காதல் நாற்பது

எலிஸபெத்பிரௌனிங்

(1806-1861)

தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

நானொரு கறுப்பி ! குள்ள மாது !
சாஃப்போ கவிஞனைப் போல,
சாகாவரம் வாங்கியவள் நான் !
ஐந்தடி ஓரங்குலம் உயரம் !
பரிதியொளி பளிங்கு பட்டையில்
பிரிவதுபோல்
வண்ணங்கள் உடையவை என்
கண்களின் நிறங்கள் !
கண்ணாடி முன்னின்று நோக்கினால்
என் தோற்றம்
அழுத்தப் பச்சைப் பழுப்பு !
பச்சை வேலியில் மறையும் பச்சை !
நாசி ஒன்றும் பிரமாத மில்லை,
அது ஒருவித மாதிரி !
அதை ஈடுசெய்ய அகண்ட வாய் !
அந்தோ ! மிக மிக
விந்தைக் குரல் எனக்கு !

கவிமேதை எலிஸபெத் பிரௌனிங்.

இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிப் பாக்களைத் தமிழாக்கம் செய்த பிறகு, புதிதாக “காதல் நாற்பது” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்க விழைகிறேன்.

எலிஸபெத் பிரௌனிங் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வெற்றிகரமாக வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற கவிதை மாது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்கின் காதல் மனைவி. டென்னிஸன் நினைவுப் பரிசைப் பெற்ற எலிஸபெத் எழுதிய உன்னதக் காவியப் படைப்பு, 1850 இல் வெளியான “போர்ச்சுகீஸின் ஈரேழ் வரிக் கவிதைகள்” (Sonnets from the Portuguese). ராபர்ட் “போர்ச்சுகீஸ்” என்ற செல்லப் பெயரால் தன் காதலி எலிஸபெத்தை அழைத்தார். நாற்பத்து நான்கு எண்ணிக்கை யுள்ள அந்த கவிதைகள் யாவும் ராபர்ட்டைக் காதலித்த போது எலிஸபெத் தொடராக எழுதியவை. எலிஸபெத்தின் கூரிய ஞானமும், நளினக் கவி நடையும், முகக் கவர்ச்சியும் கார்லைல், ரஸ்கின், தாக்கரே, ரொஸ்ஸெட்டி, ஹாதொரோன் போன்ற கவிதா மேதைகளை ஈர்த்தன.

எலிஸபெத் 1806 இல் இங்கிலாந்தில் டுரம் நகர்க் கருகில் கோக்ஸொ ஹால் (Coxhoe Hall near Durham) என்னும் ஓர் இடத்தில் ஒரு செல்வத் தம்பதிகளுக்குப் பிறந்தார். சிறு வயதில் எலிஸபெத் தனிப் பயிற்சியாளர் மூலமாகக் கல்வி பயின்றுத் திறமையோடு ஆங்கிலம், ·பிரெஞ், லத்தீன், கிரீக் ஆகிய அன்னிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். பதினாங்கு வயதிலேயே எலிஸபெத் “மராத்தன் போர்” (The Battle of Marathon) என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்பைப் படைத்து வெளியிட்டார். அடுத்து வெளியான நூல்கள்: An Essay of mind (1826), Prometheus Bound (1833). The Serapim & Other Poems (1838), Sonnets of the Portuguese (1850). Last Poems (1862) எலிஸபெத் 1835 இல் லண்டனுக்கு வந்து தங்கிய போது பல வெளியீடுகளில் கவிதைகளை எழுதிப் பேரும், புகழும் பெற்றார். 1844 இல் அவரது கவிதைகள் வெளியாகிப் பலரது மனதைக் கவர்ந்து அமெரிக்கக் கவிஞர் எட்கர் அல்லன் போவின் பாராட்டைப் பெற்றார். எல்லா வற்றிலும் உயர்ந்த படைப்பாக எடை போடப்படுவது : போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள் (Sonnets from the Portuguese). போர்ச்சுகீஸ் என்பது ராபர்ட் எலிஸபெத்துக்கு வைத்த செல்லப் பெயர்.

1820 இல் எலிஸபெத் ஓர் மர்ம நோயில் விழுந்து வயிற்று வலியில் மிகவும் வேதனைப் பட்டார். வலியைத் தாங்கிக் கொள்ள அந்தக் காலத்தில் அவருக்கு மருத்துவர் பயங்கர மார்ஃபின் மந்த மருந்தைக் கொடுத்து வந்தார்கள். மறுபடியும் 1838 இல் எலிஸபெத் இரத்தக் குழாய் ஒன்று அற்றுப் போய் கடும் நோயில் துன்பப்பட்டு மெலிந்து போனார். அதே சமயத்தில் அவரது சகோதரர் ஒருவர் நீரில் முழ்கி, அவருக்கு ஆறாத துயரை உண்டாக்கியது, அதற்குப் பிறகு எலிஸபெத் யாரையும் கண்டு கொள்ள விருப்பற்றுத் தனிமையில் கிடந்தார். அப்போது முழு நேரத்தையும் அவர் தன் அரியக் காவியப் படைப்புகளுக்கே அர்ப்பணித்தார்.

தனது 39 ஆம் வயதில் (1845), தன்னை விட ஆறு வயது இளமையான கவிதா மேதை ராபர்ட் பிரௌனிங்குடன் கடிதத் தொடர்பு கொண்டு, ஆழ்ந்த காதல் வயப்பட்டார். அவர்களது அந்தரங்க ஆத்ம நட்பு பெற்றோருக்குத் தெரியாமல் மர்மமாகவே தொடர்ந்தது. காரணம் அவரது தந்தையார் தனது புதல்வர், புதல்வியர் திருமண மாவதைத் தடுத்துக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு எலிஸபெத் வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டார். 1846 இல் ஒரு தேவாலயத்தில் பெற்றோர்க்குத் தெரியாமல் எலிஸபெத் ராபர்ட்டை மணந்து, ரோமுக்குச் சென்று, அங்கே ·பிளாரென்ஸில் குடியேறினார்கள். அவர்களுக்கு 1849 இல் ஓர் ஆண்மகவு பிறந்தது.

இறுதிக் காலத்தில் திடீரென எலிஸபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார். அக்கருத்தை மையமாக வைத்தொரு நூலும் எழுதினார். நோய் முற்றி ·பிளாரென்ஸில் 1861 ஆம் ஆண்டு கனிவுக் கணவரின் கையணைப்புக் கனலில், காதல் ராணி களிப்புடனே விண்ணுலகம் ஏகினாள். அவளது மரணத்துக்குப் பிறகு எழுத்தாள மேதை எட்வெர்டு பிட்ஸ்ஜெரால்டு துயரைக் காட்டாது தன் உன்னத இரங்கல் உரையில் கேலியாகக் குறிப்பிட்டார்: “மிஸிஸ் பிரௌனிங் மரணம் அடைந்ததில் எனக்கொரு பெரிய விடுவிப்பு ! “அரோரா லைஸ்” [Aurora Leigh: Collection of Poems by Elizabeth Browning] போன்ற மாபெரும் கவிதைத் தொகுப்புகள் இனிமேல் வெளிவாரா ! கடவுளுக்கு நன்றி ! அவள் ஓர் உயர்ந்த மேதை ! எனக்குத் தெரியும் அது. எல்லாவற்றுக்கும் முடிவாக நான் என்ன சொல்வது ? அவளும் அவளது பெண்பாலும் அடுப்பறையில் கிடந்து, குழந்தைப் பராமரிப்பைக் கவனித்திருக்க வேண்டும் ! ஏழையர் மீது வேண்டுமானால் இரக்கம் கொள்ளட்டடும் ! இப்படிக் குறுநாவல் எழுதுவது போன்ற பணிகளைச் சிறப்பாகப் படைக்கும் ஆடவர் கைவசம் விட்டு விட்டுத் தான் தலையிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் !”

*******

காதல் நாற்பது

உன்னை நேசிப்பது எவ்விதம் ?

எலிஸபெத்பிரௌனிங்

(1806-1861)

தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

1.   Free Verse

எவ்விதம் நேசிப்பது உன்னை ?
எத்தனை வழிகள் உள்ளன வென்று
எண்ண வேண்டும் நான் !
என் காதல் ஆழ மானது !
அது விரிவது !  அது உயர்வது  !
உணர்ச்சி மறைந்துள்ள போது,
உயிரினத்தின் முடிவாய்,
ஒப்பிலா நளினத்தில்
உன்னை எட்டித் தொடும்
என் ஆத்மா.
பகற் பொழுதில், மங்கிடும்
இரவு வெளிச் சத்தில்
அவசியம் நேசிப்பேன் உன்னை
அனுதின முடிவு வரை  !
மனத் தடுப்பின்றி
உனைக் காதலிக் கிறேன்,
மானிட உரிமைத் தேடலாய் !
தூய மனதுடன் நேசிப்பேன்,
என் புகழின் திருப்பமாய் !
முந்தைய துக்கங்க ளோடு
குழந்தையின்
பிடிவாத நம்பிக்கை யோடு
பித்தானேன் உன் மீது !
இழந்த புனிதரிடம்
நழுவிப் போன எந்தன் காதல்
நாடுகிறது உன்னை !
கண்ணீர், பெருமூச்சு, முறுவல்
காட்டி விடும் எனது
காதலை !
வாழ்வு பூராவும் நேசிப்பேன் !
முடிவிலே
கடவுளின் விதி அதுவாயின்,
உறுதியாய் இருக்கும்
காதல் மட்டும்,
உன்மேல்
சாதலுக்குப் பிறகும் !

+++++++

2.    Sonnet Style

எப்படி நேசிப்ப துன்னை ? எண்ண வேண்டும் வழிகளை
என் காதல் ஆழ்ந்தது, அகண்டது, உயர்ந்தது, உன்மேல்
எட்டித் தொடும் என் ஆத்மா பிரிவை உணரும் போது
உயிரின வாழ்வின் முடிவாய், உன்னத நளின மதில்
அனுதினம் இயலும் வரை நானுனை நேசிப்பேன்
பரிதி வெளிச்சம், இரவு விளக்கில் அமைதிக் கவசியம்
தடையிலா நேசம் மனித உரிமை முயற்சி போல்
தூய தென் நேசம் பிறரது புகழின் திருப்பமாய்
நேயம் உணர்ச்சி வசப்படும், பயன் படுத்தப் படும்
பழைய துயரொடு, என் குழந்தை நினைப்பொடு
இழந்த காதலை மீட்டு நேசிப்பேன் பாசமுடன்
நழுவிய புனிதருடன் நேசிப்ப துன்னை, மூச்சுடன்
கண்ணீர், முறுவல் ஆயுள் வரை கடவுள் விதியெனின்
உன்னைத்தான் நேசிப்பேன் மேலாய் சாதலுக்குப் பிறகும்.

++++++++++++

++++++++++++

தகவல் :

1. Sonnets from the Portuguese By: Elizabeth Barrett Browning (1967)

2. The Selected Poetry of Browning (1966)

3. The Works of Robert Browning By: The Wordsworth Lobrary (1994)

4. Robert Browning Selected Works By: Johanna Brownell (2002)

5. Elizabeth Barrett Browning’s Biography

6.  http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

**************

jayabarathans@gmail.com [S. Jayabarathan]   [July 1, 2015] R-3

+++++++++++++++

காதல் நாற்பது (1)  

சாதல் அல்ல காதல் !

எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் :   சிஜெயபாரதன்கனடா

 

கிரேக்கக் கவி தியோகிரிடஸ்
எப்படித்தான்
கீதமிசைத் தாரென எண்ணினேன்,
ஒருகாலத்தில் !
விரும்பியபடி வாழ்ந்து
தன்னினிய
காலங்களைக் கடந்தது எப்படி ?
கவியின் ஒவ்வோர்
காலச் சுவடும்
வாலிபர், முதியோர் தமக்கு
மனிதக் கொடையாய்த் தங்கும்,
நளினக் கரத்தில் !
கவிஞனின் வாழ்வை
அவன் பூர்வீக மொழியில்
ஆராய்ந்தேன் !
என் கண்ணீர்த் திரைக்குள்
எழுந்தன மெதுவாய்
இன்ப துன்பக் காட்சிகள்,
என் துயர்க் காலங்கள் !
வாழ்வுச் சம்பவம் அனைத்தும்
திரும்பி வந்து
கருநிழலைப் பரப்பி எனது
நெஞ்சைக் கீறின !
நேரடியாய்ப் புரிந்தது எனக்கு !
பின்னே கூந்தலைப்
பிடித்திழுத்து மர்ம
வடிவம் ஒன்று ஓலமிட்டுப்
பின்புறம் நடந்தது !
தத்தளித்த என்னை
ஓர் அசரீரி
ஆதிக்கமுடன் கேட்டது:
“உன்னைப் பற்றுவது எதுவென
ஊகிக்க முடியுதா ?”
“ஆம் அது மரணம்” எனப்பதில் அளித்தேன் !
ஆயினும் ஆங்கே
வெள்ளிக் குரலோசை ஒன்று
விடை அளித்தது,
“சாதல் அல்ல !
உனது
காதல் உணர்வு !”

+++++++++++++++++++++++++++++++++

Sonnets from the Portuguese (1)
By: Elizabeth Browning

I thought once how Theocritus had sung
Of the sweet years, the dear and wished-for years,
Who each one in a gracious hand appears
To bear a gift for mortals, old or young:
And, as I mused it in his antique tongue,
I saw, in gradual vision through my tears,
The sweet, sad years, the melancholy years,
Those of my own life, who by turns had flung
A shadow across me. Straightway I was ‘ware,
So weeping, how a mystic Shape did move
Behind me, and drew me backward by the hair;
And a voice said in mastery, while I strove, –
“Guess now who holds thee!” – “Death,” I said,
But, there,
The silver answer rang, “Not death, but Love.”

