபு ! எதுவும் உண்ணாமல், இரவில் உறங்காமல் கால் நடையில் இங்கு வந்திருக்கிறேன் (பெஞ்சில் மயங்கி உட்காருகிறான்.)

நெப்போலியன்: (உரக்கப் பேசி) கியூஸெப் ! இங்கே வா ! உடனே வா !

கியூஸெப்: (ஓடி வந்து பணிவுடன்) அழைத்தீரா பிரபு ?

நெப்போலியன்: (ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு) இந்த அதிகாரியை உள்ளே அழைத்துச் செல் ! முதலில் உண்பதற்கு உணவைக் கொடு ! ஓய்வெடுக்க அறையை ஏற்பாடு செய் ! இரண்டு நாள் பட்டினியாய் நடந்திருக்கிறான்.

கியூஸெப்: அப்படியே செய்கிறேன் பிரபு ! வாருங்கள் ஐயா !

(லெஃப்டினென்ட் மேஜை மீது உடைவாளைப் போட்டு விட்டு கியூஸெப் பின்னால் செல்கிறான்.)

நெப்போலியன்: (பொறுமை இழந்து) கடைசியாய் வந்து சேர்ந்தாயே ! என்ன ஆயிற்று ? ஏனிந்தத் தாமதம் ? காலையில் வர வேண்டிய கடிதங்கள் பகல் பொழுது கடந்தும் எனக்கு வரவில்லையே ? ஏன் தடுமாறுகிறாய் ? என்ன நடந்தது ? குதிரையில் போனவன் கால் நடையில் வந்தாயா ? விரைவாய்ப் போகும் குதிரையை ஓட்டிச் சென்றாய் நீ ! குதிரைக்கு ஒரு கால் போனதா ? அல்லது உனக்கு ஒரு கை போனதா ?

லெஃப்டினென்ட்: (நடுங்கிக் கொண்டு) குதிரை காணாமல் போனது பிரபு ! நடந்து வர வில்லை ! ஓடி வந்தேன் ! களைத்துப் போய் வாய் குழறுகிறது.

நெப்போலியன்: எங்கே இராணுவக் கடிதங்கள் ? குதிரை எப்படிக் காணாமல் போகும் ?

லெஃப்டினென்ட்: (தடுமாற்றமுடன்) கடிதங்கள் களவு போய் விட்டன பிரபு !

நெப்பொலியன்: கடிதங்களுக்கு இறக்கை இல்லை ! அவை எப்படிக் களவு போகும் ?

லெஃப்டினென்ட்: எனக்குத் தெரியாது பிரபு !

நெப்போலியன்: உனக்குத் தெரியாமல் களவு போனது என்று தெளிவாகச் சொல்கிறாய் ?

லெஃப்டினென்ட்: நான் பண்ணியது தவறுதான் பிரபு ! தண்டனை கொடுப்பீர் முதலில் எனக்கு ! படைக்குழு மன்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பீர் என்னை ! அதுதான் எனக்கு உகந்தது பிரபு !

நெப்போலியன்: என் வேலையை நீ எனக்குச் சொல்லாதே ! உன் வேலை என்ன ?

லெஃப்டினென்ட்: தகவல் கடிதங்களைத் தவறாமல், தாமதிக்காமல் கொண்டுவந்து தருவது !

நெப்போலியன்: அதை ஏனின்று செய்யத் தவறினாய் ?

லெஃப்டினென்ட்: பிரபு ! என்னை ஒரு கயவன் ஏமாற்றிவிட்டான். அவன் என் கையில் கிடைத்தால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன் ! வஞ்சகன், வாயாடி, மோசக்காரன் அவன் ! பார்த்தால் ஆடு போல் தெரிவான் ! பாசாங்குக்காரன் !

நெப்போலியன்: எப்படி நீ ஏமாந்தாய் என்று சொல் ? குதிரை எப்படிக் காணாமல் போனது ? இரகசியக் கடிதங்கள் எப்படிக் களவு போயின ? அந்தக் கயவன் ஓர் ஒற்றன் போல் தெரிகிறது ! ஒற்றனிடம் எல்லாக் கடிதங்களையும் இழந்து விட்டு நீதான் வெட்கமின்றி ஆடு போல் வந்து நிற்கிறாய் !

லெஃப்டினென்ட்: அந்த வஞ்சகனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன் பிரபு ! அதுதான் எனது முதல் வேலை !

நெப்போலியன்: உன் முதல் வேலை இரகசியக் கடிதங்களை என்னிடம் கொண்டு வருவது. போ முதலில் அதைச் செய் ! நான் காத்திருக்கிறேன். போ ! நில்லாதே என் முன்பு !

லெஃப்டினென்ட்: அந்தக் கயவன் என் சகோதரன் போல் நடித்தான். அவன் சகோதரியின் கண்கள் போல் என் கண்கள் இருக்கிறதாம் ! என் காதலி அஞ்சலிகா பிரிந்து போனதைக் கேட்டு உண்மையாகக் கண்ணீர் வடித்தான் அந்த வஞ்சகன் ! ஹோட்டலில் என்னுடன் உள்ள போது என் ஒயின் மதுவுக்கும் காசு கொடுத்தான் அந்தக் கயவன் ! ஆனால் உண்ணும் போது பிரெட்டை மட்டும் தின்று ஒயினை அவன் குடிக்கவில்லை ! அதையும் நீயே குடியென்று அன்பாகக் கொடுத்தான் எனக்கு அந்தப் பாசாங்குக்காரன் !

நெப்போலியன்: அதாவது உனக்கு ஒயினை ஊற்றிக் குடிபோதையை உண்டாக்கி விட்டான் அந்த ஒற்றன் !

லெஃப்டினென்ட்: அது மட்டுமில்லை ! அவனது கைத் துப்பாகி, குதிரை, கடிதங்களை என் கையில் கொடுத்தான் !

நெப்போலியன்: ஏன் அப்படிக் கொடுத்தான் உன்னிடம் ?

லெ·ப்டினென்ட்: என் நம்பிக்கையைச் சம்பாதிக்க பிரபு !

நெப்போலியன்: அறிவு கெட்டவனே ! உன் மூஞ்சில் ஒற்றன் ஒருவன் கரியைப் பூசி உன் கண்களைக் கட்டுவது எப்படித் தெரியாமல் போனது ?

லெஃப்டினென்ட்: அவன் என் மீது நம்பிக்கை காட்டியதும் நான் பதிலுக்கு என் நம்பிக்கையை அவன் மீது காட்டினேன் ! என் குதிரை, கைத் துப்பாக்கி, கடிதங்களை எல்லாம் அவனிடம் கொடுத்தேன் !

நெப்போலியன்: மதி கெட்டவனே ! அவன் உன்னை ஒரு மந்தியாக மாற்றியது கூடத் தெரிய வில்லையே உனக்கு ! உன் கடிதங்களை அபகரிக்க ஒற்றன் செய்த தந்திரம் கூடத் தெரிய வில்லையே ! எங்கே காட்டு, அவன் உனக்குக் கொடுத்த கடிதங்களை ?

லெஃப்டினென்ட்: அவற்றையும் அந்தக் கயவனே திருடி விட்டான் பிரபு ! அந்த வாலிபன் ஒரு நய வஞ்சகன் ! அகப்பட்டால் அவன் கையை முறித்து அடுப்பில் போடுவேன் ! காலை முறித்துக் கழுக்குக்கு இரையாக்குவேன் !

நெப்போலியன்: அதை எத்தனை முறைச் சொல்லுவாய் ? போ போய் அவன் காலில் விழுந்து நமது கடிதங்களைப் பெற்று வா ! கையை முறிக்கவும் வேண்டாம். காலை வெட்டிக் கழுகுக்கு இடவும் வேண்டாம் ! அந்த ஒற்றன் யார் என்றாவது தெரிந்து கொண்டாயா ?

லெஃப்டினென்ட்: (கேலியாக) பெண்ணழகியா அவள் ? அவள் ஓர் ஆடவன் ! என்னை ஏமாற்றிய எத்தன் உம்மையும் ஏமாற்றுகிறான் ! இந்த வஞ்சகனை நம்பாதீர் பிரபு !

ஹெலினா: (நெப்போலியன் பின்னால் ஓடி நின்று) அவனை நிறுத்துவீர் ஜெனரல் ! யாரையோ நினைத்து என்னைத் தூற்றுகிறான் ! மதி கலங்கி நிற்கிறான் !

நெப்போலியன்: நிறுத்து உன் புலம்பலை ! நெருங்காதே என்று நான் ஆணையிட்டும் நீ அவளை ஏன் மிரட்டுகிறாய் ? உன்னைக் கைது செய்கிறேன் ! முதல் குற்றம் : அரசாங்கக் கடிதங்களை இழந்தது ! இரண்டாம் குற்றம் : அழகிய பெண்ணை ஆடவன் என்று அடிக்கப் போனது ! மூன்றாவது குற்றம் : என் ஆணையை மீறியது !

லெஃப்டினென்ட்: மேதகு ஜெனரல் ! இவன் ஓர் ஆஸ்டிரிய ஒற்றன் ! வஞ்சிப்பது இவன் தொழில் ! வழிப்பறி செய்வது இவன் பணி ! என் கண்ணை நான் நம்புவதா இல்லையா ?

ஹெலினா: ஜெனரல் ! இவன் ஏசுவது என் சகோதரனை ! என்னைப் போலிருப்பவன் அவன் ! என் இரட்டைப் பிறவி ! ஆம் அவன் ஆஸ்டிரியப் படையில் இருக்கிறான்.

லெஃப்டினென்ட்: (வியப்புடன்) அப்படியா ? என்னை ஏமாற்றியவன் உன் சகோதரனா ? என்னால் நம்ப முடிய வில்லையே ! உன்னைப் போல் ஒருவனா ?

ஹெலினா: என்னை நம்பலாம் ! ஆனால் என் சகோதரனை நம்பக் கூடாது !

லெஃப்டினென்ட்: உன் சகோதரனை நம்பினேன், ஏமாந்தேன் ! உன்னைத்தான் நம்ப முடியவில்லை என்னால் !

ஹெலினா: சரி, என்னை நம்ப வேண்டாம் ! சகோதரனை நம்பினால் மகிழ்ச்சிதான் !

கியூஸெப்: குழப்புகிறாயே ஹெலினா ! உன்னை நம்ப வேண்டாம் என்று சொல்கிறாயே !

ஹெலினா: என்னை நம்புவதற்குதான் அப்படிச் சொன்னேன் !

நெப்போலியன்: நான் உன்னை நம்புகிறேன் ஹெலினா ! நீ ஒரு பெண் ! ஆணில்லை !

லெஃப்டினென்ட்: அவள் பெண் வேடம் போட்ட ஆண் ! அல்லது அவள் சகோதரன் ஆண் வேடம் போட்ட பெண் !

ஹெலீனா: நான் லெ·ப்டினென்டை நம்புகிறேன் அவர் என்னை நம்பாவிட்டாலும் !

நெப்போலியன்: அறிவற்று உளறுகிறாய் ! போ வெளியே ! கட்டளைக்கு அடி பணி !

லெஃப்டினென்ட்: ஒற்றரை நம்பக் கூடாது என்று கற்றுக் கொண்டேன் ! ஒன்றாய்த் தெரியும் இரட்டையரையும் நம்பக் கூடாது ஜெனெரல் !

நெப்போலியன்: என் பொறுமையைச் சோதிக்கிறாய் லெஃப்டினென்ட் !  வெளியே போ !

ஹெலினா: வேண்டாம் ! லெஃப்டினென்ட் உண்ண வேண்டும் ! உறங்க வேண்டும். நான் அவருக்குப் பதிலாக வெளியே போகிறேன் !

நெப்போலியன்: நீ போகக் கூடாது ஹெலீனா ! உன்னிடம் ஒன்றைக் கேட்க வேண்டும். உன் சகோதரன் ஏன் எமது கடிதங்களைப் பறித்துக் கொண்டு போனான் ?

கியூஸெப்: தளபதி ஸார் ! தயவுசெய்து போய் விடுங்கள் (கதவைத் திறக்கிறான்) விடுதியில் சண்டை நேர்ந்தால் வாடிக்காரர் எல்லாம் ஓடிவிடுவார் !

லெஃப்டினென்ட்: (நெப்போலியனைப் பார்த்து) எச்சரிக்கை ஜெனரல் ! இந்தப் பெண்ணை விடாதீர் ! இவள் மூலம் அவள் சகோதரனைப் பிடிக்கலாம் ! நமது இரகசியக் கடிதங்களைக் கைப்பற்றலாம் ! (பெண்ணைப் பார்த்து) மேடம் ! நான் வருந்துகிறேன் என் தவறுக்கு ! உன் சகோதரனாக எண்ணி விட்டேன் உன்னை !

ஹெலினா: அது உமது தவறில்லை ! உமது கோபம் தணிந்தது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். (கைகுலுக்கக் கரத்தை நீட்டுகிறாள்)

லெஃப்டினென்ட்: (ஹெலினா கையை முத்தமிட்டு) உன் கரம் உன் சகோதரன் கரம் போல் உள்ளது. மோதிரமும் அதே மாதிரித் தெரிகிறது !

ஹெலினா: நாங்கள் இருவரும் இரட்டையர் அல்லவா ? ஒரே மாதிரி நடப்போம், பேசுவோம், உடை அணிவோம் ! மோதிரம் கூட ஒன்றுதான் !

லெஃப்டினென்ட்: அதுதான் தெரிகிறதே ! ஏமாற்றுவதிலும் கூட ஒரே மாதிரி இருக்குமா ?

ஹெலினா: அதில் மட்டும் ஒற்றுமை இல்லை ! அவன் ஓர் ஆண்மகன் ! நானொரு பெண் ! அவனுக்குக் கல் மனது ! எனக்குப் பெண் மனது ! ஆண் ஏமாற்றுவான் ! பெண் ஏமாறுவாள் !

லெஃப்டினென்ட்: என்னைப் பொறுத்த வரையில் ஆண் ஏமாறுவான் ! பெண் ஏமாற்றுவாள் ! ஆனால் நீ நல்ல பெண் ! எவரையும் ஏமாற்றாதவள் ! சரி நான் போகிறேன் ஜெனரல். (போகிறான்)

நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு) முட்டாள் ! போய்த் தொலைந்தான் !

ஹெலினா: (புன்னகையோடு) நான் எப்படி நன்றி சொல்வேன் உங்களுக்கு ? நீங்கள் கனிவான மனிதர் ஜெனரல் ! அந்த தளபதியின் முகத்தில் கடுகடுப்புதான் தோன்றுகிறது.

நெப்போலியன்: (புன்னகையுடன்) எனக்கு உன் உதவி தேவை. உன் சகோதரனைக் கண்டுபிடித்து என் அரசாங்கக் கடிதங்களைக் கொண்டுவர வேண்டும். (சற்று அதட்டலுடன்) என் காவலை ஏமாற்றி விட்டான் அந்தக் கயவன் ! அந்தக் கடிதங்கள் எனக்குத் தேவை. அதை உடனே செய்வாயா என்ன ?

ஹெலினா: (அதிர்ச்சி அடைந்து கண் கலங்கிக் கண்ணீரைத் துடைத்து) என்ன மிரட்டுகிறீர் ஜெனரல் ? எனக்கு ஒன்றும் தெரியாது !

நெப்போலியன்: என்ன ? உன் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறாயா ? என் ஆயுதமெல்லாம் உன் ஆயுதத்தின் முன் தோற்றுப் போய்விடும் ! அழாதே ஹெலினா ! நீ கண்டுபிடிக்காவிட்டால் நான் கண்டுபிடிக்கிறேன் !

***************************

“மதத்தின் உதவியின்றி எப்படி ஒரு நாட்டை ஆட்சி செய்வது ? செல்வீகச் சமத்துவமின்மைத் (Inequality of Fortune) தவிர்த்துச் சமூகம் நிலைத்திருக்க முடியாது ! ஆனால் செல்வீகச் சமத்துவமின்மை மதத்தின் துணையின்றி வரவேற்கப்பட மாட்டாது ! நானொரு காத்தலிக் மதத்தினனாக மாறிய பிறகுதான் வெண்டீ (Vendளூe)* இனத்தாரைச் சாமாதானப் படுத்த முடிந்தது. நான் யூதரை ஆட்சி செய்ய நேர்ந்தால் சாலமன் ஆலயத்தை மீண்டும் கட்டிப் புதுப்பிப்பேன் ! சொர்க்கம் என்பது மனித ஆத்மாக்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றடையும் ஓர் மைய அரங்கம் !”

நெப்போலியன் (வெண்டீ யுத்தம்) (1800-1815)

***************************

ஹெலினா: உங்கள் குதிரையில் என் சகோதரன் எங்கே சுற்றித் திரிகிறான் என்பது எனக்குத் தெரியாது. லெ·ப்டினென்ட் ஒருவருக்குத்தான் அவன் இருப்பிடம் தெரியும். அவர்தான் என் சகோதரனைப் பிடிக்க முடியும்.

நெப்போலியன்: நீவீர் இருவரும் இரட்டையர் அல்லவா ? எப்படி உனக்குத் தெரியாமல் இருக்கும் ? ஆனால் பெண்கள் துணிந்து பொய் சொல்வார் ! உண்மை எப்போதாவது பேசுவாயா ? என்னிடம் யாரும் பொய் பேசக் கூடாது ! நான் யார் தெரியுமா ?

ஹெலினா: (இத்தாலியர் உச்சரிப்பில்) ஓ எனக்குத் தெரியுமே ! நீங்கள் உன்னதப் புகழ் பெற்ற ஜெனரல் நெப்போலியன் பௌனபார்ட் !

நெப்பொலியன்: (சற்று கோபத்துடன்) பௌனபார்ட் இல்லை ! போனபார்ட் மேடம் போன்பார்ட் ! எங்கே ஓவென்று வாயைப் பிளந்து சரியாக உச்சரி !

ஹெலினா: (உதாசீனமாக) நாங்கள் எல்லாம் பௌனபார்ட் என்றுதான் சொல்வோம் ! எப்படி உச்சரித்தாலும் நெப்போலியன் நெப்போலியன் தானே ! யார் உங்களை வெல்ல முடியும் ?

நெப்பொலியன்: நான் பெண்களிடம் தோற்றுப் போகிறேன் ! என் பேரைச் சரிவரச் சொல்ல உன்னை வற்புறுத்த முடியவில்லை என்னால் ! என் கடிதங்களை உன் சகோதரனிடமிருந்து பெற்று வரச் சொன்னேன் ! நீ மறுக்கிறாய் ! கொண்டு வந்தால் உனக்குச் சன்மானம் கிடைக்கும் ! (கைக்குட்டையை எடுத்து நுகர்ந்து கொண்டு) இந்த நறுமணம் உன் மீதும் வீசுகிறது ! இந்தக் கைக்குட்டை எனக்குக் கொடுத்தவன் எனது லெ·ப்டினென்ட் ! அவனுக்கு இதைக் கொடுத்தவன் உன் வஞ்சகச் சகோதரன் ! (அதட்டலோடு) அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வருவாயா ?

ஹெலினா: (கம்பீரமாக நிமிர்ந்து) ஜெனரல் ! பெண்டிரை நீங்கள் மிரட்டுவது உண்டா ? உங்களுக்குக் கடிதங்கள் தேவையென்றால் என்னை ஏன் மிரட்டுகிறீர் ? ஏமாந்தது உங்கள் லெ·ப்டினென்ட். ஆனால் மிரட்டுவது நீங்கள் !

நெப்பொலியன்: (அழுத்தமாக) ஆமாம் ! அதுவும் பொய் பேசும் பெண்ணை அறவே பிடிக்காது !

ஹெலினா: (அசட்டையாக) எனக்குப் புரிய வில்லை நீங்கள் சொல்வது ! உண்மை எதுவென்று தெரியாத நீங்கள் பொய்யை எப்படிக் கண்டுபிடித்தீர் ?

நெப்பொலியன்: இந்தக் கைக்குட்டை நறுமணத்தில் ! உன் அழகு மேனியில் இதே நறுமணம் வீசுகிறது ! நீ இங்கு வந்திருக்கும் காரணம் எனக்குத் தெரியும். நீ ஒற்று உளவு செய்யும் ஒர் ஆஸ்டிரிய மாது ! ஊழியத்துக்கு உன்னை வைத்திருக்கும் உன் அதிகாரிகளுக்குத் தெரியம், நான் ஆறு மைல் தூரத்தில் இருக்கிறேன் என்று. என் பகைவர் எதிர்பாராத இடத்தில் நான் காணப் படுபவன் ! இப்போது நீ சிங்கத்தின் குகையில் நுழைந்திருக்கிறாய் பெண்ணே ! வரவேற்கிறேன் உன்னை ! நீ மிக்கத் தைரியசாலி ! அறிவோடு நடந்து கொள் ! விரையம் செய்ய நேர மில்லை எனக்கு ! எங்கே இருக்கும் என் கடிதங்கள் ?

