ஊழிற் பெருவலி யாதுள ?

திட்டமிட்ட படைப்பு
சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++
 

பிரபஞ்சக் காலவெளிக் குமிழி

திரியும் ஒளிமந்தைக் கொத்துக்கள், 

படைப்பாளியின்

மாபெரும் ஓலைச் சுவடி நூலகம் !

கடவுள் படிப்படி யாய்த் 

திட்டமிட்டு

முடங்கும் கருங்குமிழி

தானாய் எதுவும் தவழாது !

வீணாய் இப்பேரண்டம்

தோன்ற வில்லை !

ஆதமும், ஏவாளும்  குரங்கி லிருந்து

பிறக்க வில்லை !

மூல வித்து

ஒன்றி லிருந்து ஒன்று

உருவாகிச் சீராகி வந்துள்ளது !

இல்லாத ஒன்றி லிருந்து,

எதுவும்

எழாது, எழாது, எழாது !

இயக்கும் சக்தி ஒன்று

இல்லாமல்,

கட்டுப் படுத்தாமல்,

திட்டமிடப் படாமல்

எதுவும்

கட்டப்பட வில்லை !

பிரபஞ்சப் படைப் பனைத்தும்

காரணவிளைவு

நியதியில்

சீரொழுங்கு இயக்கத்தில்

நேரான மீளும் நிகழ்ச்சியில்

வேராய் முளைப்பவை.

விழுது விட்டுக் கிளைகள் விட்டு !

தாறு மாறாகத்

தாரணி உருவாக வில்லை !

தேனெடுக்கும் தேனீக்கள்,

அணி வகுக்கும் எறும்புகள்,

கூடு கட்டும் தூக்க  ணாம் குருவி,

கூடி வாழும் யானைகள்,

ஈக்கள், ஈசல், மின்மினி 

காக்கை, கழுகு, பேசுங் கிளி

நீந்தும் மீனினம்,

ஊர்ந்திடும் இலைப்புழு,

உருமாறிக் கூடு விட்டு வானில்

பறக்கும் பட்டாம் பூச்சி,

மரங்கள்காய் கனிகள்

மனிதம்விலங்கினம் யாவும்,

உயிரியல்

கணித விஞ்ஞானத்தில்

திட்ட மிட்டுத் தோன்றியவை.

காலவெளி நூலகத்தில்

கடவுள் படைத்திட்ட

மனிதப் பிறவியே

உன்னத  உயிர் யந்திரம், 

இறைபோல் படைக்கும் திறனுள்ள

சிந்திப்பு யந்திரம் !

++++++++++++++++++
 https://youtu.be/hoiQX9tWiwI

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=b9DMiy_DVok

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UMQEgJR0FcA

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uAB4zvMlhNo

http://www.terradaily.com/reports/Earths_daily_rotation_period_encoded_in_an_atomic_level_protein_structure_999.html

++++++++++++++++++

சி. ஜெயபாரதன், கனடா

 

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

ஊழிற் பெருவலி யாவுள ? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.

திருவள்ளுவர்

“ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட வேண்டும்.”

கார்ல் சேகன் (விண்வெளி உயிரியல் விஞ்ஞானி)

வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடிப் படைப்புகள், உயிரினங்கள் அகிலத்தில் வடிக்கப் பட்டு இயங்கி வருகின்றன.

கட்டுரை ஆசிரியர்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SBB2qHgZvLY

[Physicist Dr. Michio Kaku on God]

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kEK6WtHxNfw

[Dr. Albert Einstein on God] 

https://mail.google.com/mail/u/0/#inbox/14e9798834ca76d4 

[Nature Creates the Most Beautiful Geometry]

இக்கட்டுரை மதிப்புக்குரிய நண்பர் காலஞ்சென்ற மலர்மன்னன் (மார்ச் 6, 2011) திண்ணையில் எழுதிய “விதியை அறிதல்” என்னும் கட்டுரைக்கு மறுப்புரை இல்லை.  ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் !  இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன்.  பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு.  அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான்.  இயற்கை என்றாலும் ஒன்றுதான்.  பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான்.  ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும்  இயற்கை நியதி.

ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார்.   அதாவது பிரபஞ்சம் உருவானதும்,  காலக்ஸி,  பரிதி மண்டலங்கள்,  மற்றும் உயிரின, தாவர  உட்பிறப்புப் தோற்றங்களும் ஒரு காரண-விளைவு நியதியைப்  பின்பற்றிச், சுழலும் ஓர்  தொடரியக் கத்தை முன்னிட்டு உண்டானவையே.   இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல.  பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம்.  பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது.  பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார்.

