கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !

vver-layout

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘

அமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

செர்நோபிள் ஒரு விதி விலக்கு ! நிபுணருக்கும், மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

சி. ஜெயபாரதன்

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  அணுசக்தி நிலையத்தையும், உப்பு நீக்கி இராசயனச் சாலையையும் கூடங்குளத்தில் அமைக்க வேண்டா மென்று நிறுத்தக் கையில் செருப்புடனும், தடியுடனும் முன்கூட்டியே வர அசுரப் பட்டாளத்தை ஏற்பாடு செய்தது, விடுதலைப் பூமியில் ஓர் அநாகரீகப் போராட்டமே ! ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள்.  அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது.  அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனையாகிப் போனது.  மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் ?  21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன !

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் [புகுஷிமா அணுமின் உலைகள் தவிர] பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன.  அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.  இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 20 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அணுமின்சக்தி  தேவையான தீங்கு  என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி  வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள  இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம்.   அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக்  கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து.  வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின்  சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.  அணுமின்சக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்று உலகில் பலநாடுகள் கடந்த  50 ஆண்டுகளாக காட்டி வருகின்றன.

அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.  மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப் படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நிர்ப்பந்த விதி இதுதான்:  பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.  வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.  செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.  பேரவை சுட்டிக் காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.  செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

 

 

கடலும், கடற்சார்ந்த பகுதிகளுக்கு நீர் முடக்கம் ஏற்பட்டால், கடல் வெள்ளத்தின் உப்பை நீக்கிக் குடிநீராக்குவது ஒன்றும் புதிய விஞ்ஞான முறை யில்லை.  ஜப்பான் போன்ற தீவுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் உப்பு நீக்கி இரசாயனச் சாலைகள் எண்ணற்றவை சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.  அனுதினமும் ஆயிரக் கணக்கான டன்னளவில் குடிநீர் கடலிலிருந்து சுவைநீராகத் தயாரிக்கப் படுகிறது.  உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது.  இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது.  ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா ?  செத்துப்போன மீன்களை விட்டுவிட்டுச் சற்று தூரம் சென்று உயிருள்ள நல்ல மீன்களை பிடித்துக் கொள்ள மீனவருக்குச் சொல்லித் தர வேண்டுமா ?  நமக்கு முதலில் வேண்டியது நீர்வளம்.  அதற்கு அடுத்தபடிதான் மீனினம்.  அப்படி வேறு வழிகள் இருப்பினும் நீர் வெள்ளத்தைக் கொண்டு வரச் சிக்கனச் செலவில் சாதிக்க முடியுமா என்றும் கணக்குப் பார்க்க வேண்டும்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ள போது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.  சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான்.  அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹௌஸ் வாயுக்கள் [CO2, SO2, & Nitrous Gases] வெளியாவ தில்லை.  அவை கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி, சுற்றுச் சூழல் ஆய்வலசல் பற்றி உரையாட வந்த விஞ்ஞானிகளின் வாயை மூடியது நாகரீகச் செயலில்லை.  அரசியல் மூர்க்க வர்க்க எதேச்சவாதிகளின் பிற்போக்குத் தன்மை அது.

அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது,  புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்,  மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும்.  அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம்.   உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப் பொறிநுணுக்க வாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

பாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்படுத்தப்பட்டு புளுடோனியம் பிரித்தெடுக்கப் படுகிறது.  அந்தப் புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கி அணு உலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விபரங்களை << தேசீயப் பாதுகாப்பு இரகசியமாக >> [National Security Secret] வைத்துள்ளது.  தெருவில் போவோனுக்குத் << தேசீயப் பாதுகாப்பு >> என்று சொன்னால் என்ன புரியும் ? ஆனால் எப்படி கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பாக புதைபட வேண்டும் என்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கங்கள் இந்திய அணுசக்தித் துறையகத்திடம் உள்ளன.  பொதுநபருக்கு வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் அரசியல் அமைச்சர்களின் மூலமாக முயன்றால் விபரங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து.  பிரம்மாண்டமான அணு உலைகள் கட்டும் போது, பாதுகாப்பாக வேலை செய்தாலும் மனித அல்லது யந்திரத் தவறுகளால் மனிதருக்கோ, கட்டுமானச் சாதனங்களுக்கோ விபத்துகள் நேர பல வாய்ப்புகள் உள்ளன.  அவற்றால் விளையும் விளைவுகளால் மரணம் ஏற்படாத வரை அவற்றை அரசு மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத குற்றமில்லை.  அரசியல் கட்சிகளுக்குள் அனுதினமும் நிகழும் கைச் சண்டைகள், வாய்ச்சண்டைகள் எல்லாம் வெளிப்படையாக எவரெல்லாம் முரசடித்து வருகிறார்கள்?

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=html அசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

மேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலை மிரட்டல்கள், தாக்கல்கள்

+++++++++

<< கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர். >>

<< இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன. >>

<< இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார். >>

<< அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது.  இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது >>

+++++++++

நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்  கனலைப் பயன்படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

“இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்!  உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது!  இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை!  ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.

நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.  கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்புநீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப்படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன்படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப் படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெருநிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”

கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளிவரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!

Russian VVER & Chernobyl Reactors

சென்னைப் நீர்ப்பஞ்சத்தைத் தீர்க்கத் தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே ஒரு வழி, கடல் வெள்ளத்தில் கனல்சக்தி மூலம் உப்பை நீக்கிச் சுவை நீராக்கும் முறை ஒன்றுதான்! பரிதிக்கனல் வெப்பத்தைப் பயன்படுத்தியோ, கனல் மின்சார நிலையம் அல்லது அணு மின்சார நிலையத்தின் டர்பைன் வெளிக்கழிவு வெப்பத்தை உபயோகித்தோ, கடல்நீரைக் குடிநீராக்கும் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் மூன்று அல்லது நான்கு சென்னையின் நீண்ட கடற்கரையில் உடனே நிறுவப்பட வேண்டும்.

பாரதத்தில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப் பஞ்சத்தைக் குறைக்க ஜீவ நதிகள் செத்த நதிகளுடன் சேர்க்கப் பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் ஓடாத நதிகளுக்குப் பங்கீடு செய்ய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி துறையகங்கள் அணுமின் சக்தி நிலையங்களுடனும், அனல் மின்சக்தி நிலையங்களுடன் கூடவே கட்டப்பட வேண்டும். இந்த இமாலயத் திட்டங்கள் நிறைவேற மத்திய அரசும், மாநில அரசுகளும் மெய்வருந்திப் பணிபுரிய முன்வர வேண்டும்.

யந்திர யுகத்திலே மனிதரின் பயிற்சியும் சாதனங்களின் செம்மைப்பாடும்

யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்பு களை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறு களைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

யந்திர யுகத்திலே தம்மைப் பிணைத்துக் கொண்ட உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டிலே தனித்தியங்க முடியாத நிலையில் ஏதோ ஒரு தொப்புள் கொடி இணைப்பால் மாட்டிக் கொண்டுள்ளன ! செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை ! அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன. ஆஃபிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை ! 2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் மூர்க்கர் பட்டாளம் வாஷிங்டன், நியூ யார்க் நகரங்களைத் தாக்கியதின் எதிரொலி இப்போது உலக நாடுகள் அனைத்தையும் பயத்துள்ளே தள்ளி விட்டிருக்கிறது. பறக்கும் ஜம்போ ஜெட் விமானம் 737 ஒன்றில் பழுது நேர்ந்து விபத்து ஏற்பட்டு அனைவரும் மரித்தால் அதை வாங்கிப் பயன்படுத்தும் எல்லா உலக நாடுகளும் அதிர்ச்சி அடைகின்றன. யந்திர யுகம் ஒரு போக்கில், ஒரு திசையில் செல்வது. அதற்குப் பின்னோக்கிச் செல்லும் உந்து சக்தி கிடையாது !

Pressurized Water Reactor

Schematic

தொழிற்புரட்சிக்குப் (1780-1850) பிறகு மின்சக்தி நிலையங்கள் பெருகி அதன் ஆற்றலில் இயங்கும் யந்திரங்கள் ஆயிரக் கணக்கில் ஈசல்கள் போல் தோன்றன. அவற்றில் முக்கியமாக எரி ஆயிலில் இயங்கும் வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், அண்ட வெளிக் கப்பல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.  கடந்த நூறாண்டு களாக செம்மையாக இயங்கி வரும் கார் வாகனங்களின் தொழில் நுட்பம் சீராக்கப்பட்டு முதிர்ச்சி நிலை அடைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. அவற்றைப் போல் கோடிக்கணக்கான பேர் அனுதினமும் பயணம் செய்யும் ஆகாய விமானங்களும் சீராக்கப்பட்டு அவற்றின் தொழில் நுட்பமும் முதிர்ச்சி நிலை பெற்றுள்ளதை யாரும் எதிர்த்துச் சொல்ல முடியாது. அந்த வழிமுறையில் உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 900 மேற்பட்ட அணு உலைகள், அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் ஆகியவற்றை நிறுவி அனுபவம் அடைந்து, தற்போது 400 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அனுதினமும் மின்சாரத்தை பரிமாறி வருகின்றன. அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதோடு, அவற்றில் விளையும் அபாய நிகழ்ச்சிகளையும் நேராக உளவிப் பதிவு செய்து மற்ற நாடுகளுக்கும் 1957 ஆண்டு முதல் பகிர்ந்து வருவது, ஆஸ்டிரியாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)].

International Atomic Energy Agency,  Vienna

1986 இல் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு உலக நாடுகளைப் பேரளவில் அதிர்ச்சியில் தள்ளியது. அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன. அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில் விபத்தைத் தீவிர உளவுகள் செய்து தங்கள் அணுமின் உலைகளிலும் பெருத்த மாற்றத்தையும், பயிற்சி முறைகளையும் செம்மைப்படுத்தினார்கள். அதன் விளைவாக 1989 இல் உலக அணு உலை இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி “உலக அணுமின் உலை இயக்குநர் ஐக்கியப் பேரவையை” WANO [World Association of Nuclear Operation] நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங் களைப் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் உலக நாடுகளின் WANO குழுவினர் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அணுமின் உலைகளுக்கு விஜயம் செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை உளவிக் கண்காணிப்பும் செய்து தரப்படுத்தியும் வருகிறார்கள்.