********************

 

காதல் நாற்பது (2) 

சொர்க்கத்தை நோக்கி !


மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

 தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

தேவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில்
மூவர் மட்டுமே கேட்டனர்,
நீவீர் சொல்லிய
இந்த வாய்மொழியை,
எல்லோரும் இருந்தாலும் !
இறைவன் அருகில் உரைத்தது நீ !
கேட்டது நான் !
நம்மில் ஒருவர்தான் பதிலளித்தோம் !
கண்ணால்
உன்னைக் காணக் கூடாதெனத்
தண்டித்து எனக்குச்
சாபமிட்டுக்
கடவுள்தான் கருமை பூசினார்
எனது
கண்ணிமைகளில் !
நான் செத்துப் போயிருந்தால்
புதைக்கும் போது
பளுச்சுமைப்
பன்மடங்கு பெருகித்
தனித்துவம் உள்ளடங்கும் !
அந்தோ இல்லை !
அதை விடக் கோரம் !
எல்லா மனிதரை விட
இறைவன் செய்வது கொடூரம் !
என்னரும் நண்பனே !
விலகிச் செல்ல மாட்டார் மனிதர்,
உலகப் பொருட்களை
நம் வசம் விட்டு !
அதுபோல்
மாற்றாது பெருங் கடலும்
நம் மனதை !
வளைக்காது பெரும் புயலும்
நம் முடிவை !
இறுதியில் அனைத்து
மலை முகடுகளின் உச்சிக்கு
நீண்டு
தொட்டுவிடும் நம் கரங்கள்,
நம்மிடை ஓடி வரும்
சொர்க்க புரியை !
மேலும்
சூளுரைக்க வேண்டும்
நாம் மட்டும்,
விண்ணில் தாரகை நோக்கி
விரைந்து செல்ல !

********************

Poem -2

Elizabeth Browing
But only three in all God’s universe
Have heard this word thou hast said,–Himself, beside
Thee speaking, and me listening! and replied
One of us . . . that was God, . . and laid the curse
So darkly on my eyelids, as to amerce
My sight from seeing thee,–that if I had died,
The deathweights, placed there, would have signified
Less absolute exclusion. “Nay” is worse
From God than from all others, O my friend!
Men could not part us with their worldly jars,
Nor the seas change us, nor the tempests bend;
Our hands would touch for all the mountain-bars:
And, heaven being rolled between us at the end,
We should but vow the faster for the stars.

**********

காதல் நாற்பது (3)

மாறானவர் நாமிருவரும் !


மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

 தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

அந்தோ இளவேந்து நெஞ்சமே !
வேறானவர் நாமிருவரும் !
மாறானவர்,
விதிகள், பழக்க வழக்கம்
ஒவ்வாதவை!
இறக்கை ஒன்று மேல் ஒன்று
உரசிக் கொண்டு
செல்கையில்
தனியே கண்காணிக்கும்
தேவதைகளும்
விந்தையாய் நோக்கும்
நம்மிருவரை !
பகட்டானச் சமூக விழாக்களில்
பங்கெடுக்க
அரசிகளும் விளிப்பர் உன்னை
விருந்தினராக !
ஆயிரம் சுடர் விழிகள்
ஆங்கே எடைபோடும் உன்னை !
என்னவன் ஆக்கா
உன்னை,
என் கண்ணீர்த் துளிகள்,
உன்னைப் போல்
இன்னிசைக்கு முதல்வனாய் நடிக்க நான்
முன்வந்த போதும் !
காரிருளில் பாடித் திரியும்
ஓர் எளிய
பாடகி நான் !
சைப்பிரஸ் மரத்தின் மீது
சாய்ந்த வாறு
நிற்கிறேன்
களைத்துப் போய் !
என்னை நோக்கி
ஜன்னல் விளக்குகள் மூலம்
பார்த்து நீ
பண்ணுவ தென்ன ?
புனித எண்ணையை
உன்தலை மீதும், என்தலை மீதும்,
பனித்துளி மீதும்
ஊற்றிய பின்
ஆங்கே மூன்றும்
ஒப்புதல் புரியும் போது
மரணம்தான் தோண்ட வேண்டும்
மட்டச் சமநிலைக்கு !

********************
Poem -3

Sonnets from The Portuguese

By: Elizabeth Browning
Unlike are we, unlike, O princely Heart!
Unlike our uses and our destinies.
Our ministering two angels look surprise
On one another, as they strike athwart
Their wings in passing. Thou, bethink thee, art
A guest for queens to social pageantries,
With gages from a hundred brighter eyes
Than tears even can make mine, to play thy part
Of chief musician. What hast thou to do
With looking from the lattice-lights at me,
A poor, tired, wandering singer, singing through
The dark, and leaning up a cypress tree
The chrism is on thine head,–on mine, the dew,–
And Death must dig the level where these agree.

**********

காதல் நாற்பது (4)

தனிமைக் கூக்குரல் !


மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

 தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்வசம் உள்ளதுன் பிறவிப்பணி !
உனக்கு அழைப்பு வருகிறது
சிற்சில செல்வ மாளிகை
அரங்கத்திலே!
உன்னதப் பாக்களை
மிக்க நளினமாய்ப்
பாடுவோனே !
உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
மென்மேலும் கேட்டு,
நடன மாடுவோர் கால்கள்
இடறி முறிந்து போய் விடும்!
உன் உன்னத கைகளால்
கீழ்மை யான, இந்த
ஏழ்மை மாது இல்லத்தின்
தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
உனக்குத் தெரியாமலே
உன்னிசைக் கீதங்கள்
பூரணப்
பொன் அலைகளாக
என்  இல்லத்தின் வாசல் முன்
வருவது பற்றி
என்ன நீ
நினைக்கிறாய் ?
ஏற்று அதைத்
தாங்கி கொள்வாயா ?
என் வீட்டுக் கூரைக் குள்ளே
பறக்கின்றன,
வௌவாலும் ஆந்தைகளும் !
விட்டில் போன்ற
என் கீச்சுக் குரல்
உன் மகர யாழ் முன்னே
எப்படிப் போட்டி இடும் ?
மெதுவாக முணு முணுப்பேன்,
மேலும்
என்னை ஒதுக்கி விட்டு
விலகுவது
எதிரொலிக் கப்படுமா ?
ஏகாந்தனாய்த்
தனித்து நீ
இனிதே பாட நேர்ந்தால்
அழுதிடும் என் நெஞ்சுக்குள்
எழுந்திடு மோர்
அவலக் குரல் !
********************

Poem -4

Sonnets from the Portuguese
By: Elizabeth Browning
Thou hast thy calling to some palace-floor,
Most gracious singer of high poems! where
The dancers will break footing, from the care
Of watching up thy pregnant lips for more.
And dost thou lift this house’s latch too poor
For hand of thine? and canst thou think and bear
To let thy music drop here unaware
In folds of golden fullness at my door?
Look up and see the casement broken in,
The bats and owlets builders in the roof!
My cricket chirps against thy mandolin.
Hush, call no echo up in further proof
Of desolation! there’s a voice within
That weeps . . as thou must sing . . . alone, aloof.
**********

காதல் நாற்பது (5)
காதற் கனலை மிதிக்காதே !

மூலம்: எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கனத்துப் போன என்னிதயத்தை
மரணத் துயரில் தாங்கி
நடமாடுகிறேன்!
முன்னொரு காலத்தில் அவ்விதம்
மரண மதச் சடங்கில்
கிரேக்கப் பெண் எலெக்டிரா (*)
தூக்கிப் போனாள்,
இறந்த தந்தையின்
எரிச்சாம்பற் கலசத்தை !
உந்தன் கண்களுக்குள் உற்று நோக்கி
உன்னிரு பாதங்கள் மீது,
குப்புறத் தட்டினேன்
எரிச் சாம்பலை!
ஏறிட்டுப் பார் என்னை!
எவ்விதக்
கோரக் துயர்க் குவியல்
எனக்குள்
பதுங்கி யுள்ள தென!
எரித்த கருஞ் சாம்பல் ஊடே
செங்கதிர்ப் பொறிகள்
மங்கலாய்
எழுந்திடும் தெரியுமா ?
என்மேல் உள்ள வெறுப்பில்
உனது கால்கள் அக்கொடும்
கனல் மீது மிதித்து,
முழுவதும்
இருளாகி விட்டால்
ஒரு வேளை
அதுவும் எனக்கு நல்ல தாகலாம் !
அப்படி யின்றி
காற்றடித்து அணைக்கு மென
என்னருகே நீ காத்திருந்தால்
எரிச் சாம்பல் தூசி
கிரீடமாய்ப் படியும் உன்
சிரம் மீது !
என்னினிய காதலனே !
அவ்விதம் நீ
கவசமிட்டுக் கொள்ள லாமா,
தவிர்த் தென்னை ?
தீக்கனல் பொறி எவையும்
தோலுக்குக் கீழிருக்கும்
உரோமத்தை கரித்துத்
துண்டிக்க மாட்டா !
தூரமாய் நில்,
விலகிப் போ
வெகு தொலைவில் !

+++++++++++
(*) Electra
In Greek mythology (Trojan War) Electra was daughter of Agamemnon and Clytemnestra .
Electra was absent from Mycenae when her father, King Agamemnon, returned from the Trojan War and was murdered by Aegisthus, Clytemnestra’s lover, and/or by Clytemnestra herself. Aegisthus and Clytemnestra also killed Cassandra, Agamemnon’s war prize, a prophet priestess of Troy. Eight years later Electra was brought from Athens with her brother, Orestes). According to Pindar, Orestes was saved by his old nurse or by Electra, and was taken to Phanote on Mount Parnassus, where King Strophius took charge of him. In his twentieth year, Orestes was ordered by the Delphic oracle.
to return home and avenge his father’s death. According to Aeschylus, he met Electra before the tomb of Agamemnon, where both had gone to perform rites to the dead;

********************
Poem -5
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning

I lift my heavy heart up solemnly,
As once Electra her sepulchral urn,
And, looking in thine eyes, I overturn
The ashes at thy feet. Behold and see
What a great heap of grief lay hid in me,
And how the red wild sparkles dimly burn
Through the ashen greyness. If thy foot in scorn
Could tread them out to darkness utterly,
It might be well perhaps. But if instead
Thou wait beside me for the wind to blow
The grey dust up, . . . those laurels on thine head,
O my Beloved, will not shield thee so,
That none of all the fires shall scorch and shred
The hair beneath. Stand farther off then! go.

**********

காதல் நாற்பது (6)

தனித்த வாழ்வு வேண்டாம் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னை விட்டு விலகிச்செல்

என்றாலும்

உன் நிழலில் தான்

நிற்க வேண்டும் என்று

உணர்வு வரும் எனக்கு!

என் முன்வாசலில் தனித்து நின்று

ஏகாந்தியாய்

இருக்க விருப்ப மில்லை!

ஆணை இடுவேன்,

ஆத்மா நற்பயன் அடைய !

சூரிய வெளிச்சத்தில் பிறருக்குநான்

கை அசைக்கப் போவதில்லை

மௌனமாய் !

என் உள்ளங்கை தன்னை

உன்கரம் தொடுவதால் உண்டாகும்

இன்ப உணர்வை

இழந்திட மன மில்லை !

உன் நெஞ்சு என்னிதய முடன்

பின்னிக் கொண்டு

இரட்டைத் துடிப்பு எழும் போது

பரந்த புவித் துயர்கள்

பிரிக்க முனையும்

இருவரையும் !

திராட்சையின் சுவைதனை ஒயின்

பானமும் தருவது போல்

காணும் என் கனவிலும்,

புரியும் என் பணியிலும்

உருவாய் இருப்பது நீயேதான் !

கடவுள் மீது முறையிட்டுத்

தொடரும் வழக்கில் அவர்

காதில் விழுவது உன் பெயரே !

கடவுள் எனை நோக்கின்

காண்பது,

கண்ணுக் குள்ளிருக்கும்,

இருவரின்

கண்ணீர்த் துளிகள் !

********************

Poem -6

Sonnets from the Potuguese

By: Elizabeth Browing

http://members.aol.com/ericblomqu/brownine.htm

Go from me. Yet I feel that I shall stand

Hence forward in thy shadow. Nevermore

Alone upon the threshold of my door

Of individual life, I shall command

The uses of my soul, nor lift my hand

Serenely in the sunshine as before,

Without the sense of that which I forbore–

Thy touch upon the palm. The widest land

Doom takes to part us, leaves thy heart in mine

With pulses that beat double. What I do

And what I dream include thee, as the wine

Must taste of its own grapes. And when I sue

God for myself, He hears that name of thine,

And sees within my eyes the tears of two.

**********

காதல் நாற்பது (7)

உன் காதலில் சிக்கினேன் !

 

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உலகின் முகம் யாவும் மாறி  விட்டது,

எவரும் அறியாமல்,

என்னருகே நீ

இன்னும் நெருங்கி

உன் ஆத்மாவின் தட ஓசை

என்செவி கேட்ட முதல் !

வாழ்வின் பயங்கர விளிம்பில்

மூழ்கிப் போவேன்

என்னும் மரணப் பயத்துக்கும்

எனது வாழ்வுக்கும்

இடையே

உனது காதலில் சிக்கினேன்!

எனக்கு அது கற்றுக் கொடுத்தது

வாழ்விலே,

புதியதோர் துடிப்பு உணர்ச்சி !

ஞானக் குளிப்புக்கு

இறைவன் அளித்ததுஎனக்கு

இடர்க் கிண்ணம் !

மடக்கென குடித்தேன்  மகிழ்ந்து !

என்னருகே நீ உடனிருப்பதில்

பொங்கி எழும் இனிமை !

