சி. ஜெயபாரதன், கனடா
பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா எழில்மேனி அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு!
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராம
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை அரங்கேறி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் !
மேலும் மரிப்பார் ! மரிப்பார்!
நாடு நகரம்
வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கடத்தப் பட்டார் வேறூர்,
கைப்பையுடன்
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
இரண்டாம்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம்!
+++++++++++++++++++
++++++++++++
[செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]
[S. Jayabarathan (August 6, 2017)] [R-2]
i want information about this topic
மதிப்பிற்குறிய ஐயா,
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
முதல்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம்..
தங்களின் யாப்பு, மனத்தை மிகவும் கனக்க வைக்கிறது! மீண்டும் இவ்வாறு தவறுகள் நடவாமலிருக்க இறை அருள் புரிக!
பெ.தக்ஷிணாமூர்த்தி.
You completed various good points there. I did a search on the issue and found the majority of people will have the same opinion with your blog.
Hey! I’m at work browsing your blog from my new apple iphone! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Keep up the fantastic work!
I do not like atomic bomb because its working against to our world
மனிதனே மனிதனை அடித்து கொல்லும் உலகில். மனிதனுக்கு வேலை பளுவை குறைக்க ஒரு ஆயுதம் …
An neat post right there mate . Thanks for submitting .
Nerai Mathi
இலக்கிய ஆர்வலருக்கு வணக்கம்.தங்களின் செர்நோபில் விபத்து பற்றிய கவிதை வாசித்தேன்.விதை ,வேர் ,விழுது என குறீயீட்டு உத்தியுடன் (ஒரு சொல்லுக்கு பதிலாக வேறு சொல், பல சொற்களுக்குப் பதிலாக ஒரு சொல் ,நேரிடையாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லுதல் )உணர்வோட்டத்தோடு வடிக்கப்பட்ட ஒப்பற்ற கவிதை.
முனைவர். ச.சந்திரா
பாராட்டுக்கு நன்றி முனைவர் சந்திரா அவர்களே.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
This site seems to get a large ammount of visitors. How do you get traffic to it? It gives a nice unique twist on things. I guess having something authentic or substantial to give info on is the most important thing.
தங்கள் வலைத்தளத்தை இப்போது தான் பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது. இதை எப்படி follow செய்வது. அல்லது தங்கள் படைப்புகளை எனக்கு மின்னஞ்சல் செய்யவும் நன்றி
jayabarathan.wordpress.com/ எனது வலைப் படிவு