+++++++++++++++++

தகவல்:

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=html அசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG
(Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409022&format=html [ உப்பு நீக்கி நிலையங்கள் Desalination Plants – கடல் நீரிலிருந்து குடிநீர் – திண்ணைக் கட்டுரை]

8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

10 Picture Credit: The Hindu

11.  http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India Website  (Kudungulam Update & Reports)

12  http://npcil.nic.in/main/AboutUs.aspx  (Indian Nuclear Power Program)

13. http://www.npcil.nic.in/main/ConstructionDetail.aspx?ReactorID=77  (Kudungulam Reactor Status)

14.  http://en.wikipedia.org/wiki/Kudankulam_Nuclear_Power_Plant  (January 30, 2012)

15.  http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 6, 2012)  (Revised -1)

7 Comments

1
Vijay Says:

Very Useful new information, Should be alert and awareness about each and every human. CJB Sir. keep it your good work

2

மிகவும் நன்மையான, தேவையான விஷயங்களை எழுதியுள்ளீர்கள். ரஷ்யாவில் பேரழிவு ஏற்படுத்திய அணு உலை, அது வெடிக்க காரணம் “Automatic Shut Down” என்று கேள்விப்பட்டேன் உண்மையா? ஏனெனில், அணு கசிவு ஏற்பட்ட உடன், Security System அணு உலையை மூடியதால், அணு உலையை குளீரூட்டப்பட வேண்டிய நீர் வரத்து நின்று அணு உலை அளவுக்கதிகமாக சூடிறே வெடித்தது என்று கேள்விப்பட்டேன் உண்மையா?

அணுக்கழிவுகள் http://en.wikipedia.org/wiki/Nuclear_waste, இந்த சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்தால், அணுக்கழுவுகளை அழிக்க பெரும் அளவிலான இடம் தேவை என்று தெரிகிறது, அப்படி எந்த விதமான வசதியும் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லையே?

3
வடுவூர் குமார் Says:

படங்கள் அருமையான விபரங்களை காண்பிக்கிறது.அனு உலை கட்டிடத்தில் எதற்கு அந்த டோம் உள்ளது என்று நினத்துக்கொண்டிருந்தேன்.உள் அமைப்பை பார்த்ததும் தெரிந்துகொண்டேன். விஷயம் தெரிந்தவர்கள் ஊடகத்தின் மூலம் இந்த மாதிரி விஷயங்களை எழுதி பொது மக்களை தெளிவு படுத்த வேண்டும்.

 • 4

  அன்புள்ள வடுவூர் குமார்,

  கோட்டை அரண் உருளை வடிவமுள்ளது. உருளையை மூட மட்டமான மூடி இருப்பதை விட, கோள வடிவில் அமைத்தால் நிரம்பக் கொள்ளளவு [Volume] பெறலாம்.

  சி. ஜெயபாரதன்

 • 5

  அன்புள்ள ஜெயபாரதன், இந்தப் பதிவு மூலமா நிறைய நல்ல விஷயங்களை தகவல்களை தந்திருக்கீங்க. மிக்க நன்றி.

  உங்கள் இணைய தளத்திற்கு வந்ததில், உங்கள் எழுத்துக்கள் மூலம் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  அன்புடன்,
  சரவணன்.

 • 6

  பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் சரவணன்.

  உங்கள் பாராட்டு மூலம் நண்பராகிக் கொண்ட பண்பு மறக்க முடியாதது.

  உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். எங்கே வசிக்கிறீர்கள் ? எங்கே பணிபுரிந்து வருகிறீர்கள் ? தமிழகத்தின் எந்தப் பகுதியை சேர்ந்தவர் நீங்களும், உங்கள் மனைவியாரும் ?

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 • 7
  jafar Says:

  மக்களிடையே அதிகம் அறியப்படாத அணு சம்பந்தமான விளக்கத்தை அருமையான வரைபடங்களுடன், நம் தாய்மொழியான தமிழில் மிக அழகிய முறையில் விளக்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பரே!!!

84 thoughts on “கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !

 1. பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் ஜஃபார் அவர்களே.

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்

 2. மிக மிக அற்புதம் திரு.ஜெயபாரதன் அவர்களே…!
  2020 ல் வளர்ந்த நாடாக மாறும் மாபெறும் இலட்சியத்தை வைத்துக்கொண்டு, அனைத்து விசயங்களிலும் பயம் கலந்த, தன்னம்பிக்கையற்ற நிலையே இன்று இந்த தேசத்தில் காணப்படுகிறது (அதுவும் 35 வயதுக்கும் குறைவாக 60 கோடி துடிப்பான இளைய சமுதாயத்தை வைத்துக்கொண்டு).அணுசக்தி உட்பட உயர் தொழில்நுட்பங்களில் நாம் சாதிக்க வேண்டியவை நிறைய…!.நம்மால் உலகின் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும், நம் அவநம்பிக்கையை மாற்றிக்கொண்டால்….!
  அணுமின்சக்தி மற்றும் அதன் அவசியம் பற்றிய உங்களது இடுக்கை மிக அருமை…. பயன்மிக்கது…. சரியான சமயத்தில் அதை வெளியிட்டுள்ளீர்..
  மிக்க நன்றி..

  சு.தமிழ் செல்வன்

 3. நண்பர் சு. தமிழ்ச் செல்வன்,

  தமிழகத்தில் கல்பாக்க இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம், தெற்கே குமரி முனைக் கூடங்குளத்தில் பூத அணுமின்சக்தி நிலையங்கள் இருப்பது நமக்குக் கிடைத்த இந்தியக் கொடை. அவற்றைப் பாதுகாத்து மனித நல விருத்திக்குச் செய்து கொள்வது நமது கைகளில் உள்ளது.

  பாராட்டுக்கு நன்றி.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 4. புலவர். அசோக் to tamizhamutham
  show details Sep 26

  தமிழ் மக்களுக்கு அறிவியல் திட்டங்களை புரிந்து கொள்ளும் அறிவியல் அறிவு இல்லை. அது வந்த பின் தான் அறிவியல் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். அது வரை நாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தலாம்.

  2009/9/27 Singaravel Jayabarathan
  – Show quoted text –

  கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர்,
  அசுரப்படை எதிர்ப்புகள் !

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

  Reply |Singaravel Jayabarathan to tamizhamutham, anbudan
  show details Sep 26

  திரு. புலவர் அசோக்,

  தமிழ்நாடு உள்பட இந்தியா விஞ்ஞானத் துறைகளிலும் 1955 முதல் அணு மின்சக்தி உற்பத்தி, அண்டவெளிப் பயணம் போன்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கத்திலும் மற்ற யந்திரக் கணினியிலும் முன்னேறி வந்துள்ளது.

  சி. ஜெயபாரதன்

  செல்வன் to tamizhamutham
  show details Sep 26

  நல்ல தெளிவான கட்டுரை.அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது புவி வெப்பமயத்திலிருந்து நம்மை காக்கும் வகையில் மின்சாரசக்தியை பெற உதவும்.இதற்கு இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பெருமளவில் உதவும்.


  செல்வன்

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Forward Invite செல்வன் to chat

  Reply |Singaravel Jayabarathan to tamizhamutham, anbudan
  show details Sep 26

  அறிவியல் நுணுக்கமோடு கட்டுரையை ஆழமாய்ப் படித்துப் பாராட்டியதற்கு எனது உளங்கனிந்த நன்றி செல்வன்.

  ஜெயபாரதன்
  +++++++++++++

  jmms

  நல்ல அருமையான கட்டுரை..எல்லோரும் விளங்கும் வகையில்.. அனைவரும் உண்மை அறியணும்….
  Sep 27

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Reply to all Forwardjmms is not available to chat

  வேந்தன் அரசுஅப்போ கடலில் பெருங்காயம் கரைக்கலாமா?
  Sep 27

  வேந்தன் அரசு Loading…Sep 27

  Reply |வேந்தன் அரசு to tamizhamutham
  show details Sep 27

  உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது. இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது. ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா ?

  அப்போ கடலில் பெருங்காயம் கரைக்கலாமா?


  வேந்தன் அரசு
  சின்சின்னாட்டி
  (வள்ளுவம் என் சமயம்)

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  ++++++++++

  Anne Josephine Loading…Sep 27, 2009

  Dear Jayabarathan

  I will use this article for this month’s VanagamE VaiyagamE. I hope this is favourable for desalination project

  Anne Josephine
  (Vaigai Selvi)
  Chennai, Tamil Nadu

  ++++++++++++++

  jmms

  பெருமை கொள்கிறோம்..

  அன்புடன் – உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்
  buhari.goog…
  Sep 27

  jmmsLoading…Sep 27

  Reply |jmms to tamizhamutham, anbudan
  show details Sep 27

  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.

  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்

  பெருமை கொள்கிறோம்..


  சாந்தி

  Forgiveness is to offer no resistance to life – to allow life to live
  through you

  http://punnagaithesam.blogspot.com/ =============================

  –~–~———~–~—-~————~——-~–~—-~

  அன்புடன் – உலகின் முதல்
  யுனித்தமிழ்க் குழுமம்
  buhari.googlepages.com/anbudan.html
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Reply to all Forwardjmms is not available to chat

  Reply |Singaravel Jayabarathan to tamizhamutham
  show details Sep 27

  விஞ்ஞானக் கட்டுரையைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி சாந்தி.

  ஜெயபாரதன்.

  +++++++++++++

  2009/9/27 jmms
  – Show quoted text –

  மேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலை மிரட்டல்கள், தாக்கல்கள்

  நல்ல அருமையான கட்டுரை..எல்லோரும் விளங்கும் வகையில்.. அனைவரும் உண்மை அறியணும். இத்தகைய நாகரீகமற்ற போக்கு கண்டிக்கத்தக்கது.


  சாந்தி

  Forgiveness is to offer no resistance to life – to allow life to live through you

  http://punnagaithesam.blogspot.com/ =============================

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Forward

  Reply |Singaravel Jayabarathan to tamizhamutham
  show details Sep 27

  கடலில் பெருங்காயம் கலந்தால் ஒரு காயமும் ஏற்படாது நண்பரே

  ஜெயபாரதன்

  2009/9/27 வேந்தன் அரசு
  – Show quoted text –

  >>உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது. இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது. ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா ?