இங்கோ, அங்கோ

எங்கோ நீ இருந்தாலும்

அந்நாட்டின் பெயரும்

சொர்க் கத்தின் பெயரும்

மாற்றம் அடையும் !

நேற்று

என்னைக் கொள்ளை கொண்டது

உன் புல்லாங் குழலிசை !

ஏனெனில்

கான மிசைக்கும் தேவதைகள்

அறியும்

அமுத மொழியில்

உனது பெயர் செம்மை யாய்

உலவி வருதலால் !

********************

Poem -7

Sonnets from the Potuguese

By: Elizabeth Browing

The face of all the world is changed, I think,

Since first I heard the footsteps of thy soul

Move still, oh, still, beside me, as they stole

Betwixt me and the dreadful outer brink

Of obvious death, where I, who thought to sink,

Was caught up into love, and taught the whole

Of life in a new rhythm. The cup of dole

God gave for baptism, I am fain to drink,

And praise its sweetness, Sweet, with thee anear.

The names of country, heaven, are changed away

For where thou art or shalt be, there or here;

And this . . . this lute and song . . . loved yesterday,

(The singing angels know) are only dear

Because thy name moves right in what they say.

**********

காதல் நாற்பது (8)

என்ன கைம்மாறு செய்வேன் ?

 

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கைம்மா றென்ன செய்வேன்,

அளவின்றி அளிக்கும்

இளவேந்தே !

கறை படாமல், அறிவிக்கப் படாமல்

உன் கருஞ் சிவப்பு

பொன்னிதயத்தை

வீட்டு மதில்கட்குவெளியே

வைத்தி ருக்கிறாய் !

எதிர்பாராத உன் பரிசுகளை எல்லாம்

அள்ளிக் கொள்ளலாம்,

அல்லது தொடாமல் நீங்கலாம் !

நன்றி கெட்டு

ஒன்றிலும் ஒட்டா துள்ளேனா ?

உயர்ந்த பரிசுகளுக்குநான்

உனக் கெதுவும் அளிக்க வில்லையா?

அப்படி யில்லை, ஆனால்

ஒதுங்கவு மில்லை !

அளித்தது மிக மலிவானது !

கடவுளைக் கேள்,  அவர் அறிவார் !

கண்ணீர் அடிக்கடி சிந்தி

வண்ணங்கள் இழந்த என் வாழ்வு

மரண நிலைக்கு வெளுக்கும் !

உன் தலைக்கு

தலையணையாய் வைத்திட,

உடம்பு வடிவாக வில்லை,

முன்னேறிச் செல்நீ,

உன் மிதிப்பு மெத்தையாக

உதவட்டும் அது !

********************

Poem -8

Sonnets from the Potuguese

By: Elizabeth Browing

What can I give thee back, O liberal

And princely giver, who hast brought the gold

And purple of thine heart, unstained, untold,

And laid them on the outside of the wall

For such as I to take or leave withal,

In unexpected largesse? am I cold,

Ungrateful, that for these most manifold

High gifts, I render nothing back at all?

Not so; not cold,–but very poor instead.

Ask God who knows. For frequent tears have run

The colours from my life, and left so dead

And pale a stuff, it were not fitly done

To give the same as pillow to thy head.

Go farther! let it serve to trample on.

**********

காதல் நாற்பது (9)

உன்னைத்தான் நேசிக்கிறேன்

 

மூலம்: எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னால் கொடுக்க முடிந்ததை

ஈவது நியாய மாகுமா ?

உப்புக் கண்ணீர்த் துளிகள்

வீழும் போது  உன்னைக்

கீழே உட்கார வைத்து

நெடுங்காலம்  எழும் பெருமூச்சு

நின் செவியில் கேட்க வேண்டுமா?

உன் பரிந்துரையைக் கேட்பினும்

வாழத் தவறி என்

மீளாத புன்னகைக் கிடையே

மீண்டும் வெளிவிடும் பெருமூச்சை

எந்தன் உதடுகள்!

அந்தோ அர்த்த மின்றிப் போகலாம்

எந்தன் அச்சங்கள்!

காதலராய்க் காட்டிக் கொள்ளச்

சகத் தோழர் அல்லர்

நாமிருவரும்!

காதலை ஏற்று நான்

வேதனை அடைகிறேன்!

அத்தகைப் பரிசுகள் எனக்களிப்போர்

கருணை இல்லாத வராகக்

கருதப் படுவர்!

என்தூசிகள் உன் அங்கியில் பட்டு

கறை படுத்தச் செய்யேன்!

உன் கண்ணாடி முன்பாக

வெளியேறாது என்

விஷ மூச்சு!

நேசிப்பைக் காட்டுவ  தில்லை

நான் உனக்கு !

நியாய மில்லை அது,

என் இனியவனே!

உன்னைமட்டுமே நான் நேசிப்பது

நிறைவே றட்டும்

நமது நேசம்!

********************

Poem -9

Sonnets from the Potuguese

By: Elizabeth Browing

Can it be right to give what I can give?

To let thee sit beneath the fall of tears

As salt as mine, and hear the sighing years

Re-sighing on my lips renunciative

Through those infrequent smiles which fail to live

For all thy adjurations? O my fears,

That this can scarce be right! We are not peers,

So to be lovers; and I own, and grieve,

That givers of such gifts as mine are, must

Be counted with the ungenerous. Out, alas!

I will not soil thy purple with my dust,

Nor breathe my poison on thy Venice-glass,

Nor give thee any love–which were unjust.

Beloved, I only love thee! let it pass.

**********

++++++++++++++++++

காதல் நாற்பது (10)

காதல் உணர்வு உன்னதமானது

 

மூலம்: எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எனினும் காதல், காதல்

உணர்வு மட்டும்

எழிலானது மெய்யாக !

ஏற்றுக் கொள்ளத் தகுதி பெறுவது !

எரியும் கனல் வெளிச்ச மானது !

ஆலயம் எரியட்டும் ! நாராய்ப் பிரியட்டும் !

ஆலமரக் கட்டையோ,

காய்ந்த இலைகளோ

கனலில் பற்றின்

ஒப்பான ஒளியாகி விடும் !

அதுபோல் காதலும் தீக்கனலே !

நேசிப்பது உன்னைத் தான்,

ஆசைப்பட்டு நான் கூறும் போது

குறித்துக் கொள்,

நேசிப்பது உன்னைத் தான்,

உன் கண்ணொளி பட்டால்

உன்னதம் பொங்கி மாறிடும்

என் மேனியில் !

ஒளிக் கதிர்கள் முகத்தில்பூத்து

உன்னை நோக்கிப் பாயும் !

பணிவுடன் புரியும் காதலில்

தாழ்ச்சி, இகழ்ச்சி என்றில்லை !

ஏழ்மை நிலையினர்

இறைவனை நாடி நேசித்தால்

ஏற்றுக் கொள்வார்!

அசட்டுத் தோற்றங்களில்

நான் நானே என்னும் உணர்வு

தானாய் வெளிப்படும் !

காதலின் உன்னதக் கைத்திறம்

காட்டி விடும்,

இயற்கையின் மகத்துவம்

எத்தகைய தென !

********************

Poem -10

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Yet, love, mere love, is beautiful indeed

And worthy of acceptation. Fire is bright,

Let temple burn, or flax; an equal light

Leaps in the flame from cedar-plank or weed:

And love is fire. And when I say at need

I love thee . . . mark! . . . I love thee–in thy sight

I stand transfigured, glorified aright,

With conscience of the new rays that proceed

Out of my face toward thine. There’s nothing low

In love, when love the lowest: meanest creatures

Who love God, God accepts while loving so.

And what I led, across the inferior features

Of what I am, doth flash itself, and show

How that great work of Love enhances Nature’s.

**********

காதல் நாற்பது (11)

துன்ப மயமான இசை !

 

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

காதல் வெட்க மறியா தென்றால்

தகுதி இல்லையென நான்

ஒதுக்கப்பட மாட்டேன் !

கன்னங்கள் வெளுப்பது உனது

கண்ணுக்குத் தெரிகிறது !

காதல் கனத்த நெஞ்சின் பளுவைத்

தாங்க முடியாமல் நடுங்கி

முறிந்து போயின

முழங் கால்கள் !

ஒரு காலத்தில் பெருமை தந்து,

களைத்து விட்ட இந்த

கவித்துவ வாழ்க்கை எப்படியோ

கால மேட்டில் ஏறிடும் !

காட்டு வெளியே

கோலக் குயில் ஒலிக்கும்

துன்ப மயமான குழலிசையைக்

கேளாம லிருப்பது அபூர்வம் !

எதற்காக இப்படி உழல வேண்டும் ?

அந்தோ என் இனியவனே !

உந்தன் ஒப்பிலா அறிவுக்கும்,

உயர்ந்த  அரங்குக்கும்,

நிகரில்லை நான் என்பது

வெளிப்படை !

நானுனை இன்னும் நேசிப்பதால்

நளின முடன் பலிவாங்கும்

அரிய என் காதலே

உரிமை ஆக்கிடும் உன்னை !

அந்தக் காதல் உணர்விலே

இன்னும் நான் வாழ்வது

வீண்தான் !

உனக்கு வெகுமதி வழங்க

என்னை அர்ப்பணம் செய்வேன்

நின்னெழில்முகத்துக்கு  !

********************

Poem -11

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

And therefore if to love can be desert,

I am not all unworthy. Cheeks as pale

As these you see, and trembling knees that fail

To bear the burden of a heavy heart,–

This weary minstrel-life that once was girt

To climb Aornus, and can scarce avail

To pipe now ‘gainst the valley nightingale

A melancholy music,–why advert

To these things? O Beloved, it is plain

I am not of thy worth nor for thy place!

And yet, because I love thee, I obtain

From that same love this vindicating grace,

To live on still in love, and yet in vain,–

To bless thee, yet renounce thee to thy face.

**********

காதல் நாற்பது (12)

காதலை அழைத்தது காதல் !

 

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இதயத்தி லிருந்து பொங்கிப்

புருவம் வரை எழும்பும்

இம்மெய்க் காதல்

பெருமை ஊட்டும் எனக்கு !

மகுடம் சூட்டும்

மாபெரும்

மாணிக்கக் கற்களால் !

ஆடவர் கண்களை ஈர்க்கும் !

எனது தகுதி யாவும்

உள்ளத்தின் உள்ளிருக்கும்

ஆத்ம மதிப்பீடை நிரூபிக்கும்,

புற உலகுக்கு !

உன் கண்ணும் என் கண்ணும்

ஒன்றை ஒன்று

எதிர்நோக்கும் வேளையில்

நேசிப்பது எப்படி யென

நீ உதாரணம் காட்டாமல் நான்

நேசிக்கக் கூடாது

நின்னை மனப் பூர்வமாய் !

காதலை அழைத்தது காதல் !

பதிலின்றி இனிதெனக்

காதலை

வெளிப் படுத்தக் கூடாது

எனக்குரிய தென்று !

உன் ஆத்மா வானது

வலுவின்றி மயங்கி விட்ட

என் ஆத்மாவை

இழுத்துக் கொண்டு போய்

பொன்னா சனத்தில் அமர வைக்கும்

உன்னருகே !

அந்தோ ஆத்மாவே !

அவசியம்

பணிவுவேண்டும்

நமக்கு !

உனைத் தனியே நேசிக்கும்

எனக்கு

உனதருகில் மட்டும் இருக்க

விருப்பு !

********************

Poem -12

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Indeed this very love which is my boast,

And which, when rising up from breast to brow,

Doth crown me with a ruby large enow

To draw men’s eyes and prove the inner cost,–

This love even, all my worth, to the uttermost,

I should not love withal, unless that thou

Hadst set me an example, shown me how,

When first thine earnest eyes with mine were crossed,

And love called love. And thus, I cannot speak

Of love even, as a good thing of my own:

Thy soul hath snatched up mine all faint and weak,

And placed it by thee on a golden throne,

And that I love (O soul, we must be meek!)

Is by thee only, whom I love alone.

++++++++++++++

**********

காதல் நாற்பது (13)
கட்டு மீறிய காதல் !
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்மீது நான் கொண்ட காதலை
என்னைச் சொல்ல வைத்தி டுவாய்
ஏற்புடைய சொற்களில்
நாகரீகமாக !
நம்மிரு முகங்களுக் கிடையே
ஒளித் தீபம் ஏந்தி,
வெளியே காற்று கொந்தளிக்க,
விளக்கொளியை
சமர்ப்பிப்பேன் நின் பாதங்களில் !

எனது கையிக்கும் எட்டாமல்
என்னுள் ஒளிந்திருக்கும்  உணர்ச்சியை
எப்படி வார்த்தை களில்
நிரூபணம் செய்வது ?
என்னைத் தாண்டிச் செல்லும்
எனது ஆன்மாவைப்
பற்றி நிறுத்த என் கையிக்குக்
கற்றுக் கொடுக்க இயலாது !

அந்தோ இல்லை,
உன் நம்பிக் கைக்கு
என் ஊமைத்தனப் பெண் நிலைமை
பாராட்டச் செய்யும்
என் பெண்மைக் காதலை !
உனை வசப்படுத்த நான்
முனைந்தாலும்
உனக்குரி யவளாய்
ஆக்கப் படாது போனால்
கிழிக்குமென் உயிர் ஆடையைச்
சிறிதளவில் !

உறுதியாய் யுள்ள
வாய்ச்சொல் தோற்றாலும்
வைராக்கிய முள்ள
இந்த இதயம்,
ஒருமுறை உன்னால்
தீண்டப் பட்டால்
எடுத்து ரைக்கும்  அது
படும் துயரை !