மெய்யாக அது விஞ்ஞானிகளின் துல்லிய காலக் கணிப்பாகப் பலர் ஏற்றுக் கொண்டாலும், அந்தக் கணக்குக்கு மூல காரணமான தாதுக்கள் உண்டானது எந்த யுகத்தில் ?  எவற்றிலிருந்து எவையெல்லாம், எப்படிச் சேர்ந்து அந்தத் தாதுக்கள் விளைந்தன ?  அதன் மூலப் பொருட்கள் தோன்ற எத்தனை யுகங்கள் ஆயின போன்ற கேள்விகள் மேலும் எழுகின்றன.  நமது கருத்தாடலுக்குப் பிரபஞ்சத்தின் வயது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம்.  அதாவது படிப்படியாக, ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது.  ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

பிரபஞ்சத்தை ஒரு பிரம்மாண்டமான நூலகமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வியந்து நோக்குகிறார்.   அதன் விண்வெளியில்  உள்ள கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருந்துளைகள், கோடான கோடி காலக்ஸி ஒளி மந்தைகள், பில்லியன் கணக்கான பரிதி மண்டலங்கள், அண்டக் கோள்கள், துணைக் கோள்கள், அவற்றைப் பிணைத்துள்ள ஈர்ப்பு விசைகள், விலக்கு விசைகள் அத்தனையும் நூலகத்தில் முன்னமே வடிக்கப் பட்டு  சீராக, வகையாக அடுக்கப்பட்டுள்ளன !   அந்த நூல்களை யார் எழுதி வைத்தார், எப்போது எழுதி வைத்தார், ஏன் எழுதி வைத்தார், எப்படி எழுதி வைத்தார் எந்த விதிகளைக் கையாண்டார் என்பதை அறிந்து கொள்ளவே நான் முனைகிறேன் என்று மொழிகிறார் ஐன்ஸ்டைன்.

பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கமும் இல்லை; முடிவுமில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.  பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்றாலும், கடவுள் படைத்தது என்றாலும் இரண்டும் ஒன்றுதான்.  

பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ, மர்மவாதியோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்.  அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது என்பது என் கருத்து.  இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான்.  மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்க ரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் கால வெள்ளத்தில் கருத்து மாறி, திசை மாறி, உருமாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான்.   விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சி களுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.

காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக  விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அண்டக் கோள்கள், கருந்துளைகள், கருஞ்சக்தி, கரும் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய், அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை.  அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை.  தற்போதைய நவீனக் கணினி மேற் பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன.

எலும்புக் கூடு போன்று ஹென்றி  ஃபோர்டு செய்த முதல் கார் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி மாறி யுள்ளது ?  ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலத்தைத் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது.  கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ?  சார்லஸ் டார்வின் அறிவித்த மனித உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகித் தற்போதைய ஆறறிவு படைத்த மனிதனாய் உலவி வருகிறது ?

உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி : இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கையின் திருவிளை யாடல்கள் !  அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை.  அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது.  மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது !  ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார்.  ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார்.  அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன !  சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன.  சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன !  காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன.  அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.

படைப்புக்கு ஓர் உதாரண மாடல் :  கருப்பையில் உருவாகும் சிசுவுக்குத் தாய் காரணமாகிறாள்.   பிறந்த பிறகே சிசு தானாக விருத்தி அடைகிறது.   அதுபோல் தானாக உருவாகும் பிரபஞ்சம் முதலில் ஒரு படைப்பாளியின் கைத்திறனால் தோன்றி உதயமானது.

மனித இயக்கத்தை ஓரளவு Y = MX + C (M என்பது மனிதனின் தனித்துவம்) (C என்பது மனிதனின் நிலைத்துவம்) (Y & X கால/வயது மாறுபாடுகள்) என்னும் ஓர் எளியச் சமன்பாட்டில் காட்டலாம். ஒரு சந்தர்ப்பத்தில் மனிதனின் இயக்கம் அவனது அப்போதுள்ள தனித்துவ & மனித நிலைப் பாடுகளால் நிர்ணயம் ஆகிறது.  ஒரு மனிதன் 707 ஜெட் விமானத்தில் பயணம் செய்யும் போது அவன் விதி விமானியின் கையிலும், விமானத்தின் இயக்கத்திலும் சார்ந்துள்ளது.  விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விமானி தவறு செய்தாலோ விமானப் போக்கு மாறிப் பயணிகள் பூமியின் ஈர்ப்பாற்றலுக்குப் பலியாவார்.  கடலருகில் மனிதன் உலாவச் செல்லும் போது அவன் விதி சுனாமி போன்ற எதிர்பாராத இயற்கைத் தாக்குதலில் சிக்கிக் கொள்ள ஏதுவாகிறது,  இடி மின்னலில் நடக்கும் போது மின்னலின் தாக்குதலில் மனிதன் அடிபட்டு விதி மாறி உடனே உயிர் போகலாம்.  அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.

