சாக்ரடிஸ்


Cover Image Socrates -4

(கி. மு. 469–399)

சாக்ரடிஸின் மரணம்

நாலங்க நாடகம்
அங்கம் : 1

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

“நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,”

பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970)

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) படைத்தவை.  ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் !  நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் !  துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

சாக்ரடிஸ்

 

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது !  அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர்.  அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது !  அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது.  சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார்.  அவர் வேதாந்தச் சிந்தனையாளர்.  உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர்.  மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர்.  சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர்.  சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர்.  போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார்.  மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை.  அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.  சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார்.  உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார்.  இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது !  இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார்.  அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார்.  அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர்.  தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி.  சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன.  சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது.  முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது.  மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை.  நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence).  இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது !  ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன.  அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள்.  1.  பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato)  2.  “ஸெனோஃபன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon).  எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு !  குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார்.  மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

பற்பல பதிவாகியுள்ளன.  ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான்.  இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது !  பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம்.  நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர்.  சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார்.  பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார்.  ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர்.  இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ்.  இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ்.  அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் !  சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் !  பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

 

Fig 4 Death of Socrates with Poison

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம்

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை.  அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல.  அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம்.  நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக்காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.  இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் :  ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர்.  தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார்.  அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார்.  அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் !  அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை.  ஆனால் ஆக்டபஸ் எட்டுவால் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது ! பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் ! சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் ! பிளாடோ தன் உரையாடல் களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

 

அங்கம் : 1, காட்சி -1

 

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி வீதி

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் :  மீனவன், மெலிடஸ் (Meletus), ஆகாத்தான் (Agathon) அரிஸ்டோபானிஸ் (Aristophanes), மெகில்லஸ் (Megillus), லைகான் (Lycon). சிலரது மனைவியர்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள்.  ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன்.  அவன் பெயர்தான் மெலிடஸ்.  மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன்.  அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான்.  மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான்.

***********************

மீனவன்:  (கையில் ஆக்டபஸ் ஒன்றை ஏந்திக் கொண்டு வீதியில் நடப்போரைத் தடுத்து நிறுத்தி)  பாருங்கள் ஐயா !  புத்தம் புதிய ஆக்டபஸ் !  உயிருள்ள ஆக்டபஸ் ! வாலாட்டும் ஆக்டபஸ் !  கடலிலிருந்து இன்று பிடித்த ஆக்டபஸ் !  வாங்கிச் செல்லுங்கள் ! சமைத்துப் பாருங்கள் !  சுவைத்துப் பாருங்கள் !  மலிவாகத் தருகிறேன் !

(வீதியில் போவோர் சிலர் நின்று மீனவனிடம் பணம் கொடுத்து ஆக்டபஸ் வாங்கிச் செல்கிறார்)

மீனவன்:  (மெலிடஸை நெருங்கி)  ஆக்டபஸ் வேண்டுமா ஐயா !

மெலிடஸ்:  (கோபத்தோடு)  நான் ஐயா இல்லை மடையா !  நானொரு வாலிபன் !  இருபத்தியைந்து வயது இளைஞன் !  கிழவன் என்றா நினைத்தாய் ?

மீனவன்:  ஓ வாலிபரே ! ஒரு ஆக்டபஸ் வாங்குவீர் ! வீட்டில் வைத்து ஒரு வாரம் உண்ணலாம் !  (ஆக்டபஸ்ஸை நீட்டுகிறான்)

மெலிடஸ்:  (கோபத்தோடு)  எடுத்துப் போ உன் கடல்மீனை !  அறைந்து விடுவேன் கன்னத்தில் !  மீனவா ! யாரென்று நீ என்னை நினைத்தாய் ?  தேவர்கள் தீர்ப்பு அளிப்பு தினத்தில் (Day of an Oracle) மீன் விற்பது சட்ட விரோதம் !  தெரியமா ?

மீனவன்:  தீர்ப்பு அளிப்பு தினமா ?  யாருக்கு ? தீர்ப்பு யாருக்கு அளித்தால் என்ன ?  வயிறுக்குத் தீனி இல்லாமல் தீர்ப்பளிக்க முடியுமா வாலிபரே !  கும்பியைப் பட்டினி போடச் சொல்லுதா சட்டம் ?  உமக்கு வேண்டா மென்றால் சரி ! ஆனால் வாங்குவோரைத் தடுக்கச் சட்டத்தை ஏன் காட்ட வேண்டும் ?  என் பிழைப்பில் மண்ணைப் போட்டு என் கும்பியைக் காய வைக்குது சட்டம் !

[அப்போது அழகிய ஒரு செல்வந்தன் ஆகாத்தான் (Agathon) வருகிறான்.  அடுத்துக் குண்டான, வயதான, கூத்துக் கவிஞர் அரிஸ்டோஃபானிஸ் (Aristophanes) கூட்டத்திலிருந்து வெளிப்படுகிறார்.  மீனவன் அவரிடம் ஓடிப் போய் ஆக்டபஸ்ஸை வாங்கும்படிக் கேட்கிறான்]

மீனவன்:  ஐயன்மீர் !  ஈதோ குஞ்சு ஆக்டபஸ் !  பிஞ்சாக இருக்குது !  சுட்டுத் தின்னா வெகு ஜோராய் இருக்கும் !  குழம்பு வைத்தால் குடும்பமே சுவைக்கும் !  காலையில் தான் கடலில் பிடித்தது !

அரிஸ்டோஃபானிஸ்:  வாங்குடா ஆகாத்தான் ! இன்றைக்கு உன் வீட்டில் விருந்தல்லவா ?  ஒன்று போதாது.  இரண்டு ஆக்டபஸை வாங்கி இன்று விருந்தாளிக்குப் போடு !

ஆகாத்தான்:  (ஒன்றை வாங்கிப் பணம் கொடுக்கிறான்)  அரிஸ்டோ !  உன் தொந்திக்கே ஆக்டபஸ் ஒன்று போதாது !  (மீனவனைப் பார்த்து)  ஆக்டபஸ்ஸை எங்கே கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன் !

அரிஸ்டோஃபானிஸ்:  நாமே கொண்டு போகலாம். அவனுக்கு இடம் தெரியாமல் போனால் இந்த ஆக்டபஸ் நம் தொந்திக்குள் செரிக்காது ! யாரோ ஒருவர் தொந்திக்குள் நீந்தும் !  (சிரிக்கிறான்)

ஆகாத்தான்:  தேவர்கள் தீர்ப்பு அளிக்கும் சபையில் ஆக்டபஸை மடியில் வைத்துக் கொள்ள முடியாது !

அரிஸ்டோஃபானிஸ்:  முட்டாள்தனம் !  கொடு என்னிடம் ஆக்டபஸ்ஸை !  நான் பையில் சுருட்டி வைத்துக் கொள்கிறேன்.  எனக்கு அவமானம் இல்லை !  மனைவியர் பலர் காய்கறிகளுடன் கணவருடன் அதோ வருகிறார்.  இதில் என்ன மானம் போகுது ?

[அப்போது விவசாயி மெகில்லஸ் (Megillus) மதுபானம் குடித்துக் கொண்டு தள்ளாடி வருகிறான்]

மெகில்லஸ்:  (நாக்குளறி)  நான் ஓரடி கூட வைக்க முடியாது.  (தள்ளாடிப் படியில் விழுகிறான்)

மெகில்லஸின் மனைவி:  நீ நிரம்பக் குடித்திருக்கிறாய் !  நீ இங்கு உட்கார்ந்து கொள் !  நான் மட்டும் தேவர்கள் தீர்ப்பைக் கேட்கப் போகிறேன்.  உலகில் யார் உன்னத அறிவாளி என்பதை நான் தெரிந்தாக வேண்டும் இன்று தீர்ப்பு தினத்தில் !

[அப்போது ஏதென்ஸின் பெரும் பேச்சாளி, லைகான் (Lycon) வருகிறான்.   மெலிடஸ் ஓடிவந்து லைகானை நிறுத்துகிறான்.]

மெலிடஸ்:  (கோபத்தோடு)  நீ முன்பே வரவேண்டியவன் !  ஏன் இப்படித் தாமதம் ?  உனக்குக் கடிதம் வரவில்லையா ?

லைகான்:  என்ன கடிதம் ?

மெலிடஸ்:  அதுதான் கிழவர் சாக்ரடிஸைப் பற்றி !

லைகான்:  நானதைக் கிழித்துப் போட்டு விட்டேன் !

மெலிடஸ்:  நீ பங்கெடுக்கப் போகிறாயா ?

லைகான்:  எதில் பங்கெடுக்க வேண்டும் ?

மெலிடஸ்:  தெரியாதா உனக்கு ?  இன்றுதான் தீர்ப்பு தினம் !  உலகிலே யார் உன்னத அறிவாளி என்று தேவர் குழு (Oracle) அறிவிக்கப் போகிறது !  அது நிச்சயம் சாக்ரடீஸ் இல்லை !

லைகான்:  மோசடிப் பக்தர் !

மெலிடஸ்:  ஆமாம் அவர் எல்லாரும் மோசடிக் கூட்டம்தான் !  இன்று சாக்ரடிஸ் புகழ் வாழ்வுக்கு முடிவு விழா !

லைகான்:  என்ன சொல்கிறாய் ?  புரிய வில்லையே !  விளக்கமாகச் சொல் !

மெலிடஸ்:  வேடிக்கை பார் !  இன்றோடு சாக்ரடிஸ் பெயர் விழுந்து விடும் !  அவர் ஒன்றும் உன்னத அறிவாளி அல்லர் !  அவரை விடப் பெரிய ஞானிகள் உலகிலே இருக்கிறார் !  அதுதான் அறிவிக்கப்படப் போகிறது !

***************************
“மரணத்தை மனித இனத்தின் எல்லாக் கொடைகளிலும் உயர்ந்த தாகக் கருதலாம் !”

“நான்தான் உயிரோடுள்ள ஓர் உன்னத ஞானி ! ஏனெனில் ஒன்றை மட்டும் நான் அறிவேன் : எனக்கு ஒன்றுமே தெரியா தென்பதை.”

“மிகச் சிறிய தேவைகளே போதும் என்னும் இயல்பான பொன்னுள்ளம் உடையோனே ஒரு மெய்யான செல்வந்தன்.”

“ஆழ்ந்த பேராசைகள் அடிக்கடி ஆபத்தான வெறுப்பிலிருந்துதான் எழுகின்றன.”

“பொய்யான வார்த்தைகளைப் பேசுவது தீய செயல் மட்டுமில்லை ! ஆத்மாவைத் தாக்கும் கொடிய கிருமிகளாகவும் அவை ஆகிவிடும் !”

சாக்ரடிஸ்

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி வீதி

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon).

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படு கிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சி களைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ஃபயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட் வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ஃபிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)]

***********************

மெலிடஸ்: வேடிக்கை பார் ! இன்றோடு சாக்ரடிஸ் பேர் கெட்டு விடும் ! அவர் ஒன்றும் உன்னத அறிவாளி அல்லர் ! அவரை விடப் பெரிய ஞானிகள் உலகிலே இருக்கிறார் ! அதுதான் அறிவிக்கப்படப் போகிறது ! தேவர்கள் தீர்ப்பை (Oracle Verdict) இன்று மாஜிஸ்டிரேட் வாசித்து முடித்தவுடன் உன்னைப் போன்ற என்னைப் போன்ற கலாச்சார மாந்தர் பேசப் போகிறார். தேவர்கள் சாக்ரடீஸை ஒரு ஞானியாகச் சுட்டிக் காட்டவில்லை ! சாக்ரடிஸை விட தேவர்கள் உயர்ந்தவர் அல்லவா ? ஏதென்ஸ் நகர இளைஞர் சாக்ரடிஸ் பின்னால் போவது நிறுத்தப்படும். கவலைப் படாதே ! பார், சாக்ரடிஸ் நாடு கடத்தப் படுவார் !

லைகான்: நாடு கடத்தக் கூடாது சாக்ரடிஸை !

மெலிடஸ்: என்ன சொல்கிறாய் ? ஏன் நாடு கடத்தக் கூடாது ?

லைகான்: நஞ்சு ஊட்டப்பட வேண்டும் ! நானே நஞ்சைக் கொடுப்பேன் சாக்ரடிசுக்கு ! ஒரு காலத்தில் சாக்ரடிஸ் மாஜிஸ்டிரேட்டாக இருந்திருக்கிறார். போர்த் தளபதியாக இருந்திருக்கிறார் ! அவர் ஓர் பயங்கர மனிதர் !

மெலிடஸ்: நாமவரைத் தனிப்பட்ட முறையில் கண்காணிப்போம் !

லைகான்: அதென்ன நாம் ? நாம் என்றால் யார் யார் ?

மெலிடஸ்: வேறு யார் ? நீயும் நானும்தான் லைகான் ! மற்றும் சிலரை மாஜிஸ்டிரேட் தேர்ந் தெடுப்பார் ! அந்தப் பெயர்கள் ரகசியமானவை ! சாக்ரடிஸ் சரித்திரம் எப்போது முடியும் என்பது நாளை தினம் தீர்மானம் செய்யப்படும். ஈதோ பார் ! சாக்ரடிஸின் தோழர் இருவர் இங்கு வந்து கொண்டிருக்கிறார்.

[முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார்.]

லைகான்: யார் அந்த இருவர் ?

மெலிடஸ்: வயதானவர் கிரிடோ. மற்றவர் ஆனிடஸ். கொழுத்த பணக்காரர் ! வாலிபர் !

லைகான்: ஓ ! இவர்தான் செல்வந்த ஆனிடஸ்ஸா ?

மெலிடஸ்: கிரிடோ ! இன்று மாலை சாக்ரட்ரிஸ் அருகில் நீ இருக்கக் கூடாது.

கிரிடோ: ஏன் அப்படிச் சொல்கிறீர் ? நாம் அமைதியாக தேவர்கள் தீர்ப்பைக் கேட்கப் போகிறோம்.

மெலிடஸ்: சாக்ரடிஸ் வினாக்கள் உமக்குக் களைப்பூட்ட வில்லையா ? வரையறையை மீறி விட்டார் சாக்ரடிஸ் என்பது என் யூகம்.

ஆனிடஸ்: அப்படியா ? எந்த எல்லையைத் தாண்டி விட்டார் ?

மெலிடஸ்: நானதைச் சொல்ல மாட்டேன் ! நீயே அதைத் தெரிந்து கொள்வாய். சாக்ரடிஸ் கழுத்தைச் சுற்றிப் பார். வளைவு கோடுகள் எத்தனை ? எத்தனை ? வயதாகி மனிதர் படிப்படியாய்ச் செத்துக் கொண்டிருக்கிறார் ! கிரிடோ ! உனக்குத் தெரியும் அவரது வயது !

கிரிடோ: (சிரித்துக் கொண்டு, மெலிடஸைப் பார்த்து) வாலிபச் சிகாமணியே ! சாக்ரடிஸ் சாவதற்கு முன்னே நீ சவக் குழிக்குள் போய் விடுவாய் ! அவரது மரணம் உன் கரத்திலில்லை ! சவால் விடுகிறேன் ! நீதான் முதலில் சாவாய் ! சண்டைக்கு வா என்னுடன் நீ அதை ஒப்புக் கொள்ளா விட்டால் !

லைகான்: நீ சண்டைக்கு வந்தால் நான் தயார் ! (கைகள் வாளை உருவத் தயாராகின்றன)

ஆனிடஸ்: (சண்டையைத் தடுத்து) நாம் முதலில் தேவரின் தீர்ப்பைக் கேட்போம் ! நமக்குள் இப்போது சண்டை தேவையில்லை !

லைகான்: வந்த சண்டையை நான் விட மாட்டேன் ! (வாளை உருவுகிறான்)

[அப்போது வாலிபன் அல்சிபியாடஸ் (Alcibiades) வந்து குறுக்கிடுகிறான். அவன் ஓர் நுண்ணறிவாளி. கம்பீரமான தோற்றம் உடையவன். அவனோடு வாலிபன் ஃபயிடோ (Phaedo) வருகிறான். இருவரைச் சுற்றிலும் கூட்டம் கூடுகிறது.]

மெலிடஸ்: அல்சிபியாடஸ் ! அப்புறம் ஃபயிடோ ! சாக்ரடிஸின் தோழர்களா அடுத்தும் வர வேண்டும் ?

கிரிடோ: என்ன நடக்கிறது அல்சிபியாடஸ் ?

அல்சிபியாடஸ்: தென்றல் காற்றில் குருதியும் மயிலிறகும் ஓடுகின்றன ! சாக்ரடிஸ் பணிந்து விழுகிறார் !

லைகான்: இல்லை சாக்ரடிஸ் தலை குனிகிறார் !

அல்சிபியாடஸ்: இல்லை, சாக்ரடிஸ் தாக்கப் பட்டார் ! அவரைப் பிடித்து விட்டார்கள் !

ஃபயிடோ: ஆமாம் அசுரக் கழுகுகள் அவரைப் பிடித்து விட்டன ! குருதி கசிகிறது அவரது தலையில் !

மெலிடஸ்: (கேலியாக) ஏன் சாக்ரடிஸ் எதிர்க்க வில்லை ? அவர் பெரிய போர்த் தளபதியாய் இருந்தவர் அல்லவா ? அவரது வலுவான சக்தி எங்கே போயிற்று ? எல்லாரையும் விட அவர் வல்லவராயிற்றே ?

கிரிடோ: வாருங்கள் யாவரும் கேட்போம் தேவர்களின் தீர்ப்பை ! புனிதத் தீர்ப்பை !

மெலிடஸ்: வஞ்சகர் சாக்ரடிசுக்கு இன்று முடிவு நாள் !

ஏதென்ஸ் காவலர் ஒருவர்: (வாளைக் கையில் ஏந்தி) வருகிறார் மேன்மைதாங்கிய மாஜிஸ்டிரேட்டுகள் ! வழி விடுங்கள் அவருக்கு !

[வரிசையாக ஏதென்ஸ் மாஜிஸ்டிரேட்டுகள் வருகிறார். மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்கிறார். தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). அவருக்கு வலப்புறம் இருப்பவர் : வயதான சைரஸ் (Cyrus). இடப்புறம் இருப்பவர் : இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)]

சைரஸ்: (கோபத்துடன்) ஏன் அதை நிறுத்துகிறீர் ? ஏற்கனவே தாமதமாகி விட்டது !

டிரிப்டோல்மஸ்: அடுத்தொரு தெருச்சண்டை ! முகக் காயத்தோடு நிற்கும் மூடரைப் பாருங்கள் !

  • பிலிப்: தெருச் சண்டைக்கு என்ன தண்டனை கொடுப்பது ?

அல்சிபயாடஸ்: தெருச் சண்டைச் தீர்ப்புக்காக நாமிங்கு கூட வில்லை ! ·பிலிப் ! நாம் தேவர் தீர்ப்பு பற்றி உரையாட வந்திருக் கிறோம். என்ன பேச வேண்டும் என்று தெரியும் உமக்கு ! தெருச் சண்டைக்கு என்ன தண்டனை என்பது உமக்குத் தெரியாதா ? நல்ல வேடிக்கை ! உமக்குத் தடை உத்தரவு வந்துள்ளது தெரியமா தேவரிட  மிருந்து ! தேவர்கள் உமக்குச் சகுனத் தடை விடுத்துள்ளார் !

டிரிப்டோல்மஸ்: பொறு ! நாங்கள் சகுனத் தடைகளை மதிப்பவ ரில்லை ! துவங்கட்டும் நமது கடமை ! நியாய மன்றத்தில் தர்க்கம் நிகழட்டும் !

“ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத ஓர் ஆபாச மனக் கருத்தே.”

“திருமண இல்வாழ்வோ அல்லது பிரமச்சரியத் தனி வாழ்வோ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் பின்னால் அதற்கு நிச்சயமாக வருத்தம் அடைவான் !”

“சாதாரண மாந்தருக்குப் பேரளவு இன்னல் தரச் சாமர்த்தியம் உள்ளது போல், பெருமளவில் நல்வினை புரியவும் அவருக்குத் திறனிருக்கலாம் என்பதை எண்ணத்தான் முடியும் என்னால்.”

“மனிதனுக்குச் சமமாக மாதருக்குச் சம உரிமை அளித்தால், மனிதனுக்கு மேலதிகாரியாக மாதர் ஆகி விடுவார்.”

சாக்ரடிஸ்

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார்.

***********************

டிரிப்டோல்மஸ்: பொறு ! நாங்கள் சகுனத் தடைகளை மதிப்பவரில்லை ! துவங்கட்டும் நமது கடமைப் பணிகள் ! நியாய மன்றத்தில் தர்க்கம் நிகழட்டும் !

(மாஜிஸ்டிரேட்டுகள் நாற்காலியில் அமர்கிறார். சைரஸ் பின்தங்கி லைகானோடும், மெலிடஸோடும் உரையாடுகிறான்.)

சைரஸ்: லைகான் ! மெலிடஸ் ! நீங்கள் இருவரும் ஒன்றாக நிற்பீரா தெய்வத் தீர்ப்பு வாசிக்கப்படும் போது ?

மெலிடஸ்: அது போகட்டும், நமது திட்டம் மாஜிஸ்டிரேட் ·பிலிப்புக்குத் தெரியுமா ?

சைரஸ்: அவருக்குத் தெரியாது, நான் நிச்சயமாக அப்படிச் சொல்வேன்.

லைகான்: வேறு யாரெல்லாம் இந்த திட்டத்தில் நமக்கு உடந்தையாக இருப்பவர் ?

சைரஸ்: ஆச்சரியப் படாதீர் ! சாக்ரடிஸைக் குற்றம் சாற்றும் மூன்றாவது நபர் யார் தெரியமா ?

மெலிடஸ்: சாக்ரடிஸின் நண்பர்களில் ஒருவர்தானே.

(மன்றத்தில் தீர்ப்பைக் கேட்கச் சில மாதரும் ஆங்கே வருகிறார்.)

விவசாயி ஒருவரின் மனைவி: கூட்டம் பெரியது ! நின்று நின்று என் கால்கள் கடுக்கின்றன ! எப்போது மன்றம் துவங்குமோ ? சூடாக இருக்குது இடம் ! எங்கு பார்த்தாலும் தூசி மயம் !

உடம்பெல்லாம் கூடத் தூசி !

இரண்டாம் மாது: ஆடவர் சிலரது முழங்கைகளைப் பார்த்தால் கோடரித் தண்டுபோல் தெரிகிறது. எப்படித்தான் அவரது மனைவிமார் அவரோடு குடித்தனம் நடத்துவாரோ ?

சைரஸ்: கூட்டத்தில் என் கண்களைக் கவ்வி இழுப்பவள் ஒரு காரிகை ! (இரண்டாம் மாது சைரஸை பக்கப் பார்வையில் நோக்குகிறாள்)

இரண்டாம் மாது: (சலிப்புடன்) அது ஒருவிதக் குருட்டுக் கண்ணோட்டம்தான் ! (சைரஸை நோக்கி) நீ யாரென்பது எனக்குத் தெரியும் ! ஏன் நீ மாஜிஸ்டிரேட்டுகள் கூட மன்ற முன்னிலையில் உட்கார வில்லை ? உலகில் உன்னத ஞானி யாரென்று அறிய உனக்கு விருப்பம் இல்லையா ?

சைரஸ்: உன்னத ஞானி யார் ? உன்னத மாதை மணந்து கொண்டவர் உன்னத ஞானி !

இரண்டாம் மாது: நீ யார் ? உன்னத ஞானியா ? அல்லது மூட மானிடனா ?

சைரஸ்: அதாவது என் மனைவி அறிவாளியா அல்லது மூட மாதா என்று நீ கேட்கிறாய் ? நான் என் மனைவியைப் பற்றிப் பேச விரும்ப வில்லை ! அது தனிப்பட்ட என் சொந்த ரகசியம் !

இரண்டாம் மாது: அதாவது உன் மனைவி அறிவாளி இல்லை என்பதைச் சொல்லக் கூசுகிறாய் ! இல்லாவிட்டால் இந்த மன்றத் தீர்ப்பைக் கேட்க நீ உன் மனைவியை அழைத்து வந்திருப்பாய் அல்லவா ? அது சரி ! மேடையில் அமராமல் இங்கென்ன செய்கிறாய் நீ ?

சைரஸ்: (மாதின் காதில் முணுமுணுத்து) இந்த அறிவாளிகளோடு சேர்ந்து நானொரு சிறு சதித் திட்டத்தைச் செய்யக் காத்திருக்கிறேன் !

இரண்டாம் மாது: யாரையாவது தீர்த்துக் கட்டப் போகிறாயா ?

மெலிடஸ்: (கோபத்தோடு) சைரஸ் ! மூடு வாயை ! சதித் திட்டத்தைச் சொல்லி நீ சட்ட வலைக்குள் சிக்கிக் கொள்வாய் ! மௌனம் கலகத்தை நிறுத்தும் ! வாய்ப் பேச்சுக் கலகத்தை மூட்டும் !

இரண்டாம் மாது: (முதல் மாதைப் பார்த்து) பார்த்தாயா ? இதுதான் ஆடவர் லட்சணம் ! உண்மை பேச மாட்டார் ! சரி விரைவாகப் போ ! முன்னால் இடம் பிடிக்க வேண்டும் ! கூட்டத்தில் முன்னால் போவது சிரமம்தான் !

(அப்போது இதைக் கேட்டுக் கொண்டு பின்னால் வருவது ஷாந்திப்பி சாக்ரடிஸின் மனைவி. ஒரு காலத்தில் அழகாய் இருந்தவள். இப்போது வயது முதிர்ச்சியில் அழிந்த ஓவியம் போல் காணப் படுகிறாள்.)

ஷாந்திப்பி: (இரண்டாம் மாதைப் பார்த்து) நீ என்ன சொல்கிறாய் ? மேடைக்கு முன்னால் யாரும் போக முடியாதா ?

இரண்டாம் மாது: வணக்கம் அம்மா ! நலமா ? கூட்டத்தில் நெருக்கியடித்து நீங்கள் போக முடியாது ! இங்கு நின்றால் கூட மாஜிஸ்டிரேட் பேச்சு காதில் விழும் ! பெரியவர் சாக்ரடிஸ் நலமா ? எங்கே அவரைக் காணோம் ?

ஷாந்திப்பி: பெரியவர் நலம்தான் ! அதோ பின்னால் வருகிறார் ஆமை வேகத்தில் ! தாமதமாகி விட்டது ! என்னருமைக் கணவர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டு நேரத்தை நழுவ விட்டார்.

(சாக்ரடிஸ் கூட்டத்தில் நெளிந்து கொண்டு வருகிறார். வயது எழுபதுக்கும் மேலிருக்கும் (72). ஆனால் தள்ளாடாமல் அவர் நிமிர்ந்து நடக்கிறார். கால் வலித்து ஒரு வீட்டோரப் படியில் சற்று அமர்கிறார். கையில் காரட் ஒன்றைக் கடித்துத் தின்கிறார். எளியராகவும் வறியராகவும் அருவருப்பான முகத்துடன் காணப்படுகிறார்.)

இரண்டாம் மாது: எழுபது வயதானலும் வெள்ளைக் கிழங்குபோல் இருக்கிறார். முகம்தான் சறு விகாரம் ! ஆனால் அவர் மேதமைத்தனம் கண்களில் பளிச்செனத் தெரிகிறது.

ஷாந்திப்பி: (சாக்ரடிஸ் இருக்கும் இடத்தை நெருங்கிக் கோபமாக) நான் முதலில் என்ன சொன்னேன் ? நாம் தாமதித்து விட்டோம் ! பேசிப் பேசி உங்கள் நாக்குதான் மொட்டையானது ! நாக்கு சுருங்கிப் போனது ! வாய் வலிக்காதா ? ஆமை வேகத்தில் தாமதமாய் வந்திருக்கிறோம் ! என்ன கனவு இப்போது கண்டு மெதுவாக வருகிறீர் ? மண்டை பூராவும் ஒட்டடை நிரம்பிக் கிடக்குது !

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அப்படியா ? உனக்கு எப்படித் தெரியும் ? நூல்களைப் படித்து என் மூளையை நிரப்பி யிருக்கேன் ! அது உனக்கு நூலாம்படையாகத் தெரிந்தால் உன்னை நான் எதிர்க்கப் போவதில்லை ! ஒன்றும் தெரியாது எனக்கு ! ஒட்டடையாய்த் தெரியுது உனக்கு !

ஷாந்திப்பி: நீங்கள் உட்கார்ந்து நூல் எதுவும் எழுதுவதில்லை ! நின்று கொண்டே பேசத்தான் தெரியும். உங்கள் உரையாடலை அப்படியே நகல் எடுத்து உங்கள் சீடர் பிளாடோ எழுதிப் பணம் சம்பாதிக்கிறார் ! அவர்தான் சாமர்த்தியசாலி ! நீங்கள் ஓர் ஏமாளி ! கிழிந்த உடை அணிந்து வாய் கிழியப் பேசி வறுமையில் உழல்கிறீர் ! பிளாடோவைப் பாருங்கள் ! பணச் செழிப்பு உடலும், நடையிலும் வழிகிறது ! பிழைக்கத் தெரிந்தவர் பிளாடோ !

சாக்ரடிஸ்: என் உரையாடலுக்கு நான் பணம் வாங்குவதில்லை ! வறுமையில் நான் மரணம் அடைந்தாலும் வசனத்துக்குப் பணம் நான் வாங்க மாட்டேன் ! பிழைத்துக் கொள்வது எப்படி என்று உன்னிடம் நான் கற்றுக் கொள்கிறேன் ! சொல்லிக் கொடு எனக்குத் தெரியாது !

ஷாந்திப்பி: எழுபத்தியிரண்டு வயதாச்சு ! ஒன்றும் தெரியாது என்று சொல்ல உமக்கு வெட்கமாய் இல்லையா ?

The Face of Socrates

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் மெய்ஞானிகள் அல்லது தீர்க்கதரிசிகளிடம் காணப்படும் ஒருவகைத் தன்னுணர்ச்சி அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

“ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப் பற்றிப் பெருமை அடைந்தால், எப்படி அவன் அந்தப் பணத்தைச் செலவழிக்கிறான் என்று அறிவதற்கு முன்னே அவனைப் பற்றி ஒருவர் புகழக் கூடாது.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

சாக்ரடிஸ்

******************************

The Trial of Socrates In Athens

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான்.

***********************

ஷாந்திப்பி: எழுபத்தியிரண்டு வயதாச்சு ! ஒன்றும் தெரியாது என்று சொல்ல உமக்கு வெட்கமாய் இல்லையா ?

சாக்ரடிஸ்: (காரட்டைத் தின்று கொண்டு) வயதுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஐந்து வயதில் அறிந்து கொள்ள எத்தனை ஆவல் இருந்ததோ அதே ஆர்வம் எழுபது வயதிலும் எனக்கு உள்ளது. ஆனாலும் நான் இன்னும் அறியாமையில் உழல்கிறேன். கற்றது கைப்பிடி அளவு ! கற்காதது உலகளவு ! எனக்கு குருமார்கள் யார் ? குழந்தைகள், வாலிபர், வயோதிகர், பெண்டிர்கள். யாரிடமும் நான் கற்றுக் கொள்ள தயார். உனக்கு ஒரு காரட் வேண்டுமா ?

ஷாந்திப்பி: நான் முயல் குட்டி இல்லை ! உங்களுக்குதான் அகோரப் பசி ! தொந்தி வயிறு நிரம்பவே செய்யாது !

சாக்ரடிஸ்: இன்று மன்றத்தில் நீதிபதிகள் கூறப் போகும் தேவர் தீர்ப்பை நான் கேட்க வேண்டும்.

ஷாந்திப்பி: உமக்குச் சம்பந்தம் இல்லாத காரியங்களில் மூக்கை நுழைக்காதீர். குடும்பம் ஒன்று இருப்பதே உமக்கு நினைவில் இல்லாமல் மறக்கிறது. நமக்குக் குழந்தைகள் இருப்பதும் மறக்கிறது. யாரிடம் போய் இதை முறையிடுவது ? எனக்கோ பிள்ளைகளுக்கோ என்ன நேர்கிறது என்று உமக்குக் கவலை இல்லை. வீட்டில் உண்ண உணவில்லை என்றால் தெருப் பன்றிகள் தின்ன மிச்சத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் ! அதுவும் கிடைக்கா விட்டால் உமது வேதாந்ததைச் சமைத்து உண்ணலாம் !

சாக்ரடிஸ்: உண்மை ஷாந்திப்பி ! ஓர் முதியவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. வேதாந்தம் ஆத்மாவின் விருந்து என்றவர் கூறியது முற்றிலும் உண்மை !

ஷாந்திப்பி: வேதாந்தம் உமது மூளையிலிருந்து எப்போது விளையும் ? சொல்லுங்கள் ! அப்போது அறுவடை செய்து சமைக்கிறேன். சீமான்கள் மாளிகையில் அடிக்கடி விருந்துணவைத் தின்று தின்று தொந்தி பெருத்து இப்போது முழங்காலைத் தொடுது ! ஆனால் அது உமது வேதாந்த உணவால் உப்பிய தொந்தியா ?

சாக்ரடிஸ்: முதிர்ந்த வயது, பெருத்த உடம்பு, பழுதுக் கிட்னி இவற்றால் பாடுபடுகிறேன் !

ஷாந்திப்பி: சரி ! அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?

சாக்ரடிஸ்: குதிரை கீழே தள்ளி குழியும் தோண்டியதாம் ! உன்னை நீயே உளவு செய் ! இதிகாசப் பூதங்கள் எல்லோரைக் காட்டிலும் உக்கிரமான அபூர்வக் காரிகை நீ !

ஷாந்திப்பி: சிந்திக்காமல் பேசாதீர் ! யார் குடும்பத்தை நடத்துவது ? இல்வாழ்க்கை என்றுதான் பேர். காலையில் காணாமல் போகும் கணவனுக்கு நடுநிசிக்குப் பிறகுதான் வீட்டு நினைவு வருகுது ! ஒரு நல்ல உடை உண்டா ? வாய் சுவைக்கும் உணவு உண்டா ? குடியிருக்க நல்ல குடிசை உண்டா ? நான்தான் சதா அடுக்களைக் கரிக்கட்டையாய் எரிந்து கொண்டிருக்கிறேன் ! இரவு பூராவும் விழித்திருந்து பகல் முழுதும் தூங்கி விழுகிறீர் ! இதென்ன உயிர்ப் பிறவி ?

சாக்ரடிஸ்: ஷாந்திப்பி ! நீ குத்திக் காட்டுவது என்னையன்று ! என் மூப்பு வயதை ! நான் எழுபது வயதுக் கிழவன் ! உனக்குப் புத்தாடை வாங்கவும், சுவை உணவு அளிக்கவும் என்னிடம் காசில்லை ! எனக்கு வேலை செய்யவும் வலுவில்லை ! வேலை கொடுப்பார் யாருமில்லை ! ஆனால் என்னால் பேச முடிகிறது ! அதற்கு வேலை நிறுத்தம் கிடையாது.

ஷாந்திப்பி: பேசிப் பேசியே உங்கள் நாக்கும் மூளையும் மழுங்கிப் போயின ! நீங்கள் வயதானவர் என்று முரசடிக்க வேண்டுமா ? உங்களை மணந்து கொண்டதற்கு நல்ல வெகுமதி கொடுத்திருக்கிறீர் ! வறுமை ! இதில் என்ன பெருமை உள்ளது ? நானொரு கிழவருக்குப் பணிப்பெண் ! நான் கிழவி ஆக வில்லை இன்னும் ! இன்னும் எனக்குப் பாதி ஆயுள் இருக்குது. உங்கள் ஆயுள் டப்பெனப் போனாலும் போய்விடும் ! எப்படி நான் மட்டும் தனியாக உயிர் வாழ்வேன் ?