********************

Poem -13
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning

And wilt thou have me fashion into speech
The love I bear thee, finding words enough,
And hold the torch out, while the winds are rough,
Between our faces, to cast light on each?–
I drop at thy feet. I cannot teach
My hand to hold my spirit so far off
From myself–me–that I should bring thee proof
In words, of love hid in me out of reach.
Nay, let the silence of my womanhood
Commend my woman-love to thy belief,–
Seeing that I stand unwon, however wooed,
And rend the garment of my life, in brief,
By a most dauntless, voiceless fortitude,
Lest one touch of this heart convey its grief.

**********

காதல் நாற்பது (14)
காதலிப்பாய் காதலுக்காக !
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னைக் காதலிக்க
வேண்டு மெனின்
ஏதோ ஒன்றுக் கென நீ
குறிப்பிட வேண்டாம்,
காதலுக்காக மட்டுமே என்னைக்
காதலிப்பது தவிர

“அன்பு கொண்டது, அவள் அழகிய
புன்னகைக்கு !
கண்கவரும் தோற்றத் துக்கு !
கண்ணியப் பேச்சுக்கு !
எந்தன் மனம் ஒத்துப் போகு மொரு
சிந்தனைச் சூழ்ச்சிக்கு !

நிச்சயம் அவற்றில் மனதுக் கினிய
நிம்மதி அந்த நாளில்.” என்று
நீ சொல்ல வேண்டாம் !
அவை யாவும் மாறிப் போகலாம்
என்னினியவனே !
உன்னிடமும் அவை
மாறி விடலாம் அதுபோல் !
மெய் வருந்திக் கொண்ட காதலும்
தேய்ந்து போகலாம் !

தேவை யில்லை அவ்விதம்
மெய் வருந்திக் காதல் கொள்ள !
கன்னங்களில் வழியும்
கண்ணீரைத் துடைத்து என்னைக்
காதலிக்க வேண்டாம்
பரிதாபப் பட்டு நீ !
உனது ஆறுதலை
நெடுங் காலமாய்ப் பெற்று வரும்
ஒரு பிறவி
ஓலமிட மறந்து போய்
உன் காதலை இழக்கலாம் !

ஆனால்
காதலிப்பாய் நீ என்னை
காதலுக்காக மட்டுமே !
முடிவில்லாக் காதல் பயணத்தில்
காதலை நீ
தொடரலாம் மேலும்
நெடுங் காலம் !

********************

Poem -14
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning

If thou must love me, let it be for nought
Except for love’s sake only. Do not say
“I love her for her smile–her look–her way
Of speaking gently,–for a trick of thought
That falls in well with mine, and certes brought
A sense of pleasant ease on such a day”–
For these things in themselves, Beloved, may
Be changed, or change for thee,–and love, so wrought,
May be unwrought so. Neither love me for
Thine own dear pity’s wiping my cheeks dry,–
A creature might forget to weep, who bore
Thy comfort long, and lose thy love thereby!
But love me for love’s sake, that evermore
Thou may’st love on, through love’s eternity.

**********

காதல் நாற்பது (15)
பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ

 

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

குற்றம் சுமத்தாதே என்னை!
கெஞ்சிக் கேட்கிறேன் உன்னை!
நின்முன் தெரிவது சலனமற்ற
என் சோக முகம்!
நம்மிரு முகங்கள் வெவ்வேறு பக்கம்
நோக்குவதால்
சிரத்திலும் முகத்திலும்,
ஒரே மாதிரி ஒளிர்வ தில்லை
பரிதி வெளிச்சம்!

தெய்வீகக் காதலில்
சோக மென்னைப் பாதுகாப்பாய்ச்
சிறைப் படுத்தி உள்ளது!
சிறகை விரித்து வெளியே
பறக்க முயன்றாலும்
தோல்விதான் எனக்கு!

பளிங்குப் பேழையில் சிக்கிய
தேனீ யாக  எண்ணிக்
கண்காணிப் பாய் நீ
ஐயமின்றி!
முன்னேறும் எனது காதல்
முடிந்து போவதும்,
நினைவின் எல்லை தாண்டி என்னை
நீ மறந்து போவதும்,
தெரிகிறது எனக்கு,
வானின் மீதமர்ந்து நதிகளைக்
கீழ் நோக்கும்
ஒருத்தி காணும்
உப்புக் கடல் போல!

********************

Poem -15

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Accuse me not, beseech thee, that I wear
Too calm and sad a face in front of thine;
For we two look two ways, and cannot shine
With the same sunlight on our brow and hair.
On me thou lookest with no doubting care,
As on a bee shut in a crystalline;
Since sorrow hath shut me safe in love’s divine,
And to spread wing and fly in the outer air
Were most impossible failure, if I strove
To fail so. But I look on thee–on thee–
Beholding, besides love, the end of love,
Hearing oblivion beyond memory!
As one who sits and gazes from above,
Over the rivers to the bitter sea.

**********

காதல் நாற்பது (16)

முழுமைப் படுத்தும் என்னை !

 

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்ணியம் மிகும் வேந்தனைப் போல் நீ
என்னை மீட்டுக் கொண்டதால்
எனது அச்சத்தை எதிர்த்து
மேற்பட்டு நிற்கிறாய் !
போர்த்தி விடு
உன் பழுப்பு வண்ண அங்கியை
என் மீது,
நெருங்கி என்னிதயம் ஒன்றி
உன்னிதய முடன்
ஒருங்கே வளரும் வரை !
தனிமையில் நான் தவித்திட
எப்படி என் மனம்
ஆடிப் போன தென்று
அறிவாய் நீ !
வெல்ல முயலும் போது
சீமானாய் நிரூபிக்கும் உன்னை
முழுமைப் படுத்தி என்னை !
மேலெழ ஒருவர்
கீழே அழுத்தித் தணிவது போன்றது.
விழுந்த படைவீரன்
குருதிப் புலத்தி லிருந்து
தூக்குவோன் கையில்
விட்டுவிடும் உடைவாள் போல,
முடிந்தன இங்கு இறுதியாய் எனது
முயற்சிகள் !
இனி நீ எனக்கு அழைப்பு விடுத்தால்
உன் சொல்லை மதித்து
என் தாழ்வுணர்வைத் தாண்டித் தான்
நான் மேல் எழலாம்,
என்னினிய காதலனே !
உன் காதல் உணர்வைப் பெரிதாக்கு
என் மதிப்புத் தரம்
உயர்வாக !

+++++++++++

Poem : 16

Sonnets from the Portuguese
By: Elizabeth Barrett Browning (1806-1861)

And yet, because thou overcomest so,
Because thou art more noble and like a king,
Thou canst prevail against my fears and fling
Thy purple round me, till my heart shall grow
Too close against thine heart henceforth to know
How it shook when alone. Why, conquering
May prove as lordly and complete a thing
In lifting upward, as in crushing low!
And as a vanquished soldier yields his sword
To one who lifts him from the bloody earth,–
Even so, Beloved, I at last record,
Here ends my strife. If thou invite me forth,
I rise above abasement at the word.
Make thy love larger to enlarge my worth.

+++++++++

காதல் நாற்பது (17)
ஓரிடத்தைத் தேர்ந்தெடு

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னரும் கவிஞனே !  நீ தொடலாம்
கடவுள் தனது படைப்பில்
முற்பட்ட பிற்பட்ட
கானச் சுரங்கள் அனைத்தையும் !
தூய தென்றலில் மௌனமாய் மிதக்கும்
இன்னிசையை மீட்பாய் !

ஆரவார உலகத்தின் கூச்சல்களை
வேரறுப்பாய் நீ !
மனித இனம் கைவிட்ட நற்பலனை
மீட்டு வர
அவரது செவிகளுக்குள் ஊற்றி
மாற்று மருந்தளிப்பது
உன்னிசை !

அவ்வித முடிவுகட்கு உன்னை
அர்ப்பணம் செய்வது
கடவுளின் நியதி !
உனக்காக நான் காத்திருப்பது
எனக்காகத் தான் !
பெரும்பான்மைப் பயன்களுக்கு
எவ்விதம் நான் ஈடுபட வேண்டுமென
எண்ணுகிறாய் நீ
எனக்கி னியவனே ?

ஒரு நம்பிக்கை கொண்டு
உவகை யோடு
நானும் பாடவா ? அல்லது
மோனத்துடன்
என் மெல்லிய சோக நினைவுகள்
உன் கீதங்க ளோடு கலந்து
ஒன்றிக் கொள்ளவா ?

பாடி மகிழ நமக்கு
ஒரு பைன் மரத்தடி நிழலா ?
அல்லது
பாடாது ஓய்வெடுக்க
ஓர் சமாதியா ?
ஏதேனும் ஓரிடத்தைத்
தேர்ந்தெடு !

********************

Poem -17

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

My poet, thou canst touch on all the notes
God set between His After and Before,
And strike up and strike off the general roar
Of the rushing worlds, a melody that floats
In a serene air purely. Antidotes
Of medicated music, answering for
Mankind’s forlornest uses, thou canst pour
From thence into their ears. God’s will devotes
Thine to such ends, and mine to wait on thine.
How, Dearest, wilt thou have me for most use
A hope, to sing by gladly? or a fine
Sad memory, with thy songs to interfuse?
A shade, in which to sing–of palm or pine?
A grave, on which to rest from singing? . . . Choose.

**********

கவிதை -18

ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

எந்த மனிதனுக்கும் நானிதைப் போல்
ஒருபிடிக் கூந்தலை அறுத்துத்
தருவ தில்லை
எல்லோரிலும் மிக்க இனிய
உன்னைத் தவிர !

சிந்தித்து
எந்தன் விரல்களில்
பழுப்பு நிற
முழு நீளக் கூந்தலைச் சுற்றி
“வாங்கிக் கொள்” என்று
வாய்மொழிந்தேன்!
நீங்கின என்னிளமை நாட்கள்
நேற்றோடு!
முழங்கால் வரைக் கூந்தலினி
விழா தெனக்கு!
மலர் ரோஜாவைத்
தலையில்
சூடிக் கொள்வ தில்லை நான்,
மங்கையர்
சிங்கா ரிப்பது போல்!

வெளுத்த இரு கன்னங்கள் மீது
துளும்பிடும்
கண்ணீர்க் கறை மறைத்திடும்
தலைமயிர் இப்போது!
கீழே தொங்குவதால்,
சோகத்தின் கைத்திறன் மூலம்
சொல்லித் தரும் எனது
சிரத்தின் சாய்வு!

மரணக் கத்திகள்
முடியை நறுக்குமென
முதலில் எண்ணினேன்!
ஆயினும் காதலிப்பது
நியாய மானது
நீ யதை ஏற்றுக் கொள்வாய் !
நெடுங் காலமாய்த்
தூயதாய் இருக்கக் கண்டேன், என்
தாயிங்கு
மாயும் போதவள்
விட்டுச் சென்ற
முத்தம் !

********************

Poem -18
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning

I never gave a lock of hair away
To a man, dearest, except this to thee,
Which now upon my fingers thoughtfully,
I ring out to the full brown length and say
“Take it.” My day of youth went yesterday;
My hair no longer bounds to my foot’s glee,
Nor plant I it from rose or myrtle-tree,
As girls do, any more: it only may
Now shade on two pale cheeks the mark of tears,
Taught drooping from the head that hangs aside
Through sorrow’s trick. I thought the funeral-shears
Would take this first, but Love is justified,–
Take it thou,–finding pure, from all those years,
The kiss my mother left here when she died.

**********

கவிதை -19

உன்னிழலுடன் பின்னிக் கொள்வேன்!

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

வெனிஸ் ரியால்டோ நகரின்
ஆத்மாவுக்கு
வணிகப் பண்டம் உண்டு !
அந்தச் சந்தையில் கூந்தலுக்குக் கூந்தல்
பண்ட மாற்றுச் செய்வேன்.
என்கவிப் பெருமான் நெற்றி மேலிருந்து
என்னிதயத் துக்கு
இத்தாலியக் கப்பலை மிஞ்சும் அளவுக்
கத்தைக் கூந்தல் கிடைக்கும் !
கிரேக்கக் கவிஞர் பின்டாரின் விழிகள் போல்
பழுப்புக் கருமை வண்ணத்தில்
ஒன்பது தேவதையர் புருவங்க ளிடையே
மங்கிடும் வெங்கல நிறக் கூந்தல்
தொங்கிடும்.
எனதினிய காதலனே !
உனது வளைந்த கிரீடத்தின் வர்ணம்
கரிய சுருள் மயிர்க் கொத்தில்
நிரந்தரமாய்
இன்னும் உள்ளதா வென
ஐயமுறுவேன் !
மெதுவாய் முத்த மிடுகையில்
விடும் மூச்சுக் காற்றை
உன்னிழலுடன்
பின்னிக் கொள்வேன் பாதுகாப்பாய்,
நழுவிச் செல்லாது !
தடை யில்லா இடத்திலென்
கொடையினை எடுத்து வைப்பேன் !
இயல்பான உடற்கனல்
உன் நெற்றியில் உள்ளது போல்
என் நெஞ்சின் மீதும்
எழாம லிருக்குமா
என்னுடல்
சில்லிட்டுப் போகும் வரை ?

********************

Poem -19

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

The soul’s Rialto hath its merchandise;
I barter curl for curl upon that mart,
And from my poet’s forehead to my heart
Receive this lock which outweighs argosies,–
As purply black, as erst to Pindar’s eyes
The dim purpureal tresses gloomed athwart
The nine white Muse-brows. For this counterpart, . . .
The bay-crown’s shade, Beloved, I surmise,
Still lingers on thy curl, it is so black
Thus, with a fillet of smooth-kissing breath,
I tie the shadows safe from gliding back,
And lay the gift where nothing hindereth;
Here on my heart, as on thy brow, to lack
No natural heat till mine grows cold in death.