மனிதன் குறிப்பிட்ட ஊழ்விதி வேலிக்குள் தனித்தியங்கும் ஓர் உயிரியல் சுய யந்திரம் !  ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள தனித்துவத்துக்கு அவனது ஊழ்விதியே காரணம் !  தாய் தந்தையரின் வெறும் டியென்ஏ (DNA) மட்டும் சேயின் தனித்துவத்துக்குக் காரணம் கூற இயலாது.  ஒரு தாயிக்குப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் டியென்ஏ 100% ஒருமையில் இருப்பதில்லை.   அவையும் ஓரளவு வெவ்வேறாகத் தனித்துவம் கொண்டுள்ளன.  ஒரு சில கணினிகளை இன்னும் இயக்கி வருவது விண்டோஸ் 98 இயக்க ஏற்பாடு (Operating System), அல்லது விண்டோஸ் 2000, அல்லது விண்டோஸ் NT, தற்போது விண்டோஸ் XP, விண்டோஸ் Vista, விண்டோஸ் 7 இயக்கு ஏற்பாடுகளாகக் கணினியில் இடப்பட்டுள்ளன.  மனிதனின் அனுதினப் பழக்கமும், தனித்துவ இயக்கமும் அவனது மூளை நினைவுக் களஞ்சியத்தில் (Brain Memory Units) ஆரம்பத்திலோ அல்லது அதற்குப் பிறகோ நிரப்பப்பட்டுள்ள நிகழ்ச்சிகளைப் பொருத்தவை.  கணினி தினம் எழுப்பப் படுவது போல் காலையில் மனிதன் விழிக்கும் போது அவனை மீண்டும் சுய இயக்க மனிதனாய் ஆக்குவது அவனது நினைவுக் களஞ்சிய நிரப்புகளே !  நினைவுக் களஞ்சியத்தில் நினைவுகள் அழிந்து போனால் மனிதன் தான் யார் என்பதே மறந்து போய் மயக்க நிலைக்கு (Coma) வந்து விடுகிறது.

மனிதன் பிறக்கும் போதே அவனது தலையில் “கணினித் தாய்மைப் பீடம் (Computer Mother Board), மூளை இயக்கி (CPU -Central Processing Unit) நினைவுத் தகுதி (Memory Capacity), இயக்க ஏற்பாடு (Operating System Like Windows XP, Vista or Window : 7) என்ன வென்று இயற்கை அல்லது ஊழ் விதி தேர்ந்தெடுத்துப் பதிவாக்கி விடுகிறது என்பது என் கருத்து.  பிறந்த பிறகு மனிதன் அவற்றை ஓரளவு மேம்பாடு (Upgrade) செய்து கொள்ள அவனுக்குத் திறமை அளிக்கப் பட்டிருக்கிறது.  ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது !  இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் !  ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் !  ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான். கடவுளை  அதன் படைப்புகளில் ஒன்றான புவி மனிதன் கண்ணால் காண முடியாது.

Stephen Hawking on God

Stephen Hawking

எப்படி அதை விளக்குவது ?

வயிற்றில் தொப்புள் கொடியுடன் பின்னி வளரும் குட்டி யானை தன் தாயைக் காண முடியாது.   வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னே குட்டி தாய் யானையைக் காண்கிறது.   ஆதலால் பிரபஞ்சத்தில் அடைபட்டுப் போன மனிதன் இயற்கையின் தொப்புள் கொடி இணைப்பில் வாழ்கிறான்; மாள்கிறான்.

அதுபோல் மனிதன் பிரபஞ்சப் படைப்பாளியைக் காண வேண்டு மென்றால் இயற்கையின் தொப்புள் கொடி அறுத்து பிரபஞ்சத்தை விட்டு வெளியேற வேண்டும்.

கடவுளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் அதன் படைப்புகள் மூலந்தான் நாம் விளக்க முடியும்.

1.  தெரிந்தவற்றை வைத்து தெரியாதவற்றை விளக்குவோம்.

2.  தெரியாவற்றை யூகித்து தெரிந்தவற்றை மேம்படுத்து வோம்.

இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

இருவேறு உலகம் என்பவை ஆன்மீக உலகம், உலோகாயுத உலகம்.   சித்தாந்த ஞான உலகத்தின் இயற்கை விதிகள் வேறு.  பௌதீக-ரசாயன உலகத்தின் இயற்கை நியதிகள் வேறு.   திரு என்பது உலோகாயுதச் சொத்துக்கள்.   தெள்ளியர் என்பது ஆன்மீக ஞானிகள்.

உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன வென்று விஞ்ஞானம் இதுவரை விளக்க முடிய வில்லை.  உயிர் என்பது எவ்வித இரசாயன மூலக்கூறுகளாலும் ஆக்கப்பட்ட தில்லை என்பது என் கருத்து.  ஆத்மா ஓர் இயக்க சக்தி. மனிதப் பிறவிக்கு இருப்பவை இரண்டு தொப்பூள்கொடிகள்.  தாய் உடம்போடு இணைந்தது ஒன்று. தெரிவது.  அடுத்தது தெரியாத ஆன்ம உயிர்க்கொடி.  படைப்பாளியுடன் இணைந்தது.

ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது.   ஊர்ந்து செல்லும் இலைப்புழு எப்படிப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியாய் மாறிச் செல்கிறது ?   வகுத்தான் வகுத்த விதி முறைப்படி நிகழும் ஒரு காட்சி இது.   இப்படி செய்வது எது ?  இது ஏன் நேர்கிறது ?  இதுபோல் முட்டைக்குள் உருவாகும் குஞ்சுக்கு உயிர் எப்படி நுழைகிறது ?  சிசு பிறக்கும் போது தாய்க் கருவில் உயிர் அதற்கு எப்படி நுழைகிறது ?  மனிதன் இறந்த பிறகு போது உயிர் எங்கே போகிறது ?