  அப்போ கடலில் பெருங்காயம் கரைக்கலாமா?


  வேந்தன் அரசு
  சின்சின்னாட்டி
  (வள்ளுவம் என் சமயம்)
  ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Forward

  Reply |Singaravel Jayabarathan to tamizhamutham
  show details Sep 27

  பாராட்டுக்கு நன்றி நண்பரே

  ஜெயபாரதன்

  2009/9/27 மஞ்சூர் ராசா

  விளக்கமான கட்டுரைக்கு மிகவும் நன்றி நண்பரே.

  எதிர்காலத்திற்கான நீரின் தேவையறிந்து இதை அரசியலாக்காமல் காலத்திற்கு தகுந்தவாறு புதியவழிகளை பயன்படுத்தவேண்டியது மிகவும் அவசியம்.

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Forward

  Reply |Singaravel Jayabarathan to tamizhamutham
  show details Sep 27

  பாராட்டுக்கு நன்றி செல்வன்

  ஜெயபாரதன்

  2009/9/26 செல்வன்

  நல்ல தெளிவான கட்டுரை.அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது புவி வெப்பமயத்திலிருந்து நம்மை காக்கும் வகையில் மின்சாரசக்தியை பெற உதவும்.இதற்கு இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பெருமளவில் உதவும்.

  – Show quoted text –


  செல்வன்

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Forward

  senthilஅணுசக்தியை ஆக்கபுர்வமாக பயன்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை எல்லோரும் புரிந…
  Sep 27

  senthilLoading…Sep 27

  Reply |senthil to tamizhamutham
  show details Sep 27

  அணுசக்தியை ஆக்கபுர்வமாக பயன்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி சிறப்பாக எழுதியதற்கு நன்றி.


  செந்தில்

  – Show quoted text –

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

  Reply Forward Invite senthil to chat

  Reply |Singaravel Jayabarathan to tamizhamutham
  show details Sep 28

  பாராட்டுக்கு நன்றி நண்பர் செந்தில்

  ஜெயபாரதன்

  2009/9/27 senthil

  அணுசக்தியை ஆக்கபுர்வமாக பயன்படுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி சிறப்பாக எழுதியதற்கு நன்றி.


  செந்தில்

  –~–~———~–~—-~————~——-~–~—-~
  தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் — பாவேந்தர் பாரதிதாசன்
  -~———-~—-~—-~—-~——~—-~——~–~—

 5. 2007-ல் எழுதப்பட்ட கட்டுரையை 2009- அக்டோபரில்தான் படிக்கமுடிந்தது. பாரதி விரும்பியது, தங்களைப்போன்ற தமிழன்பர்களைத்தான்! தங்களின் தமிழ் நூல்களை விலைக்கு வாங்கிப் படிப்பதொன்றுதான் ஓய்வு பெற்ற-தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த ஓர் சாமான்யனாகிய எனது கடமை.நன்றி.

   • Howdy would you mind stating which blog platform you’re working with? I’m going to start my own blog in the near future but I’m having a hard time choosing between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something unique. P.S Apologies for being off-topic but I had to ask!

 6. மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை. மிக்க நன்றி ஜெயபாரதன்.

 7. அறிவியல் தமிழனுக்கு வணக்கம். இன்றுதான் தங்களின் வலைதளத்தைப் பார்த்தேன். பலருக்குப் புரியாத அணுஉலை தொடர்பானத் தகவல்களை எளியத் தமிழில் தந்துள்ளீர்கள். தமிழ் வாழ்க என முழக்கமிடுவதால் தமிழ் வாழவும் செய்யாது, வளரவும் செய்யாது. தங்களைப் போன்றவர்கள் ஆற்றும் அறிவாழம் மிக்கப் பணிகளே தமிழை வளர்க்கும். வாழ்த்துக்கள்.

 8. This site seems to recieve a large ammount of visitors. How do you advertise it? It offers a nice unique spin on things. I guess having something authentic or substantial to talk about is the most important factor.

 9. Amazing! Your article has a lot comment posts. How did you get so many bloggers to view your post I’m jealous! I’m still getting to know all about blogs on the internet. I’m going to view pages on your site to get a better understanding how to attract more people. Thanks for the help!

 10. Less science and more trumpeting for nuclear energy and desalination technology. I couldn see any scientific explanation in your article, about the safety of this sort of energy in your article. Your area of expertise is nuclear energy. Instead of giving strong supporting statements and scientific explanations for the technology, you are talking about water resources and desalination technology. Don’t spread false promises about desalination technology. Do tell drawbacks of the technology too. For each million litre of water how much salt will be redeposited in a concentrated manner into the sea?? and RO filters are one time investment or periodically have to be renewed, if its to be renewed what is the cost of the filters and what will you do with the old filters??? How will you dispose the old RO filters??? Ok i agree for emergency situation desalination tech is being used in cities, in parallel how many lakes and ponds around chennai city has been tried to conserve and restore??? Do the city have separate drains for sewage and storm water. Atleast 10% of the total investment for desalination tech has to be made for the water resource conservation. Please don’t spread false promises about the technologies.

 11. Pingback: கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் « நெஞ்சின் அலைகள்

 12. மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை….

  இன்றுதான் தங்களின் வலைதளத்தைப் பார்த்தேன்..

  If u free pl contact us… we will contact this awareness program in mumbai…if possible.

  srithar-9702481441
  Vizhithezhu iyakkam
  http://vizhithezhuiyakkam.blogspot.com
  Mumbai

 13. Vajbayee Govt. gave several false promises. The most important promise was, nuclear wastes will be taken away from Koodankulam to Russia. I can pullout the papers and show you. What do you think about the nuclear wastes disposal from Koodankulam Nuclear plants?

 14. Dear Nellai Tamil Selvan,

  As Russia has to supply the fuel to the Reactor, they want to reprocess the spent fuel & get the valuable Plutonium. It is also safe not to store the spent fuel at India.

  Regards,
  Jayabarathan

  +++++++++++

 15. தங்கள் கட்டுரை ஒரு தகவல் களஞ்சியம்.வாழ்த்துக்கள்.நிறைய உழைத்து எழுதுகின்றீர்கள் . அதுவரையில் சரி. ஆனால் ஒரு நாட்டுக்கு வளர்ச்சிப்பாதை , உற்பத்தியின் போக்கு என்னவாக இருக்கவேண்டும் என்பதை அந்த நாட்டுத்தலைவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டுத்தலைவரும் மங்கிய நிலவொளியில் பேசி முடிக்கமுடியாது.இதுதான் பெரிய அநாகரீகம்.இந்த அநாகரீகத்தை தங்களைப்போன்ற தகவல் களஞ்சியங்கள் நாகரீகத்தின் உச்சகட்டம்,
  என்று கூறுவதால் விடுதலை உணர்வாளர்களை அசுரப்படை என்கிறீர்கள்.அது சரியல்ல்.அணுமின்சாரம் தேவையில்லை எங்களுக்கு.
  வளர்ச்சிப்பாதையின்

 16. நண்பர் திருநாவுக்கரசு,

  உங்கள் ஓசை ஒருகை ஓசை. தமிழ்நாட்டில் அணுமின் உலைகளை எதிர்க்கும் அசுரப்படைகளில் சில தற்கொலைப் படைகள். அசுரன் கட்டுரையில் அந்தப் போக்கைக் காணலாம்.

  அவை ஆக்கபூர்வ எதிர்ப்புச் சக்திகள் அல்ல !

  சி. ஜெயபாரதன்.

  ++++++++++++++++++

 17. தமிழில் இவ்வளவு தெளிவாக நான் இதுவரை கூடங்குளத்தினைப் பற்றி படித்ததில்லை. அணுசக்தியினை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தும் பட்சத்தில், மானுட குலத்திற்கு நன்மை எனும் பட்சத்தில், பக்கவிளைவுகள் கொடூரமற்றவை எனும் பட்சத்தில் அனைவருமே அதனை வரவேற்க கடமைப்பட்டுள்ளோம்.

  ஆனால், தங்கள் பதிவுகளில் அணுசக்தியை ‘தெரிந்தே ஏற்றுக் கொண்ட தீங்கு!’ என்றுக் கூறுவது தான் இடறுகின்றது. மற்ற தொழிற்சாலை விபத்துக்களுக்கும், அணு உலை விபத்துக்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டல்லவா! இதுவரை நிகழ்ந்த விபத்துக்களில் பல்லாண்டுகள் செலவிட்டும் முழுமையாக செப்பனிட இயலாத அல்லது மறுமின் உற்பத்திக்கு உகந்ததாக மாற்ற இயலாத சூழலில் தானே உள்ளோம்! சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகளோ அல்லது 30 ஆண்டுகளோ ஆகலாம் எனும் கூற்று ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், சென்ற மார்ச் மாதவிபத்திற்க்கு பின்னர் இன்னமும் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) ஆகவில்லை என்ற செய்தி நெஞ்சை பதறவைக்கின்றதே. அதற்கே அடுத்த ஆண்டுகள் வரை காலம் எடுக்க வாய்ப்புண்டு என்ற கூற்றும் உள்ளதே. ஒரு ‘போபால் விஷ வாயு’ விபத்தினிலே இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்கையும் அப்பாவி மக்கள் பட்ட பாட்டையும் கண்டோம். 25 ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்னமும் விடிவின்றி இருக்கின்றனர்.

  ஜப்பானின் ஃபுகுஷிமா அணுமின் நிலைய விபத்திற்கு பின்பு வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் வந்துள்ளனவா? என் அறிவிற்கு எட்டிய வரையில் 1972ம் ஆண்டு ‘த்ரி மைல் ஐலேண்ட்’ விபத்திற்கு பின்பு அமெரிக்காவும், 1986ம் ஆண்டு ’செர்னோபில்’ விபத்திற்க்கு பின்பு இரஷ்யாவும் புதியதாக அணுமின்நிலையங்களை தொடங்கவில்லை. ஜெர்மனி அரசோ 2022 களுக்குள் படிப்படியாக ஒட்டுமொத்தமாக அணுமின் நிலையங்களை மூடிவிடுவோம் என்கின்றது.