*********

கவிதை -20

உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேசனே! என்னரும் நேசனே!
நினைத்துப் பார்க்கும் போது,
ஓராண்டுக்கு முன்பு நான்
பனித் தளத்தில்
தனித்தமர்ந்த சமயத்தில் நீ
இத்தரணி மீது இருந்தாய், ஆயினும்
எத்தடமும் காணேன்!
அமைதி மூழ்கிக் கிடந்தது!

உந்தன் குரல் செவியில் விழும் நேரம்
வந்திட வில்லை,
என் தொடர்புச் சம்பந் தங்களை
எண்ணிப் பார்த்தேன்,
ஒவ்வோர் சங்கிலிக் கோப்பாக!

உன்கரம் புரியப் போகும்
எவ்வித உடைப்பும்
முறிக்காது
அந்தப் பிணைப்பை!
ஏனென்று வாழ்விலே ஆச்சரியம்
எழுவதும் விந்தைதான்!
இரவோ, பகலோ எதுவாயினும்
உன் உரையோ,
அல்லது உன்னரும் பணியோ
புல்லரிப் பளிப்ப தில்லை
உனக்கு!

ஏதோ உனக்குள்ள முன்னறிவால்
வெள்ளைப் பூ மலர்வதைக் கண்டாய்!
நாத்திகர் மந்த புத்திக் காரர்!
ஊகிக்க முடியாது
அவரால்
ஊனக்கண் காணா கடவுளின்
இருப்பை !

********************

Poem -20

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Beloved, my Beloved, when I think
That thou wast in the world a year ago,
What time I sat alone here in the snow
And saw no footprint, heard the silence sink
No moment at thy voice, but, link by link,
Went counting all my chains as if that so
They never could fall off at any blow
Struck by thy possible hand,–why, thus I drink
Of life’s great cup of wonder! Wonderful,
Never to feel thee thrill the day or night
With personal act or speech,–nor ever cull
Some prescience of thee with the blossoms white
Thou sawest growing! Atheists are as dull,
Who cannot guess God’s presence out of sight.

*********

கவிதை -21

திரும்பத் திரும்பச் சொல் நேசிப்பதாய் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னை நீ நேசிப்பதாய் திரும்பச் சொல்
இன்னு மொருதரம் சொல்,
கூக்கூக் கீதம் போல் அச்சொல்
நீ புரிவது போல்
மென்மேலும் கேட்கட்டும் !
நினைவில் வை, மலையோ,
சமவெளியோ  வேண்டாம்!
வனாந் தரமோ, பள்ளத் தாக்கோ இல்லை
கூக்கூக்குச் சிரமம் கூடாது !

பசுமை முழுதாய்ப் பரவி
வசந்த காலம் புதிதாய் வருகுது !
என்னிய நேசனே!
பாராட்டும்,
காரிருளில் என்னை
ஐயமுள்ள ஆன்மீகக் குரல் ஒன்று !
அந்த சந்தேகத் துயரில்
அவலக் குரல் எழும், என்னிட மிருந்து:
“இன்னொரு முறை சொல் நீ நேசிப்பதை.”
எவருக்கு  நாணம் வரும் ?

விண்ணுலகம் ஒவ்வொன்றிலும்
எண்ணிலா விண்மீன்கள் சுற்றினாலும்
ஆண்டு தோறும்
அளவிலா மலர்கள் பூத்தாலும், என்னை நீ
நேசிப்பதாய்ச் சொல் என்னிடம்,
நேசிப்பாய், நேசிப்பாய் முழுதாய் !
வயதான தாம்பத் தியத்தில்
எனக்குக் கலக்கம் மட்டும் உள்ளது ,
என்னவரே !
உன் ஆத்மாவால்
என்னை நீ
மௌன மாகவும் நேசிப்பது !

********************

Poem -21

Sonnets from the Portuguese
By: Elizabeth Browning

Say over again, and yet once over again,
That thou dost love me. Though the word repeated
Should seem “a cuckoo-song,” as thou dost treat it,
Remember, never to the hill or plain,
Valley and wood, without her cuckoo-strain
Comes the fresh Spring in all her green completed.
Beloved, I, amid the darkness greeted
By a doubtful spirit-voice, in that doubt’s pain
Cry, “Speak once more–thou lovest!” Who can fear
Too many stars, though each in heaven shall roll,
Too many flowers, though each shall crown the year?
Say thou dost love me, love me, love me–toll
The silver iterance!–only minding, dear,
To love me also in silence with thy soul.

**********

கவிதை -22

கொடுமை இழைக்கும் இவ்வுலகம்!
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஒருவரை ஒருவர் நெருங்கி

நெருக்கமாய் நம்மிரு ஆத்மாக்கள்

நேருக்கு நேர், மௌனமாய்

நெஞ்சுறுதி யோடு

நிமிர்ந்து நிற்கும் போது,

என்ன கொடுமை எல்லாம்

கசப்பாய் எமக்கு இழைக்குமோ

இவ்வுலகம் ?

வளைவுத் திருப்பங்களில் தீப்பற்றி

முறிந்து போகும்

விரிந்திடும் எமது இறக்கைகள் !

எம்மைத் திருப்தி யுடன்

இங்கே நீண்ட காலம் வாழ விடுமா ?

சிந்திப்பாய் !

மென்மேல் ஏறிடும் தேவதைகள்

நம்மேல் வலுவாய்த் தூவிடும்

உன்னத மாகப்

பொன்னிசைப் பாடல் சிமிழை,

ஆழ்ந்த நமது

அருமை மௌனத் திடையே !

என்னினியவனே,

தகுதி யற்ற மனிதரின்

முரண்பட்ட மன முடக்கம்

விரட்டித்

தூய நம் ஆன்மாக்களைத்

துண்டிக்கும் இந்த

மண்ணில் வசிக்க வேண்டும் நாம் !

காரிருள் வெளிக்குள்ளே

ஒரே ஒரு நாள்

காதலித்து நிற்க எனக்கு நீ

ஓரிடத்தை அனுமதி

மரிப்பு நேரச் சுழியிட்டு !

********************

Poem -22

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

When our two souls stand up erect and strong,

Face to face, silent, drawing nigh and nigher,

Until the lengthening wings break into fire

At either curved point,–what bitter wrong

Can the earth do to us, that we should not long

Be here contented? Think. In mounting higher,

The angels would press on us and aspire

To drop some golden orb of perfect song

Into our deep, dear silence. Let us stay

Rather on earth, Beloved,–where the unfit

Contrarious moods of men recoil away

And isolate pure spirits, and permit

A place to stand and love in for a day,

With darkness and the death-hour rounding it.

**********

கவிதை -23

சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

அப்படி ஆகி விடுமா அது ?
நானிங்கு செத்துக் கிடந்தால்,
உயிர் இழப்பாகுமா உனக்கு
என்னுயிர் போய் விடுவதில் ?
புதைக் குழியின் ஈரம் என்னுடைய
சிரத்தைச் சுற்றி இறங்குவதால்,
பரிதி வெளிச்சமும்
குளிர்ச்சியாய்ப் போகுமா உனக்கு ?

என்னினிய நேசனே! நான்
உன்னத மடைந்தேன் உன்மடல் படித்து,
உனக்குரியவள் நான்,
உனக்கு அப்படியோர் பெருமையே !

உன் ஒயினை ஊற்றி
உனக்கே நான் கொடுக்கவா
என் நடுங்கும் கரங்களில் ?

மரணக் கனவுகளுக்குப் பதிலாய்
மறுபடி என் ஆத்மா
வாழ்வின் கீழ்ப்படிகளில் ஏறும் !
நோக்கிடு என்னை, மூச்செடு என் மேல்,
நேசிப்பாய் என்னை, அன்பனே !
அறிவுச்சுடர் மாதர்
அவற்றை
விந்தையாய்க் கருத மாட்டார்,
காதலுக் கிழப்பேன் எனது
நில புலங்களை !
பட்டப் படிப்பை !
உனக்காக நான் விட்டு விடுவேன்
எனது மரண எதிர்பார்ப்பை !
மாற்றிக் கொள்வேன்
சுவையான
சொர்க்கபுரிக் காட்சிக்குப் பதிலாய்
உன்னோடு வாழும்
மண்ணுலகுக்கு !

********************

Poem -23

Sonnets from the Portuguese
By: Elizabeth Browning

Is it indeed so? If I lay here dead,
Wouldst thou miss any life in losing mine?
And would the sun for thee more coldly shine
Because of grave-damps falling round my head?
I marvelled, my Beloved, when I read
Thy thought so in the letter. I am thine–
But . . . so much to thee? Can I pour thy wine
While my hands tremble? Then my soul, instead
Of dreams of death, resumes life’s lower range.
Then, love me, Love! Look on me–breathe on me!
As brighter ladies do not count it strange,
For love, to give up acres and degree,
I yield the grave for thy sake, and exchange
My near sweet view of Heaven, for earth with thee!

**********

கவிதை -24

வாழ்வு வாழ்வதற்கே !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உலகத்தின் கூர்மை தனக்குள்ளே
உருண்டு கொள்ளட்டும்,
மடக்குக் கத்திபோல்
படக்கென மடித்து
இடர் விளை விக்காது
மென்மை யாகவும்
வெதுவெதுப் பாகவும் இருக்கும்
எந்தன் காதற் கரத்தின் அருகிலே !
வாழ்வு வாழ்வதற்கே !

உந்தன்
தோள்மேல் சாய்கிறேன்,
இனியவனே !
உலக மானிட மிழைத்த
கீறல்களை
அலறாது தாங்கி
உன் மயக்கு மந்திரப் பாதுகாப்பை
உணர்கிறேன்,
சொர்க்கத்தின் குறைவிலாப் பனித்துளிகள்
சொட்டிடும்.

வெண்ணிற அல்லி மலர்கள் போல்
நமது வாழ்க்கை
அடிவேர் முதல் மலர்ந்து
மறுபடி உறுதிப் படலாம் !
மலை மீது நின்று
மனிதர் தொட முடியாது
சீராக வளர்ந்து
நம்மைச்
செல்வந் தராய் ஆக்கிய,
கடவுள் மட்டும் மாற்றக் கூடும்
இல்லாத ஏழையராய் !

********************

 

Poem -24

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Let the world’s sharpness, like a clasping knife,
Shut in upon itself and do no harm
In this close hand of Love, now soft and warm,
And let us hear no sound of human strife
After the click of the shutting. Life to life–
I lean upon thee, dear, without alarm,
And feel as safe as guarded by a charm
Against the stab of worldlings, who if rife
Are weak to injure. Very whitely still
The lilies of our lives may reassure
Their blossoms from their roots, accessible
Alone to heavenly dews that drop not fewer;
Growing straight, out of man’s reach, on the hill.
God only, who made us rich, can make us poor.

 

**********

காதல் நாற்பது (25)

கனத்துப் போன மனது !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

துயரில் கனத்த இதயத்தை

தூக்கிச் சுமந்தேன் ஆண்டு தோறும் !

துயருக்கு மேல் துயர் உற்றேன்

உன் முகத்தை நான்

காணும் வரை

எனதினிய காதலனே !

தொடுத்த ஆரத்தின் முத்துக்கள் போல்

அடுத்தடுத்து இதயத் துடிப்பு

இயல்பான

இன்பம் எல்லா வற்றிலும்

உடனெழும்

நடன வேளையில் !

கனத்துப் போன என் இதயத்தைக்

கடவுள் கைதூக்கி விடும்வரை

நம்பிக்கை உடைந்து

வேதனையே மேலோங்கும் !

என் இதயத்தை

உன் கம்பீரத்தின் முன்பு

அன்புடன் சமர்ப்பணம் செய்ய நீ

அழைத்தாய் என்னை !

உன்னிதயம்

என்னருகிலே உள்ள போது,

பின்னது மூழ்கிடும் தானாய்,

விரைவாய்,

ஒரு கனத்த பளுவாய்,

விண்மீன் களுக்கும், நிறைவேறாத

விதிக்கு மிடையே !

********************

Poem -25

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

A heavy heart, Beloved, have I borne

From year to year until I saw thy face,

And sorrow after sorrow took the place

Of all those natural joys as lightly worn

As the stringed pearls, each lifted in its turn

By a beating heart at dance-time. Hopes apace

Were changed to long despairs, till God’s own grace

Could scarcely lift above the world forlorn

My heavy heart. Then thou didst bid me bring

And let it drop adown thy calmly great

Deep being! Fast it sinketh, as a thing

Which its own nature doth precipitate,

While thine doth close above it, mediating

Betwixt the stars and the unaccomplished fate.

**********

காதல் நாற்பது (26)

துணை தேடும் உள்ளொளி !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

உறு துணை எனக்குத் தேவை என்று
உள்ளொளி யோடு வாழ்ந்தேன்
ஆரம்ப காலம் தொட்டே,
ஆடவர், பெண்டிர் பரிவுக்குப்
பதிலாக !
அறிந்து கொள்ள நினையாது
வெறும் பரிவுள்ள உறவுகளாய்த் தான்
பார்த்தேன் அவரை எல்லாம்;

பாடிய அவரது பாட்டுக்கும் மேலாகச்
சுவைமிகும்
பண்ணிசை எனக்குக் கேட்குமென
எண்ணிலேன் ! சட்டெனத்
தேயும் அவரது பழுப்பு வண்ணம்
தனிப்பட்ட தில்லை !
வையகத் தூசிகள் மீதெழும்
புல்லாங் குழல் ஓசை
ஊமைத் தனம் வளர்ப்பது !

மங்கிடும் அவர் விழிக் கவர்ச்சியில்
மயங்குவேன் மடத்தனமாய் !
அப்போதவர் போலித் தனத்திடையே
காட்சி அளித்தாய் நீ என்னை
ஆட்கொள்ள !