300 பேர் அமர்ந்து பறக்கும் ஆயிரக் கணக்கான ஜெட் விமானங்களைப் படைத்த மனிதனால் ஒரு பட்டுப் பூச்சியை, மினிமினியை உண்டாக்க முடியுமா ?

மனிதனால் பூமியின் ஈர்ப்புச் சக்தியைக் காணமுடியுமா ?  வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடி அகிலத்தில் வடிக்கப் பட்டுள்ளன.

Monkey to Man

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது மெய்யானால், ஏனிப்போது அப்படிப் பிறப்ப தில்லை ?  நிகழ்வதில்லை ?  ஏன் இன்னும் குரங்குகள் வசிக்கின்றன ? ஏன் இப்போது குரங்குகளும், மானிடமும் தனித்தனியே பிறக்கின்றன ?   ஐந்தறிவு மனிதக் குரங்கு எப்படி, எப்போது ஆறறிவு, ஏழறிவு படைத்த மனிதப் பிறவியாய் மாறியது ?

100 ஆண்டுகட்கு முன்பு முதன்முதல் அமெரிக்க  ஃபோர்டு அதிபர் ஆக்கிய பெட்டி மோட்டார் கார் எப்படிக் கூடாக இருந்தது ?  இப்போது அது படிப்படியாக மேம்பட்டு 2015  இல் ஏரோ டைனாமிக் வடிவில், கணினி கண்காணித்து இயக்கும்  நவீன மோட்டார் கார் எப்படி மாறி விட்டது !
 
100 ஆண்டுக்கு முன்பு முதன்முதல் ரைட் சகோதரர் செய்த சைக்கிள் சக்கிர வானவூர்தி எப்படிப் படிப்படியாக மாறி ஜம்போ ஜெட் விமான மாகப் பறக்கிறது !
 
குரங்கை முன்மாதிரியாக வைத்துக் கடவுள் படிப்படியாக மேம்படுத்தி, ஜிம்பான்சி மனிதக் குரங்கைப் படைத்தது.  பிறகு மனிதக் குரங்கை மாதிரியாய் வைத்து, ஐந்தறிவுடன் ஆறாம் அறிவு, ஏழாம் அறிவும் சேர்த்து, கடவுள் மனிதப் பிறவியை உருவாக்கியது.  தாய்மைப் பெண்ணே கடவுள் படைத்த இறுதி மனிதப் பிறவி.  
 
அதற்குப் பிறகு கடவுள் படைப்புத் தொழிலையே நிறுத்திக் கொண்டது !

நம் கண்முன் ஊர்ந்திடும் இலைப்புழு பறந்திடும்  பட்டாம் பூச்சியாய் ஏன், எப்படி மாறுகிறது ?  இதைச் செய்வது எது ?  மனிதரால் செய்ய முடியாத பரிணாமப் படைப்பு விந்தை இது.

உயிர் என்பது என்ன, உயிரினத்தை இயக்கும் ஆத்மா என்பது என்ன ?

இந்த வினாக்களுக்கு விடை எவருக்கும் தெரியாமல் இவை இன்னும் மர்மமாகவும் புதிராகவும் இருந்து வருகின்றன.

+++++++++++++

தகவல்:

1.  http://ogcwebb.hubpages.com/hub/WHAT-IS-DESTINY-SHOULD-WE-BELIEVE-IN-FATE-ARE-OUR-DOINGS-LEADING-US-TO-OUR-DESTINY-OR-WHAT-WE-DO-IS-AS-PER-OUR_1

2. http://www.terradaily.com/reports/Earths_daily_rotation_period_encoded_in_an_atomic_level_protein_structure_999.html  [June 28, 2015]

+++++++++++++

S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  July 27, 2022  [R-8]

21 thoughts on “ஊழிற் பெருவலி யாதுள ?

 1. I think Life is in each cell of an organism, and an organism to me looks like a factory. May be we need to understand how each cell springs into Life from being just carbon molecules.

  • @vasant, The cells in our body are continuously dying and getting created. Almost all the cells which are present in the child may not be present as such when the child becomes a old person. In a way, we can say we are born every day.

 2. அருமையான கட்டுரை. ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒப்பிட்டு, அறிவியலின் இயலாமையைக் கூறி இயற்கையின் ரகசியத்தை கூறியுள்ளீர்கள்.

  ஒருவேளை இன்னும் பல ஆண்டுகள் கழித்து இயற்கை புரிந்துகொள்ள முடியாத விஞ்ஞானம் என்று கூட புரிந்துகொள்ளலாம். ஒருவேளை இயற்கையின் ரகசியத்தை புரிந்துகொண்டாலும் கூட அதனை மனிதன் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவே இருக்கும்.