  ’புகைப் பிடித்தால் புற்று நோய் வரும்!’ என மருத்துவர்கள் கூறுகின்றனர். ’புகைப்பிடிப்பதால் மன இறுக்கம் தளர்கின்றது’ என்கின்றனர் என் நண்பர்கள். புகை பிடிக்கும் அவர்களுக்கு இதுவரை புற்று நோய் வரவில்லை. அதற்காக அந் நண்பர்களின் பரிந்துரையை ஏற்பது முறைமையா? அது போலத் தான் அணு உலை விபத்துக்களும். இதுவரை 3 பேரழிவு விபத்துக்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளது; ஆதலால் நாம் தொடரலாம் என்கின்ற கூற்றையும்.

  அதிக பட்சம் 40 ஆண்டு உற்பத்திக்கு பின்பு அதனால் உண்டான கழிவுகளை பல்லாயிரம் ஆண்டு பாதுகாப்பதற்கான செலவினையும் மின் உற்பத்தி செலவில் கணக்கில் கொள்ளவேண்டும். இரு நாடுகளுக்கிடையே போர் என்று வந்தாலும், சோவியத் இரஷ்யாவைப் போல் ஒருகாலத்தில் இந்தியாவின் பூகோள எல்லையில் மாற்றமிருந்தாலும் அணுஉலைகளையும், கழிவுகளை பேணுவதில் / கையாளுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் கணக்கிலிட வேண்டும்.

  சர்வதேச அணுசக்தி பேரவையின் விதிமுறைகளை கூடங்குள அணுமின்நிலையம் மீறியுள்ளது எனும் குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா?

  கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள் என இப்பதிவில் கூறியுள்ளவைகளுக்கு http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16513 தங்களின் பார்வையும் பதிலும் என்னவென அறிந்துக் கொள்ள ஆவலாக உள்ளோம். தங்களின் கருத்திற்க்கு புறம்பாக பின்னூட்டம் உள்ளது என தயவு செய்து தவறாக கருதவேண்டாம். இது கூடங்குளத்திற்கு மட்டுமல்ல மக்கள் நெருக்கமுள்ள உள்ள உலகின் எம்மூலையிலும் அணுமின் நிலையம் அமைந்தாலும் மனம் பதைக்கின்றது. மனித இனத்திற்கு அணுசக்தியா அல்லது அணுசக்திக்காக இந்த மானுடமா எனும் கேள்வி மனதினைக் குடைகின்றது.

 18. கீற்று கட்டுரை எழுதிய உதயகுமார் காலஞ் சென்ற அசுரனின் நண்பர். திண்ணையில் முன்பே அவரை எதிர்த்து எழுதி இருக்கிறேன். ரஷ்ய அணு மின்னுலை கி.மீட்டரில் தவறு சிறிது இருக்கலாம். அவை ஒரு பாதுகாப்பு ஊகிப்பு எல்லை மட்டுமே. அதை வைத்துக் கொண்டு கட்டி முடித்தியங்கப் போகும் பல கோடி மதிப்புள்ள அணுமின் உலையை ஒட்டாதே என்பது ஏற்க முடியாத தர்க்கம்.

  https://jayabarathan.wordpress.com/2011/06/19/fukushima-accident-consequences-5/

  https://jayabarathan.wordpress.com/2011/06/26/2011-march-fukushima-accident-6/

  ஜெயபாரதன்

 19. பாதுகாப்பானதா!

  சிலர் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள் சொல்லிவிட்டார்கள் -அல்லது பிரதமர் சொல்லிவிட்டார், அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள் – அணு உலை பாதுகாப்பானது என்று – அதுதான் கோட்டை எழுத்துகளில் மிக முக்கியமான செய்தியாக வருகிறது. பிரதமர் அது மட்டுமா சொன்னார், ஊழல் ஒன்றும் நடக்க வில்லை என்றும்தான் சொன்னார். அமைச்சர்கள் நாங்கள் எல்லாம் நாட்டுக்காக எங்களையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றும்தான் சொல்லுகிறார்கள். அதெல்லாம் உண்மையாகி விடுமா?
  அணு உலை கட்டமைப்பு என்பது மிகவும் சிரத்தையோடு, பாதுகாப்பு வளையங்களை அமைப்பதில் சரியான முறையைப் பின்பற்றி அமைக்க வேண்டும். அப்படிப் பின்பற்றி அமைக்கப்பட்ட அணு உலைகள் கூட விபத்து ஏற்படும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். அது செர்நோபிலாக இருக்கட்டும் அல்லது புகுஷிமா, தாய்ச்சி ஆக இருக்கட்டும். எந்த அணு உலையும் நூறு சதவீதம் பாதுகாப்பானது என்று யாரும் சான்றிதழ் கொடுக்க இயலாது. ஜப்பான் காரனாலேயே அந்த அளவுக்கு பாதுகாப்பான ஒன்றை அமைக்க முடியவில்லை. அதென்ன ஜப்பான் காரனாலேயே – அதனால்தானே நாம் அவர்களது பொருட்களையே போட்டி போட்டு வாங்குகிறோம்.
  எனவே அதில் இம்மியளவு குறைந்தாலும் – அணு உலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கல்மாடி கட்டிய ஒரு பாலம் விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே இடிந்து விழுந்தது நமக்குத் தெரியும். அது மட்டுமல்ல மிகப் பெரிய திட்டங்களை செய்யும் யாராக இருந்தாலும் சில பெர்சென்ட்டுகள் கமிஷன் தொடங்கி அப்புறம், பயன்படுத்தும் கம்பியில் சில மில்லி மீட்டர் குறைத்துப் போட்டால் சில கோடிகள் நமக்கு மீளும் என்று திட்டமிடுபவர்களும், இரண்டுக்கு ஒன்று என்று கலவை இருக்க வேண்டுமென்றால் அதை மூனுக்கு ஒண்ணாப் போட்டால், இன்னும் சில கோடிகள் மிஞ்சும் என்றும் கணக்குப் போடும் நமது ஆட்களை நம்பி நாம் இந்த அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினால் நம்மை விட மிகச் சிறந்த அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது.
  அதுமட்டுமல்லாமல் கவனக்குறைவால் ஏற்படும் ஆபத்துகளே நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கான விளைவை ஏற்படுத்தும். இரண்டு நாட்களுக்கு முன்பு அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்து ஒன்றே – உலகிலேயே மிக நீளமான ரயில் போக்குவரத்தைக் கொண்ட நாடு என்ற ஒன்று ரயில் விபத்துக்களை இன்னும் குறைக்க முடியவில்லை. ஒரு தடத்தில் ரயில் இருக்கும் போது தானாக சிவப்பு விளக்கு எரியச் செய்வதற்கான உத்தி கூட இன்னும் நம்மிடம் இல்லை. – நாம் எப்படி?

  கழிவுகளாலும் ஆபத்தா!

  அதுமட்டுமல்ல – பேராபத்து அணுஉலை அமைப்பதில் மட்டுமல்ல – அணு சக்தி உருவாக்கத்தில் வெளிவரும் கழிவுகளைப் பாதுகாப்பது என்பதுதான் மிகப் பெரிய விடயாமாக இருக்கிறது. அணு உலை வெடிப்பதோ அல்லது அது வெளிவிடும் கதிர் வீச்சுகளால் ஆபத்து என்பதைப் போல இந்தக் கழிவுகளாலும் ஆபத்து என்பது உண்மை. இந்தக் கழிவுகளை ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமாம். இது நம்ம ஊரில் நடக்கிற விஷயமா. கழிவுகளை எங்கே கொட்டிப் பாதுகாக்கப் போகிறார்கள்?

  தமிழின அழிப்பு!

  அதுமட்டுமல்லாமல் இந்த அணு மின்நிலயம் என்பது கூடங்குளத்திற்கான திட்டமும் அல்ல – ஏற்கனவே சில மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட பின்பு குடி புகுந்த திட்டம். இங்கே உள்ளவர்கள் உயிர் மட்டும் என்ன கிள்ளுக் கீரையா என்ன? ஏற்கனவே கல்பாக்கத்தில் கடந்த சுனாமி போது வெளிவராத செய்திகள் இன்னும் உண்டு. ஆக மொத்தம் வட தமிழகம் இப்போது தென் தமிழகம் என்று ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் அதனால் தமிழினத்தையும் அழிப்பதற்கான சதி என்றுதான் இதையும் அணுக வேண்டியிருக்கிறது. அணுகுண்டுகள் மூலமாக ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் மானு போனார்கள். அதைவிட அதிக இழப்பை அணு உலைகள் கொண்டு வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இதன் பேராபத்தும் பேரழிவும் நம் மண்டைக்கு எட்டும். அதை விடுத்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பிக் கெட்டு அழிய முடியாது.

  அப்புறம் எப்படித்தான் நாம் வளர்வது?

  இதைப் பற்றிய அழிவைச் சொல்லுவதனால் நம் வளர்ச்சி அடைவதைத் தடுக்கிறோம் என்றோ அல்லது மின்சக்தி உற்பத்திக்குத் தடையை இருக்கிறோம் என்றோ அர்த்தம் அல்ல. வருடம் முழுவதும் சூரியன் ஆட்சி செய்கிற இந்த மண்ணில் அதிலிருந்து மின் உற்பத்தி தயாரிப்பது என்பதை மிகவும் சிரத்தையோடு செய்து விட்டாலே போதும் என்பதே நமது வாதம். இயங்குகின்ற அணு உலைகளை இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மூடி விடுவோம் என்று ஜெர்மனி முடிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி இத்தாலியில் நடை பெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள். சூரிய ஒளி மிகவும் குறைவான நாட்களே குறைந்த சில மணி நேரங்களே தனது வீச்சைக் காட்டக் கூடிய நாடுகளே மாற்றி வழிக்கான முயற்சியில் இறங்கியிருக்கும்போது நாம் அதற்கான முயற்சியில் இறங்குவதே சரி.

  தேவையற்ற இழப்பை அழிவைச் சந்திக்கும் முன்பு நாம் விழித்துக் கொள்ளுவதே இப்போதையத் தேவை. இப்போது நடை பெறும் போராட்டத்தில் எல்லாரும் இணைவதும், அதனால் மாற்று முயற்சிகளுக்காக அனைவரும் குரலெழுப்புவதும் அவசியமாகிறது. நாமும் நமது சந்ததியினரும் அணுக கதிர் வீச்சுகளால் பாதிக்கப் படாத காற்றைச் சுவாசிக்கவும், நீரைப் பருகவும் உரிமையுண்டு. அந்த உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் எந்தச் சக்தியும் இல்லை. மக்களுக்காக மக்களால் என்பது உண்மையானால் – மக்கள் பிரதி நிதிகள் கட்டாயம் செவி சாய்த்துத்தான் ஆக வேண்டும்.