ஹெலினா: (கண்களில் கண்ணீருடன் மனமுடைந்து) நானா தைரியசாலி ? உங்கள் சிறுஅதட்டலே என் கண்களைக் குலுக்கி விட்டது ! கொஞ்சமும் தெரிவில்லை உமக்கு ! இன்றைய நாள் பூராவும் நான் மனமுடைந்து பயத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். ஒவ்வொரு சந்தேக நோக்கும் பளுவோடு என் நெஞ்சைத் தாக்கிறது ! பயமுறுத்தலும், அதட்டலும் இதயத்தைப் புண்ணாக்குகிறது ! உம்மைப் போல் ஒவ்வொருவனும் நெஞ்சுறுதியோடு இருக்க முடியுமா ? நானொரு பெண் ! ஓர் ஆண் தளபதியைப் போல் பெண் ஒருத்தி தீரமாய் இருப்பாளா ? நானொரு கோழைப் பெண் ! வன்முறைக்கு அஞ்சி ஒளிபவள் நான் ! அபாயத்துக்குள் சிக்கிக் கொள்வது எனக்கு வேதனை அளிக்கும்.

நெப்போலியன்: பிறகு ஏன் அபாயத்தில் நுழைந்திருக்கிறாய் ? பிரெஞ்ச் நாட்டின் புனித நங்கை ஜோன் ஆ·ப் ஆர்க்கைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்காயா ? அந்தப் பெண்ணைப் போலொரு வாளேந்திய வீர மங்கை இதுவரைப் பிறக்க வில்லை ! அவள் ஒரு போர்த் தளபதி ! பிரெஞ்ச் ராணுவத்தை முன்னடத்திச் சென்று பிரிட்டனை விரட்டிய வீராங்கனை அவள் ! நீ ஒற்று வேலை புரியும் உளவுப் பெண் ! சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட செம்மறி ஆடு !

ஹெலினா: வேறு வழியில்லை எனக்கு ! யாரையும் நம்ப முடியவில்லை ! எனக்குத் தெரியும். இப்போது நான் தப்ப முடியாது ! எல்லாம் உம்மால்தான் ! உமக்கோ அச்சமில்லை ! நெஞ்சில் இரக்க மில்லை ! உயிர்கள் மீது பரிவில்லாத் தளபதி ! (தள்ளாடி வீழ்ந்து மண்டி இடுகிறாள்.) ஜெனரல் ஸார் ! என்னைப் போக அனுமதி செய்வீர் ! வினாக்களில் என்னைத் துளைக்காமல் விட்டுவிடுவீர் ! உங்கள் கடிதங்களை உமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறேன் ! நிச்சயமாய் ! சத்தியமாய் !

நெப்போலியன்: (மனமிரங்கி) சரி ! நான் அவற்றுக்குக் காத்திருக்கிறேன் ! போய்க் கொண்டுவா !

Fig. 3

Napoleon’s Italian War

ஹெலினா: (பெருமூச்சு விட்டு மெதுவாக எழுந்து) கனிவான மொழிக்கு என் பணிவான நன்றி ! அவற்றைக் கொண்டுவந்து சேர்க்கிறேன் ! என் அறையில்தான் உள்ளன ! நான் போகலாமா ?

நெப்போலியன்: நானும் உன் கூட வருகிறேன் !

ஹெலினா: என் பின்னால் நீங்கள் வருவதை நான் விரும்பவில்லை ஜெனரல் ! நம்புங்கள் என்னை ! தனிப்பட்ட என் அறைக்கு ஓர் ஆடவன் வருவதை நான் அனுமதிக்க மாட்டேன் !

நெப்போலியன்: அப்படியானால் நீ இங்கே இரு ! நான் உன் அறையில் தேடி எடுத்துக் கொள்கிறேன்.

ஹெலினா: (அறுவறுப்புடன்) தேடி ஏமாந்து போவீர் ஜெனரல் ! அந்தக் கடிதங்கள் மெய்யாக என் அறையில் இல்லை !

நெப்போலியன்: என்ன சொன்னாய் ? இருக்கு என்பது உண்மையா ? இல்லை என்பது உண்மையா ? என்னைக் குழப்பி அடிக்கிறாய் பெண்ணே !

+++++++++

(Vendளூe)* : The Vendளூe (French) is a Region in west central France, on the Atlantic Ocean. The name Vendளூe is taken from the Vendளூe River which runs through the south-eastern part of the Region. The Hundred Years’ War (1337-1453) turned much of the Vendளூe into a battleground.

Since the Vendளூe held a considerable number of influential Protestants, including control by Jeanne d’Albret the region was greatly affected by the French Wars of Religion which broke out in 1562 and continued until 1598.

In 1815, when Napoleon returned from Elba for his Hundred Days, La Vendளூe refused to recognise him and stayed loyal to King Louis XVIII . General Lamarque led 10,000 men into La Vendளூe to pacify the Region.

*************************

“எனக்குக் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் ஐக்கியமாக்குவது, ஒத்திசைவு செய்வது, எல்லா வெறுப்புகளையும் மறக்கச் செய்வது, யாவரையும் ஒருமைப் படுத்துவது, வெவ்வேறு இனத்தாரை இணைத்து ஒருங்கே வரச் செய்வது, முழுமையாக எல்லோரையும் புதுப்பிப்பது, ஒரே பிரான்ஸ் ! ஒரே கட்சி !”

நெப்போலியன் (செயின்ட் ஹெலினா தீவிலிருந்து)

ஹெலினா: ஜெனரல் ! என்னிடம் உள்ளது ஒரே ஒரு கடிதம் ! அதுவும் தனிப்பட்ட கடிதம். அரசாங்கக் கடிதமில்லை அது. அதை நான் வைத்திருக்க எனக்கு உரிமை இல்லையா ? ஒன்றே ஒன்று ! நான் வைத்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்கக் கூடாதா ?

நெப்போலியன்: (சற்று கடுமையாக) நியாயமான வேண்டுகோள்தான் ! உன் தனிப்பட்ட கடிதத்தைப் பற்றி எனக்குக் கவலை இல்லை ! ஆனால் உன் சகோதர ஒற்றன் களவாடிய என் அரசாங்கக் கடிதங்கள் எங்கே உள்ளன ? அதைச் சொல் எனக்கு !

ஹெலினா: எனக்குத் தெரியாது. உங்கள் வற்புறுத்தல் தேவையற்றது. உங்கள் போர் வெற்றிக்காக ஆயிரக் கணக்காக உயிர்ப் பலிகளைச் செய்பவர் நீங்கள் ! அஞ்சாமல் நோகாமல் நீங்கள் செய்யும் கொலைகள் அவை ! உங்கள் பேராசைக்கோர் அளவில்லை ! எல்லை இல்லை ! ஊழ்விதி நிர்ணயம் செய்யும் மாவீரர் நீங்கள் ! ஆயுத மனிதன் என்று நான் சொல்வது ! என் மீது கருணை காட்டுங்கள் பிரபு ! பலவீனப் பெண் நான் ! அஞ்சா நெஞ்சர் நீங்கள் ! (பரிவோடு மண்டியிட்டு நெப்போலியனை நோக்குகிறாள்).

நெப்போலியன்: (வாஞ்சையோடு) எழுந்திடு பெண்ணே ! எழுந்திடு ! (அவளை விட்டு சற்று அகன்று திரும்பிப் பார்த்து) அறிவில்லாமல் பேசுகிறாய் நீ ! அதுவும் தெரிந்தே பேசுகிறாய் ! (ஹெலினா மெதுவாகப் பெஞ்சில் அமர்கிறாள். நகர்ந்து சென்ற நெப்போலியன் திரும்பி வந்து அவள் அருகில் அமர்கிறான். ஹெலினா பயந்து போய்ச் சற்று நகன்று உட்காருகிறாள்.) பெண்ணே ! நான் பலசாலி என்று எப்படி உனக்குத் தெரியும் ?

ஹெலினா: என்ன ? நெப்போலியன் பௌனபார்ட்டா இப்படிக் கேட்பது ?

நெப்போலியன்: தப்பாக உச்சரிக்கிறாயே ! நெப்போலியன் போனபார்ட் !

ஹெலினா: எப்படிக் கேட்கலாம் இந்தக் கேள்வியை நீங்கள் ? இரண்டு நாட்களுக்கு முன்னால் நீங்கள் வட இத்தாலிய எல்லைப் பகுதியில் லோதி பாலத்தின் (Lodi Bridge Near Miland, Italy) மீது நின்று, பீரங்கிகள் சுட்டுப் பொசுக்கும் மரண நாற்றத்தைச் சுவாசித்துக் கொண்டிருந்தீர் ! வல்லமை இல்லாத ஒரு ஜெனரலா இப்படித் தீரச்செயலைச் செய்ய முடியும் ?

நெப்போலியன்: பலே பலே வாலிப் பெண்ணே ! நீயும் உன் சகோதரன் போலோர் ஒற்று வேலை செய்பவள் என்பதை நிரூபித்து விட்டாய் ! நான் சந்தேகப் பட்டது சரியாய்ப் போனது ! என்னிடமே என் கதையைச் சொல்லும் ஒரு துணிச்சல்காரி நீ ! என்னை விடப் பலசாலி நீதான் !

ஹெலினா: நான் பலசாலியா ? (சற்று சிந்தித்து) அப்படியானால் நீங்கள் ஒரு கோழையா என்று நான் கேட்பேன் !

நெப்போலியன்: (கடுமையாய்ச் சிரித்துக் கொண்டு தன் தொடையைத் தட்டி) அப்படி ஒரு வினாவை மாவீரன் ஒருவனிடம் நீ கேட்கக் கூடாது ! படை வீரரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரி உயரம், எடை, வயதை மட்டுமே கேட்பான்; ஆனால் மனிதன் வல்லமையைக் கேட்பதில்லை. படை வீரனுக்குப் பயம் உள்ளதா என்று கேட்பதில்லை !

Fig. 3

Impatient Napoleon

ஹெலினா: (சற்று கேலியாக) : ஆஹா ! நீங்கள் பயத்தை எள்ளி நடையாடுகிறீர் ! அச்சம் என்பதை அறியாதவரா நீங்களா ?

நெப்போலியன்: (துடுக்காக) ஒருவேளை நீயே அந்தக் கடிதங்களைப் பறித்து நான் லோதி பாலத்தில் நின்ற போது பீரங்கி வெடிக்குத் தப்பி ஓடி வந்திருந்தால் அஞ்சி இருப்பாயா ?

ஹெலினா: (நெஞ்சில் கைவைத்து) ஐயோ ! பீரங்கி வெடியா ? என் நெஞ்சே வெடித்துப் போயிருக்குமே ! சாதாண மனிதனைக் கொல்ல இத்தனை பெரிய சாதனம் எதற்கு ? உங்கள் பராக்கிரம் வெறும் பீரங்கி வெடியில்தான் இருக்கிறது ! உங்களிடம் இல்லை என்று தெரிகிறது ! பீரங்கிகள் இல்லாமல் போனால் நீங்கள் வெற்று வெடிதான் !

நெப்போலியன்: லோதிப் பாலத்தில் நீ பயமின்றி வந்து எங்கள் கடிதங்களைக் களவு செய்திருப்பாயா ?

ஹெலினா: (அழுத்தமாக) நிச்சயமாகச் செய்திருப்பேன் ! என் வேலையே அது ! உங்கள் பீரங்கி வெடிக்கு நான் பயந்திருக்க மாட்டேன் !

நெப்போலியன்: (வெடுக்கென) மறுபடியும் என்னிடம் பொய் பேசுகிறாய் பெண்ணே ! பயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். போரில் பயப்படாத மனித ஆத்மாவே இல்லை. என் கடிதங்களை இரட்டையர் நீவீர் ஒளித்து வைத்து ஒரு சிங்கத்தோடு விளையாடுகிறீர் ! எனக்குப் பயங்காட்ட என் பகைவர் உம்மை அனுப்பியுள்ளார் ! உலக மெங்கும் நிலவிடும் ஆவேச உணர்ச்சி ஒன்றே ஒன்று ! அதுதான் பயம் என்பது ! ஒருவனிடம் உள்ள ஆயிரக் கணக்கான பண்பாடுகளில் உறுதியாக ஓர் இராணுவ முரசடிக்கும் சிறுவனும், என்னைப் போலவே, பயத்தோடுதான் உள்ளான் ! அந்தப் பயமே அவனைப் போரிடத் தூண்டும் ! அக்கறையின்மையே அவரை ஓட வைக்கிறது ! போரை நடத்தும் உந்து விசையே பயம்தான் ! பயம் ! பயமென்றால் நான் அறிவேன் ! உன்னை விடப் பயத்தை நான் நன்கு அறிந்தவன் ! பாரிசில் ஒருமுறை பலம் மிகுந்த சுவிஸ் இராணுவத்தினர் குழாம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டது ஒரு கலவரக் கூட்டத்தால் ! காரணம் நான் பயத்தால் தலையிடாமல் போனது. நானொரு கோழையாய் அப்போது எனக்கே நான் காணப் பட்டேன் ! ஏழு மாதங்களுக்கு முன்னால் அந்த வெட்கக் கேட்டைப் பழிவாங்கினேன், என் பீரங்கியால் அந்தக் கலவரக் கூட்டத்தைத் தூளாக்கி !

************************

“மதம் என்பது கற்பனையில் வந்த ஓர் ஊசி மருந்து (Vaccine of Imagination) ! அம்மருந்து அறிவுக்கு ஒவ்வாத ஆபத்தான நம்பிக்கைகளிலிருந்து காப்பாற்றுகிறது. அறைகுறை அறிவுள்ள ஒரு குரு ஊழியம் செய்யும் ஒருவனை இந்த வாழ்வு வெறும் பயணம் தவிர வேறில்லை என்று சொல்லும் அளவுக்குத் திறமை பெற்றுள்ளான். நன்னம்பிக்கையை மாந்தரிடமிருந்து நீக்கினால் முடிவாக வழிப்பறிக் கொள்ளைக்காரரை நீ உருவாக்குவாய்.”

நெப்போலியன் (Declaration at the Council of State) (1804)

“நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகச் சாதித்து விட்டோம். பிரான்சுக்கு ஓர் அரசனை நிலைநாட்ட நினைத்தோம். ஆனால் நிலைபெற்றவர் ஒரு சக்ரவர்த்தி.”

ஜார்ஜெஸ் கடவ்தால் (Georges Cadoudal, Royalist Conspirator)

*************************

நெப்போலியன்: (வெடுக்கென) மறுபடியும் என்னிடம் பொய் பேசுகிறாய் பெண்ணே ! பயத்தைப் பற்றி நான் சொல்கிறேன். போரில் பயப்படாத மனித ஆத்மாவே இல்லை. என் கடிதங்களை இரட்டையர் நீவீர் ஒளித்து வைத்து ஒரு சிங்கத்தோடு விளையாடுகிறீர் ! எனக்குப் பயங்காட்ட என் பகைவர் உம்மை அனுப்பியுள்ளார் ! உலக மெங்கும் நிலவிடும் ஆவேச உணர்ச்சி ஒன்றே ஒன்று ! அதுதான் பயம் என்பது ! ஒருவனிடம் உள்ள ஆயிரக் கணக்கான பண்பாடுகளில் உறுதியாக ஓர் இராணுவ முரசடிக்கும் சிறுவனும், என்னைப் போலவே, பயத்தோடுதான் உள்ளான் ! அந்தப் பயமே அவனைப் போரிடத் தூண்டும் ! அக்கறையின்மையே அவரை ஓட வைக்கிறது ! போரை நடத்தும் உந்து விசையே பயம்தான் ! பயம் ! பயமென்றால் நான் அறிவேன் ! உன்னை விடப் பயத்தை நான் நன்கு அறிந்தவன் ! பாரிசில் ஒருமுறை பலம் மிகுந்த சுவிஸ் இராணுவத்தினர் குழாம் முழுவதும் படுகொலை செய்யப்பட்டது ஒரு கலவரக் கூட்டத்தால் ! காரணம் நான் பயத்தால் தலையிடாமல் போனது. நானொரு கோழையாய் அப்போது எனக்கே நான் காணப் பட்டேன் ! ஏழு மாதங்களுக்கு முன்னால் அந்த வெட்கக் கேட்டைப் பழிவாங்கினேன், என் பீரங்கியால் அந்தக் கலவரக் கூட்டத்தைத் தூளாக்கி.

ஹெலினா: போர்முனையில் எப்போதும் வாய்திறந்து பேசுபவை உமது பீரங்கிகள் மட்டும்தான் ! மற்றவை யெல்லாம் அவை பின்னால் அணிவகுத்துச் செல்பவை.

நெப்போலியன்: என்னாசைகள் நிறைவேறும் வரை என் பீரங்கிகள் கண்ணை மூடாது ! வாயை மூடாது ! சுழலும் சக்கரங்களும் ஓயாது ! பய உணர்ச்சி மனிதன் விரும்பிடும் எதையாவது அடையாமல் அவனைத் தடைசெய்கிறதா ? வா என்னோடு, உனக்குக் காட்டுகிறேன் ஒரு கிண்ணப் பிராந்தி வெகுமதிக்கு உயிரையே பணயம் வைக்கும் ஓராயிரம் கோழைகளை ! நீ நினைக்கிறாயா பட்டாளத்தில் மனிதனை விட தைரியமுள்ள மாதர் இல்லை என்று ? மாதரின் மதிப்பும் தகுதியும் மனிதனை விட மிகையானது ! பயமில்லாமல்தான் நீயும் உன் இரட்டைத் தமையனும் எங்கள் அரசாங்கக் கடிதங்களைக் களவாடி என்னைத் திண்டாட வைத்தீர் ?

ஹெலினா: (சிரித்துக் கொண்டு) அப்போது நான் தைரியசாலி என்று பாராட்டுகிறீரா ? அல்லது நீங்கள் கோழையாகி விட்டீர் என்று காட்டுகிறீரா ?

நெப்போலியன்: நான் மகா தீரன் என்று சொல்லமாட்டேன் ! மற்றவர் அப்படிச் சொல்லுவதைக் கேட்கும் என் காதுகள் ! அது உண்மையாக இருக்க வேண்டும் ! இல்லாவிட்டால் பிரென்ச் ஏகாதிபத்தியம் இத்தாலி வரை வந்திருக்காது ! நான் இப்போது பயத்தைப் பற்றி உனக்கு விளக்கம் தர முடியாது !

ஹெலினா: நீங்கள் ஒரு தீரர், வீரர், சூரர் ! அதை நான் சொல்வேன் ஆயிரம் முறை ! ஐரோப்பிய வரலாற்றில் மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு எழுந்த போர்த் தளபதி நீங்கள்தான் !

நெப்போலியன்: ஆசியாவின் மீதும் எனக்கோர் கண்ணுள்ளது ! அதற்குத்தான் சூயஸ் கால்வாய் வெட்டும் திட்டமும் உருவாகி வருகிறது ! இந்தியாவில் பிரிட்டீஷ் ஆதிக்கத்தை நான் ஒழித்தாக வேண்டும்.

ஹெலினா: நீங்கள்தான் உலகத்தை விடுவிக்க அளிக்க வந்த ஊழ்விதி மனிதர் !

நெப்போலியன்: ஊழ்விதி மனிதன் ! நல்ல பட்டப் பெயர் ! ஆனால் அப்படி ஒருவன் பூமியில் பிறப்பதில்லை !

ஹெலினா: ஆமாம் உதிப்பதில்லை ! ஆனால் உருவாக முடிகிறது ! அசுர வல்லரசுதான் பிறரது தலைவிதியை எழுதி வைக்கிறது ! எப்படி நீவீர் மாவீரராக மாறினீர் ?

Fig. 4

Napoleon’s Cannon War

நெப்போலியன்: எப்படி நான் மாவீரன் ஆனேன் என்பது எனக்குத் தெரியாது. என் படையாட்கள்தான் என்னை வெற்றி வீரனாய் ஆக்கியவர் !

ஹெலினா: இல்லை ! நீங்கள்தான் பச்சை மனிதரைப் படை வீரராய் மாற்றினீர் ! லோதிப் போரில் வெற்றி அடைந்தீர். அந்த வெற்றி உங்களுக்கா ? அல்லது வேறு யாருக்குமா ?

நெப்போலியன்: ஆம் எனக்குத்தான் ! (சற்று சிந்த்தித்து) இல்லை, இல்லை ! பிரென்ச் குடியரசு மக்களின் ஊழியன் நான் ! அந்நாட்டின் பூர்வீக வரலாற்று நாயகர் வைத்த தடத்தில் நடந்து வந்தவன் நான் ! நான் வெல்வது குடிமக்களுக்கு ! என் நாட்டுக்கு ! வெற்றி எனக்காக இல்லை !

