கூடங்குளம் அணுமின்சக்தி ஆலையம்

சி. ஜெயபாரதன், கனடா

 

கூடங்குள அணுமின் உலைகள்
கூவத்து நதிக் கரையில்
மேவப் பட்ட
தீவிர மரணப் பீடங்கள் அல்ல !
சிதைந்து போய்ச்
சாம்பலான செர்நோபில்
சமாதி அல்ல !
இந்தியர் வரிப்பண
உப்பைத் தின்று
வளரும்
ஒப்பிலா விஞ்ஞானிகள்
உன்னத பொறித் துறை
நிபுணர்கள் கட்டி
எழுப்பிய
பிரம்மாண்ட மின்சாரப்
பிரமிட்கள் !

ஊரே தீப்பற்றி எரிய
வீணை வாசித்த ரோமாபுரி
நீரோ மன்னன்
எழுப்பிய
கோரக் காலிஸீய அரண் அல்ல !
கூடங்குள அணு உலை மூடிக் கிடந்தால்
நாடு வளம் குன்றும் !
கணினிகள்
மிளகாய்ப் பெட்டிகளாய்
கண்ணீர் சிந்தும் !
மின் விசிறிகள் மூச்சிழக்கும் !
மின்சார மின்றி
சம்சாரம்
மங்கலம் பாடும் !

சினிமாக் கொட்டகை
மாட்டுக்
கொட்டமாய்க்
கொட்டாவி விடும் !
கவச குண்டல மாய்த்
தொங்கும்
செல்லரித்துப் போன
கைபேசிகள் !
மாட்டு வண்டிகள் இழுக்கும்
சாணி யுகம் மீளும்.
காணி நிலத்தில், புற்றுப்
பாம்புக்  படமெடுக்கும்
எரிந்த
சாம்ப லிருந்து !

++++++++++++

19 thoughts on “கூடங்குளம் அணுமின்சக்தி ஆலையம்

 1. நண்பரே…!
  மாற்று வழிகள் ஆயிரம் இருந்தும்,
  அணுவை சிதைக்க வேண்டுமோ..!
  தொடங்கிய நாள் முதல் கொடுங்
  கழிவை உமிழ்ந்தால் சேகரித்து
  கொட்டிவைக்க இம்மண்ணில் இடமுண்டோ..!
  மில்லியன் ஆண்டுகள் என கடந்து வந்த
  எம்முன்னோர் இம்மண்ணில்
  நீரையும் காற்றையும் விட்டு சென்றார்..!
  என் பின்னோருக்கு நான் எதை விட்டு செல்ல..!
  இயற்கை வளங்கள் இருந்தும்..
  மீழ்சுழல் சக்திகள் இருந்தும்…
  அழியா குப்பையை கிளறலாமோ…
  அது அறிவுடைய செயலோர் நிலையாகுமோ..?

 2. Hiroshima today.jpg (image/jpeg) 98K
  Nagasaki today.jpg (image/jpeg) 70K

  அணுகுண்டுகள் அழித்த ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் இன்று எப்படி சுத்தம் செய்யப்பட்டு சொர்க்க நகரங்களாய் உள்ளன பாருங்கள்.

  சி. ஜெயபாரதன்

 3. இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்!

  * ஏகாதிபத்தியங்கள்,உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளின் இலாப வெறிக்காக இயங்கும் பழைய காலாவதியான அணு உலைகளை மூடு,

  புதிய தொழில்நுட்ப ரீதியிலான, பாதுகாப்பான அணு உலைகளை அனுமதி!

  * மக்களுக்கு உரியபாதுகாப்பு வழங்கி கூடங்குளம் அணு உலையைத் திற!

  * அணுசக்தி “காலாவதியாகிவிட்டது” என்று கூறி , அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!

  * அனல், புனல், காற்று,சூரிய ஒளி, அணுசக்தி உள்ளிட்ட தேசிய மின் திட்டத்திற்காகப் போராடுவோம்!