சாக்ரடிஸ்: நான் சாக அஞ்சவில்லை ஷாந்திப்பி ! ஆனால் உனக்காக நான் உயிரோடு இருப்பதிலும் என்ன பயன் ? எப்போதும் குறைபாடுதான் ? அது இல்லை ! இது இல்லை ! எந்த நேரமும் உந்தன் இல்லைப் பாட்டுதான் ! தொல்லை எனக்குத்தான் ! அதனால்தான் பகலிலும் நான் வீட்டில் தங்காமல் வெளியே ஓடிப் போகிறேன் ! இரவில் உன் தொல்லை இல்லை !

ஷாந்திப்பி: இப்போது தெரியுது ஏன் ஊர் சுற்றப் போகிறீர் என்று ! உமக்குத் தொல்லை கொடுத்தால்தான் அடுப்பில் கஞ்சி தயாரிக்க முடியுது ! இல்லாவிட்டால் உங்கள் தொந்தி சுருங்கி விடாதா ? உங்கள் தொந்தி சுருங்கினால் பேச்சாவது சுருங்கும் ! வீட்டுக்குப் போக வேண்டும் என்று நினைப்பாவது உண்டாகும் ! தொந்தி பெருத்தால் மூளை சுருங்கும் என்று என் பாட்டி சொல்வாள் ! தொந்தி சிறுத்தால் மூளை செழிக்கும் ! எதைச் செய்யலாம் என்று நினைக்கிறீர் ? மூளை வளர்ச்சியா ? அல்லது தொந்தி உப்புவதா ?

சாக்ரடிஸ்: என் மூளை பெருத்தால் நான் எதுவும் கற்றுக் கொள்ள முடியாது ! மூளை சிறுத்தால் அதை வளர்க்க வேண்டும் என்று ஆர்வத்தைக் கிளப்பும். இல்லாவிட்டால் நமக்கு எல்லாம் தெரியும் என்று கர்வத்தால் என் மூளை முடங்கிப் போகும் ! வேலை செய்யாது அடங்கிப் போகும் ! கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பசி எனக்கு எப்போதும் இருக்க வேண்டும் ! மூளைப் பசி குன்றிப் போனால் மனித வாழ்வே பயனற்றுப் போகும் ! வயிற்றுப் பசியை ஆற்றினாலும் என் மூளைப் பசி தீராது !

(மெக்கில்லஸ் இருவர் உரையாடலைக் கேட்டுக் கொண்டு பின்னிருந்து வருகிறான்)

சாக்ரடிஸ்: என் கண்மணியே ! நீ தான் எனக்கு வேதாந்தம் கற்பிப்பவள் ! அனுதினமும் புதிய சிந்திப்பை எனக்கு ஊட்டுபவள் என்னருமை மனைவி ஷாந்திப்பி ! உனக்கு ஒரு காராட்டாவது நான் தர வேண்டா ?

ஷாந்திப்பி: (மனமுருகி) இத்தனை சண்டை போட்டாலும் நான் உங்கள் அருமை மனைவியா ? (புன்னகை பூண்டு) கொடுங்கள் எனக்கு ஒரு காரட் ! (சாக்ரடிஸ் ஒரு காரட்டை மனைவிக்குத் தருகிறார்.)

மெக்கில்லஸ்: (கையில் ஒயின் குவளையுடன்) சாக்ரடிஸ் ! இதோ கொஞ்சம் ஒயின் அருந்துவீர். (இருவருக்கும் ஒயினைக் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கிறான்.)

சாக்ரடிஸ்: (ஒயினைச் சுவைத்துக் கொண்டே) பெரு மகிழ்ச்சி மெக்கில்லஸ் ! நன்றி !

ஷாந்திப்பி: எனக்கு வேண்டம், நன்றி ! அங்காடி வீதிக்கே ஒயினைக் கொண்டு வர வேண்டுமா ? குடிகாரத் தோழரோடு இப்போது கொஞ்சி ஆடுங்கள் ! உம்மை நான் ஏன்தான் திருமணம் செய்தோனோ ?

சாக்ரடிஸ்: இந்த அழனை வேறு யாரும் மணந்து கொள்ள முன் வரவில்லை ! என் முகத்தை ஓர் ஆந்தை கூட விரும்பாது ! பசு மாடு என் முகத்தைப் பார்த்தால் ஒரு வாரத்துக்குப் புளிக்கும் பாலைத்தான் கறக்கும் !

ஷாந்திப்பி: பாலைக் கறக்க பக்கத்தில் நீவீர் அமர்ந்தால் பசு மாடு உமது மூஞ்சியைக் காலால் எட்டி உதைக்கும் !

***************************

Socrates & his Wife Xanthippe in

The Market Place

“ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

Socrates Eating Carrot in the

Market Place

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான்.

***********************

(அப்போது பேரவைக் கூட்டத்தில் ஆரவாரம் கேட்கிறது)

விவசாயி: என்னமோ நேர்ந்து விட்டது ! மக்கள் கூக்குரல் காதைப் பிளக்கிறது !

மெக்கில்லஸ்: தேவரின் தீர்ப்பை வாசித்து விட்டது போல் தெரிகிறது ! உலகில் பெரிய ஞானி யாரென்று தெரிவித்து விட்டார் ! அதன் விளைவைத்தான் நாமினி எதிர்பார்க்க வேண்டும் !

விவசாயின் மனைவி: நான் சற்று உள்ளே போய் என்ன முடிவென்பதைத் தெரிந்து கொள்ளப் போகிறேன் ! வா ஷாந்திப்பி ! என்ன நடந்துள்ளது என்று நாமிருவரும் கண்டு வருவோம்.

ஷாந்திப்பி: நான் இங்கே நின்று கொள்கிறேன். நான் படப்போகும் அவமானத்தை இங்கிருந்தே பார்த்துக் கொள்கிறேன் ! (விவசாயியை நோக்கி) உன் மனைவி உன்னைப் புரிந்து கொள்வதில்லை என்று என் செவியில் பட்டுத் தெறிக்கச் நீ சொல்லப் போகிறாயா ?

(ஷாந்திப்பி விவசாயி மனைவியுடன் வெளியேறுகிறாள். சாக்ரடிஸ் தோழரோடு உரையாடப் போகிறார்.)

விவசாயி: ஆமாம் ! என் கெட்ட காலம் ! என் மனைவி என்னைப் புரிந்து கொள்ளவ தில்லை ! அது மட்டுமா ? என் மனைவி மண்டைக்கு எதுவும் எட்டுவதில்லை ! புகுத்தினாலும் அது வெளியே தவ்வி விடும் !

கோவாதெர்டுவின் மனைவி: ஆண்பிள்ளை நீங்கள் யாரும் எங்கே போவீர், நாங்கள் மாதர் இல்லா விட்டால் ?

கோவாதெர்டு: மனிதருள் மாணிக்கமான ஆடவர் எல்லாரும் தாயின் கருவில்தான் உண்டாகிறார். மாதர் இன்றேல் மனிதன் பைத்தியமாகி விடுவான் !

மெக்கில்லஸ்: (ஒரு குவளை மதுபானத்தை சாக்ரடிசுக்கு வழங்கி) இதைக் குடிப்பீர் நண்பரே !

சாக்ரடிஸ்: வேண்டாம் மது எனக்கு ! தொப்பை நிரம்பி விட்டது ! குடித்தால் மனைவி சண்டை போடுவாள் ! வேண்டாம் ! எனக்கு மதுபானம் அளித்து எனது மனைவின் சாபத்தை வாங்கிக் கொள்ளாதே !

மெக்கில்லஸ்: குடித்தவன் அல்லவா மனைவிடம் சண்டை போடுவான் ! அது சரி ! குடிக்கா விட்டாலும் சதா உன்னோடு சண்டை போடுபவள் உன் மனைவி அல்லவா ? தினமும் உம்மை வாய்ச் சண்டைக்கு இழுத்து நிம்மதியைக் கலைப்பவள் ஆயிற்றே !

சாக்ரடிஸ்: என் வாய்க்குடி நாற்றம் என்னைக் காட்டிக் கொடுத்து விடும். சண்டையில் சரம்மாறி பெய்வாள் ! (குவளை மதுவை வாங்கிக் குடிக்கிறார்).

மெக்கில்லஸ்: யார் வீட்டில்தான் சண்டை இல்லை ! எந்தக் குடும்பத்தில்தான் சண்டை போடாத பெண்டாட்டி இருக்கிறாள் ? பெண் அமைதியாவள் என்றால் ஆண்மகன் சண்டைச் சேவலாய் இருக்கிறான் ! குடும்ப வாழ்வே அப்படித்தான் ! ஒரே வெந்நீர் கொப்பரையில் வேகும் இரண்டு உடைந்த முட்டைகள் ! இப்போது நானே குடும்ப சாகரத்தில் குதிக்கப் போகிறேன் ! எனக்குப் புதிய வேலை கிடைத்திருக்கிறது ! சிறைச்சாலையில் ஒரு சிறைக் காப்பாளியாக வேலை !

சாக்ரடிஸ்: என்ன ? சிறைக் காப்பாளியா நீ ? அது ஓர் அற்ப வேலை அல்லவா ? சொற்ப ஊதிய மானாலும் துச்சமான வேலை ! கைதிகளைச் சித்திரவதை புரிந்து உண்மையைக் கக்க வைக்கும் அக்கிரம வேலை ! மக்கு மடையர் புரியம் திக்குமுக்கான வேலை !

(அப்போது வெடிச் சத்தமுடன் பேரவையில் ஆரவாரமும் எழுகிறது)

விவசாயி: என்ன கூச்சல் அங்கே ? தேவரின் தீர்ப்பு வெளியாகி விட்டதா ?

சாக்ரடிஸ்: அதை விட்டுத் தள்ளு ! என்ன தீர்ப்பு வந்தாலும் சரி ! நான் கவலைப்பட மாட்டேன் ! எப்போது நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் ? அதைச் சொல் முதலில் எனக்கு.

மெக்கில்லஸ்: எப்போதென்று எனக்குத் தெரியாது ! இப்போது நான் அவளுக்குக் காதல் கவிதை எழுதி வருகிறேன் ! அவளும் இரண்டு நாளுக்கு முன்பு என்னைக் கனவில் கண்டிருக்கிறாள் !

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அவள் ஏன் உன்னைக் கனவில் காண வேண்டும் ? நேராகவே உன்னைக் கண்டு பேசலாமே ? யாரை நீ இடைத் தரகனாக வைத்திருக்கிறாய் ?

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உங்களைத்தான் நம்பியிருக்கிறேன் நான் ! நீங்களே சொல்லுங்கள் ! (பையிலிருந்து கவிதையை எடுத்துக் கொடுக்கிறான்)

சாக்ரடிஸ்: இந்தக் கவிதையை உன் அன்புக் காதலி விரும்பினாளா ? நான் படித்து என்ன சொல்ல முடியும் ?

மெக்கில்லஸ்: (சிரிப்புடன்) நானொரு தவறு செய்தேன் ! இந்தக் கவிதையை அவள் வீட்டுப் பலகணியில் எறிந்தேன் ! ஆனால் அது அவள் தாயின் அறை !

சாக்ரடிஸ்: அட கடவுளே ! அப்புறம் என்ன ஆயிற்று ? அவள் தாய் உன் கன்னத்தில் அறைந்தாளா ?

மெக்கில்லஸ்: கதையே மாறிப் போச்சே ! அந்தக் கவிதை அவள் தாயிக்குப் பிடித்துப் போனது !

சாக்ரடிஸ்: அப்புறம் என்ன ஆயிற்று ?

மெக்கில்லஸ்: அவள் தாயிக்கு என்மேல் மோகம் ! எனக்கோ அவள் புதல்வி மீது மோகம் ! என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகிறேன் ! நீங்கள்தான் ஒரு வழிகாட்ட வேண்டும் !

சாக்ரடிஸ்: வேறொரு கவிதை எழுதி மகள் இருக்கும் அறைப் பலகணியில் எறிந்து விடு ! தாய் மகள் இருவரில் யாருக்கு உன்மீது ஆசை அதிகமோ அவர் பிடித்துக் கொள்வார் உன்னை !

(மெக்கில்லஸ் கவிதையைப் படிக்கிறார்)

ஒவ்வோர் அழகுப் பிறவியும்

ஓர் அழகுத் துணைப் பிறவி தேடிப்

பேரிச்சையால்

உனை நோக்கித் திரும்பும் !

ஹெரா என்பவன் ஓர் அழகிய மயில் !

உன்னைப் போலொரு

பெண் மயிலை

ஒருபோதும்

கண்ட தில்லை அவன் !

பூமி எழில் ஊட்டும்

உனக்கு !

சொர்க்க புரி காதலிக்கும்

உன்னை !

நரகமும் தன் கரங்களால்

உன் மேனியைத் தொட

விரும்பும் !

ஒவ்வோர் அழகு ஆடவனும்

உன்னைத் திருமணம் புரிய

இச்சை யுறுவான் !

பேரழகுக் கண்மணி !

ஆரணங்கே !

திருமணம் செய்ய மாட்டாயா

என்னை ?

நம்பிடு ! நம்பிடு என்னை !

உறுதி மொழி

தருவேன் நானுனக்கு

***************************
“எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சம் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும் மதிப்பு இருப்பதில்லை ! ஏனென்றால் அச்சம் மதிப்பை விட அகண்ட தளத்தில் விரிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்.”

“ஏனென்று சிந்தித்து வியப்புறுவதில்தான் ஒருவனுக்கு ஞானம் பிறக்கிறது.”

“பொறாமை என்பது ஆத்மாவின் குடற்புண் (Ulcer).”

“பிறர் உனக்குச் சினமூட்டும் ஒன்றை நீ பிறருக்கு உண்டுபண்ணாதே !

சாக்ரடிஸ்

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான். மெக்லில்லஸ் தன் திருமணம் பற்றிப் பேசுகிறான். தன் காதலிக்கு எழுதிய கவிதையை வாசிக்கச் சொல்லி சாக்ரடிஸிடம் தருகிறான்.

***********************

மெக்கில்லஸ்: சாக்ரெடிஸ் ! எப்படி இருக்கிறது என் கவிதை ? கடைசி வரியைச் சற்றுக் கவனமின்றி எழுதி விட்டேன். அறிவில்லாமல் ஏதோ கிறுக்கி விட்டேன். என்ன நினைப்பாளோ என்னருமைக் காதலி ?

சாக்ரடிஸ்: ஆமாம் நீ எழுதிய இறுதி வரிகள் சிந்திக்காமல் வந்தவைதான் ! மெக்கில்லஸ் ! நான் யாருக்கும் அறிவுரை புகட்டுவ தில்லை. ஆனால் இதை மட்டும் நானுனக்குச் சொல்கிறேன் ! ஒருபோதும் பெண்ணைப் புகழாதே ! ஒரு பெண்ணைப் புகழ்ந்து வேறோர் பெண்ணிடம் பேசாதே ! அது உனக்கு இனிப்பாக இருக்கும் ஆனால் அவளுக்குக் கசப்பை அளிக்கும் ! உன்னை பம்பரமாய் ஆட்ட சாட்டை தருகிறாய் அவளுக்கு ! திறந்த புத்தகமாய் நீ இருக்கக் கூடாது ! மர்ம மனிதனாக இரு ! நீ புதிராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவள் உன்னைத் தேடி வருவாள் !

கோவாதெர்டு மனைவி: எழுபது வயது மனிதர் இப்படி யெல்லாம் இருபது வாலிபனுக்குச் சொல்லிக் கொடுக்கலாமா ? வாழ்வில் அடிபட்டு இளைஞர் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படிச் சொல்லிக் கொடுத்தால் இளைஞர் மாதரைச் சித்திரவதை செய்யலாம் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! பெண்ணைக் கோபுரத்தில் ஏற்றாதே ! பிறகு அவள் கீழே இறங்கி வரமாட்டாள் ! ஒவ்வொரு தரமும் நீதான் மேலேறிச் செல்ல வேண்டும் ! உன் காலை ஒடித்து விடுவாள் ! நீ தாழ்த்தப் படுவாய் ! பெண் தூக்கு மூக்குடன் நடப்பாள் ! பெண்ணுக்கு அடிமை ஆகாதே ! குறைகளைக் காட்டு ! தவறுகளைக் காட்டு ! பெண் நன்றி கூறுவாள் உனக்கு அவள் மீது நீ கவனம் செலுத்துவதாக !

கோவாதெர்டு மனைவி: சாக்ரடிஸ் ! எப்போதாவது நீங்கள் இந்த உபதேசத்தை வீட்டில் மனைவிடம் உபயோகித்தது உண்டா ?

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அப்படிச் சோதிக்கப் பட்டதாக இது தெரிகிறதா உனக்கு ? என் வீட்டில் வேகாத பதார்த்தம் ! (வேறு பக்கம் திரும்பி) பேரவைக் கூட்டம் முடிந்து மக்கள் யாவரும் ஈதோ வருகிறார். பார் ! சிலர் முகத்தில் சிரிப்பு ! சிலர் முகத்தில் அருவருப்பு !

கோவாதெடு மனைவி: ஷாந்திப்பி மீது பழிசுமத்த மாட்டேன் ! அவளிடம் தவறில்லை. அது நன்றாகத் தெரியும் எனக்கு. வேதாந்தம் காதுக்கு இனிமையானது ! ஆனால் வயிற்றை நிரப்பாது ! ஆனால் சில விசயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் பிறரிடமிருந்து !

சாக்ரடிஸ்: நான் எல்லா விசயங்களையும் பிறரிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறேன். எனக்கு எதுவும் தெரியாது. வெளியே என் வயது எழுபத்தி மூன்று ! வீட்டுக்குள் என் வயது ஏழுதான் ! ஷாந்திப்பி எனக்குத் தாய், தந்தை எல்லாம் ! உட்கார் என்றால் உட்காருவேன். உண் என்றால் உண்பேன் ! போ என்றால் போவான் ! வா வென்றால் வருவேன் ! நான் வேலை செய்யாத ராஜா ! வேலை செய்பவள் ஷாந்திப்பி ! வேலைக்காரியும் அவள்தான் ! வீட்டு எஜமானியும் அவள்தான் !

கோவாடெர்டு மனைவி: ஏதென்ஸில் பலர் ஞானி போல் நடிப்பார் ! பார்க்கப் போனால் ஏதென்ஸில் ஞானமுள்ள பத்துப் பேர் கூட கிடையாது ! அவரிடம் நீங்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும் ? உங்கள் அனுபவம் மூலம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

சாக்ரடிஸ்: என் மூளைக்குள் முளைப்ப தெல்லாம் வினாக்கள்தான் ! விடைகளை மற்றவர் மூளையில் விளைவிப்பது என் வினாக்கள் ! நான் கற்ற தெல்லாம் அப்படிக் வினாக்களை எழுப்பி அறிந்து கொண்டவை ! வேறு பாதை தெரியா தெனக்கு ! நாமெல்லாரும் ஒரே மாதிரிதான் !

கோவார்தெர்டு மனைவி: பெண்கள் யாரும் ஒன்றுதான் ! ஆனால் ஆடவர் வேறானவர். அவர்களில் நீவீர் ஒரு மாதிரி ! நீங்கள் ஒரு வேதாந்தி ! இல்லத்தைத் துறந்து வெளியேறி இருக்க வேண்டியவர் ! உமக்கு வீடும் தேவையில்லை ! மனைவியும் தேவையில்லை ! பலருக்கு உம்மைப் பிடிக்க வில்லை ! நான் எச்சரிகை செய்கிறேன். வாலிபர் பக்கத்தில் போய் வாய்த் தர்க்கம் செய்யாதீர். அவருடைய தகப்பன்மார் உம்மை ஒருநாள் தடியால் அடிக்கப் போகிறார்.

சாக்ரடிஸ்: வாலிபர்தான் என்னைத் தேடி வருகிறார். நான் எப்படி அவரை விரட்டுவது ? அவரது தகப்பனார் சினத்துக்கு ஆளாகித் தலையில் அடிபட்டால் தாங்கிக் கொள்ள முடியும் என்னால் ! ஒருவன் என்னை அடிக்கும் போது அவன் தன்னைத்தான் அடித்துக் கொள்கிறான். நான் பதிலுக்கு அடிக்காமல் நழுவிச் செல்வதால் வலி அவனுக்குத்தான் ஏற்படுகிறது !

கோவாதெர்டு மனைவி: அப்படி நீவீர் பேசுவதால்தான் உம்மை நான் வேதாந்தி என்று சொல்கிறேன்.

(அப்போது பேரவையில் பெரும் அரவம் கேட்கிறது. அல்சிபையாடஸ் வேகமாய் வருகிறான்.)

அல்சிபையாடஸ்: அந்த முடிவு காதில் விழுந்து என் மனம் அலைமோதுகிறது.

சாக்ரடிஸ்: என்ன நடந்தது நண்பனே ?

அல்சிபையாடஸ்: தேவர்கள் முடிவு இது ! உலகிலே உயர்ந்த ஞானி யாரென்று சொல்லி விட்டார் !

கோவாதெர்டு மனைவி: எனக்குத் தெரியும் அவர் யாரென்று ? சாக்ரடிஸ் !

அல்சிபையாடஸ்: உனக்கு எப்படித் தெரியும் ? நீதான் பேரைவைக்குப் போக வில்லையே !

கோவாதெர்டு மனைவி: அவரைத் தவிர ஏதென்ஸில் பேரறிஞர் வேறு யார் இருக்கிறார் ! அந்தப் புகழே அவருக்கு ஆக்கத்தை அளிக்கப் போகிறது. அழிவையும் தரப் போகிறது !

(சாக்ரடிஸ் எதுவும் சொல்ல முடியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறார்)

அல்சிபையாடஸ்: அது எப்படி உனக்குத் தெரியும் ?

கோவாதெர்டு மனைவி: அவ்விதம் என் ஆத்மா சொல்கிறது !

(அப்போது ஆகாத்தானும் கிரியோவும் பேரவையிலிருந்து வேகமாக வருகிறார்கள்)

ஆகாத்தான்: ஏதென்ஸ் சாக்ரடிஸ்தான் உலகத்தின் ஞானியாம் ! ஆச்சரியமாக இருக்கிறது !

கிரிடோ: (சாக்ரடி ஸ் காதுக்குள்) சாக்ரடிஸ் ! சொல்வதைப் கேட்பீர் ! உங்களை நாங்கள் உடனே ஏதென்ஸ் நகரை விட்டு நீக்கி ஒளித்து வைக்க வேண்டும்.

சாக்ரடிஸ்: ஏன் அப்படிச் சொல்கிறாய் கிரிடோ ?

கிரிடோ: அயோக்கியன் லைகானும், ஆங்காரன் மெலிடோசும் ஒரு சதிக் குழு அமைக்கிறார் ! உம்மைப் பழிசுமத்திக் குற்றக் கூண்டில் ஏற்றப் போகிறார் ! மாஜிஸ்டிரேட்டுகள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். தேவர்கள் தீர்ப்பை அவர் நிராகரிக்கிறார்.

அல்சிபையாடஸ்: அவர் வருவதற்குள் நாம் மறைந்து போக வேண்டும்.

கிரிடோ: நாம் தெருவில் நிற்பதே ஆபத்து ! சாக்ரடிஸ் ! ஏன் வானத்தை பார்க்கிறீர் ? உமக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லையா ? வாருங்கள் போகலாம் உம்மைப் பிடித்து அடைப்பதற்குள் !

(இருவரும் சாக்ரடிஸைப் பற்றி இழுக்கிறார்)

***************************

“உனது நல்ல பெயரை நீ பெறத்தக்க விலைமிக்க ஓர் ஆபரணமாக மதிப்பிடு ! அந்த வரவுக் கொடை தீயைப் போன்றது ! ஒருமுறைத் தூண்டி விட்டால் அதைப் பாதுகாப்பது எளிதானது. அதை அணைத்து விட்டாலோ மீண்டும் தூண்டுவது மெய் வருத்தும் வேலை.”

“மனிதச் செயல்கள் எதுவுமே நிலையான தென்று நினைத்துக் கொள்ளாதே. ஆதலால் உன் வாழ்க்கை செழிப்புறும் போது (Prosperity) பெருமகிழ்ச்சியில் துள்ளுவதைத் தவிர்த்திடு ! அதுபோல் வாழ்க்கையில் நீ தாழ்ச்சியுறும் போது (Adversity) பெருமனத் தளர்ச்சியில் தவிப்பதையும் தவிர்த்திடு.”

“உனது தவறுகளைப் பரிவோடு சுட்டிக் காட்டத் தவறி உன் வார்த்தைகள், செயல்கள் எல்லாவற்றையும் புகழ்பவனை மெய்யான ஒரு நண்பனாக நீ நம்பாதே.”

சாக்ரடிஸ்

******************************

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான். மெக்லில்லஸ் தன் திருமணம் பற்றிப் பேசுகிறான். தன் காதலிக்கு எழுதிய கவிதையை வாசிக்கச் சொல்லி சாக்ரடிஸிடம் தருகிறான். பேரவை முடிந்து மன்றத்தில் சாக்ரடிஸ் பற்றித் தீர்ப்பு வெளியாகிறது.

சாக்ரடிஸ்: முன்னால் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரிய வில்லை ! பின்னால் நடப்பது எனக்குத் தெரிவது எப்படி ? எனக்குக் கண்கள் பிடரியில் இல்லை ! நேர்மையில் சிந்தித்து என் கண்கள் நேராக நோக்குபவை ! என்னைப் பின்னால் ஏன் ஒருவர் தாக்க வேண்டும் ? முன்னால் வந்தே என் மீது கல் வீசலாம் ! நானதைத் தடுக்கப் போவதில்லை !

கோவாதெர்டு மனைவி: குழந்தைதான் இப்படிப் பேசும் ? முதியவர் இப்படிப் பேசுவாரா ? சிங்கத்தில் வாயிலே தலையை நீட்டிப் பார்க்கிறார் சாக்ரடிஸ் !

கிரிடோ: ஞானி போல் பேசுகிறார் சாக்ரடிஸ் ! மானிடன் போல் பேச வில்லை !

சாக்ரடிஸ்: உலகிலே உயர்ந்த ஞான மனிதன் இல்லை நான் ! அக்கூற்று வேடிக்கையாகத் தெரிகிறது எனக்கு ! நான் ஞானியா ? தேவர்க:ள் தீர்ப்பளித்து விட்டால் நான் ஞானி ஆகிவிடுவேனா ? நான் பல தவறுகள் புரிந்தவன் ! அப்படித் தவறுகள் செய்யும் போது என் தொண்டை அடைத்து கொள்ளும்.

கிரிடோ: நீவீர் ஞானியாக உமது பகைவர் கண்ணுக்குத் தென்படுகிறீர் ! உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீவீர் தலைமறைவாக வசிக்க வேண்டும் ! அல்லது உமது தலைக்குக் கத்தி வரும் !

சாக்ரடிஸ்: ஏதென்ஸை விட்டு நான் தலைமறைவாய் வசிக்கப் போவதில்லை ! நரிபோல் நான் ஒளிந்து வாழ மாட்டேன் ! இங்குதான் தங்கப் போகிறேன். யாரும் என் மேல் கை வைக்க மாட்டார்.

கிரிடோ: உமது பிடிவாதத்தைத் தளர்த்துவீரா ? சாக்ரடிஸ் ! நீண்ட காலம் வாழ்ந்து வாலிபருக்கு நீங்கள் அறிவுரை உபதேசிக்க வேண்டும். கொதிக்கும் வெந்நீரில் குதித்து நீவீர் ஆழம் பார்க்குறீர்.

சாக்ரடிஸ்: சுடு நீர் குளிப்பு எனது அழுக்கை நீக்கும். எனக்கு அறிவை ஊட்டுபவர் அனைவரும் வாலிபர்.

கிரிடோ: சாக்ரடிஸ் ! குளிப்பது சுடு நீர் இல்லை ! கொதி நீர் ! கொதி நீர் ! உமது தோலை வெங்காயம் போல் உரித்து விடும் ! நமது பக்கம் ஆட்கள் சேர்ந்து எதிர்ப்பது வரை மறைந்திருப்பதுதான் சாலச் சிறந்தது.

சாக்ரடீஸ்: ஓடிப் போவது ஒழுங்கு நெறி ஆகாது ! பேடிகள்தான் ஓடிப் போவார் ! கூடி நின்று பிரச்சனைக்குத் தீர்வு காண §ண்டும். அல்சிபையாடஸ் ! தேவர் குழு என்னை உலக ஞானி என்று தீர்மானம் கூறியது ஏன் என்று தெரியுமா ? எனக்கு ஒன்றும் தெரியாது.

அல்சிபையாடஸ்: பின் ஏன் உம்மைப் பிடித்துக் கொண்டார் ?

சாக்ரடிஸ்: ஏனெனில் என் அறியாமை அறிந்தவன் நான் ! என் அறிவின் எல்லை எனக்குத் தெரியும் ! தேவர் தீர்ப்பு ஒரு நகைச்சுவை !

அல்சிபையாடஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் ஒரு போர்த் தளபதியாக இருந்தவர் ! நிமிர்ந்து நின்று மனிதனாய் எதிர்த்து அடிக்க வேண்டும் !

சாக்ரடிஸ்: எதைப் பயன்படுத்தி எதிரிகளை அடிப்பது ?

அல்சிபையாட்ஸ்: நாம் ஒரு புரட்சியை எழுப்புவோம் ! புனிதப் போர் ! எதற்காக ? சத்தியம், நியாயம், மனித மரியாதை ஆகியவற்றை நிலைநாட்ட !

Socrates Discussing with Friends

சாக்ரடிஸ்: போர் என்பது என்ன ? வலுத்த அரசு நொடித்த அரசை ஆக்கிரமிக்கப் போலிக் காரணம் அல்லது பொய்க் காரணத்தைக் காட்டுவது ! அநியாய வன்முறைகளைக் கையாளுவது ! மன ஊக்கம் இருந்தால் என் மீது அவர் குற்றம் சுமத்தட்டும் பார்க்கிறேன். எனக்கும் எதிர்ப்பு வழக்கறிஞர் இருக்கிறார். அரசாங்கம் நெறி தவறிய போதெல்லாம் நான் எச்சரிக்கை செய்திருக்கிறேன். அதற்கு அரசு எனக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளது.

கிரிடோ: சாக்ரடிஸ் ! யாரும் உமக்கு நன்றி கூறப் போவதில்லை ! அதற்கு கிடைக்கும் வெகுமதி ஹெம்லாக் விஷம் !

சாக்ரடிஸ்: மனிதர் தம் தவறுகளை ஒப்புக் கொண்டால் நல்லது. இருட்டில் வாழ்வோர் அன்போடிருந்து ஒளியைக் கண்டு கொள்வாராயின் நல்லது ! நான் ஹெம்லாக் விஷத்தைக் குடிக்கத் தேவயில்லை ! நான் பிறரிடம் கற்றுக் கொள்வதற்கு ஒருவரும் எதிர்ப்புக் காட்ட மாட்டார் !

அரிஸ்டோதானிஸ்: ஐயோ தெய்வமே ! புரிய வில்லையா உமக்கு ? பெருமை ! அவரது பெருமை ! அவரது ஆத்மப் பெருமையை நீவீர் தாறுமாறாய்க் கிழித்தெறிகிறீர் ! உமக்கு என்ன வெகுமதி கிடைக்கும் என்று நினைக்கிறீர் ?

சாக்ரடிஸ்: பெருமைத்தனம் சத்தியத்தை விடப் பெரியதா ?

அரிஸ்டோதானிஸ்: ஆமாம் சுயக் கர்வம் எல்லாவற்றையும் விட உயர்ந்த பீடத்தில் இருப்பது !

கிரிடோ: சாக்ரடிஸ் ! பிடிவாதம் செய்கிறீர் ! நீங்கள் சிறிது காலம் மறைந்திருப்பது நல்லது என்பது எங்கள் ஆலோசனை ! உங்களை நாங்கள் பாதுகாக்கிறோம்.

சாக்ரடிஸ்: கிரிடோ ! உண்மை, நான் பிடிவாதக்காரன், உன்னைப் போல. ஆனால் ஒளிந்து வாழும் மனிதப் பிறவி இல்லை ! என்னை நான்தான் காத்துக் கொள்ள வேண்டும்.

கிரிடோ: சாக்ரடிஸ் ! மறக்காதீர் நாமிருவரும் போரில் இணைந்து ஒன்றாய்ப் போராடியவர் ! அந்தப் போரை விட இந்தப் போர்தான் எல்லாவற்றையும் விடப் பெரியது ! சத்தியத்துக்குப் புரியும் போர் ! நியாயத்துக்குப் புரியும் போர் ! எம்மோடு சேர்ந்து போரிடுவீர் !

சாக்ரடிஸ்: நான் போராடுவேன் நேராக நின்று ! ஒளிந்து கொண்டு போர் புரிவது என் பண்பாடு இல்லை ! மறைந்து கொண்டு கோழையைப் போல் அடிப்பது என் பண்பில்லை ! நான் உலக ஞானியாம் ! தேவர்கள் முத்திரை அடித்துள்ளார் ! நான் ஞானியாய்க் கருதப்பட விரும்ப வில்லை ! ஒரு சாதாரண மானிடனாய் வாழவே விழைகிறேன் !

**************************
“எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது.”

“நான் கிரேக்கனோ அல்லது ஏதென்ஸ் நகரத்து மனிதனோ அல்லன். ஆனால் நானோர் உலகக் குடிமகன்.”

“புறப்படும் வேளை வந்து விட்டது எனக்கு ! அவரவர் பாதைகளில் போகிறோம் நாம், நான் சாவதற்கு, நீ வாழ்வதற்கு ! கடவுளுக்கு மட்டும் தெரியும் எந்தப் பாதை மிகச் சிறந்தது என்று. ஆழ்ந்து சிந்திக்காத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

சாக்ரடிஸ்

******************************

அங்கம் : 2

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதிஃபிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

யூதிஃபிரோ: (வியப்புடன்) என்ன சாக்ரடிஸ் ! நீங்கள் நீதி மன்றத்தில் வாசல் முன்னே நிற்கிறீர் ! எதற்காக இங்கே நீங்கள் வரவேண்டும் ? நிச்சயம் நீங்கள் யாரையும் குற்றக் கூண்டில் நிறுத்த வரவில்லை என்று நினைக்கிறேன் !

சாக்ரடிஸ்: ஏதென்ஸ் நகரக் குற்றச் சாட்டு முறையைப் பற்றி நான் என்ன சொல்ல ? குற்றக் கூண்டில் எப்படியாவது ஒருவரைத் தள்ளுவதுதான் சிலருக்குப் பொழுது போக்கு !

யூதிஃபிரோ: யாராவது உங்களை நீதி மன்றத்தில் ஏற்றப் புகார் செய்துள்ளாரா ?

சாக்ரடிஸ்: ஆமாம் ஒருவர் என் மீது புகார் செய்திருக்கிறார்.

யூதிஃபிரோ: யாரவன் சாக்ரடிஸ் ?

சாக்ரடிஸ்: அவரை எனக்குத் தெரியாது. அவரை மெலிடஸ் என்று அழைக்கிறார். நீண்ட தலைமயிர், குறுந்தாடி, கோண மூக்கு, அகண்ட வாய் ! நீண்ட நாக்கு !

யூதிஃபிரோ: எனக்கும் தெரியவில்லை ! என்ன குற்றச் சாட்டைச் சுமத்திருக்கிறான் ?