 3. Geetha Sambasivam ✆

  to me, vallamai

  //அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது. மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது ! ஒரு சிலர் ஹிட்லராய் உருவா கிறார். ஒரு சிலர் அன்னை தெரேஸாவாகவும், ஆல்பர்ட் சுவைட்ஸராகவும் உருவாகிறார். அவற்றுக்குக் காரணம் என்ன ? சில மோட்டர் வாகனங்கள் மெதுவாகத்தான் ஓடுகின்றன ! சில வாகனஙள் வேகமாகச் செல்கின்றன. சில வாகனங்கள் அதி வேகத்தில் பந்தயக் கார்களாய்ப் போட்டி இடுகின்றன ! காரணம் அந்த மாதிரி வாகனங்கள் அத்தகைய பணிக்காகத் தயாரிக்கப் படுகின்றன. அதே காரணம் தான் பல்வேறு மனிதப் படைப்புக்கும் ஒத்து வருகிறது.//

  உண்மை ஐயா. மனிதப்படைப்புக்குத் தாங்கள் கூறி இருக்கும் விளக்கம் ஏற்கக்கூடியதே. எல்லாருமே பல்லக்குத் தூக்கவும் முடியாது. எல்லாராலும் பல்லக்கில் அமரவும் முடியாது என இதைத் தான் பெரியோர்கள் கூறுவார்கள்.

  //அதாவது பூமியில் வாழும் மனிதன் சதா காலமும் பூகோள விதியின் கைப் பொம்மையே தவிர பூரண விடுதலைப் பிறவி இல்லை.//

  ஆம், இயற்கையில் இருந்து மனிதன் தப்ப முடியாது.

  //ஆனால் மனிதனால் தனக்குப் பிறவியிலேயே இடப்பட்டுள்ள தாய்மைப் பீடம், மூளை இயக்கி, நினைவுக் களஞ்சியத்தைப் (Mother Board, CPU, Memory Units) பின்னால் அவனாலோ அல்லது எவனாலோ மாற்ற இயலாது ! இயக்க ஏற்பாடு (Operating System) மாறலாம் ! ஆதலால் மனிதன் ஊழ் விதியின் கைப்பிள்ளைதான் ! ஊழ்விதியின் தீராத ஒரு விளையாட்டுப் பிள்ளைதான்.//

  நல்ல அருமையான உதாரணம். கணினி வழிக் கற்க முடிந்ததுக்கு நன்றி. வேறுபாடுகள் புரிகின்றன.

  //ஆத்மா ஓர் இயக்க சக்தி. ஆத்மா எந்த வாகனத்தில் (Car, Rail, Ship, Plane, Rocket or Man, Woman or Animals) நுழைகிறதோ அந்த
  வாகனத்தின் சாதனங்கள் ஆத்மாவின் இயக்க முறைக்கு வரையறையும், எல்லையும் வகுக்கிறது.//

  ஆத்மாவை அழிவற்ற ஒன்று என்போம் . நீங்கள் இயக்கும் சக்தி என்கிறீர்கள். ஆனால் ஆத்மா உடலாகிய வாகனத்தில் நுழைந்து ஒவ்வொரு கர்மவினைக்கும் ஏற்பப் பல பிறவிகள் எடுத்துக் கடைசியில் கர்மாக்கள் அழிந்ததும் முக்தி என்போம்.

 4. Rishi Raveendran ✆

  to vallamai

  ஐயா, தங்களின்
  ஊழிற் பெருவலி யாவுள ?
  என்ற கட்டுரையைப் படித்தேன்.

  எனக்குத் தோன்றும் சில கருத்துக்களை இங்கே பதிய எண்ணுகின்றேன்.

  உயிர் என்பது Bio-Magnetism in a closed circuit என எடுத்துக்கொள்ளலாம்.

  உயிர் என்பது உயிரற்றவற்றிலிருந்தே வருவதாய் தெரிகின்றது. என் கல்லூரிக் காலங்களில் ஒரு முறை உயிரைப் பற்றி எங்கள் வேதியியல் பேராசான் அருணந்தியிடம் வினவியபொழுது, ஆய்வகத்தில் நிக்கல் சல்ஃபேட் க்ரிஸ்டலை நீரில் போடும்பொழுது நுண்ணியிரி வருவதாயும், முதல் உயிரி, உயிரற்ற பொருளிலிருந்தே வந்ததாயும் சொன்னார்.

  நாசா விஞ்ஞானிகளும் CETI என்ற அமைப்பும் 1990 ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதில் இந்தப் பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறெந்த கோள்களிலும் உயிரினங்கள் இல்லை என ஒரு Mathematical Empirical Formulaவை derive செய்து நிரூபித்தனர்.

  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலிருந்தபொழுது சில விஞ்ஞானிகளைச் சந்தித்து உயிரற்றவற்றிலிருந்து உயிர் வந்ததெனில் இந்த பரந்து விரிந்த மகா ஆகாசத்தில் நம் பால்வளி மண்டலத்தில் இல்லாவிட்டாலும் கூட நம் அருகே இருக்கும் Andromeda, M80, M82 போன்ற Galaxyகளில் அல்லது அதற்கும் அப்பாற்பட்ட எதாவதொரு வளி மண்டலத்தில் (Galaxy) உயிரினங்கள் இருக்கலாமே ? அவைகளின் உருவ அமைப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏன் நம்மைவிட மிகச் சிறந்த Technocrateகளாக இருக்கலாம்.