 4. தோழரே உங்களது தாக்கம் நீங்கள் படிக்கும் தொழில்நுட்பம் ஆபத்தானது அல்ல என்பதை தெரிவிக்கும் ஒரு மூலதனமாக நன்றாகவே பயன்படுத்தி உள்ளீர்களே தவிர்த்து அதன் உண்மையை அல்ல என்பது என்னுடைய கருத்து…. இயற்கை இடர்பாடுகள் வராது என்று எப்படி உத்திரவாதம் தருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை

  • ///இயற்கை இடர்பாடுகள் வராது என்று எப்படி உத்திரவாதம் தருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை////

   இப்படி நான் எங்கும் எழுதியதில்லை நண்பரே.

   மனிதர் தயாரித்த ஜெட் விமானங்கள் தினமும் அச்சமில்லாத ஆயிரக் கணக்கான மனிதரைச் சுமந்து பறக்கின்றன. பறக்கும் ஜெட் விமானங்கள் எல்லாம் விழுந்து விடும் என்று பயப்படுகிறீர் !!!!

   https://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

   சி. ஜெயபாரதன்

   ++++++++++++++

 5. “கூடங்குள அணுமின் உலை
  கூவத்து நதியில்
  கட்டப் பட்ட
  குப்பை மாளிகை அல்ல !
  சாம்பலான செர்நோபில்
  சமாதி அல்ல !
  இந்தியர்
  உப்பைத் தின்று
  வளரும்
  ஒப்பிலா விஞ்ஞானிகள்
  உன்னத பொறித் துறை
  மன்னர்கள் கட்டி
  எழுப்பிய
  பிரம்மாண்ட மின்சாரப்
  பிரமிட்கள் !” பிரமிட் சமாதி என்பதை அறிவீர்கள் என்றே நினைக்கிறேன் நம் மக்கள் அதனுள் சமாதி ஆக வேண்டும் என்பதி தான் உமது விருப்பமா?????? இந்திய உப்பை தின்றவர்களுக்கு இந்தியரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உதித்தது ????????/

 6. கடந்த 50 ஆண்டுகளில் இந்திய அணுமின் உலைகளில் கதிரியக்கத்தால் யாரும் மரிக்க வில்லை, நோயில் பாதிக்கப் பட வில்லை.

  சி. ஜெயபாரதன்

 7. முழு பூசணிகாவை சோற்றில் மறைக்க இயலுமா?????? நீங்கள் மறைக்க முயற்சிக்கிறீர்கள்

 8. அணுசக்தி பற்றி 100 கட்டுரைகளுக்கு மேல் என் தளத்தில் உள்ளன.

  https://jayabarathan.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/

  எதையும் நான் மறைப்பதில்லை. 45 ஆண்டுகளுக்கு மேல் இந்திய / கனடா அணுமின் உலைகளில் பணி செய்தவன். என் மகள் கனடா அணுமின் நிலையத்தில் எஞ்சியராகப் பணிபுரிகிறாள்.

  https://jayabarathan.wordpress.com/about-the-author/

  சி. ஜெயபாரதன்

 9. இந்த தகவல் எல்லாம் படித்து வருபவன் நான்.

  உலகத்தில் 430 மேற்பட்ட நாடுகள் திரிமைல் தீவு, செர்நோபில், புகுஷிமா விபத்துகளில் பாடம் கற்று தம் அணுமின் உலைகளைச் செம்மைப் படுத்தி கடந்த 55 வருடங்களாகப் பாதுகாப்பாய் இயக்கி பல மில்லியன் மக்களுக்கு மின்சாரமும், வேலை வாய்ப்புகளும், உபரிச் சாதன உற்பத்தியும்

  செய்து வருகின்றன.

  மற்ற நாடுகளுக்குத் தெரியாததை எதுவும் உதயகுமார் கண்டுபிடித்துப் புதிதாய்ச் சொல்ல வில்லை.

  இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக 20 அணுமின் நிலையங்கள் அடுத்தடுத்து சிறப்பாக, பாதுகாப்பாக மின்சாரம் பரிமாறி பல்லாயிரம் பேருக்கு வேலைகள் கொடுத்து வருகின்றன.

  1. http://www.npcil.nic.in/

  2. http://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx

  சி. ஜெயபாரதன்.