சாக்ரடிஸ்: நான் செய்யும் தொழில் சட்ட எதிர்ப்பானதாம் ! மெலிடஸ் என்ன குற்றம் சாட்டுகிறான் தெரியுமா ? ஏதென்ஸ் வாலிபர் மனதெல்லாம் வசீகரப்பட்டுப் பாழாகப் போகிறதாம் ! அப்படி வாலிபரைக் கெடுத்தது யாரென்று அவருக்குத் தெரியுமாம் ! என்னுடைய உரையாடல் வாலிபரை வசீகரிப்பதுவாம் ! வாலிபர் மனதில் நஞ்சியிட்டு விட்டாம் ! இந்தப் புகாரை மெலிடஸ் வீடு வீடாய்ச் சென்று கூறி வாலிபரின் தாய்மார்களை மூட்டி விட்டிருக்கிறார். இப்போது என்னைக் குற்றம் சாட்டி அரச நீதி மன்றத்துக்கும் மனுவை அனுப்பியுள்ளார். என்னைச் சிறையில் அடைத்து அவர் ஓர் தேசீயத் தீரராய்ப் பாராட்டுகள் பெறப் போகிறார்.

யூதிஃபிரோ: இவையெல்லாம் நினைத்தபடி நடக்கும் என்று தோன்றவில்லை எனக்கு ! அதற்கு எதிராக நடக்கும் என்று நான் அஞ்சுகிறேன். உங்களைப் பழிசுமத்தி ஏதென்ஸ் நகர மக்களின் இதயங்களைப் புண்ணாக்கப் போகிறார் ! சொல்லுங்கள், எப்படி வாலிபர் மனதைப் பாழாக்குவதாக உம்மைக் குற்றம் சாட்டுகிறார் ?

சாக்ரடிஸ்: எனக்கே புரியவில்லை ! ஆனால் வியப்பாக இருக்கிறது. மெலிடஸ் சொல்வதெல்லாம் இதுதான் : ஏதென்ஸில் நான் புதிய தெய்வங்களை உருவாக்குவதாகக் குற்றச் சாட்டு ! ஏதென்ஸ் வழிபடும் பண்டைத் தெய்வங்களை நான் நம்புவதில்லை என்றும் குற்றச் சாட்டு !

யூதிஃபிரோ: எனக்குப் புரிகிறது நீங்கள் சொல்வது. ஆனால் அவரது கண்களுக்குத் தெரியும் காரணம் வேறு ! உங்களுக்கு ஏதோ தெய்வ அசரீரிக் குரல் கேட்கிறது என்று நீங்கள் சொல்லி வருவது மெலிடஸைத் திகைக்க வைக்கிறது. இதை ஓர் மதச் சார்பான குற்றச் சாட்டாய் எடுத்து அவர் நீதி மன்றத்துக்குப் புகார் செய்ததாக எனக்குத் தெரிகிறது. இதே போல் எனக்கும் முன்பு நேர்ந்திருக்கிறது. தெய்வச் சார்பில் நான் எதிர்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பு செய்யும் போதெல்லாம் எள்ளி நகையாடி என்னை அவமானப் படுத்தினார். ஆயினும் நான் முன்னறிவித்தவை எல்லாம் நிகழாமல் போகவில்லை ! அதனால் என் மீது பலருக்குப் பொறாமை உண்டானது ! ஆனால் நாமதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. இவற்றை நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.

சாக்ரடிஸ்: என்னருமை நண்பா ! அவர் எள்ளி நகையாடுவது ஒருபுறம் இருக்கட்டும் ! ஏதென்ஸ் நகர வாசிகள் தம்மை விடச் சிந்தனை மிக்க நபரைக் கண்டால் வெறுப்படைவதைத் தவிர்க்க முடியாதது ! தனது ஞானத்தை எவரும் போதித்தால் அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது ! தம்மை விடப் பிறர் தாழ்ந்திருப்பதையே அவரால் தாங்கிக் கொள்ள முடியும் !

யூதிஃபிரோ: நான் இப்போதெல்லாம் அவரை தடுத்துப் பேசுவ தில்லை ! ஒதுங்கிப் போகிறேன்.

சாக்ரடிஸ்: ஆனால் நீ என்னைப் போல் யாருடனும் வாதாடுவ தில்லை ! உனது உன்னத சிந்தனையை நீ வெளிக்காட்டுவது மில்லை !

யூதிஃபிரோ: சரி அதெல்லாம் போகட்டும் இப்போது என் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.

சாக்ரடிஸ்: ஆம் நானும் கேட்க மறந்து விட்டேன். எதற்காக நீதி மன்றத்துக்கு நீ வந்திருக்கிறாய் ?

யூதிஃபிரோ: ஒருவரைச் சிறையில் தள்ள வந்திருக்கிறேன்.

சாக்ரடிஸ்: யாரைத் தள்ளப் போகிறீர் ? வாலிபரா அல்லது என்னைப் போல் வயோதிகரா ?

யூதிஃபிரோ: வயோதிகர் ! ஆனால் உங்களைப் போன்ற ஓர் உத்தமர் அல்லர் ! ஒரு கயவர் !

சாக்ரடிஸ்: (ஆர்வமுடன்) யார் அந்தக் கயவர் ?

யூதிஃபிரோ: தந்தையார் ! என்னருமைத் தந்தையார் !

சாக்ரடிஸ்: (வியப்போடு) என்ன ? உமது தந்தையாரா ?

யூதிஃபிரோ: ஆமாம், என்னைப் பெற்றவர் ! என்னை வளர்த்தவர் ! என்னை விட்டு விலகிச் சென்றவர் !

சாக்ரடிஸ்: என்ன தவறு செய்தார் உன் தந்தை ?

யூதிஃபிரோ: பயங்கரக் கொலை செய்துள்ளார் சாக்ரடிஸ் ! மாபாதகக் கொலை !

சாக்ரடிஸ்: அட கடவுளே ! இது எப்படி நடந்தது ! உனது தந்தை யாரைக் கொலை செய்தார் !

(தொடரும்)

***************************

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் வசப்படுத்துகிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

“எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்.”

சாக்ரடிஸ்

******************************

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதிஃபிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

Last Day of Socrates

சாக்ரடிஸ்: அட கடவுளே ! இது எப்படி நடந்தது ! உனது தந்தை யாரைக் கொலை செய்தார் ! சொந்தக்காரனையா ? அல்லது வழிப்போக்கனையா ? வழிப்போக்கன் ஒருவனாக இருந்தால் தகப்பனை நீ கைது செய்ய மாட்டாய் அல்லவா ?

யூதிஃபிரோ: கேலிக் கூத்தாகப் போனது சாக்ரடிஸ் ! மடிந்தவன் யாராய் இருந்தால் என்ன ? சொந்தக்காரனோ, வழிப்போக்கனோ குற்றவாளி செய்தது நியாயமா அல்லது அநியாயமா என்பதை நான் அறிய விரும்புகிறேன். நியாயம் என்றால் அவனை விட்டுவிடலாம். அநியாயம் என்றால் அவனைக் கைது செய்யப்பட வேண்டும் ! ஒரே கூரைக்குக் கீழ் இருந்தாலும் சரி, ஒரே மேஜை மீது உணவு உண்டாலும் சரி, தந்தையோ, தமயனோ யாராயினும் விசாரணைக்கு நான் இழுத்து வருவேன்.,

சாக்ரடிஸ்: கொலை செய்யப்பட்டவன் யார் என்று முதலில் சொல்வாயா ?

யூதிஃபிரோ: அவன் எனக்கு முன்பு ஊழியம் செய்தவன். எங்கள் வயலில் வேலை செய்தவன். அவன் குடித்துச் சினமடைந்து என் அடிமைகளில் ஒருவனைக் கொன்று விட்டான். கோபங் கொண்ட என் தந்தை குடிகாரனைக் கட்டிப் போட்டு ஒரு குழியில் தள்ளி விட்டார். அதற்குப் பிறகு மதக் குருவிடம் ஆள் அனுப்பி குற்றவாளியை என்ன செய்வதென்று ஆலோசனை கேட்டார். அதுவரைக் குழியில் கிடப்பவன் என்ன ஆனான் என்று அறியும் ஆர்வமின்றி என் தந்தை சும்மா இருந்து விட்டார். தூதுவன் வந்து பார்த்த போது குழியில் இருந்தவன் பசியாலும், பிணியாலும் இன்னல்பட்டுச் செத்துக் கிடந்தான். நான் அதனால் என் தந்தையாரைக் கைது செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் அது கொஞ்சமும் என் உறவினருக்குப் பிடிக்க வில்லை ! மகன் தந்தையைக் கைது செய்வது தெய்வ அநீதி என்று என்னை இகழ்கிறார் ! அவர் குறிப்பிடும் தெய்வ நீதியும் தெய்வ அநீதியும் எனக்குப் புரியவில்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: கடவுள் நீதிக்குப் பணியும் நீ ஆத்ம சுத்தமாக நடந்து கொள்கிறாய் ! தெய்வ நீதி, தெய்வ அநீதி இரண்டையும் அறிந்தவன் நீ ! உன் தந்தையை நீ கைது செய்த போது உனக்குச் சிறிதும் அச்சமில்லை ! உன் கைகள் நடுங்க வில்லை அல்லவா ?

யூதிஃபிரோ: ஆம் சாக்ரடிஸ் ! ஆனாலும் நான் சாதாரண மனிதன் தான். ஆயினும் எது நீதி எது அநீதி என்பதைச் செம்மையாக அறியாதவன் இல்லை நான் !

சாக்ரடிஸ்: நான் உனது மாணவனாகப் பயிற்சி அடைந்திருக்க வேண்டும். அப்போது நான் மெலிடஸ் போன்ற மூர்க்கரை நீதி மன்றத்தில் எதிர்த்து வாதாட முடியும் ! என்னைத் தெய்வத் துரோகி என்றும் மெலிடஸ் பழிசுமத்தியுள்ளார் ! உன்னைத் தெய்வத் துரோகி என்று யாராவது பழிசுமத்தி வழக்கில் மாட்டி விட்டால் நீ என்ன செய்திருப்பாய் ?

யூதிஃபிரோ: என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். நீங்களும் உங்கள் மீது சுமத்தியுள்ள பழிக் குற்றத்தை எதிர்த்துப் போராட வேண்டும். சிறைக்குள் இருந்து மறைந்து கிடப்பதை விட சுதந்திரப் பறவையாய்த் திரிவது மேலானது ! நீங்கள் உலகுக்குச் செய்ய வேண்டிய சாதனைகள் இன்னும் பல உள்ளன. அவற்றைத் தொடர வேண்டும் நீங்கள்.

சாக்ரடிஸ்: அது நல்ல அறிவுரைதான். ஆனால் நாம் நினைப்ப தெல்லாம் நடப்பதில்லையே !

யூதிஃபிரோ: ஒரு குறிக்கோளை மனதில் கொண்டு அதை நிறை வேற்றத் துணிவதுதான் என் கோட்பாடு !

சாக்ரடிஸ்: ஒன்று உன்னைக் கேட்கிறேன். எனக்கு இந்த வேறுபாடுகளைச் சற்று விளக்குவாயா ? எது நீதி ? எது அநீதி ? எது தெய்வ பற்று ? எது தெய்வத் துரோகம் ?

யூதிஃபிரோ: நானொரு காவல்துறைப் பணியாளி. என் தொழில்விதி குற்றவாளியைக் கண்டுபிடிப்பது ! அவரைத் தண்டிப்பது ! அது எனது நீதி ! தந்தையானாலும் சரி தாயானாலும் சரி அல்லது மேறு யாராயினும் சரி, குற்றம் இழைப்பாராயின் நீதிதேவன் முன்பு அவர் தண்டிக்கப் பட வேண்டும். அவரைக் காப்பாற்றித் தப்ப வைப்பது அநீதி ! கடவுளுக்கு அஞ்சாமல் பிறருக்குக் குற்றம் இழைப்பவர் தெய்வத் துரோகிகள் ! கடவு?ளை வழிபட்டு மனித நேயம் கொள்பவர் தெய்வப் பற்றுள்ளவர். இவையே என் கருத்து. என் தந்தையைக் கைது செய்யக் கூடாது என்று சொல்வோர் தெய்வத் துரோகிகள் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: மிகத் தெளிவான விளக்கங்கள் யூதி·பிரோ !

யூதிஃபிரோ: இவைதான் கல்மேல் பொறித்த வாசங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். இவை என் தனிப்பட்ட கருத்துக்கள்.

சாக்ரடிஸ்: உன் கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். பரிவுக் கடவுளைப் பணியும் நீவீர் இவற்றை எல்லாம் நம்புகிறீரா ? நான் ஒன்று கேட்கிறேன் : கவிஞர்கள் சொல்வது போல் தெய்வங்களுக் குள்ளே சண்டை, சச்சரவு உண்டா ? அவருக்குள் பயங்கரப் பகைமை உண்டா ? நூல்களும், பூர்வீகக் கதைகளும் கூறுவது போல் “அக்ரோபொலிஸ்” *(Acropolis of Athens ) மாளிகைக்குத் தேவதைகளின் அங்கிகள் எடுத்துச் செல்லப்பட்டுப் புனிதமாக்கப் படுகின்றனவா ? இவை யெல்லாம் உண்மை என்று நாம் நம்ப முடியுமா ?

யூதிஃபிரோ: இவை எல்லாம் உண்மை இல்லை சாக்ரடிஸ் ! கடவுளைப் பற்றிக் கூறப்படும் பல கருத்துக்கள் மெய்யானவை அல்ல ! அவற்றை நான் கூறினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர் !

சாக்ரடிஸ்: இவற்றை எல்லாம் நான் தெரிந்து கொள்ள விழைகிறேன். அவற்றை அடுத்ததொரு சந்திப்பில் உரையாடுவோம். நானின்று அறிந்து கொள்ள விரும்புவது: வேறென்ன உதாரணங்கள் சொல்ல முடியும் உம்மால் தெய்வப் பற்றுக்கும், தெய்வத் துரோகத்துக்கும் ?

யூதிஃபிரோ: சொல்கிறேன் : கடவுள் நெறிக்கு உகந்தது தெய்வப் பற்றுள்ளது. கடவுள் நெறிக்கு அப்பால் பட்டது தெய்வத் துரோகமானது !

சாக்ரடிஸ்: அந்தக் கருத்து சரிதான் ! ஆனாலும் அவற்றுக்குச் சில உதாரணங்கள் கூற முடியுமா ? நாம் இப்போது உரையாடுவதைச் சற்று ஆழ்ந்து உளவுவோம். கடவுளுக்குப் பிடித்த ஒரு வினை அல்லது மனிதன் தெய்வப் பற்றில் சேர்க்கப்படும். கடவுளுக்குப் பிடிக்காத ஒரு வினை அல்லது மனிதன் தெய்வத் துரோகத்தில் இணைக்கப்படும் என்று கூறுவீரா ? மேலும் நாம் கதைகள் கூறி வருகிறோம் : தெய்வங்கள் முரணான கொள்கை உடையவை, ஒன்றை ஒன்று எதிர்த்துப் போரிடுபவை, அவை பகையாளிகள் என்ப தெல்லாம் பரவி உள்ளன அல்லவா ?

யூதிஃபிரோ: ஆம் அவை எல்லாம் உண்மைதான்.

சாக்ரடிஸ்: நான் கேட்கிறேன் தெய்வங்களுக்குள் ஏனிந்த வேறுபாடுகள், கோபப்பாடுகள், பகைமைகள், போர்கள் ? அவற்றுக்குக் காரணங்கள் என்ன ? உயர்ந்தது என்றும் தணிந்தது என்றும் தெய்வங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள், பிரிவுகள் ஏற்படாலாமா ? அப்படி மாறுபாடுகள் நேர்ந்தாலும் சண்டை செய்யாமல் சமாதான முறையில் பகைமைத் தவிர்க்கலாமே !

++++++++++++

* The Acropolis of Athens is the best known Acropolis (Greek) in the world. Although there are many other Acropolises in Greece, the significance of the Acropolis of Athens is such that it is commonly known as The Acropolis without qualification. The Acropolis was formally proclaimed as the pre-eminent monument on the European Cultural Herita. The Acropolis is a flat-topped rock which rises 150 m (490 ft) above sea level in the city of Athens, with a surface area of about 3 hectares.

***************************

“ஓர் ஆத்மா தன்னை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஆத்ம நன்னெறி, ஞானம் போன்ற துறைகளைத் தேடும் மற்றோர் ஆத்மாவோடு ஈடுபட வேண்டும். யாராவது கூற முடியுமா புரிதலும், அறிதலும் மேவிய ஆத்மாவை விடத் தெய்வீகம் பெற்ற ஒன்று இருக்குமா என்று ? அப்போது அத்துறையே எல்லாவற்றையும் புரிந்து, அறிந்து கொண்ட தெய்வீக உணர்வு பெற்றுத் தன்னையும் உணர்ந்திடும் பண்பாடைப் பெறுகிறது.”

“ஞானமும், திறமையும் கொண்டுள்ள ஒருவரை நாம் உடனே தெரிந்து கொள்கிறோம். அவை அவனுடைய உடல் தோற்றத்தையோ, செல்வத்தையோ, அதிகார ஆற்றலையோ சார்ந்தவை அல்ல.”

சாக்ரடிஸ்

******************************

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதிஃபிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதிஃபிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

சாக்ரடிஸ்: நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியக் கவனம் செலுத்தி எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு ஏதென்ஸ் வாலிபரை எல்லாம் வசப்படுத்திக் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே. என்னை அவர் தண்டிப்பதை நான் தடுக்கப் போவதில்லை !

யூதிஃபிரோ: இப்படி நீங்கள் தணியக் கூடாது. உன்னத குறிக்கோளில் அறிவை விருத்தி செய்யும் நீங்கள் மூடருக்கு அடிபணியக் கூடாது.

சாக்ரடிஸ்: நான் சொல்வதில் நியாயம் அநியாயம், நல்லது, கெட்டது, அழகானது அவலட்சணமானது எவை என்று கூறுவாய் ? அவற்றின் வேறுபாட்டை அறிவதில்தான் எனக்கும் அரசுக்கும் மனப்போர் ! மனிதருக்கு மனிதர் மதிப்பளிக்காததால் ஒருவர் கூறுவதை ஒருவர் புரிந்து கொள்ளாமல் புகார் செய்கிறார் !

யூதிஃபிரோ: இவற்றை எல்லாம் ஒவ்வொருவர் தமது கண்ணோட்டத்தில்தான் ஆராய்வார் ! நியாயமாக நீங்கள் கருதுவதை அடுத்தவர் அநியாயமாக எடுத்துக் கொள்வார் !

சாக்ரடிஸ்: மெய்யான கருத்தோட்டம் ! மனிதர் நல்லது கெட்டது எதுவென நினைக்கும் போது தெய்வங்கள் எது நியாயம் எது அநியாயம் என்று சொல்வதுண்டா ?

யூதிஃபிரோ: தெய்வங்கள் கூறுவதாக எதுவும் தெரியவில்லை ! மனிதர்தான் தெய்வங்கள் கூறுவதாக எழுதியிருக்கிறார்.

சாக்ரடிஸ்: மெய்யான வாசகம் யூதிஃபிரோ ! ஆனாலும் ஒரு கடவுள் நியாயம் என்று குறிப்பிடுவதை வேறோர் கடவுள் அநியாயம் என்று கூறவில்லையா ? அந்த வேற்றுமை உணர்வால் தெய்வங்களுக்குள் போர் மூண்டதில்லையா ?

யூதிஃபிரோ: ஆமாம் சாக்ரடிஸ் அப்படிப் போர்கள் நேர்ந்துள்ளன !

சாக்ரடிஸ்: சரி இதற்குப் பதில் சொல் ! எந்தக் கடவுள் ஏற்றுக் கொள்ளும் நீ உன் தந்தையைச் சிறைப்படுத்தி இருப்பதை ? எந்த தெய்வத்துக்குப் பிடிக்காது ? ஜீயஸ் (Zeus) கடவுளுக்கு நியாயமாகத் தோன்றலாம் ! குரோனாஸ், ஔரானஸ் (Kronos & Ouranos) ஆகிய தெய்வங்களுக்கு அநியாயமாகத் தெரியும் இல்லையா ?

யூதிஃபிரோ: சாக்ரடிஸ் ! என் தந்தையை நான் கைது செய்ததை எந்தக் கடவுளும் தவறாக எடுத்துக் கொள்ளாது ! நான் கைது செய்யா விட்டாலும் அநியாயமாகக் கொன்றவர் எவரும் கடவுளால் தண்டிக்கப் படுவர்.

சாக்ரடிஸ்: அதாவது நியாய அநியாயத்தைக் கடவுளே கண்காணித்து வருவதாக நீவீர் இப்போது கூறுகிறீர் ! குற்றம் செய்தோரைத் தெய்வமே தண்டிக்கும் என்னும் கொள்கையை உறுதிப் படுத்துகிறீர். நான் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்து இது !

யூதிஃபிரோ: எனக்கு இதில் ஐயப்பாடு இல்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: நான் ஒன்று கேட்கிறேன் பதில் சொல் ! நாம் பேசும் போது சொல்வதில்லையா ? சிலர் வழிகாட்டி நடத்துனர் ! சிலர் காட்டிய வழியில் நடப்பவர் ! சிலர் தூக்கிச் செல்பவர் ! சிலர் தூக்கப் படுபவர் ! சிலர் உற்று நோக்குபவர் ! சிலர் உற்று நோக்கப் படுபவர் ! இந்த இருதரப்பாரிலும் வேறுபாடுகள் உள்ளன, எப்படி நேருகின்றன என்று நீவீர் நினைப்பதுண்டா ?

யூதிஃபிரோ: ஆம், இருதரப்பாரிலும் வேறுபாடுகள் உள்ளன !

சாக்ரடிஸ்: அப்படியானால் நேசிப்பிலும் ஒருவர் நேசிப்பதிலும் ஒருவர் நேசிக்கப் படுவதிலும் வேறுபாடுகள் உள்ளன அல்லவா ?

யூதிஃபிரோ: நிச்சயமாக உள்ளன !

சாக்ரடிஸ்: நேசிக்கப்படுவது தானாக வருவதாகவோ அல்லது ஒன்றால் பாதிக்கப் பட்டதாகவோ இருக்கலாம் அல்லவா ?

யூதிஃபிரோ: நிச்சயமாக !

சாக்ரடிஸ்: ஒன்று நேசிக்கப்படும் காரணத்தால் நேசிப்போர் அதனை நேசிக்க வில்லை ! அல்லது நேசிப்போர் நேசிப்பதால் அது நேசிக்கப் படுகிறதா ?

யூதிஃபிரோ: மூளையைக் குழப்புகிறதே உங்கள் வினா ! புரியாமல் புரிகிறது !

சாக்ரடிஸ்: புரிந்ததை எடுத்துக் கொள்வோம். அதாவது தெய்வப் பற்றைப் பற்றி நீ சொல்கிறாய். தெய்வப் பற்றைத் தெய்வங்கள் வரவேற்கும் என்று !

யூதிஃபிரோ: ஆமாம் நான் அப்படிக் கூறினேன்.

சாக்ரடிஸ்: அது தெய்வப் பக்தி என்பதால் தெய்வங்கள் வரவேற்கின்றனவா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ?

யூதிஃபிரோ: வேறெந்தக் காரணமும் இல்லை !

சாக்ரடிஸ்: அதாவது அது நேசிக்கப் படுகிறது காரணம் தெய்வப் பக்தி இருப்பது ! ஆனால் ஒன்று தெய்வ பக்தியில்லை, அது நேசிக்கப்படும் காரணத்தால் !

யூதிஃபிரோ: அப்படி ஊகித்துக் கொள்ளலாம் !

சாக்ரடிஸ்: அப்படியாயின் கடவுள் மீது அன்பு கொள்வது பக்தியில்லை ! பக்தியும் கடவுள் நேசிப்பும் ஒன்றல்ல !

யூதிஃபிரோ: அதை எப்படிச் சொல்ல முடியும் சாக்ரடிஸ் ?

சாக்ரடிஸ்: மனிதரின் கடவுள் நேசிப்பைத் தெய்வங்கள் வரவேற்றன. ஒன்றைக் கடவுள் நேசிப்பதால் அது நேசிக்கப் படுவதில்லை. !

***************************

“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை தான் கற்றுக் கொள்ள வேண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்று மனதில் விரும்பாமல்.”

“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை, தனக்கு முன்பே தெரியும் என்றோ, தான் ஏற்கனவே கண்டுபிடித்ததாகவோ நினைத்துக் கொண்டிருந்தால்.”

“சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கோ அல்லது ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கோ ஒரு தருணம் வருகிறது அவனுக்குத் தெரியும் என்பதை அவன் அன்று நினைக்காத போது .”

“சாக்ரடிஸ் சொல்கிறார் : நீண்ட தர்க்கம் செய்து நான் ஞானத்தைத் தேடி அடைய வில்லை.”

பிளாடோவின் உரையாடல்கள்

******************************

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க நீதி மன்றம்.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், தீர்க்க தரிசி யூதிஃபிரோ (Ethyphro)

அமைப்பு : சாக்ரடிஸ் அரச நீதி மன்றத்தின் அருகில் நடமாடுவதைக் கண்டு யூதி·பிரோ ஆச்சரியம் அடைகிறார். ஏனெனில் சாக்ரடிஸ் நீதி மன்றங்களில் வில்லங்கத்தைப் பற்றி விவாதிக்க வரும் நபரில்லை. மெலிடஸ் (Meletus) என்பவன் வாலிபர் மனதைச் சாக்ரடிஸ் கெடுத்தார் என்றும் ஏதென்ஸ் நம்பிடும் தெய்வத்தை சாக்ரடிஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்றும் ஒரு புகாரைத் தயாரித்து நீதி மன்ற விசாரணைக்கு மனு அனுப்பியுள்ளான்.

சாக்ரடிஸ்: நான் கவிஞர் கூறும் ஒரு வாசகத்தை எதிர்க்கிறேன் ! அந்தக் கவிஞர் சொல்கிறார் : “ஜீயஸ் தெய்வந்தான் உலகில் எல்லா வினைகளையும் செய்கிறது. சகல உயிர்களையும் உலகில் வளர்க்கிறது. அச்சம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் அவமானமும் உள்ளது !” நான் கவிஞர் சொல்லும் இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கிறேன். காரணம் சொல்லட்டுமா ?

யூதிஃபிரோ: சொல்லுங்கள் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: அச்சமுள்ள இடத்தில் அவமானமும் இருக்கிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. உதாரணமாக நோய் நொடிகளுக்கு அஞ்சுவோர், வறுமைப் பிணிக்கு அஞ்சுவோர் தாம் அஞ்சும் அவதி, நோய் போன்ற இன்னல்கள் மீது அவமானப் படுவதாகத் தெரிய வில்லை.

யூதிஃபிரோ: ஆம் அது உண்மைதான்.

சாக்ரடிஸ்: ஆனால் எங்கே அவமானம் உள்ளதோ அங்கு அச்சம் இருக்கிறது என்று நான் சொல்வேன். ஏனெனில் எவர் ஒருவர் அவமானப் பட்டு முகத்தைக் காட்ட வெட்கப் படுகிறாரோ அவர் தன் பெயர் இகழப்படும் காரணங்கள் மீது அச்சப் படுவது நியாயமில்லையா ? அவமானத்தின் ஆணிவேர் அச்சம் ! இப்படித்தான் இதையும் விளக்குவேன். எவரிடம் தேசப் பற்று உள்ளதோ அவரிடம் நியாய சிந்தனையும் இருக்கிறது. ஆனால் நியாயம் இருக்கும் இடத்தில் எப்போதும் தேசப் பற்று இருப்பதில்லை ! ஏனெனில் தேசப் பற்று என்பது நியாயத்தின் ஓர் அங்கம் ! இதை ஏற்றுக் கொள்வீரா ? அல்லது உமது கருத்து வேறானதா ?

யூதிஃபிரோ: நீவீர் சொல்வது சரியாகத்தான் தெரிகிறது எனக்கு.

சாக்ரடிஸ்: மெலிடஸ் என்னைப் பற்றி புகார் செய்திருப்பதில் எது நியாயம் எது பழிசுமத்தல் என்று நீவீர் கூறமுடியுமா ? எது தெய்வ நீதி எது தெய்வ அநீதி எது தெய்வ பக்தி என்று விளக்கிச் சொல்வீரா ?

யூதிஃபிரோ: சாக்ரடிஸ் ! தெய்வ நீதி, தெய்வ பக்தி இரண்டுமே நியாயப் பண்பாட்டின் ஒரு பகுதியே. ஒரு பகுதி தெய்வக் கவனப் பகுதி ! மறு பகுதி மனிதக் கவனப் பகுதி !

சாக்ரடிஸ்: நீவீர் அழகாகப் பகுத்துக் கூறியது கண்டு பூரிப்படைகிறேன் ! ஆனால் நீவீர் குறிப்பிடும் கவனம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை ! குதிரைக்காரன் கவனம் குதிரை மேல் என்று சொல்வது போன்ற ஒரு பொருளைக் கொண்டதா ?

யூதிஃபிரோ: ஆமாம் அந்த அர்த்தத்தில்தான் கூறினேன்.

சாக்ரடிஸ்: அப்படியானால் இதை விளக்குவீர் எனக்கு ! தெய்வீகச் சக்தியில் ஞானம் உடைய நீவீர் தெய்வத்துக்குப் பணி செய்வதில் உள்ள பயன்களைக் குறிப்பிடுவீரா ? நம்மை எல்லாம் பணியாட்களாய்ப் பயன்படுத்தும் தெய்வங்கள் சாதிக்கும் சாதனைகள் என்ன ?

யூதிஃபிரோ: பல்வகை உன்னதப் பயன்கள் உள்ளன சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: அவ்விதம் போரில் போர்த் தளபதிகளும் சாதிக்கிறார் இல்லையா ? போரில் வெற்றி பெருவது எத்தகை இடர்கள் நிரம்பியவை தெரியுமா ?

யூதிஃபிரோ: ஆம் உண்மைதான்.

சாக்ரடிஸ்: அதுபோல்தான் வேளாண்மைத் தொழிலும் ! இந்த மண்ணை நிலமாக்கி வளமாக்கிப் பயிராக்கி நமக்கெல்லாம் உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போரே ! எத்தகைய புனிதத் தொழில் வேளாண்மை ! அப்படி விளக்கமாகச் சொல்வீர் தெய்வங்களின் சாதிப்பு வினைகள் என்ன வென்று !

யூதிஃபிரோ: சொல்கிறேன் ! அதற்கு ஆழ்ந்த அனுபவம் அவசியம். தெய்வத்தை வழிபடும் போதும், வாழ்க்கையில் தியாகம் செய்யும் போதும் மனிதர் சிந்தித்துக் கேட்கும் கொடைகள் முக்கியமானவை ! குடிமக்களின் இல்லங்கள், நாட்டின் பொதுப் பணிகள் ஆகியவை பாதுகாக்கப்பட ஒருவர் வழிபாடு செய்வது அவசியம். இவற்றைப் பாதுகாக்காமல் விட்டுவிடுவது தேசத் துரோகம்.

சாக்ரடிஸ்: ஒருவர் தியாகம் செய்வது தெய்வத்துக்குக் கொடை அளிப்பதுவா ? அதுபோல் ஒருவர் வழிபடுவது தெய்வத்திடம் யாசகம் கேட்பதுவா ?

யூதிஃபிரோ: நிச்சயமாக சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: அதாவது வழிபாடு என்பது தெய்வதுக்கு எப்படிக் கொடுப்பது என்பதா ? அல்லது தெய்வத்திடம் நமக்கு வேண்டுவதை எப்படி யாசிப்பது என்று அர்த்தமா ? தெய்வ பக்தி என்பது மனிதருக்கும் தெய்வத்துக்கும் இடையே நிகழும் வாணிப உடன்பாடா ?

யூதிஃபிரோ: வாணிப உடன்பாடு என்பது சற்று கடுமையான வாசகம் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: சொல்வீர் எனக்கு ! நாமளிக்கும் கொடைகளால் தெய்வங்கள் பெறும் நலங்களும் பலன்களும் என்ன ? தெய்வங்கள் நமக்களித்த கொடைகளைப் பற்றி நாம் யாவரும் அறிவோம். அவற்றை நாம் அடையா விட்டால் நமக்குப் பெருத்த இன்னல்கள் விளையும் ! அதே சமயம் நாமளிக்கும் கொடைகளைத் தெய்வங்கள் அடையா விட்டால் என்ன நடக்கும் ? அல்லது இப்படிச் சொல்லலாமா ? நாம் மட்டும் தெய்வங்களின் கொடைகளைப் பெற்றுக் கொண்டு, பதிலுக்கு நாம் எதுவும் செய்யா விட்டால் என்ன நடக்கும் ? நாமென்ன பரிசுகளைத் தெய்வங்களுக்குத் தர முடியும் ? நாம் அளிக்கும் கொடைகளையும், தியாகத்தையும், பரிசுகளையும் தெய்வங்கள் வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கின்றனவா ? வேறென்ன எதிர்பார்க்கும் தெய்வம் நம்மிடத்தில் ?

யூதிஃபிரோ: சாக்ரடிஸ் ! நமது கொடைகளைத் தெய்வங்கள் நாடுவதில்லை ! வேறென்ன ? நீவீர் என்ன நினைக்கிறீர் ? நான் யூகிப்பது இவைதான் : மனித நேயம், மனித மதிப்பு, நியாயம், நேர்மை, செய்நன்றி மறவாமை !

சாக்ரடிஸ்: நல்ல பதில் ! இவைதான் தெய்வ வழிபாட்டின் அம்சம் என்று சொல்வீரா ? இப்போது எனக்குச் சொல்வீர் : உமது தந்தையாரை நீவீர் சிறை செய்ததின் உள் நோக்கம் என்ன ?

யூதிஃபிரோ: சாக்ரடிஸ் ! உண்மையைத் தேடி அறிவது ! குற்றத்தைக் கண்டுபிடிப்பது ! குற்றவாளியைத் தண்டிப்பது ! நியாயம், நேர்மை, நீதி இவைதான் தெய்வப் பணிகள் எனக்கு !

சாக்ரடிஸ்: யூதி·பிரோ ! இன்று உம்முடன் உரையாடியதில் பற்பல புதிய கருத்துக்களைத் தெரிந்து கொண்டேன். சிறந்த உரையாடல் !

யூதிஃபிரோ: நன்றி சாக்ரடிஸ் ! நீவீர் எனது உள்ளத்தைத் தோண்டி நேர்மை நெறிகளைக் கொண்டு வந்தீர் ! நன்றி சாக்ரடிஸ் ! நான் செல்ல வேண்டும். மன்றம் துவங்கப் போகிறது ! மறுபடியும் சந்திப்போம் !

சாக்ரடிஸ்: நான் அந்த நாளுக்குக் காத்திருப்பேன். போய் வாரீர்.

(யூதிஃபிரோ நீதி மன்றத்துக்குள் நுழைகிறார்.)

***************************

சாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு அறிவுரை கூறும் ஒருவர் போரிலும் சமாதானத்திலும் எது உன்னதமானது அல்லது எது தீங்கு விளைவிப்பது என்று தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

சாக்ரடிஸ் சொல்கிறார் : ஏதென்ஸ் குடிமக்களுக்கு நேர்மையாக நடத்துவோருடன் சமாதானமாக வாழ நீ அறிவுரை கூறுவதற்கு முதலில் நியாய நெறிகள் எவை என்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

சாக்ரடிஸ் சொல்கிறார் : நாம் தவறுகள் செய்கிறோம், நமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்ததாக நாம் எண்ணிக் கொள்ளும் போது.

சாக்ரடிஸ் சொல்லிக் காட்டுகிறார் : ஒரு சிந்தனைத் தலைப்பின் (Subject) அடிப்படைகளை நிராகரிப்பவர் அந்தத் தலைப்பைப் பற்றி அறியாதவரே. அதனால் அந்தத் தலைப்பை அவர் பிறர் கற்றுக் கொள்ளச் சொல்லித் தர இயலாது.