என்னினிய அன்பனே !
மின்னிடும் அவர் முன்தோற்றமும்,
இன்னிசைக் கீதமும்
உன்னத மகிமையும் சிறப்பாக
ஒன்று கூடும் உன்னிடம்,
நதி நீரைச் சிமிழியில் ஊற்றியது போல் !

எல்லாத் தேவை களிலும் திருப்தி யுற்று
என் ஆத்மாவும் மீறி யெழும்
உன்னுறவால் !
ஏனெனில்
இறைவனின் கொடைகள்
தள்ளி விடும்
மானிடனின் உயர்ந்த கனவுகளை
நாணிடும் நிலைக்கு !

********************

 

Poem -26

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

I lived with visions for my company
Instead of men and women, years ago,
And found them gentle mates, nor thought to know
A sweeter music than they played to me.
But soon their trailing purple was not free
Of this world’s dust, their lutes did silent grow,
And I myself grew faint and blind below
Their vanishing eyes. Then THOU didst come–to be,
Beloved, what they seemed. Their shining fronts,
Their songs, their splendours (better, yet the same,
As river-water hallowed into fonts),
Met in thee, and from out thee overcame
My soul with satisfaction of all wants
Because God’s gifts put man’s best dreams to shame.

**********

காதல் நாற்பது (27)

உயிர்ப்பூட்டும் காதல் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எனக்குரிய இனியனே !
மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட
எனைக் கைதூக்கி விட்டவன் நீ !
உனது முத்தம் பெறுவதற்கு முன்னே
சோகச் சுருள் கூந்த லிடையே
உயிர் மூச்சு ஊதி
நெற்றியின் மினுமினுப்பு
முற்றிலும் தெரிகிறது,
தேவதைகள் கண்ணில் படுவது போல் !

உலகம் என்னை
விலக்கி விட்ட போது,
கடவுளை நான் தேடிப் போகக்
கண்ணில் பட்டது நீ !
எனக்குரிய நீ, எனக்குரி யவன் நீ
என்னிடமே வந்தாய் !
உனைக் கண்டு பிடித்தவள் நான்;
பாதுகாப் பெனக்கு;
பலம் கிடைத்த தெனக்கு;
பரவச மெனக்கு;
வாடா  மல்லி போல் நிற்கிறேன்,
மூடாது பனித்துளி !
பின்னோக்கிப் பார்க்கிறேன்;
மேற்குடி வாழ்க்கையில்
சலித்துப் போன உன்
தருணங்களை !

மார்பு பொங்கி எழும்ப
நல்லதுக்கும் தீயதற்கும் நடுவே
நானிங்கு,
சாட்சி அளிப்பேன்;
மரணத்தின் வல்லமை போல்
மறுபடி உயிர்ப் பூட்டும்
அந்தக் காதல் !

********************

Poem -27

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

My own Beloved, who hast lifted me
From this drear flat of earth where I was thrown,
And, in betwixt the languid ringlets, blown
A life-breath, till the forehead hopefully
Shines out again, as all the angels see,
Before thy saving kiss! My own, my own,
Who camest to me when the world was gone,
And I who looked for only God, found thee!
I find thee; I am safe, and strong, and glad.
As one who stands in dewless asphodel
Looks backward on the tedious time he had
In the upper life,–so I, with bosom-swell,
Make witness, here, between the good and bad,
That Love, as strong as Death, retrieves as well.

**********

காதல் நாற்பது – 28

என் காதல் கடிதங்கள் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வடித்த என் கடிதங்கள்  யாவும்
மடிந்த காகிதங்கள் !
வாய் பேசாதவை,
வெளுத்துப் போனவை !  ஆயினும்
உயிருடன் உள்ளன இன்னும்,
நடுங்கிய வண்ணம் !
பதறும் எனது
கைகள் கயிற்றை அவிழ்த்துக்
கடிதங்கள்
கால்மேல் விழ விட்டன !

இந்த கடிதம் சொன்னது :
“நான் அவரது கண்கள்
காணும்படி இருக்க வேண்டுமாம்”.
ஒருநாள் குறித்து நண்பர் போல்
வசந்த காலத்தில்
வந்தென் கையைத் தொடுவதாய்
வாக்களித்தார் !
ஒரு சிறு சந்திப்பு ஆயினும்
அதற்கு ஏங்கி
அழுகை வந்தது எனக்கு !

மெல்லிய இந்தக் காகிதம்
சொல்லியது :
“கண்ணே உன்னை நேசிக்கிறேன்,” என்று
கடந்த என் வாழ்வின் மீது
கடவுளின்
எதிர்கால இடித்தாக்கல் போல்
வீழ்ந்தேன் ! குறுகினேன் !
“நான் உனக்குரியவன்,” என்று
நவிலும் அடுத்த கடிதம்.
விரைவாய்த் துடிக்கும் என் நெஞ்சில்
தேங்கிக் கிடந்து
வெளுத்து போனது எழுத்து மை !

அடுத்தொன்றில் இப்படி:
“ஓ என் காதலி !
உன் வாய்ச் சொற்கள் பயன்படா” என்று;
அப்படிச் சொல்லியது
உறுதி யாயின்
இறுதியில் துணிவோடு எதிர்ப்பேன்
மறுமுறை.

************

Poem -28

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

My letters! all dead paper, mute and white!
And yet they seem alive and quivering
Against my tremulous hands which loose the string
And let them drop down on my knee to-night,
This said,–he wished to have me in his sight
Once, as a friend: this fixed a day in spring
To come and touch my hand . . . a simple thing,
Yet I wept for it!–this, . . . the paper’s light. . .
Said, Dear, I love thee; and I sank and quailed
As if God’s future thundered on my past.
This said, I am thine–and so its ink has paled
With lying at my heart that beat too fast.
And this . . . O Love, thy words have ill availed
If, what this said, I dared repeat at last!

**********

காதல் நாற்பது – 29

எந்நேரமும் உன் நினைவு !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்னையே நினைக்கிறேன் !
மரத்தின் மீது படர்ந்து
இரட்டைக் கயிறாகப்
பின்னிடும் கானகக் கொடி போல்,
உன்னைச் சுற்றி மொட்டு விடும்
என் எண்ணங்கள் !
அகண்ட இலைகள் விரிந்து
விரைவில் கானகம்
மறையும் பச்சைப் போர்வையால் !

ஓ என் தென்னை மரமே !
எண்ணத்தைப் புரிந்து கொள்:
எனக் கரிய, உன்னத மான,
உனைத் தவிர்த்த எண்ணம்
எதுவும் எனக்கில்லை !
புதுப்பித்துக் கொள்ள
முடியும் உன் தோற்றத்தை
நொடிப் பொழுதில் !

வலுத்த மரம் ஒன்று கிளைகளைக்
குலுக்கி அடிமரம்
அமணம் ஆவது போல்,
உன்னைச் சுற்றிய
பசுமைப் பட்டை வளையமும்
படாரென விழுந்து
வெடித்துச் சிதறும் எத்திசையும் !

ஏனெனில்
நானிந்த பூரிப்பு ஆழத்தில்
காண்ப துன்னை !
காதில் கேட்ப துன்னை !
சுவாசிப்பேன் புதிய காற்றை,
உன் நிழல்
எல்லைக் குள்ளே !
அப்போது
நீ தெரிவ  தில்லை,
நெருங்கி நான் உன்னை ஒட்டி
இருப்பதால் !

************

Poem -29

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

I think of thee!–my thoughts do twine and bud
About thee, as wild vines, about a tree,
Put out broad leaves, and soon there’s nought to see
Except the straggling green which hides the wood.
Yet, O my palm-tree, be it understood

I will not have my thoughts instead of thee
Who art dearer, better! rather, instantly
Renew thy presence. As a strong tree should,
Rustle thy boughs and set thy trunk all bare,
And let these bands of greenery which insphere thee
Drop heavily down,–burst, shattered, everywhere!
Because, in this deep joy to see and hear thee
And breathe within thy shadow a new air,
I do not think of thee–I am too near thee.

**********

காதல் நாற்பது – 30

அந்த ஒளி மீளுமா ?

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சிந்துமென் கண்ணீர்த் துளிகள் ஊடே
உந்தன் வடிவம் தெரிகிறது
இந்த இரவில் ! ஆயினும்
இன்று நீ
புன்னகை புரிவதைக் கண்டேன் !
எப்படிக் குறிப்பிடுவேன் காரணத்தை ?

இனிய காதலனே !
நீயா அல்லது நானா
யாரென்னை நோகச் செய்வது ?
பரிவோடு அளிக்கும் பூரிப்பு வழிபாட்டில்
பலிபீடத்தின் முன்னே
உதவிப் பாதிரி மந்திரம்
ஓதும் போது
மட்டமாகத் தெரிந்திடலாம்
மடத்தனமாய் !
குழுவினர் ‘ஆமென்’ எனச் சொல்லி
முடிப்பதைச்
செவியில் கேளாத பாதிரி போல் நீ
தலைமறைவாய் இருந்ததால்,
குழம்பி
உறுதி யில்லாத
உன் சபதக் குரல் கேட்டது !

இனிய காதலனே !
என்னை நீ நேசிக்கி றாயா ?
இல்லை யெனில்
நான் கண்ட கனவு மகத்துவ மெல்லாம்
காண்பேனா நான் இனிமேல் ?
என் ஆத்ம விழிகளுக்கு
வேட்கை ஒளியால்
எனது வாழ்வின் குறிக்கோள்
விரிவாகும் சமயம் மயங்கி
விழுவேனா நான் ?

இந்த கண்ணீர் துளிகள் மெய்யாக
வெந்நீராய் விழுந்திடும்
தருணத்தில் அந்த ஒளி
வருமா மீண்டும் ?

************

Poem -30

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

I see thine image through my tears to-night,
And yet to-day I saw thee smiling. How
Refer the cause?–Beloved, is it thou
Or I, who makes me sad? The acolyte
Amid the chanted joy and thankful rite
May so fall flat, with pale insensate brow
On the altar-stair. I hear thy voice and vow,
Perplexed, uncertain, since thou art out of sight,
As he, in his swooning ears, the choir’s amen.
Beloved, dost thou love? or did I see all
The glory as I dreamed, and fainted when
Too vehement light dilated my ideal,
For my soul’s eyes ? Will that light come again,
As now these tears come–falling hot and real?

**********

காதல் நாற்பது – 31

என்னை நெருங்கி நில் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வருகிறாய் நீ ! வருகை அறிவிப்பு
வார்த்தை எதுவு மின்றி !
உன் பார் வைக்குத் தெரியும்படி
உட்கார்ந் துள்ளேன்,
சின்னஞ் சிறுவர் புரிவது போல்,
பொய்க் குறும்போடும்,
உள்ளொளியில்
பூரிக்கும் கண்ணி மைகளில்
பகற் பொழுதில் காணும்
ஆத்மத் துடிப் போடும் !

ஐயத்தில் முன்பு நான் கூறியது
தவறாகத் தெரியுது பார் !
ஒன்றாக நாமிருவரும் நம்மவர்
முன்னிலையில்
நிற்கும் பொழுது
பாதிரியார்
திருமணத்தை நடத்தாத
அந்த தருணத்தைத் தவிர, வேறு
எந்த மகாப் பாபத்தையும்
நொந்திடேன் !

அருகில் வா அன்பனே ! என்னை
நெருங்கி நில் !
புறாவைப் போன்றது உன்னுதவி.
உன் இதயத்துடன் சேர்வதில்
என் அச்சம் மிகுந்திடும் போது
உந்தன் தெய்வீகக் தகுதிகளைச்
சிந்திப்பேன் ஆழ்ந்து !

கொந்தளிக்கும்
இந்தச் சிந்தனை யாவும் நீங்கி விடும்
அனுபவ மிலாப் பறைவைகள்
பாலை வனம்விட்டு மேல்நோக்கிப்
பறப்பது போல் !

************

Poem -31

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Thou comest! all is said without a word.
I sit beneath thy looks, as children do
In the noon-sun, with souls that tremble through
Their happy eyelids from an unaverred
Yet prodigal inward joy. Behold, I erred
In that last doubt! and yet I cannot rue
The sin most, but the occasion–that we two
Should for a moment stand unministered
By a mutual presence. Ah, keep near and close,
Thou dovelike help! and, when my fears would rise,
With thy broad heart serenely interpose:
Brood down with thy divine sufficiencies
These thoughts which tremble when bereft of those,
Like callow birds left desert to the skies.

**********

காதல் நாற்பது – 32

நேசிப்பதாய் உறுதி அளித்தாய்

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

நேசிப்பதாய் நீ எனக்கு

உறுதி சொல்லிச் சூரியன்

முதல் நாள்

உதய மான போது

நிலவின் வருகைக்கு நான்

காத்திருந்தேன் !

சீக்கிரம் உறுவு பூண்டு

நிரந்தரம்

ஆக்கவரும் பந்தங்களை எல்லாம்

நீக்க வேண்டும் !

துரிதமாய்க் காதல் புரியும்

இதயங்கள்

வெறுப்பைக் காட்டும் விரைவில் !

அவ்வித மனிதக் காதலை

விரும்பிலேன்

என் நலத்தைக் கருதி !

இசைப் பண் முரணாக

எழும்பும்

தேய்ந்த வயோலின் நான் !

சிறந்த பாடகர்  அதன் மீது

சினம் கொள்வார்,

தனது பாடல் நாசமாகு மென்று !

அவசரமாய் ஆக்கும்

தாளம்

தப்பிய சுதிப் பாடல்

தள்ளப்படும் கீழே !

எனது தவறெனத் தோன்றாது

உனக்குத்தான்

ஒரு தவறிழைத்தேன் !

முறிந்த பண்ணிசைக் கருவியிலும்

முழுமை யான கானம்

எழுப்பும்

வல்லவர் கரங்கள் !