 20. 1. https://jayabarathan.wordpress.com/2011/10/05/world-nuclear-power-status/
  21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1
  2. https://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety
  கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
  3 https://jayabarathan.wordpress.com/2011/06/26/2011-march-fukushima-accident-6/

  4. http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations)
  (June 14, 2011)

  ////தமிழின அழிப்பு!

  அதுமட்டுமல்லாமல் இந்த அணு மின்நிலயம் என்பது கூடங்குளத் திற்கான திட்டமும் அல்ல – ஏற்கனவே சில மாநிலங்களிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட பின்பு குடி புகுந்த திட்டம். இங்கே உள்ளவர்கள் உயிர் மட்டும் என்ன கிள்ளுக் கீரையா என்ன? ஏற்கனவே கல்பாக்கத்தில் கடந்த சுனாமி போது வெளிவராத செய்திகள் இன்னும் உண்டு. ஆக மொத்தம் வட தமிழகம் இப்போது தென் தமிழகம் என்று ஒட்டு மொத்தத் தமிழகத்தையும் அதனால் தமிழினத்தையும் அழிப்பதற்கான சதி என்றுதான் இதையும் அணுக வேண்டியிருக்கிறது. அணுகுண்டுகள் மூலமாக ஜப்பானில் ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கு மேல் மக்கள் மானு போனார்கள். அதைவிட அதிக இழப்பை அணு உலைகள் கொண்டு வரக்கூடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இதன் பேராபத்தும் பேரழிவும் நம் மண்டைக்கு எட்டும். அதை விடுத்து அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பிக் கெட்டு அழிய முடியாது. ////

  இது தவறான, அறிவியல் சார்பற்ற எதிர்ப் பிரச்சாரம்.

  இரண்டு அணுகுண்டுகள் வெடிப்பிலும், புகுஷிமாவின் நான்கு அணு உலைச் சிதைவுகளிலும் ஜப்பான் இனம் அழிய வில்லை.

  செர்நோபில் அணு மின் உலை வெடிப்பில் ரஷ்ய இனம் அழிய வில்லை.

  சி. ஜெயபாரதன்,

 21. அணு உலை வெடிப்பதோ அல்லது அது வெளிவிடும் கதிர் வீச்சுகளால் ஆபத்து
  என்பதைப் போல அணு உலை கழிவுகளாலும் ஆபத்து என்பது உண்மை. இந்தக் கழிவுகளை
  ஏறக்குறைய 10,000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமாம். இந்தக்
  கழிவுகளை
  எங்கு பாதுகாத்து வைப்பர்கள் உங்களால் சொல்லமுடியுமா?

  அல்லது அதனை வைத்து அணு குண்டு தயாரிக்க போகிறார்களா?

 22. This article is an unbiased analysis of the present and the future needs of not only Tamilnadu but also of the whole nation.

  Deep Thinking is necessary before opposing the Kudangulam project. The Prime Minister’s assurances regarding safety aspect of this project is most valuable to keep in mind. We cannot under estimate the knowledge of our Scientists.There are elders like APJ.Abdul Kalam respected former President to Guide us. Let Tamil Nadu not politicize this issue.

  -S.M.Guptha(Bangalore)

 23. Pingback: கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்புரைகள் « நெஞ்சின் அலைகள்

 24. Pingback: கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் | திண்ணை

 25. கன்னியாகுமரிக்காரணும் தண்ணீர் தரமாட்டான். கேரளாகாரனும் தண்ணீர் தரமாட்டான். கடலில் இருந்தும் தண்ணீர் எடுக்க்கக் கூடாது என்றால் என்னதான் செய்ய வேண்டும்.வேலை மட்டும் இந்த இருவருக்கும் வேண்டும்….என்ன உலகம் இது..

 26. நண்பர் ஆனந்த்,

  தமிழ்நாட்டரசு கேரளா நாட்டுடனும், கர்நாடகா மாநிலத்தோடும், தெலுங்கு தேசத்தோடும் நட்பாக இருந்த்தால்தான் அவரது உதவி கிடைக்கும். அந்த மாநில மாணவருக்குச் சென்னைக் கல்லூரி களில் இடவசதி, நிதி வசதி அளிக்கலாம். கலாச்சார நிகழ்ச்சிகள் தமிழகம் வரவும், தமிழக நிகழ்ச்சிகள் ஆங்கு நிகழவும் ஏற்பாடு செய்யலாம்.

  திராவிட கட்சிகள் “இந்தி கற்காதே’ போன்ற தடைகள் விதித்துத் தம்மை இந்தியாவில் அன்னியராகக் காட்டி ஒதுங்கிக் கொள்கிறார். ஆகவே தமிழர் இந்தியாவில் எங்கும் புறக்கணிக்க்ப் படுகிறார்.

  கூடங்குள எதிர்ப்பில் அன்னியர் தலையிட்டுத் தமிழரை ஆட்டு மந்தையாக ஆக்கி விட்டார்.

  சி. ஜெயபாரதன்.

 27. இதில் எனக்கு உடன்பாடில்லை நண்பரே.. முதலில் நாம் இங்கு பெய்கின்ற மழை நீரை வீணாக ஆற்றில் விடாமல் சேமித்து வைக்க கற்றுக்கொள்ள வேண்டும். இருக்கிற குளங்கள் ஏரிகள் தூர் வாரப்பட வேண்டும். இங்குள்ள நீரை வீணடித்து விட்டு அடுத்த மாநிலத்தை எதிர் பார்ப்பதே தவறு. இங்குள்ள ஏரி குளங்களில் ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் விட்டுவிட்டு அடுத்தவர்களை எதிர்பார்ப்ப்பதில் என்ன நியாயம். நல்ல உறவு என்பது கேரளா, கர்நாடகா விடம் நடைமுறையில் சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தமிழருக்கு நல்லது..

 28. இங்கு பெய்கின்ற மழை நீரை வீணாக கடலில் விடாமல் சேமித்து வைக்க கற்றுக்கொள்ள வேண்டும்

 29. http://en.wikipedia.org/wiki/Kudankulam_Nuclear_Power_Plant (Jan 30, 2012)

  Regarding people’s fears Former Chairman of Atomic Energy Commission of India Dr. M.R. Srinivasan said that one should never compare the Fukushima plant with Kudankulam and added “The Fukushima plant was built on a beachfront, but the Kudankulam was constructed on a solid terrain and that too keeping all the safety aspects in mind. Also, we are not in a tsunami prone area. The plants in Kudankulam have a double contaminant system which can withstand high pressure. At least Rs 14,000 crore has been spent. If we don’t operate the plant immediately, it will affect the economic stability of our country”.[28]

 30. Pingback: பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும் « நெஞ்சின் அலைகள்

 31. Pingback: பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக

 32. Pingback: அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள் « நெஞ்சின் அலைகள்

 33. Pingback: அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள் | திண்ணை

 34. Hello Mr. Jayabharathan,

  I really like your view towards the India’s Economic stability, Growth, Science etc., etc,. etc……..

  But can tell me why FRANCE, GERMANY and other Countries Banned Nuclear power plant usage???????.

  Dont tell that “They already grown!!! We are growing!!!”.

  I never like all these words from MONEY MINDED Person like you. Think of People, Nature, Ethics (You never studied in your life time I thiink, Even if studied that may for your subject marks not for the purpose).

  You may be the big scientist in ATOMIC ENERGY & SCIENCE… But You cant control Nature’s Disaster ….. Save Nature… Why dont you utilize your mind in Solar energy, Tidel enrgy, Wind energy, in stead Nuclear energy……

  If you delete this reply from your article then I will understand that All your words are wrong….

  Regards,
  Ramakrishnan.A

 35. Dear Ramakrishnan,

  Nuclear Reactors may be shutdown in Germany in the year 2020 (???). Why do they not shut down today, if they are unsafe.

  France is NOT shutting down any nuclear power unit.

  Japan is starting their nuclear units after the safe modifications.

  Still in the world 430 nuclear power units running, tell me why.

  Solar, wind, and biogas power have their own limitations.

  S. Jayabarathan

  • Dear Mr. Jayabharathan,

   Thanks for your clarification. I have Tons of questions to any Atomic energy supporters…..Even after going through almost all your blogs….

   I know Germany is shuting down its Nuclear power plant by 2012. But You couldn’t clarified my question WHY GERMANY GOVERNMENT IS SHUTING DOWN ITS NUCLEAR POWER PLANT?. Instead you are trying to ask counter question to me like politian… Definitly you are not a Politian & I also not a politian.

   Australia has 23% of the world’s uranium deposits (Nuclear Fuel)…. but That country does not have even single Nuclear Power Plant. WHY?.

   You want to say “Nuclear Power Protesters as a அசுரப்படை எதிர்ப்புகள் !. I Dont know why?.

   Could you please answer my question right to the point … So that all other Viewers can understand the reason behind this exactly.

   “FOR GLORIOUS…… MANKIND IS NECESSARY NOT KALPAKKAM ATOMIC PLANT”

   Please “CHAPPAKATTU KATTATHEERGAL”

   Regards,
   Ramakrishnan.A

 36. “””””””””””””””””On Mon, Sep 10, 2012 at 7:47 PM, சி. ஜெயபாரதன் wrote:

  ////I know Germany is shuting down its Nuclear power plant by 2012. But You couldn’t clarified my question WHY GERMANY GOVERNMENT IS SHUTING DOWN ITS NUCLEAR POWER PLANT?. ////

  The year is 2020 NOT 2012 ? IT IS a POLITICAL DECISION NOT a TECHNICAL one in Germany.

  அசுரப்படை எதிர்ப்புகள் – காலஞ் சென்ற அசுரன் [உதயகுமாரின் நண்பர்] என்பவர் நடத்திய வன்முறை எதிர்ப்பு.

  சி. ஜெயபாரதன். “””””””””””””””””

  Dear Mr. Jayabharathan,

  Always Peoples like you used to find mistakes on the common man and making yourself as superior than them.

  “IT IS a POLITICAL DECISION NOT a TECHNICAL one in Germany.” Wah! Its great answer”!!!!…..