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க அதிகாரி ·பிலிப்பின் மாளிகை.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சதிகாரர் ஃபிலிப், சைரஸ், படைக் காவலர் காப்டன். டிரிப்டோலிமஸ் (Triptolemus)

காட்சி அமைப்பு : சதிகாரன் ஃபிலிப்பின் மாளிகை. ஃபிலிப் (Philip) அவனுடைய தோழன் சைரஸ் (Cyrus) இருவரும் விரைவாக நுழைகிறார். சில நிமிடங்கள் கடந்து படைக் காவலர் காப்டன் வருகிறார். ஃபிலிப்ஸ் ஆங்கரமோடு தனக்கு அரங்கில் அணிவித்த மலர் மாலையை அற்று எறிகிறான்.

ஃபிலிப்: (மாலையைக் காலில் மிதித்து) என்ன பாராட்டு வேண்டி யுள்ளது ? கிழவர் சாக்ரடிஸ் தப்பி ஓடிவிட்டாரா ? எங்கு ஒளிந்து கொண்டுள்ளார் என்று கண்டுபிடிப்பதுதான் நமது முதல் வேலை ! அதுவரை எனக்குத் தூக்கம் வராது ! சைரஸ் ! அழைத்து வா படைக் காப்டனை !

சைரஸ்: அதோ காப்டன் ! இங்குதான் வருகிறார். (காப்டன் இராணுவ மரியாதை செய்கிறார்)

ஃபிலிப்: (காப்டனைப் பார்த்து) படைகளை அழைத்து வா ! ஆயுதங்களோடு வரட்டும் ! என் மாளிகையைச் சுற்றிக் காவல் தேவை ! சுற்றுக் காவல் இரவும் பகலும் தேவை ! ஒரு குழு சாக்ரடிஸைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் ! தப்பி ஓடி விட்டார் கிழவர் ! தண்டனைக்கு அஞ்சி சாக்ரடிஸ் எங்கோ தலைமறைவாய் இருக்கிறார். அவர் தாடியைப் பிடித்து இழுத்து வரவேண்டும் ! உயிரோடு கொண்டு வர வேண்டும் !

காப்டன்: சாக்ரடிஸ் அப்படி அஞ்சி ஒளியும் சிங்கமில்லை ·பிலிப் ! அவரது நண்பர்கள் பாதுகாப்பில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன் ! நான் போய்ப் பார்த்து வருகிறேன்.

(காப்டன் போகிறார்)

சைரஸ்: என் ஆலோசனை, சாக்ரடிஸ் உடனே கொல்லப் படவேண்டும் ! ஒன்று கொலை செய்வோம் கிழவரை அல்லது அவரது மனத்தை மாற்றுவோம் !

ஃபிலிப்: ஏதென்ஸ் குடிமக்கள் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ! ஒன்று நாம் அல்லது சாக்ரடிஸ் ! சாக்ரடிஸை அவர் தேர்ந்தெடுப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது. சைரஸ் ! சிந்தித்துத்தான் பேசுகிறாயா ? சாக்ரடிஸை நாம் கொல்லக் கூடாது ! அப்படிக் கொன்றால் அவர் உன்னதம் அடைவார் ! மகத்துவம் பெறுவார் ! தெய்வச் சிலையாகிப் பலரால் வணங்கப் படுவார் !

சைரஸ்: உண்மைதான் ! அந்தக் கோணத்தில் நான் சிந்திக்க வில்லை ! ஆம் அவரை நாம் கொலை செய்து ஏன் உத்தமராக ஆக்க வேண்டும் ?

ஃபிலிப்: சாக்ரடிஸைப் பிடித்து நாம் சட்டத்தின் விலங்குகளில் மாட்டி விடுவோம் ! ஏதென்ஸ் குடிமக்கள் சட்டத்துக்கு அடிபணிவர் ! நாமே சட்டத்தை கையாளக் கூடாது !

சைரஸ்: சட்டம் சாக்ரடிஸை விடுவித்தால் என்ன செய்வீர் ?

ஃபிலிப்: சட்டம் ஒரு கரடி ! அதன் கோரப் பிடியிலிருந்து சாக்ரடிஸ் தப்ப முடியாது.

சைரஸ்: பலர் தப்பாக எடைபோடுகிறார் ! சாக்ரடிஸ் ஒரு சிந்தனா மேதை ! அவரது மேதமை திறனாய்விலும் தர்க்கத்திலும் உள்ளது. அவர் சுயமாக வேறெதுவும் ஆக்க வில்லை ! அவரது வாய்ப் பேச்சுக்கள் யாவும் வாயுவாக மறைந்து விட்டன ! உருப்படியாக சாக்ரடிஸ் எதுவும் உண்டாக்க வில்லை ! அங்காடி வீதியின் வசீகர மனிதர் அவர் ! கனவு காணும் மனிதர் அவர் ! அவரது கனவுகளில் குடிமக்கள் மனதைப் பறி கொடுக்கிறார். கனவுகள் அரசாங்க நியதிகள் அல்ல ! கனவுகள் மாந்தரை வசப்படுத்தும் வசீகர மருந்துகள் ! சாக்ரடிஸ் தருவதெல்லாம் தனது கற்பனைக் கனவுகளே ! மந்திர மாத்திரைகள் !

ஃபிலிப்: சாக்ரடிஸைக் கொன்றாலும் அவரது கனவுகளைக் கொல்ல இயலுமா ?

சைரஸ்: இல்லை கொலை செய்வதால் கனவுகள் மறையா ! அதுதான் அழியாத உன்னதம் அளிக்கும் என்று நீவீர் முன்பு குறிப்பிட வில்லயா ? அதற்குப் பதிலாக அவர் கேட்பதையே நாமும் அளிப்போம். அவருக்குச் சத்தியத்தைக் கொடுப்போம் ! நியாயத்தை வழங்குவோம். சட்டமே அவரது தோலை உரிக்க விட்டு விடுவோம், விருப்பு வெறுப்பின்றி, தீய நோக்கமின்றி ! சட்டமே அவரை மென்று விழுங்கட்டும் !

(அப்போது டிரிப்டோலிமஸ் வில்லும் அம்புகளும் ஏந்திக் கொண்டு வருகிறான்)

டிரிப்டோலிமஸ்: (களைப்போடு) நான் கெட்ட சகுனப் பறவைகளைக் கொன்று சலிப்படைந்து விட்டேன் ! இந்த அற்ப வேலையில் கிடைக்கும் ஊதியம் சொற்பம் ! அடுத்து நான் என்னைக் கொன்று நிரந்தர நிம்மதி அடையலாம் !

சைரஸ்: வெறுப்படையாதே ! உன்னைச் சமாதானப் படுத்த உன் மதம் என்ன சொல்கிறது ?

டிரிப்டோலிமஸ்: மதம் ஒழுக்க நெறிகளையும் மெய்யாடுகளையும் கூற வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும். என்னை மட்டும் அது அமைதிப் படுத்துவது போதாது ! அது சரி. சாக்ரடிஸ் தண்டனை பற்றி உமது தீர்மானம் என்ன ?

சைரஸ்: எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் கண்டுபிடி ! இன்று இரவே சிறைப் படுத்து ! நாளைப் பகலில் குற்றத்தைச் சுமத்து ! எனக்குத் தெரியும் அவரைக் குற்றம் சாட்டத் தயாராக இருக்கும் மூன்று கோமான்களை ! அவரில் இருவர் இப்போது மன்றத்தில் படிகளில் தயாராக நின்று கொண்டிருக்கிறார் !

ஃபிலிப்: நமது வெறுப்பை அகற்றிச் சாக்ரடிஸை நேராகக் குற்றம் சாட்டலாமா ? நாம் இப்போது அதிகாரப் பீடத்தில் இருக்கிறோம். சாக்ரடிஸ் தொண்டர்கள் நம்மை அரசாங்கத்திலிருந்து நீக்கி விட முயன்று வருகிறார் ! அவரது தொண்டர்கள் நம்மைத் தள்ளுவதற்கு முன்பே நாம் சாக்ரடிஸை கொல்லலாமா ?

டிரிப்டோலிமஸ்: சாக்ரடிஸைக் கொல்வது நமது தோலைக் காப்பாற்றாது ! சாக்ரடிஸ் மனித ஆத்மாக்களைக் கொல்கிறார் ! தனது இதயத்திற் குள்ளே ஓர் அசுரன் (Demon) இருப்பதாகவும், அது அவருக்கு ஆலோசனை கூறுவதாகவும் கூறுகிறார். அதை நான் நம்புகிறேன் !

***************************

சாக்ரடிஸ் சொல்கிறார் : “நாடாளுமன்றக் கோமாளிகளை விடச் சிறிது நல்லவனாக மட்டும் இருக்க நீ உன்னைத் தயார் செய்வது ஒரு வெட்கக் கேடுதான் ! நீ சம்பந்தப்பட்ட முறையில் உன்னால் இயன்ற அளவு உயர்வு அடைவதையே நீ விரும்ப வேண்டும்.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : “ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் சுயநிலை விருத்தி (Self-Cultivation) என்பது தேவைப்படுகிறது.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : “நாம் சுயநிலை விருத்தி அடையாத போதும், சுயநிலை விருத்தி அடைந்து விட்டதாக அடிக்கடி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : “சுயநிலை விருத்தி என்பது நம்மை நாமே உன்னதப் பிறவி ஆக்குவது; நாம் அடைத்திருப்பதைச் சீர்மைப் படுத்துவதில்லை.”

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க அதிகாரி ஃபிலிப்பின் மாளிகை.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சதிகாரர் ஃபிலிப், சைரஸ், படைக் காவலர் காப்டன். டிரிப்டோலிமஸ் (Triptolemus)

காட்சி அமைப்பு : சதிகாரன் ·பிலிப்பின் மாளிகை. ·பிலிப் (Philip) அவனுடைய தோழன் சைரஸ் (Cyrus) இருவரும் விரைவாக நுழைகிறார். சில நிமிடங்கள் கடந்து படைக் காவலர் காப்டன் வருகிறார். ·பிலிப்ஸ் ஆங்கரமோடு தனக்கு அரங்கில் அணிவித்த மலர் மாலையை அற்று எறிகிறான். பின்னால் லைகானும் மெலிடசும் (Lycon & Meletus) அங்கே வருகிறார்.

 

டிரிப்டோலிமஸ்: சாக்ரடிஸைக் கொல்வது நமது தோலைக் காப்பாற்றாது ! சாக்ரடிஸ் மனித ஆத்மாக்களைக் கொல்கிறார் ! தனது இதயத்திற் குள்ளே ஓர் அசுரன் (Demon) இருப்பதாகவும், அது அவருக்கு ஆலோசனை கூறுவதாகவும் கூறுகிறார். அதை நான் நம்புகிறேன் ! அந்த அசுரனின் பெயரைக் கூடத் தெரியும் எனக்கு. அதன் பெயர் “நக்கல் அசுரன்” (Demon of Mockery) ! சாக்ரடிஸ் ஒரு நக்கல் பேர்வழி ! அந்தப் போக்கு சாக்ரடிஸைக் குருடராக்கி விட்டது ! இந்த மண்ணிலே ஆன்மீகப் பெருமை இருக்குமே யானால் விதிக்கும் கடவுளுக்கும் எதிரி அந்த முதிய மனிதன் சாக்ரடிஸ்தான் ! கிழவரின் வெளிப்புறப் பணிவு, பசப்பு, பாசாங்கு, சூது, தன் திறமை மேல் தான் கொண்ட தற்பெருமை அனைத்தும் அவரைத் தனித்துக் காட்டும் முரண்பாடுகள் ! நாம் மதிக்கும் நமது கடவுளைப் புறக்கணிப்பவர் சாக்ரடிஸ் ! நமது கடவுளை ஒழித்தால் நன்நெறிகள் சிதைந்து போகும் ! ஏதென்ஸில் நம் செல்வாக்கு அடிப்படையைச் சீர்கேடாக்கும் ! சைரஸ் குறிப்பிட்டுக் காட்டுவது உண்மைதான். கிழவர் சாக்ரடிஸைக் கைது செய்ய வேண்டும் ! அவர் மீது பழிசுமத்த வேண்டும் ! குற்றவாளியாக்க வேண்டும் ! பிறகு அவரைத் தண்டிக்க வேண்டும் !

ஃபிலிப்: ஏதென்ஸ் நீதி மன்றம் அவரைக் குற்றம் சாட்டி ஏற்ற தண்டனை கொடுக்குமா ?

டிரிப்டோலிமஸ்: ஏன் கொடுக்காது ? ஏதென்ஸ் மன்றம் செல்வந்தக் கோமான்கள் இருக்கும் பேரவை ! அடிமைகளை வைத்து வேலை வாங்கும் வேளாண்மைக் கோமான்கள் அவர்கள் ! அவர்கள் கூடித் தீர்ப்பளிக்கும் மனிதர் யார் ? சாக்ரடிஸ் ! ஏழ்மையைக் குறித்தும் பொதுச் சொத்துப் பங்கீட்டைப் பற்றியும் ஏதென்ஸில் உபதேசிப்பவர் !

ஃபிலிப்: பொதுவில் இருக்கும் எல்லாமே அவரது பேச்சில் வரும் ! பெண் விடுதலையைப் பற்றிக் கூட மனிதர் பேசி வருகிறார் !

சைரஸ்: ஆனால் மாதரைப் பற்றி மட்டும் சொல்லி விடாதே ! அவருக்கு ஆதரவாய் நீதி தவறிப் போய்த் தப்பிக் கொள்வார் கிழவர் ! நான் அவரைச் சிறையில் தள்ள சரியான ஆட்களைத் தயாராக வைத்துள்ளேன். சாக்ரடிஸ் நிரந்தரமாக ஒழியப் போகிறார் !

ஃபிலிப்: அப்படியானால் ஒரு சதித் திட்டம் மறைவாக உருவாகி வருகிறதா ?

சைரஸ்: (மெதுவான குரலில்) அதைப் பற்றி யாரும் மூச்சு விடக் கூடாது ! மறைவில் நடப்ப தெல்லாம் திரையில் தெரியக் கூடாது ! நான் பின்னின்று மறைமுகச் சதி வேலைகளை நடத்தி வருகிறேன் ! நான் அந்தப் பெருமையை ஏற்றுக் கொள்கிறேன்: சாக்ரடிஸ் வரலாறுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் புனிதப் பணி என்னுடையது !

ஃபிலிப்: இப்படி என்னையும் இந்தச் சதியில் புகுத்த நினைக்காதீர். நான் எச்சரிக்கை விடுகிறேன். என் மனச்சாட்சிக்கு எதிராக நான் எதுவும் செய்ய மாட்டேன் ! என் தீர்மானத்தைக் கையாள்வது நான் ஒருவனே ! உங்கள் சங்கை என் வாயில் வைத்து நான் ஊத மாட்டேன் ! ஒரு மனிதனின் வரலாற்றுக் கோபுரம் போதிய உயரம் இல்லாதது ! அது சிறியது ! அதன் மேல் நின்று ஒருவர் உலகை நோக்க இயலாது !

டிரிப்டோலிமஸ்: நாமெல்லாம் மாஜிஸ்டிரேட்டுகள் ! நாம் எதற்கு ஏதென்ஸ் வரலற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் ? நல்லதோ கெட்டதோ, நன்மையோ, தீமையோ, சரியோ தப்போ நாம் ஓர் தீர்மானத்தை முடிவு செய்ய வேண்டும் ! ஒன்றுமே செய்யா திருப்பினும் அதுவும் அரசாங்க வேலைதான் !

ஃபிலிப்: சாக்ரடிஸ் சொல்லிக் கொண்டே இருக்கிறார் : ஏதென்ஸின் சட்ட திட்ட ஏற்பாடுகள் புனிதமானவை என்று ! அவரை எப்படிக் கலகக்காரன், நம் கடவுளை வழிபடாதவன் என்று இகழ்ந்து கூற முடியும் ? அவரைத் தண்டிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று தெரியுது எனக்கு ! ஆனால் நீவீர் செய்ய முயல்வது எனக்கு நீதியாகத் தோன்ற வில்லை ! சாக்ரடிஸ் செய்தது தவறாகத் தெரிந்தாலும் சட்டப்படி எப்படிக் குற்றவாளியாகச் சுட்டிக் காட்டுவது ?

டிரிப்டோலிமஸ்: யாரைப் பற்றி பத்து நிமிடங்கள் பேசத் தகுதி யுள்ளதோ அவரைக் கலகக்காரன், கடவுளை நம்பாதவன் என்று சட்டத்தைக் காட்டிக் குற்றம் சாட்டுவது எளிதானது !

ஃபிலிப்: ஒன்று அறிவோடு பேசு அல்லது உன் வாயைத் திறக்காதே ! நக்கல் அசுரன் என்று சாக்ரடிஸை நீ குறிப்பிட்டது கோமாளித் தனமாக உள்ளது. இதோ லைகானும் மெலிடசும் (Lycon & Meletus) இங்கே வருகிறார்.

(லைகானும் மெலிடசும் அங்கே வருகிறார்.)

சைரஸ்: தோழர்களே ! இவர் லைகான் ! அவர் மெலிடஸ் ! இருவருக்கும் உங்களைப் பற்றித் தெரியும். இருவரும் சாக்ரடிஸ் மீது வழக்குப் பதிந்தவர் என்பதைத் தெரிந்து கொள்வீர்.

லைகான்: என் குற்றச் சாட்டு : சாக்ரடிஸ் கலகக்காரர் ! நமது கடவுளை அவமதிப்பவர் !

மெலிடஸ்: மேலும் முக்கியமாக ஏதென்ஸ் வாலிபர் மனதைக் கெடுத்தவர் !

டிரிப்டோலிமஸ்: சட்டப்படிக் குற்றம் சாட்ட இந்தக் காரணங்கள் போதுமா ? இதோ ·பிலிப் ! இவர்தான் சாக்ரடிசுக்கு சரியான எதிரி ! இவரது ஆதாரங்களையும் கேட்டுக் கொள்வீர்.

ஃபிலிப்: தோழர்களே ! தேவ தூதர் (Oracles) சாக்ரடிஸை ஏன் உலகத்தின் உன்னத அறிவாளர் என்று பேரவையில் அன்று தீர்ப்புக் கூறினார் ?

லைகான்: இதெல்லாம் கடவுளுக்கு எதிராக அளிக்கும் ஒரு லஞ்சம்தான் ! தேவ தூதர் யாவரும் மதக் குருக்கள்தான் (Priests) ! செல்வீகக் கோமான்கள் (Aritocrats) உங்களுக்குப் பரம்பரை எதிரிகள் ! கோமான்கள் மதக் குருக்களுக்கு லஞ்சம் தந்து சாக்ரடிஸை உயர்ந்த அறிவாளி என்று சொல்ல வைத்து உமக்குக் கோபம் உண்டாகத் தூண்டியுள்ளார் !

சைரஸ்: அதில் அவர் வெற்றியும் பெற்றார் ! சாக்ரடிஸ் உன்னத அறிவாளியா ? “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று ஊரெல்லாம் கூறி வருகிறார் ! மற்றவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார் ! தானாக அவர் எதுவும் சொல்வது மில்லை ! எழுதுவது மில்லை !

லைகான்: சாக்ரடிஸை சீக்கிரம் நாம் தொலைத்துக் கட்டாவிட்டால் மேலும் கோமான்கள் வெற்றி பெறுவார் ! நம்மை மூடர் என்று காட்டும் சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழக் கூடாது !

***************************

சாக்ரடிஸ் சொல்கிறார் : நம்மை மேலாகச் செம்மைப் படுத்திக் கொள்ள முடியாது நாம் யார், நாமென்ன செய்ய இயலும் என்று நமது சுயரூபம் நமக்குத் தெரியும்வரை.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : நம் சுயரூபம் அல்லது நமது ஆத்மா என்பது சுயரூபம் பயன்படுத்திக் கொள்ளும் நமது உடம்பில்லை !

சாக்ரடிஸ் சொல்கிறார் : உட்பரிமாற்றம் (Interchange) என்பது ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவோடு சொற்கள் மூலம் தொடர்பு கொள்வது.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : சுயக் கட்டுப்பாடுடன் இருப்பது என்றால் ஒருவர் தானே தன்னைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொள்வது.”

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் அரசாங்க அதிகாரி ·பிலிப்பின் மாளிகை.

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் : சதிகாரர் ·பிலிப், சைரஸ், படைக் காவலர் காப்டன். டிரிப்டோலிமஸ் (Triptolemus)

காட்சி அமைப்பு : சதிகாரன் ஃபிலிப்பின் மாளிகை. ஃபிலிப் (Philip) அவனுடைய தோழன் சைரஸ் (Cyrus) இருவரும் விரைவாக நுழைகிறார். சில நிமிடங்கள் கடந்து படைக் காவலர் காப்டன் வருகிறார். ·பிலிப்ஸ் ஆங்கரமோடு தனக்கு அரங்கில் அணிவித்த மலர் மாலையை அற்று எறிகிறான். பின்னால் லைகானும் மெலிடசும் (Lycon & Meletus) அங்கே வருகிறார். அடுத்து சாக்ரடிஸின் பழைய நண்பன் ஆனிடஸ் (Anytus) அவருடன் சேர்ந்து கொள்கிறான்.

லைகான்: சாக்ரடிஸை சீக்கிரம் நாம் தொலைத்துக் கட்டாவிட்டால் மேலும் கோமான்கள் வெற்றி பெறுவார் ! நம்மை மூடர் என்று காட்டும் அறிவாளி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழக் கூடாது !

டிரிப்டோலிமஸ்: சாக்ரடிஸ் நம்மை மூடர் என்று இகழ்ந்து சொல்லிய தில்லை ! தன்னை அறிவாளி என்று புகழ்த்திக் கொண்டது மில்லை ! பழிசுமத்துவது மெய்யாக இருக்க வேண்டும்.

லைகான்: அவரைக் கண்டனம் செய்து நான் குற்றம் சுமத்துவேன். குற்றக் கூண்டில் ஏறிச் சாக்ரடிஸ் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். கிரேக்க மலைகளின் எல்லா கெம்லாக் விஷமும் (Hemlock Poison) கூட சாக்ரடிஸ் வாயை மூட முடியாது !

சைரஸ்: அதே சமயத்தில் நாம் சாக்ரடிஸைக் கொன்று உயிர்த் தியாகியாக (Martyr) ஆக்குவது மாபெரும் ஆபத்து !

ஃபிலிப்: முதலில் கிழவரைக் கண்டுபிடித்தாக வேண்டும் நாம் ! மனிதன் செத்த பிறகு எப்படி நினைக்கப் பட்டால் நமகென்ன ? பித்தர் சாக்ரடிஸ் செத்தபின் உத்தமரானால் என்ன ? அவரது மூடாத வாயை மூடி விடுவோம் அல்லவா ? அது போதும் நமக்கு !

சைரஸ்: உலக அறிவாளியாய் அறிவிக்கப் பட்ட ஏதென்ஸ் ஞானியை ஊமையாக்கி விட்டோம் என்று வரலாறு நம்மைக் குறிப்பிட வேண்டும்.

ஃபிலிப்: கனவு உலகில் சஞ்சாரம் செய்த பித்த ஞானிகள் இதுவரைத் தம்முயிரை இழந்துதான் போயிருக்கிறார் ! சில கனவு ஞானிகள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பார் ! சில கனவு ஞானிகள் நல்வாழ்க்கையில் நம்பிக்கையை இழப்பார் ! முடிவில் அவர் யாரும் தமது படுக்கையில் மடிவர் ! பிறகு அவர் விட்டுச் சென்ற கடனை யெல்லாம் நாம்தான் அடைப்போம் !

சைரஸ்: ஒரு மரணமா அல்லது பத்தாயிரம் மரணங்களா என்று தேர்ந்தெடுக்க வேண்டியது நம் பொறுப்பு ! சாக்ரடிஸ் உயிரோடு இருந்தால் உள்நாட்டுப் போர் ஒரு காலத்தில் வரும் ! அதில் சாவோர் ஆயிரக் கணக்கில் இருப்பார் ! சாக்ரடிஸ் மட்டும் செத்தால் அந்த ஆயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய பெருமை நமக்குச் சேரும் !

மெலிடஸ்: நமது தெய்வங்களை ஏற்றுக் கொள்ளாத சாக்ரடிஸை நான் நாட்டுத் துரோகியாகக் கருதுகிறேன். நாட்டுத் துரோகியை நாட்டிலே வாழவிடக் கூடாது ! சாக்ரடிஸைக் காப்பாற்ற அவரோடு ஒட்டியுள்ள நபர்கள் யார் தெரியுமா ? கிரிடோ, அல்சிபியாடஸ், ஆகாத்தான், ஃபயிதோ, வெல்தி போன்றவர் ! சாக்ரடிஸின் தீவிரச் சீடர்கள் சாமர்த்தியசாலிகள் ! அவரில் பலர் இராணுவப் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். சாக்ரடிஸே போர்த் தளபதியாக இருந்தவர். சாக்ரடிஸைப் பிடித்து வர முனையும் போது அந்த படை வீரரோடு நாம் போரிட வேண்டும் ! அதில் சிரமங்கள் உள்ளன !

சைரஸ்: (மெதுவான குரலில்) சாக்ரடிஸ் கூட்டத்தை இரகசியமாய்த் தாக்கி அந்தக் கிழவரை உயிரோடு பிடித்துக் கொண்டுவர வேண்டும் ! சட்ட மன்றத்தில் ஏற்றாமல் நாமே அவரைக் கொன்று விட்டால் என்ன ?

மெலிடஸ்: பிறகு நாம் ஏதென்ஸ் மன்றத்தில் கொலைகாரராய் நிற்க வேண்டியதிருக்கும் ! அது சட்டத் துரோகம் ! சட்டத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் நாம் தலை வணங்க வேண்டும். நீதிக்கும் தண்டனைக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாமே சாக்ரடிஸை நேராகத் தண்டிப்பது காட்டுமிராண்டித்தனம் !

ஃபிலிப்: சட்டத்தைப் புறக்கணித்து நாமே துணிச்சலோடு செய்வது வெற்றி தரும். சட்டத்தின் மூலம் போய் சாக்ரடிஸ் தண்டனை பெறாது தப்பிக் கொண்டால் என்ன செய்வது ? சட்ட மன்றம் விடுவித்த நிரபராதியை நாம் கொல்வது நியாமா ? நேர்மையா ? நீதியா ?

சைரஸ்: இந்த விதண்டா வாதம் எதற்கும் உதவாது ! முதலில் சாக்ரடிஸை இன்றிரவே பிடிக்க வேண்டும். அதற்கோர் உபாயத்தைச் சொல்வீர் ! எங்கே இருப்பார் சாக்ரடிஸ் ?

ஆனிடஸ்: இன்றிரவு சாக்ரடிஸ் எங்கிருப்பார் என்பது தெரியும் எனக்கு ! ஆகாத்தான் (Agathon) வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

சைரஸ்: நாடக நடிகர் ஆகாத்தான் இல்லத்திலா இருக்கிறார் ?

ஆனிடஸ்: ஆமாம் இன்றிரவு தூங்கும் போது கிழவரைச் சுலமாகச் சிறைப்படுத்தி விடலாம் ! நள்ளிரவுக்குப் பிறகுதான் வீட்டுக்குக் கதவைத் தட்ட வேண்டும். என்னுடன் உங்களில் சிலர் ஆயுதமோடு வர வேண்டும். மறாக்காதீர், சாக்ரடிஸைச் சுற்றிலும் அவரது சீடர்கள் காவல் செய்வார். அவரை எல்லாம் தடுக்க என்னுடன் பத்துப் பதினைந்து பேர் வரவேண்டும்.

சைரஸ்: ஆட்களுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன். ஆயுதமோடு வருவார்கள். இன்றிரவு சாக்ரடிஸைப் பிடித்து உயிரோடு கொண்டு வருவது என் பொறுப்பு. ஆகாத்தான் வீட்டைக் காட்ட வேண்டியது ஆனிடஸ் உன் பொறுப்பு ! நள்ளிரவில் இந்த வேலையை இன்று நாம் முடித்து விடுவோம். இது நிச்சயம். சாக்ரடிஸின் முடிவுக் காலம் நெருங்கி விட்டது !

***************************

சாக்ரடிஸ் சொல்கிறார் : “இருவரது நட்பில் நீண்ட முன்னேற்றம் காணப்படும் போது ஒருவர் காதல் அடுத்த ஓர் ஆத்மாவோடு பிணைத்துக் கொள்வதாய் எண்ணப்படும்.”

சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு நகரத்தை ஆளுமை செய்ய விரும்புவோன் ஒருவன், அதன் குடிமக்களுக்கு முதலில் நேர்மை நெறியைக் (Virtue) காட்ட வேண்டும்.”

சாக்ரடிஸ் அல்சிபியாடஸிடம் சொல்கிறார் : ஏதென்ஸ் மாந்தர் உன்னை ஓர் லஞ்ச ஊழலனாய் அழகீனப் படுத்தாதுவரை உன் மீது என் நட்பு நீடித்திருக்கும்.”

பிளாடோவின் உரையாடல்கள்.

******************************

Socrates & His Friends in Agathon’s Home

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படு கின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். பொழுது போக்க ஒரு வாத்திய குழுவினரை ஏற்பாடு செய்துள்ளார் ஆகாத்தான்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். உரை நிகழ்த்தி ஒருரை ஒருவர் பாராட்டிப் பூச்சரத்தைத் தலையில் வேடிக்கையாக அணிவிக்கிறார்.

ஒரு தெருப் பாடகனும் அவனது சகாக்களும் ஓரத்தில் நின்று சோக இசையில் புல்லாங்குழல் வாத்தியம் வாசிக்கிறார்.

பாடகச் சிறுவன்: (பாடுகிறான்)

இதயம் எழுகிறது பொங்கி ! மேலே ஏறுகிறேன் நான்

குன்றில் ஓங்கி வளர்ந்த சிகரத்தின் உச்சிக்கு !

பச்சைப் புல் கம்பளத்தில் படுக்க வேண்டும் நான் !

எட்டித் தொடும்படி இருக்குது வானத்தின் கூரை !

காற்றடித்து முகில் கூட்டம் விரைந் தோடுமே !

எதிரே கரை ஒட்டிய கடல் அலைகள் ஆடுமே !

தெளிந்த வெள்ளம் மெதுவாய்க் கரையைத் தழுவுமே !

காற்று அமணமாய் அடிக்கும் என் ஆத்மாவை ஊடுருவி

காலம் நில்லாமல் ஓடுது ! நதியில் நீர் துள்ளி ஓடுது !

வாழ்வும் நகைப்பும் நகர்ந்து மறைவது போல்

காதல் இங்கே என்னை விட்டுவிட்டுப் போகுது !

 

(ஆகாத்தான் கை அசைக்க வாத்தியக் குழுவினர் இசைப் பாடலை நிறுத்தி வெளியேறுகிறார்)

Agathon’s Home

சாக்ரடிஸ்: இசைக் கானத்தின் உன்னதம் நம் இதய சொர்க்கத்தின் எதிரொலிப்பை எழுப்பிடும் ! ஆனால் வாத்தியக் குழு ஏனின்று சோக கானத்தைப் பாடி விட்டுப் போனது ?

ஆகாத்தான்: இனிய கீதத்தைப் பாடத்தான் ஏற்பாடு செய்தேன். சிறுவன் சோக கீதத்தை பாடியது எனக்கும் கோபத்தை உண்டாக்கியது. பாட்டு முடிந்ததும் தொடராமல் நிறுத்தி வெளியே அனுப்பி விட்டேன். குடியை நிறுத்திக் கொள்வோம் ! நமது தலைகள் நேராக நிற்கவேண்டும். கண்கள் தெளிவாகக் காண வேண்டும். நிறையக் குடித்தவர் விழுந்து தூங்கட்டும் ! குறையக் குடித்தவர் சாக்ரடிஸ் பக்கத்தில் கரங்கோர்த்துக் கவசமாய் நிற்க வேண்டும். கழுகுக் கூட்டம் நம்மிடத்தைக் காண முடியாது ! கண்டுவிட்டால் போராடவும் நாம் தயாராக வேண்டும்.

ஆனிடஸ்: குடிப்பீர் தோழரே ! இரவின் குளிரணைப்பில் நம்மை நாமே சூடாக்கிக் கொள்ள வேண்டும். நள்ளிரவில் இங்கு யாரும் நம்மைத் தாக்கப் போவதில்லை. பாதுகாப்பான உமது மாளிகையில் தான் நாம் யாவரும் பதுங்கி இருக்கிறோம். இரவின் மறைவில் காதல் உறவைப் பற்றிப் பேசுவோம். கன்னியர் உடலைத் தீண்டுவது பற்றி பேசுவோம். மதுபானம் நம்மை மயக்கட்டும் ! மங்கையர் விழிகள் நம்மை எரிக்கட்டும் !

சாக்ரடிஸ்: ஆனிடஸ் ! நாமிங்கு ஒளிந்திருப்பது காதல் புரிவதற்கா ? மதுமானம் குடிப்பதற்கா ? இல்லை, மங்கையர் விழிச்சுடர் நம்மை எரிப்பதற்கா ?

ஆகாத்தான் : நாமிங்கு மறைந்திருப்பது உலக ஞானியைக் காப்பாற்றுவதற்கு ! அவர் நீண்ட ஆயுள் பெற்று நெடுங்காலம் ஞானமழை பொழிவதற்கு !

கிரிடோ: ஆனிடஸ் ! குடித்துவிட்டு நீ உளறுகிறாய் ! நாம் தூங்கிப் போய்விடக் கூடாது. நம் எதிரிகள் விழித்திருக்கிறார் ! குடித்துவிட்டு மயங்கிக் கிடக்கக் கூடாது. சதிகாரக் கூட்டம் சாக்ரடிஸ் விதியை மாற்றக் காத்துக் கொண்டிருக்கிறது ! இந்த இருட்டு வேளையில் சதிகாரர் எந்த வீட்டுக் கூரையைப் பிளக்கப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. நமது முதுகுக்குப் பின்னால் எந்தக் கத்தி குத்திடக் காத்துள்ளதோ நாம் அறியோம் !

ஆகாத்தான்: அமைதி ! ஏதோ ஓர் அரவம் கேட்கிறது ! காது கொடுத்துக் கேட்க வேண்டும் !

கிரிடோ: யாரோ நமது தோட்டத்தில் நடமாடும் பாதச் சத்தம் கேட்கிறது.

ஆனிடஸ்: வேடிக்கையாகத் தெரிகிறது ! இரவுப் பிராணிகள் உலவுவது மனிதர் நடப்பது போல் கேட்கிறது உனக்கு ! இந்த நடுநிசியில் யார் நம்மைத் தேடி வருகிறார் ?

கிரிடோ: இந்த அமைதி வேளையில் ஏதென்ஸ் மனித நேயத்தை நாடுவோம் ! சதிக்கூட்டம் ஒழியாது ! இன்றில்லா விட்டாலும் நாளை நம்மைத் தொடர்ந்து வரலாம் ! மனித நேயமே தெய்வ நேயம் ! அன்பே தெய்வம் என்பது மெய்தானே !

சாக்ரடிஸ்: உண்மையாகச் சொன்னால் அன்புக் கடவுள் இல்லை !

கிரிடோ: சாக்ரடிஸ் ! என்ன உரை இது ? அன்பே கடவுள் என்பது உண்மை அல்லவா ?

சாக்ரடிஸ்: தெய்வங்கள் பட்டினியாகக் கிடக்குமா ? தெய்வங்களுக்குப் பசி எடுக்குமா ?

கிரிடோ: இல்லை !

சாக்ரடிஸ்: தெய்வங்களுக்குத் தாகம் உண்டாகுமா ? தெய்வங்கள் தண்ணீர் குடிக்குமா ?

கிரிடோ: இல்லை,

சாக்ரடிஸ்: தெய்வங்களுக்குச் சோகம் உண்டாகுமா ? துக்கம் ஏற்படுமா ?

கிரிடோ: நிச்சயம் இல்லை !

சாக்ரடிஸ்: தெய்வங்களுக்குக் களைப்பு ஏற்படுமா ? தெய்வங்கள் இளைப்பாறுமா ?

கிரிடோ: இல்லை ! நீங்கள் குறிப்பிட்டவை அத்தனையும் மனித இன்னல்கள் !