ஹெலினா: அப்படியானால் நீவீர் ஒரு பெண்மைத்தன தீரர்தான் !

நெப்போலியன்: (சற்று கோபத்துடன்) என்ன ? பெண்மைத்தனமா ?

ஹெலினா: என்னைப் போல ! (வருத்தமாக) அரசாங்கக் கடிதங்களை நான் அபகரித்தாகச் சொல்கிறீர் ! அப்படியானால் அது நான் எனக்காகச் செய்தேனா ? அல்லது நாட்டுக்காகச் செய்தேனா ?

நெப்போலியன்: உன் வீரத்தைக் காட்ட நீ செய்தது ! உனக்காகச் செய்தது நீ !

ஹெலினா: ஜெனரல் ! உங்கள் கடிதங்களால் தனிப்பட்ட எனக்கு எந்தப் பயனும் உண்டாகாது ! அப்படி அவை எனக்குப் பயன் தந்தால் நான் உங்களைப் பார்க்கத் தைரியமாய் இந்த விடுதிக்கு வந்திருப்பேனா ? எனது தைரியம் ஓர் அடிமைத்தனமே ! எனக்கு அதில் பலாபலன் ஏதுவும் இல்லை !

நெப்போலியன்: (வெறுப்புடன்) அப்படியானால் ஏன் எங்கள் கடிதங்களைப் பறித்துச் சென்றாய் ?

ஹெலினா: கடிதங்களைக் களவாடியன் என் சகோதரன் ! என்னை ஓர் உதாரணத்துக்கு எடுத்துச் சொன்னேன்,

நெப்போலியன்: மறுபடியும் பொய் பேசுகிறாய் பெண்ணே ! எனக்குக் குழப்பத்தை உண்டாக்கி உள்ளூரக் குதூகலம் அடைகிறாய் நீ !

ஹெலினா: ஒருவனை நான் நேசித்தால், அவனும் என்னை நேசித்தால் மட்டுமே நான் துணிந்து எதையும் செய்வேன் ! தைரியமாய்ச் செய்வேன் ! பொய் சொல்வேன் ! வஞ்சம் செய்வேன் ! ஆனால் உண்மை சொல்வேன் பொய்யை மறைக்க !

நெப்பொலியன்: இல்லை பெண்ணே ! பொய் சொல்கிறாய் நீ உண்மையை மறைக்க ! நீ சொல்வது எது உண்மை, எது பொய்யென்று என்னால் அறிய முடியவில்லை !

ஹெலினா: அது உங்கள் இயலாமை ! எனக்குள்ள ஓர் வல்லமை ! நீங்கள் எத்தனைப் போரில் வெற்றி பெற்றாலும் பெண்ணிடம் தோற்றுத்தான் போகிறீர் ! குடிமக்களுக்காக வெற்றி பெறுவதாய்க் கூறும் நீங்கள் உண்மையில் உங்கள் தலையில் கிரீடத்தை ஏற்றிக் கொள்கிறீர் ! குடிமக்கள் தலையில் முடி சூட்டுவதில்லை ! முத்திரை அடித்த முன்மாதிரி பிரென்ச் மானிடன் நீங்கள் !

நெப்பொலியன்: கீரிடம் ஜிகினா ஒட்டிய ஓர் மர வளையம் ! கீழே குனிந்தால் விழுந்து விடும் ஒரு போலித் தோரணம் ! நிலையற்றது ! நான் பிரென்ச் மானிடன் இல்லை !

ஹெலினா: (ஏளனமாய்) நீங்கள் வெற்றி பெற்றது நாட்டுக்கு என்று சொல்லவில்லையா ? அதனால் உங்களைப் பிரெஞ்சுக்காரர் என்று கூறினேன் !

நெப்பொலியன்: (வெகுண்டு) என் பொறுமையைச் சோதிக்கிறாய் பெண்ணே ! நானொரு பிரெஞ்ச் குடிமகன் ! ஆனால் பிரான்சில் பிறந்தவன் அல்லன் !

ஹெலினா: என்ன ? நீங்கள் பிரான்சில் பிறக்க வில்லையா ? பின் எதற்காக பிரான்சுக்காக போரிடப் போகிறீர் ? எனக்குப் புரியவில்லை ஜெனரல் !

**************************

“ஒரு மனிதன் தன்னை நோக்கி ‘நான் ஏன் வாழ்கிறேன்’ என்று புரியாமல் கேட்கும் போது, ‘எல்லோரைக் காட்டிலும் அவனொரு கீழான பிறவி’ என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கும். அவனது உடலின் யந்திர சாதனம் முறிந்து, மனிதனுக்குத் தேவையான இயக்கு சக்தியை அவன் இதயம் இழந்திருக்கிறது.”

நெப்போலியன்

“(நெப்போலியன்) எப்போதும் தன்வசம் உள்ள எல்லாவற்றையும் பயன்படுத்துவார். தன் வேலைகளுக்கு அனைத்துத் துறைகளையும்  (Faculties) உதவிடச் செய்வார். உரையாடல் எதனிலும் தன் முழுக் கவனத்தைச் செலுத்துவார். ஒவ்வொன்றிலும் தன் உள்ளார்வ வேட்கையோடு (Passion) ஈடுபடுவார். ஆதலால் அவருக்கு அவரது எதிரிகளை விட மேலான சிறப்பு அம்சங்கள் இருந்தன. ஒரு குறிக்கோளில் முழு மனதை ஊன்றி, அந்த ஒரு கணத்தில் அந்த வினையை மட்டும் செய்பவர் மிகச் சிலரே.”

“மெய்வருத்தம் பாராமல் எல்லையற்ற வல்லமையுடன் முனைவது, உள்ளொளி ஞானத்தோடு (Intuitive Sense) துணிவது, ஆளுமை ஆற்றலில் அசையாத உறுதி கொள்வது, குறிக்கோளில் மன அழுத்தம் உள்ளது – இந்தப் பண்பாடுகள்தான் நெப்போலியன் யாரென்று காட்டுபவை.”

கௌலெயின்கோர்ட், நெப்போலியனின் நம்பிக்கைத் துணையாளி (Caulaincourt) (Napoleon’s Trusted Aide)

************************

நெப்போலியன்: இல்லை ! நான் பிரான்ஸ் நாட்டில் பிறக்கவில்லை.

ஹெலினா: நான் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. அப்படியானல் ஏன் உங்களுக்குப் பிரான்ஸ் நாட்டின் மீது அத்தனை அக்கறை, பற்று, மோகம், நேசம் ?

நெப்போலியன்: நமக்கு மட்டும் நாம் வாழக் கூடாது சின்னப் பெண்ணே ! பிறருக்காக எப்போதும் நாம் சிந்திக்க வேண்டும் ! பிறருக்காக நாம் உழைக்க வேண்டும் ! அவருக்கு வழிகாட்டி அவரது நலனுக்காக நாம் அவரை ஆட்சி செய்ய வேண்டும். சுயப் பூர்த்தி தேடாமல், சுயநலம் கருதாமல் வாழ்வதே ஒருவரின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஹெலினா: (ஏளனமாக) சொல்வதைப் பார்த்தால் ஏட்டு நெறி போல் தெரிகிறது. இது வெறும் உபதேசம். செய்து பார்க்காதவரை இவையெல்லாம் சுலபம்தான். நான் சின்னப் பெண்ணில்லை ஜெனரல் !

நெப்போலியன்: (கோபத்தோடு) அப்படிச் சொன்னதின் அர்த்தம் என்ன ? உன்னைப் பெரிய மாதே என்று நான் விளிக்க மாட்டேன் ! நீ எனக்குச் சின்னப் பெண்தான் !

ஹெலினா: ஆமாம் நீங்கள் ஒரு பெரிய சக்ரவர்த்தி அல்லவா ? ஆனால் நீங்கள் இளமையாக இருப்பதால் மற்றவரும் சின்னவராக இருக்க வேண்டுமா ? ஆயினும் நான் உங்களைச் சின்னவர் என்று சொல்ல மாட்டேன் ! சின்னவராகத் தெரிந்தாலும் நீங்கள் பெரிய தளபதிதான் !

நெப்போலியன்: சின்னப் பெண்ணாயினும் நீ பெரிய சாமர்த்தியசாலி !

ஹெலினா: (சிரித்துக் கொண்டு) பெரிய சக்ரவர்த்தியானாலும் நீங்கள் பெண்ணிடம் பணிவாக நடந்து கொள்கிறீர் ! மெய்ம்மை, தூய்மை, சுயநலமின்மை இம்மூன்றையும் எல்லோரும் உயர்வு நவிற்சியில் பேசுகிறார். ஏனென்றால் அவற்றைக் கடைப்பிடிப்பது அத்தனைச் சுலபமில்லை ! மேலும் அவற்றில் அனுபவம் இல்லை அவருக்கு !

நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு கேலியாக) உனக்கு அனுபவம் உள்ளதா அவற்றில் ?

ஹெலினா: ஆம் அனுபவம் உண்டு எனக்கு. நேர்மையான வழியில் வளர்ந்த துர்பாக்கியவதி நான் ! (நெப்போலியனைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டு) ஜெனரல் ! நான் சொல்கிறேன், அது ஒரு துர்பாக்கியம் ! நான் சத்திய வாணி ! தூய மாது ! சுயநலத்தை வெறுப்பவள் ! ஆனால் அவை எல்லாம் வெறும் கோழைத்தனமே தவிர வேறல்ல ! பண்பாடு இல்லாமை, சுயத் தன்மை இழப்பு, மெய்யாக வாழாமை, உறுதியாக இல்லாமை ஆகியவற்றைத்தான் அவை காட்டுகின்றன !

Fig. 2

Spy Woman

நெப்போலியன்: (முகஞ் சுழித்து) மறுபடியும் புதிராகப் பேசுகிறாயே ! எது பாக்கியம், எது துர்பாக்கியம் என்பதைத் தலைகீழாகச் சொல்லிக் குழப்புகிறாயே ! நான் கற்றவற்றைச் சவால் விட்டு ஏளனம் செய்கிறாயே !

ஹெலினா: (கூர்ந்து நோக்கி) சொல்லுங்கள் ! உங்கள் வல்லமைத் திறமையின் ரகசியம் என்ன ? என் ஊகிப்பு இது : உங்கள் மீது அசையாத நம்பிக்கை ! யுத்தம் செய்து வெற்றி பெறுவது நாட்டுக்கு ! உமக்கில்லை ! உமது ஊழ்விதி மேல் உங்களுக்கு எந்த அச்சமுமில்லை ! எமது ஊழ்விதியை மாற்றி அச்சம் ஊட்டுபவர் நீங்கள் ! எமக்கு உறுதி ஊட்டி, நல்வழிக்குப் பாதை காட்டி எமது எதிர்காலத்தைத் திறப்பவர் நீங்கள் ! (சட்டென மண்டியிட்டுக் கனிவோடு) நன்றி சொல்லக் கடமைப் பட்டவர் நாங்கள் ! வரவேற்று, வழிபட்டு, வந்தனம் செய்ய வேண்டும் நாங்கள் ! (நெப்போலியன் கையைப் பற்றி முத்தமிடுகிறாள்.)

நெப்போலியன்: (நாணத்துடன் தடுமாறி உடல் கோணி) போதும், போதும் ! எழுந்திடு சின்னப் பெண்ணே ! வேண்டாம் இந்த விக்கிரக வழிபாடு !

ஹெலினா: (எழாமல் மண்டியிட்டு) மறுக்காதீர் சக்ரவர்த்தி ! எங்கள் ஊழ்விதியை மாற்றுவது உங்கள் உரிமை ! அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை ! தோற்றவர் துதிபாடுவதும், வென்றவர் வெகுமதி பெறுவதும் தொன்று தொட்ட வழக்கம் ! உலகச் சம்பிரதாயம் பிரபு ! பிரான்ஸின் சக்ரவர்த்தி ஆவீர் நீங்கள் ! பெருமை உமக்குத்தான் எமக்கும்தான் !

நெப்போலியன்: (அழுத்தமாக) பேச்சில் கவனம் வை ! இது துரோகச் செயல் பெண்ணே !

ஹெலினா: ஆமாம் ! நீங்கள் பிரென்ச் சக்ரவர்த்திதான் ! நிச்சயம் அது ! அடுத்து ஐரோப்பாவுக்கு ! அப்புறம் இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ! ஏன் உலகுக்கே வரப் போகும் ஒப்பிலாச் சக்ரவர்த்தி ! உங்களை ஏற்றுக் கொண்டு உத்திரவாதம் செய்யும் முதல் குடிமகள் நான்தான் ! (மறுபடியும் கையில் முத்தமிடுகிறாள்.) எனது சக்ரவர்த்தி ! பேராயுதச் சக்ரவர்த்தி ! வீராயுதச் சக்ரவர்த்தி ! ஊழ்விதி மனிதர் !

நெப்போலியன்: (தடுமாற்றமுடன்) இல்லை, இல்லை ! இது சரியில்லை, தப்பு ! அறியாமை ! (சற்று சிந்தித்து) இல்லை மேலான அறிவுடைமை பெண்ணே ! மெச்சுகிறேன் உன்னை !

ஹெலினா: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) இது என்னிடமுள்ள வீம்புத்தனம் ஜெனரல் ! இப்படித் திமிராக நானொரு சக்ரவர்த்தியிடம் ஞானமாகப் பேசக் கூடாது ! (தயங்கியபடி) என் மீது கோபமா உங்களுக்கு ?

நெப்போலியன்: (கனிவாகக் குழைந்து) கோபமா ? இல்லை இல்லை ! நீ நல்ல மாது பொய் பேசினாலும் ! நீயொரு ஞானப் பெண் ! இனிப்பாகப் பேசிக் கல்லையும் கரைத்து விடுகிறாய் ! உன்னோடு நான் உரையாடுவதில் பேரானந்தம் அடைகிறேன் ! நேரம் போவதே தெரியவில்லை ! (மனம் நெகிழ்ந்து) நாம் நண்பராக இருக்கலாமா ?

ஹெலினா: (பூரித்துப் போய்) உங்களோடு நண்பராகவா ? என்னை உங்கள் தோழியாக ஏற்றுக் கொள்வீரா ? நம்ப முடிய வில்லையே ! ஓ ஜெனரல் ! (எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் நீட்டுகிறாள். நெப்போலியன் மண்டியிட்டு அவள் கைகளை முத்தமிடுகிறான்.) பார்த்தீரா ? என் மீது உங்களுக்கு நன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.

நெப்போலியன்: (தெளிவு பெற்று எழுந்து நின்று உரத்த குரலில்) என்ன சொல்கிறாய் ? உன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா ? இல்லை ! நீ என் தோழி இல்லை, ஓர் அடிமை !மறந்து விடாதே அதை !

ஹெலினா: ஜெனரல் ! யார் யாருக்கு அடிமை ? ஆணும் பெண்ணும் நண்பராய் வாழ முடியுமா ? ஆணை விடப் பெண்ணுக்கே ஆயுதங்கள் மிகுதி ! ஆதலால் ஆணைப் பெண் வெகு சுலமாக அடிமை ஆக்குவாள் ! கிளியோபாத்ராவுக்கு கோணல் மூக்குதான் ! ஆனாலும் ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸரும், அவரது போர் வீரன் மார்க் அண்டோனியும் அவள் காலடியிலே விழுந்து கிடந்தார் ! என்னை போல் அவளும் ஓர் சின்னப் பெண்தான் !

நெப்போலியன்: (ஆத்திரம் அடைந்து) போதும் வழிபாட்டு நாடகம். சாமர்த்திய மாக என்னை நீ ஏமாற்றப் பார்க்கிறாய் சின்னப் பெண்ணே ! என்னிடம் செல்லாது உன் குறும்புத்தனம் ! என் ரகசியக் கடிதங்கள் எங்கே ? சொல் ! அவற்றை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ?

***********************

“எனக்கு எந்த மதத்திலும் ஈடுபாடு இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எந்த ஒரு கற்பனை அச்சமும் இல்லை என்பதிலும் பெரும் திருப்தி உண்டாகிறது. எதிர்காலத்தைப் பற்றியும் பயம் கிடையாது எனக்கு.”

“மனிதரை இரண்டு வித நெம்பு கோல்களில் நகர்த்தி விடலாம் : ஒன்று பயத்தை உண்டாக்கி, இரண்டாவது சுய விருப்பத்தைத் தூண்டி. (By Terrorizing & Creating Self-interest). புரட்சிப் போராட்டம் நடக்கும் போது பயமுறுத்துவது தவிர்க்க முடியாத ஒரு தீவிரப் போக்கு ! அதை மூட்டி விட வேண்டியதில்லை. நிறுத்தவும் தேவையில்லை. போரின் போது படைவீரர் செல்வக் களஞ்சியங்களைக் கொள்ளை யடிக்க வெட்கப்பட வேண்டிய தில்லை. அது சுய விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது.”

நெப்போலியன்.

 

நெப்போலியன்: (ஆத்திரம் அடைந்து) போதும் வழிபாட்டு நாடகம். சாமர்த்தியமாக என்னை நீ ஏமாற்றப் பார்க்கிறாய் சின்னப் பெண்ணே ! என்னிடம் செல்லாது உன் குறும்புத்தனம் ! என் ரகசியக் கடிதங்கள் எங்கே ? சொல் ! அவற்றை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ?

ஹெலினா: சற்று முன் குழைந்து பேசிய நீங்கள் இப்போது என்னை மிரட்டுகிறீரா ? என்ன மன அழுத்தம் உமக்கு ?

நெப்போலியன்: என்ன சொன்னாய் ? மன அழுத்தம் என்றா என்னைக் கேட்கிறாய் ?

ஹெலினா: யார் நீங்கள் என்னை அதட்ட ? அதிகாரம் செய்ய ? நான் பிரென்ச் குடிவாசியும் யில்லை ! நீங்கள் எமது ஆஸ்டிரிய வேந்தரும் அல்லர் ! அவமதிக்கும் உங்கள் கார்ஸிகன் (Corsican) திமிர் வெளியே எட்டிப் பார்க்கிறதே !

நெப்போலியன்: (கோபமாக) திமிர் என்றா சொல்கிறாய் ? நீ ஒரு பெண் பிசாசு ! என் கடிதங்களைக் கொண்டு வருகிறாயா ? இல்லை உன்னிருக்கையைச் சோதித்து நானே எடுத்துக் கொள்ளவா மூர்க்கத்தனமாய் ?

ஹெலினா: (சட்டெனப் பயமின்றி) மூர்க்கத்தனமாய் எடுத்துக் கொள்வீர் !

நெப்போலியன்: (புலிபோல் பாய வந்தவன் அதிர்ச்சியில் பின்வாங்கித் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொள்கிறான். நெற்றி வியர்வையைத் துடைத்து சற்று சிந்திக்கிறான். அதட்டலும் அதிகாரமும் தோற்றுப் போய் தளர்ச்சி அடைந்து உதட்டைப் பிதுக்குகிறான். அவன் கோபம் தணிகிறது. அவளை உற்று நோக்கி விழிகள் பக்கவாட்டில் திரும்புகின்றன.) (மெதுவாக) அப்படியா சொல்கிறாய் ?

ஹெலினா: இப்போது என்ன செய்யப் போகிறீர் ? உமது ஆணையை நான் மீறி விட்டேன் !

நெப்போலியன்: (அதட்டலுடன்) உனது திமிரை அடக்க வேண்டும் சின்னப் பெண்ணே !

ஹெலினா: அது காட்டுமிராண்டித்தனம் ஜெனரல் ! என்னை யாரும் அடக்க முடியாது ! ஆனால் சிறையில் போடலாம்.

நெப்போலியன்: (கடுமையாக) என்னை யாரும் இதுவரை எதிர்த்த தில்லை ! எதிர்க்கக் கூடாது !

ஹெலினா: யாரையும் நான் எதிர்க்க வில்லை ! பாருங்கள் என்னிடம் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா ? உம்மிடம்தான் ஆயுதம் உள்ளது ! ஆயுத மில்லாத மாதுடன் யாராவது போராடுவாரா ?

நெப்போலியன்: உனக்கு நெஞ்சில் ஒரு பயம் கிடையாது ! நான் நெப்போலியன் போனபார்ட்.

ஹெலினா: உமக்குத்தான் பயம் வந்து விட்டது இப்போது ! பெயரைச் சொன்னால் எனக்குப் பயம் வந்துவிடும் என்ற நினைப்பா ?

நெப்போலியன்: (பெரு மூச்செடுத்து) சரி போதும் ! நான் சொல்வதைச் சற்று கேள் ! உன்னை எனக்குப் பிடிக்கிறது ! உன்னை நான் மதிக்கிறேன் !

ஹெலினா: உம்மிடம் இல்லாதற்கு நீவீர் மதிக்கிறீர் அல்லவா ?