  இந்தப் பிரபஞ்சம் உருவானதுகூட ஒரு தற்செயல் நிகழ்வுதான்.

  Entropy விதிகளின்படி ஒரு அழகான மாருதி காரினை சுக்குநூறாக்கி மீ நுண்ணியத் துகள்களாக்கி இந்தப் பிரபஞ்சத்துடன் கலக்கச் செய்யலாம். இதையே reversalல் பல மீ நுண்ணியத் துகள்கள் ஒன்றுகூடி ஒரு மாருதி காரினை உருவாக்கியது. ஆனால் இயற்கையில் இதன் நிகழ்தகவு என்னவாக இருக்க இயலும் ?

  ஆனால் அந்த ஆய்வுக் கட்டுரை இல்லையென்பதாய் மறுக்கின்றது.

  உயிர் பிரியும்பொழுது Bio-Magnetism Open Circuit ஆக மாறி அந்த ஜீவகாந்தம் பிரபஞ்சத்தில் கலந்துவிடுகின்றது. இதனாலேயே மரணமடையும்பொழுது உயிர் பிரியும்பொழுது விந்து/நாத கமலத்தினை உடைத்துக்கொண்டு வெளியேறுகின்றது. இயற்கை மரணமா அல்லது விபத்து, கொலையா என்றறிய மரணமடைந்தவருக்கு நீராடச் செய்தல் என்ற சடங்கினை வடிவமைத்தனர்.

  இறந்த உடல் கனப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ?
  இறந்த உடன் உடலின் வெப்ப நிலை திடீரென உயர்ந்து பின்னர் மிகவும் குளிர்ந்து போகின்றதே ?
  De-Magnetisation Process ?

  பேய் பிடித்தவர்களைச் சிலரை நீங்கள் கண்டிருக்கின்றீர்களா ?

  ஒரு தென்கோடி தமிழ் குக்கிராமத்தில் ஒருவருக்கு பேய் பிடிக்கிறது. பேய் பிடித்த நபருக்குள்ளிருக்கும் அந்த ஆன்மா, தான் கொலை செய்யப்பட்டவிதம் பற்றியும், தன்னை யார் யாரெல்லாம் கொன்றார்கள் என்ற விவரத்தினையும் மிகத் தெளிவாக முன்பின் புரியாத பாஷையில் சொல்லும்பொழுது அதே பாஷை தெரிந்தவர் மூலம் அதன் மொழியாக்கமறிந்து அவ்விடம் சென்று விசாரித்தால் நிஜம் தெரிகின்றதே ?

  இதை மன மருத்துவ அறிவியல் Split personality என்கின்றது.

  தவத்தில் சிறந்த சில தவயோகியர் சிலர், தவத்தினில் எதிர்காலத்தில் நிகழப் போகும் நிகழ்வுகளை படமாகப் பார்க்க முடிகின்றதே ? அது எதனால் ?

  ஊழ்வினை பற்றி சித்தர்கள் எல்லாமே கருமையத்தில்(Bio-Genetic Centre) நிரல்களாக ஏற்கெனவே நிரலிடப்படுகின்றன என்கின்றனர். அதன்படியே வாழ்வின் சம்பவங்களும் நிகழ்வுகளும் நிகழ்வதாய் சொல்கின்றனர்.

  ஆனால் வள்ளுவரோ தவம் செய்தால் ஊழ்வினையையே வெல்லலாம் என்கின்றார்.

  சித்தர்களின் கூற்றுப்படி பாழ்நிலையே இறைவன் என்கின்றனர்.

  இவைகளெல்லாம் என் சிற்றறிவுக்குட்பட்டவையே. சில கருத்துக்கள் சித்தர்களின் கருத்துக்கள்

  அன்புடன்
  ரிஷி ரவீந்திரன்

 5. சி. ஜெயபாரதன் ✆

  to vallamai, Rishi

  நண்பர் ரிஷி இரவீந்திரன்

  உங்கள் விளக்கம் சிந்தனை வளர்ப்பது. உயிரைப் பிரித்து உள்ளே என்ன உள்ளது என்று அணுவைப் பிளந்த உன்னத விஞ்ஞானிகளும் இதுவரை ஏனோ முயல வில்லை ! காரணம் உயிர் ஜடப் பொருள் மூலம் தோன்றுவ தில்லை !

  உயிர் என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுள் அம்சமாய், அண்டக் கோள்களின் அசுர ஈர்ப்பு விசைபோல், காந்த சக்தி போல் புலப்படாமல் இயங்கும் ஆதிமூல சக்தியாய் உள்ளது. அது நிச்சயம் உயிரற்ற ஜடப் பொருளிலிருந்து உற்பத்தியாவது இல்லை. உயிரணுக்கள் அகிலவெளி ஒளிமந்தை (Cosmic Galaxy) எங்கும் வால்மீன் போன்ற கோள்களில் பரவியுள்ளன என்பது என் கருத்து. விஞ்ஞானிகளின் கருத்து.