சாக்ரடிஸ்: அப்படியானால் மெய்யாகப் பசி, தாகம், சோகம், துக்கம், மனச்சோர்வு போன்ற எதுவும் தெய்வங்களுக்கு உண்டாகாது. அதுபோலவே விருப்பும், வெறுப்பும், அன்பும், பகையும் ஒற்றுமையும், வேற்றுமையும் தெய்வங்களுக்கு இல்லை !

ஆகாத்தான்: அழிவில்லாத கடவுள் அழிந்து போகும் மானிட இன்னல்களைச் சுவைப்பதில்லை.

சாக்ரடிஸ்: ஆனால் அன்புக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு.

  • பாய்தோ: அப்படிச் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: ஆனாலும் அதுதான் உண்மை ·பாய்தோ ! அன்பின் வேதனைகள் எண்ணில் அடங்கா ! பசிக்கும், தாகத்துக்கும், நமது இச்சைகளுக்கும் தேவைகளுக்கும் எல்லை யில்லை ! முடிவில்லை !

ஆகாத்தான்: சாக்ரடிஸ் ! நீங்கள் குறிப்பிடுவது அற்பத்தனக் காதலரைப் பற்றி ! உன்னத அன்பான மனித நேயத்தைப் பற்றி யில்லை ! அதுதான் தெய்வீக அன்பு !

சாக்ரடிஸ்: நீ சொல்வது ஆத்மீக நேயம் ! ஆத்மா என்பது கடவுள் மனித இனத்துக்கு அளித்த உயிரொளி ! அழகத்துவத்தைத் (Beauty) தேடிச் செல் ! அப்போது நீ அன்புப் பணியைச் செய்வாய் ! அன்பின் முக்கிய வினை ஆக்கம் ! நமது கடமை வானுலகின் மெய்நெறித் திட்டங்களை நாம் பூமியில் நடமிடும் போது நிறைவேற்றுவது ! நமது பிள்ளைகள் நம் உடலின் முடிவின்மையைத் துவக்குகிறார் ! ஆனால் சிந்தனைகளில் நமது ஆத்மா ஓர் அச்சமற்ற முடிவின்மையை விளைவு செய்ய வேண்டும். ஆதலால் மனித நேயமே பரம்பரையாய்ப் படைப்புக் கருவியாகக் கையாளப் படுகிறது.

(அப்போது கதவு தட்டும் அரவம் கேட்கவே அனைவரும் எழுகிறார். சாக்ரடிஸைத் தவிர மற்ற யாவரும் தம் ஆயுதங்களை ஏந்துகிறார். சிலர் சாக்ரடிஸைக் கடத்தி வேறு மறைவிடத்துக்குச் செல்கிறார்)

**************************

“மரணமே மனித இனத்தின் அதி உன்னத ஆசீர்வாதம்.”

“நட்பில் தடம் வைக்கும் போது மெதுவாக நடந்து செல் ! நண்பராய் ஆகிய பிறகு உறுதியாக நட்பைத் தொடர்ந்து நிலைத்திரு !”

“மனிதனை ஈர்க்கும் அழகுத்துவம் (Beauty) தன்னினத்தை மகிழ்வோடு பெருக்கும் ஒரு தூண்டில்.”

“பிறருடைய எழுத்துப் படைப்புகளைப் படித்து உன்னைச் செம்மைப் படுத்த நேரத்தைச் செலவழி. அதனால் மற்றவர் மெய்வருந்திக் கற்றவற்றை நீ எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.”

சாக்ரெடிஸ்

******************************

காட்சி -2 பாகம் -9

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படு கின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். பொழுது போக்க ஒரு வாத்திய குழுவினரை ஏற்பாடு செய்துள்ளார் ஆகாத்தான்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·ஃபாய்தோ (Phaedo) ஆகியோர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். உரை நிகழ்த்தி ஒருரை ஒருவர் பாராட்டிப் பூச்சரத்தைத் தலையில் வேடிக்கையாக அணிவிக்கிறார்.

கிரிடோ: இந்த நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டுவது கேட்கிறது. எல்லா விளக்குகளையும் அணைத்து விடுங்கள் ! தோட்டத்தில் நடமாடும் உருவங்கள் தெரிகின்றன.

(வீட்டு விளக்குகள் அணைக்கப் படுகின்றன. ஆகாத்தான் கதவைத் திறக்கப் போக்கிறார்.)

கிரிடோ: சாக்ரடிஸை ஒழித்து வைப்போம் ! கையில் ஆயுதம் எடுத்துச் செல் ஆகாத்தான் !

சாக்ரடிஸ்: நான் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை ! போருக்குத்தான் ஆயுதங்கள் தேவை ! இங்கென்ன யுத்தமா நடக்கிறது ? ஆயினும் நம்மை ஆயுதங்கள் பாதுகாக்க மாட்டா !

கிரிடோ: ஆனிடஸ் ! ஜன்னல் வழியே எட்டிப் பார் ! தோட்டத்தில் உலவுவது யாரென்று ஒளிந்து பார் ! சாக்ரடிஸை சைப்பிரஸ் பூங்காவில் மறைத்து வைப்போம் !

ஆனிடஸ்: ஜன்னல் வழியே பார்த்தால் ஒரே ஒர் உருவம் மங்கலாகத் தெரிகிறது. ஆயுதம் கையில் இருப்பது தற்காப்புக்கு !

சாக்ரடிஸ்: பகைவருக்கு நாம் அஞ்ச வேண்டுமா ? பகைவர் நமக்கல்லவா அஞ்சுகிறார் !

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உமக்காக அவருக்கு அஞ்சுகிறோம் !

சாக்ரடிஸ்: எனக்கு சிறிதும் அச்சமில்லை ! என்னைப் பிடித்து என்னை மாற்றப் போகிறாரா ?

ஆனிடஸ்: உம்மை இந்த உலகிலிருந்து மேல் உலகுக்கு அனுப்பப் போகிறார் சாக்ரடிஸ் ! அதை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

ஆகாத்தான்: (கதவை திறக்கிறார். ஆச்சரியம் அடைகிறார்) வேறு யாருமில்லை ! நம் தோழர் அல்சிபியாடஸ்தான் ! வா உள்ளே வா ! பகைவர் என்று நாங்கள் யாவரும் பயந்து போய் விட்டோம் ! இந்த நட்ட நடுநிசியில் எந்த துட்டன் வருவான் இங்கே ?

சாக்ரடிஸ்: பகைவரில்லை என்று நான் ஒருவன்தான் நம்பினேன் ! பகைவர் நமக்கில்லை ! பயமும் நமக்கில்லை !

அல்சிபயாடஸ்: வணக்கம் சாக்ரடிஸ் ! பகைவர் உம்மைச் சிறைப் படுத்தத் தேடுகிறார் ! நான் என் கண்ணாலே அவரைப் பார்த்தேன் ! இங்கும் தேடிக் கொண்டு வரலாம் ! நீங்கள் முகம் காட்டாது மறைந்திருப்பதே நல்லது !

(ஆகாத்தான் ஒயினைக் கிண்ணத்தில் ஊற்றி அல்சிபிடசுக்குத் தருகிறான்)

ஆகாத்தான்: முதலில் உன் தாகத்தைத் தணித்துக் கொள் அல்சிபயாடஸ் !

அல்சிபயாடஸ்: என் தாகம் தீராது ஆகாத்தான் ! படைவீரர் சாக்ரடிஸைத் தேடிக் கொண்டிருக்கிறார் ! இதுவே சாக்ரடிசுடன் நான் அருந்தும் கடைசி மதுபானம் ! (கடகடவென ஒரே மூச்சில் குடிக்கிறான் ஒயினை)

ஆனிடஸ்: கடைசி மதுபானக் குடிப்பு என்று ஏன் சொல்கிறாய் ?

அல்சிபயாடஸ்: (மெதுவாகக் கவலையோடு) வரும் வழியில் தேடும் படையினரைக் கண்டேன் ! அவரை சந்தித்துப் பேசினேன் ! சாக்ரடிஸ் எப்படி இருப்பார் என்று என்னிடம் கேட்டார் ! ஆகாத்தான் வீட்டு முகவரியைக் கேட்டார் என்னிடம் ! பாதுகாக்க வந்த உமது பரம நண்பர்கள் ‘பை பை’ சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது சாக்ரடிஸ் ! அவரிடமிருந்து தப்புவது கடினம் ! படையினர் நாலாப் பக்கமும் உளவி வருகிறார் ! அவரது ஒரே வேலை உம்மைக் கைது செய்வது !

ஆனிடஸ்: நீ என்ன பதில் சொன்னாய் ? ஆகாத்தான் வீடு எங்கே உள்ளது என்று சொன்னாயா ? சாக்ரடிஸ் எப்படி இருப்பார் என்று அடையாளம் காட்டினாயா ?

அல்சிபயாடஸ்: சாக்ரடிஸ் என்னுயிர்க் குரு ! நான் காட்டிக் கொடுப்பேனா ? சாக்ரடிஸ் யாரென்று தெரியாது என்று சொல்லி விட்டேன் ! ஆகாத்தான் இல்லம் எங்குள்ளது என்றும் நான் சொல்ல வில்லை ! ஆனால் அவர்கள் கண்டுபிடித்து விடுவார் என்றோர் அச்சம் உள்ளது எனக்கு ! அது அவரது கடமை. சாக்ரடிஸைக் காப்பது நமது கடமை !

கிரிடோ: நாம் ஆகாத்தான் வீட்டிலிருந்து சாக்ரடிஸ் உடனே கடத்துட் செல்ல வேண்டும் !

சாக்ரடிஸ்: நான் இந்தக் கணப்பு அடுப்பு முன்னே குளிர்காய வேண்டும் ! என்னை எங்கே கொண்டுபோய் மறைத்து வைத்தாலும் ஒருநாள் இருப்பிடம் தெரியத்தான் போகிறது ! ஏதென்ஸ் நகரில் ஒளிவதற்கு இடமில்லை எனக்கு ! எத்தனை நாட்கள் இப்படி என்னை ஒளித்து வைப்பீர் ? ஒன்று பகைவர் கையில் அகப்படுவேன். அல்லது மரணத்தின் பிடியில் சிக்கிக் கொள்வேன் ! கிழவன் ஒருநாள் ஒழியத்தான் போகிறான் !

கிரிடோ: அது ஏதென்ஸ் படையினர் கைகளாக இருக்கக் கூடாது ! கடவுள் எடுத்துக் கொள்ளும் உயிர் வேறு ! இந்தக் கொடுங்கோலர் உயிரைப் பிடுங்குவது வேறு !

(கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது. ஜன்னல் வழியே ஆகாத்தான் எட்டிப் பார்க்கிறார்)

ஆகாத்தான்: (அலறிக்கொண்டு) சாக்ரடிஸைப் பின்வழியே மறைத்துச் செல் கிரிடோ ! இராணுவப் படையினர் வீட்டு வாசலில் நிற்கிறார் ! போ சீக்கிரம் போ ! நீங்கள் போனபின் நான் கதவைத் திறக்கிறேன் !

***************************

 

Socrates & His Friends at Agathon’s Home

(Last Supper)

“எல்லோருடைய இழப்புகளையும் அவப்பேறுகளையும் (Misfortunes) ஒன்றாகக் குவித்து ஒவ்வொருவரும் சமப்பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினால் பெரும்பாலோர் தமது சொந்தப் பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வர்.”

“செம்மையான முறையில் தம்மை வேதாந்தச் சிந்தனைகளில் ஈடுபடுத்துவோர் நேரடியாக மரணத்திற்குத் தம்மைத் தயார் செய்து கொள்கிறார் என்பதைச் சாதாரண மக்கள் உணர மாட்டார்.”

“கவிஞர்கள் கடவுளைப் பற்றி ஆழ்ந்த விளக்கங்கள் கொடுப்பவர்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். வெளியே இருந்து வந்த அல்சிபியாடஸ் இராணுவப் படை சாக்ரடிஸைத் தேடி வருவதாகச் சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி உண்டாக்குகிறான். இராணுவக் காவலர் கதவைத் தட்டுகிறார்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர். அல்சிபியாடஸ், இராணுவப் படையினர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். வெளியே இருந்த வந்த அல்சிபியாடஸ் ஓர் அதிர்ச்சிச் சேதியைக் கொண்டு வருகிறான். திடீரென இராணுவப் படையினர் வாசலில் வந்து நிற்கிறார் !

அல்சிபியாடஸ்: (ஆச்சரியமாக) இராணுவ விருந்தாளிகள் வந்திருக்கிறாரா ? சாக்ரடிஸைப் பிடித்துப் போக வந்திருக்கிறாரா ?

கிரிடோ: இப்போது பேச நேரமில்லை ! ஆகாத்தான் ! கதவைத் திறக்கச் சிறிது நேரம் தாமதம் செய் ! நாங்கள் போன பிறகு இராணுவக் காவலரை வரவேற்பாய் ! வாருங்கள் சாக்ரடிஸ் ! இந்த அங்கியால் மூடிக் கொள்வீர். துணியில் முகத்தை மறைத்துக் கொள்வீர்.

அல்சிபியாடஸ்: என்ன திட்டம் ? நாமெல்லாம் வெளியே போகிறோமா ?

  • பாய்தோ: ஆமாம் தோழரே !

அரிஸ்டோதானிஸ்: (அதிர்ச்சியுடன்) இரும்பு இராணுவத் தொப்பிகள் தோட்டத்தின் நிலா வெளிச்சத்தில் உலாவி வருவதைப் பார்த்தேன்.

சாக்ரடிஸ்: (அமைதியாக) ‘ஓடிப் போகாதே’ என்று என் உள்ளிதயம் எச்சரிக்கை செய்கிறது.

அரிஸ்டோதானிஸ்: இராணுக் காவலர் உம்மைப் பிடித்துச் செல்வதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். எங்கள் உள்ளிதயம் அப்படி எச்சரிக்கை செய்கிறது சாக்ரடிஸ் !

ஆகாத்தான்: முதலில் உம்மைக் காப்பது எம் பொறுப்பு. இராணுவக் காவலர் தோட்டத்தின் வழியாக நுழைவார். நாம் பலகணி வழியே குதித்து அவர் கண்ணில் படாமல் ஓடிவிடலாம்.

சாக்ரடிஸ்: நான் பலகணி வழியாக ஏறிக் குதித்தால் என் காலை முறித்துக் கொள்வேன்.

ஆகாத்தான்: உம்மைப் பாதுகாப்பாய் நாங்கள் பலகணி வழியே இறக்கி விடுவோம். சாக்ரடிஸ் ! கவலைப் படாதீர். (ஆகாத்தானும், அரிஸ்டோ·பானிசும் சாக்ரடிஸை பலகணி வழியே இறக்கிச் செல்கிறார். மீண்டும் பலமாய்க் கதவு தட்டும் அரவம் கேட்கிறது).

கிரிடோ: யார் கதவைத் தட்டுவது ? அதுவும் நடுநிசியில் !

வெளியே இருந்து குரல்: நான் ஸார்ஜென்ட் ! இராணுவக் காவல்துறை அதிகாரி !

(கிரிடோ கதவைத் திறந்ததும் நான்கு காவல்துறை அதிகாரிகள் வாளேந்தி நிற்கிறார். உள்ளே நுழைந்து நாற்புறமும் நோக்குகிறார். இருவர் அறை அறையாய்ப் போய்த் தேடுகிறார்)

முதல் காவலன்: (மதுக் கிண்ணங்களைப் பார்த்து) பலர் இருந்தது தெரிகிறது ! சமீபத்தில்தான் நழுவிச் சென்றிருக்கிறார் ! பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான் ஆகியிருக்கும் ! மதுக் கிண்ணங்கள் நிரப்பப் பட்டுள்ளன ! ஒரு வாய் கூட அருந்தாமலே ஓடி இருக்கிறார் ! (ஒரு மதுக் கிண்ணத்தை எடுத்து மடமடவெனக் குடிக்கிறான்). மதுபானம் சுவையாக இருக்கிறது ! (அடுத்து ஒன்றை எடுத்துக் குடிக்கிறான்)

இரண்டாம் காவலன்: அந்த ஆரஞ்சுப் பழத்தை எடு ! வயிறு காலியாக உள்ளது ! எட்டு மணிநேரம் தேடி யிருக்கிறோம். அந்த சாக்ரடிஸைப் பிடிக்க முடிய வில்லை ! (முதல் காவலனைப் பார்த்து) சாக்ரடிஸ் எப்படி இருப்பார் ? அவர் வாலிபரா ? அல்லது வயோதிகரா ? தாடி வைத்திருப்பாரா ? தலை வழுக்கையா ? குட்டையா அல்லது அவர் நெட்டையா ?

(இவர்களைக் காணாது சாக்ரடிஸ் தோட்டத்தின் மறைவிலிருந்து வெளியே வருகிறார்)

முதல் காவலன்: (சாக்ரடிஸைப் பார்த்து) இதோ இந்தக் கிழவரைக் கேட்போம் ! ஐயா ! உமக்கு சாக்ரடிஸைத் தெரியுமா ? எங்கே ஒளிந்திருக்கார் ? நாங்கள் அவருடன் பேச வேண்டும் !

சாக்ரடிஸ்: யார் நீங்கள் ? எதற்காக இங்கே வந்தீர் ? ஏன் ஆயுதம் ஏந்தி நிற்கிறீர் ?

இரண்டாம் காவலன்: ஓர் பெரிய பயங்கரவாதியைப் பிடிக்க வந்திருக்கிறோம் ! பெயர் சாக்ரடிஸ் ! போர்த் தளபதியாக அவர் ஏதென்ஸில் போர் புரிந்தவர் என்று கேள்விப் பட்டோம் !

சாக்ரடிஸ்: ஏனப்பா சாக்ரடிஸை நீவீர் தேடுகிறீர் ?

முதல் காவலன்: அவர் ஒரு பெரிய பயங்கரவாதி ! அவர் மீது பல குற்றங்கள் சாட்டப் பட்டுள்ளன. அவரைக் கைது செய்ய வந்திருக்கிறோம் ! உமக்கு சாக்ரடிஸைத் தெரியுமா ? உடனே சொல் ! அடையாளம் சொல்வீரா எமக்கு ? தேடித் தேடி நாங்கள் கால் ஒடிந்து களைத்துப் போனோம் !

சாக்ரடிஸ்: ஏன் அவரைப் பயங்கரவாதியாகப் பழி சுமத்துகிறீர் ? அவரை யாரைப் பயமுறுத்துகிறார் ? உங்களை அனுப்பியது யார் ?

இரண்டாம் காவலன்: அதையெல்லாம் சொல்ல மாட்டோம் ! ஏதென்ஸ் நகரத்தில் வாழும் அப்பாவித் தகப்பனார்களை அவர் பயமுறுத்துகிறார் ! அவரது வாலிபப் புதல்வரை எல்லாம் வசீகரப் படுத்தித் தனது சீடராக இழுத்துக் கொண்டார் ! அவரது இளம் மனதைப் பாழ்படுத்திப் பெற்றோருக்குப் பகைவராய் ஆக்கி விட்டார் ! ஏதென்ஸ் தெய்வங் களை அவர் ஏற்று கொள்ளாமல் தனது இச்சைத் தெய்வத்தை மக்களிடம் புகுத்துகிறார் ! அவர் உலக ஞானியாம் ! எங்கள் ஏதென்ஸ் ஞானிக்கும் மேலான உலக ஞானி இங்கு வசிக்கக் கூடாது !

சாக்ரடிஸ்: அவரால் ஏதென்ஸ் அரசுக்கு என்ன தீங்கு நேர்ந்தது சொல் ! அந்த வயோதிகர் எந்த வாலிபரையும் இழுத்துக் கொண்டு போக வில்லை ! வாலிபரே வயோதிகரிடம் வருகிறார் தமது ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள ! தகப்பனார் தீர்க்காத வினாக்களுக்கு விடை தேட அவரை அண்டுகிறார்.

***************************

“வாழ்வின் குறிக்கோள் முடிவில் கடவுளைப் போல் பூரணத்துவம் அடைவது. கடவுளைப் பின்பற்றிச் செல்லும் ஆத்மா தெய்வத்தைப் போல் இருப்பது.”

“ஆழ்ந்து ஆராய்ந்து வாழாத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

“நன்னெறியைப் பின்பற்றாது வெறுமனே மண்ணில் வாழ்ந்து வருவதால் எந்தப் புண்ணியமும் இல்லை.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். வெளியே இருந்து வந்த அல்சிபியாடஸ் இராணுவப் படை சாக்ரடிஸைத் தேடி வருவதாகச் சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி உண்டாக்குகிறான். இராணுவக் காவலர் கதவைத் தட்டுகிறார்.

நேரம் : நள்ளிரவு

பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர். அல்சிபியாடஸ், இராணுவப் படையினர்.

காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். வெளியே இருந்த வந்த அல்சிபியாடஸ் ஓர் அதிர்ச்சிச் சேதியைக் கொண்டு வருகிறான். திடீரென இராணுவப் படையினர் ஆகாத்தான் இல்லத்தில் நுழைந்து சாக்ரடிஸைத் தேடுகிறார் ! நண்பர் எல்லோரும் மறைந்து கொள்ள சாக்ரடிஸ் மட்டும் தைரியமாகத் தனியாக வந்து காவலரோடு உரையாடுகிறார்.

முதற் காவலன்: சாக்ரடிஸ் ஒரு வேதாந்த ஞானியாம் ! உயர்ந்த ஞானியாம் ! உலக மேதையாம் ! இது உண்மையா ? என்னால் நம்ப முடியவில்லை !

சாக்ரடிஸ்: அப்படி நான் சொல்ல மாட்டேன் ! ஏதென்ஸ் மாஜிஸ்டிரேட் கூறியது ! அவர் ஒரு சாதாரண மனிதர் ! அவருக்கு எதுவும் தெரியாது. பிறரிடம் கேட்டுத்தான் அவர் உலகைப் பற்றி அறிந்து கொள்கிறார்.

இரண்டாம் காவலன்: மாஜிஸ்டிரேட்டுக்கு எப்படித் தெரியும் சாக்ரடிஸ் உலக ஞானி என்று ?

சாக்ரடிஸ்: தேவதூதர் (Oracles) தீர்ப்பில் அவ்விதம் சொல்லியிருக்கிறார்.

முதற் காவலன்: உமது தீர்ப்பென்ன ? அவர் செய்தவை தவறா ? அவரைத் தண்டிக்க வேண்டுமா ?

சாக்ரடிஸ்: எதுவும் அறியாத மனிதர் அவர் ! சொந்த அறிவு சுத்தமாகக் கிடையாது. பிறர் வாயைக் கிண்டி விட்டு தனக்கேற்ற கருத்தைப் பற்றிக் கொள்கிறார். உண்மை ஞானம் என்பது ஒளிச்சுடர் வீசும் சூரியனைப் போன்றது. ஆனால் மக்கள் நரிகளைப் போல் அடித்தளக் குகைக்குள்ளே வசித்து வருகிறார் !

இரண்டாம் காவலன்: இரவு, பகல் ஏழு நாட்களிலுமா ?

சாக்ரடிஸ்: ஆமாம் எல்லா நேரத்திலும் அங்குதான் வசிக்கிறார். அதை விட்டு வெளியே அவர் வருவதில்லை ! அங்கேதான் அவர் எல்லாம் பிறந்தார் ! அங்கேதான் அவர் எல்லாம் இறப்பார் !

முதல் காவலன்: இது மிருக வாழ்க்கை விடக் கேவலமானது ! விலங்குகள் கூட வெளியேறி உணவு தேட வேட்டையாடச் செல்லும் !

சாக்ரடிஸ்: அது மட்டுமில்லை ! கேள் ! குகையை விட்டு வெளியேற அவருக்கு விடுதலை கிடையாது ! கனமான இரும்புச் சங்கிலியில் அவர் நகர முடியாதபடிக் கட்டப் பட்டிருக்கிறார். இப்போது அந்தக் குகையில் இருட்டாகப் போகிறது ! கணப்பு அடுப்பில் தெரியும் ஒரு மின்மினித் தீயைத் தவிர வேறு வெளிச்சம் கிடையாது அங்கே.

முதற் காவலன்: யாரும் நகர இயலாத குகையில் யார் கணப்பு அடுப்பைக் கண்காணிப்பது ?

சாக்ரடிஸ்: அது ஒரு மாயத் தீ ! யாரும் தீயைப் பார்க்க முடியாது. அவரும் சங்கிலிப் பிணைப்பில் நகர முடியவதில்லை. அவர் காண்ப தெல்லாம் தீயொளியால் சுவரில் விழும் வெறும் நிழல்கள் ! அவரது சிந்தனையில் விளைந்த திரிபான பொருட்கள் ! ஆனால் திரும்பி நோக்கினால் உண்மையான பொருட்களைக் காண முடியும் ! குகைவாசிகள் நிழல்களைப் பார்த்துதான் மூலப் பொருட்களை அறிந்து கொள்கிறார் !

இரண்டாம் காவலன்: நீவீர் சொல்வது புரிந்தும் புரியாமல் இருக்கிறது ! எதற்காகக் குகைவாசிகளைப் பற்றி எம்மிடம் பேசுகிறீர் ? அவர்களைச் சங்கிலில் பிணைத்தது யார் ? அவர் ஏன் அடங்கி முடங்கிக் கிடக்கிறார் ?

சாக்ரடிஸ்: ஒருநாள் அவர்களில் ஒருவன் விலங்கை அறுத்து விட்டு வெளியேறுவான் ! பலநாள் பயணம் செய்து புதுக் காற்றைச் சுவாசித்து ஒளிமயமான பகலவனைக் காண்பான் ! அப்போது வெறும் நிழலை மட்டும் கண்ட விடுதலை மனிதன் நிஜ வடித்தைக் காண்பான் ! ஒளிமயத்தைக் கண்டவன் மீண்டும் அந்த மின்மினி வெளிச்சக் குகைக்குப் போனால் என்ன காண்பான் தெரியுமா ?

முதல் காவலன்: யார் அப்படி மூடத்தனமாக மீண்டும் அந்த குகைக்குப் போவான் ?

சாக்ரடிஸ்: வெளியே தான் கண்ட ஒளிமயத்தையும், சுவாசித்த புதிய காற்றையும் நண்பருக்குச் சொல்லப் போகலாம் அல்லவா ? ஆனால் தான் புதியாகக் கண்டவற்றைக் கூறினால் நண்பர் முதலில் நம்ப மாட்டார். தமது காதை மூடிக் கொள்வார் ! அவனை அறிஞன் என்றா கூறுவர் ? பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடுவார் ! யானை வயிற்றுக்குள்ளே இருந்து கொண்டு ஒருவன் யானையை எப்படிக் காண முடியும் ? அதுபோல் பிரபஞ்சத்தில் வசித்துக் கொண்டு ஒருவன் கடவுளைக் காண முடியாது ! ஒளிமயத்தைக் கண்டவன்தான் உண்மையை அறிந்தவன் ! அவன்தான் வேதாந்தி !

***************************

Socrates Trial in the Open

Forum of Athens

“நான் ஏதென்ஸ் நகரத்து மனித அல்லன். கிரேக்க நாட்டுப் பிறவி அல்லன் உலகத்தின் ஒரு குடிமகன் நான்.”

“நினைவில் வைப்பீர் : எதைச் செய்வது தகுதியற்றதோ அதை வாயால் சொல்வதும் தகுதியற்றது.”

“இந்த உலகத்தில் நேர்மை நெறியுடன் வாழும் உறுதியான குறுகிய பாதைதான் மெய்யானது. ஒழுக்க நெறிகளை எல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் பேரளவில் நமக்கு வல்லமை அளிக்கும்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

அங்கம் -3

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

முதல் காவலன்: எழுந்து நிற்பீர். வருகிறார் ! வருகிறார் ! நீதி மன்ற மாஜிஸ்டிரெட்டுகள் வருகிறார். வழியை மறைக்காதீர் !

[ஃபிளிப் (Philip), ஸைரஸ் (Cyrus), டிரிப்டாலிமஸ் (Triptolemus) மூன்று மாஜிஸ்டிரேட்டுகள் நுழைகிறார். அவரவர் ஆசனத்தில் அமர்கிறார். அவையோர் மூவரையும் கைதட்டி வரவேற்கிறார்.]

ஃபிலிப்: (மேஜையைத் தட்டி) அமைதி ! அமைதி ! நீதி மன்றம் துவங்குகிறது. கொண்டு வாரீர் குற்றவாளியை ! குற்றம் சாட்டியோர் இங்குள்ளாரா ?

லைகான், மெலிடஸ், ஆனிடஸ்: (மூவரும் எழுந்து) ஆமாம் மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே !

(சாக்ரடீஸை இரண்டு காவலர் சங்கிலில் இழுத்து வருகிறார்)

ஃபிலிப்:: (காவலரைப் பார்த்து) கைச் சங்கிலி கால் சங்கிலியை அகற்றுவீர் !

(சாக்ரடிஸ் சங்கிலியை அவிழ்த்ததும் பீடத்தில் ஏறி நிற்கிறார். )

மெலிடஸ்: (சட்டென எழுந்து) கால் சங்கிலியை நீக்காதீர் ! கிழவர் ஓடி விடுவார் ! அவரைக் கண்டுபிடிக்கவே ஏழு நாட்கள் ஆகி விட்டனளெமக்கு ?

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் பருத்த உடம்பைப் பாருங்கள் ! என்னால் ஓட முடியாது. என்னால் நடக்கத்தான் முடியும். நான் தப்பி ஓடி ஏதென்ஸில் எங்கே ஒளிவது ?

மெலிடஸ்: நீவீர் ஓடா விட்டாலும் உமது தோழர் உம்மைத் தூக்கிச் சென்று ஒளித்து வைப்பார்.

ஃபிலிப்:: மெலிடஸ் ! கூறுவாய் ! சாக்ரடிஸ் செய்த குற்றங்கள் என்ன ?

மெலிடஸ்: ஏதென்ஸ் வாலிபர் கெடுப்பு ! தெய்வத் துவேசம் ! தேசத் துரோகம் !

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! இந்த மூன்று குற்றங்களை நீவீர் ஒப்புக் கொள்கிறீரா ?

சாக்ரடிஸ்: எப்படி ஒப்புக் கொள்வது எனக்குப் புரியாத போது ? என் மீது சாட்டிய குற்றங்கள் என்ன என்பது புரிய வில்லை கனம் நீதிபதி அவர்களே ! குற்றம் சாட்டியவர் ஒவ்வொன்றாய் எனக்கு விளக்க வேண்டும் ! நான் அறிவில்லாதவன் ! ஆனால் அறிவைத் தேடுபவன் ! இந்த அறிவில்லாதவனுக்கு அறிவாளிகள் அறிவைப் புகட்ட வேண்டும் !

  • பிலிப்: சாக்ரடிஸ் ! எங்கே உமது வழக்கறிஞர் ? உமது சார்பில் வாதாட வழக்கறிஞர் இல்லையா ?

சாக்ரடிஸ்: இல்லை, எனக்கு வழக்கறிஞர் இல்லை ! நான் ஏழை கனம் நீதிபதி அவர்களே ! என்னை நான்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் !

மெலிடஸ்: முதலில் பெரிய குற்றம் : ஏதென்ஸ் நகர வாலிபரைக் கவர்ந்தது கெடுத்தது !

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! என் தோற்றத்தைப் பாருங்கள் ! என் பூத வடிவம் யாரையாவது கவர முடியுமா ? ஏதென்ஸ் நகர வாலிபர் என்னைத் தேடி வருகிறார் ! என்னிடம் கேள்வி கேட்கிறார் ! பதில் தெரியாமல் நான் அவருக்கு வினாக்களைத் தொடுக்கிறேன். அவர் தரும் விடைகளே எனக்கு அறிவைக் கொடுக்கிறது. நானவரைக் கெடுத்தேன் என்பதற்குச் சான்றுகள் கொடுப்பீரா ? எனக்கு அறிவைப் புகட்டியவர் ஏதென்ஸ் வாலிபர் !

மெலிடஸ்: இந்தக் கிழவர் இப்படித்தான் குற்றத்தைக் கூடக் குணப்பாடு போல் மாற்றுவார் ! உண்மையத் திரிப்பார் ! இவர் சொல்வது புளுகு !

சாக்ரடிஸ்: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா ? புள்ளி விபரம் உண்டா ?

  • பிளிப்: மெலிடஸ் ! சாக்ரடிஸ் யார் யாரைக் கெடுத்தார் ? எத்தனை பேரைக் கெடுத்தார் ? எப்போது கெடுத்தார் ? இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளனவா ?

மெலிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இப்போது அந்தப் பெயர் நிரல் என் கைவசம் இல்லை ! என் வீட்டில் மறந்து வைத்து விட்டேன் ! கொண்டு வரவில்லை. மன்னிக்க வேண்டும் என்னை.

  • பிளிப்: ஆதாரமில்லாமல் முதல் குற்றம் நீக்கப் படலாமா ?

மெலிடஸ்: நான் அடுத்த வழக்காடல் தினத்தில் கொண்டு வருகிறேன்.

சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதார மற்றது !

***************************

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ ஞானமன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் தீர்க்கதரிசிகள் அல்லது தேவ தூதரிடம் காணப்படும் ஒருவகை உள்ளுணர்வு அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயமாகத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதாரமற்றது ! இதுவரை யாரும் அதற்குச் சான்றுகள் தர வில்லை.

ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! இந்தக் கிழவர் கூறுவது பொய். என் வாலிப மகனைக் கெடுத்தவர் இந்தக் கிழவர். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.

மாஜிஸ்டிரேட் ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உங்களுக்கு ஆனிடஸ் மகனைத் தெரியுமா ?

சாக்ரடிஸ்: ஆமாம் தெரியும் எனக்கு. ஒரு சிலநாட்கள் என்னுடன் பழகினான்.

ஆனிடஸ்: அத்துடன் என் மகன் சில நாட்கள் சாக்ரடிஸ் இல்லத்தில் தங்கினான். என் மகனை மயக்கி என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டவர் இந்தக் கிழவர். எங்கள் இல்லத்தை மறக்கும்படி மகன் மீது தனது அறிவுக் கவர்ச்சியை வீசியவர் இந்தக் கிழவர்.

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! ஆனிடஸ் மகனை ஏன் அவனது வீட்டுக்கு அனுப்பவில்லை ?

சாக்ரடிஸ்: அவன்தான் தன் வீட்டுக்குப் போவதை விரும்பவில்லை ! நான் போகச் சொன்னாலும் அவன் போக மறுத்தான்.

ஆனிடஸ்: என் மகனைக் கிழவர் ஏன் தன் வீட்டில் தங்க வைத்தார் என்று கேளுங்கள்.

சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! போக மறுக்கும் வாலிபன் கழுத்தைப் பிடித்து என்னால் தள்ள முடியாது. அவன்தான் விரும்பி என்னோடு இல்லத்தில் தங்கினான்.

ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! (தயங்கிக் கொண்டு) சாக்ரடிஸ் இருபால் (Bisexual) இச்சை உள்ளவர் !

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! இது உண்மையா ? நீவீர் இருபால் இச்சை உள்ளவரா ?

சாக்ரடிஸ்: (தயங்கிய வண்ணம்) ஆமாம் நீதிபதி அவர்களே !

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உமக்கும் ஆனிடஸ் மகனுக்கும் முரணான உடற் தொடர்புண்டா ?

சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே !

ஃபிலிப்: நீவீர் உண்மையைச் சொல்கிறீரா ?

சாக்ரடிஸ்: உண்மை ! நான் சொல்வது முற்றிலும் உண்மை ! உண்மை தவிர வேறில்லை ! எனக்கும் ஆனிடஸ் மகனுக்கும் உடற் தொடர்பில்லை !

ஆனிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இந்தக் கிழவரை நான் நம்பமாட்டேன் ! இவர் சொல்து அனைத்தும் பொய். என் மகனைக் கெடுத்தவர் இவர் ! இவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் !