நெப்போலியன்: (சற்று கோபத்தோடு) அப்படி எண்ணாதே சின்னப் பெண்ணே ! நீ வலுவற்ற பெண் என்பதால் என் வாள் வெளியே வரத் தயங்குகிறது ! நீ ஓரழகி என்பதால் என் நெஞ்சம் உன்னிடம் அடிமை ஆகிறது ! உன் மன அழுத்தத்தை எதிர்த்து என் ஆண்மை அடக்கத் தாவுகிறது. நீ ஆஸ்டிரியக் குடிவாசியாக இருப்பதால் உனக்குச் சமத்துவம் அளிக்க மனம் விழைகிறது. எமது ரகசியக் கடிதங்களை அபகரித்தால் உன்னைக் கடுங் காவலில் வைக்க உள்ளம் விரும்புகிறது. அதே சமயம் முடியாமையால் உன்னை விடுவிக்கவும் மனம் தூண்டுகிறது.

ஹெலினா: இத்தனையும் உம்மை இப்போது ஆட்டிப் படைக்கிறது ! எதை முதலில் செய்வது எதை அடுத்து செய்வது என்று நீங்கள் திண்டாடுவது நன்றாகவே தெரிகிறது ! இத்தாலிய நகரை இரண்டே நாட்களில் பிடித்து விட்டீர் ! அடுத்து ஆஸ்டிரியா நகரை ஓரிரண்டு நாட்களில் பிடித்து விடுவீர் ! ஆனால் ஒரு சின்னப் பெண்ணிடமிருந்து உமது ரகசியக் கடிதங்களைப் பெற முடிய வில்லை ! இப்போதாவது தோல்வியை ஒப்புக் கொள்கிறீரா ?

நெப்போலியன்: (தடுமாற்றமோடு, சிந்தனையுடன்) நான் என்றும் தோல்வி அடையவில்லை ! இதுவரை தோல்வி அடைந்ததில்லை ! இனிமேலும் தோல்வி அடையப் போவதில்லை !

ஹெலினா: அப்படித்தான் எல்லாப் போராயுதத் தளபதிகளும் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார். போரில் சில சமயம் பின்வாங்குவது நல்லது ! தீவிரமாய் முன்னேறித் தாக்குவதற்குச் செய்யும் ஒரு சூழ்ச்சி அது !

நெப்போலியன்: (சற்று தலை குனிந்து) சரி நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன் சின்னப் பெண்ணே !

ஹெலினா: (புன்னகையோடு) வெற்றி பெற்றேன் ஜெனரல் ! (அங்கிக்குள்ளே கையை விட்டு கடிதக் கட்டுகளை எடுத்து தலை வணங்கி) மேதகு நெப்போலியன் பௌனபார்ட் அவர்களே ! இதோ உமது ரகசியக் கடிதங்கள் ! (மெதுவாய்க் கடிதங்களை நெப்போலியன் கரத்தில் கொடுத்து விட்டு அச்சமுடன் பின்னால் நகர்ந்து செல்கிறாள். அதிர்ச்சியுற்ற நெப்போலியனின் கண்கள் கோபத்தில் நெருப்பைக் கக்குகின்றன.)

நெப்போலியன்: (கோபத்தோடு) வெற்றி பெற்றது நானா ? அல்லது நீயா ?

“பேராற்றல் பெருமிதமோடு நான் அதி விரைவாகத் தாக்கி, உலகத்தை அதிர்ச்சியில் வியக்க வைப்பேன்.”

“செல்வீகக் கொடை (Fortune) என்பது ஓர் எழில் மாது. எத்தனைச் செம்மையாக அவள் எனக்குப் பணி செய்வாளோ அதற்கும் மேலாகச் செய்ய அவளை நான் வற்புறுத்துவேன்.”

“மேற்கத்தியராகிய நாம் மாதரை மிகச் செம்மையாய் நடத்தி ஒவ்வொருவரையும் கெடுத்து விட்டோம். ஏறக்குறையாக நமக்கிணையாய் மாதருக்குச் சமத்துவம் அளித்ததில் நாம் பெருந் தவறைச் செய்து விட்டோம் ! கிழக்கத்தியர் அந்த முறையில் நம்மை விட அறிவோடு இருக்கிறார்.”

நெப்போலியன்.

+++++++++++++++++++

ஹெலினா: வெற்றி பெற்றதும் நான் ! தோற்றுப் போனதும் நான் !

நெப்போலியன்: (கடிதங்கள் அனைத்தும் திறக்கப் பட்டிருப்பதைப் பார்த்துக் கோபம் அடைகிறான். வேஜையில் கடிதங்களைப் பரப்பி முக்கியமானதை எடுத்து முதலில் படிக்கிறான்.) யாரிந்த கடிதங்களைத் திறந்தது ? யாரிதைப் படித்தது ? சொல் சின்னப் பெண்ணே ! நீ ஓர் ஒற்று மாது என்று நான் முதலில் சந்தேகப் பட்டது முற்றிலும் சரியே !

ஹெலினா: அப்படி ஒற்று மாது என்றால் இந்தக் கடிதங்களை உமது கையில் கொடுக்க நான் இப்படி நேரே வருவேனா ? எப்போதே எரித்துச் சாம்பலாக்கி இருப்பேன் ! நான் சத்திய மங்கை ! உங்கள் கடிதங்களை உரிய இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்த பெண்டு நான் !

நெப்போலியன்: (சீற்றமுடன்) திறக்காமல் கடிதங்களைக் கொடுத்திருந்தால் உன்னை நான் உத்தமி என்று முத்திரை அடிப்பேன் ! உமது ஆஸ்டிரிய அதிகார வர்க்கம் இந்தக் கடிதங்களைப் படித்ததால் உன்னை ஒற்று மங்கை என்றுதான் நான் குற்றம் சாட்டுவேன். கடிதங்களைக் களவாடிய உன்னைச் சிறையில் தள்ள வேண்டும். இந்தக் கடிதங்களை யாரும் படிக்க வில்லை என்று பைபிள் மேல் கைவைத்துச் சத்தியம் செய்வாயா நீ !

ஹெலினா: நிச்சயம் செய்வேன் ! ஆனால் பைபிள் எனது பக்கத்தில் இல்லையே ! நானந்தக் கடிதங்களைப் படிக்க வில்லை ! யார் படித்தார் என்றும் தெரியாது ? கடிதங்களைக் களவாட விட்ட உமது லெ·ப்டினென்ட்தான் தண்டிக்கப்பட வேண்டும். பிரான்ஸின் ஜெனரலுக்கு இப்படி ஒரு மூடப் பணியாள் வேலைக்கு இருப்பது பிரான்சுக்கு மிக்க வெட்கக் கேடு !

நெப்போலியன்: (கடிதம் படிப்பதை நிறுத்தி சினத்துடன்) என்ன சொன்னாய் ? உன் நாக்கைத் துண்டாக்க வேண்டும் ! மறுபடியும் நீ என் பொறுமையைச் சோதிக்கிறாய் ! அளவுக்கு மிஞ்சி உனது நாக்கு நீள்கிறது. இந்தக் கடிதங்களில் உள்ள செய்தி எனக்குத் தெரியாது என்று நினைக்காதே ! எனது முதல் தகவல் : ஆஸ்டிரிய இராணுவ தளபதி பியூலிவ் பின்வாங்குவது (Beaulieu’s Retreat)*. அதை இருமுறைகளில்தான் அவன் செயற்படுத்த முடியும் ! தோல் மண்டை மூடத் தளபதி அவன் ! மாண்டோவா (Mantova) நகரில் அவன் முடங்கிப் போவான்; அல்லது பெஸ்சீராவைப் (Peschiera) பிடித்துக் கொண்டு வெனிஸ் (Venice) நகர நடுமை நிலைக்கு இடர் விளைவிப்பான். நீயும் தோல் மூளையுள்ள போலி மங்கை ! உன்னைப் போன்ற ஒற்றர் தலைகள் உடனே வெட்டப்படும் ! வஞ்சிக்கப் பட்டதாய் உமது ஆஸ்டிரியன் தளபதி எண்ணிக் கடிதங்களைக் களவாட உன்னை அனுப்பி யுள்ளான். என்னிடமிருந்து அது தன்னைக் காக்கும் என்று நினைத்தான் அந்த முட்டாள் ! கடிதங்கள் பல எனக்குத் தனிப்பட வந்தவை. அவற்றால் உனக்கோர் பயனுமில்லை. எவருக்கும் பயனுமில்லை !

ஹெலினா: நமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா ? ஆஸ்டிரிய இராணுவத்தைப் பற்றி உமது ஒற்றர் பெற்ற தகவலை நீவீர் வைத்துக் கொள்வீர் ! பாரிஸ் தகவலை மட்டும் என்னிடம் தந்துவிடுவீர் ! அதற்கு நான் உடன்படுகிறேன்.

நெப்போலியன்: (ஏளனமாக) மேடம் ஹெலினா ! ஏதோ எனது கடிதங்கள் எல்லாம் உனது உரிமைச் சொத்தாய் நீ நினைக்கிறாய் ! நானதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் ! என்னோடு ஒப்பந்தம் பேச உனக்குத் தகுதியும் இல்லை; எந்த அதிகாரமும் இல்லை.

ஹெலினா: உமது கடிதங்கள் வேண்டாம். அரசாங்கக் கடிதங்கள் தேவை யில்லை எனக்கு ! அந்தக் கடிதக் கட்டில் ஒரே ஒரு திருட்டுக் கடிதம் உள்ளது. ஒரு பெண் ஆடவனுக்கு எழுதியது ! ஆனால் அவன் அவளது கணவன் அல்லன் ! அது ஓர் அவமானக் கடிதம் ! பெயரைக் கெடுக்கும் கடிதம் !

நெப்போலியன்: என்ன ? ஒரு காதல் கடிதமா ?

ஹெலினா: (அருவருப்புடன்) காதல் கடிதத்தைத் தவிர வேறு எதுவாக இப்படி வெறுப்பை ஊட்டுவதாக இருக்க முடியும் ?

நெப்போலியன்: ஏன் அந்தக் கடிதம் எனக்கு அனுப்பப் பட்டது ? அவள் கணவன் கை ஓங்க நான் உதவி செய்வதற்கா ?

ஹெலினா: இல்லை ! இல்லை ! உமக்கொரு பயனும் இல்லை அந்தக் கடிதத்தால் ! என்னிடம் அதைக் கொடுத்து விடுவீர். ஒரு சிரமமும் இல்லை உமக்கு ! ஏதோ ஒரு வெறுப்பால் யாரோ ஒருவர் அனுப்பி விட்டார் உமக்கு. எழுதிய பெண்ணின் மனதைக் காயப்படுத்தச் செய்த சூழ்ச்சி இது !

நெப்போலியன்: கணவனுக்கு அனுப்பி யிருக்கலாம் அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பாமல்.

ஹெலினா: (தளர்ந்து போய் மனமுடைந்து) ஓ ! எனது மனத்தைக் குழப்புகிறீர் ! ஏன் இப்படிப் பேசுகிறீர் ? எனக்குப் புரியவில்லை ! (அயர்ந்து போய் நாற்காலியில் அமர்கிறாள்.)

++++++++++

“உன்னை நேசிக்காமல் நானொரு நாள் வீணடித்த தில்லை. உன்னைத் தழுவிக் கொள்ளாமல் ஓரிரவை நான் இழக்க வில்லை ! . . இராணுவத்தை நடத்திச் செல்லும் தலைமையிலோ அல்லது இராணுவ முகாமைச் சோதன செய்வதிலோ என் கடமைகளுக்கு இடையில், என்னருமைக் காதலி ஜோஸ·பின் என்னிதயத்திலே தனித்து நிற்கிறாள், என்னுள்ளத்தை ஆட்கொள்கிறாள், என் சிந்தனையில் பொங்கி எழுகிறாள்.”

“பெருந்தவறுகள் மட்டுமே கணவனையும், மனைவியையும் பிரித்து விடுகின்றன. படுக்கை அறை எனக்கும், மேடம் போனபார்ட்டுக்கும் (ஜோஸ·பின்) ஒன்றே ! ஆயினும் ஆடவர் புரியும் வஞ்சகம் உடலுறவுகள் கார்ஸிகன் இனத்தவர் தராசில் பெரிய தவறாக எடை போடப் படுவதில்லை.”

“என்னினிய இணையில்லா ஜோஸஃபின் ! எத்தகைய அதிசயத்தோடு நீ என் இதயத்தைக் கவர்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறாய் !”

நெப்போலியன் (தன் மனைவி ஜோஸஃபினைப் பற்றி)

+++++++++++++

நெப்போலியன்: ஆஹா ! நான் இப்படி ஆகுமென்று நினைத்தேன். கொஞ்சம் காதல் விளையாட்டில் ஈடுபட்டால் உன்னிடமிருந்து என் கடிதங்களைக் கைப்பற்றி விடலாம் என்று யூகித்தேன். சின்னப் பெண்?ணே ! உன்னைப் போற்றாமல் இருக்க முடியாது. உன்னைப் போல் பொய் சொல்ல நான் இப்போது விரும்புகிறேன். பெருந் தொல்லையிலிருந்து அது என்னைக் காப்பாற்றும்.

ஹெலினா: (கைகளைப் பிசைந்து கொண்டு) உம்மிடம் நான் இன்னும் சில பொய்களைக் கூறி யிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன். நீங்களும் என்னை நம்பியிருப்பீர் அப்போது ! ஆனால் ஏனோ உண்மையை எவரும் நம்புவதில்லை.

நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு) சின்னப் பெண்ணே ! கதைகள் சொல்வதில் நானோர் கைத்திறம் பெற்ற கார்ஸிகன் இனத்தவன் ! உன்னை விடச் சிறந்த முறையில் நான் கதை அளக்க முடியும். மனைவியை உடன்பட வைக்கும் ஒரு கடிதத்தை அவளது கணவனுக்கு ஏன் அனுப்பக் கூடாது என்று கேட்டால், நீ என்ன சொல்ல வேண்டும் ? அந்தக் கடிதத்தை அவள் கணவன் படிக்க மாட்டான் என்று ! ஒரு கணவன் தனது குடும்பச் சண்டையை அன்னியர் அறிய விடுவானா ? வீட்டுச் சண்டையை வீதியில் அரங்கேற்ற விழைவானா ? குடும்பம் முறிந்து போவதைச் சொல்வானா ? அவதூறால் தனது வாழ்வு காயமுறுவதை அவன் விரும்புவானா ? இவற்றை யெல்லாம் தான் தவிர்க்க முடியும் போது ஏன் அவன் அம்மாதிரிக் கடிதத்தை வாசிக்கப் போகிறான் ?

ஹெலினா: (ஏளனமாக) ஒரு வேளை அந்தக் கடிதக் கட்டுக்குள் உமது மனைவியின் கடிதம் இருந்தால் !

நெப்போலியன்: (சினத்தோடு) மேடம் ! மேடம் ! இது திமிரான பேச்சு ! வேண்டாத பேச்சு !

ஹெலினா: (கண்ணியமாக) என்ன சொன்னீர் ? திமிர்ப் பேச்சா ? சீஸரின் மனைவி சிறிது சந்தேகத்துக்கும் அப்பாற் பட்டவள் ! சினம் வருவது ஏனோ ?

நெப்போலியன்: நீ எல்லை மீறிவிட்டாய் பெண்ணே ! ஆயினும் உன்னை மன்னிக்கிறேன் ! என் மனைவி பெயரை வீணாக இழுக்க வேண்டாம் ! நீ எனது சொந்த வாழ்க்கையில் உன் மூக்கை விடாதே ! இந்த விளையாட்டு பிடிக்காது எனக்கு !

ஹெலினா: (அஞ்சாது அழுத்தமாக) ஜெனரல் ! அந்தக் கடிதக் கட்டில் ஒரு பெண்ணின் கடிதம் உள்ளது. என்னிடம் கொடுங்கள் அதை !

நெப்போலியன்: (கடுமையாக) ஏன் தர வேண்டும் ?

ஹெலினா: அவள் எனது பழைய தோழி ! நாங்கள் பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்தோம். தன் கடிதம் தவறி உங்கள் கையில் விழக் கூடாதென்று கடிதம் எழுதி இருக்கிறாள் எனக்கு !

நெப்போலியன்: (வியப்போடு) இது பொய் முழுப் பொய் ! பிறகு ஏன் என் கையில் கிடைத்தது ?

ஹெலினா: காரணம், அது டைரக்டர் பர்ராஸ் (Ditrector Barras) உடன்படச் செய்தது !

நெப்போலியன்: (சட்டென) கவனித்துப் பேசு ! டைரக்டர் பர்ராஸ் எனது தனிப்பட்ட நண்பர் ! என்னைச் சேர்ந்தவர் !

ஹெலினா: ஆமாம் ! மறக்க வேண்டாம், பர்ராஸ் உங்கள் மனைவி மூலமாக உமக்கு நண்பர் ஆனவர் !

நெப்போலியன்: (வெகுண்டு) இப்போதுதான் கூறினேன் என் மனைவியைப் பற்றிப் பேசாதே என்று ! மறந்து விட்டாயா ? யாரிந்தப் பெண் ? ஆழ்ந்த விருப்போடு நீ குறிப்பிடும் அந்த மாது யார் ? அவளுக்கும் உனக்கும் என்ன தொடர்பு ? என்ன உறவு ?

ஹெலினா: ஜெனரல் ! நான் எப்படி உமக்குச் சொல்வேன் என் சொந்த உறவை ?

நெப்போலியன்: பெண்டிர் நீங்கள் எல்லாரும் ஒன்றுதான் ! ஒருவரை ஒருவர் வெறுத்தாலும் உள்ளத்தில் வேறுபாடுகள் குறைவு ! ஒருத்திக்கு ஒருத்தி உடன்பாடு உள்ளது.

ஹெலினா: (சிரித்துக் கொண்டு) நாங்கள் யாவரும் ஒரே மாதிரி என்று நினைப்பது தவறு ! ஆடவர் எல்லாரும் ஒன்று போல் உள்ளாரா ? வேடிக்கையாக இருக்கிறதே உமது பேச்சு ! நான் வேறோர் ஆடவனை நேசித்தால், என் கணவனை நேசித்துக் கொண்டிருப்பதாக நான் நடிப்பேன் என்று நினைப்பீரா ? அவனிடம் சொல்லவோ, அடுத்தவரிடம் சொல்லவோ நான் அச்சப் படுவேன் என்று எண்ணுவீரா ? ஆனால் இந்தப் பெண் அப்படி வார்க்கப் படவில்லை !அவள் வேறு ! அவள் ஆடவரை ஏமாற்றி ஆட்டிப் படைப்பவள் ! ஆடவரும் அதை விரும்புகிறார் ! அவளைத் தம் மீது ஆதிக்கம் செய்ய அனுமதிக்கிறார் ! ஆச்சரியமாய் உள்ளது !

நெப்போலியன்: (காதில் விழாதது போல் புறக்கணித்து) பர்ராஸ் என் நண்பர் ! என்னவாயிற்று அவருக்கு ? சின்னப் பெண்ணே ! இனிமேல் பர்ராஸைப் பற்றியும் பேசாதே.

ஹெலினா: என்ன சொல்கிறீர் ? புரிய வில்லையே எனக்கு !

நெப்போலியன்: எதையோ நீ ஒளித்துப் பேசுகிறாய் ! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறாய் ! யாரிந்த மாது ? புரியும்படிச் சொல் !

ஹெலினா: (ஏளனமாய்) அவள் ஓர் அற்பப் பெண், கர்வப் பெண், செலவாளிப் பெண், அவளது கணவன் ஒரு பேராசைக்காரன், அவளைப் பற்றி முற்றிலும் அறிந்தவன் ! அவள் தன் வயதை, வருவாயை, சமூக நிலையை எல்லாவற்றையும் அவனிடம் புளுகியவள் ! அவள் பிற ஆண்களிடம் உறவு கொண்டவள் ! ஆனால் அவளைக் கண்ட எந்த ஆடவனும் அவளிடம் மயங்குவான் ! அவளுக்கு அடிமை ஆவான் ! அவளைக் காதலிப்பான் ! அவளைப் பற்றிக் கனவு காணுவான் ! தனக்காக விரும்பி, தன்னலம் பேணி பர்ராஸை நண்பனாக இழுத்துக் கொண்டவள் !

நெப்போலியன்: (மிகக் கோபத்துடன்) யார் ? யார் ? யாரந்தக் கபட மாது ? சொல் சின்னப் பெண்ணே ! சொல் !