  Nadathunga Iyaa Sameeyov!!!!!

  I NEVER SUPPORT ATOMIC ENERGY…. and this world, you and me will realize the Worst face of Atomic power soon with some natural disaster ….

  Thanks… Good Bye….

  Regards,
  Ramakrishnan.A

  • Hello சி. ஜெயபாரதன்,

   I think you know that JAPAN Announced that they are going to Shutdown all their Nuclear Power Plant by 2030.

   Do you want to say that this is also “POLITICAL DECISION”?….

   Dear Mr. Jayabharathan…

   You are really making mistake…… Dont Try to Cheat Common Peoples Most of them does know about Half Life period of Uranium Reaction and everything…..I am damn sure if Kundankulam plant starts…. Then It will be a big Problem for us……Including for you and your Heritage…..

   • ———- Forwarded message ———-
    From: K.Natarajan
    Date: 4 January 2018 at 18:54
    Subject: Fwd. AERWA NEWSLETTER Vol 19(1) Jan-Feb 2018, on Kudungulam
    To: npcil Retirees Group

    Dear friends,
    A feeble attempt to revert our interest, at least partially, to our nuclear terra ferma!

    KKNPS [Kudungulam Reactors] made news recently with both units operating at full power, making a record generation of electric power from a single station!

    I wrote an article to AERWA NEWSLETTER on this for getting some attention on NPCIL achievement, , which is published with
    liberal cuts from editor(!), to squeeze in available space(with a colour photo of KKNPS added)

    WITHIN THIS GROUP, not many may be aware of the history or technicalities or politicalities of this great project, the first plant to produce such phenomenal power of 1000 going to 2000 MW! This is a different kind of story, with a different country, with different technical challenges, quite different from our maiden venture with US or later with Canada, probably with the longest incubation period in Nuclear history, too (it was rumoured in my days that what was offered was VVER 400?), ending as a modern technical and international feat!

    I humbly dedicate this publication to our KKNPS PITHAMAHA, in our group, Shri VSG Rao. I will feel doubly happy if this kindles his memories to come up with his technical as well as personal memoirs on his VVER interaction with Russia, to share in this group.
    With warm regards,
    K.Natarajan

    Subject: AERWA NEWSLETTER Vol 19(1) Jan-Feb 2018

    Warm Season’s greetings. I hope you will appreciate that with the present issue, your News Letter is making a small beginning to be bilingual. We will try to bring some of the important news, Government orders and other issues, pertinent to DAE retirees in Hindi also. This is an experiment in response to the requests from few of our members and we will review it after one year. Indian Nuclear Energy Programme reached a milestone in December when KKNPP produced full capacity (1000×2 MWe) power. A brief article on learning curve in our nuclear programme appears in this article.
    Managing Editor

    DAE News:
    Learning curve experience in PHWR and VVER-
    a comparison.

    Units 1 and 2 of KKNPP of VVER-1000 type reached their full power capacity of 1000 MW each on December 5, 2017, after frequent maintenance breaks and some retu​r​ning and retrofitting, culminating with a record generation of maximum power production from a single station complex for our country.

    The indigenously developed 700MWe nuclear plants of PHWR will become operational soon, two at Kakrapar and two more at Rajasthan, adding to the already operating host of 240 MW and 540 MW PHWRs. With this, our nuclear power program could be solidly built around this indigenous-import mix, as of now. Both have decades old historical origin, a revisit being attempted here to bring out the differences in the Learning Curves in our PHWR and VVER. While PHWR started under the patronage of luminaries like Bhabha and Nehru and covered by an international scheme (Colombo Plan), VVER was borne out of economic necessity of both the partners, USSR & India, as a commercial venture, and went through rough political and
    ++++++++++

 37. ayya c jayabharadhan intha neuclear reactor paartha namadhu palaya tea boiler methedai pola irukkuthea .urenium kattiyai payanpaduthi tea boileril suduthanni thayarikka mudiuma.

  • நண்பரே,

   யுரேனியக் கட்டியை ஒர் வாளித் தண்ணீரில் இட்டால், நீர் சூடேறுகிறது. ஒரு வாளிக் கனநீரில் [Heavy water] இட்டால், கனநீர் கொதிக்கும்.

   யுரேனியத்தை விட தீவிரக் கதிரியக்கம் உள்ள ரேடிய உலோகத்தை ஒரு வாளித் தண்ணீரில் இட்டால் சிறிது நேரத்தில் நீர் கொதிக்கிறது.

   சி. ஜெயபாரதன்.

   ++++++++++++++++++++

 38. On Sat, Feb 4, 2012 at 2:12 PM, சி. ஜெயபாரதன் wrote:

  nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com

  11:44 AM (2 hours ago)

  to me

  பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு

  வணக்கம்

  இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கடின தண்ணீர் (hard water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன். தங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என்னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு.

  தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்

  என்றும் மாறா அன்புடன்

  நந்திதா

 39. jeyabarathan avarkalay tamilnattil neenkal sterlite dabbar duppont seyyum sseeralivukal unkal kanniriku theriyatha neenkal ariviyal vathi pilithukolvirkal saatharan makkal enka selvarkal, manachatchipadi pesavum kalpakkam sendru kudineer kudikka thayara. kalvi kasu kudineer kasu ellam oolaal mayam sirutholil thaniyar mayam porulatharam 20 sathaiam thaniyar vasam unkal ariviyalai kuppayil podunkall purattu peasavandam.

 40. பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு

  வணக்கம்

  இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார்,

  தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கடின தண்ணீர் (hard water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார்,

  தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்

  என்றும் மாறா அன்புடன்

  நந்திதா

 41. October 5.

  கூடங்குளம் அணு உலையைத் திற!