இந்தக் கிழவர் மற்ற ஆடவரிடம் உடலுறவு வைத்திருந்ததை நான் அறிவேன்.

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! நீவீர் வேறு சில ஆடவரோடு உடற் தொடர்பு கொண்டது உண்மையா ?

சாக்ரடிஸ்: உண்மை. ஆனால் ஆனிடஸ் மகனோடு நான் உடற் தொடர்பு கொள்ளவில்லை !

ஆனிடஸ்: கிழவர் பொய் சொல்லித் தப்பிக் கொள்ள முனைகிறார். நீதிபதி அவர்களே ! நம்பாதீர் இவரை ! என் தொழிலில் ஈடுபடாமல் என் மகனைத் தடுத்தவர் இந்தக் கிழவர் !

ஃபிலிப்: ஆனிடஸ் ! உன் தொழில் என்ன வென்று சொல் முதலில் !

ஆனிடஸ்: தோல் பதனிடுவது எனது தொழில் கனம் நீதிபதி அவர்களே ! இவரைச் சந்தித்த பிறகு என் மகன் தோலைத் தொடுவதில்லை ! தோல் செப்பணிடும் தொழிலில் ஈடுபடுவதில்லை.

ஃபிலிப்: சாக்ரடிஸ் ! தந்தை செய்யும் தோல் பதனிடும் தொழிலில் மகன் ஈடுபடக் கூடாது என்று நீவீர் தடுத்தீரா ?

சாக்ரடிஸ்: நான் தடுக்க வில்லை கனம் நீதிபதி அவர்களே ! ஆனிடஸ் மகன் மேற்படிப்புக்கு போக விரும்பினான். நான் அதை ஊக்கிவித்தது உண்மை ! ஆனால் அதற்குத் தந்தையுடன் செய்யும் தொழில் இடையூறாக இருக்குமே என்று எச்சரித்தேன். ஆனால் நான் தோல் பதனிடும் தொழிலை விட்டுவிடச் சொல்லி வற்புறுத்த வில்லை ! மேற்படிப்பு முக்கியமா குடும்பத் தொழில் முக்கியமா என்று முடிவு செய்தவன் ஆனிடஸ் மகன் ! நான் அதற்குப் பொறுப்பாளி அல்லன். தந்தையின் தொழில் முக்கிய மென்றால் மகனைத் திருப்பும் பொறுப்பு தகப்பனைச் சார்ந்தது. தகப்பனால் மகனைத் தன் தொழிலுக்குத் திருப்ப முடியவில்லை என்பது உண்மை.

***************************

“மனிதனுக்குச் சமமாக மாதருக்குச் சம உரிமை அளித்தால், மனிதனுக்கு மேலதிகாரியாக மாதர் ஆகி விடுவார்.”

“திருமண இல்வாழ்வோ அல்லது பிரமச்சரியத் தனி வாழ்வோ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதன் பின்னால் அதற்கு நிச்சயமாக வருத்தம் அடைவான் !”

“ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத ஓர் ஆபாச மனக் கருத்தே.”

“சாதாரண மாந்தருக்குப் பேரளவு இன்னல் தரச் சாமர்த்தியம் உள்ளது போல், பெருமளவில் நல்வினை புரியவும் அவருக்குத் திறனிருக்கலாம் என்பதை எண்ணத்தான் முடியும் என்னால்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக் கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

நீதிபதி ஃபிலிப்: சாக்ரடிஸ் ! உன் இரண்டாவது குற்றச் சாட்டுக்கு என்ன சொல்கிறாய் ? தெய்வ அவமதிப்பு ! அரசாங்க எதிர்ப்பு ! (Blasphemy & Sedition) செய்திருக்கிறாய் நீ. அவற்றைப் பற்றி நாம் காலை முழுவதும் பேசி இருக்கிறோம்.

சாக்ரடிஸ்: காலை முழுவதுமா ? நான் என் வாழ்வு முழுவதும் அவற்றைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்திருக்கிறேன்.

லைகான்: பார்த்தீரா ? வாழ்க்கை முழுவதும் பயங்கர மனிதனாக வாழ்ந்து வந்ததை ஒப்புக் கொள்கிறார் சாக்ரடிஸ் !

நீதிபதி ஃபிலிப்: குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா ?

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் அவற்றைப் பேசினேன் என்பது உண்மை. ஆனால் நான் அவற்றில் ஈடுபட வில்லை. நாட்டுக்காகப் போரிட்டவன் நான் ! நாட்டை எதிர்த்து எதுவும் செய்ய வில்லை நான் ! கடவுளை மதிப்பவன் நான் ! அதன் மீது நம்பிக்கை கொண்டவன் நான் ! கடவுளை அவமதிப்பவன் நான் அல்லன் !

சைரஸ்: புகை உள்ள இடத்தில் தீ இருக்கும் ! கடவுளை மதிப்பவன் தான் ஏதென்ஸின் நாட்டுத் தெய்வங்களை அவமதிக்கிறான்.

சாக்ரடிஸ்: ஆமாம் புகை எங்கிருக்கிறதோ அங்கு தீ இருக்கும் ! உலகத்தின் உன்னத ஞானி என்று புகழப் பட்டவன் இப்போது மூடனாய் இகழப் படுகிறான். ஆனிடஸ் ! தெய்வ அவமதிப்பு என்றால் என்ன என்று விளக்குவாயா ?

ஆனிடஸ்: நான் விளக்க மாட்டேன் ! உமக்கு விளக்க மறுக்கிறேன் !

சாக்ரடிஸ்: ஏன் மறுக்கிறாய் ?

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உன்னை நான் நன்றாக அறிவேன் ! நீ சாமர்த்தியசாலி ! நான் சொல்வதை மடக்கி என் மீதே அதைக் கணையாக ஏவி விடுவாய் நீ ! உன்னிடம் மன்றத்தில் வாதாடினால் நான் தோற்று விடுவேன் ! எனக்குப் புரிந்ததைப் புரியாமல் செய்து விடுவாய் ! பிறகு மன்றத்தார் என்னை பரிதாபமாகப் பார்ப்பார் !

சாக்ரடீஸ்: நீ என்ன பேசுகிறாய் என்று உனக்குத் தெரியாதா ?

ஆனிடஸ்: எனக்குத் தெரியும் நான் பேசுவது. அதுபோல் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் உன்னைத் தவிர !

சாக்ரடிஸ்: வேடிக்கையான குற்றச் சாட்டு ! தெய்வ அவமதிப்பு என்று குற்றம் சாட்டி விட்டு எதிர்வாதிக்கு அது என்ன வென்று சொல்லத் தெரியவில்லை.

லைகான்: சாக்ரடிஸ் ! உனக்குத் தெரியும் ! நீ எப்போதும் கடவுளைப் பற்றிப் பேசுபவன்.

டிரிப்தோலிமஸ்: நானும்தான் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்.

சாக்ரடிஸ்: நீ ஒரு வர்த்தகன் ! செல்வம் திரட்டும் வியாபாரி ! உன் உதடுகள் பணக் கடவுளை வழிபடும் ! நீ கடவுளை நினைப்பதன் காரணம் வேறு. நான் கடவுளை நினைப்பதின் காரணம் வேறு. பணத்தைக் குறி வைத்துத் தேடும் நீதான் கடவுளை அவமதிக்கிறாய் ! குணத்தைக் குறிவைத்து நான் கடவுளை நினைக்கிறேன். அது நான் வைத்துள்ள பேரருள் மதிப்பு.

ஆனிடஸ்: சாக்ரடிஸ் ! உண்மையைச் சொல். நீவீர் ஏதென்ஸ் தெய்வங்களை வழிபடுவதில்லை ! பதிலாக இழிவு படுத்தினீர் ! இல்லையா ? தெய்வ அவமதிப்பு என்றால் ஏதென்ஸ் மக்கள் வணங்கும் தெய்வங்களை நீ முழுக்க முழுக்க நம்பாதது !

சாக்ரடிஸ்: ஏதென்ஸில் அநேக தெய்வங்கள் உள்ளன ! அவற்றில் எந்த தெய்வங்களைக் குறிப்பிடுகிறீர் ?

ஆனிடஸ்: ஏதென்ஸின் உள் நாட்டுத் தெய்வங்கள். வெளிநாட்டுத் தெய்வங்கள் அல்ல.

சாக்ரடிஸ்: உள்நாட்டுத் தெய்வங்கள் எவை ? வெளிநாட்டுத் தெய்வங்களை எனக்குத் தெரியாது.

ஆனிடஸ்: ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தெய்வ நம்பிக்கை உள்ளது !

சாக்ரடிஸ்: உதாரணமாக நான் கேட்கிறேன், எகிப்தியர் நமது தெய்வங்களை நம்புகிறாரா ?

ஆனிடஸ்: இல்லை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: எகிப்தியர் தெய்வங்கள் நமது தெய்வங்களை விட உயர்ந்தவையா ? அல்லது தாழ்ந்தவையா ? ஆழ்ந்து சிந்தித்த பிறகு பதில் சொல் ஆனிடஸ் !

ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது விசாரணை என் மீதா ? அல்லது சாக்ரடீஸ் மீதா ? கேள்விகள் என் மீது ஏன் வீசப் படுகின்றன ? என்னை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் பிரபு ! இந்தக் கிழவர் என்னை மடக்கிப் போடச் சுற்றி வளைத்து வருகிறார்.

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் இரண்டு வேலை செய்கிறேன். ஒரு புறம் குற்றம் சுமத்தப் பட்டவன் ! மறுபுறம் குற்றவாளிக்காக வாதாடுபவன். என் தரப்பில் நான்தான் எதிராளியைக் கேள்வி கேட்க முடியும் ! சொல் ஆனிடஸ் ! ஏதென்ஸ் உள்நாட்டுத் தெய்வங்களை நான் நம்பா விட்டால் அது தெய்வ அவமதிப்பா ?

லைகான்: பாருங்கள் சாக்ரடிஸே குற்றத்தை ஒப்புக் கொள்கிறார் ! உள்நாட்டுத் தெய்வங்களைத்தான் நம்ப வில்லை என்பதை அவரே அறிவிக்கிறார்.

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! நான் எதையும் ஒப்புக் கொள்ள வில்லை. லைகான் ! இதை மட்டும் நான் ஒப்புக் கொள்கிறேன் : ஒன்று எல்லாக் கடவுள்களும் உலகில் பொதுவானவை. நாம் உலகக் கடவுள்கள் அனைத்தையும் நம்ப வேண்டும். உள்நாட்டுக் கடவுளோ வெளி நாட்டுக் கடவுளோ எல்லாம் உலகக் கடவுள்கள்தான். ஏதென்ஸ் கடவுள்களும் அவற்றில் அடங்கும். இதை நம்பும் நான் தெய்வ இகழ்வாளியா ? ஏதென்ஸ் தெய்வங்களை மட்டும் நம்பாமல் உலகில் எல்லா தெய்வங்களையும் நம்பும் நான் ஒரு தெய்வ அவமதிப்பாளனா ?

***************************

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) பெற்றவை. ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் ! நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் ! துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.

டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! இப்போது தெளிவாகச் சொல்வீர் ! நீவீர் எவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர் ?

மெலிடஸ்: (ஆவேசமாய் முந்திக் கொண்டு) நான் சொல்கிறேன் அவரைப் பற்றி ! பேய், பிசாசு, போலித் தெய்வம் ! பாதி மனிதனும் பாதித் தெய்வமான அரைத் தெய்வம் ! சாக்ரடிஸ் காதிலே எப்போதும் ஏதோ ஓர் அசரீரி ஆன்மா உரையாடுவதாகச் சொல்வார் ! அதுவே அவர் செய்வதை ஆணை இடுவதாகச் சொல்வார் ! அது உண்மையா இல்லையா ? சொல் சாக்ரடிஸ் !

நீதிபதி ·பிளிப்: மெலிடஸ் ! ஏன் குறுக்கே பாய்கிறாய் ? சாக்ரடிஸ் சொல்லப் போவதை யூகித்து நீ கூறுவது வழக்காடல் ஆகாது ! வழக்கு நெறி தவறிய செயல் அது !

மெலிடஸ்: (மீண்டும் குறுக்கிட்டு) நான் சொல்வது உண்மை தானே சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: (மெதுவாக, பொறுமையாக) நீதிபதி அவர்களே ! நான் பேய், பிசாசு, போலித் தெய்வங்களை நம்பாதவன் ! அரைத் தெய்வம் என்றால் புரியவில்லை எனக்கு ! ஆனால் ஓர் அசரீரி ஆன்மா என் காதில் எனக்கு ஆணை இடுவது உண்மைதான் ! அதன்படி நடப்பவனும் நான்தான் ! அதன் ஆலோசனகளில் நன்னெறிகள் இருக்கும்.

நீதிபதி ·பிளிப்: அதென்ன அசரீரி ஆன்மா ? எனக்குப் புரியவில்லை.

சாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) ஆத்மா சுத்தமாக இருப்பவர் காதில்தான் அந்த அசரீரி பேசும் ! அதை ஒரு குட்டிக் கடவுள் என்று வைத்துக் கொள்வீர். அல்லது ஒரு தெய்வத்தின் பிள்ளை என்றும் நினைத்துக் கொள்ளலாம். தப்பாகப் பிறந்த பிள்ளை !

மெலிடஸ்: எமக்குத் தெரியும் அது ! தெய்வத்தின் பிள்ளையை இப்படித் தப்பான பிள்ளை என்று கேலி செய்யும் நீவீர் தந்தையான தெய்வத்தையும் அவமதிக்கிறீர் !

சாக்ரடிஸ்: நான் இந்தப் போலி தெய்வத்தையே நம்பாத போது அதன் பிள்ளையை எப்படி நம்புவேன் ? நான் குதிரையை நம்புகிறேன் ! கோவேறு கழுதையை நம்புவதில்லை.

மெலிடஸ்: தெய்வத்தைக் கோவேறு கழுதைக்கு இப்போது ஒப்பிட்டுக் காட்டுவது கண்டிக்கப் பட வேண்டும் !. கனம் நீதிபதி அவர்களே ! உடனே இவரைக் கண்டித்துத் தண்டிக்க வேண்டும் !

நீதிபதி: நான்தான் இங்கே நீதிபதி ! குற்றதை ஏற்றுக் கொள்ள வைக்காமல் கண்டிப்பதோ தண்டிப்பதோ தவறு ! அதை நிர்ணயம் செய்வது நான் ! மெலிடஸ் ! வாயைத் திறக்காதே அழைக்கப் படாமல் !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இப்போது எனக்கு ஓர் விளக்கம் தேவை ! தெய்வம் என்பது என்ன ? யாராவது எனக்கு விளக்கம் தர வேண்டும். இதில் அரைத் தெய்வம் எது ? முழுத் தெய்வம் எது ? மனிதத் தெய்வம் எது ?

ஆனிடஸ்: நீதிபதி அவர்களே ! இத்தகைய வினாக்களைத் தொடராமல் நிறுத்த வேண்டும் ! சாக்ரடிஸ் சாமர்தியசாலி ! இப்படி முதலில் விளக்கம் கேட்பார் ! பிறகு அதிலே பதில் அளிப்பவனை மூழ்க்கிவிடுவார் ! அவரைச் சொல்லாடி யாரும் வெல்ல முடியாது ! இதுவரை யாரும் அவரை வென்றதில்லை !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! எனக்குப் புரியாத ஒரு கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. சொல்லுங்கள் ! கடவுள் என்பது என்ன ? நீங்கள் விளக்கம் தராவிட்டால் என் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இருப்பீரா ?

டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! முதலில் இதற்குப் பதில் சொல் ! கடவுளைப் பற்றி நீ என்ன நம்பிக்கை கொண்டிருக்கிறாய் ?

சாக்ரடிஸ்: கடவுள் என்பது ஒன்று ! நான் நம்புவது அந்த ஒற்றக் கடவுளைத்தான் ! பற்பல தெய்வங்களை நான் நம்புவதில்லை ! என் காதில் கேட்கும் பல தெய்வங்கள் புராண நூல்களில் எழுதப் பட்டவை ! இதிகாசக் கதைகளில் காணப்படுபவை ! சில தெய்வங்கள் சினம் கொண்டவை ! சில தெய்வங்கள் செந்நெறி யுடையவை ! சில தெய்வங்கள் மூர்க்கத்தனம் படைத்தவவை ! சில பயங்கரத் தெய்வங்கள் மக்களைக் கொல்கின்றன ! கதைகளில் வரும் அவை யாவும் கடவுள்கள் அல்ல ! அவைதான் பேய்கள், பிசாசுகள் ! நான் அவற்றை நம்புவதில்லை ! இதிகாசக் கதைகளில் நாம் தெரிந்து கொண்ட அந்தத் தெய்வங்கள் நம்மை மகிழ்விக்கவோ, பயமுறுத்தவோ அல்லது துயர்ப்படுத்தவோ சொல்லப் பட்டவை ! நான் அவற்றை நம்புவதில்லை ! நான் நம்புவது உலகம் அனைத்துக்கும் ஒன்றான கடவுளை ! ஒற்றைக் கடவுளை ! புராண நூல்களில் எழுதப்பட்ட அநேகத் தெய்வங்களை அல்ல ! ஆனால் புராண நூல்களில் அந்த ஒற்றைக் கடவுளின் ஒளிவீசலாம். அந்த ஒப்பற்ற கடவுள் இந்தப் பேருலகில் இருக்கிறது. அழகுமயம், சத்திய நெறி, நீதி நெறி (Beauty, Truth & Justice) என்பவை அந்தக் கடவுளுக்கு உள்ள சில பெயர்கள் ! அந்தக் கடவுளுக்கு உள்ள மற்ற பெயர்கள் எனக்குத் தெரியாது ! ஆனால் ஒன்று எனக்கு நன்றாகத் தெரியும். அந்தக் கடவுள் பிறரிடம் உள்ள நன்னெறிகளைக் காண எனக்குச் சொல்லிக் கொடுக்கிறது. அக்கடவுள் நன்னெறிகளை எனக்குப் புகட்டுகிறது. கடவுளை அறிவது என்று கூறுவது நேர்மை நெறி அதுவென்று அறியப்படுவது. அந்தக் கடவுளை அறியாமல் இருப்பது பாபம் என எண்ணப்படுவது. மனிதரின் பாபத் தவறுகள் மூன்று : வெறுப்பு, பழிவாங்கல், பொறாமை. இதுதான் என் கடவுள் நம்பிக்கை. இதைத்தான் நான் ஏதென்ஸ் நகர் வாலிபருக்குப் பல்லாண்டுகளாய்ச் சொல்லிக் கொடுக்கிறேன். இது உங்களுக்குத் தெய்வத் துரோகமாகத் தெரிகிறதா ? நான் ஏதென்ஸ் வாலிபரைக் கெடுத்தேன் என்பதில் நியாயம் உள்ளதா ?

***************************

“ஒரு செல்வந்தன் தனது சொத்து சேமிப்பைப் பற்றிப் பெருமை அடைந்தால், எப்படி அவன் அந்தப் பணத்தைச் செலவழிக்கிறான் என்று அறிவதற்கு முன்னே அவனைப் பற்றி ஒருவர் புகழக் கூடாது.”

“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”

“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ அறிவன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் மெய்ஞானிகள் அல்லது தீர்க்க தரிசிகளிடம் காணப்படும் ஒருவகைத் தன்னுணர்ச்சி அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”

“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

சாக்ரடிஸ்: நான் நம்புவதை பிறருக்குச் சொல்லித் தருகிறேன். கடவுளைப் பற்றி அறிவதை உமது சேமிப்புச் செல்வத்துக்கு மேலாக, உயிர் வாழ்வுக்கும் மேலாக மதிக்க வேண்டும். ஏனெனில் சேமிப்புச் செல்வமும், சுகபோக வாழ்வும் நேர்மை நெறியைப் புகட்ட மாட்டா ! கடவுளைப் பற்றி அறியும் உயர்ந்த ஞானமே அவற்றைத் தர வல்லது. நேர்மை நெறியிலிருந்து பொது மனிதப் பண்பாடும் தனி மனிதப் பண்பாடும் உருவாகின்றன. நான் கடவுளைப் பற்றி வாலிபருக்குக் கூறியவை நாட்டுத் துரோகம் என்று கூறப்பட்டால், என்னைக் குற்றவாளி என்பவர் வெற்றி பெற்றவர் ஆவார். நான்தான் தீயவன் ஆவேன். நான் தண்டிக்கபட வேண்டியவன் ஆயினும் அந்தத் தண்டனை என் கருத்துகளை ஒருபோதும் மாற்ற முடியாது.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் கடவுளின் நியதியை முறிக்க வில்லை என்று வாதாடுகிறீர். மனிதர் உமது குற்றத்தை மறந்து விட வேண்டும் என்று பிழைத்துக் கொள்ள நினைக்கிறீர். மனிதரோடு கடவுளும் உம்மை மன்னித்து விட வேண்டும் என்று எதிபார்க்கிறீர். அவை ஒருபோதும் நிறைவேறா !

சாக்ரடிஸ்: ஏன் அப்படிச் சொல்கிறீர் நீதிபதி அவர்களே ?

டிரிப்தோலிமஸ்: இரண்டு கால் மனிதரை நீவீர் வேதாந்த முகில் படிந்த இரண்டு கால் பொதி மூட்டையாய் மாற்றப் பார்க்குகிறீர். ஏதென்ஸ் நகரக் கடவுளை நீவீர் எப்போதும் மதிப்பவதில்லை !

சாக்ரடிஸ்: அது உண்மை நீதிபதி அவர்களே !. வெறுப்பும் பொறாமையும் நிரம்பிய ஏதென்ஸ் நகரத் தெய்வங்கள் எந்தப் புனித மனிதருக்கும் ஏற்றவை அல்ல ! அவற்றைப் புராணக் கதைகளில் ஓய்வெடுக்க விட்டு விடுவீர் !

டிரிப்தோலிமஸ்: இந்த துணிச்சலான தெய்வ அவமதிப்பு சாக்ரடிஸின் தலைக் கர்வத்தைக் காட்டுகிறது. இது தெய்வத் துரோகம் ! தேசத் துரோகம் ! தண்டிக்கப் பட வேண்டிய துரோகம் ! நாங்கள் ஒரு கருவியாய் அதைக் காட்டித் தண்டனையைக் கண்டு களிக்க எமக்கோர் வாய்ப்பு கிடைத்துள்ளது !

லைகான்: கேட்டீரா சாக்ரடிஸ் ? நீதிபதி ஒருவர் இப்போதே உமக்குத் தீர்ப்பளித்து விட்டார் !

சாக்ரடிஸ்: நான் கேட்ட வினாவுக்கு இன்னும் எனக்குப் பதில் கிடைக்க வில்லையே ! உலகக் கடவுள் ஒன்றை நான் மதிப்பது தவறென்று யாரும் கூறவில்லையே ? அந்தக் கடவுள் ஏதென்ஸ் நாட்டுக்கும் தெய்வமே ! அதை நீவீர் நிராகரிக்க வில்லை ! ஆகவே என் போக்கில் தவறில்லை என்பதை நான் சொல்லலாமா ?

லைகான்: பாருங்கள் இந்த வேடிக்கை மனிதரை ! எப்படியெல்லாம் தனது கருத்தைத் திரித்துத் தான் தப்பிக் கொள்ள முனைகிறார் என்று பாருங்கள். ஏதென்ஸ் சும்மா விடாது நம்மை இந்தக் கிழவரை நாமின்று அவிழ்த்து விட்டால் ! குற்றங்களைக் கூறி ஜூரரிடம் விட்டு ஓட்டெடுங்கள் !

(ஒரே ஆரவாரம் ! கூக்குரல் ! “ஓட்டெடுப்பீர்” என்று ஒரே கூட்டொலி ! )

நீதிபதி ·பிளிப்: பயப்படாதே சாக்ரடிஸ் ! உன் சார்பாக நீ வாதாடுவதைத் தொடர் ! உனக்கு ஒன்றும் தீங்கு நேராது இங்கு ! அஞ்சாதே சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: அச்சம் என்றால் என்ன ? எனக்கு அச்சம் என்றால் என்ன வென்று தெரியாது ! என் எதிர்ப்பாளர் தண்டனையை நான் நீதி மன்றத்துக்கு வரும் முன்னே தீர்மானித்து விட்டார் ! நான் சொல்வது அவரது செவிகளில் நுழைவதில்லை ! அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் என்னைக் காயப் படுத்தவும் அவர் தயாராக உள்ளார்.

லைகான்: நாங்கள் ஏதென்ஸ் குடிமக்கள் ! எம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை !

சாக்ரடிஸ்: (சாந்தமாக) நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்துவீர் ! சிறையில் தள்ளுவீர் ! அல்லது கொன்று விடுவீர் ! ஆனால் யாரும் காயப் படுத்த முடியாது என்னை ! காயப் படுத்துவது உடலையன்று, உள்ளிருக்கும் ஆத்மாவை ! தீய வினை செய்து நீவீர் காயப் படுத்துவது என் ஆத்மாவை இல்லை ! உமது ஆத்மாவை !

லைகான்: ஏதென்ஸ் நகருக்கு எதிராகப் பாபங்களைச் செய்து நீவீர் எவரது ஆத்மாவைக் காயப் படுத்துகிறீர் ?

சாக்ரடிஸ்: நீவீர் பாபங்கள் புரிவது கடவுளுக்கு எதிராக ! எனக்கு எதிராக இல்லை. எனது கடவுள் ஏதென்ஸ் நகரத்தில் இல்லை ! எனது கடவுள் எங்கும் பரவி இருக்கிறார்.

லைகான்: சிந்தித்துப் பேசு சாக்ரடிஸ் ! ஏதென்ஸ் நீ பிறந்த பூமி ! உன் தந்தை நாடு ! மகன் தந்தைக்குச் செய்யும் கடமையைச் செய் ! ஏதென்ஸ் நீரைத் தினமும் நீ அருந்துகிறாய் ! அதில் விளைந்த தானியத்தை உணவாகத் தின்கிறாய் ! உன்னைப் பாதுகாக்கிறது ஏதென்ஸ் ! அதன் கலாச்சாரத்தில் மூழ்கியவன் நீ ! நீவீர் அங்கே உறங்குகிறீர் ! உலவுகிறீர் ! உபதேசம் செய்கிறீர் ! விழித்துப் பார் சாக்ரடிஸ் சாவதற்கு முன் ! பார் உன் நாட்டை ! எப்படி நீ அதைத் தூற்றுகிறாய் சீரழிக்கிறாய் என்று சிந்தித்துப் பார் ?

சாக்ரடிஸ்: சிற்பச் சிலைகள் நிரம்பி யுள்ளது ஒரு நகரைக் காட்டாது ! மனித இதயங்களில் நாடும் வாழ்க்கையும் உள்ளன. சில்லிட்ட சிலைகள் வெறும் சின்னங்கள் மட்டுமே ஆகும் ! லைகான் ! நானும் பார்க்கிறேன் ! ஆனால் நான் ஏதெஸில் காண்பது என்ன ? வாழும் மனிதத் தசைகள் எலும்புக் கூட்டில் சீரழிந்து கொண்டிருக்கின்றன. நான் காணும் ஏதென்ஸ் உயிரிழந்து கொண்டிருக்கிறது. பளிங்குக் கூண்டு கற்பனைக் காட்சியாக ஏமாற்றிக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் ஒருபோதும் சீராய் இருந்ததில்லை. மனித மூளையில் ஒட்டடை மண்டி உளுத்துப் போயுள்ளது ! அதைத் துடைக்க முயன்றவன் நான் ! என்னை ஒழிப்பதால் அந்த ஓட்டடை நீங்கிப் போகாது ! சிந்தித்துச் செய்வீர் சீமான்களே !

***************************

“நமக்கு ஞானம் உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

நீதிபதி ·பிளிப்: ஏதென்ஸ் அரசாங்கத்தை இங்கே குறை கூறுவது சரியில்லை சாக்ரடிஸ் ! உன் மீதுள்ள குற்றச் சாட்டு ஏதென்ஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தாய் என்பதே ! அதை இப்போது ஒப்புக் கொள்கிறாயா ?

சாக்ரடிஸ்: அரசாங்கத்தை எதிர்க்கும் புரட்சி என்றால் என்ன ? எனக்குப் புரியவில்லை நீதிபதி அவர்களே ! நேர்மை நெறியில் இருக்க வேண்டிய அரசாங்கத்தின் கீழான போக்கை எடுத்துக் காட்டுவது புரட்சியா ? சத்தியம் இகழப் படுவதா ? இப்போதைய ஏதென்ஸ் அரசாங்கம் நேரிய நெறியில் மக்களை ஆளுகிறதா ?

நீதிபதி ·பிளிப்: அது உன் பொறுப்பில்லை. பெரும்பான்மை குடிமக்கள் தேர்ந்தெடுத்த ஒன்றை நீவீர் தூற்றக் கூடாது. அதை நீவீர் ஆதரிக்க வேண்டும் !

சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே ! நான் அரசாங்க விதிகளுக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் நான் அதை ஆதரிக்க மாட்டேன் ! பெரும்பான்மைக் குடிமாந்தர் வடித்த அரசாங்கம் தன் வசதிக்கு விதிகளைப் புகுத்தி வைத்திருக்கிறது. இருபது பேரை ஒப்ப வைப்பதை விட ஒருவரை ஒப்ப வைப்பது எளிது. ஆனால் அது இருபது பேர் கூற்றை நியாயப் படுத்துமா ? பலர் நம்புவதால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? எத்தனை ஓட்டுகள் இருந்தால் ஒரு பொய் உண்மையாகும் ? பெரும்பான்மை நபர் ஆதரித்தால் ஒரு பொய் உண்மையாகி விடுமா ? சொல்லுங்கள் அறிவுமிக்க நீதிபதிகளே ! நான் அறிவற்ற மனிதன், அதுவும் முதிய மனிதன் !

நீதிபதி ஸைரஸ்: யோசித்துப் பார் சாக்ரடிஸ் ! குடிமக்கள் ஆள்வதற்கு உதவி செய்தால்தான் நாம் அரசாள முடியும். அல்லது அது கொடுங்கோல் ஆகும். மறக்காதே இதை. பொது மக்கள் போற்றும் அரசாங்கத்தின் கை, கால், கண் யாவும் கட்டப் பட்டுள்ளன. அதை இங்கும் அங்கும் இழுத்துச் செல்கின்றன பணிய வேண்டிய காட்டுக் கழுதைகள்.

லைகான்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு அரசாங்கத்தை இழிவாகப் பேசுகிறார் சாக்ரடிஸ் ! அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

மெலிடஸ்: (எழுந்து நின்று கூச்சலுடன்) ஏதென்ஸ் நாட்டு ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டார்களைத் தூற்றுகிறார் சாக்ரடிஸ். ஆம் அவர் இப்போது கண்டிக்கப்பட வேண்டும் !

சாக்ரடிஸ்: தேச நேசர் லைகானைப் போற்றுகிறேன் நான்.

மெலிடஸ்: சாக்ரடிஸ் போக்கை மறுபடியும் நான் கண்டிக்கிறேன்.

சாக்ரடிஸ்: ஓட்டார்களைப் போற்றும் மெலிடஸை நான் பாராட்டுகிறேன்.

மெலிடஸ்: எனது நாட்டுக் குடிமக்கள் மீது நான் கொண்டுள்ள நேசம் அளவில் அடங்காது.

சாக்ரடிஸ்: மெலிடஸ் ! ஆனால் ஏதென்ஸ் நாட்டுக் குடிமக்கள் தவறு செய்த போது நீவீர் தடுத்தீரா ? அல்லது வெறும் எச்சரிக்கையாவது செய்தீரா ? ஆனால் நான் தடுத்தேன் ! அதற்குத் தண்டனை இட்டால் ஏற்றுக் கொள்கிறேன்.

மெலிடஸ்: (எழுந்து நின்று கூக்குரலில்) ஒட்டார்கள் ஒருபோதும் தவறு இழைத்ததில்லை ! அவர் அமைத்த ஏதென்ஸ் அரசாங்கம் உயர்ந்தது ! உன்னத சேவை செய்கிறது !

நீதிபதி சைரஸ்: (கோபமாக) உட்கார் மெலிடஸ் ! நீதிபதி வேலையை நீ செய்ய வேண்டாம். உன் நியாயங்களை நீயிங்கு பரப்பாதே ! வாயைத் திறக்காதே மெலிடஸ் ! (சாக்ரடிஸைப் பார்த்து) சாக்ரடிஸ் ! இப்போது குடிமக்கள் எமக்கிட்ட வேலையை நீவீர் நிறுத்த முயல்கிறீர் !

ஒருவேளை அவர் தவறாக இருக்கலாம். ஆனால் அவர் வேண்டியதை யாம் செய்து முடிப்போம். ஆனால் நீவீர் அதைத் தாழ்வு படுத்திப் பெருமைப் படுகிறீர். அரசு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் உம்மை போன்ற வேதாந்திகள் உபதேசிக்கிறார். எமது பொறுப்பு என்ன செய்யலாம் என்பது. உம்மைப் போன்ற சீர்திருத்தவாதிகளுக்கு இரண்டும் வேறு என்பது தெரிவதில்லை !

சாக்ரடிஸ்: சீர்திருத்தவாதிகளின் தொழில் நாட்டைச் சீர்திருத்த வேண்டும் என்பதே ! அதைத் தடுப்பவர் அரசாங்கவாதிகள். குடிமக்கள் மாற்றத்தை விரும்புகிறார். ஆனால் அதை அரசாங்கம் வெறுக்கிறது. புதிதாகப் பொதுநபர் எதைக் கொண்டு வந்தாலும் அதன் முதல் எதிரி அரசாங்கம் ! பெரும்பான்மயோர் தவறாக இருக்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர். அப்படிக் கருதினால் சிறுபான்மையோர் சொல்வதில் நியாயம் இருக்கலாம் ! எத்தனை பேர் எதிர்த்தாலும் சிறுபான்மையோர் பேச உரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் அவரது கூற்றில் உண்மைக் குரல் தொனிக்கிறது. அதுதான் கடவுளின் மெய்ப்பாடு ! நுழையாத உங்கள் செவியில் மெய்ப்பாட்டைத் திணிக்கக் கடவுள் என்னைத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் ! என் பணி கடவுளின் பணி.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: எச்சரிக்கை செய்கிறேன் ! கர்வத்துக்குத் தண்டனை மரணம் தெரியுமா ? நீ கடவுளின் தூதனா ? அப்படி நீ பெருமை அடித்துக் கொள்கிறாயா ? கடவுளுக்கு நீ என்ன உறவினனா ? உன்னையா கடவுள் ஏதென்ஸைத் தூயதாக்க அனுப்பியுள்ளார் ? இதை யாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உன்னைத் தண்டிக்க நீயே தக்க ஒரு காரணத்தைக் கூறி விட்டாய் !

சாக்ரடிஸ்: நீதிபதி அவர்களே ! இதை நினைவில் வைத்துக் கொள்வீர் ! நான் இங்கிருக்கிறேன் இப்போது. நாளை இங்கு யார் இருப்பார் என்பது தெரியாது. கடவுள் இருதரம் உமக்கு எச்சரிக்கை செய்யாது ! வாழ்ந்திடு இன்றேல் மாய்ந்திடு என்பதே என் மனக் கோட்பாடு. நீவீர் உம்மை மூடராய் ஆக்கிக் கொண்டால் விடுதலை உணர்ச்சி கொண்ட ஒருவர் உமக்கதைச் சுட்டிக் காட்ட வேண்டும். எனக்கு அந்த சுதந்திரம் உள்ளது ! நான் மனிதத் தவறுகளைக் கண்டால் எடுத்துரைக்கத் தயங்க மாட்டேன் !

***************************

“எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சமும் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும் மதிப்பு இருப்பதில்லை ! ஏனென்றால் அச்சம் மதிப்பை விட அகண்ட தளத்தில் விரிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்.”