++++++++++++++++++++

“இந்த ஆண்டுப் போர் நினைத்துப் பார்க்க முடியாதபடி முற்றிலும் மாறி விட்டது. போதிய அளவு இறைச்சி, ரொட்டித் துண்டுகள், குதிரைகளுக்குத் தீவனம் ஆகியவை எனக்குக் கிடைத்தன. நான் அவற்றைப் பகிர்ந்து அளித்தேன். எனது இராணுவப் படையினர் என் மீது சொல்ல முடியாத அளவுக்கு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால் நீ ஒருத்தி மட்டுமே என்மேல் மன எரிச்சல் கொண்டிருக்கிறாய் ! நீ மட்டுமே எனக்கு மகிழ்ச்சி ஊட்டுபவளாகவும், என்னைச் சித்திரவதை செய்பவளாகவும் இருந்து வருகிறாய்.”

நெப்போலியன் (தன் மனைவி ஜோஸஃபினைப் பற்றி)

+++++++++++++++++

நெப்போலியன்: (மிகக் கோபத்துடன்) யார் ? யார் ? யாரந்தக் கபட மாது ? சொல் சின்னப் பெண்ணே ! சொல் !

ஹெலினா: முதலில் அந்தப் பெண்ணின் கடிதத்தை எனக்குத் தந்துவிட்டுக் கேட்பீரா ?

நெப்போலியன்: நீ என்னைப் பைத்திய மாக்குகிறாய் பெண்ணே ! என் பொறுமையைக் கிண்டுகிறாய் ! போ வெளியே ! போ !

ஹெலினா: (பிடிவாதமாய்) முதலில் அந்தக் கடிதம் இந்தக் கையிக்கு மாற வேண்டும் ! அதற்குப் பிறகுதான் நான் வெளியேறுவேன்.

நெப்போலியன்: உனக்கு அந்தக் கடிதத்தை நான் தரப் போவதில்லை ! நான் உன்னை வெறுக்கிறேன். ஒற்றுப் பெண்ணான நீ என்னைப் பேதலிக்க வைக்கிறாய் ! அழகியானாலும் நீ அகத்தில் ஓர் அவலட்சண மாது ! ஒரு மூடப் பெண் தொல்லை எனக்கு வேண்டாம். போய்த் தொலை ! என் கண்முன் நில்லாதே ! (முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.) (திரும்பிக் பார்க்கிறான்). ஏன் குறும்புடன் சிரிக்கிறாய் ? யாரைப் பார்த்துச் சிரிக்கிறாய் ?

ஹெலினா: (பெரிதாகச் சிரித்து) உம்மைப் பார்த்துதான் ஜெனரல் ! வல்லமை பெற்ற பெரிய தளபதி திடீரெனச் சிறிய பையனாக மாறிவிடுகிறார் ! எப்படிச் சிரிக்காமல் இருப்பது ? இப்படிப் பட்ட பெரிய வீரரை இப்போதுதான் நான் நேரே சந்திக்கிறேன் !

நெப்போலியன்: (கோபத்துடன்) உன் வாயிலிருந்து வருவதெல்லாம் வசை மொழிகள்தான் ! ஒற்று வேலை செய்ய வந்திருக்கும் நீ என்னை அவமானப் படுத்த முனைகிறாய் ! முகத்துதி செய்வது போல் பாசாங்கு பண்ணி என் முகத்தில் கரியைப் பூசுகிறாய் !

ஹெலினா: (ஏளனமாக) அந்தக் கடிதம் எனக்குத் தேவையில்லை ! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உம்மை அவமதித்து அந்தக் கடிதத்தில் எழுதி யுள்ளதைப் படித்து நீங்களே மன வேதனை அடைய வேண்டும் ! அந்தக் கடிதத்தின் குறிக்கோளும் அதுதான் ! அதன் வேலையாவது நிறைவேறட்டும் ! விடை பெறுகிறேன் ஜெனரல் ! (கோபத்துடன் கதவருகில் விரைந்து போகிறாள்.)

நெப்போலியன்: (கையை நீட்டி) நில் போகாதே ! எங்கே போகிறாய் ? நிற்கிறாயா இல்லையா ? ஆணை இடுகிறேன் ! நில் இங்கே வா ! பிடிவாதக்காரியே நில் ! என்னருகே வா ! (வேகமாய்ச் சென்று ஹெலினாவின் கையைப் பற்றி நிறுத்துகிறான்) கேட்ட கேள்விக்குப் பதில் சொல் !

ஹெலினா: (சினத்துடன்) கையைத் தொடாதீர் ! நான் உமது பணிப்பெண் இல்லை ! நீவீர் எனது மேலதிகாரியும் அல்லர் ! ஏனிப்படிக் கேட்கிறீர் ? போகும் என்னை ஏன் தடுக்கிறீர் ? நான்தான் காரணத்தை விளக்கிச் சொல்லி விட்டேனே !

நெப்போலியன்: எப்போது விளக்கிச் சொன்னாய் ?

ஹெலினா: (சினத்துடன்) முதலில் அந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள் ஜெனரல் ! நான் சொல்லியது மெய்யா பொய்யா வென்று ?

நெப்போலியன்: (கடிதக் கட்டுகளைத் தாவி எடுத்துத் தயக்கமோடு பார்த்து தூக்கி எறிகிறான்) நான் ஏன் பிறருக்கு வந்த கடிதத்தைப் படிக்க வேண்டும் ?

ஹெலினா: அந்தக் கடிதத்தில் உமக்கினிய தகவல் உள்ளது ஜெனரல் ! அஞ்சாமல் படித்துப் பாருங்கள். உமக்குரிய கடிதம் அது !

நெப்போலியன்: ஆகவே நான் அந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும் என்று நீ எனக்கு ஆணை இடுகிறாயா ? வேடிக்கையாக உள்ளது மேடம் !

ஹெலினா: சின்னப் பெண்ணிலிருந்து இப்போது எனக்கு மேடம் என்னும் மேல்நிலை மதிப்பு ! மகிழ்ச்சி உண்டாகுது எனக்கு !

நெப்போலியன்: அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் உள்ளது ?

ஹெலினா: ஜெனரல் ! அந்தப் பெண்ணுக்குத் தன் கணவனைப் புரிந்து கொள்ளும் அறிவில்லை.

நெப்போலியன்: (உடன்பாடுடன் தலை அசைத்து) அப்படியானால் நான் அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன். (கடிதக் கட்டை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான்.)

ஹெலினா: (ஆச்சரியமாக) எப்படிப் படிக்காமல் இருப்பது ? உதாரணமாக அது ஒரு வீட்டுச் சண்டை ! பர்ராஸோடு புரியும் வாள் சண்டை ! பிளவு பட்ட இல்வாழ்வு ! பொது மக்களின் அவதூறு ! உளவப்படும் ஓர் பதவிப் பீடம் ! இந்த மாதிரித் தவறுகள் அந்தக் கடிதத்தில் காணப் பட்டுள்ளன.

நெப்போலியன்: (மனமுடைந்து, இங்குமங்கும் நடைபுரிந்து தயக்கமோடும், தடுமாற்றமோடும், தலை குனிந்து) தந்து விடுகிறேன் அந்தக் கடிதத்தை மேடம் ! நீதான் ஜெயித்தாய் ! நீ போராடிக் கேட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டு போய்த் தொலை ! கார்ஸிகன் தோற்றான் ஒரு காரிகைக்கு ! எடுத்துச் செல் உன் கடிதத்தை ! (கடிதக் கட்டுகளைக் ஹெலினாவிடம் கொடுக்கிறான்.)

+++++++++++++++++++

“இனிமேல் நான் உன்னை நேசிக்கப் போவதில்லை. அதற்கு மாறாக நான் உன்னை வெறுக்கிறேன். நீ ஓர் ஈனப் பெண் ! மனப் பிறழ்ச்சி உள்ளவள் ! எனக்கு நீ கடிதம் எழுதுவதே இல்லை. உனது கணவனை நீ நேசிப்பது மில்லை. மெய்யான உன் காதலனுக்கு எழுதுவதைத் தவிர வேறெந்த முக்கிய வேலைக்கு நேரத்தை நீ செலவழிக்கிறாய் ?”

“என் பகைவனை வீழ்த்தி விட்டேன் நான் ! களைத்துப் போய் நான் இப்போது செத்துக் கொண்டிருக்கிறேன் ! வெரோனாக்கு நீ விரைந்து வா ! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் உன்னை. என்னருகில் நீ இருக்க வேண்டும்.”

நெப்போலியன் (வெரோனாவிலிருந்து மனைவி ஜோஸஃபினுக்கு எழுதிய கடிதம்)

++++++++++++

நெப்போலியன்: (மனமுடைந்து, இங்குமங்கும் நடைபுரிந்து தயக்கமோடும், தடுமாற்றமோடும், தலை குனிந்து) தந்து விடுகிறேன் அந்தக் கடிதத்தை மேடம் ! நீதான் ஜெயித்தாய் ! நீ போராடிக் கேட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டு போய்த் தொலை ! கார்ஸிகன் தோற்றான் ஒரு காரிகைக்கு ! எடுத்துச் செல் உன் கடிதத்தை ! (கடிதக் கட்டுகளைக் ஹெலினாவிடம் கொடுக்கிறான்.)

ஹெலினா: (கடிதக் கட்டைக் கையில் வாங்கிக் கொள்ளாமல்) இதென்ன வேடிக்கை ? என்னிடம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி ஏனிப்போது அதைத் தருகிறீர் ? (நெப்போலியன் கடிதக் கட்டுகளைத் தரையில் எறிகிறான்.) (ஏளனமாக) அரசாங்க இரகசியமுள்ள கடிதங்களை இப்படித் தரையில் போடுவீரா ? ஒரு கடித்தைக் கேட்டால் நீங்களே கடிதக் கட்டை ஒற்றருக்குத் தரலாமா ? உமது கடிதங்கள் எனக்குத் தேவையில்லை.

நெப்போலியன்: (ஆச்சரியமாக) பத்து நிமிடத்துக்கு முன் உனக்கு அதுதான் தேவையாக இருந்தது.

ஹெலினா: (ஏளனமாக) பத்து நிமிடத்துக்கு முன் நீங்களும் அளவுக்கு மீறி என்னை அவமதிக்க வில்லை !

நெப்போலியன்: (மனமிரங்கி) மன்னிப்புக் கேட்கிறேன் அதற்கு !

ஹெலினா: (சாந்தமாக) நன்றி ! மிக்க நன்றி ஜெனரல் !

நெப்போலியன்: (மரியாதையுடன் கடிதக் கட்டை அவளிடம் நீட்டுகிறான்.) சரி, கடிதத்தை நீ எடுத்துக் கொள்.

ஹெலினா: (சற்று பின்வாங்கி) நீங்கள் கடிதத்தில் உள்ளதைப் படிக்க வில்லையா ? ஆஸ்டிரியப் படைகள் வட இத்தாலியில் மாண்டோவா அல்லது பெச்சிசராவில் (Mantova & Peschiera,, North Italy) புகுந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து கொள்ள விரும்ப வில்லையா ?

நெப்போலியன்: (சற்றுக் கோபமோடு) நான் முன்பே சொல்லிவிட்டேன் ! எனது பகைவரை ஒற்றர் உதவியின்றி நான் முறியடிக்க முடியும் மேடம் !

ஹெலினா: அது சரி, உமக்கு வந்த கடிதத்தைக் கூடப் படிக்க மாட்டீரா ?

நெப்போலியன்: என் பெயருக்கு வரவில்லை அந்தக் கடிதம் என்று நீதானே கூறினாய் ! பிறருக்கு வந்த கடிதத்தை நான் படிக்கும் வழக்கமில்லை மேடம் ! (கடிதத்தை நீ எடுத்துக் கொள்.)

ஹெலினா: நீங்கள் அந்தக் கடிதத்தை வைத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. (சிரித்துக் கொண்டு) எனது வேலை அந்தக் கடிதத்தை நீவீர் படிக்கக் கூடாதென்று தடுப்பதே. போய் வருகிறேன் ஜெனரல் ! (மெதுவாக வெளியேறுகிறாள்)

நெப்போலியன்: (கோபமாகக் கடிதக் கட்டை மேஜை மீது எறிந்து) கடவுளே ! எனக்குச் சிறிது பொறுமையைக் கொடு ! (பல்லைக் கடித்து) அறிவு கெட்ட பெண்ணே ! உன் உயிர் மேல் உனக்குப் பயம் இருக்கிறதா ? அல்லது நீ அன்னியன் கையில் அடி வாங்கி உதை வாங்கி முகம் வீங்கிப் போக விரும்புபவளா ?

ஹெலினா: நன்றி ஜெனரல் ! நான் விடை பெறுகிறேன். உங்கள் கண்களில் கனல் பறக்கச் செய்து விட்டது என் தவறு ! நீங்கள் பரிவு மிக்கவர் ! உங்கள் கடிதங்களைக் களவாடினேன் ! நீங்கள் அதற்கென்னை மன்னித்தீர் ! அந்தக் கடிதங்களை உம்மிடம் சேர்த்து விட்டேன் ! அதற்கும் பொங்கி எழாமல் நீங்கள் பொறுத்துக் கொண்டீர் ! போரில் தோற்கடித்த பிறகு நீவீர் பகைவரைப் பரிவுடன், மதிப்புடன் நடத்துகிறீர் ! விடை கொடுங்கள் ஜெனரல் ! என் வேலை முடிந்து விட்டது !

நெப்போலியன்: (கோபம் எல்லை கடந்து, கை நீட்டிக் கதவைத் திறந்து, உரத்த குரலில்) கியூஸெப் ! கியூஸெப் ! வா இங்கே ! (கதவைப் படாரென்று சாத்துகிறான்)

கியூஸெப்: (கதவைத் திறந்து நடுக்கமுடன் ஓடி வந்து கை கட்டி) மேதகு ஜெனரல் ! இதோ வந்து விட்டேன் ! (வணக்கம் செய்கிறான்)

நெப்போலியன்: எங்கே அந்த முட்டாள் லெஃப்டினென்ட் ? என்ன செய்கிறான் ? அழைத்து வா அவனை !

கியூஸெப்: மேதகு ஜெனரல் ! வயிறு புடைக்கத் தின்று பூதம் போல தூங்கிறான் குறட்டை விட்டு !

++++++++++++++++++

“இன்றிரவு 1213 கிளர்ச்சிக்காரரைச் (Insurgents) சுட்டுக் கொல்லப் போகிறோம். இறுதி விடை தருவோம் அவருக்கு ! அதை நினைக்கும் போது ஆனந்தக் கண்ணீர் பொங்குது என் கண்களில்.”

நெப்போலியன் (1793) [லையான் (Lyon) உள்நாட்டுக் கிளர்ச்சியை அடக்கிய போது]

“அவளுக்கு எல்லாம் வேண்டுமாம் ! நான் அவளை மெய்யாக நேசித்தேன். ஆனால் அவள் மீது எனக்கு மதிப்பு உண்டாகவில்லை. அவளுக்கு மிக்க அழகிய சிறிய கொங்கைகள் !”

நெப்போலியன் (மனைவி ஜோஸஃபினைப் பற்றிய உரையாடல்)

+++++++++++++++++

நெப்போலியன்: கியூஸெப் ! எங்கே அந்த முட்டாள் லெ·ப்டினென்ட் ? என்ன செய்கிறான் ? போய் அழைத்து வா அவனை !

கியூஸெப்: மேதகு ஜெனரல் ! வயிறு புடைக்கத் தின்று பூதம் போல தூங்கிறான் குறட்டை விட்டுக் கொண்டு !

நெப்போலியன்: எழுப்பு அவனை ! இழுத்து வா உன்னுடன் ! (கியூஸெப் ஓடிச் செல்கிறான்.) (ஹெலினாவைப் பார்த்து) உனக்குத் தொந்தரவு கொடுக்கிறேன். தயவு செய்து சிறிது நேரம் பொறுத்திரு !

(ஹெலினா திரும்பி வருகிறாள். நெப்போலியன் கடிதக் கட்டுகளை எடுத்துப் பைக்குள் திணிக்கிறான். கியூஸெப் பின்னால் லெஃப்டினென்ட் மெதுவாக வந்து நெப்போலியனுக்குச் சல்யூட் செய்கிறான். லெஃப்டினென்ட் தலையில் தொப்பி அணியாது, இராணுவ உடையைச் சரிவர அணியாது, வாளின்றி வந்து ஹெலினாவின் பக்கத்தில் நின்று கொள்கிறான். சாப்பிட்ட பின் சற்று தெம்பாக இருக்கிறான்.)

நெப்போலியன்: லெஃப்டினென்ட் ! நீ ஓர் இராணுவ அதிகாரி ! இராணுவ உடையைச் சரியாக அணியாது இப்படி ஒரு கோமாளி போல் என் முன் வருவாயா ?

லெ·ப்டினென்ட்: (தயக்கமுடன்) மன்னிக்க வேண்டும் ஜெனரல் ! ஆடை அணிவதற்குள் என்னை அவசரமாய் இழுத்து வந்து விட்டார் இந்த விடுதி உரிமையாளர் !

நெப்போலியன்: பார் லெஃப்டினென்ட் ! இந்த ஒற்றுப் பெண்ணை என்னால் வளைக்க முடிய வில்லை ! அவளிடமிருந்து எதையும் நான் கறக்க இயல வில்லை ! இவள் ஒரு கர்வக்காரி ! திமிர்ப் பிடித்தவள் ! அடங்கா மடந்தை ! உன்னை நடுவழியில் ஏமாற்றி உன் கடிதங்களைக் களவாடியவன் தன் தமையன் என்று உன்னிடம் ஒப்புக் கொண்டவள் இவள்தான் இல்லையா ?

லெ·ப்டினென்ட்: (வெற்றிப் பெருமிதமோடு) நான் இதைத்தான் சொன்னேன் ஜெனரல் ! இவளை நம்பக் கூடாது என்று சொன்னேன் ! இவளொரு புளுகு மங்கை என்று நான் சொல்ல வில்லையா ?

நெப்போலியன்: முதலில் உன்னை ஏமாற்றிய உளுத்தனைக் கண்டுபிடித்து இங்கு இழுத்துவா ! உன் நேர்மைத்தனம் இப்போது சோதிக்கப் படுகிறது. நமது இராணுவத்தின் விதி உன் கையில் உள்ளது ! ஆஸ்டிரியாவைக் கைபற்றும் திட்டம் அந்த அரசாங்கக் கடிதங்களில் உள்ளது. பிரான்சின் தலைவிதி உன் கடமைப் பணியில் உள்ளது ! ஏன் சொல்லப் போனால் ஐரோப்பாவின் தலைவிதியே அந்தக் கடிதக் கட்டுகளில் உள்ளது ! அது தெரியாமல் எப்படி உனக்கு இரவில் உறக்கம் வருகிறது ? மனித இனத்தின் எதிர்காலப் போக்கே இராணுவ ரகசியமாய் எழுதப் பட்டு அந்தக் கடிதங்களில் இருக்கலாம் !

லெஃப்டினென்ட்: (கவனமாக) அப்படியா ஜெனரல் ? இந்த அறிவீனனை மன்னித்து விடுவீர் ! அத்தகைய முக்கிய இராணுவ விபரங்கள் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை !

நெப்போலியன்: (அழுத்தமாக) ஆமாம் லெ·ப்டினென்ட் ! அவற்றை என்னிடம் சேர்க்கும் அந்த முக்கியப் பணியில் நீ தவறினாய் ! கடிதங்களை நீ மீட்டு என்னிடம் தரவில்லை யானால் உன் இராணுவப் படையினர் முன்பாக நீ இகழப்படுவாய் !

லெஃப்டினென்ட்: (மனம் குமுறித் தழுதழுத்து) ஜெனரல் ! அது சரியான தண்டனை எனக்கு ! என்மீது என் சகப் படையாளர் காறித் துப்ப வேண்டும் ! ஏற்றுக் கொள்கிறேன் ஜெனரல் ! ஆனாலும் நான் அந்தக் கடிதத்தைப் பெற்று என் பெயரைக் காப்பாற்ற வேண்டும்.

நெப்போலியன்: உன்னை எல்லாருக்கும் முன் அவமானப் படுத்துவது என் குறிக்கோள் இல்லை ! உன்னை அதிலிருந்து காப்பாற்ற உனக்கொரு வழி காட்டுகிறேன் ! அடுத்தொரு வாய்ப்பு உனக்கு ! தேடிப் போய் அவனைக் கண்டுபிடித்து உன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள் !

லெஃப்டினென்ட்: முதலில் பிரான்சின் பெயரைக் காப்பாற்றுகிறேன் !

நெப்போலியன்: முதலில் என் பெயரைக் காப்பாற்று ! கடிதத்தில் உள்ளபடி நான் போரிட வில்லை யென்று அரசாங்கத்திட மிருந்து எனக்குத் தண்டனை கிடைக்கும் ! என்ன கண்டனம் உனக்கு வந்தாலும் சரி, அந்தக் கடிதங்கள் என் கையில் கிடைக்க வில்லை யென்று நான் உலகுக்கு நிரூபிக்க வேண்டும். உன்னை காப்பது எப்படி லெ·ப்டினென்ட் ?