  இந்திய வானியல் விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் வால்மீனைப் பற்றிக் கூறும் போது இவ்விதம் குறிப்பிடுகிறார் :-

  வால்மீன் கருவில் உயிரணுக்கள், நீர் மூலக்கூறுகள் பேரளவில் அடங்கி உள்ளன. சூரியனைச் சுற்றும் போது வால்மீனின் நீண்ட வால் (பல மில்லியன் மைல் நீளம்) பரிதிக்கு எதிரே பரவும் போது பூமியின் வாயு மண்டலத்தை நேராகத் தொடுகிறது. அப்போது வால்மீனின் உயிரணுக்கள் (பேக்டீரியாக்கள்) பூமியின் சூழ்வெளியில் இறங்கி நிரந்தரமாய்த் தங்கி விடுகின்றன.

  https://jayabarathan.wordpress.com/2010/02/27/jayant-narlikar-2/ (ஜெயந்த் நர்லிகர்)

  ஊழிற் பெருவலி கட்டுரையை நீங்கள் உங்கள் முகநூலில் இடலாம்.

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்.

 6. Respected Sir ,I read over this article in depth .Still Iwas unable to recall from my memory.It is so because ,I have read over some of the articles by philosphers,psycologists , some those refused to a God ,etc.But they are not influenced me this type of feelings.Still ,I amm going to repeat the subjects.to put in a single and simple word SUPEREB.I pray the Almighty to give a long life to bring this type contributions to the nation,new generation in India particularly and people in the international generally.by DK.(Virudhunagar, now in USA )as I already on email with you.,

 7. Hi there, just became alert to your blog through Google, and found that it’s truly informative. I’m gonna watch out for brussels. I’ll be grateful if you continue this in future. Numerous people will be benefited from your writing. Cheers!

 8. வணக்கம்.! ஐயா. எவ்வளவு ஆழமான தேடலுடைய சிந்தனைகள்! கேள்விகள்? இது போன்ற என்னுடைய பல கேள்விகளுக்கு விடை தற்போது சிதம்பரம் இராமலிங்கம் ஐயா எழுதிய ஆறாம்திருமுறை புத்தகத்தில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அவர் தனது உரைநடைப் பகுதியில் மனிதர்களின் உடம்பு ரசாயணங்களால் ஆனது . அதை ரசாயண மாற்றம் செய்விக்க முடியும். என்றும் கூறியது மட்டும் இன்றி தன் உடம்பையும் அப்படிமாற்றிக்காண்பித்தும் உள்ளார். தங்களுக்கு ஞானசரியை 28 பாடல்களும். அகவலும்.ஜீவகாருன்ய ஒழுக்கமும். விடை கொடுக்கும்.,”இயற்கை நிலை அறிந்து அம்மயமாதல்” என்பது அவரது கோட்பாடுகளின் முடிவு ஆகும். சிற்றிவு படைத்த எனக்கே சில விசயங்கள் புரியும் போது தங்களுக்கு நிச்சயமாக அவரது பாடல்கள் புரியும். நம் சித்தர்களின் பாடல்கள் அனைத்தும் விஞ்ஞானக் கோட்பாடுகளே! என்பது எனது நம்பிக்கை. உதாரணமாக திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் அலியாய் பிறப்பதும்.குருடு . செவிடு. ஊனம். இவை யாவும் ஆண்பெண் சேர்க்கையில் நாம் செய்யும் தவறுகளால் ஏற்படுபவை ஆகும்.என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதை ஏன் நாம் இன்னும் ஆய்வு செய்யவில்லை? பல சித்தர் பாடல்களை ஆய்வு செய்தாலே பல விஞ்ஞான புதிர்கள் அவிழும். ஆனல் நமது தமிழ் உரை ஆசிரியர்கள் எழுதிய உரை துணை புரியாது. நாம் உண்மையை தேடவேண்டும்.அப்பொழுது உண்மை நம்மிடம் வெளிப்படும். நன்றி!!!

 9. ஐயா,

  உங்களின் கட்டுரையை படித்துப் பார்த்தேன். உங்களின் கருத்துகளுக்கும் என்னுடைய கருத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நீங்கள் கடவுள் எனும் வட்டத்திற்குள் நின்று அறியலின் உதவியால் பார்க்கிறீர்கள். நான் அந்த வட்டத்திற்கு வெளியில் நின்று பார்க்கிறேன். ஆனாலும் சில பிறழல்கள் இருக்கின்றன. தேவைப்படின், இந்த விவாதம் ஒரு முடிவுக்கு வந்தபின் அதுகுறித்து பேசலாம்

  http://senkodi.wordpress.com/senkodi-gulam-argue/

 10. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
  தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

  ஊழிற் பெருவலி யாவுள ? மற்றொன்று
  சூழினும் தான்முந் துறும்.

  இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு.

  ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித்
  தாழா துஞற்று பவர்.