மேலும்

உன்னத ஆத்மாக்கள்

பேராவலோ டதைப் புரிந்திடலாம்

ஓரடியிலே !

************

Poem -32

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

The first time that the sun rose on thine oath

To love me, I looked forward to the moon

To slacken all those bonds which seemed too soon

And quickly tied to make a lasting troth.

Quick-loving hearts, I thought, may quickly loathe;

And, looking on myself, I seemed not one

For such man’s love!–more like an out-of-tune

Worn viol, a good singer would be wroth

To spoil his song with, and which, snatched in haste,

Is laid down at the first ill-sounding note.

I did not wrong myself so, but I placed

A wrong on thee. For perfect strains may float

‘Neath master-hands, from instruments defaced,–

And great souls, at one stroke, may do and dote.

+++++++++++++

காதல் நாற்பது – 33

செல்லப் பெயரில் அழைப்பாய்

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

என்னை அழைத்திடு, என் நாயின்

செல்லப் பெயரில் !

சின்னஞ் சிறு பிள்ளையாய்

ஒன்றும் அறியாமல் விளையாடும் போது

அழைத்தால் ஓடி வரும்

அந்தப் பெயர்

எனது செவிதனில் விழட்டும் !

செவ்வந்திப் பூக்கள்

என்னிதயம் கவர்ந்தவர் முகத்தின்

விழியோரப் பார்வையை

முன்னோக்கும் !

தெளிவான தேவ கானமாய்த்

தெரியாமல்

ஈர்த்திடும் அவ்வாய்ச் சொற்களில்

எனக்கினி அழைப்பு

இல்லாததை உணர்கிறேன்.

கடவுளை நான் வேண்டும் போது

சுமைதாங்கி மேல் நிற்கும்

சவப்பெட்டியில்

அமைதி நிலவுது !

மரித்துப் போனவள்

உடமைக்கு

உரிமை அளிக்கட்டும் உன் வாக்கு.

வடபுறத்துப் பூக்களைச்

திரட்டி வந்து

தென்புறத்தை நிரப்பு !

இளம் பருவத்தில் எழும் காதலை

மேற்கொண்டு

முதுமையிலும் தொடரட்டும்

ஆம் ! அந்தச் செல்லப் பெயராலே

அழைத்திடு என்னை !

குழந்தை மனத்துடன் மெய்யாகப்

பதில் உரைப்பேன் நான்

காத்திராமல் !

************

Poem -33

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Yes, call me by my pet-name! let me hear

The name I used to run at, when a child,

From innocent play, and leave the cow-slips piled,

To glance up in some face that proved me dear

With the look of its eyes. I miss the clear

Fond voices which, being drawn and reconciled

Into the music of Heaven’s undefiled,

Call me no longer. Silence on the bier,

While I call God–call God!–So let thy mouth

Be heir to those who are now exanimate.

Gather the north flowers to complete the south,

And catch the early love up in the late.

Yes, call me by that name,–and I, in truth,

With the same heart, will answer and not wait.

**********

காதல் நாற்பது – 34

உன்னை நாடும் என்னிதயம்

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

அதே குழந்தை உளத்துடன் பதில் உனக்கு

அளிப்பதாய்ச் சொன்னேன்,

பிறரைப் போல் நீயும் என்

பேர் சொல்லி அழைப்பதால் !

வீணான வாக்குறுதி அது !

அதுவே தான் !

வாழ்க்கைச் சூழ்நிலையால் கொந்தளித்துக்

குழப்பம் அடைவதா ?

முன்பு நீ என்னைக்

காண வரும் போது பதறி

நானோடி வந்ததும்

புன்சிரிப்போடு

பூக்களை உடனே நழுவ விட்டதும்,

விளையாட்டில்

கலந்திடாமல் சட்டென விட்டு

விலகியதும்

உனக்குச் சொன்னேன் !

பின்பு நாடக முடிவில் தணிந்து போய்

என் போக்கிலே போனேன் !

இப்போது நான்

அப்படிப் பதில் கூற நேர்ந்தால்

மரண எண்ணத்தை அறவே

துறப்பேன் !

தனிமைத் தவிப்பி லிருந்து

நான் விடுபடுவேன் !

ஆயினும் இன்னும்

உன்னைத்தான் நாடிச் செல்லும்

என்னிதயம் !

ஏனெனச் சிந்திப்பாய் !

நல்வினை ஒன்று மட்டுமின்றி எனது

எல்லா

நல்வினை களையும் எண்ணிப்பார் !

உன் கை ஆசி வழங்கட்டும்

என் உன்னத பணிக்கு !

குருதி போல் எந்தக்

குழந்தை காலும் விரையாமல்

உலவ விடு !

************

Poem -34

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

 

With the same heart, I said, I’ll answer thee

As those, when thou shalt call me by my name–

Lo, the vain promise! is the same, the same,

Perplexed and ruffled by life’s strategy?

When called before, I told how hastily

I dropped my flowers or brake off from a game,

To run and answer with the smile that came

At play last moment, and went on with me

Through my obedience. When I answer now,

I drop a grave thought, break from solitude;

Yet still my heart goes to thee–ponder how–

Not as to a single good, but all my good–

Lay thy hand on it, best one, and allow

That no child’s foot could run fast as this blood.

**********

காதல் நாற்பது – 35

வேதனையே காதல்

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னுடைமை அனைத்தும் நானுனக்கு

அன்புடன் அளித்தால்

அதற்கு மாற்றாக நீ

எனக்கு உரிமையாய் ஆவாயா ?

தினம் ஒவ்வொருவர் முத்தமுடன்

இல்வாழ்வு ஆசியோடு

விந்தையாக எண்ணப் படாது

சொந்த மாவதை

இழக்காமல் இருப்பேனா ?

விழித்துப் புத்தரங்கை மேல்நோக்க

வேறொரு வீட்டின்

புதிய சுவர்களும், வெளி முற்றமும்

எதிர்ப்படும்,

என் இல்லம் தாண்டி !

நிகழும் மாறுதலைக் காணாது

மூடிய கண்களுடன்

தேடி நிரப்பினோர்,

இடத்தை நான் நிரப்ப நீ

விடுவாயா ?

கடின மானது அது !

காதலைப் பற்றிக் கொள்ள

முயன்றால்

சோகத்தை முறிப்பது

கூடுகிறது !

எல்லாம் எனக்கு நிரூபிப்பது :

வேதனை மெய்யாய்க்

காதலென்று;

சோகம் நிழலாய்த் தொடரும்.

அந்தோ

துக்கத்தில் உழன்றவள் நான்,

ஆதலால்

காதலிக்கக் கடின மானவள் !

ஆயினும் நீ

நேசிக்கிறாய் அல்லவா

என்னை ?

நெஞ்சை அகலத் திறந்து

அணைத்துக் கொள்

நனைந்த இறக்கை யுள்ள

உனது புறாவை !

************

Poem -35

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

If I leave all for thee, wilt thou exchange

And be all to me? Shall I never miss

Home-talk and blessing and the common kiss

That comes to each in turn, nor count it strange,

When I look up, to drop on a new range

Of walls and floors, another home than this?

Nay, wilt thou fill that place by me which is

Filled by dead eyes too tender to know change?

That’s hardest. If to conquer love, has tried,

To conquer grief, tries more, as all things prove;

For grief indeed is love and grief beside.

Alas, I have grieved sol am hard to love.

Yet love me–wilt thou? Open thine heart wide,

And fold within the wet wings of thy dove.

**********

காதல் நாற்பது – 36

காதல் பளிங்கு மாளிகை

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உன்னை நான் முதன்முறை

சந்தித்து

காதலித்த போது,

அச்சம்ப வத்தின் மீது நான்

எழுப்ப வில்லை

பளிங்கு மனக் கோட்டை !

நிலைத்து விடுமா

அப்படிக்

கட்டுமோர் காதல்

அடுத்தடுத்த துயருக்கு இடையே

ஊசலாடிக் கொண்டு ?

இல்லை !

புல்லரித்தது எனக்கு மாறாக,

முன் செல்லும் பாதை

நெடுவே

மின்னும் ஒவ்வொன்றையும்

நம்பாத போது !

விரலை ஊன்றிச் சாயவும்

அரண்டேன் !

முரணாக அன்றுமுதல் அமைதியில்

வலுப் பெற்றாலும்

தலைதூக்கும்

மற்றுமோர் மீளும் அச்சம்

கடவுள் விட்டபடி !

ஓ காதலே !

ஒப்பந்த உறுதி வாசகம்

ஓதாமல்

பிணைத்துக் கொண்ட கரங்கள்

பிடித்திடக் கூடாது !

ஒருவருக் கொருவர் முத்தம்

தருதல் கூடாது,

நம்மிருவருக் கிடையே

உரியதாய் ஆகாத உறவில்

உதடுகள்

குளிர்ந்து போனால் !

உறுதி வாக்கொன்றை

நிறைவேற்ற

ஊழ்வினை முன்னறிவித்த

களிப்பினைக்

காதலன் இழக்க நேர்ந்தால்

காதலே பொய்யாகும்

அப்போது !

************

Poem -36

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

When we met first and loved, I did not build

Upon the event with marble. Could it mean

To last, a love set pendulous between

Sorrow and sorrow? Nay, I rather thrilled,

Distrusting every light that seemed to gild

The onward path, and feared to overlean

A finger even. And, though I have grown serene

And strong since then, I think that God has willed

A still renewable fear . . .O love, O troth

Lest these enclasped hands should never hold,

This mutual kiss drop down between us both

As an unowned thing, once the lips being cold.

And Love, be false! if he, to keep one oath,

Must lose one joy, by his life’s star foretold,

**********

 

காதல் நாற்பது – 37

என் ஐயமும் அச்சமும்

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

மன்னிப்பாய் அந்தோ ! மன்னிப்பாய் !

எல்லா வற்றுக்கும்

உன்னத தெய்வீகச் சக்தியில்

என் ஆத்மா

உனக்காகவும், உரிமையாகவும்

உண்டாக்க வேண்டும்

ஒரு தோற்றத்தை,

மாறுவதும் சரிவதுமான

மணல் வடிவத்தில் !

நீண்ட காலத்திய

நின் விடுதலை வாழ்வு

நீங்கும்

பின்நோக்கி அடியோடு !

மூழ்கி நீந்தும் என் மூளை

அழுத்தமாய்

ஐயத்திலும், அச்சத்திலும் தள்ளப்பட்டு

தூயதாய்

ஒருமைப்பாடு கொண்ட

உனது

தோற்றத்தைப் புறக்கணிக்கும் !

ஏற்றுக் கொள்ளத் தகுந்த

காதலையும்

ஏற்கக் கூடாத

களவு நட்பாய்த் திரித்து விடும் !

கடவுளை நம்பாதவன்

கப்பல் கவிழ்ந்து

காப்புடன் துறைமுகத்தில்

தப்புவதைப் போலாகும் !

மெச்சத் தகுந்த

அவரது கடல் குலதெய்வம்

செதுக்கிய

மூக்கிலாக் கடல்மீனை

ஆலய வாசற் குள்ளே

வாலாட்ட முடன்

வடிக்க வேண்டும்

வெடிமூச்சு

விடுவது போல் !

************

Poem -37

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Pardon, oh, pardon, that my soul should make,

Of all that strong divineness which I know

For thine and thee, an image only so

Formed of the sand, and fit to shift and break.

It is that distant years which did not take

Thy sovranty, recoiling with a blow,

Have forced my swimming brain to undergo

Their doubt and dread, and blindly to forsake

The purity of likeness and distort

Thy worthiest love to a worthless counterfeit:

As if a shipwrecked Pagan, safe in port,

His guardian sea-god to commemorate,

Should set a sculptured porpoise, gills a-snort

And vibrant tail, within the temple-gate.

**********

காதல் நாற்பது – 38

முதலில் தந்த முத்தங்கள்

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

முதன்முறை அவர் முத்தமிட்டது

எழுதிச் செல்லும்

இந்தக் கை விரல்களை

மட்டுமே !

அதன்பின் மிக்கத் தூய்மை யாகி

வெண்மை ஆனது

அந்தக் கரம் !

மெதுவாய் வரவேற்பேன்

பிறரது வாழ்த்துகளை.

தேவதையர் அசரீரி எழும்போது

“ஆதரிப்பு நிரலில்”

எழுதி வைப்பேன் உடனே !

முதல் முத்தத்தைக் காட்டிலும்

பளிச்செனத் தெரியும்

மோதிர மொன்றை

இங்கு நான் அணிய முடியாது

பழுப்பு நிறக் கற்களில் !

இரண்டாம் முத்தமிட வந்தது

எனது நெற்றியில்,

தவறிப் போய்

பாதி நெற்றியில் விழாமல்

பாதிக் கூந்தலில் பட்டது !

அத்தகைய பரிசுக்கும் அப்பாற் பட்டது

காதலின் புனிதம் !

அதுவே

காதலுக் குரிய கிரீடம் !

புனிதச் சுவையோடு அளித்த

மூன்றாவது முத்தம் என்

மூடிய உதட்டிலே !

முழுமை யாகப் பதிந்தது அது

பழுப்பு நிறத்தில் !

அந்த நாள் முதல் கூறினேன்

பெருமித மோடு

“என் காதல் அது !

எனக்கே உரியது அது !”

************

Poem -38

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

First time he kissed me, he but only kissed

The fingers of this hand wherewith I write;

And ever since, it grew more clean and white,

Slow to world-greetings, quick with its “Oh, list,”

When the angels speak. A ring of amethyst

I could not wear here, plainer to my sight,

Than that first kiss. The second passed in height

The first, and sought the forehead, and half missed,

Half falling on the hair. O beyond meed!

That was the chrism of love, which love’s own crown,

With sanctifying sweetness, did precede.