“ஏனென்று சிந்தித்து வியப்புறுவதில்தான் ஒருவனுக்கு ஞானம் பிறக்கிறது.”

“பொறாமை என்பது ஆத்மாவின் குடற்புண் (Ulcer).”

“பிறர் உனக்குச் சினமூட்டும் ஒன்றை நீ பிறருக்கு உண்டுபண்ணாதே !

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (ஃபிலிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

ஆனிடஸ்: (எழுந்து நின்று) குற்றச் சாட்டை ஒப்புக் கொள்கிறார் சாக்ரடிஸ் ! மரண தண்டனையே அதற்குத் தகுந்த வெகுமதி !

நீதிபதி  ஃபிலிப்: தண்டனை விதிப்பது நீதிபதிகள் ! உட்கார் ஆனிடஸ் ! எமது வேலைக்கு இடையில் புகுந்து உமது தீர்ப்பை அளிக்காதீர் !

சாக்ரடிஸ்: எதற்குத் தண்டனை எனக்கு ? உமது கொள்கைகளை நான் எதிர்ப்பதற்கா ? எந்தக் குற்றத்தையும் நான் இதுவரை ஏற்றுக் கொள்ள வில்லை ! என் மீது பழிசுமத்தியவரே இப்போது தண்டனையும் விதிக்கிறார் அல்லவா ? ஆனிடஸ் ! என்னிடமிருந்து நீ என்ன எதிர்பார்க்கிறாய் ? நான் சாதாரணக் குற்றவாளி போல் நிற்பதற்கு ஒரு காலின்றி முடமாய் உள்ளேனா ? நின்று பேசுவதற்கு நிலமின்றி நான் தடுமாறுகிறேனா ? சாதாராணக் குற்றவாளி போல் பெண்டு பிள்ளைகளைக் மன்றத்தில் அழைத்து வந்து நீதிபதிகள் என்மேல் பரிவு காட்ட அழ வைத்திருக்கிறேனா ?

மெலிடஸ்: நாங்கள் ஒருவர் மதிப்பையோ மான நட்டத்தையோ எதிர்பார்ப்பது இல்லை.

சாக்ரடிஸ்: நான் மண்டியிட்டு நியாயத்தை நாடுவேன் என்று நினைத்தீரா ? நியாயத்தை அளிப்பது கடவுள் ! நான் கடவுள் முன்பாகப் பேசுவது போல் கருதுகிறேன். என் மீது நீங்கள் இரக்கப் பட வேண்டாம் ! அனுதாபப் பட வேண்டாம் ! நியாயம் மட்டும் அளித்தால் போதும் ! நான் நியாயத்தை வெகுமதியாக் கேட்க வில்லை. நியாயத்தை எனது பிறப்பு உரிமையாகக் கேட்கிறேன் ! அதே போல்தான் உங்களுக்கும், கடவுளுக்கும் ! நீதிபதி அவர்களே ! ஓட்டெடுத்து எனக்கொரு தீர்ப்புக் கூறுவீர் !

ஆனிடஸ்: உமக்கொரு தீர்ப்பு கிடைக்கும் ! நிச்சயமாகக் கிடைக்கும் ! நீவீர் ஏதென்ஸ் தெய்வங்களை எள்ளி நகையாடி ஏளனம் செய்தவர் அல்லவா ? வரம்பு மீறி நீவீர் உமது முறையில் விளக்கம் செய்து எமது தெய்வங்களைத் திட்டியவர் அல்லவா ?

சாக்ரடிஸ்: உலக தெய்வத்தை மதிப்பவன் நான் ! ஏதென்ஸ் தெய்வங்கள் எல்லாம் உலகக் கடவுள் ஒன்றில் அடங்குபவை ! ஆதலால் நான் ஏதென்ஸ் தெய்வங்களை அவமதித்தவன் என்னும் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டேன் !

நீதிபதி ஃபிலிப்: சாக்ரடிஸ் ! நீவீர் இப்போது பிரமிட் பீடத்திலிருந்து பேசுகிறீர் !

ஆனிடஸ்: ஆம் சாக்ரடிஸ் எப்போதும் பீடத்தில் நின்றுதான் பேசுவார் ! சாக்ரடிஸ் ! நீவீர் சீர்திருத்தம் செய்ய விரும்புகிறீர் ! ஆனால் எமக்குச் சீர்திருத்தம் தேவையில்லை ! நாங்கள் தவறு செய்யும் போதெல்லாம் எங்களை நீவீர் முட்டாள் என்று திட்டுவதை யாம் வெறுக்கிறோம். இங்கே எல்லாருக்கும் முன்பு நீவீர் கூறிய உமது கொடும் வார்த்தைகளே உமக்குக் கடும் தண்டனை விதிக்கும். ஆகவே இந்த மன்றம் உம்மைக் கண்டிக்க ஓட்டெடுக்க வேண்டும் !

நீதிபதி ஃபிலிப்: இரண்டு தரபினரும் ஓட்டெடுக்கச் சொல்லி மன்றத்தை வேண்டியுள்ளார். மன்ற அதிகாரிகளை விளிப்பீர் ஓட்டெடுக்கும் கூடையோடு வரும்படி ! கூட்டத்தில் புகுந்து அவரவர் விருப்பத்தை வாக்கெடுப்பில் அறிந்து வாரீர் !

(இரண்டு இராணுவக் காவலர் வாக்குக் கூடையோடு கூட்டத்தில் நுழைகிறார். வாக்கெடுப்புப் பணி முடிந்த பிறகு காவலர் பெற்ற ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நீதிபதி சைரஸ் எண்ணிக்கையைச் சோதிக்கிறார்.)

சைரஸ்: காவலர் காப்டன் ஒரு தகவல் கொண்டு வந்துள்ளார். நாற்பது பேர் கையெழுத்திட்டு சாக்ரடிசுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

நீதிபதி ஃபிலிப்: யார் அனுப்பியுள்ளார் ?

சைரஸ்: கிரிடோ அனுப்பியுள்ளார் ஒரு தூதர் மூலமாக ! கிரிடோவும் சாக்ரடிசுடன் கைது செய்யப்பட வேண்டியவர் ! ஆனால் கிரிடோ மறைமுகமாக இருக்கிறார் !

நீதிபதி ஃபிலிப்: அது எனது தவறில்லை.

சைரஸ்: கிரிடோவும், ஆகாத்தானும் விடுதலையாய் ஒளிந்து உ:ள்ளது வரை சாக்ரடிஸ் மட்டும் சிறைக்குப் போவது சரியில்லை.

ஃபிலிப்: சாக்ரடிஸ் இன்னும் தண்டிக்கப்பட வில்லை. முதலில் எத்தனை ஆதரவு ஒட்டுகள் எத்தனை எதிர்ப்பு ஓட்டுகள் என்று எண்ண வேண்டும்.

(ஃபிலிப் ஆதரவு/எதிர்ப்பு ஓட்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்து மற்ற நீதிபதிகளுக்குக் காட்டுகிறார்.)

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! எழுந்து நில் ! தீர்ப்பைக் கேள் ! (சாக்ரடிஸ் எழுந்து நிற்கிறார்) நீ நியாயம் வேண்டும் உனக்கென்று சில மணி நேரதிற்கு முன் வாதாடினாய் ! இந்த மன்றம் உனக்கு அதை அளித்துள்ளது !

***************************

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது செல்வாக்குக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

“எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்.”

சாக்ரடிஸ்

 

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

நீதிபதி ஃபிலிப்ஸ்: சாக்ரடிஸ் ! எழுந்து நில் ! தீர்ப்பைக் கேள் ! (சாக்ரடிஸ் எழுந்து நிற்கிறார்) நீ நியாயம் வேண்டும் உனக்கென்று சில மணி நேரத்திற்கு முன் வாதாடினாய் ! இந்த மன்றம் உனக்கு அதை இப்போது அளிக்கிறது ! உன் முதிய வயதை மன்றம் நினைவில் கொண்டுள்ளது. இளவயதில் நீ தைரியமாய் ஏதென்ஸ் நகருக்காக போர்ப்பணி புரிந்ததையும் நினவிலே வைத்துள்ளது ! இப்போது நீ வறுமையில் வாடுவதையும் மறக்க வில்லை ! வாழ்நாள் பூராவும் நீ மெய்ஞானத்தைத் தேடியே வறுமையில் வீழ்ந்தாய் என்பதும் தெரியாமல் இல்லை ! எப்போதும் நீ நேர்மையாக வாழ்ந்தாய், மிக்க நேர்மையாக வாழச் சொன்னாய் என்பதையும் யாம் அறிந்தோம். இங்கு உன்னைக் குற்றம் சாட்டியோர் கூட உன்னைப் பொய்யன் என்று சொன்னதில்லை. லஞ்சம் வாங்கி மனம் மாறுபட்டதாகக் குறை கூறவில்லை. ஐயமின்றி நீ ஓர் ஞானி. திருச்சபையினர் (Oracle) நீவீர் ஓர் உலக மேதை என்று உனக்குப் புகழாரம் சூட்டினார். உமது கணிப்புக்கு நீவீர் ஒரு பிழையும் செய்யாதவர் என்று எமது முன்பாகக் காட்டிக் கொள்கிறீர் ! நாங்கள் பொது நபர் என்ற முறையில் எங்களுக்கு நீவீர் குற்றவாளியாகத் தெரிய வில்லை ! ஆனால் நீதிபதிகள் என்னும் முத்திரையில் எங்கள் முன்பு நீவீர் ஒரு குற்றவாளியாகத்தான் நிற்கிறீர் ! உமது வழக்கில் எதிர்ப்பு வாதங்கள்தான் முடிவில் உம்மைக் காப்பாற்றப் போகின்றன ! உம் மீது தாக்கப் பட்டக் குற்றச் சாட்டுகளை நீவீர் மறுத்துள்ளீர் ! குற்றம் சாட்டியவரை முட்டாள்கள் என்று சுட்டிக் காட்டி நீவீர் உமது குற்றச் சாட்டுகளை நிராகரித்துள்ளீர் ! சாக்ரடிஸ் ! விதி உமது கண்களைக் குருடாக்கி விட்டது இவைதான் உமது குற்றத்துக்குக் காரணம் என்பதை உமக்குக் காட்டாது. நீவீர் எள்ளி நகையாடி இருப்பதை நோக்கும் போது ஓர் ஞான ஏதேட்சைவாதியாக ஆகியிருப்பதன் காரணம் தெரிகிறது ! உமது உள் நோக்கம் எதுவாக இருப்பினும் சரி இப்போது நீவீர் ஏதென்ஸ் நாட்டின் புரட்சித் தளபதி என்பது தெளிவாகிறது. பாதிக்கப்படப் போவது உமது வாழ்க்கையா அல்லது ஓராயிரம் ஏதென்ஸ் மக்கள் வாழ்க்கையா ? நியாயத்துக்குச் சார்பாக உனக்கு மரணத் தீர்ப்பா அல்லது ஏதென்ஸ் மாந்தர் இன்னல்களா என்று நீவீர் தராசில் நிறுத்துப் பார்ப்பதில்லை ! நியாயம் இருக்கலாம் உமது எதிர்ப்பு வாதங்களில் ! ஆனால் நீதிபதிகளான நாங்கள் பாரபட்சம், பரிவு, ஓரவஞ்சகம் காட்ட முடியாது ! பரிவோடிருந்தால் நாங்கள் உமக்காக ஓராயிரம் நபருக்குப் பாதகம் இழைக்க வேண்டும் ! உமக்குப் பாரபட்சமா ? ஏராளமான ஏதென்ஸ் மக்களுக்கு ஓரவஞ்சகமா ? இதுதான் எங்கள் மனப் போராட்டம் ! சாக்ரடிஸ் ! ஓட்டெடுப்பு விளைவை இப்போது வெளியிட விரும்புகிறேன் ! 242 பேர் உனக்கு எதிராகவும் 185 பேர் உனக்கு ஆதரவாகவும் ஓட்டளித்திருக்கிறார். மூன்றில் இருபங்கு ஜூரர் உம்மைக் குற்றவாளியாகக் கூறியுள்ளார். ஆதலால் நான் உனக்குத் தண்டனை விதிக்கிறேன் ! குற்றம் சாட்டியோர் என்ன தண்டனை தரலாம் என்று ஆலோசனை கூறலாம் !

(மன்றத்தில் ஒரே கைதட்டல் ! ஆரவாரம் எழுகிறது.)

மெலிடஸ்: (சட்டென எழுந்து) எங்கள் ஆலோசனை சாக்ரடிசுக்கு மரண தண்டனை !

லைகான்: ஆம் நீதிபதி அவர்களே ! மரண தண்டனைதான் ஏற்றது !

ஆனிடஸ்: சாக்ரடிஸ் குற்றங்களுக்குத் தண்டனை மரணமே !

நீதிபதி டிரிப்தோலிமஸ்: அதற்கு நீவீர் கூறும் காரணங்கள் என்ன ?

மெலிடஸ்: அதற்கு நாங்கள் கூற வேண்டுமா ?

நீதிபதி டிரிப்தோலிமஸ்: காரணமின்றி ஒருவனைக் கொல்ல நீவீர் விரும்புகிறீரா ? அதற்குப் பதிலாக அவரை நாடு கடத்தலாம் அல்லவா ?

ஆனிடஸ்: ஏதென்ஸ் மாந்தர் நன்மைக்கு மரணம் ஒன்றுதான் இந்த மனிதனை ஒழிக்க முடியும். தீர்த்துக் கட்டுங்கள் சாக்ரடிஸை ! இனிமேல் இந்தக் கீழ்நிலை எமக்கு நேராது ! எமது செவிகளில் இனிமேல் அவரது வரட்டு உபதேசம் ஒலிக்காது ! நாடு கடத்தப் பட்டவன் மீண்டும் நாட்டுக்குள் நுழையலாம். ஆனால் செத்தவன் மீள மாட்டான் !

நீதிபதி ஃபிலிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாடியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக் கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

***************************

“புறப்படும் வேளை வந்து விட்டது எனக்கு ! நாம் அவரவர் பாதைகளில் போகிறோம், நான் சாவதற்கு, நீவீர் வாழ்வதற்கு ! கடவுளுக்கு மட்டும் தெரியும் எந்தப் பாதை மிகச் சிறந்தது என்று. ஆழ்ந்து சிந்திக்காத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”

“நான் கிரேக்கனோ அல்லது ஏதென்ஸ் நகரத்து மனிதனோ அல்லன். ஆனால் நானோர் உலகக் குடிமகன்.”

“எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

நீதிபதி ·பிளிப்ஸ்: சாக்ரடிஸ் ! உன்னைக் குற்றம் சாட்டியவர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! மாறாக நீ என்ன தண்டனைத் தேர்ந்தெடுக்கிறாய் ? உனக்கு அவ்வுரிமை தரச் சட்டம் அனுமதிக்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்டதை யாம் முடிவு செய்வோம். உனக்கு மூன்றில் ஒருபங்கு ஆதரவாளர்தான் இருக்கிறார். நீவீர் தேர்ந்தெடுக்கும் சட்ட விதிக்குட்பட்ட தண்டனையைப் பொது மக்களும் ஏற்றுக் கொள்வார்.

சாக்ரடிஸ்: எனக்கு நானே தண்டனை இட்டுக் கொள்ள என்ன இருக்கிறது ? எந்தக் குற்றமும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. நீவீர் சாட்டிய எந்தக் குற்றதையும் நான் ஏற்றுக் கொண்டதும் இல்லை. இங்கு ஜூரர்களில் பெரும்பான்மையோர் என்ன முடிவு செய்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நீதிபதி சைரஸ்: சாக்ரடிஸ் ! உமக்கு விழுந்த ஓட்டுக்களின் எண்ணிக்கை பற்றி உளவிக் கருத்தாட எமக்கு அங்கீகாரம் உள்ளது.

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சாக்ரடிஸ் ! நீயே சொல் உன் குற்றத்துக்கு உகந்த தண்டனையை !

சாக்ரடிஸ்: அப்படியானால் சொல்கிறேன். நான் இதுவரைச் செய்தவை என்ன என்று முதலில் பார்க்கலாம். குணம் நாடிக் குற்றமும் நாடித் தீர்ப்பு அளிப்பீர் ! நான் நாட்டு விடுதலைக்குப் பகைவரை எதிர்த்துப் போராடினேன் ! உமது வாழ்வுக்கு நீங்கள்தான் பொறுப்பாளிகள் என்று மனிதக் கடமையைச் சுட்டிக் காட்டினேன். தேசத்தின் செல்வாக்குக்கும் சீரழிவுக்கும் நீங்கள்தான் காரணம் என்று நீண்ட காலமாய்ச் சொல்லி வருகிறேன். நான் வறுமையில் உழன்றாலும் உம்மை விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறேன். நானிப்படிச் சமூகத்தின் நலனுக்காக மெய்வருந்தக் கூடாது என்று என் மனைவி தினமும் என் கன்னத்தில் இடிக்கிறாள். இவற்றை எல்லாம் தீர்ப்புக்கு எடுத்துக் கொண்டால், தண்டனையாக என்னை ஏதென்ஸ் நாட்டிலிருந்து நாடு கடத்தலாம். நீதிபதி அவர்களே ! என்னை நாடு கடத்தினால் என் வயதான மனைவிக்கு ஆயுள் பூராவும் ஓய்வு ஊதியம் (பென்சன்) அளிக்கும்படி வேண்டுகிறேன். அல்லது நீங்கள் எனக்குப் பண அபராதம் விதிக்கலாம். நான் செல்வந்தனாக இல்லாததால் பெரிய தொகை தர இயலாது. என்னால் சிறிதளவுத் தொகை தர முடியும். என் ஆலோசனை ஒரு மினா (Mina means Ancient Greek Money about 5 dollar) அபராதம் ! அது மிகச் சிறு தொகை என்று எனக்குத் தெரியும். அதுதான் உமக்குக் கிடைக்கும் ! அதுதான் என்னிடம் இருப்பது ! நாடு கடத்தலா இல்லை பண அபராதமா ? நீதிபதி அவர்களே ! அது உங்கள் முடிவு !

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! உமக்குத் தெரிகிறதா ? உமது ஆலோசனைத் தண்டனைக்கும் வழக்கிட்டோர் விதித்துள்ள தண்டனைக்கும் இடைப்பட்ட ஒரு முடிவை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்பது எங்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. சட்டம் வேறெதைத் தேர்ந்திடவும் வழி காட்டவில்லை. ஆனால் உமது ஆலோசனைத் தண்டனை வேடிக்கையாக உள்ளது, மூன்று பெரும் தேசத் துரோகங்களுக்கு ஒரு மினா அபராதமா ? எங்களுக்குக் கெட்ட பெயர் கிடைக்க வழி செய்கிறீர். நாடு கடத்தினால் மீண்டும் ஏதென்ஸ் நாட்டுக்குள் புகுவாய் என்னும் புகார் எழுந்துள்ளது.

சாக்ரடிஸ்: அபராதத் தண்டனைக்கு ஓர் ஏழை எளியன் தன் உடைமை அனைத்தையும் சமர்ப்பிப்பான் என்பது உங்கள் நினைப்பா ? நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஓப்புக் கொள்ளாத குற்றங்களுக்கு எப்படி நீங்கள் தண்டனை இடலாம் நீதிபதி அவர்களே ? ஒன்றும் இல்லாதவன் என்று நினைத்துத்தானே என்னை நீங்கள் அவமானப் படுத்துகிறீர் ! என்னுடைய அபராத தண்டனை ஆலோசனையை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

(லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

The Final Verdict to Socrates

“நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது தனித்துவத்துக்கோ அல்லது சொத்துக்கோ ஒப்பாகச் சிந்திக்காது, ஆத்மாவின் உன்னதச் செம்மைபாட்டுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்தி உங்கள் எல்லோரையும் இணங்க வைப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. நான் சொல்கிறேன் நேர்மை நெறி (Virtue) செல்வத்தால் வருவதில்லை ! ஆனால் செல்வம் நேர்மை வழியில் வர வேண்டும். அதுபோல் பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் அடுத்தடுத்து நல்லவரும் தோன்ற வேண்டும். இதுதான் என் உபதேசம். எனது இந்தக் கோட்பாடு (ஏதென்ஸ்) வாலிபரை எல்லாம் கெடுக்கிறது என்றால் நான் ஒரு போக்கிரி மனிதனே.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.

நேரம் : பகல் நேரம்.

பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.

காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மூன்று நீதிபதிகள் (·பிளிப், டிரிப்தோலிமஸ், சைரஸ்) மன்றத்துக்குள் நுழைந்து முன்னால் அமர்கிறார். மக்கள் அரவம் அடங்குகிறது.

(தொடர்ச்சி முன் காட்சியிலிருந்து)

நீதிபதி ·பிளிப்: போதும் நிறுத்து சாக்ரடிஸ் ! முப்பெரும் தேசத் துரோகங்களுக்கு உம்மைக் குற்றம் சாட்டியோர் உமக்கு மரண தண்டனை விதிக்கச் சொல்கிறார் ! சாக்ரடிஸ் நாடு கடத்தலை ஏற்றுக் கொள்கிறார். அல்லது ஒரு மினா பணத்தை அபராதம் கட்ட ஒப்புக் கொள்கிறார். நாங்கள் எமது தீர்ப்புக் தண்டனையைத் தீர்மானித்து விட்டோம். (நீதிபதிகள் சைரஸ், டிரிப்தோலிமஸ் ஆகியோர் இருவரையும் ஓரக் கண்ணில் பார்த்துப் பேசிய பிறகு) நீதிபதிகள் உமக்கிடும் தண்டனை இதுதான் ! மரண தண்டனை ! ஆம் மரண தண்டனை ! சாக்ரடிஸ் ! நீ கெம்லாக் நஞ்சைக் குடித்து மடிய வேண்டும் ! அந்த நாளை நாங்கள் பின்னொரு சமயம் குறிப்பிடுவோம்.

(லைகான், மெலிடஸ், ஆனிடஸ் மூவரும் எழுந்து கைகுலுக்கிக் கொண்டு கைதட்டுகிறார். நீதி மன்றத்தில் கைதட்டல்களும் ஆரவாரக் கூச்சல்களும் செவியைப் பிளக்கின்றன. சாக்ரடிஸ் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.)

சாக்ரடிஸ்: (எல்லோரையும் சுற்றி நோக்கி கைநீட்டி) உங்கள் எல்லோருக்கும் தெரியும், நான் மரண தண்டனையை எதிர்பார்த்தேன் என்று. மன்றத்தின் வழக்கு விசாரணை எனக்கு மரண தண்டனை விதிப்பதில் வென்று விட்டது ! முதலில் என் நற்குண நண்பருக்கு நன்றி கூற வேண்டும். என்னை விடுவிக்க ஓட்டளித்தமைக்கு ! என்னைக் காப்பாற்றி விடலாம் என்று கனவு கண்டதற்கு ! என்னைத் தப்புவிக்க அனுதினம் ஆர்வமோடு இருந்ததற்கு ! ஆனால் நாமொன்று நினைக்க விதி ஒன்றைச் செய்யும் ! மரண தேவன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான். மரண தேவனுக்கு அழைப்பு விடுத்த பிறகு யாரும் அவனை நிறுத்த இயலாது ! நேர்மை நெறிக்கு மதிப்புக் குறைவு ! உண்மை காலெடுத்து வெளியே எட்டு வைப்பதற்குள் பொய்மை ஊரை மூன்று முறை சுற்றி விடுகிறது ! மரணம் முழங்கை தூரத்தில் இருக்கும் எனது நண்பன் ! முடிவில் எல்லாம் மரணத்தில்தான் சங்கமம் அடையும் ! தப்பிக் கொள்ள நான் ஓடிப் போய் விடலாம் ! எங்கே ஓடுவது ? எந்த நாட்டுக்குள் ஒளிந்து கொள்வது ? எந்த நகரில் பாதுகாப்புக் கிடைக்கும் ? மரணப் பாதையில் யார் நம்முடன் கூட வருவது ? மறைந்து கொள்ளத் தூண்டுவது மரண மில்லை, தீய எண்ணம். முதிய இந்த வயதில் மெதுவாய் நடக்கிறேன். நான் சாவதற்கு முன் எனக்குத் தண்டிப்பு மரணமா ? மரணம் இப்போது என்னைக் கைவிடாது ! வயதாயினும் மரணம் என்னை விடாது. இளைஞாயினும் மரணத்திலிருந்து தப்ப முடியாது. பழி சுமத்தியோர் பரவசம் அடைய எனக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. செத்தவன் கடன் அடைக்க மாட்டான் ! வாழ்வது மரணம் அடைவதற்கு ! பிறப்பதின் விதி முறை முடிவில் இறப்பது ! அப்படி எண்ணினால் மரணம் ஒன்றுமில்லை ! கனவற்ற உறக்கம் மரணம் ! உறங்குவது போல்வது இறப்பு ! உறங்கி விழிப்பது போல்வது பிறப்பு ! ஒரு நாணயத்தின் ஒரு முகம் பிறப்பு ! மறு முகம் இறப்பு ! இறப்பதற்கு அஞ்ச வில்லை நான் ! பிறந்ததற்கு வருந்த வில்லை நான். நித்திய உறக்கம் இறப்பு ! உதய சூரியன் எழுப்பாத உறக்கம். சுடுகாட்டுப் பீடத்தில் அமர்ந்து நீதிபதிகள் தீர்ப்பளித்தார். தீர்ப்பைக் கையில் வைத்துக் கொண்டு என்மீது வழக்காடல் செய்தார். ஞான மேதைகள் நீதிபதிகளாய் இருந்தால் என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கிடைத்திருக்கும். மன்றத்தில் என் மனத்தைக் காயப் படுத்தினார் ! என் சிந்தனகளைக் கேலி செய்தார். கால தேவன் எனக்குக் கை விலங்கு போட்டிருக் கிறான். உமது வேலை முடிந்தது ! என் பணியும் முடிந்தது ! நீவீர் வாழச் செல்கிறீர் ! நான் சாகச் செல்கிறேன். கடவுள் ஒருவர்தான் அறிவார் எது நெறி, எது வெறி என்று. புனித தேவதை இறுதியில் என்னைப் பார்த்து உன் இனிய இச்சை என்ன வென்று கேட்டால், ‘மீண்டும் நானிந்த ஏதென்ஸ் நகரில் பிறக்க வேண்டும்,’ என்று நான் சொல்வேன் ! நீதிபதி அவர்களே ! உங்கள் ஏகோபித்த தீர்ப்புக்கு என் மறுப்பு எதுவும் இல்லை !

Hemlok Poison given to Socrates

நீதிபதி ·பிளிப்: சாக்ரடிஸ் ! மீண்டும் ஒருமுறைச் சொல்கிறேன் ! உன் தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை. நீ கெம்லாக் நஞ்சைக் குடிக்க வேண்டும் நாங்கள் குறிப்பிடும் நாளில் ! (காவலரை பார்த்து) அவரைச் சிறைக்குக் கொண்டு செல்வீர் ! நீதி மன்ற வழக்காடல் இத்துடன் முடிந்தது !

(காவலர் விலங்கிட்ட சாக்ரடிஸை அழைத்துச் செல்கிறார். நீதிபதி ·பிளிப் மனக் குழப்பம் அடைந்து விரைவாக எழுந்து செல்கிறார்)

நீதிபதி சைரஸ்: (காவலன் ஒருவனைப் பார்த்து) யார் அரசாங்கக் கைதிகளை மேற்பார்வை செய்கிறார் என்று தெரிந்து என்னைக் காணும்படி உடனே அழைத்து வா. (மெதுவாக) யாரும் அறியக் கூடாது எந்தச் சிறையில் சாக்ரடிஸ் அடைபட்டுள்ளார் என்று ! யாரும் அவரைக் காணக் கூடாது ! யாரும் சாக்ரடிஸை மீட்க வந்தால் அவரை உடனே கொன்று விட வேண்டும் ! அவரை நான் நாட்டு துரோகிகள் என்று பழி சுமத்துவேன் !

நீதிபதி டிரிப்தோலிமஸ்: சைரஸ் ! இந்த வெறியும், வெறுப்பும் நம்மை வெறியர் என்று காட்டும். இந்தக் கடும்போக்கு நமக்குத் தேவையில்லை. யாரும் சாக்ரடிஸைக் காப்பாற்றத் துணிய மாட்டார் ! அப்படி நடந்தாலும் தண்டித்த பிறகு சாக்ரடிஸ் தப்பிச் செல்ல உடன்பட மாட்டார் !

சைரஸ்: என்னருமை டிரிப்தோலிமஸ் ! தெரிந்துகொள், மிக நெருங்கிய ஓட்டு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தவர் சாக்ரடிஸ் ! அவரைக் காப்பாற்றப் பல நண்பர் காத்திருக்கிறார். நாம் தாமதம் செய்யக் கூடாது ! நாள் கடத்தாமல் நாளைப் பொழுதிலே தண்டிப்பு நாளைக் குறித்திடுவோம் ! நமது முதல் வேலை அதுதான் நாளைக் காலையில் !

(சைரஸ் எழுந்து வெளியேறுகிறார். டிரிப்தோலிமஸ் தலையில் கை வைத்துச் சிந்தனையில் ஆழ்கின்றார். பொது மக்களும், ஜூரர்களும் கலைந்து மன்றத்தை விட்டு வெளியேறுகிறார்)

***************************

“புன்னகை புரி மெக்கில்லஸ் ! சூரியன் மீண்டும் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !”

சாக்ரடிஸ்

“ஓர் ஆத்மா தன்னை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அது ஆத்ம நன்னெறி, ஞானம் போன்ற துறைகளைத் தேடும் மற்றோர் ஆத்மாவோடு ஈடுபட வேண்டும். யாராவது கூற முடியுமா புரிதலும், அறிதலும் மேவிய ஆத்மாவை விடத் தெய்வீகம் பெற்றது ஒன்று உள்ளதா என்று ? அப்போது அந்த முறையே எல்லாவற்றையும் புரிந்து, அறிந்து கொண்ட தெய்வீக உணர்வு பெற்றுத் தன்னையும் உணர்ந்திடும் பண்பாடைப் பெறுகிறது.”

“ஞானமும், திறமையும் கொண்டுள்ள ஒருவரை நாம் உடனே தெரிந்து கொள்கிறோம். அவை அவருடைய உடல் தோற்றத்தையோ, செல்வத்தையோ, அதிகார ஆற்றலையோ சார்ந்தவை அல்ல.”

சாக்ரடிஸ்

******************************

அங்கம் -4

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான்.

மெக்கில்லஸ்: (சாக்ரடிஸை மெதுவாகத் தட்டி) சாக்ரடிஸ் ! சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: (கண் விழித்தும் கண் மூடியும் எழுந்து) ஓ மெக்கில்லஸ் ! விடிந்து விட்டதா ?

மெக்கில்லஸ்: வணக்கம் சாக்ரடிஸ் ! இன்னும் பொழுது விடிய வில்லை ! கீழ்வானம் மட்டும் சிவந்துள்ளது ! சிவந்த கண்ணுடன் கதிரவனின் கதிர்கள் அக்ரபோலிஸ் மலைச் சிகரத்தை எட்டி விட்டன ! பொழுது புலர்வதற்கு முன்னே நீங்கள்தான் என்னை எழுப்பச் சொன்னீர்.

சாக்ரடிஸ்: (எழுந்து உட்கார்ந்து) நன்றி மெக்கில்லஸ் ! நல்ல தூக்கம் எனக்கு ! நன்றாகத் தூங்கி விட்டேன் ! மீளாத உறக்கத்துக்கும் முன் மேலான தூக்கம் ! சுகப் பொழுதாய் விடியப் போகிறது.

மெக்கில்லஸ்: (மனம் வருந்தி) என்ன சுகப் பொழுதா ? எப்படி நிம்மதியாகத் தூங்க முடிந்தது ? எனக்குத் தூக்கம் வரவில்லை சாக்ரடிஸ் ! இன்று இறுதிக் காலை அல்லவா ? (சங்கிலியைக் கழற்றி) நான் இப்போது சங்கிலியை நீக்குகிறேன். சட்டப்படிக் கடைசி நேரத்தில் கட்டிய சங்கிலியை நீக்கலாம் என்று விதி உள்ளது !

Socrates in Prison

சாக்ரடிஸ்: புன்னகை புரி மெக்கில்லஸ் ! மீண்டும் சூரியன் உதிப்பான் ! ஆனால் நானதைக் காண வாழ மாட்டேன் ! எனக்கு விலங்கெதற்கு ? அவிழ்த்து விட்டாலும் இந்தக் கிழட்டு மாடு ஓடிச் செல்லாது ! சிறைக்கதவு திறந்திருந்தாலும் இந்தப் பறவை பறந்து போகாது !

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உமது விடுதலை பறிபோனதற்கு நான்தான் பழிக்கப்பட வேண்டியவன்.

சாக்ரடிஸ்: ஒரு திசையில் பார்த்தால் அது சரியாகத் தோன்றுகிறது. ஆனால் வீணாய்க் கலங்காதே நீ ! யாருக்குக் கேடு நேர்ந்தாலும் பழிக்கு ஒருவர் மட்டும் காரணமாக இருக்காது ! நானும் அதற்கோர் காரண கர்த்தா ! நீதிபதிகள் என்னை மன்றத்தில் குற்றவாளியாக முத்திரை அடித்துள்ளார் !

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! நீவீர் அரசாங்க ஆணைக்கு அடி பணிந்து போகிறீர். நானோ சிறைக் கதவைப் பூட்டும் சாவியைக் கையில் வைத்திருப்பவன் ! மனித இனத்துக்கு விடுதலை வாழ்வுதான் முதல் மூச்சு ! முடிவான மூச்சு ! விடுதலை இல்லாத மனிதன் பாதி செத்தவன் !

சாக்ரடிஸ்: விடுதலை தேடுவது அடிமைகளின் வழிபாடு ! ஆனால் நான் அடிமை அல்லன் ! உரிமை பறிபோன அரை மனிதன் ! உயிர் போன பின் அரை வாழ்வும் பூஜியமாகிறது !

மெக்கில்லஸ்: அடிமை இனத்தார் பரம்பரையாய் முடங்கிக் கிடக்கும் நடைப் பிறவிகள் ! அடிமைத் தனத்தை விட்டு வெளியேறப் பலர் விருப்பம் அடையார் !

சாக்ரடிஸ்: நம்மைப் போல் அடிமைகளாய் இல்லாதவரும் ஏதாவது ஒரு விதிமுறைக்கு அடிமை யாகத்தான் வாழ்கிறார் !

மெக்கில்லஸ்: நாம் அடிமைகள் அல்லர் ! நாம் விடுதலை மனிதர் !

சாக்ரடிஸ்: நாம் விடுதலை மனிதரா ? உறக்கமற்ற ஒருநாள் இரவு ! உணவில்லாத ஒருநாள் பகல் ! உடல் மறைக்கும் ஆடையில்லாத வறுமை ! தங்குமிட மில்லாத தரித்திர நிலை ! அவை அனைத்தும் நம் அடிமை ஆத்மாவைச் சுட்டெரிக்கின்றன ! ஒரு சில நாட்களிலோ ஒரு சில மாதங்களிலோ ஒரு சில ஆண்டுகளிலோ நாம் மரித்து விடுவோம் ! நாமிந்த உடம்பில் முடங்கி உயிரோடு வாழும் வரை நாமெல்லாம் உடம்புக்கு அடிமையாக வாழ்கிறோம் ! வயிற்றுக்குப் பசி, வாயிக்குத் தாகம், உடலுக்கு உறவு – இப்படி உடல் இச்சைகள் நம்மை விலங்கிட்ட அடிமைகள் நாம் ! முற்றிலும் விடுதலை அடைவது முடிவில் மரணத்தில்தான் ! உயிர் வாழ்க்கையே மனிதருக்கு அடிமை வாழ்வுதான் ! மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர்ப் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !