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!
  அணுசக்தி ஆபத்து என்று பீதியூட்டி கூடங்குளம் அணு உலையை எப்படியாவது இழுத்து மூடிவிடவேண்டும் என்று அமெரிக்கக் கைக்கூலி சுப.உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர். அக்டோபர் 29ல் சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் மிரட்டுகின்றனர். மத்திய, மாநில அரசுகளோ
  கூடங்குளம் அணு உலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கி, அவர்களின் மாற்று வாழ்வாதாரப் பிரச்சனைகளை முறையாகத் தீர்த்துவைக்க இன்று வரை முழுமையாக முயற்சி செய்யவில்லை. இத்தகைய ஒரு சூழலில், நாட்டில் நிலவும் மின்வெட்டு, மற்றும் சமூக பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கான உத்திரவாதத்துடன் அணு உலையைத் திறக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக உள்ளது.
  அணு உலை பற்றிய பீதி
  அணு உலை எதிர்ப்பாளர்கள் புகுசிமாவில் ஏற்பட்ட சுனாமி பேரழிவைக் காட்டி அணு உலை விபத்து, கதிர்வீச்சு ஆபத்து, அணுக்கழிவுகளின் அபாயம் என்று பீதியூட்டி, அச்சுறுத்தி கூடங்குளம் அணு உலையை மூடியே ஆக வேண்டும் என்கின்றனர். புகுசிமாவில் அணு உலை உருகி கதிர்வீச்சு தாக்கியதற்குக் காரணம் அணுத் தொழில் நுட்பம் அல்ல என்பதையும், தனியார் நிறுவனங்களின் இலாப வெறியின் காரணமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகப் பின்பற்றாததே காரணம் என்பதையும் ஜப்பான் அரசாங்கத்தின் ஆய்வறிக்கை தெளிவாக்கிவிட்டது. மேலும் அணுகதிர்வீச்சு பற்றிய அணு சக்தி எதிர்ப்பாளர்களின் பிரச்சாரம் வெறும் பீதி என்பதும் அம்பலமாகிவிட்டது. புகுசிமாவில் யாரும் கதிர்வீச்சால் இறக்கவில்லை. புகுசிமா விபத்தைத் தொடர்ந்து டோக்கியோவில் கதிர்வீச்சின் தாக்கமானது மனித உடலில் ஓராண்டில் பொட்டாசியம் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் தாக்கத்தில் (390 மைக்ரோ சீவெர்ட்ஸ்), பத்தில் ஒரு பங்குதான் நிலவியது (40 மைக்ரோ சீவெர்ட்ஸ்). அணு உலையின் 50 மைல் சுற்றளவில் வசிப்பவர்களின் மீது ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதில் வெளிப்படும் கதிர்வீச்சின் தாக்கம் (0.1 மைக்ரோ சீவெர்ட்ஸ்) அளவுக்குக் குறைந்ததுதான். அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் விபத்தின்போது கதிர்வீச்சின் தாக்கம் இயற்கையிலும் மருத்துவத் துறை மூலமும் ஒரு மனிதன் பெறுகின்ற (4000 மைக்ரோ சீவெர்ட்ஸ்) அளவில் நான்கில் ஒரு பகுதிதான் இருந்தது. செர்னோபிலில் நடந்த கொடிய கதிர்வீச்சுப் பாதிப்புகளுக்குப் பிறகு அணுக் கதிர்வீச்சுப் பாதுகாப்பில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு உலையே, “கதிர்வீச்சு அபாயம் என்பது பீதி” என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகிறது. எனவே அணுக்கதிர்வீச்சு ஆபத்து என்பது பீதியூட்டுவதேயாகும்.
  அணு உலைகளை மூடவேண்டும் என்பதற்கு அவர்கள் கூறுகின்ற மற்றொரு காரணம் புகுசிமாவிற்குப் பிறகு உலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவருகிறார்கள் என்பது. இது ஒரு வடிக்கட்டிய பொய்யாகும். இன்று உலகில் 65 நாடுகள் அணு உலைகளை நிறுவ ஆர்வம் காட்டி வருகின்றன. புகுசிமாவிற்குப் பிறகும் அமெரிக்கா தனது 104 அணு உலைகளில் ஒன்றைக்கூட மூடவில்லை. பிரான்ஸ் 74 சதவீதம், பெல்ஜியம் 57சதவீதம், ஸ்வீடன் 40 சதவீதம், ஸ்விட்சர்லாந்து 41 சதவீதம் அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. புகுசிமாவிற்குப் பிறகு ரசியா 20 சதவீதம் புதியதாக அணுசக்தி மின்சாரத்தையும், சீனா 51 புதிய அணு உலைகளையும், தென்கொரியா 20 அணு உலைகளையும், வியட்நாம் 5 உலைகளையும் கட்டிவருகின்றன.
  அணு சக்தித் துறையின் நெருக்கடி
  அணு உலைகளைத் திறப்பதற்குப் பல நாடுகள் விரும்பினாலும், பொதுவாக அணு சக்தித் துறை உலகம் முழுவதும் இறங்குமுகத்திலேயே உள்ளது. புகுசிமாவிற்கு முன்பே அணு சக்தித் துறை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அணு சக்தித்துறையின் வரலாற்றிலேயே 2008ஆம் ஆண்டில்தான் உலகில் ஒரு அணு உலை கூட கட்டப்படவில்லை. 2009 முதல் 2011 வரை 9 அணு உலைகள் கட்டப்பட்டன. அதே சமயம் பழைய 11 அணு உலைகள் மூடப்பட்டுவிட்டன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 1989இல் 177 அணு உலைகள் இயங்கின. அது 2011ல் 143ஆகக் குறைந்துவிட்டன. 2010ல் அணு சக்தித் துறை மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை விட (375 ஜிகா வாட்ஸ்) பிற சூரிய ஒளி, காற்றாலைகள், உயிரியல் மற்றும் கழிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரித்துவிட்டது (381 ஜிகா வாட்ஸ்).
  மேற்கண்டவாறு அணு சக்தித்துறை வீழ்ச்சியைச் சந்தித்துவரக் காரணம் அணுத் தொழில்நுட்பம் அல்ல என்றும், இன்று அந்நாடுகள் சந்தித்துக்கொண்டிருக்கிற முதலாளித்துவப் பொது நெருக்கடிதான் காரணம் என்றும் முதலாளித்துவ ஆய்வாளர்களே கூறுகின்றனர். அணு உலைகளை அமைப்பதற்கும், மின் பகிர்மான திட்டங்களுக்கும், விபத்துக்காலச் செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்தாலும் அணு உலைகளை இலாபகரமாக இயக்கமுடியவில்லை. பொருளாதார நெருக்கடிகளால் மற்றத் துறைகளைப் போலவே அணுமின் துறையும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல லட்சம் கோடி டாலர்களை அரசாங்கம் இலவசமாக வழங்கினாலும் முதலாளித்துவ வர்க்கங்களால் எந்த ஒரு தொழில் நிறுவனத்தையும் மீட்க முடியவில்லை. எனவே அணு சக்தித்துறை உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளையும் தனியாரிடமிருந்து நஷ்ட ஈடு இன்றிப் பறிமுதல் செய்து சமூக உடைமை ஆக்குவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். மாறாக அணு உலைகளை மூடுவது தீர்வாகாது. முன்னேறிய நாடுகளில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் பின் தங்கிய நாடுகளில் மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியையும் நிறுவுவதுதான் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கான ஒரே வழியாகும். அதன் மூலம் மட்டுமே படிப்படியாகச் சமூக உடைமையை நோக்கிச் செல்ல முடியும். இருப்பினும் நிலவுகின்ற முதலாளித்துவ ஆட்சியின் கீழேயே உலகமய தனியார்மயக் கொள்கைகளை ஒழித்து அணு சக்தி உள்ளிட்ட சேவைத் துறைகளை அரசே ஏற்று நடத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அணு உலையை பாதுகாப்பாகவும் மக்களுக்கான நஷ்ட ஈட்டையும் உத்திரவாதப் படுத்தி இயக்க முடியும். அதற்கு மாறாக அணு உலையை மூடு என்று போராடுவது வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பும் அடையாள அரசியலேயாகும். முதலாளித்துவ நெருக்கடிகளை மூடி மறைத்து ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றுவதே ஆகும். குறிப்பாகக் கூடங்குள அணு உலையை மூடு என்ற போராட்டத்தின் பின்னால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் அடங்கியுள்ளன.
  ஆற்றல் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்
  இந்திய நாட்டின் அணு சக்தி உள்ளிட்ட ஆற்றல் துறைகள் அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்தக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம். இந்திராகாந்தியின் காலத்தில் இந்தியா தற்காப்பிற்காக அணு குண்டுச் சோதனை நடத்தியபோது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் எரிபொருள் வழங்க மறுத்தன. அதன் பிறகு ராஜீவ்காந்தி ரசியாவுடன் கூடங்குளம் ஒப்பந்தம் போட்டு எரிபொருளுக்கு உத்திரவாதம் செய்தார். ரஷ்யாவில் மரபுவழி முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டதால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அடுத்து பா.ஜ.க அரசாங்கம் அணுகுண்டு சோதனை செய்தபோது அமெரிக்காவும் பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதை எதிர்த்தே வாஜ்பாய் அரசாங்கம் கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தைப் புதுப்பித்தது. எனவேதான் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆரம்பம் முதலே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து வருகின்றனர். அதனடிப்படையிலேயே தற்போது உதயகுமார் கும்பலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி வருகிறது.
  அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் அணு சக்தி, எண்ணெய், எரிவாயு உட்பட அனைத்து ஆற்றல் வளங்களின் மீதும் தனது ஏகபோகத்தை நிறுவுவதற்குத் துடிக்கிறது. சர்வதேச அணுக்கழகம் (மிகிணிகி), அணு எரிபொருட்கள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு (ழிஷிநி), அணு ஆயுதப் பரவல் தடைச்சட்டம் (ழிறிஜி) மூலம் அணுசக்தி துறை முழுவதையும் தமது கட்டுப்பட்டில் வைத்துள்ளது. ஐந்து அணு ஆயுத நாடுகள் தவிர்த்து உலகில் எந்த ஒரு நாடும் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது மட்டுமல்ல, அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கக் கூடாது என்றும் மிரட்டுகிறது. தமக்கு அடிப்பணியும் நாடுகள் அணு ஆயுதம் செய்தாலும் கண்டுகொள்ளாத அமெரிக்கா, தமக்கு அடிப்பணியாத நாடுகள் அணுமின்சாரம் தயாரிப்பதையும் மறுக்கிறது. பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது என்ற பேரில் ஆப்கன், ஈராக்கின் மீது போர்த்தொடுத்து அந்நாடுகளில் பொம்மை ஆட்சியை நிறுவியுள்ளது. தற்போது ஈரான் அணு குண்டு செய்கிறது என்று கூறி அந்நாட்டின் மீது போர்த்தொடுக்க ஆயத்தம் செய்து வருகிறது. இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்தியக் கிழக்கில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது மேலாதிக்கத்திற்காகவே கொடிய ஆக்ரமிப்புப் போர்களை நடத்துகின்றது.
  அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்குச் சேவைசெய்யும் ஒரு எடுபிடி நாடாக இந்தியாவை மாற்றும் இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா ஏற்ற பிறகுதான், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது. அணுசக்தி ஒப்பந்தமும்கூட ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்களை ஆதரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஹைடு சட்ட நிபந்தனக்கு உட்பட்டே போடப்பட்டது. ஈரானிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுப்பது; இந்தியாவின் தற்காப்புக்கான அணு ஆயுதத் திட்டத்தைச் சிதைப்பது; இந்தியாவின் சுயேச்சையான அணுமின் திட்டத்தை ஒழிப்பது; இந்திய அணு ஆற்றல் சந்தையில் தமக்குப் போட்டியாக விளங்கும் ரசியா மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளை விரட்டுவது என்பதே அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.
  ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றபிறகு, 2010ஆம் ஆண்டு அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்புத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகத்தை மீட்பது, மனித உரிமையைக் காப்பது, ஊழலை ஒழிப்பது என்ற பேரில் உலகின் எந்த ஒரு நாட்டிலும் அமெரிக்கா தலையிடும் என்றும்; அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தும் என்றும் அது கூறுகிறது. ஏமன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து மக்கள் போராடியபோது அந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா “ஆட்சி மாற்றத்தின்” மூலம் தமது பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் துணைநின்றன. அதற்கும் முன்னர் சோவியத் ரசியாவிலிருந்து பிரிந்து வந்த நாடுகளில் பல வண்ணப் புரட்சிகள் எனும் பேரில் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி “ஆட்சிமாற்றத்தை” அமெரிக்கா செய்தது.
  இந்தியாவிலும் அன்னா அசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினரும், உதயகுமார் தலைமையிலான அணு உலைக்கு எதிரான இயக்கங்களும் இன்னும் பலவகையான தொண்டு நிறுவனங்களும் “அமெரிக்காவிடம் நிதியுதவிபெற்று அதன் கைப்பாவைகளாகச் செயல்படுகின்றன”. அமெரிக்காவின் தீவிர விசுவாசியான மன்மோகன் கும்பல் அமெரிக்காவின் கோரிக்கையை முழுமையாகச் செயல்படுத்தும் முறையில் அதற்கு நிர்ப்பந்தம் கொடுப்பது தற்போதைய போராட்டங்களின் நோக்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் தாசனான மன்மோகன் கும்பலையும் எதிர்த்து இந்திய மக்கள் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டால் அப்போது “அமெரிக்காவின் நேரடிப் பொம்மை ஆட்சியை நிறுவ இந்தத் தொண்டு நிறுவனங்கள் துணை நிற்கும்”. அதற்காகப் பல்வேறு கோரிக்கைகளை வைத்து அவைகள் போராடுகின்றன. அந்த நோக்கத்தை அடைவதற்கு அரசியல் திரட்டலுக்கான போராட்டங்களில் ஒன்றுதான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும்.
  பாதுகாப்பு உத்திரவாதத்துடன் அணு உலையைத் திற
  கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவது என்று மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தவுடன் உதயகுமார் கும்பல் கூடங்குளம் அணு உலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது. அணு உலை ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு, மக்களின் மறுவாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றுவது, கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்காகப் போராடப் போவதாக அறிவித்தனர். ஒரு புறம் உண்ணாவிரதப் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என நடத்திக்கொண்டே மறுபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அணு உலை பாதுகாப்புக் காரணங்களுக்காக அணு உலையை மூட வேண்டும் என வழக்குத் தொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்றம் அணு உலையைத் திறக்க வேண்டும் – பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது.
  அதன் அடிப்படையில் அரசாங்கம் அணு உலையில் எரிபொருளை நிரப்பத் துவங்கியதுடன், அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பாக நட்ட ஈடு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி பற்றிக் கேள்வி எழுப்பி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்றம் அணு உலையின் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டது. பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசோ இந்திய அணு சக்தி கழகம் முன்வைத்துள்ள 17 பாதுகாப்பு அம்சங்களில் 7ஐ நிறைவேற்றியுள்ளதாகவும், மீதியை அணு உலையை இயக்கிக்கொண்டே நடைமுறை படுத்துவதாகவும் நீதி மன்றத்தில் கூறியுள்ளது.
  எனவே தற்போதைய பிரச்சினை பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் தீர்த்துவிட்டுத்தான் அணு உலையைத் திறக்க வேண்டுமா? அல்லது இருக்கும் நிலையிலிருந்து அணு உலையைத் தொடங்கி நடத்திக்கொண்டே பாதுகாப்பு அம்சங்களை முழுமையாகச் செயல்படுத்துவதா என்பதேயாகும். இன்று தமிழகத்திலும் நாடு முழுமையும் உள்ள மின்சாரப் பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டும் கூடங்குளம் அணு உலையில் அமைக்கப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளை கணக்கில் கொண்டும் பார்க்கும் போது அணு உலையைத் தொடங்கி இயக்கிக்கொண்டே மீதியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீர்ப்பது ஒன்றுதான் உகந்த வழியாகும். அவ்வாறு தீர்வு காண்பதற்குத் தடையாக இருப்பது எது? நீதிமன்றத்தில் அணு உலையை எதிர்க்கவில்லை பாதுகாப்புக்காகத்தான் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டே மக்கள் மன்றத்தில் அணு உலையை மூடவேண்டும் என்று முற்றுகைப் போராட்டம் நடத்திவரும் உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரின் அராஜகமே தடையாக உள்ளது.
  மறுபுறம் மத்திய, மாநில அரசுகளோ ஆரம்பத்திலிருந்தே கூடங்குளம் மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அக்கறையின்றியே செயல்பட்டுவருகின்றன. காங்கிரஸ் கட்சி போபால் விஷவாயுப் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் அக்கட்சியின் வாக்குறுதிகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாது. கூடங்குளம் மக்கள் பிரச்சினைகளை அடக்குமுறைகள் மூலம் தீர்வுகாணாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
  மக்கள் பிரச்சினைகளை பேசித் தீர்
  கூடங்குளத்தில் இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் விபத்துக்கள் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; மீனவர்கள், விவசாயிகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்; பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்குதல், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிய நிறுவனத்தை விபத்துக்கான நட்ட ஈட்டை ஏற்கவைப்பது; ரசியாவுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் மட்டுமல்லாது அமெரிக்காவோடு ரகசியாமாகச் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தங்களையும் வெளியிடவேண்டும் எனப் போராடுவது அவசியமாகும். மேற்கண்ட கோரிக்கைகளைப் பேசித்தீர்க்க உதயகுமார் குழுவினருடன் மட்டுமல்லாது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். அதைக் கூடங்குள அணு உலையை இயக்கிக் கொண்டே செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை எதிர்த்துப் போராடுவதுதான் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் செய்யவேண்டியதாகும்.
  கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து
  உதயகுமார் தலைமையிலான அணுசக்தி எதிர்ப்பாளர்கள் தங்களைக் காந்தியவாதிகளாகவும், தாங்கள் அகிம்சை வழியில் போராடுபவர்களாகவும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அணு உலைக்கு எதிராக மறியல் செய்வது, முற்றுகைப் போராட்டம் என்று செயல்படுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு கூட நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று அராஜகமாகப் பேசுகின்றனர். அவர்களை பொறுத்தவரை எல்லா விதமான நியாய தர்மங்களையும் மீறி வாய்ப்புக் கிடைக்குமானால் கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தகர்த்து தரைமட்டமாக்கவும் தயங்கமாட்டார்கள். உண்மையில் அதுதான் அவர்களின் வேட்கையும் கூட.
  உதயகுமார் கும்பல் அணு உலைக்குச் சேதாரம் விளைவித்தால் அதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்துவார்களா? அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்களா? அல்லது அணு உலையை இடிக்க விட்டுவிட்டு வழக்குப் போட்டுவிட்டோம் என்று நாடகமாடுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மன்மோகன் தலைமையிலான மத்திய ஆட்சியும், ஜெயா தலைமையிலான மாநில ஆட்சியும் அமெரிக்காவின் ஆதரவு ஆட்சிகளேயாகும். உதயகுமார் போன்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிபெறுகிறார்கள் என்று பிரதமரே கூறியபோதும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவ்வாறு அமெரிக்காவிலிருந்து வரும் நிதியை தடுத்து நிறுத்தவும் இல்லை. நரசிம்மராவ் ஆட்சியின் போது அயோத்தியில் பெரும் அளவிலான இராணுவத்தைக் குவித்து வைத்த பிறகும் கூட இந்துமத வெறியர்கள் பாபர் மசூதியை இடித்ததை எப்படி வேடிக்கை பார்த்ததோ அதேபோல அமெரிக்காவின் ஆதரவாளர்கள் தற்போது கூடங்குளம் அணு உலையை இடிப்பதையும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே அணு உலையைத் தாக்குபவர்களை முன்கூட்டியே தடுக்கவேண்டும். அவ்வாறு அணு உலையை இடிக்க முயற்சி செய்தால் அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் அணிதிரள வேண்டும்.
  தொகுத்துப் பார்க்கும் போது இன்று அணு மின் நிலையங்கள் அமைப்பதில் உள்ள அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு அணு உலைகளை மூடுவதன் மூலம் தீர்வுகாண முடியாது. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி, இராணுவ ஒப்பந்தங்களை ஒழித்துக்கட்டி ஒரு சுதேசிய மின் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமே தீர்வு காணமுடியும். அதற்கு அணு உலைக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு அந்நிய ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதே தீர்வாகும்.
  அணுசக்தியை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை என்றும், எனவே கூடங்குளம் அணு உலையை மூடு என்றும் ஒரு சிலர் இயக்கம் நடத்துகின்றனர். அதன் மூலம் அமெரிக்காவிடமிருந்து நிதியுதவி பெற்று செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அணு உலையை மூடக்கோருவது ஜனநாயக உரிமை என்றால், அணு உலையைத் திற என்பதும் ஜனநாயக உரிமையே. உண்மையில் அணு உலையைத் திற என்பதே பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாகும். எனவேதான் கூடங்குளம் அணு உலையைத் திற என்ற கோரிக்கையின் பின்னால் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரளவேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