The third upon my lips was folded down

In perfect, purple state; since when, indeed,

I have been proud and said, “My love, my own.”

**********

காதல் நாற்பது – 39

சொல்லிக் கொடு இனியவனே !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பல்லாண்டு காலம்

கடிவாளச் சங்கிலியால் வெளுத்

தடிக்கப் பட்டேன் !

என் முகமூடிக் குள்ளே ஊடுருவிப்

பின்புலத்தை நோக்க

உனக்கு ஆற்றல் உள்ளதால்,

உன் இனிய கனிவு

நளினத்தால் காண்பாய்

நீ என் ஆத்மாவின்

நிஜ முகத்தை ! அது

வாழ்வுப் பந்தயத்தில்

மங்கித் தளர்ந்த சாட்சிதான்

எந்தன் முகம் !

சோம்பித் திசை மாறாத

ஆத்மாவை நீ

உள் நோக்க

உறுதியும், காதலும் உள்ளது,

உனக்கு !

பொறுமைத் தேவதை காத்திருப்பாள்

புதிய சொர்க்கத்தில்

இடந்தேடி !

ஏனெனில்

பாபத்தில் வீழாமல்,

சோகத்தில் மூழ்காமல்,

இறைவனின் நிர்ப்பந்தம் யில்லாமல்,

மரணம் பக்கத்தில் நிற்காது,

தென்படுவை எல்லாம்

நீங்கிச் செல்கையில்,

என்னைத் தளரச் செய்யாதவை

எதுவும் வெறுப் பூட்டாது

உனக்கு !

நன்றி பொழிந்திட,

நல்லதைச் செய்பவன் நீ

எல்லோரைக் காட்டிலும் !

எனக்கு நீ

சொல்லிக் கொடுப்பாய்

இனியவனே !

அந்த யுக்தியை.

************

Poem -39

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

Because thou hast the power and own’st the grace

To look through and behind this mask of me

(Against which years have beat thus blanchingly

With their rains), and behold my soul’s true face,

The dim and weary witness of life’s race,

Because thou hast the faith and love to see,

Through that same soul’s distracting lethargy,

The patient angel waiting for a place

In the new Heavens,–because nor sin nor woe,

Nor God’s infliction, nor death’s neighbourhood,

Nor all which others viewing, turn to go,

Nor all which makes me tired of all, self-viewed,–

Nothing repels thee, . . . dearest, teach me so

To pour out gratitude, as thou dost good!

+++++++++++++

காதல் நாற்பது – 40

நோயைப் பொருட்படுத்தவில்லை !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நம் உலகெங்கும் காதலிக்கிறார்

என்பது நாம் அறிந்ததே !

உறுதியான காதலைப்

புறக்கணிப்ப தில்லை நான் !

இளவயதிலேயே

காதலைத் தெரிந்து கொண்டேன்

அப்போதிருந்தே

பூக்களைச் சேமித்தேன்,

சமீபக் காலம் வரை !

இன்னும் பூமணத்தை நுகர்கிறேன் !

புன்னகைக்குக் கூட

கைக்குட்டையை

வீசி எறிகிறார் வழிப்போக்கர் !

அழுதாலும் எனக்கு அனுதாபப்பட

ஒருவரு மில்லை !

ஒற்றைக்கண்

கிரேக்க அரக்கனின் வெண்பல் கூட

நழுவிச் செல்லும்,

அடிக்கடிப் பெய்யும்

மழையில்

மழுங்கிய கொட்டையை

விழுங்கும் போது !

எதுவும் மறக்கச் செய்யாது,

ஒதுக்கித் தள்ளாது

காதல் என்பதை !

என்னினிய அன்பனே !

அத்தகைய காதல னில்லை நீ !

நோயில் நோகும் எனக்குக்

காத்திராமல்

ஆத்மாக்கள் தழுவிக் கொள்ளச்

சீக்கிரம் சிந்தனை செய்,

மற்றவர்

காலம் கடந்த விட்டதென்று

ஓலமிடும் போது !

************

Poem -40

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

Oh, yes! they love through all this world of ours!

I will not gainsay love, called love forsooth.

I have heard love talked in my early youth,

And since, not so long back but that the flowers

Then gathered, smell still. Mussulmans and Giaours

Throw kerchiefs at a smile, and have no ruth

For any weeping. Polypheme’s white tooth

Slips on the nut if, after frequent showers,

The shell is over-smooth,–and not so much

Will turn the thing called love, aside to hate

Or else to oblivion. But thou art not such

A lover, my Beloved! thou canst wait

Through sorrow and sickness, to bring souls to touch,

And think it soon when others cry “Too late.”

 

+++++++++++++++++

காதல் நாற்பது – 41

நன்றி கூறுவேன் நேசித்ததற்கு

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எனை இதயத்திலே நேசித்த

அனைவருக்கும்

நன்றி நவில்கிறேன்  !

பதிலுக்கு அவரை நேசிப்பேன்

நன்றியுடன்.

அங்காடி வீதிகளுக்கோ

அல்லது

ஆலயத்துக்கோ செல்லும் முன்பு,

சிறைச் சுவர்க்கருகில்

சிறிது நேரம் நின்று,

உரத்த குரலில் நான் பாடும்

இன்னிசைக் கேட்கத்

தமது கடமைகளை மறந்து

தங்கி நிற்போருக்கு

ஆழ்ந்த நன்றி !

பெருமூச்சு விடும் போது

என் குரல்

ஏற்ற இறக்கத்தில்

தெய்வீகக் கலை எழுப்பும் உன்

சொந்தக் கருவி

கைத்தவறி வீழுமுன் காலடியில்,

கண்ணீருடன் நான்

சொன்னதைக் கேட்கும் !

அதற்கு நன்றி கூற

எனக்குச் சொல்லிக் கொடு

எப்படி உரைப்பதென !

எதிர்கால நீண்ட இல்வாழ்வுக்கு

என் ஆத்மா உணர்த்தும்

முழுப் பொருள் மீது குறிவைத்தடி !

நழுவிப் போகும்

இந்த வாழ்க்கையில்

பொறுத்தி ருக்கும் காதலரைப்

பாராட்ட வேண்டும்

வரவேற்புடன் !

************

Poem -41

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

 

I thank all who have loved me in their hearts,

With thanks and love from mine. Deep thanks to all

Who paused a little near the prison-wall

To hear my music in its louder parts

Ere they went onward, each one to the mart’s

Or temple’s occupation, beyond call.

But thou, who, in my voice’s sink and fall,

When the sob took it, thy divinest Art’s

Own instrument didst drop down at thy foot

To hearken what I said between my tears,–

Instruct me how to thank thee! Oh, to shoot

My soul’s full meaning into future years,

That they should lend it utterance, and salute

Love that endures, from Life that disappears!

 

 

**********

காதல் நாற்பது – 42

என் எதிர்காலத்தை எழுது

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சென்ற காலத்தைப் பிரதி எடுக்காது

என் எதிர்காலம்,”

என்றோர் சமயம் எழுதினேன் !

என்னருகில் அமர்ந்து

வழிநடத்தும்

வாழ்க்கைத் தேவதை

முகக்கனிவுடன் நோக்கி அந்த

தகவலை

நியாயப் படுத்தும்

இறைவன் வெண்பீடத்து முன் !

முடிவில்

திரும்பிப் பார்த்தால்

இருந்தது நீ

தேவதைக்குப் பின்

ஆத்மப் பிணைப்போடு !

இயல்பான நோய்களிடையே

நீண்ட காலம் நான்

முயலும் போது

நின் ஆறுதல் கிடைத்தது

விரைவாக !

உன் பார்வை நிழலில்

மொட்டாக இருந்த போதென்

பயணத் துணைவர்

பச்சை இலைகளைத் தந்தார்,

காலைப் பனி முத்துக்கள்

மிதந்திட !

முதற்பாதி வாழ்க்கைப் பிரதி

எதற்கினி இப்போது ?

ஒதுக்கிடுவாய்

வளைந்து எனை வதைக்கும்

நெடிய பக்கங்களை !

எதிர்கால என் சரிதையைப்

புதிதாக எழுது,

புவியிலே

எதிர்பார்க்க முடியாத என்

புதிய தேவதையே !

************

Poem -42

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

“My future will not copy fair my past”–

I wrote that once; and thinking at my side

My ministering life-angel justified

The word by his appealing look upcast

To the white throne of God, I turned at last,

And there, instead, saw thee, not unallied

To angels in thy soul! Then I, long tried

By natural ills, received the comfort fast,

While budding, at thy sight, my pilgrim’s staff

Gave out green leaves with morning dews impearled.

I seek no copy now of life’s first half:

Leave here the pages with long musing curled,

And write me new my future’s epigraph,

New angel mine, unhoped for in the world !

*********

காதல் நாற்பது (43)

எப்படி நேசிப்பது உன்னை ?


மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எப்படி நேசிப்பது உன்னை ?

எண்ண வேண்டும் நான்

எத்தனை வழிகள் உள்ளன வென்று !

என் காதல் ஆழமானது !

அகல்வது ! நீள்வது !

உணர்ச்சி மறையும் போது

பூரண நளினத்தில்

எட்டித் தொடும் என் ஆத்மா.

உயிரின முடிவாய் !

பரிதி, மெழுகுவர்த்தி ஒளிபோல்

அவசியம் தேவை

அனுதினம் காதல் எனக்கு !

மனத் தடங்கல் ஏது மின்றி

நேசிப்பேன் உன்னை,

தூய மனதுடன்

மானிட உரிமைத் தேடலாய் !

புகழ்ச்சியைத் திரும்பிப் பாரார் மாந்தர் !

முந்தையத் துக்கங்க ளிடையே

சாதிப்பாகக்

காதலிப்பேன் உன்னை

இச்சை மிகுந்து,

இளம் பருவத்து உறுதியுடன் !

புனித மதக்குரு விடம்

எனக்கிருந்த அன்பெல்லாம் நழுவி

உனை நேசிப்பேன் !

வெளிவிடும் எனது மூச்சும்

நளினப் புன்முறுவலும்

கண்ணீர்த் துளிகளும்

காட்டிவிடும் என் காதலை !

வாழ்வு பூராவும் நேசிப்பேன்.

முடிவிலே

கடவுளின் விதி அதுவாயின்,

காதல் மட்டும்

நிலைத்திருக்கும் உன்மேல்

சாதலுக்குப் பிறகும் !

********************

Poem -43

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

How do I love thee? Let me count the ways.

I love thee to the depth and breadth and height

My soul can reach, when feeling out of sight

For the ends of Being and ideal Grace.

I love thee to the level of everyday’s

Most quiet need, by sun and candle-light.

I love thee freely, as men strive for Right;

I love thee purely, as they turn from Praise.

I love thee with the passion put to use

In my old griefs, and with my childhood’s faith.

I love thee with a love I seemed to lose

With my lost saints,–I love thee with the breath,

Smiles, tears, of all my life!–and, if God choose,

I shall but love thee better after death.

*********************

காதல் நாற்பது (44)

உன் ஆத்மவேர் என்னுள்ளே !
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எனதினிய நேசனே ! பல்வேறு பூக்களைக்

கொணர்ந்தாய் எனக்காக

வேனிற் காலம் முழுவதிலும்

குளிர் காலத்திலும்

பூங்காவில் பறித்து !

சூரிய ஒளிச் சேர்க்கை இழக்காது

நீரும் தெளிக்காது

மூடிய இந்த அறையில்

முளைத்தவை போல் தோன்றின !

நமது காதலைச் சார்ந்து

கோடையிலும், குளிர் காலத்திலும்

அடித்தள நெஞ்சிலே

மடிந்துபோன அந்த

எண்ணங்களைத் திரும்பிப் பார் !

உண்மையாக

மலர் மொட்டிலும், மரக் கொப்பிலும்

வெறுத்திடும் களைகள்

பசுமை படர்ந்து நீ

களையெடுக்கக் காத்துள்ளன !

ஆயினும்

ஈதோ இனிய காட்டு ரோஜா !

ஈதோ ஐவி இலை !

ஏற்றுக் கொள் !

எனக்குத் தரும் உனது மலர்களைத்

துக்கத்துக்கு இடாது

வைத்திருப்பேன் நான்

பத்திரமாய் !

நின் விழிகளுக்குப் பணித்திடு

நிறங்கள் உண்மையாய்

நிலைத்திருக்க !

உன் ஆத்மாவுக்குச் சொல்லிடு,

அவற்றின் வேர்கள்

என்னுள்ளே விடப்பட்டுள்ளன

வென்று !

 

********************

 

Poem -44

Sonnets from the Portuguese

By: Elizabeth Browning

 

Beloved, thou hast brought me many flowers

Plucked in the garden, all the summer through

And winter, and it seemed as if they grew

In this close room, nor missed the sun and showers.

So, in the like name of that love of ours,

Take back these thoughts which here unfolded too,

And which on warm and cold days I withdrew

From my heart’s ground. Indeed, those beds and bowers

Be overgrown with bitter weeds and rue,

And wait thy weeding; yet here’s eglantine,

Here’s ivy!–take them, as I used to do

Thy flowers, and keep them where they shall not pine.

Instruct thine eyes to keep their colours true,

And tell thy soul, their roots are left in mine.

*********************

தகவல் :

1. Sonnets from the Portuguese By: Elizabeth Barrett Browning (1967)

2. The Selected Poetry of Browning (1966)

3. The Works of Robert Browning By: The Wordsworth Lobrary (1994)

4. Robert Browning Selected Works By: Johanna Brownell (2002)

5. Elizabeth Barrett Browning’s Biography

6.  http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

**************

jayabarathans@gmail.com [S. Jayabarathan]   [July 1, 2015] R-3

1 thought on “காதல் நாற்பது

  1. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.