 10. அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான் அறவியல் தொழில்நுட்பத்தில் ஆண்டுகள் ஆக ஆக மாற்றங்கள் வரும் தான் … நான் சொல்வது என்னவெனில் நடக்குமா நடக்காதா என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது (நிலநடுக்கம் , சுனாமி) ஆனால் நடக்கவே நடக்காது நு சொல்லுறீங்க அது அறிவியல் அல்ல நானும் அறிவியல் தொழில்நுட்பம் தான் படிக்கிறேன் என்னுடைய வாழ்க்கையும் அந்த பகுதியில் தான் இருக்கும். இதெற்கெல்லாம் ஒரு சிறந்த உதாரணம் மூன்று மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் வந்த நிலநடுக்கம்……… நீங்கள் கூறிய பகுதிக்கு மிக அருகில் தான் வந்துள்ளது…. ஆற்றல் அவசியம் தான் தொழில்நுட்பம் அவசியம் தான் ஆனால் அவை மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து…… நீங்கள் இந்த துறை சார்ந்தவராக இருப்பதால் பல பகுதிகளில் மிகவும் தொழில்நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள் நம் தாய்மொழியில் எழுதியிருப்பது மிகவும் வரவேற்க தக்கது ஆனால் இது அபாயம் என்பது தான் என் கருத்து என்னுடைய நிலைப்பாடு…. தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • அணுமின் நிலையங்கள் நிலநடுக்கம் முறிக்காதபடிக் கட்டப்படுகின்றன. புகுஷிமா அணுமின் உலைகள் நிலநடுக்கத்தில் பழுதடையவில்லை. சுனாமி அடித்த போது, அணு உலை அபாயத் தவிர்ப்பு நீரணைப்பு முறைகள் இரட்டிக்கப் படாததால், அணு உலைகள் சீர்கெட்டன.

   பூகம்பம், சுனாமி, எரிமலைகள் உள்ள சிறிய ஜப்பான் தீவில் இன்னும் 50 மேற்பட்ட அணுமின் உலைகளும், 100 மைல் வேகத்தில் போகும் பல்வேறு புல்லெட் ரயில்களும் சீராய் இயங்கி வருகின்றன.

   இந்திய அணுமின்சக்தி உலைகள் நிலநடுக்கம், சுனாமி அடிப்புகளைத் தாங்கி பாதுகாப்பாக இயங்கச் சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

   சி. ஜெயபாரதன்

   +++++++++++++++++++++

 11. முரண்பாடு 1: புகுஷிமா விபத்து இப்போ தானே நடந்தது.அதில் பாடம் கற்று 55 வருடங்களாக விபத்தே நேரவில்லை என்று கூறுகிறீர்களே?
  முரண்பாடு 2: உதயகுமார் பற்றி எனக்கும் தெரியாது. ஜெர்மனி உட்பட பல நாடுகள் அணு உலைகளை மூட ஏன் முடிவெடுத்துள்ளன.

  சந்தேகம் 1: வெயிலே இல்லாத பல ஐரோப்பிய நாடுகள் சூரிய சக்தி முதலான மற்று எரிபொருளுக்கு மாறும்போது பல உயிர்களை பணயம் வச்சி இது தேவையா ?

  சந்தேகம் 2: விமான விபத்தும், அணு உலை விபத்தும் ஒண்ணு போல நீங்க ஒப்பிடுறீங்க..விமானம் வெடிச்சா அதிகபட்சம் ஐநூறு பேர் உயிரிழப்பாங்க..ஆனா அணு உலை வெடிச்சா அப்படியா?..சுற்று சூழல் பாதிப்பு, கதிரியக்கம் நு எவ்ளவோ பிரச்சினை இருக்கே?..அதுக்கும் மேல எப்பவோ ஹிரோஷிமா,நாகசாகி ல வெடிச்ச அணுகுண்டுகளோட கதிரியக்கம் பாதிப்பு இன்னமும் உணரப்படுதே, எத்தனை விமான,வாகன விபத்து அடுத்த தலைமுறை வரைக்கும் தொடருது?

 12. தோழர் வீரா சொல்வது சரி தான்… நம்முடன் ஒப்பந்தம் போட வந்துள்ள பிரான்ஸ் நாட்டில் அணு உலையே இல்லை என்பது தான் உண்மை…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.