லெஃப்டினென்ட்: என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் ஜெனரல் ! உங்கள் மனது நல் மனது ! கல் மனது இல்லை ! எனக்குக் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதீர். நான் எப்படியாவது தப்பிக் கொள்வேன் ! நம் படைவீரர் ஆஸ்டிரியாவைப் பிடித்து விடுவார் கடிதங்கள் கிடைத்தாலும் சரி ! காணாமல் போனாலும் சரி ! ஒளிந்திருக்கும் இந்தக் குள்ள இளைஞனைத் தேடச் சொல்லி என்னை மீண்டும் வற்புறுத்தாதீர் ! எங்கு மறைந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியாது ! எப்படிக் கண்டுபிடிப்ப தென்று எனக்குத் தெரியாது. எப்போது நானவனைப் பிடிப்பேன் என்பதும் தெரியாது ! எதை வைத்து ஈனப்பயலைக் கண்டுபிடிப்பது ?

நெப்போலியன்: (கோபத்துடன்) நீ ஒரு படைவீரன் ! சொல், உனக்கு என்னதான் தெரியும் ? கடிதங்களைக் கைவிடத் தெரியும் ! கள்வனிடம் ஏமாறத் தெரியும் ! திட்டமின்றி நீ எப்படி ஆஸ்டிரியாவைக் கைப்பற்றுவாய் ?

கியூஸெப்: லெஃப்டினென்ட் ! மறந்துவிட்டீரே உமது குதிரை அவனிடம் உள்ளதே ! அதை வைத்து அவனைக் கண்டுபிடிக்கலாமே !

லெஃப்டினென்ட்: நல்ல யோசனைதான். நான் மறந்து விட்டேன் ! ஆனால் ஒரு குதிரை போல் ஆயிரம் குதிரைகள் இருக்கும் ! அந்தக் குதிரை உயிரோடு உள்ளதோ ? அல்லது செத்து விட்டதோ ? இத்தாலியில் அந்தக் குதிரைத் தேடுவதற்குப் பதிலாக சதிகாரனைத் தேடிப் போகலாம் ! ஜெனரல் ! விடை கொடுப்பீர். நான் போகிறேன். அந்தக் கயவனை நான் எப்படியாவது பிடித்தாக வேண்டும். கியூஸெப் ! போ ! போய் எனக்கொரு குதிரையைத் தயார் செய்வீர் ! செல் சீக்கிரம் செல் !

++++++++++++++

“நான் பிரான்சின் ஆட்சித் தளபதியானால் பாரிஸ் நகரை உலகப் பெரும் அழகிய நகராக்குவதோடு இதுவரையில் காணாத ஓர் எழில் நகராக்குவேன்.  கடவுள் ஆசியால் என் ஆயுள் இன்னும் இருபது ஆண்டுகள் நீடித்து நான் ஓய்வில் இருந்தால், பாரிஸ் நகரின் பழைய சிறு பகுதி ஒன்றைக் கூட நீ பார்க்க நேர்ந்திடாது.”

நெப்போலியன் (1798)

+++++++++++++++++++++++

லெஃப்டினென்ட்:  (கியூஸெப்பைப் பார்த்து)  போ ! குதிரை ஒன்றைக் கொண்டுவா !

கியூஸெப்: (பரபரப்புடன்) இதோ போகிறேன் லெஃப்டினென்ட் ! (வேகமாக வெளியேறுகிறான்)

லெஃப்டினென்ட்:  அந்தக் கயவனை உங்கள் முன் இழுத்து வந்து நிறுத்துகிறேன் ஜெனரல் !  ஒரு சிறு வேண்டுகோள். (தயக்கமுடன்) இப்போது என் உடை வாளைக் காணோம் !  யார் களவாடி விட்டார் என்று தெரியவில்லை ?  முதலில் என் வாளைக் கண்டுபிடிக்கிறேன் !  வாளின்றி அந்த ஆளைப் பிடிப்பது சிரமம் !

நெப்போலியன்:  முட்டாள் !  நீ போர் வீரனா ?  படைவீரன் என்று வெளியே சொல்ல வெட்கப் பட வேண்டும் !  கள்வன் இல்லாத இடத்திலும் உன் வாள் காணாமல் போகிறது !  இனி உன்னிடம் உள்ளவை உன் கால்களும், கைகளும்தான் !  ஒருநாள் அவையும் உன்னிடமிருந்து களவு போகும் !

ஹெலினா: (சிரித்துக் கொண்டே) இதெல்லாம் என்ன ஜெனரல் ?

நெப்போலியன்:  உன் சகோதரனை இந்த மாவீரன் காணப் போவதில்லை !  குதிரை இல்லை ! வாள் இல்லை !

ஹெலினா:  நிச்சயமாகக் காண மாட்டார் !  ஒற்றனைத் தேடிப் போகும் லெஃப்டினென்ட் எப்போது திரும்பி வருவாரோ ?

நெப்போலியன்:  முக்கிய அரசாங்கக் கடிதங்கள் எப்போதோ இழக்கப் பட்டன !

ஹெலினா:  இல்லை ஜெனரல் ! அவை உமது பையில் உள்ளன !

நெப்போலியன்:  இந்தக் கடிதக் கட்டில் எல்லாக் கடிதங்களும் இல்லை பெண்ணே !  நான் எதிர்பார்த்த கடிதமில்லை !  அந்த ரகசியக் கடிதங்கள் களவு போய் விட்டன சின்னப் பெண்ணே !

ஹெலினா:  அந்த அப்பாவி லெஃப்டினென்ட் வேலை போய்விடுமா ?

நெப்போலியன்:  அவனைச் சுட்டுத் தள்ளி துப்பாக்கி மருந்தை வீணாக்குவது கூடத் தப்பு !

ஹெலினா:  (அதிர்ச்சியோடு) கல் நெஞ்சம் படைத்தவர் தாங்கள் !  மனித உயிர் மேல் சிறிது கூடப் பரிவும் பாசமும் இல்லை உமக்கு.  ஆணையும், பெண்ணையும் அவமதிப்பதே உமது தொழில் !  மனிதரைச் சுட்டு வேட்டையாடுவது உமது இனிய பொழுது போக்கு !

நெப்போலியன்:  (சிரித்துக் கொண்டே)  நம்மில் யார் அந்தப் படைவீரனை ஏமாற்றி அவமானப் பட வைத்தது ?  நீயா ? நானா ? அதை நீ சிந்தித்தது உண்டா ?

ஹெலினா:  நான் அப்படி எண்ணிப் பார்க்க வில்லை.  அது எனது கெட்ட புத்தி !  பாவம் மனிதர் !  இப்போது அவரை அவமானத்திலிருந்து நான் எப்படிக் காப்பாற்றுவது ?

நெப்போலியன்:  அவன் பெயரைக் கெடுத்தது நீ !  இப்போது அவனைக் காப்பாற்ற போவதும் நீ !  பிறரிடம் ஏமாற்றம் அடையும் ஒரு படை வீரனை நான் மதிப்பதில்லை.

(அப்போது லெஃப்டினென்ட் முறையாக இராணுவ உடை அணிந்து வாளுடன் வேகமாக வருகிறான்.)

லெஃடினென்ட்: (முக மலர்ச்சியோடு)  ஜெனரல் !  கள்வனைப் பிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன்.  விடை பெறுகிறேன் !

நெப்போலியன்:  கயவனை நான் காண வேண்டாம் !  கடிதங்களை நீ கைப்பற்றி வா !

ஹெலினா:  (கவலையோடு) லெ•ப்டினென்ட் !  எந்தத் திசையில் போகிறீர் ? என்ன செய்யப் போகிறீர் என் அப்பாவிச் சகோதரனை ?  கொல்லாதீர் அவனை !

லெஃடினென்ட்:  கால நேரத்தை வீணாக்க முனைகிறாய் மேடம் !  போதும் அறிவுரை !  போகும் போது என்னை நிறுத்தாதே !  முன்வைத்த காலை நான் பின்வைக்க மாட்டேன் !

ஹெலினா: (கொல்லெனச் சிரித்து)  அப்படியானால் எப்படி நீ நடக்க முடியும் ?

லெ•டினென்ட்:  அயோக்கியத் தமயன் மீது இத்தனை பாசமா ?  அவன் தலையை நான் சீவப் போவதில்லை !  ஆனால் தோலை உரிப்பேன் !  அல்லது முதுகு எலும்பை நொறுக்குவேன் ! மன்னிக்க வேண்டும் மேடம் !  உன் தமயனால் என் ஊதியம் போனது !

ஹெலினா: (கவலையோடு)  அவனுக்குக் காயம் உண்டானால் என் கண்ணில் இரத்தம் வடியும் !  அவனை நீ விட்டுவிட வேண்டும் !  நான் சொல்வதைக் கேள் !  அவன் எங்கிருக்கிறான் என்று நான் சொல்கிறேன்.  அவனைப் பிடித்து உன் வசம் ஒப்படைப்பது என் பொறுப்பு.  நீ அவனை ஜெனரலிடம் இழுத்து வரலாம் !  அவனைத் தாக்கப் போவதில்லை என்று நீ எனக்கு வாக்கு அளிப்பாயா ?  வாள் சண்டை போடாமல் மதிப்போடு அவனை நடத்துவாயா நீ ?

லெஃடினென்ட்:  அவன் என்னைத் தாக்கினால் நான் என்ன செய்வது ?  எனது துப்பாக்கி அவனிடம் உள்ளது.  அதை மறக்காதே நீ !

ஹெலினா:  அவன் உன்னைத் தாக்கினால் நீ அவனைத் தாக்கலாம்.

லெஃடினென்ட்:  என்னுடைய குதிரை அவனிடம் உள்ளதே.

ஹெலினா:  உன் துப்பாக்கியும், குதிரையும் உன்னை வந்தடையும்.  அதற்கு நான் பொறுப்பு.

லெஃடினென்ட்: (ஆவலாக) முதலில் அவன் எங்கிருக்கிறான் என்று சொல் ?

ஹெலினா:  அவன் வெகு தூரத்தில் இல்லை !  அவனுக்கு நான் சிமிக்கை செய்தால் அரை மணி நேரத்தில் இங்கு வந்து விடுவான் !

லெஃடினென்ட்:  (ஆச்சரியமாக, வாளை உருவி)  என்ன ?  அருகிலா இருக்கிறான் அந்தக் கயவன் ?

ஹெலினா:  வாளை உருவாதே !  அவனுக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது !  பொறு ! ஆத்திரப் படாதே !

+++++++++++++

“ஐரோப்பா முழுவதிலும் ஒரே விதமான நாணயம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது வணிகத் துறையில் பயன்படுத்த யாவருக்கும் எளிதாக இருக்கும்.”

நெப்போலியன் (1802)

நெப்போலியன் பாரிஸ் நகரைச் சீர்ப்படுத்த செய்தவற்றுள் நீடித்த நீர்வள வசதி 38 மில்லியன் பிராங்க் (5 மில்லியன் ஈரோ) (3.9 மில்லியன் டாலர்) செலவில் அறுபது மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டி ஒர்க் நதியிலிருந்து (River Ourcq) நல்ல தண்ணீர் கொண்டு வந்ததே.

நெப்போலியன் (From The Nation Builder)

ஹெலினா: வாளை உருவாதே ! என் சகோதரனுக்கு எந்தக் காயமும் ஏற்படக் கூடாது ! ஆத்திரப் படாதே ! அவசரப் படாதே ! அடிக்கப் போகாதே !

லெ·ப்டினென்ட்: மயிலே மயிலே என்றால் அது தோகையைப் போடாது. அதைப் பிடுங்கித்தான் எடுக்க வேண்டும் !

ஹெலினா: கத்தியை நீட்டாது உன் புத்தியால் பெறு ! அவன் பயந்த சுபாவம் உள்ளவன் ! வாளும் வேலும் கோழைகளுக்குத் தேவை ! மெய்யான வீரனக்கு ஆயுதம் அவனது கூரிய புத்தி !

லெ·ப்டினென்ட்: புத்தி இருந்தாலும் நான் கத்தி நீட்டத்தான் கற்றுக் பெற்றவன் ! எனக்குப் புத்தி இருந்தாலும் பயனில்லை. புத்தி இருந்தும் நான் என் குதிரை இழந்தேன், கடிதங்களைப் பறி கொடுத்தேன். புத்தி எனக்கு உதவவில்லை.

ஹெலினா: என் சகோதரனைப் பிடிப்பேன் அல்லது மடிவேன் என்பதைத் தவிர வேறொன்றும் அவனிடம் கூறாதே ! உன்னை அவன் நம்ப மாட்டான் ! ஆனாலும் அவனைப் பிடித்து விடலாம் அப்போது.

லெ·ப்டினென்ட்: கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடிப்பதுபோல் தெரியுது ! மேடம் ! நீ சொல்வது எனக்குப் புரியவில்லை !

கியூஸெப்: (ஓடி வந்து) குதிரை தயார் லெ·ப்டினென்ட் ! நல்லாசிகள் ! போய் வருவீர் !

லெ·ப்டினென்ட்: ஆனால் நான் தயாராக இல்லை கியூஸெப் ! ஜெனரலைப் பார்த்து நான் பேச விரும்புவதாய்ச் சொல் !

கியூஸெப்: என்ன ? அது நிறைவேற்ற முடியாத கட்டளை ! கேவலம் ஒரு லெ·ப்டினென்ட் விளித்து ஒரு ஜெனரலை அழைத்துவர என்னிடம் சொல்லலாமா ? வேடிக்கையாய் இருக்கிறதே ! நான் செய்ய முடியாது !

லெ·ப்டினென்ட்: ஏன் அப்படிச் சொல்கிறாய் ?

கியூஸெப்: ஒரு ஜெனரல் தன்கீழ் வேலை செய்யும் ஒரு லெ·ப்டினென்டை அழைத்து வர ஆணையிடலாம். லெ·ப்டினென்ட் எப்படித் தன் மேலதிகாரியை அழைத்து வரச் சொல்லலாம் ?

லெ·ப்டினென்ட்: உண்மைதான் ! நான் மறந்து விட்டேன் ! இப்போது நமது அரசாங்கம் ஒரு குடியரசு ! இந்தக் கட்டளை விதிகளை எல்லாம் நான் கடைப்பிடிக்க வேண்டும்.

(அப்போது திடீரென நெப்போலியன் நுழைகிறான். கோட்டுப் பட்டனைப் போட்டுக் கொண்டு சிந்தனையோடு காணப் படுகிறான்.)

கியூஸெப்: (நெப்போலியன் வருவதைப் பாராமல்) உண்மைதான் லெ·டினென்ட் ! பிரான்சில் நீங்கள் எல்லோரும் இப்போது விடுதிக் காப்பாளி போல் ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து வருகிறீர்.

நெப்போலியன்: (கியூஸெப் தோள் மீது கைவைத்து) இப்போது அந்த அடிமைப் பணிவு உன்னிடம் போய் விட்டது அல்லவா ?

கியூஸெப்: (பதறிப்போய்) ஜெனரல் ! அடியேனை மன்னித்து விடுவீர் ! நீங்கள் வந்தது தெரியாமல் போனது. என் வாயும் உளற ஆரம்பித்து விட்டது.

நெப்போலியன்: (கியூஸெப் தலையைத் தட்டி) உன் மூளை துருப்பிடித்துப் போனது ! பேசும் போது கவனம் செலுத்து இனிமேல்.

லெ·ப்டினென்ட்: (நெப்போலியனைப் பார்த்து) அந்தப் போக்கிரியைப் பிடித்து உங்கள் முன் நிறுத்தும் வரை எனக்கு உறக்கம் வராது ! உண்பதும் செரிக்காது ஜெனரல் !

நெப்போலியன்: (அதட்டலுடன்) லெ·ப்டினென்ட் ! அந்தக் கயவனை உன்னால் பிடிக்க முடியாது ! வீணான முயற்சி அது !

லெ·ப்டினென்ட்: அப்படியா நினைக்கிறீர் ? கொண்டு வந்து அவனை உமது முன் நிறுத்துகிறேனா இல்லையா வென்று பாருங்கள் ! அப்போதுதான் என் மதிப்பு மேலேறும் ! இராணுவப் படைகள் முன்பு என்னை அவமானம் செய்ய மாட்டீர் ! பலர்முன் நான் நகைப்பாளியாய் ஆகக் கூடாது.

நெப்போலியன்: (ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டு) இவனை என்ன செய்யலாம் கியூஸெப் ? சொல்வ தெல்லாம் தவறு ! செய்வ தெல்லாம் தவறு ! இவன் புத்தியை எப்படித் தீட்டுவது ?

கியூஸெப்: அவனை ஒரு ஜெனரலாக்கி விடுங்கள் ! அவன் செய்வ தெல்லாம் செம்மையாகப் போகும் ! சொல்வ தெல்லாம் நல்லதாகத் தெரியும் !

லெ·ப்டினென்ட்: (கலகலவெனச் சிரித்து) கியூஸெப் ! நீ யாரைக் கேலி செய்கிறாய் ? லெ·ப்டினென்ட் என்னையா ? அல்லது மேன்மை தங்கிய ஜெனரலையா ?

நெப்போலியன்: கியூஸெப் ! நீ தவறிப் போய் இந்த விடுதி வேலையாளாகக் கிடக்கிறாய் ! என்னுடன் அழைத்துச் சென்று உன்னை ஓர் வீர மனிதனாய் ஆக்கவா ?

கியூஸெப்: (பதறிக் கொண்டு) வேண்டாம் ! வேண்டாம் ! வேண்டாம் ! ஜெனரல் ! நான் ஓர் ஆயுத மனிதனாக ஆகிக் கொல்லும் தொழிலில் ஈடுபட வேண்டாம் ! கோழை மனிதனாகவே இந்த விடுதியில் வேலை செய்து வந்தால் போதும் ! என்னை நானாக இருக்க விட்டு விடுங்கள் ! லெ·ப்டினென்டை ஆயுத மனிதனாக்கி என்ன பயனைக் கண்டீர் ? அவர் உமது இரகசியக் கடிதங்களைப் பறிகொடுத்து ஏமாளியாகப் பரிதவிக்கிறார் ! நான் அந்த நிலையில் இருந்தால் இப்படி ஒரு கயவனிடம் குதிரையை இழந்து அலைமோத மாட்டேன் ! இராணுவக் கடிதங்களைக் களவாட விடமாட்டேன் !

++++++++++++++

“எந்தச் சிற்பச் சிலையைப் பற்றிச் சொல்கிறீர் ? நான் எனக்காக ஒரு சிலை வைக்கக் கேட்ட தில்லை ! எனக்கொரு சிலை வடித்து அதை மாபெரும் ஒரு தேசச் சின்னமாய் விளங்க விட்டு, நான் பெருமிதமோடு ஆளுமை புரியும் என் இராணுவத்தை அவமதித்து நானே திறப்பு விழா செய்ய ஆணை இட்டதில்லை !

நெப்போலியன்

கியூஸெப்: (பதறிக் கொண்டு) வேண்டாம் ! வேண்டாம் ! வேண்டாம் ! ஜெனரல் ! நான் ஓர் ஆயுத மனிதனாக ஆக்கப் பட்டுக் கொல்லும் தொழிலில் ஈடுபட வேண்டாம் ! கோழை மனிதனாகவே இந்த விடுதியில் நான் வேலை செய்து வந்தால் போதும் ! என்னை நானாக இருக்க விட்டு விடுங்கள் ! லெ•ப்டினென்டைப் போன்ற ஏமாளியை ஆயுத மனிதனாக்கி என்ன பலனைக் கண்டீர் ? உமது இரகசியக் கடிதங்களைப் பறிகொடுத்து இப்போது பரிதவிக்கிறார் ! நான் அந்த நிலையில் இருந்தால் இப்படி ஒரு கயவனிடம் குதிரையை இழந்து அலைமோத மாட்டேன் ! இராணுவக் கடிதங்களைக் களவாட விடமாட்டேன் ! என் வாழ்வு முழுவதும் பலர் என்னைப் புது மனிதனாக்க முன்வந்தார். சிறுவனாக இருந்த போது எங்கள் மதக்குரு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து என்னை ஒரு மனிதனாக்க முனைந்தார். பிறகு ஒரு வாத்திய நிபுணர் எனக்கு இசையைக் கற்பித்து ஒரு மனிதனாக்க முயன்றார். பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும் அதிகாரி ஒருவர், இன்னும் நாலைந்து அங்குலம் நான் உயரமாக இருந்திருந்தால் என்னை இராணுவப் படையில் சேர்த்திருப்பார். எல்லோரும் எனக்கு வேலை பளுவைத்தான் ஏற்றினார். அம்முயற்சியில் அவர் தோற்றார். வெற்றி அடைந்தவன் நான். காரணம் நானொரு சோம்பேறி. என்னை யாரும் முன்தள்ள முடியாது. நானாக விரும்பிப் பயிற்சியில் கற்றுக் கொண்டது சமையல் தொழில் ஒன்றுதான் ! அதில் நான் கைதேர்ந்தவன் ! அதனால் இப்போது விடுதி வேலையில் பொறுப்பேற்று வேலைக்குக் கூலியாட்களையும் வைத்துள்ளேன். அதாவது நான் நானாக இருக்க விழைகிறேன்.