  ஆகூழ் போகூழ் என இருவகை காலச்சுழற்சிகள் உண்டு. ஆகூழ் காலத்தில் செய்யத்தக்கன செய்யாமலும் செல்வம் வரும் போகூழ் காலத்தில் செய்யத்தக்கன செய்தபோதிலும் நீங்கும்.
  அறிவுடைமையை பொருத்தவரை ஒருவனுக்கு அறிவுறுவதற்கான ஏது எவ்வளவு உள்ளதோ அவ்வளவிலேயும் எதிலுள்ளதோ அதிலேயுமே அவன் வெற்றி கொள்ள முடியும். அறிவுடைமையும் போகூழால் மங்கும். எப்படியெனில் போகூழ் ஒருவனை சோம்பலுறச் செய்து அதன் காரணமாக அறிவுச் சேகரம் குறைந்து பேதையாவான் திரும்பவும் ஆகூழ் காலம் வரும்போது நிலைமை திருந்தும்.
  ஊழ் என்பது கடவுளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஒருவனுக்குக் கிடைக்கும் பல்பொருள் சேர்ப்பு. (Randomized assortment) அந்தச் சேர்ப்பில் என்னவெல்லாம் இருக்கும் என்பது எதேச்சையாக நிகழ்வது. செல்வம் அறிவுடமை மற்றும் துய்த்தல் ஆகியவற்றைப் பொருத்த வரையில் ஊழ் ஒரே மாதிரி செயல்படுவதில்லை. ஒரு பொருள் உதாரணமாக கனிதத்திறன் மிகக்குறைவாக இருக்கிறது என வைத்துக் கொள்வோம். மொழித்திறனும் மிதமாகவே இருக்கின்றதெனவும் கொள்வோம். இந்த ஊழின் படி அவன் வாழ்க்கையில் பெரும் வெற்றி அடைவது இயலாத ஒன்றாக இருக்கும் என்று கூறினால் அக்கூற்றில் தவறு இல்லை. ஆனால் தன்னுடைய நிலையை அறிந்த ஒருவன் தன்னுடைய உழைப்பை அசுரத்தனமாக அதிகப்படித்தினால் (தாளாது உழைத்தால்) அவன் மொழிதொடர்பான வேலைகளில் பிரகாசிக்கலாம் அல்லவா? இதுதான் ஊழை உப்பக்கம் காணல் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
  அதேசமயம் ஒருவனுக்கு எல்லாம் அமைந்திருந்தும் துய்க்கும் ஊழ் அவனுடைய சேர்ப்பில் இல்லாது போனால் அவனால் உழைத்துப்பெற்றதை துய்க்க இயலாது போகும்.
  சரி இவ்வாறு சேர்ப்பு இருப்பது எதற்காக? பல்வேறு நிலைகளில் உழன்ற போதும் ஆன்மாவினை மேம்படுத்தும் விதமாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்பவனே வீடுபேறு அடைவான் என்பதனால் இந்த ஏற்பாடு. திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற என்னுடைய நூலைத்தழுவி. அர.வெங்கடாசலம் A19. Vaswani Bella Vista Sitarampalya main road Graphite India Junction Bangalore 560048 prof_venkat1947@yahoo.co.in 9886406695

 11. இங்கே நான் மறு மொழி இடுவதை என்னுடைய பிளக்கில் பயன்படுத்திக்கொள்ளலாமா எனத் தெரிவிக்கவும்.
  நன்றி
  அர.வெங்கடாசலம்

 12. பா. சாரங்கன்
  ஐயா எனக்கு ஒரு சந்தேகம், அதாவது பூமியுலுள்ள உயிரினங்களின் அடிப்படை தேவையாக நீர் இருகின்றது ,அல்லது இருக்கவைக்கபடுகிறது அதனால் அதன் சார்பாகவே உடல் கட்டமைப்பும், மற்றும் இயல்புகளும் அடங்கியிருக்கலாம், எனவே வேறொரு பிரபஞ்சத்தில் நீருக்கு பதில் வேறு ரசாயனம் இருந்து அதற்கு சார்பாக வித்தியாசமான கட்டமைப்புக்கள் மற்றும் இயல்புகள் இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்,
  உங்களுடைய பதிலை எதிர் பார்கிறேன்

  நன்றி

 13. நண்பர் சாரங்கன்,

  நீங்கள் கூறும் ஊகிப்பு ஒருவேளை மெய்யாக இருக்கலாம், மெய்யாக இல்லாமலும் இருக்கலாம். உலகியற்றிவன் செய்துபார்த்த உயிரினப் படைப்புகள் நமது பூமியில் சாதனை / வேதனை புரிந்து வருகின்றன. வேறொர் பிரபஞ்ச மாதிரி உயிரினங்களை மனிதன் கண்டுபிடிக்கும் வரை நாம் காத்திருப்போம்.

  சி. ஜெயபாரதன்

 14. I appreciate your efforts to think and write this article. Couple of comments
  1. Please edit your future articles before publishing to make it precise and up to the point
  2. You present an argument that there is no proof for scientists views. But, at the same time you accept views about GOD without any proof. This argument has logical fallacy.
  3. I couldn’t find any mention about Buddha’s view on this. He is one of the foremost person in this analysis. I would recommend you to dig deeper in his view and write a follow up article.

   • A good analysis would include all perspectives. If we choose to ignore one which is very relevant to the topic then it is a confirmation bias fallacy. But that’s a freedom everyone wants

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.