ஓசோன் ஓட்டைகள்
சி. ஜெயபாரதன், கனடா
ஒசோன் குடையை உலகைக் காக்க
ஆசான் படைத்தான் ஆதி முதலாய்,
இரவியின் தீக்கதிர் தாக்கா வண்ணம் !
சூழ்வெளி எங்கும் குளோரின் மாசுகள்
அனுதினம் சேர்ந்து ஐம்பது ஆண்டுகள்
அழியா திருக்கும் ! புவியைக் காக்கும்
ஓசோன் குடையில் துளைகள் போடும்
குளோரின் மாசுகள் ! குவலயம் பிழைக்க
பலநாள் ஆகும் துளைகள் நிரம்பிட !
எரிமலைப் புகைகள் துருவப் பகுதியில்
விரைவாய்ச் சேர்ந்து, ஓசோன் அழிக்கும் !
தொழிற்துறை யுகத்தில் குளோரின் மாசுகள்
சூழ்வெளி தன்னில் சூழ்வதைத் தடுத்து
விழித்தெழ மாந்தர் சூளுரைப் பாரா ?
எரிமலை எழுச்சியை பரிவுடன் புவித்தாய்
நிறுத்திடு வாளா ? வருத்திடு வாளா ?
++++++++++++++++++++++