நெப்போலியன்: இந்தத் தொழிலில் நீ திருப்தி அடைகிறாயா ?

கியூஸெப்: பரம திருப்தி எனக்கு ஜெனரல் ! நானொருவன் இல்லாவிடினும் என்னாட்டுப் படைப்பலம் குன்றி விடாது. இத்தாலியைக் காப்பாற்றப் பல்லாயிரம் பேர் இருக்கிறார்.

நெப்போலியன்: சாதித்து வெற்றி பெற வேண்டும் என்னும் வெறிப் பிசாசு உள்ளத்திலே இருந்து இராப் பகலாய் உன்னை விழுங்கித் தின்ன வில்லையா ? சமைப்புத் தொழிலில் என்ன சாதிப்பைச் செய்ய முடியும் ? நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வாரம் பூராவும் மெய்வருந்தி உழைத்து நீ சுக வாழ்வை அனுபவிக்கச் செய்வது யார் ? உனக்கு அடிமையாகவும் அதிகாரியாகவும் இருப்பது யார் ? உன்னத மேதையாகவும், உதவாக்கரை வேந்தாகவும் இருப்பது யார் ? ஒரு கையில் கிரீடத்தையும் மறு கையில் படகு தள்ளும் துடுப்பையும் ஏந்தி வருவது யார் ? உலகத்தின் அனைத்து சாம்ராஜியங்களையும் காட்டி உன்னை ஆசனத்தில் அதிபதியாய் ஏற்றி அடிமையாய் ஆக்குபவன் யார் ? அம்மாதிரிப் புரட்சி ஆசை எதுவும் உன்னிடம் எழுந்ததில்லையா ?

கியூஸெப்: இல்லை ஜெனரல் இல்லை ! அதை நிச்சயம் சொல்ல முடியும் என்னால் ! என்னை விழுங்கித் தின்னும் பிசாசு படு மோசமானது ! எனக்கது கிரீடமோ அரசாட்சியோ தருவதில்லை ! மாறாக எல்லாவற்றையும் இளவச மாகப் பெறவே என்னை வற்புறுத்துகிறது. மூன்று வேளையும் தயாரிப்பு : ஆம்லெட் முட்டை, தக்காளிக் குழம்பு, திராட்சை, பாலாடைத் திரட்டு, வெண்ணை, ஒயின் ஆகிய இவைதான் என்னைத் துன்புறுத்தி வருகின்றன. விடுதியில் தினம் இவற்றுக்கு எந்தக் குறையும் நேரக் கூடாது.

லெ•ப்டினென்ட்: போதும் நிறுத்து கியூஸெப் ! எனக்குப் பசியை மீண்டும் தூண்டிவிடும் உமது பேச்சு ! நாக்கில் எச்சில் ஊறுது எனக்கு !

நெப்போலியன்: என்ன லெ•ப்டினென்ட் ? நான் உனக்கு சாம்ராஜிய ஆசையை எழுப்பி விட்டேனா ?

லெ•ப்டினென்ட்: (விரக்தியுடன்) எனக்கெல்லாம் அந்த இச்சை இல்லை ஜெனரல் ! என் கை வலிமை அப்படி ஓங்கியதில்லை உங்கள் கரத்தைப் போல் ! என் குரல் அப்படி ஓங்கி முழக்க வில்லை உங்கள் குரல் போல் ! இப்போதுள்ள என் நிலையே எனக்குத் தகுதியானது ! என்னைப் போல்பவர் இராணுவத்துக்கு இப்போது தேவை. எல்லாரும் பீடத்தில் அமர்ந்து ஆணை யிட்டால் அதை நிறைவேற்றுவது யார் ? புரட்சி குடிமக்களுக்கு இராணுவத் துக்கு இல்லை ! இராணுவ அமைப்பு அடிமைத் தொழில் போன்றது ! அதை ஆட்டிப் படைப்பவர் உங்களைப் போல் ஒரு சிலர் ! அடிமைகளாய்ப் பணி புரிபவர் என்னைப் போல் பலர் ! இராணுவத்தில் புரட்சிக்கு இடமில்லை ! படை வீரரைப் பற்றி உங்களுக்குத் தெரியும் ஜெனரல் ! இராணுவத்தில் பணி புரிந்து வருபவை படைக் குடும்பங்கள். லோதிப் போரை வென்றது யார் ? கர்னலா ? காப்டனா ? அல்லது ஜெனரலா ? இல்லை ! அல்லது அவர் இயக்கியப் பீரங்கிகளா ? இல்லை ! காலில் நடந்து செல்லும் படைவீரர் ! பனியிலும் குளிரிலும் தடம் நோகும் படை வீரர் ! பசியிலும், பிணியிலும் பிசுங்கி நொண்டிச் செல்லும் படைகள் ! உங்களுக்குத் தெரியும் இது ஜெனரல் ! நான் சொல்லக் கூடாது.

நெப்போலியன்: நிறுத்து உன் உபதேசத்தை ! போதும் உமது புலம்பல் ! குதிரையைப் பறி கொடுத்து நடை வண்டியில் நடந்து பசியால் துடித்த நீயா லோதிப் போரை வென்றாய் ? கவனமாய்ப் பேசு ! யார் முன் பேசுகிறாய் என்று மறந்து விட்டாய் !

லெ•ப்டினென்ட்: மன்னிக்க வேண்டும் ஜெனரல் ! தெரியாமல் நான் ஏதோ உளறிவிட்டேன். பாலத்தை நீங்கள் கடக்க முனைந்த போது, தீயிட்டுக் கொளுத்த முயன்ற ஆஸ்டிரிய எதிர்ப்புப் படைகளை நமது செந்நிறப் பீரங்கிகளால் சுட்டுத் தள்ளவில்லையா ? அப்போது நான் எங்கிருந்தேன் என்று தெரியமா உங்களுக்கு ?

நெப்போலியன்: எனக்கென்ன வேறு வேலை யில்லையா ? யாருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தாய் ?

லெஃப்டினென்ட்: ஜெனரல் ! இந்தியாவில் ஒரு பழமொழி உண்டாம் ! ‘பந்திக்கு முந்திக்கொள் ! படைக்குப் பிந்திக்கொள் !’

கியூஸெப்: பழமொழி என் விடுதிப் பயணிகளுக்கு எழுதியிருப்பது போல் தெரிகிறது !

நெப்போலியன்: ஆனால் இது பிரெஞ்ச் படை வீரருக்குச் சொல்லப் படவில்லை. படை வீரர் பின்னால் நடந்து தளபதி முன்னால் சென்றால் என்னவாகும் தெரியுமா ? முதலில் சுடப்பட்டு மடிவது தளபதியாகத்தான் இருக்கும் ! கியூஸெப் ! சைனப் பழமொழி என்ன சொல்கிறது தெரியுமா ? ‘வழிகாட்டிச் செல்லப் படைக்குப் பின்னால் போ’ என்று !

லெஃப்டினென்ட்: கியூஸெப் ! படைவீரர் யாவரும் தளபதிக்குக் கவசம் அளிக்கும் பலியாடுகள் என்று சொல்கிறார் எங்கள் ஜெனரல் !

நெப்போலியன்: அப்படி அர்த்தமல்ல ! போரில் பகைவரை வெல்பவர், பின்னால் நிற்கும் தளபதி அல்லர் ! அணிவகுத்து முன்னால் போரிடும் படைவீரரே ! ஆனால் ஆணையிடும் தளபதி முதலில் மாண்டு போனால் சேனைப் படைவீரர் சிதறிப் போவார் !

கியூஸெப்: (பெருமிதமுடன்) ஜெனரல் ! நான் கேள்விப் பட்டது நீங்கள் குதிரையிலிருந்து கீழே குதித்து, தரைப் பீரங்கியை உங்கள் கையாலே முடுக்கிப் பகைவரைத் தாக்கியவராம் ! எனக்குப் பெருமையாக இருக்கிறது ! பின்னால் நிற்கும் ஒரு பெரும் பிரென்ச் தளபதி முன்னால் வந்து படைவீரரில் ஒருவராய்ப் போரிடுவது பேராச்சரியம் !

லெ•ப்டினென்ட்: கியூஸ்ப் ! மாபெரும் தவறு அது ! பிரென்ச் ஜெனரல் அப்படிக் கீழான ஒரு வேலையை இராணுவத்தில் செய்யக் கூடாது. அது அவருக்கு அவமதிப்பு !

நெப்போலியன்: (கண்களில் கனல் பொறிகள் பறக்கின்றன. கியூஸெப் நடுங்குகிறான்) (அதட்டிக் கொண்டு) என்ன சொன்னாய் ?

++++++++++++++++++++

“ரஷ்யரையும், ஆங்கிலேயரையும் அவமதிக்கும் எந்த ஓர் வாய்ப்பையும் ஒருவர் விட்டுவிடக் கூடாது.”

“புதுப்புது வெற்றிச் சின்னங்கள் எழுப்ப வேண்டும். மாபெரும் மகத்தான மாளிகைகள் நிரம்பிய ஓர் எழில் களத்தை (பாரிசில்) உருவாக்க, முன்பிருந்தவற்றை எல்லாம் நீக்க வேண்டும்.”

நெப்போலியன் (1812)

லெஃப்டினென்ட்: கியூஸெப் ! மாபெரும் தவறு அது ! பிரென்ச் ஜெனரல் அப்படிக் கீழான ஒரு வேலையை இராணுவத்தில் செய்யக் கூடாது. அது அவருக்கு அவமதிப்பே !

நெப்போலியன்: (கண்களில் கனல் பொறிகள் பறக்கின்றன. கியூஸெப் நடுங்குகிறான்) (அதட்டிக் கொண்டு) லெ•ப்டினென்ட் ! என்ன சொன்னாய் ?

லெ•ப்டினென்ட்: மன்னிக்க வேண்டும் என்னை ஜெனரல் ! ஆஸ்டிரியப் படைகள் மீது குறிவைத்து நீங்கள் பீரங்கி வெடிகளால் அவரை வீழ்த்தினீர் ! அப்போது ஆழமற்ற பகுதியைக் கண்டுபிடித்து ஆற்றைக் கடந்து மறுகரைக்குப் போய் உங்களுக்கு வழி அமைத்தவர் நாங்கள் ! ஆற்றின் அந்த ஆழமற்ற பகுதியைக் கண்டுபிடித்தவரே லோதி யுத்தத்தில் வெற்றிக்கு அடிகோலியவர். சொல்லுங்கள் யார் அதைக் கண்டுபிடித்தது ? நான்தான் முதலில் நடந்து சென்றவன் ! நான்தான் நதியைக் கடந்து பிறருக்குப் பாதை காட்டியவன் ! எனது குதிரைதான் அந்த வழியைக் கண்டது. அந்தக் குதிரைதான் ஆஸ்டிரியரை வென்ற மெய்யான வெற்றிக் குதிரை !

நெப்போலியன்: முட்டாள் ! நீ அந்தக் குதிரையைத்தான் இப்போது பறிகொடுத்து விட்டாயே ! அத்தோடு கடிதங்களை இழந்ததற்கும் உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். உன் தவறுகள் உனக்கு இன்னும் தெரியவில்லை !

(அப்போது ஒரு பிரென்ச் அதிகாரி கையில் வாளேந்தி யாரும் பாராதபடி உள்ளே நுழைகிறான்.)

லெ•ப்டினென்ட்: (சட்டென) நானந்தக் கயவனை உங்கள் முன்னிழுத்து வருகிறேன்.

நெப்போலியன்: அப்படி ஒரு கயவன் இப்போதில்லை லெ•ப்டினென்ட் !

பிரென்ச் அதிகாரி: (லெ•ப்டினென்ட் முன்புறம் வந்து வணங்கி) லெ•ப்டினென்ட் ! (வாளைச் சமர்ப்பித்து) நான் உனது கைதி ! என்னை நீ சிறைப் படுத்தலாம். (பேச்சில் பெண்குரல் ஒலிக்கிறது.) நான் செய்தது தவறு.

நெப்போலியன்: (அதிகாரியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைகிறான்.) யார் நீ ? ஓ நீயா ?

லெ•ப்டினென்ட்: (கோபத்துடன்) வாடா அயோக்கியப் பயலே ! எங்கே ஒளிந்து கொண்டிருந்தாய் ? எங்கே என் குதிரை ?

அதிகாரி: பாதுகாப்பாக உள்ளது போர்கெட்டோவில் (Borghetto) ! காத்துக் கொண்டிருக்கிறது உனக்காக !

நெப்போலியன்: (அதிகாரியைப் பார்த்து) எங்கே என் அரசாங்கக் கடிதங்கள் ?

அதிகாரி: அவை இருக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கின்றன ! நீங்கள் யாராவது என் சகோதரியைச் சந்தித்தீரா ?

லெ•ப்டினென்ட்: ஆம் சந்தித்தோம், நளின நாடகி ! உன்னைப் போலவே இருக்கிறாள். ஆனால் உன்னை விட ஒப்பனையாக இருக்கிறாள்.

அதிகாரி: (ஆர்வமுடன்) அவளைத் தெரியுமா உங்களுக்கு ! அவள் ஒரு மந்திரக்காரி !

கியூஸெப்: (நடுங்கிக் கொண்டு) ஐயோ வேண்டாம் ! அவள் கால்பட்ட இடத்தில் என் கால் தடம் விழக் கூடாது. தெரியாமல் உன் சகோதரிக்கு என் விடுதியில் இடம் கொடுத்து விட்டேன் ! இப்போதே அவளை வெளியே தள்ளுகிறேன்.

லெ•ப்டினென்ட்: அவளை நீ விரட்டி விடு ! அவள் சகோதரனை நான் கைது செய்கிறேன். எனக்கு இந்த மந்திரம், மாயத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இதற்கெல்லாம் நீ மிரள வேண்டாம்.

அதிகாரி: கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டதே ! மந்திர சக்தியால் என் சகோதரி ஜெனரலை மயக்கி விட்டாள். (கியூஸெப்பும், லெ•ப்டினென்ட்டும் சட்டென நெப்போலியனை விலகிச் சற்று தள்ளி நிற்கிறார்.) கடிதங்கள் உங்கள் கோட்டுப் பையில்தான் உள்ளன. (நெப்போலியன் கோட்டுப் பையில் கையை விட்டுக் கடிதங்களைத் தடவிப் பார்க்கிறான்.) ஈதோ உள்ளன கடிதங்கள் ! நான் எடுத்துத் தரலாமா ?

நெப்போலியன்: (கோபத்துடன்) உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் உன் திருட்டுக் கையை என் பையில் விட்டு உளவிப் பார்ப்பாய் ? (கடிதக் கட்டை மெதுவாக எடுக்கிறான்)

அதிகாரி: கியூஸெப் ! அதோ கடிதங்கள் !

கியூஸெப்: (பயந்து கொண்டு) கடவுளே ! அந்தக் கடிதங்களும் மந்திர சக்தியால் சாபம் அடைந்தவை !

நெப்போலியன்: முட்டாள்தானமாக எதுவும் பேசாதே ! மந்திரமும் இல்லை ! சாபமும் இல்லை !

கியூஸெப்: ஜெனரல் ! சாபக் கடிதங்களைத் தொடாமல் தீயிட்டுப் பொசுக்குங்கள்.

நெப்போலியன்: வாயை மூடு ! தீயிட்டு ஏன் கொளுத்த வேண்டும் ?

அதிகாரி: (நெப்போலியனைப் பார்த்து) அவை உங்கள் அரசாங்கக் கடிதங்கள் ! அதுவும் இரகசியக் கடிதங்கள் ! படித்த பிறகு அடுப்பில் போட்டு விடுங்கள் !

நெப்போலியன்: கியூஸெப் ! (கடிதங்களை வீசி எறிந்து) ஈதோ கடிதங்களைத் தீயில் பொசுக்கு !

அதிகாரி: ஜெனரல் ! கடிதங்களை நீங்கள் படிக்க வில்லையா ? படிக்க வேண்டும் என்னும் துடிப்பில்லையா ?

நெப்போலியன்: அந்தக் கடிதங்களைப் படிக்க எனக்குத் துடிக்க வில்லை மேடம் ! அவை பலரால் படிக்கப்பட்டு அவற்றின் ரகசியங்கள் காற்றிலே பரவிப் போயின ! உன்னுடைய கடமை நிறைவேறியது ! ஒற்றர் குழுவுக்கு நல்ல வேட்டை ! இப்போது ஆசைத் தீப் பற்றி எழுகிறது உனக்கு ! வேண்டுமானால் நீ படித்துக் கொள் !

அதிகாரி: ஓ ! மிக்க நன்றி ஜெனரல் ! நான் முன்பே அவற்றை எல்லாம் படித்து விட்டேன் !

+++++++++++++++++++

“ஆங்கிலேயர் ஒரு வணிக தேசத்தவர்.”

நெப்போலியன்

“ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் குப்பை என்று சொல்வேன். நான் அவற்றைப் படித்திருக்கிறேன். (பிரெஞ்ச் நாடக ஆசிரியர்) கார்நீல் அல்லது ரேசின் (Corneille or Racine) ஆகியோரோடு ஒப்பிட்டத் தகுதி இல்லாதவர் அவர். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஒன்றைப் படிப்போர் அவருக்காக அனுதாபப் படாமல் இருக்க முடியாது. இத்தகைய துன்பியல் நாடகம் (மாக்பெத்) ஒரு காலத்தில் லண்டனரை அதிர்ச்சிக்குள் தள்ளி உயர்ந்ததாக இருந்தாலும், பாரிஸ் மக்களுக்கு அது கவர்ச்சி ஊட்டாது.”

நெப்போலியன் (1803)

நெப்போலியன்: அந்தக் கடிதங்களைப் படிக்க எனக்குத் துடிப்பில்லை மேடம் ! அவை பலரால் படிக்கப்பட்டு அவற்றின் ரகசியங்கள் காற்றிலே பறந்து போயின ! உன்னுடைய கடமை நிறைவேறியது ! ஒற்றர் குழுவுக்கு நல்ல வேட்டை உன்னால் ! இப்போது ஆசைத் தீ பற்றி எழுகிறது உனக்கு ! வேண்டுமானால் நீ படித்துக் கொள் !

அதிகாரி: ஓ ! மிக்க நன்றி ஜெனரல் ! நான் முன்பே அவற்றை எல்லாம் படித்து விட்டேன் !

நெப்போலியன்: (கோபத்தோடு) என்ன ? கடிதங்களை நீ ஏற்கனவே படித்து விட்டாயா ?

அதிகாரி: குதிரையை அந்த ஏமாளியிடமிருந்து பறித்துப் போனதும் நான் படித்தது முதலில் கடிதங்களைதான் ! அவற்றில் என்ன உள்ள தென்று எனக்குத் தெரியும் ! உமக்குத்தான் தெரியாது ஜெனரல் !

நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு) நானும் படித்து விட்டேன் தோட்டத்திற்குள் போன சமயத்தில்.

அதிகாரி: ஓ படித்து விட்டீரா ? அப்படியானல் நான்தான் தோற்றவன் ! உம்மைப் போற்றுகிறேன். (நெப்போலியன் சிரித்துக் கொண்டு அவன் முதுகைத் தட்டுகிறான்.) (நெப்போலியன் கையை முத்தமிடுகிறான்).

நெப்போலியன்: நிறுத்து உன் முகத்துதியை இளைஞனே ! போதும் உன் பாராட்டு ! மாறுவேடத்தில் மந்திர மயக்கு செய்யாதே ! முகத்திரையை நீக்கு !

அதிகாரி: நானொன்று சொல்ல விழைகிறேன் ஜெனரல் ! நீங்கள்தான் அதைத் தவறாக எடுத்துக் கொள்வீர் !

நெப்போலியன்: வாயை மூடு வாலிபனே ! போதுமே உன் நடிப்பு !

அதிகாரி: கீழ்மைத்தனமும் தன்னலமும் இல்லாத ஓர் உன்னத மனிதரை நான் பாராட்டவும் செய்வேன், பழிக்கவும் செய்வேன், அப்புறம் மன்னிப்பும் கேட்பேன் அவரிடம்.

நெப்போலியன்: (கோபத்தோடு) சிக்கலான சிந்தனை மனிதன் நீ ! தன்னலம், கீழ்த்தனம் இல்லாதவன் அல்லன் நான் ! அரசாளும் பொறுப்பு வரும் போது தன்னலம் இல்லாத் தலைவன் ஆசனத்தில் நீடித்து அமர முடியாது. தன்னலம் கருதா மன்னன் இல்லை. கீழ்த்தனம், மேல்தனம் என்பது நீ எந்த அரங்கில் நின்று பேசுகிறாய் என்பதைப் பொருத்தது !