 42. இந்தியா அணு ஆயுத நாடாக மாறியுள்ளதை யாரும் மறக்கக் கூடாது, மறுக்கக் கூடாது, மாற்ற முடியாது. மதிக்கா விட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை யாராலும் தற்போது புறக்கணிக்க முடியாது.

  இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக ஆக்க வினைகளில் அணுவியல்துறை பெரு வளர்ச்சி அடைந்து 20 அணுமின் உலைகள் தற்போது மின்சாரம் பரிமாறி வருகின்றன.

  கதிரியக்கம் என்பது இயற்கையாலும், செயற்கை முறை யாலும் இந்தியர் உட்பட உலக மக்களை ஏதாவது ஒரு வழியில் தெரிந்தோ, தெரியாமலோ பாதித்து வருகிறது.

  ஆகவே அணுசக்தி பற்றியும், அணுமின் சக்தி பற்றியும், அணு ஆயுதம் பற்றியும், கதிரியக்க நன்மை தீமை பற்றியும் அனைவரும் வெறுப்பின்றி ஓரளவு அறிந்து கொள்வது நல்லது.

  எதிர்பாராது, இந்தியாவில் அணுவியல் விபத்துக்கள் நேர்ந்தால், மத்திய அரசு, மாநில அரசு, நகராண்மை, ஊராண்மை அதிகாரிகள், காவல்துறை, சமூக முன்னுதவிக் குழுவினர் அனைவரும் பொறுப்பாக முன்வந்து உதவியில் ஒத்துழைக்க வேண்டும்.

  போபால் விஷ வாயு விபத்தில் இப்படி அரசாங்க, பொது மக்கள் ஈடுபாடு இல்லாமல் அப்பாவி மக்கள் துன்புற்றது வேதனைக் குரியது.

  சி. ஜெயபாரதன்.

 43. I just reviewed some comments. It is interesting and educational for me. I admire your ability to speak with supporters and adversaries to open their eye for further exploration of the respective subjects. V.P.Veluswamy MD

 44. சுனாமி இயற்கை இடர்பாடு இல்லாமல் வேறு என்ன??????? நிர்ணயிக்கப்பட்ட ஒன்றா?????

 45. உலகில் உள்ள 430 மேற்பட்ட அணுமின் உலைகள் பல கடல்கரையில் தான் அமைந்துள்ளன. சுனாமியில் பாதிக்கப் பட்ட ஜப்பான் புகுஷிமா அணுமின் உலை விபத்து கூடங்குளத்தில் நேராது.

  https://jayabarathan.wordpress.com/kudangulam-reactor-safety/

  சி. ஜெயபாரதன்

 46. ஜெயபாரதன், நீங்க சொல்ற விளக்கமெல்லாம் கனடா மாதிரி நாட்டுக்குத்தான் இது சரி… போபாலில் நாங்கள் பார்த்தோம்…பல்லாயிரம் உயிர்கள்… பல லட்சம் நோயாளிகள்…. கவனிப்பாரின்றி இன்னும் அதன் பிரச்னை பல தலைமுறைகளுக்கு தொடர்கிறது… பல நூறு தமிழக மீனவர்கள் செத்ததுக்கும் தமிழகத்தின் பல பிரச்னைகளுக்கும் இந்தியாவிற்கு கவலையில்லை..

  அதனால்தான் நாங்கள் தமிழ்நாட்டில் வேண்டாம் என்கிறோம்…. இந்தியாவில் வேறு எங்குவேண்டுமானாலும் போடுங்கள். டெல்லியில், பம்பாயில் கல்கத்தாவில் எங்கே வேண்டுமானாலும் போடுங்கள்…. எங்கள் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு….

 47. Pingback: கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது | நெஞ்சின் அலைகள்

 48. Pingback: கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது | திண்ணை

 49. Pingback: கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத்திறனில் இயங்குகிறது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத

 50. Pingback: இரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது | . . . . . நெஞ்சின் அலைக

 51. Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

 52. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.