மெக்கில்லஸ்: அது என் வேலை இல்லை சாக்ரடிஸ் ! நாட்டை விட்டே நான் ஓடி விடுவேன் கெம்லாக் நஞ்சைக் குடிக்க நேரிட்டால் ! (சிறிது தயங்கி) நடைச் சத்தம் கேட்கிறதா ? யாரோ வருகிறார் உம்மைக் கடத்திச் செல்ல !

சாக்ரடிஸ்: ஆமாம் யாரோ வரும் அரவம் கேட்கிறது ! அடுத்தோர் சிறைக் காவலனாக இருக்கலாம் !

(கையில் கத்தியுடன் மெக்கில்லஸ் கதவுக்குப் பின்புறம் ஒளிகிறான்.)

***************************

 

“மரணமே மனிதனுக்குப் பூரண விடுதலை அளிப்பது ! உயிர் வாழும் பிறவிகளுக்குப் பூமியில் பூரண விடுதலை கிடைப்பதில்லை மெக்கில்லஸ் ! நீயொரு விடுதலைத் தீரனாக வாழ நினைத்தால், முதலில் அடிமையாய் வாழும் மனிதர் இடர்களை நீக்கு ! அவரது குறைகளைத் தவிர் ! மன வேதனையைப் போக்கு ! கெம்லாக் நஞ்சுக்கு மாற்று மருந்து ஒன்றைக் கண்டுபிடி ! நாளைக்கு உனக்கும் நாட்டை ஆளும் அரசு கெம்லாக் நஞ்சை ஊட்டலாம் !”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான்.

மெக்கில்லஸ்: (கதவுக்குப் பின் மறைந்து கொண்டு) யாரும் என்னைத் தவிர சிறைச்சாலைக் காப்புக்கு ஏற்பாடு செய்யப் படவில்லை ! வருவது யார் ?

(கிரிடோ உள்ளே நுழைகிறான். உடனே மெக்கில்லஸ் பின்னால் பாய்ந்து சென்று கிரிடோவின் கழுத்தைப் பிடித்துக் கத்தியை நீட்டுகிறான்.)

கிரிடோ: (பதட்டமுடன்) சிறைக்காவலனே பொறு ! நான் பகைவன் அல்லன் !

சாக்ரடிஸ்: அடப் பாவி ! கிரிடோ நீயா ? எதற்கு நீ தனியாக வந்தாய் ? அரசாங்கப் பாதுகாப்புகளை எப்படி மீறி வந்தாய் ? நானிருக்கும் இடம் எனக்கே தெரிய வில்லை; உனக்கு எப்படித் தெரிந்தது ?

(மெக்கில்லஸ் கிரிடோவின் பிடியைத் தளர்த்திக் கத்தியை உறைக்குள் சொருகுகிறான்)

கிரிடோ: என் கழுத்தை அறுத்திருப்பாய் ! நீ என் முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்ததால் வந்த பயங்கரச் செயல் இது ! நான் யாரென்று நீ அறிவாயா ?

மெக்கில்லஸ்: நீ யாராய் இருந்தால் என்ன ? சிறைக்குள் புகுவோரைச் சிரச்சேதம் செய்யென்று எனக்கு உத்தரவு ! உன் தலை தப்பியது சாக்ரடிஸ் வரவேற்பால்தான் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! கிரிடோ என் பழைய தோழன். நானும் அவனும் பல தடவைக் குடித்து ஒன்றாய்த் திரிந்திருக்கிறோம். அவனை விட்டு விடு. அவன் அப்பாவி.

கிரிடோ: என்னைப் பாதுகாப்பதற்கு நன்றி சாக்ரடிஸ் ! உம்மைப் பாதுகாக்க இப்போது யாருமில்லை ! அதுதான் என் கவலை.

மெக்கில்லஸ்: உண்மையைச் சொல் ! உனக்கு எப்படித் தெரியும், சாக்ரடிஸ் இங்கு அடை பட்டிருப்பது ? எனக்குத் தெரிய வேண்டும் அது !

கிரிடோ: (கவலையற்று) இதெல்லாம் ரகசியம் ! எமக்குத் தெரியும் இந்த ரகசியச் சிறை !

மெக்கில்லஸ்: உமக்கு யார் சொன்னது ? எனக்குத் தெரியம் உமது ரகசியம் ! நான்தான் ஒரு ரகசியத் தகவலை உங்கள் வேலைக்காரன் ஒருவன் மூலம் அனுப்பினேன். அப்படித்தான் உமக்குத் தெரிந்தது ! அந்தத் தகவலை அனுப்பியன் நான்தான் !

கிரிடோ: (நன்றி ஆர்வமோடு) ஓ ! நீதான் அந்தத் தகவலை அனுப்பியவனா ? அது எனக்குத் தெரியாது.

மெக்கில்லஸ்: (குரலைத் தாழ்த்தி) மெதுவாகப் பேசு ! ரகசியம் வெளியே தெரிந்தால் என் வேலை போய்விடும் ! ஏன் என் தலையே தரையில் உருண்டோடும் !

கிரிடோ: (அன்புடன் நெருங்கி மெக்கில்லஸ் கையைக் குலுக்கி) நன்றி நண்பனே ! நாங்கள் இந்த நன்றியை மறக்க முடியாது ! கடைசி தினத்தில் சாக்ரடிஸை இப்படி நேராகக் கண்டது என் அதிர்ஷ்டமே !

மெக்கில்லஸ்: (மெதுவாக) கிரிடோ இது ரகசியமாய் இருக்கட்டும் ! மறந்துவிடு இச்சம்பவத்தை. என் பெயர் வெளியே தெரியக் கூடாது ! என் தோலை உரித்து விடுவார் !

கிரிடோ: (சாக்ரடிஸைப் பார்த்து) உமது மனைவி பிள்ளைகள் உம்மைப் பார்க்க வந்தாரா ?

சாக்ரடிஸ்: பார்க்க அனுமதி தந்தார். நான்தான் பார்க்க மறுத்தேன். நேராகப் பார்ப்பது எனக்கும் மன வேதனை, அவருக்கும் மன வேதனை ! ஆனால் உனக்கொரு தனி அனுமதி வாங்க மறந்து போனேன். நீயே நேராக இப்போது வந்து விட்டாய்.

கிரிடோ: எமது உடை வாட்கள்தான் எங்களுக்கு அனுமதி தர வல்லது. ஆறு பேர் இப்போது உருவிய வாளுடன் வெளியே ஒளிந்து கொண்டு நிற்கிறார். நான்தான் முதலில் இங்கு தலையை நீட்டியவன் !

சாக்ரடிஸ்: எப்படிக் காவலர் கண்காணிப்பைக் கடந்து வர முடிந்தது ?

மெக்கில்லஸ்: நான்தான் சொன்னேனே, என்னைத் தவிர வேறு யாரும் நியமிக்கப் பட வில்லை. யாரும் சாக்ரடிஸைப் பார்க்க வரக் கூடாது என்பது எனக்கிட்ட விதி ! அப்படி வந்தால் அவரைக் கொன்று விடும்படி எனக்கு உத்தரவு !

கிரிடோ: எங்களைக் காவலர் தேடிக் கொண்டிருக்கிறார். நாங்களும் காவலர் கண்ணில் படாது ரகசியச் சிறைக்கு அருகே வந்து விட்டோம். எங்களை ஆபத்து விரட்டிக் கொண்டு வருகிறது. எந்த நிமிடத்திலும் நாங்கள் சிக்கிக் கொள்ளலாம் !

சாக்ரடிஸ்: அப்படியானால் ஓடிப்போ கிரிடோ ! என்னால் உன்னுயிருக்கு ஒன்றும் நேரக் கூடாது ! உங்கள் ஆட்களுக்கும் ஆபத்து நேரக் கூடாது. போ கிரிடோ போ ! சீக்கிரம் போய்விடு !

கிரிடோ: கவலைப் பாடாதீர் சாக்ரடிஸ் ! (மெதுவாக) வெளியே வாகனங்கள் தயாராக உள்ளன. பிரைவ்ஸ் (Piraievs) துறைமுகத்தில் ஒரு கப்பலே தயாராக நிறுத்தப் பட்டுள்ளது. நாங்கள் உம்மைக் கடத்திச் செல்ல வந்திருக்கிறோம். உம்மைத் தனியே விட்டுச் செல்லப் போவதில்லை.

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! இதுதான் என் திட்டமும். ஆனால் நான் நேராக அவ்விதம் என் தகவலில் எழுத வில்லை ! ஒருவேளை என் தகவல் அரசாங்கக் காவலர் கையில் கிடைத்தால் கடத்திச் செல்லும் திட்டம் கைகூடாமல் போகும்.

சாக்ரடிஸ்: ஆனால் கிரிடோ ! இங்கு எனக்கு எந்தக் குறையும் இல்லை. நன்றி கூறுவேன் தோழர் மெக்கில்லஸ் காவலருக்கு ! அரசாங்கக் கைதி மரியாதை அல்லவா எனக்குக் கிடைத்துள்ளது.

என்னைக் காப்பாற்ற நீ முயல வேண்டாம்.

மெக்கில்லஸ்: (சினத்துடன்) அப்படிப் பேச வேண்டாம் சாக்ரடிஸ் ! கெம்லாக் நஞ்சை நீங்கள் குடிப்பதை நான் தாங்கிக் கொள்ள முடியாது. என் கண்முன் நீங்கள் மரிப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது ! ஓடி விடுங்கள் கிரிடோவுடன் ! நான் எப்படியாவது தப்பிக் கொள்வேன் !

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! எனக்கு வியப்பாக உள்ளது ! நீ இப்படி அரசாங்கத்தை ஏமாற்றுவாய் என்று நீதிபதிகள் அறிய மாட்டார். காவல் அதிகாரியே என்னைக் கடத்திச் செல்ல விடுவதா ?

மெக்கில்லஸ்: கிரிடோ ! இந்தச் சதி வேலையைச் செய்வதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும். முதலில் என்னை அடித்துக் காயப்படுத்த வேண்டும் ! நான் சண்டையில் காயப்பட்டு மயக்கம் அடைந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அப்படியானால் எனக்குச் சிரச்சேதம் கிடைக்காது. என் வேலையும் பறி போகாது. சாக்ரடிசும் தப்பிக் கொள்வார். நானும் தப்பிக் கொள்வேன்.

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ கொஞ்ச நேரம் வெளியே நிற்பாயா ! நானும் கிரிடோவும் தனியாக இதைப் பற்றிப் பேச வேண்டும்.

கிரிடோ: இல்லை நாம் பிறகு பேசிக் கொள்வோம். இப்போது விவாதிக்க நேரமில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் விடிந்து விடும். இருள் முடிவதற்கு முன்னே நம் கடத்தல் வேலை முடிய வேண்டும் !

மெக்கிலஸ்: சரி நான் வாசலில் நிற்கிறேன். நீங்கள் தனியாகப் பேசுங்கள்.

(மெக்கில்லஸ் வெளியே சென்று மறைவில் நிற்கிறான்)

***************************

 

Last Days of Socrates

“ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”

“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”

“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைச்சாலை. காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito).

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான்.

கிரிடோ: (ஆத்திரமாக) சாக்ரடிஸ் ! நாமிப்போது வெளியேற வேண்டும். இன்னும் அரை மணி நேரத்தில் நகர மக்கள் விழித்துக் கொள்வார். வழியில் போகும் போது செய்வது சரியா தப்பா வென்று தர்க்கம் இடலாம். இப்போது கிளம்பினால் வழிக் காவலர் கண்களிலிருந்து நாம் தப்பி விடலாம் ! கப்பல் தயாராக நிற்கிறது. வெளியேறாமல் நாமிரும் பிடிபட்டால் நமது தலைகள் வாளால் சீவப்படும் !

சாக்ரடிஸ்: (படுக்கையிலிருந்து எழாமல்) உயிருக்குப் பயந்து நான் ஓட வேண்டுமா ? ஊருக்குப் பயந்து எங்கே ஓடுவது ? எங்கே போய் வசிப்பது ? மனைவியும் பிள்ளைகளும் தனியே இங்கு அனாதைகளாகத் தவிக்கும் போது நான் அவரை விட்டுவிட்டு அன்னிய நகரில் அகதியாக வாழ்வதா ? முயலை விரட்டும் ஓநாய்கள் ஒருபோதும் ஓயா ! தினம் தினம் சாவதை விட ஒரே சமயத்தில் மரிப்பது நிம்மதி அளிப்பது.

கிரிடோ: நீங்கள் பிழைத்துக் கொள்ளக் கடவுள் ஒரு சந்தர்ப்பம் தருகிறார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உயிரோடிருந்தால் ஏதென்ஸ் வாலிபருக்கு நீங்கள் இன்னும் நெடுங்காலம் உபதேசம் செய்யலாம் !

சாக்ரடிஸ்: ஏதென்ஸில் நானினி வாழ முடியாது. நான் விடைபெறும் தருணம் வந்து விட்டது கிரிடோ ! ஏதென்ஸ் நகரில் வாலிபரோடு நான் கருத்தாடல் புரியும் காலம் கழிந்து விட்டது. நீதி மன்றத்தில் கடவுள் என் ஆயுட் கால முடிவை எழுதி விட்டார் ! அதை நான் அழிக்க இயலாது ! ஐம்பது ஆண்டுகளாக நீடித்த என் உபதேச வாழ்க்கை ஓடிப் போனது. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் நான் உயிரோடு இருக்கலாம். நான் இன்று மாண்டாலும் சரி அல்லது நாளை மரித்தாலும் சரி என்ன மாறுபாடு உண்டாகப் போகுது !

கிரிடோ: நீங்கள் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு மகிழ்ச்சி தரும் !

சாக்ரடிஸ்: நான் நஞ்சு குடித்துச் சாக வேண்டும் என்று விதி உள்ளது ! நான் அவ்விதம் சாவதே எனக்குப் பெருமை தர வல்லது. அஞ்சி ஓடினால் நான் நேர்மையற்றவன் என்பது உறுதியாகும். நேர்மை இல்லாதாவன் என்று ஓடி ஒளிவதை விடைச் சீர்மை உள்ளவன் என்று நஞ்சுண்டு செத்து மடிவதே மேல் !

கிரிடோ: இது தற்கொலை சாக்ரெடிஸ் ! இதைத் தியாகம் என்று நினைக்காதீர் ! நீங்கள் தியாகியாக வரலாற்றில் பேரெடுக்க விழைகிறீரா ?

சாக்ரடிஸ்: தியாகள் தமது கொள்கைக்காக வேதனைகளைச் சகித்துக் கொள்வார். என் கொள்கைகள் எனக்குத் தொல்லைகள் தருவதில்லை ! நான் எந்த சொந்தக் கொள்கையையும் பரப்ப வில்லை ! அவற்றை நிலைநாட்ட நான் எனது உயிரைக் கொடுக்க வில்லை. கெம்லாக் நஞ்சு எனக்கு வேதனை தராது ! நான் மரித்த பிறகு எனது கொள்கை எதையும் நீவீர் பரப்ப நான் எதிர்பார்க்க வில்லை !

கிரிடோ: என்ன பேச்சு இது சாக்ரடிஸ் ? எனக்குப் புரிய வில்லை !

சாக்ரடிஸ்: நான் வாழ்ந்தாலும் சரி அல்லது செத்தாலும் சரி என் கொள்கையை மாற்ற நான் விரும்பவில்லை. சத்தியத்தைத் தேடும் ஒருவனுக்குத் தன்னுயிர் ஒன்றும் பெரிதில்லை.

கிரிடோ: என்ன மாதிரி சத்தியம் உமது உயிருக்கு ஒரு மதிப்பும் தருவதில்லை ?

சாக்ரடிஸ்: நான் என் உயிருக்கு மதிப்பு அளிக்க வில்லை. ஆனால் நேர்மை நெறி வாழ்வை மிகவும் மதிக்கிறேன். எனது இறுதிப் போராட்டமான மரணம் என்னை எதிர்நோக்கி வரும் போது என் வாழ்க்கை சிறப்பாக இல்லாவிடில் நான் என் வழிமுறையை மாற்ற முனைவேன்.

கிரிடோ: வாழ்க்கையில் எதிர்த்துப் போராடாது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்புவது கோழைகளின் பலவீனம் அல்லவா ?

சாக்ரடிஸ்: உயிருக்குப் பயந்தவன் கோழை ! பணிவு இல்லாதவன் பலவீனன் ! உனக்குத் தெரியும் ஒரு சில மணிகளில் சாகப் போகும் மனிதனின் மனோ நிலை ! சாவதற்கு எனக்கு வல்லமை உள்ளது. தப்பிச் செல்ல எனது மனம் பலவீனப் படுகிறது. உயிரை விட அச்சம் கொண்டவன் நானில்லை. எனக்குரியது என் உடம்பு ஒன்றுதான். உயிரெனக்குச் சொந்தம் இல்லை ! உயிர் எங்கிருந்து வந்ததோ அங்கு போவதை நான் எப்படித் தடுக்க முடியும் ?

கிரிடோ: (மன வேதனையுடன்) சாக்ரடிஸ் ! உமது பாதை புதைகுழி நோக்கி உம்மை இழுத்துச் செல்கிறது ! கடவுள் அளித்த பொன்னுயிரை மடையர் கையில் கொடுத்துவிடத் துடிக்கிறீர். என்னால் பொறுக்க முடியவில்லை அன்பரே ! எப்படி நான் உம்மை இந்த சிறையில் சாகும்படி விட்டுவிட்டுச் செல்வேன் ? தப்பிக் கொள்ள வழி உள்ளது சாக்ரடிஸ் ! வாருங்கள் போகலாம் (கண்ணீர் விட்டுக் கதறி அழுகிறான்)

***************************

“எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.”

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

சாக்ரடிஸ்: எல்லாப் பாதைகளும் மரணத்தை நோக்கித்தான் செல்கின்றன கிரிடோ ! அதுதான் நீதியிலிருந்தும் நாட்டு நியதியிலிருந்தும் என்னை விடுவிக்க ஒரு காரணமா ?

கிரிடோ: இந்தக் கேடு கெட்ட விதிகளுக்கு நீங்கள்தான் பெரு மதிப்பு அளிக்கிறீர்.

சாக்ரடிஸ்: என்னைக் கொல்லப் போவதாக இருந்தாலும் நான் விதிகளை மீற மாட்டேன். நாட்டில் சட்ட திட்ட விதிகளை எழுதி வைத்திருப்பது ஒரு புனித ஏற்பாடு ! நாம் அந்த விதி முறைகளைப் போற்ற வேண்டும். எழுதிய சட்ட திட்டங்கள் கேடு கெட்டவை என்றால் அவற்றை அறிஞர் மாற்ற வேண்டும். அதனால் நாட்டு விதிகள் மீதுள்ள நமது மதிப்புக் குறையக் கூடாது.

கிரிடோ: இப்போது கால தாமதம் ஆகிவிட்டது. விதியைச் சீர்திருத்த முன்வருவார் யாருமில்லை ! விதியைத் திருத்த வேண்டும் என்றால் முதியவர் எல்லாம் கோபப்படுகிறார் ! விதிகள் மாறுவதில்லை !

சாக்ரடிஸ்: என் ஆயுட் காலம் குறுகிக் கொண்டு வருகிறது. இப்போது நான் விதிகளை ஒதுக்கினால் விதிகள் என்னைப் பார்த்துக் கேட்கும் : “ஏன் நீ பாசாங்கு செய்கிறாய் எம்மை மதிப்பதாக ? எம்மால் பலா பலன்கள் இருக்கும் போது ஏன் எம்மைத் தள்ளுகிறீர் ? நீவீர் நீதி தவறி நாட்டு விதியை நிராகரிக்கலாமா ?” என்று.

கிரிடோ: ஒருவர் சாகப் போகும் தருவாயில் சட்டங்களை மதித்தால் என்ன ? இல்லை மிதித்தால் என்ன ?

சாக்ரடிஸ்: சாகும் போது கூடச் சட்ட விதிகளை மதிக்காது மீறினால் மக்கள் என்னைத்தான் தூற்றுவார். சட்டத்தால் நான் சாகும் போது அவற்றை மதிப்பதால், என் மீது மக்களுக்கு உண்டாகும் மதிப்பு இரட்டிப்பாகிறது.

கிரிடோ: எங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்கள் உயிரைக் காக்க நாங்கள் ஒளிந்து வந்திருக்கிறோம். அதுபோல் சிறைக் காவலர் மெக்கில்லஸ் உயிர் ஆபத்துக்கு அஞ்சாமல் உங்களைக் காப்பாற்றவும் துணிந்து விட்டார். இப்போது உங்கள் உயிர் போவ தோடு எங்கள் உயிருக்கும் ஆபத்து வரப் போகிறது. அதுதான் எங்கள் பணிக்குக் கிடைக்கும் வெகுமதி !

சாக்ரடிஸ்: இத்தனை உயிர்கள் ஆபத்தில் சிக்கி என்னுயிர் பாதுகாக்கப் பட வேண்டுமா ?

கிரிடோ: எதுவுமே உம்முயிரை மீட்க உமது மனதை மாற்றாதா ? எங்களைத் துடிக்க வைப்பது உங்களை ஓர் அசைவும் செய்வதில்லையே !

சாக்ரடிஸ்: கிரிடோ ! உன் ஆர்வமும், துணிச்சலும் என்னை திகைக்கச் செய்கின்றன ! ஆனால் தனி மனிதன் வாழ்வு, குடும்பம், சொத்து சுகம் எல்லாம் நாட்டுக்குப் பிறகுதான் எனக்கு !

கிரிடோ: நீவீர் தியாகம் செய்ய நினைக்கிறீர். நீவீர் சட்டத்துக்கு ஓர் அடிமைப் பிறவி !

சாக்ரடிஸ்: உன்னோடு நான் ஓடிப் போனால், என் குற்றம் இரட்டிப்பாகிறது ! சட்டத்தின் கண்களைக் குத்தினால் குற்றத்தைக் குற்றத்தால் தாக்குவதாகிறது ! என் உள்ளத்தின் உட்குரல் எனக்குச் சொல்வதைத்தான் நான் கேட்பேன். இப்போது உன்னோடு ஓடிப் போவது தவறு என்று அது எனக்குச் சொல்கிறது.

கிரிடோ: எனக்கு இதற்கு மேல் எதுவும் சொல்லத் தெரியவில்லை. நான் போகிறேன் சாக்ரடிஸ் ! (கிரிடோ வெளியே சென்று மெதுவாய்க் கூப்பிடுகிறான்) ·பையிதோ (Phaedo) ! ஆகாத்தான் (Agathon) ! அல்சிபியாடஸ் (Alicibiades) ! நீங்கள் வந்து சாக்ரடிசிடம் பேசுங்கள். என்னால் அவர் மனதை மாற்ற முடியவில்லை !

சாக்ரடிஸ்: நான் மெக்கில்லஸைக் கூப்பிடுகிறேன் ! கிரிடோ ! இதற்கு மேல் நானும் சொல்ல எதுவுமில்லை ! (திரும்பி) மெக்கில்லஸ் ! நீ உள்ளே வரலாம்.

(மெக்கில்லஸ் மீண்டும் நுழைகிறான்)

மெக்கில்லஸ்: என்ன முடிவு செய்தீர் சாக்ரடிஸ் ! தப்பி ஓடப் போகிறீரா ? பயணம் எப்போது துவங்கும் ?

சாக்ரடிஸ்: ஹெம்லாக் தேனைக் குடித்ததும் என் புதிய பயணம் துவங்கும் மெக்கில்லஸ் ! உன்னைப் போன்ற உத்தம சீலன் கரங்கள் ஈந்து நானதைக் குடிப்பதில் ஆனந்தம் அடைகிறேன். நாட்டுத் துரோகிகள் எனக்கு நஞ்சு ஊட்டுவதை நான் வெறுக்கிறேன்.

மெக்கில்லஸ்: (மன வேதனையோடு) என்ன ? நீங்கள் தப்பி ஓட வில்லையா ? என் கையால் ஓர் உலக ஞானிக்கு நஞ்சைக் கொடுப்பதா ? படு பாதகச் செயல் அது சாக்ரடிஸ் ! என்னால் அந்தக் கொலை ஒருபோதும் நேராது !

சாக்ரடிஸ்: எப்போதும் நான் தப்ப முடியாது என்பதால் நான் ஓடிப் போக முயலவில்லை !

மெக்கில்லஸ்: அப்படியானால் சரி நான் என் வேலையைச் செய்கிறேன்.

(வெளியே போகும் போது அவன் கிரிடோ, ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபயாடஸ் நால்வரையும் சந்திக்கிறான். நால்வரும் சிறைக் கொட்டத்தில் நுழைகிறார்)

சாக்ரடிஸ்: (மகிழ்ச்சியோடு) உங்கள் யாவரிடமும் கடைசி நேரத்தில் விடை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது எனக்கு !

ஆகாத்தான்: என்ன ? உமக்குக் கடைசி நேரம் என்றா சொல்கிறீர் ?

சாக்ரடிஸ்: எனக்கு முடிவும் இது ! துவக்கமும் இது ! முடிவாக நினைப்பது நீவீர் ! துவக்கமாக நினைப்பது நான் ! என்னுயிர் போகப் போகுது இன்று ! ஆனால் என் ஆத்மா ஏதென்ஸ் நகரை விட்டு நீங்காது என்றும் ! உடல் அழிந்து போவது. ஆனால் யாரும் என் ஆத்மாவை அழிக்க முடியாது.

***************************

 

Hemloc is given to Socrates

“நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் தினம் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்குகிறார். மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

சாக்ரடிஸ்

******************************

காலம் : கி. மு. 399

இடம் : ஏதென்ஸ் நகரில் ஓர் இரகசிய சிறைக் கொட்டம். காலைப் பொழுதுக்கு முந்தைய வேளை சிறைசாலை போலின்றிப் பலகணியுடன் உள்ளது. கதவு பூட்டப் பட்டிருக்கிறது. ஒரு சாதாரண வைக்கோல் படுக்கை தெரிகிறது.

நேரம் : கிழக்கு வெளுக்கும் நேரம்.

பங்கெடுப்போர் : சாக்ரடிஸ், சிறைக் காவலன் மெக்கில்லஸ் (Megillus),, சாக்ரடிஸின் நண்பன் கிரிடோ (Crito). மற்றும் ·பையிதோ (Phaedo), ஆகாத்தான் (Agathon), அல்சிபியாடஸ் (Alicibiades)

காட்சி அமைப்பு : சாக்ரடிஸ் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு வைக்கோல் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். கால்கள் விலங்கிடப் பட்டுள்ளன. சில வினாடிகள் கழித்துச் சிறைக் காவலன் மெக்கில்லஸ் பூட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான். மெக்கில்லஸ் கதவை மீண்டும் பூட்டாமல் சும்மா சாத்துகிறான். மெதுவாக சாக்ரடிஸைத் தட்டி எழுப்புகிறான். சில நிமிடங்கள் கழிந்து கிரிடோ (Crito) வருகிறான். சிறைக் கொட்டத்திலிருந்து சாக்ரடிஸ் தப்பிச் செல்ல கிரிடோ முயல்கிறான். அப்போது ·பையிதோ, ஆகாத்தான், அல்சிபியாடஸ் மூவரும் சாக்ரடிஸைக் காப்பாற்ற வருகிறார்.

மெக்கில்லஸ்: (கண்ணீர் வடித்து வேதனையோடு): ஏதென்ஸ் ஞானிக்கு நான் நஞ்சைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கிட்ட உத்தரவு ! நான் அதைச் செய்ய நடுங்குகிறேன் ! கடவுளே ! நான் அந்தக் கொடுமைச் செய்ய வேண்டுமா ? அந்தப் பாபத்திலிருந்து விடுபட சாக்ரடிஸ் ஓடிப் போக வாய்ப்பு அளித்தாலும் அவர் தப்பிச் செல்ல மறுத்து விட்டாரே ! என் கடமையிலிருந்து நான் தப்ப நினைத்தேன் ! சாக்ரடிசுக்கு நான் நஞ்சைக் கொடுத்தேன் என்று ஏதென்ஸ் சரித்திரம் என்னை நெடுங்காலம் தூற்றும் ! என் மீது சாபம் போடும் ! நான் என்ன செய்வது ? சாக்ரடிஸ் தப்பி ஓடிப் போகமாட்டார் ! நான்தான் இந்தக் கடமையை நிறைவேற்றாது இப்போது ஓடிப் போக வேண்டும் ! என்ன செய்வது சாக்ரடிஸ் நீங்களே சொல்லுங்கள் ?

சாக்ரடிஸ்: மெக்கில்லஸ் ! நீ சிறைக் காவலன் ! நான் சிறைக் கைதி ! தண்டிக்கப் பட்ட ஒரு கைதி ! தப்பிச் சென்றாலும் நான் விடுதலை அடைய முடியாத ஓர் அரசாங்கக் கைதி ! பலி ஆடு எப்படி வாள் வைத்திருப்பவனுக்கு ஆணையிட முடியும் ! ஏதென்ஸ் நீதி மன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவது உன் கடமை ! பலி ஆடு தன் தலையை நீட்டுவது அதன் கடமை !

அல்ஸிபயாடஸ்: போதும் உங்கள் தர்க்கம். தப்பிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !

  • பயிதோ: ஆம் ! விடிவதற்குள் ஓடிப் போய் விடுங்கள் சாக்ரடிஸ் !

ஆகாத்தான்: குதிரையும் வாகனமும் தயாராகக் காத்திருக்கின்றன சாக்ரடிஸ் !

கிரிடோ: கடவுளே நீங்கள் தப்பிச் செல்ல வேண்டும் என்று ஒரு சந்தர்ப்பம் தருகிறார் சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: கிரிடோ ! நான் ஒரு குற்றவாளி ! ஆனால் கள்ளம், கபடு, சூது கொலை ஏதும் செய்யாதவன் ! நான் தப்பிச் செல்லக் கடவுள் வழி செய்கிறார் என்று தவறாக விளக்கம் தராதே ! நான் ஒரு கயவன் அல்லன் ஓடிப் போக ! நீதி நெறிகளுக்குத் தலை வணங்குபவன் ! நான் நண்பரிடம் விடை பெறத்தான் கடவுள் உம்மை எல்லாம் இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் ! நான் போகிறேன் என்னினிய நண்பர்களே ! கண்ணீர் சிந்தாமல் விடை கொடுங்கள் எனக்கு !

மெக்கில்லஸ்: (கண்ணீருடன்) நான் என் கடமையை முடிக்கா விட்டால் என் தலை சீவப்படும் ! நானொரு கொலைகாரன். தெரிந்தே செய்கிறேன் ஒரு கொலையை ! என்னை மன்னித்து விடுவீரா சாக்ரடிஸ் ! நான் போகிறேன் ஐயா, ஹெம்லாக் கொண்டுவர !

(மெக்கில்லஸ் உள்ளே போகிறான்.)

சாக்ரடிஸ்: கொண்டு வா அந்த நஞ்சு மருந்தை மெக்கில்லஸ் ! என்னால் உன் தலை உருளக் கூடாது ! நிம்மதியான தூக்கத்திற்கு நிரந்தர மருந்து ஹெம்லாக் ! கொண்டு வா மெக்கில்லஸ் ! கொண்டு வந்து என் அருகில் வை !

(மெக்கில்லஸ் கையில் ஒரு கிண்ணத்தையும் குவளையையும் கொண்டு வருகிறான்)

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! தயவு செய்து இந்த நஞ்சின் கோரத்தைப் பற்றி எதுவும் அதிகமாகப் பேசாதீர் ! எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சாக்ரடிஸ்: அதிகம் பேசத்தானே நான் ஏதென்ஸில் பிறந்திருக்கிறேன்.

மெக்கில்லஸ்: சாக்ரடிஸ் ! உணர்ச்சி வசப்பட்டால் அது ஹெம்லாக் மருந்துக்கு இடையூறு செய்யும் ! அப்புறம் இரண்டாவது கிண்ணம் நீவீர் அருந்த வேண்டி வரும்.

சாக்ரடிஸ்: அப்படியானால் நான் பத்துத் தடவை குடிக்க வேண்டி வரும் நிச்சயமாய் நான் மடிவதற்கு !

  • பயிதோ: நான் ஒன்று கேட்க வேண்டும் சொல்வீரா சாக்ரடிஸ் ? உண்மையாகச் சொல்வீர்.

துணிந்து உயிரைப் போக்கிக் கொள்வது எளிதாக இருக்குமா ? நெஞ்சுறுதியோடு மரணத்துடன் போராடுவது இலகுவானதா ? மரணம் அடைவதில் உமக்கு இச்சை உள்ளதா ? அச்சம் ஒன்றும் இல்லையா ?

சாக்ரடிஸ்: நாம் பிறக்கும் போது தனியாக வந்தோம். இறக்கும் போது தனியாக மரிப்போம். இறப்புக்குப் பயமில்லை எனக்கு. மரணம் கசப்பானது. ஆனால் நீதி மன்றத்தில் மரண தண்டனை பெற்ற குற்றவாளி நான் ! அதனால் மரணத்தை நான் வரவேற்கிறேன். வாழ்வதற்குத் தண்டனை கொடுத்தல் நான் வாழத்தான் விரும்புவேன். மரணத்தில் உடலை விட்டுப் பிரிவது ஆத்மா ! ஆத்மா அழியாது ! ஆத்மா நித்தியமானது ! படுக்கையில் விரும்பித் தூங்குவதுபோல் நல்லோர் மரணத்தில் ஆழ்ந்து உறங்கிறார். (மெக்கில்லஸை நோக்கி) மெக்கில்லஸ் ! கொடு அந்த ஹெம்லாக் மருந்தை !

மெக்கில்லஸ்: (கண்கலங்கி) நான் எப்படி இந்த நஞ்சைக் கொடுப்பேன் சாக்ரடிஸ் ? நானே அதைக் குடித்துச் சாகலாம் உமக்குக் கொடுப்பதற்குப் பதிலாக ! நானொருவன் சாவதால் ஏதென்சுக்கு எந்த இழப்பும் நேராது ! ஆனால் நீவீர் மரிப்பதால் நேரும் பாதகங்கள் அநேகம் !

சாக்ரடிஸ்: நீ சாவதால் ஏதென்ஸ் நீதிபதிகளின் கோபத்துக்கு நீ ஆளாவாய் ! நான் மரிப்பதால் ஏதென்ஸ் மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்து குதூகலிப்பார் ! நீ சாவதை விட நான் போவதே நியாயமானது. கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

மெக்கில்லஸ்: உலக ஞானிக்கு நான் ஹெம்லாக்கைக் கொடுப்பதா ? உமக்கு நீதிபதிகள் கொடுத்த மரண தண்டனை நியாயமற்றது ! அது அநியாயம் !

சாக்ரடிஸ்: நீ ஹெம்லாக் மருந்தைக் கொடுக்க மறுப்பது அநியாயத்தை நியாய மாக்காது. கொடுப்பது உன் கடமை ! குடிப்பது என் கடமை ! கொடு அந்த கெம்லாக் மருந்தை !

மெக்கில்லஸ்: (அழுது கொண்டே) ஹெம்லாக் மருந்தைக் கொடுப்பது கொடுமை. அதை வாங்கி நீவீர் குடிப்பது மடமை சாக்ரடிஸ் !

சாக்ரடிஸ்: நமக்குள் ஏனிந்த போராட்டம் ? என் காலம் முடிந்து விட்டது மெக்கில்லஸ் ! நீ என் ஆயுளை நீடிக்க முயற்சி செய்யாதே ! விதியைச் சதியால் நிமிர்த்தத் துணியாதே ! கொடு அந்த ஹெம்லாக் திரவத்தை !

***************************

தகவல் :

Based on The Plays :

(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube

Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,

The Book Society of Canada (July 1966)

(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)

++++++++++++++

ஆதாரங்கள் :

1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)

2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Great Quotations Compiled By : George Seldes (1967)

8.. The Wordsworth Dictionary of Quotations (1997)

9. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

10. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)

11. The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************

 

 

 

 

 

 

 

2 thoughts on “சாக்ரடிஸ்

  1. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

  2. Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.