அதிகாரி: நீங்களே உங்கள் மீது மதிப்புயர்வு கொள்வதில்லை. விந்தைத் தளபதி ! கடிதங்கள் எங்கே என்று அலை மோதினீர் முதலில் ! ஆனால் கடிதங்கள் கிடைத்த போது ஏனோ படிக்க மனமில்லை. பிறகு தோட்டத்துக்குள் நுழைவது போல் காட்டி அங்கே ஒளிந்து கொண்டு அவற்றைப் படித்தீர். பிறகு படிக்காதது போல் நடித்தீர் ! அதைத்தான் கீழ்த்தனம் என்று நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் அதற்கு நாண வில்லை.

நெப்போலியன்: இந்தக் குற்றச் சாட்டுகளைச் சுட்டிக் காட்ட நீ எங்கே கற்றுக் கொண்டாய் ? உன் மனச் சாட்சி விநோதமாக வேலை செய்கிறது. உன்னை ஒரு நாகரீகப் பெண்ணாக நான் எண்ணுகிறேன். உன்னுடைய தாத்தா ஒரு வணிக வர்த்தகரா ?

அதிகாரி: இல்லை ! அவர் ஓர் ஆங்கிலேயர் !

நெப்போலியன்: அந்த ஆங்கில நிழல் நன்றாகவே உன்னைப் பின்பற்றி வருகிறது. என்னை நீ அடித்து வீழ்த்தியதின் காரணமும் தெரிகிறது.

அதிகாரி: ஜெனரல் ! நான் உம்மை வீழ்த்தவும் இல்லை ! நானோர் ஆங்கிலேயனும் இல்லை !

நெப்போலியன்: ஆம் ஆம், நீயோர் ஆங்கிலேயன்தான் ! அந்த ஆங்கில இரத்தம் உன் குருதியில் ஓடுது ! அது உனக்கு முதுகு எலும்பாகவும் உள்ளது ! நான் சொல்வதைக் கவனமாகக் கேள் ! இந்த ஆங்கிலக் கும்பல் யாரென்று உனக்குச் சற்று விளக்குகிறேன் .

அதிகாரி: ஆங்கிலேயர் மீது உங்களுக்கு ஏன் இந்த வெறுப்பு ஜெனரல் !

நெப்போலியன்: ஆங்கிலேயர் மட்டுமல்ல ! ரஷ்யரையும் கூட எனக்குப் பிடிக்காது. ரஷ்யாவையும் இங்கிலாந்தையும் ஒருநாள் கைப்பற்றி நான் ஐரோப்பியச் சக்ரவர்த்தியாக வருவதற்கு இராப் பகலாய்த் திட்ட மிட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தின் வணிக வர்த்தகக் கம்பேனியை இந்தியாவில் தகர்க்கத் திட்டமிட்டு வருகிறேன். ஆங்கிலேயர் வணிகப் பண்டங்களை வர்த்தகர் போல் விற்கும் போது பீரங்கிகளைக் காட்டி நாட்டைப் பிடுங்கிக் கொள்வார். அங்கே காலூன்றிப் பிறகு ஆள்கிறார் !

++++++++++++++++++++

பிரான்ஸ் ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிறரது நாட்டை !
எதிர்த்துப் போரிட் டவர் இன்று முன்னடி வைப்பார் !
வெற்றி பெற்று விடக் கண்முன் எதுவும் காணார்
வேர்வை சிந்தினார் இதுவரை அதனை வேண்டி !

நெப்போலியனைப் பற்றி பிரிட்டிஷ் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் (1804)

நெப்போலியன்: ஆங்கிலேயர் மட்டுமல்ல ! ரஷ்யரையும் கூட எனக்குப் பிடிக்காது. ரஷ்யாவையும் இங்கிலாந்தையும் ஒருநாள் கைப்பற்றி ஐரோப்பியச் சக்ரவர்த்தியாக வருவதற்கு இராப் பகலாய்த் திட்ட மிட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தின் வர்த்தகக் கம்பேனியை இந்தியாவில் தகர்க்கத் திட்டமிட்டு வருகிறேன். ஆங்கிலேயர் வணிகப் பண்டங்களை விற்கும் போது பீரங்கிகளைக் காட்டி நாட்டைப் பிடுங்கிக் கொள்வார். அங்கே காலூன்றிப் பிறகு ஆட்சி செய்கிறார் ! வணிகர் கூட்டமாக வந்தவர் வல்லமை காட்டி நாட்டை ஆக்ரமிப்பார். அங்கே பிரிட்டிஷ் ஏகாதிபத்தைய சாம்ராஜ்யத்தை நிலைநாட்டுவார். அது குள்ள நரித் தந்திரம். ! ‘பிரித்து ஆளுமை புரிவாய்’ என்பதே பிரிட்டீஷ் வர்த்தக விதி ! அவரை வென்று விரட்ட முடியாது. பறித்துக் கொள்ளும் நாட்டின் பஞ்சுப் பொதியை பிரிட்டனுக்குக் கொண்டு போய் நூலாக்கி, நெய்து துணியாக்கித் திருப்பி அவருக்கே அதிக விலைக்கு விற்கிறார் ! பிரிட்டிஷ் கோமகனார் போல் தமக்கு இனிப்பதைச் செய்கிறார். தமக்குப் பிடிப்பதைப் பறித்துக் கொள்கிறார். ராயல் பற்றெனக் காட்டிக் கொண்டு வணிகப் பண்டங்களை விற்கப் போகிறார். பண்டங்களை விற்றுக் கண்டங்களைப் பிடிக்கிறார். சுதந்திர வீரராய்க் காட்டிக் கொண்டு தேச விடுதலை என்று கூறிக் கொண்டு பாதி உலகை அடிமை ஆக்கித் தமது காலனி ஆட்சியைத் திணிக்கிறார் ! கலப்படமான மான்செஸ்டர் பண்டங்களை விற்கப் புது நாடு தேட முதலில் கிறித்துவ மதப் பரப்பாளரை (Missionary) அமைதியைப் போதிக்க அனுப்புவார். ஆனால் குடிவாசிகள் மதப் பரப்பாளரை விரட்டிக் கொன்று விடுகிறார். பிறகு பிரிட்டீஷ் அரசாங்கம் கிறித்துவப் போதகரைக் காப்பாற்ற இராணுவப் படைகளை அனுப்பும். படைகள் எளிதாகப் போரிட்டு நாட்டைக் கைவசப் படுத்தும். பின்னர் அந்நாடு பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு சேர்க்கப் படும். பிரிட்டீஷ் தீவைப் பாதுகாக்கக் கப்பலில் சிலுவைக் கொடியைப் பறக்கவிட்டு அருகில் ஒரு பாதிரியாரை நிறுத்துகிறார். உலக முடிவு வரைப் பயணம் செய்து பகைவர் கப்பல்களைத் தாக்குவார், எரிப்பார், முறிப்பார், மூழ்க்குவார் ! எதிர்ப்படும் நாடுகளை எல்லாம் சிதைத்து அழிப்பார் ! அடிமைகள் பிரிட்டீஷ் மண்ணில் கால்வைத்ததும் விடுதலை அடைவர் என்று உறுதி அளிக்கப்படும் முதலில். தொழிற்சாலைகளில் ஆறு வயதுப் பாலர்களை வேலைக்கு வைத்து அனுதினம் பதினாறு மணி நேரம் வேலை வாங்குகிறது ! இரண்டு புரட்சிகளை உண்டாக்கிச் சட்டம், சமாதானம் நிலவ நமது பூமி மீது போர் தொடுக்கிறது ! நல்லதும், தீயதும் நிரம்பிய ஆங்கிலேயரைக் காணாமல் இருக்க முடியாது. கொள்கையில் தவறு செய்யாத ஆங்கிலேயரை நீவீர் காணவே இயலாது. தேசப் பற்றைச் சொல்லிக் கொண்டு அவர் உம்மீது போர் தொடுப்பார். உமது வர்த்தக முறையைத் திருடிக் கொள்வார் ! ஏகாதிபத்திய கோட்பாட்டில் உம்மை அடிமை ஆக்குவார் ! பல்வேறு கொள்கை முறையில் உம்மைச் சித்திரவதை செய்வார் ! அரசாங்க முத்திரைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அரசரரை ஆதரிப்பார் ! அதே சமயம் குடியரசுக் கொள்கை என்னும் போது அரசரின் சிரசைத் துண்டாக்குவார் ! அவரது கண்ணும், கருத்தும் எப்போதும் இருப்பது கடமை என்னும் ஒரு சொல்லில்தான் ! ஆனால் தேசத்தின் கடமை அவருக்கு எதிராக மாறி விடுகிறது !

அதிகாரி: எனக்கு எதற்கு இந்த வரட்டு உபதேசங்கள் ? நான் ஆங்கிலேயன் அல்லன் ! ஆங்கிலேயர் யாவரும் மூடர் என்பது என் கருத்து.

நெப்போலியன்: ஆங்கிலேயர் பக்காத் திருடர்கள் ! பகற் கொள்ளை அடிப்பவர் ! சென்ற விடமெல்லாம் கொன்றழிக்கும் கொடுங்கோலர் ! அவரைப் போல் நீயும் ஒரு திருடன் ! என் ரகசிய கடிதங்களைத் திருடியவன் ! என் படைவீரன் குதிரையைக் களவாடியவன் நீ ! திருடுவதே தொழிலான பிரிட்டீஷ் குருதி உனது இரத்தக் குழாய்களில் ஓடுகிறது ! உனது பாட்டனார் ஓர் ஆங்கிலேயன் ! உன் அன்னை யார் ? ஒரு பிரென்ச் மாதா ?

அதிகாரி: இல்லை ! இல்லை ! என் தாய் ஓர் ஐரிஸ் மாது !

நெப்போலியன்: ஓ ! உன் அன்னை ஓர் ஐரிஸ் மாதா ? நான் மறந்து போனேன் ! ஓர் ஆங்கில இராணுவத்தை வழி நடத்துவது ஓர் ஐரிஸ் ஜெனரலா ? மெச்சுகிறேன் ! அது ஒரு பிரென்ச் இராணுவத்தை ஓர் இத்தாலிய ஜெனரல் நடத்துவது போலிருக்கும் !

++++++++++++++++++

“படைவீரர்களே ! நீங்கள் துவங்கப் போகும் இந்த தேச ஆக்கிரமிப்பால் நேரப் போகும் உலக நாகரீகப் பாதிப்பு, வர்த்தகப் போக்குகளின் மாற்றம் எண்ணிப் பார்க்கவே முடியாது. இங்கிலாந்து படை மீது நீங்கள் கொடுக்கும் அடி அதன் மென்மையான இடத்தில் நிச்சயம் காயப்படுத்தி விடும். விடிவதற்குக் காத்திருக்கும் போது நீங்கள் அதற்கொரு சாவு மணியை அடிப்பீர்.”

நெப்போலியன் (எகிப்து படையெடுப்பு) (1798)

“படைவீரர்களே ! நாம் பிடித்திருக்கும் இடங்கள் யாராலும் கைப்பற்ற முடியாதவை. ரஷ்யர்கள் நமது படை அணிகளை எதிர்த்து வரும் போது அவரது படைகளை நான் முன்னின்று தாக்குவேன். எல்லா போர்ப்படை அணிவகுப்பையும் நானே நேரிடையாக வழிநடத்துவேன். உங்களுக்கு தைரியம் உறுதி அளித்துப், பகைவர் அதிகாரப் பதவிகளுக்குள் நீங்கள் குழப்பம், கொந்தளிப்பு ஏற்படுத்தி, வெற்றி கிடைப்பது ஒருகணம் உறுதியற்றுப் போகாதது வரை, நான் விலகித் தூரத்தில் நிற்பேன்.

எவரும் காயமடைந்தோரைத் தூக்கிச் செல்லும் பாவனையில் போர்ப்படை அணிகளை விட்டு நீங்கக் கூடாது. நமது தேசத்தை அறவே வெறுக்கும் இங்கிலாந்தின் கூலிப் படைகளைத் தாக்கி வெற்றி அடைவது மிக முக்கியமானது என்று ஒவ்வொருவர் உள்ளத்திலும் சிந்தனைகள் நிரம்ப வேண்டும்.”

நெப்போலியன் (ரஷ்யப் படையெடுப்பு) (1805)

“படைவீரர்களே ! இதுதான் நீங்கள் பேரளவு ஆசைப்பட்டு எதிர்பார்த்த போர். ஆதலால் இதுமுதல் வெற்றி உமது தாக்குதலைச் சார்ந்தது. ஆம் வெற்றி நமக்குத் தேவை.”

நெப்போலியன் (1812)

நெப்போலியன்: ஓ ! உன் அன்னை ஓர் ஐரிஸ் மாதா ? நான் மறந்து போனேன் ! ஓர் ஆங்கில இராணுவத்தை வழி நடத்துவது ஓர் ஐரிஸ் ஜெனரலா ? மெச்சுகிறேன் ! அது பிரென்ச் இராணுவத்தை ஓர் இத்தாலிய ஜெனரல் நடத்துவது போலிருக்கும் !

அதிகாரி: ஜெனரல் ! உமக்கு போர்த் தொழில் தவிர வேறென்ன தெரியும் ? ஆயுதம் ஏந்தி அண்டை நாட்டை மிரட்டி அவரை ஆதிக்கம் செய்வதே உமது தொழில் ! பிற நாட்டாரைச் சீண்டுவதே உமது பிழைப்பாக இருக்கிறது ! நிம்மதியாக அவரை வாழ விடாது உமது ஆட்சி வலுவை அவர் மீது திணிக்க வேண்டுமா ? ஆங்கிலேயரை வர்த்தகக் கூட்டம் என்று திட்டுகிறீர் ! வர்த்தகராகிக் காலூன்றி மதத்தைப் பரப்பும் கர்த்தராகி மாறி விடுகிறார் ஆங்கிலேயர் ! பின்னர் நாட்டைக் கைப்பற்றி மன்னர் ஆகிறார். உமக்கும் அவருக்கும் ஒரே வேலைதான் ! போரில் பீரங்கிகளை வெடித்து நீவீர் அன்னிய தேசங்களை வீழ்த்துகிறீர்.

நெப்போலியன்: இந்தியாவிலிருந்து பிரிட்டனை விரட்டி பிரென்ச் கொடியை ஆங்கே நாட்ட வேண்டும் ! என் மூளை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுள்ளது. சூயஸ் கால்வாய் வெட்டும் திட்டத்தைத் துவங்க வேண்டும். அதற்காக முதலில் எகிப்து மீது படையெடுத்து அதைக் கைப்பற்ற வேண்டும். எகிப்து பிரென்ச் கைவசம் ஆனதும் எனது மாபெரும் சூயஸ் கால்வாய்த் திட்டம் வெற்றிகரமாக, வேகமாக முடியும்.

அதிகாரி: ஜெனரல் ! நானொரு திட்ட அதிகாரி அல்லன். போர்த் திட்ட மிடுவது என் தொழில்முறை இல்லை. ஆனால் நானொன்று கேட்கிறேன் : உண்ணும் போதும்,, உலாவிடும் போதும், உறங்கிடும் போதும் ஆயுதத்தைப் பக்கத்தில் வைத்துதான் வேலை செய்வீரா ? வாளில்லாத ஜெனரல் என்ன செய்வார் ? போர்க்களத்தை விட்டு ஓடுவாரா ? அல்லது வேறென்ன செய்வார் ?

நெப்போலியன்: போரில் ஓடுபவனைச் சுட்டுக் கொல்வேன் நான் !

அதிகாரி: நீவீர் தோற்று ஓடும் காலம் வரும் ! அப்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவீர் ! அப்போது உம்மைச் சுட்டுத் தள்ளுபவர் யார் ?

நெப்போலியன்: நான் எந்தப் போரிலும் தோற்ற தில்லை ! எந்தப் போரிலும் தோற்று ஓடுவதில்லை ! என்னைக் கொல்லும் புல்லட் இன்னும் உருவாக்கப் பட வில்லை ! நான் ஐரோப்பியச் சக்ரவர்த்தி ஆவேன் ! ஆசியச் சக்ரவர்த்தி ஆவேன் ! அவை என் நெடுங்காலக் கனவுகள்.

அதிகாரி: இப்போது நீவீர் ஆயுதம் ஒன்றுமில்லாத வெற்று மனிதன் !

நெப்போலியன்: யார் சொன்னது ? நான் ஓர் ஆயுத மனிதன் ! உலக நாடுகளின் விதியை நிர்ணயம் செய்யும் ஊழ்விதி மனிதன் நான் !

அதிகாரி: என் கண்களுக்குத் தெரிவது இதுதான் : நீவீர் ஆயுத மில்லாத வெற்று மனிதன் இப்போது !

நெப்போலியன்: இதோ என் உடைவாள் ! (இடுப்பைச் சுற்றித் தடவுகிறான். வாள் உறையைக் காணவில்லை) ஆ ! எங்கே என் வாள் ? (அங்குமிங்கும் தேடுகிறான், வாளைக் காணாது தடுமாடுகிறான்)

அதிகாரி: (அழுத்தமாக) ஆம் ஜெனரல் ! உமது வாள் இப்போது உன்னிடம் இல்லை !

நெப்போலியன்: (அலறிக் கொண்டு) கியூஸெப் ! எங்கே என் வாள் ? மேஜையில்தான் வைத்தேன் ! யாரோ திருடி விட்டார் ! அந்த மாயக்காரியாக இருக்கலாம் ! தேடிப்பார் கியூஸெப் !

அதிகாரி: (தன் உடை வாளை உருவி) ஜெனரல் ! இதோ என் கையில் உள்ளது வாள் ! இப்போது நான்தான் ஆயுத மனிதன் ! நான் நினைத்தால் இப்போது உம்மைச் சிறைப் படுத்தலாம் ! ஏன் வாளால் கொன்று விடலாம் !

நெப்போலியன்: (நடுநடுங்கி) (அங்குமிங்கும் நடந்து வாளைத் தேடுகிறான்.) கியூஸெப் ! எங்கே எனது உடைவாள் ? பதிலைக் காணோம் ! எங்கே இருக்கிறாய் ?

அதிகாரி: ஒற்றனாகிய நான் இப்போது உம்மைக் கொல்ல விரும்புகிறேன் ! உன்னைக் கொல்வதால் பிரிட்டன் பிழைத்துக் கொள்ளும் ! ரஷ்யா பிழைத்துக் கொள்ளும் ! எகிப்து பிழைத்துக் கொள்ளும் ! இந்தியா பிழைத்துக் கொள்ளும் ! (நெப்போலியனை நெருங்குகிறான்)

நெப்போலியன்: (பயத்தோடு) வேண்டாம் ! என்னை விட்டு விடு ! (அலறிக் கொண்டு) கியூஸெப் ! என் உயிருக்கே ஆபத்து ! எங்கே எனது வாள் ? கியூஸெப் !

அதிகாரி: நீங்கள் ஊழ்விதி மனிதனா ? நீங்கள் ஆயுதம் இழந்த காயித மன்னன் ! குறைபாடு நிறைந்த மனிதன் ! உம்மை உயிருடன் விடக் கூடாது !

நெப்போலியன்: கியூஸெப் ! கியூஸெப் ! உடைவாளைக் கொண்டு வா ? மேஜையில் நான் தூக்கிப் போட்ட வாளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ? (நெப்போலியன் வேகமாக உள்ளே ஓடுகிறான்)

அதிகாரி: ஊழ்விதி மனிதன் படும்பாடு பரிதாபமாய் உள்ளது ! நெப்போலியனைத் துடிக்க வைத்து விட்டேன் ! என் வேலை முடிந்து விட்டது ! நான் போகிறேன் ! (அதிகாரி சட்டென வெளியேறுகிறான்)

(உள்ளே இருந்து நெப்போலியன் குரல் கேட்கிறது. கியூஸெப் ! வாள் எங்கே ? என் உடைவாள் எங்கே ?)

(முற்றியது)

++++++++++++++++++++++++++++++

https://jayabarathan.wordpress.com/

***********************

தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon –Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

11 thoughts on “ஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)

  1. This domain seems to get a large amount of visitors. How do you get traffic to it? It offers a nice individual spin on things. I guess having something real or substantial to give info on is the most important thing.

  2. Incredible! Your article has a lot viewers. How did you get all of these readers to view your site I’m very jealous! I’m still studying all about posting information on the internet. I’m going to click on more articles on your website to get a better idea how to get more visable. Thanks for the assistance!

  3. Pingback: Mudukulathur » நெப்போலியன் – வரலாற்று நாடகம்

  4. Pingback: Napoleon Drama – Tamil Tee

  5. Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

  6. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

  7. Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை

  8. Pingback: 2022 ஆம் ஆண்டு வையக வலைப் பூங்கா பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.