உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

Cover Picture -1

கி.பி. [1044  – 1123]

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்;  கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார்.  அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள்.  அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார்.  உமர் கயாம் பாரசீக  அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம்.  நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது.  முதன்முறை செய்தவை  என்றும் சில பதிப்புகள் கூறும்.

 

விழித்தெழு !  காலைப் பொழுது கல்வீசி

விரட்டும் தாரகை யாவும் இரவு வானத்தில்.

ஆ ! கிழக்கே வேடன் கைப்பற்றி விட்டான்

சுல்தான் கோட்டையை சுருக்குக் கதிரால் !

 

1.    AWAKE! for Morning in the Bowl of Night
Has flung the Stone that puts the Stars to Flight:
And Lo! the Hunter of the East has caught
The Sultan’s Turret in a Noose of Light.

 

பொழுதின் இடது கை வான் தொடக் கனவெழும்

விழுந்ததென் காதில் மதுக்கடைக் கூக்குரல்.

“எழுவீர் இளைஞர்காள் ! நிரப்புவீர் கிண்ணம்

உமது உயிரின் மது உடலில் வற்றும் முன்னம்”.

 

2.     Dreaming when Dawn’s Left Hand was in the Sky
I heard a voice within the Tavern cry,
“Awake, my Little ones, and fill the Cup
Before Life’s Liquor in its Cup be dry.”

 

சேவல் கூவிட மதுக்கடை முன் நிற்போர்

சேர்ந்து கத்தினர் – “திறடா கதவை !

உமதறிவு அற்பம்வசிக்கப் போவது நாங்கள்

ஒருதரம் போனவர் மறுமுறை மீளார்.”
3.     And, as the Cock crew, those who stood before

The Tavern shouted — “Open then the Door !

You know how little while we have to stay,

And, once departed, may return no more.”

 

புத்தாண் டிக்கணம் பழம் இச்சை புதுப்பிக்கும்

சிந்திக்கும் ஆத்மா தனிமை நாடி ஒதுங்கிடும்

மோசஸின் வெண்கரம் விலக்கிடும் கிளை மரம்

ஏசு மகான் தரணி மேல் பெரு மூச்சு விடுவார்.

 

 1. Now the New Year reviving old Desires,

      The thoughtful Soul to Solitude retires,

      Where the WHITE HAND OF MOSES on the Bough

      Puts out, and Jesus from the Ground suspires.

  

ஈராம் பறவை போனது மெய்யே தன் பூக்க ளோடு

ஏழு வளையக் கும்பா போன தெங்கே என்று அறியார்,

ஆயினும் உள்ளது திராட்சை; பூர்வ ரூபி பயன்தரும்,

இன்னும் ஓர் பூங்கா நதிக் கருகில் புயல் வீசும்.

 

 1. Iram indeed is gone with all its Rose,

      And Jamshyd’s Sev’n-ring’d Cup where no one knows;

      But still the Vine her ancient Ruby yields,

      And still a Garden by the Water blows.

  

தாவிதின் வாயிதழ்கள் மூடி இருக்க தெய்வீகமாய்

ஊது குழல் உரக்கக் குரல் , “ஒயின், ஒயின், ஒயினென !

கூவிடும் குயில் பூவினைக் கேட்பது, “செந்நிற ஒயின்.”

கன்னியின் மஞ்சள் கன்னம் பொன்னிற  மினுக்கம்.       

 

 1.  And David’s Lips are lock’t; but in divine

           High piping Pehlevi, with “Wine! Wine! Wine!

           “Red Wine!”—the Nightingale cries to the Rose

            That yellow Cheek of hers to incarnadine.

 

வா ! என் கிண்ணம் நிரப்பு !  வசந்தக் கனலில்

வருத்தம் எனும் குளிர் மேலங்கி பறந்தோடும்;

காலப் பறவைக்கு குறுகிப் போனது பாதை,

ஆயினும் பறக்கும் பறவை சிறகடித்த படியே !   

 

 1.      Come, fill the Cup, and in the Fire of Spring
  The Winter Garment of Repentance fling:
  The Bird of Time has but a little way
  To fly — and Lo! the Bird is on the Wing.

 

பாபி லோனோ வேறு நைசாப்பூர் நகரோ,

கிண்ண மது இனிப்போ இல்லை கசப்போ,

உயிரின் ஒயின் மது கசியும் துளித் துளியாக,

உதிரும் வாழ்வின் இலைகள் ஒவ்வொன் றாக !

 

 1.    Whether at Naishapur or Babylon,
  Whether the Cup with sweet or bitter run,
  The Wine of Life keeps oozing drop by drop,
  The Leaves of Life ke
  ep falling one by one.

 

காலைப் பொழுதில் மலரும் ஆயிரம் பூக்கள்

ஆயினும் நேற்றைய பூக்கள் எங்கே போயின ?

