எங்கள் தாய் !

See the source image

சி. ஜெயபாரதன், கனடா

 

இல்லத்தில் அம்மாதான் ராணி !
ஆயினும்
எல்லோருக்கும் அவள் சேவகி !
வீட்டுக் கோட்டைக்குள்
அத்தனை ஆண்களும் ராஜா !
அம்மாதான் வேலைக்காரி !
அனைவருக்கும் பணிவிடை செய்து
படுத்துறங்க மணி
பனிரெண் டாகி விடும் !
நித்தமும்
பின்தூங்குவாள் இரவில் !
சேவல் கூவ
முன்னெழுவாள் தினமும் !
அம்மாவைத் தேடாத
ஆத்மாவே இல்லை வீட்டில் !
அம்மா இல்லா விட்டால்
கடிகாரத்தின் முட்கள்
நின்று விடும் !
எந்தப் பிள்ளைக்கும் அவள்
பந்தத் தாய் !
பால் கொடுப்பாள்
பாப்பாவுக்கு !
முதுகு தேய்ப்பாள்
அப்பாவுக்கு !
சமையல் அறைதான்
அவளது ஆலயம் !
இனிதாய் உணவு சமைத்துப்
பரிமாறி
எனக்கு மட்டும் வாயில்
ஊட்டுவாள் !
வேலையில் மூழ்கி
வேர்வையில் குளிப்பாள் !
எப்போ தாவது அடி வாங்குவாள்
அப்பாவிடம் !
தப்பாது மிதி வாங்குவாள்
மூத்த தமயனிடம் !
காசு கேட்டுக்
கையை முறிப்பான்
கடைசித் தம்பி !
கடன்காரன் வாசலில் திட்டுவான் !
கலங்கும்
கண்ணீரைத் துடைப்பது
கனலும் காற்றும் !
இல்லத் தரசி தாரமாய்
வந்த பிறகு,
செல்லத் தா​ய் வேண்டாத​
தொல்லைப் பிறவி !
​தாயிக்கும் தந்தைக்கும்
​சேய்கள் தரும்
​ஆயுள் தண்டனை
​ஓய்ந்து உய்வோர் இல்லம் ​ ​​​!
ஓய்வைக் கொடுப்பது
தாயிக்கு
நோயும் வலியும்;
ஆயினும் சோறு பொங்கும்
அடுப்பினில் !
ஆயுளை நீடிக்க வைப்பது
தாயுள்ளம் !
வாழும் போது எவராலும்
வணங்கப் படாது,
செத்த பிறகு
தெய்வ மாகிறாள்
++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com)  May 11, 2014  (R-4) (On Mother’s Day)

27 thoughts on “எங்கள் தாய் !

 1. Dear Sir,

  I am not knowing to type in Tamil kindly excuse. What a work you are doing. May the Unknown give you all success in your thoughts and acts.

  • Dear Deva Kannan,

   Thanks for your well-wishes. In my website, you can see on the left side bottom Tamil Typing Links. Please learn to use them. It is easy to write in Tamil

   Regards, Jayabarathan

   +++++++++++++++

 2. ஆஹா அருமை ஜெய் , தாயின் நிலைமையைப்படம் பிடித்துக்காட்டிவிட்டீர்கள் செத்தப்பிறகுதான் அவளைப்
  புரிந்துக்கொள்கின்றனர் ,,,கணவன் உள்பட ,,,,

  அன்புடன் விசாலம்

  ++++++++++

  தாயை மதிக்க கற்றுக் கொள்ள உங்கள் பாடல் ஒரு தூன்டுகோளாய் அமையும் என நம்புகிறேன்…

  பிரசாத்

  ++++++++++++++

  அருமை. தந்தையும் இது போல் தான். குடும்பத்தை காக்க நாயா குலைத்து, நாயா உழைத்து, நாய் போல் மிச்சம் மீதி தின்று வாழ்ந்த தந்தையை செத்தபிறகும் யாரும் புரிந்துகொள்வதில்லை ,,,மனைவி உட்பட ,,,,

  புலவர் அசோக்

  • இருக்கும் வரை எல்லா அநியாயங்களையும் செய்துவிட்டு செத்த பின் தெய்வமாக்கி விடுவார்கள்.இருக்கிறகாலத்தில் சமமாக மதித்து வேலையை பங்கு போட்டுக்கொள்ள மாட்டார்கள். இதில் இத்தக்காலத்து இளம் பெண்களோ படு மோசம், தாயை வேலைகாரியாக நடத்துவதில் பின்னிற்க மாட்டார்கள்.

   உணர்வுபூர்வமான கவிதை. படிக்கும்போது நெஞ்சு உருகிகிறது

   வாழ்த்துக்கள்

 3. neraimathi@rocketmail.com

  இலக்கிய ஆர்வலரே !

  வாசிப்போர் உள்ளத்தை உருக்கும் உன்னத கவிதை ‘எங்கள் தாய் ‘ எனும் தலைப்பில் அமைந்த தங்கள் படைப்பு.

  திருந்தாதவரையும் திருத்தி விடும் சக்தி இந்தக் கவிதைக்கு உண்டு.

  முனைவர் ச.சந்திரா

 4. பாராட்டுக்கு மிக்க நன்றி, திருமதி சந்திரா அவர்களே.

  என் தாயை நினைத்துக் கண்ணீர் சிந்த எழுதிய கவிதை.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்.

 5. I’d come to okay with you here. Which is not something I usually do! I enjoy reading a post that will make people think. Also, thanks for allowing me to comment!

 6. This site seems to recieve a great deal of visitors. How do you get traffic to it? It gives a nice individual twist on things. I guess having something authentic or substantial to post about is the most important thing.

 7. This weblog appears to recieve a great deal of visitors. How do you promote it? It gives a nice individual twist on things. I guess having something real or substantial to say is the most important factor.

 8. Amazing! Your post has quite a few readers. How did you get all of these readers to see your blog I’m jealous! I’m still learning all about posting articles on the net. I’m going to view pages on your website to get a better idea how to get more visable. Thank you!

 9. Respected Sir ,now I come to one conclusion that your mother has lived with you and her energy is the outcome of so many articles that you have written.There is Tamil poet that there is no rather than a mother .In fact we see the God only in the face ,body ,mind, their services etc.Your view regarding your mother is the impression of writing this poetry.Maxim Gorky said:Only mothers can think of the future _because they give birth to it in their children.I bestow your contribution as I feel that this poetry is for every mother of the readers.With kind regards .by DK.

Leave a Reply to Martin Burns Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.