சி. ஜெயபாரதன், கனடா
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடி னோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பா டுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டி களுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
பூரண சுதந்திரம் அசுரப்
போர்க்களம் !
பஞ்ச பாண்டவர்
பகடை ஆடுவர் சூதில்
பத்தினியைப் பணயம் வைத்து !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர் முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரண சுதந்திரம் மாந்தர் புகும்
குருச்சேத்திரம் !
மசூதியை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவகாளிச் சுதந்திரம் !
பூரண சுதந்தி ரத்தில்
மதம் பிடித்த யானைகள்
மனித நேயத்தை மிதிக்கும்.
சுதந்திர நாட்டில்
மதக் கோலத் திருவிழா
கும்ப மேளா !
எழுத்துச் சுதந்திரத்தில்
ஒழுக்கம், கடமை, கண்ணியம் !
விதிகளுக்கு அடங்கிய
நிதிச் சுதந்திரம் !
உரிமைத் தேர்ச்சி யில்லாத
வறுமைச் சுதந்திரம் !
கட்டவிழ்த் தோடும் முழுச் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனியாய்
நட்டு வைக்கும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா எது சுதந்திரம் ?
எட்டித் தொட முடியா
பனிச் சிகரத்தில்
வேராய் மறைந் திருக்கும்
பூரண சுதந்திரம்
சீரழிவுப் பாதை !
முழு விடுதலை பெற்றவர்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டித்
தவம் புரிகிறார்
போலிச் சாமியார் !
புதிய பூமி வேண்டுமா ?
பூரண உரிமை தேவையா ?
ஓரளவு போதுமா ?
+++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) August 15, 2015 (R-13)
Important
This Nice Kavithai,
பாராட்டுக்கு நன்றி நண்பரே.
நட்புடன்,
சி. ஜெயபாரதன்
ample post you’ve get hold of
This weblog appears to get a great deal of visitors. How do you advertise it? It gives a nice unique spin on things. I guess having something real or substantial to post about is the most important factor.
Excellent! Your post has a bunch comment posts. How did you get so many people to view your site I’m jealous! I’m still learning all about blogs on the net. I’m going to look around on your blog to get a better idea how to achieve success. Thank you!