பூக்கள் தோன்றிய வேனிற் காலம் முதலாய்

ஜாம்சைத், கைகோ பாத் மறைந்து போயின.

  

 1.     Morning a thousand Roses brings, you say;
  Yes, but where leaves the Rose of Yesterday?
  And this first Summ
  er month that brings the Rose
  Shall take Jamshyd and Kaikobad away.

 

வா இடம் விட்டு, வயதான கயாமுடன்,

கைகோபாத், கைகொஸ்ரு நகர் மறந்து,

ருஸ்டம் விருப்ப முடன் திரிய விட்டு விடு;

 ஹதீம் உண்டிக்கு யாசித்தால் புறக்கணி. 

 

 1. But come with old Khayyam, and leave the Lot
  Of Kaikobad and Kaikhosru forgot:
  Let Rustum lay about him as he will,
  Or Hatim Tai cry Supper — heed them not.

 

        நான் கடந்த நாணற் தட்டி வேலிகளால்

        பாலை வனம் விளைநிலம் பிரிபடும் அங்கே

        அடிமை, சுல்தான் பெயர்கள்  அங்கில்லை

        பரிவெனக்கு பொன் ஆசன சுல்தான் மீது !

 

 1. With me along the strip of Herbage strown
  That just divides the desert from the sown,
  Where name of Slave and Sultan is forgot —
  And Pity Sultan Mahmud on his Golden Throne!

 

A book of verse, a jug of wine & thou

         கவிதை நூலோர் கையில், மரக்கிளை கீழ் மறு

         கையில் மதுக் கின்னம், அருகில் அப்பம், மங்கை           

         பாடிய வண்ணம் நீ என்னுடன் கான கத்தில்;

         பாலை வனமும் சொர்க்க மாகும் இப்போது !  

 

         மரக்கிளை நிழலில் கவிதை நூலொரு கையில்

         மதுக் கின்னம் மறு கையில், அப்பம், மங்கை நீ

         பாடிய வண்ணம் என்னருகே கான கத்தில்;

         பாலை வனமும் சொர்க்க மாகும் இப்போது !

 

         கவிதை நூலோர் கையில் மரக்கிளை நிழலில்,

         கன்னி நீயென் னருகில் பாட, மதுக் குவளை,

         அப்பம் ஒரு துண்டு, அடர்ந்த கான கத்திலே

         அத்தருணம் இருட்காடும் சொர்க்க மாகும் !

 

         மரக்கிளை நிழலில், கவிதை நூலோர் கையில்,

         மதுக் குவளை, அப்பம் ஒரு துண்டு, பாடும்,

         மங்கை நீயென் அருகில் இருந்தால் கானகமும்

         சொர்க்க புரியாய்த் தெரியும் அத்தருணம் !

 

 1. A Book of Verses underneath the Bough,
  A Jug of Wine, a Loaf of Bread, — and Thou
  Beside me singing in the Wilderness —
  Oh, Wilderness were Paradise enow!

 

            புகழுக் காகச் சிலர் இவ்வுலகில்; ஏங்குவர் சிலர்

            போதகரின் சொர்க்க புரி வர வேண்டு மென்று;

            பணத்தைப் பெற்று, கைவிடு உறுதி வாக்கை,

            தூர முரசின் குமுற லுக்குக் கவனம் வேண்டாம்.        

 

 1. Some for the Glories of This World; and some
  Sigh for the Prophet’s Paradise to come;
  Ah, take the Cash, and let the Promise go,
  Nor heed the rumble of a distant Drum!

 

            மடமை அல்லவா !  சிலந்தி போல் பின்னி

            நிகழ் கால வாழ்வு நூலறுத்து வெல்வதா,

            நாமிழுக்கும் காற்றை நாமே வெளி யேற்றி 

            நமக்கே மூச்சு விடத் தெரியாத போது !
 

 1. Were it not Folly, Spider-like to spin
  The Thread of present Life away to win —
  What? for ourselves, who know not if we shall
  Breathe out the very Breath we now breathe in!

 

            நமது புகழ் பரப்பும் நறுமணப் பூவை நோக்கு;

            நவிலும் அது நகைத்து,“தரணிக்குள் வீசுவேன்;

            பட்டுக் குஞ்சப் பணப் பை கிழியும் எனக் குடனே,

            கொட்டும் பணக் களஞ்சியம் தோட்டத் திடலில்.            

 

 1. Look to the Rose that blows about us — “Lo,
  Laughing,” she says, “into the World I blow:
  At once the silken Tassel of my Purse
  Tear, and its Treasure on the Garden throw.”

 

+++++++++++++++++++

 

தகவல்:

 1.  http://www.acole.com/novels/timuras/khayyam.html
 2. http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm
 3. http://www.omarkhayyamrubaiyat.com/text.htm
 4. https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam [November 17, 2015]