தமிழில் முழுமையான முதல் அணுசக்தி நூல்

தமிழில் முழுமையான முதல் அணுசக்தி நூல்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அன்புள்ள நண்பர்களே,

“அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம்  வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த 41 கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் எனது முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது.

“யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb]. பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும்.

உலகெங்கும் முப்பத்து  மூன்று நாடுகளில் தற்போது நானூறுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பழைய அணுமின் நிலையங்கள் நிறுத்தமாகி, புதியவை கட்டப்பட்டு வருகின்றன பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்கக் கூடிய, ஆனால் முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத்திலும், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகளிலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.

அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டு கிறது. சென்ற நூற்றாண்டு முதல் [1900 -2006] அறுபது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானி களைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை இந்தியாவில் டாக்டர் ஹோமி பாபா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் சாராபாய், சேத்னா அனைவரைப் பற்றியும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகர மான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன. கதிரியக்கம், கதிரியக்க பாதுகாப்பு, அணுக்கழிவு சுத்தீகரிப்பு, நீண்ட காலப் புதைப்பு பற்றியும் விபரங்களும் உள்ளன.

நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் [2002- 2006] தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை.காம் அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது ஆழ்ந்த பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.  நூலுக்கு அணிந்துரை எழுதிய முனைவர் ப. ஐயம்பெருமாள், [இயக்குநர் தமிழ்நாடு விஞ்ஞானத் தொழில்நுட்ப மையம், சென்னை -25,] நண்பர் திரு கி.வ. வண்ணன் [அணுவியல் துறை சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையக் கட்ட மைப்பு & டிசைன் சீனியர் எஞ்சினியர்]  இருவருக் கும் எனது கனிவான நன்றி. 

என்னைப் பற்றி :

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

அணுசக்தி நூல் விலை : ரூ 270
(415 பக்கங்கள்)

நூல் கிடைக்குமிடம்
தமிழினி பதிப்பகம்
63. பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை: 600014, தமிழ் நாடு
இந்தியா

  ************************

தமிழினி பதிப்பகம் அதிபர் வசந்த குமார்

ஈமெயில் : “vasantha kumar” tamizhininool@yahoo.co.in

செல் ஃபோன் : 98841-96552
ஆஃபீஸ் போன் : 2835-1410

நூல் வாங்க வசந்த குமாரிடம் நேராகத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

  +++++++++++++++++++

Edit

38 THOUGHTS ON “தமிழில் முழுமையான முதல் அணுசக்தி நூல்”

 1. ச.இராமசாமி on November 3, 2009 at 6:58 PM said:Edit

  தமிழ் மட்டுமே எளிதாகப்படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய எனக்கும், என்னைப் போன்றோருக்கும், தங்களின் படைப்புக்கள் பெரும் வரம்.
  அறிவியல் தமிழ்ப்பணி தொய்வின்றித் தொடரட்டும். தியாகராசன் கணேசர் M.Sc.(strathclyde);C.Chem.(Lon);FRSC (Lond)-எழுதிய அணுசக்தியின் கதை-ஹிரோஷிமா முதல் கல்பாக்கம் வரை. (1988) என்ற நூலும் நினைவுக்கு வருகின்றது.நன்றியுடன்.

 2. உங்கள் வலை பதிப்புகள் நல்ல பயன் உள்ளதாக உள்ளன, தாங்கள் தங்கள்
  படிப்பு சம்பந்தமாக வழி காட்டுதல் முறைகள் எழுத வேண்டும் என்று மிக தாழ்மயுடன்
  வேண்டுகிறன்

 3. good work. what i expect long time.

 4. பாராட்டுக்கு நன்றி நண்பர் சிவசயன்த்,

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்

 5. Dr. Ganesan Ramanathan on February 21, 2010 at 4:35 AM said:Edit

  அணுசக்தியைப் பற்றி முதல் நூல் “அணுவைப்பற்றி” என்ற தலைப்பில் 1968 ம் ஆண்டு மும்பையில் அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களால் மும்பை தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளான வெங்கட் ராஜ், நம்பி மற்றும் சிலரால் எழுதப்பட்டது.

  1996 ல் அணுசக்தி கலை மன்றத்தால் ” தேசிய மேம்பாட்டில் அணுசக்தியின் மகத்தான பங்கு” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு எனது முயற்சியால் நடத்தப்பட்டது. உங்களது நூலை படிக்க முயற்சியால் நடத்தப்பட்டது. உங்களது நூலை படிக்க ஆவலாயுள்ளேன்.

 6. வளரும் பையன் on August 8, 2010 at 6:44 PM said:Edit

  தேடலில் வாழும் என் போன்றோருக்கு இது மிகவும் பயன் உள்ளது.
  ஆங்கிலத்தில் தான் இதுவரை படித்து அரைகுறையாக விளங்கிக்கொண்டேன் . இனி இதில் உள்ள சந்தேகம் தீரும் என நினைக்கிறேன் .

  நன்றி

  நன்றி

  நன்றி

 7. saravanan on October 6, 2010 at 4:14 AM said:Edit

  thangalin anu katturai padethen enakku ennum anuvai pattreya arvum
  athikariththathu mekka nanri

 8. perfect book you secure

 9. stellar logbook you’ve enjoy

 10. This blog seems to recieve a great deal of visitors. How do you promote it? It offers a nice individual spin on things. I guess having something useful or substantial to give info on is the most important thing.

 11. I’d be inclined to cut a deal with you on this. Which is not something I usually do! I enjoy reading a post that will make people think. Also, thanks for allowing me to comment!

 12. Amazing! Your post has a bunch comment posts. How did you get all of these people to see your article I’m jealous! I’m still learning all about article writing on the net. I’m going to look around on your site to get a better idea how to achieve success. Thanks for the help!

 13. A great usefull blog – a big thanks I hope you dont mind me commenting about this post on my website I will also leave a linkback Thanks

 14. கிட்டத்தட்ட 75வது வயதிலும் அயராது எழுதி சாதனை படைப்பதோடு ஒரு முன்னுதாரணமாகவும் தமிழர் ஜெயபாரதன் ஐயா..

  மிக்க மகிழ்ச்சியும் பெருமையும்,…

  மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா..

 15. பாலா சுவாமிநாதன் on March 20, 2011 at 1:37 PM said:Edit

  நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகள்! அபாரம், இத்தனை அறிவியற் கட்டுரைகள் தமிழில் எழுதிய உங்கள் ஆக்கப் பணிக்கு என் வணக்கங்கள், ஐயா!

 16. பாராட்டுக்கு நன்றி பாலா சுவாமிநாதன்.

  ஜெயபாரதன்.

  ++++++++++++

 17. Pingback: தமிழில் முதல் அணுசக்தி நூல்Edit
 18. A truly informative post – Thank you very much I trust you do not mind me writing about this post on my website I will also leave a link back to this post Thanks

 19. A genuinely beneficial post – A big Thank You I trust you do not mind me blogging about this post on my blog I will also leave a link back to this post Thank you

 20. Great article, I’ve bookmarked this page and have a feeling I’ll be returning to it often.

 21. Way cool, some valid points! I appreciate you creating this article available, the remainder website is also done well. Have a very great day

 22. Alexa is much more of a customer reporting form of instrument, not SEO form software…many thanks for reading!

 23. Wonderful write-up, give thanks to you, I should pay a visit to yet again now!

 24. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தங்களது தமிழ்ப்பணி வாழ்க!வளர்க!!
  என் போன்ற ஓட்டுனர் பணி புரியும் கடைநிலை ஊழியரும் அணு அறிவியல் பற்றிய பல அரிய செய்திகள் அறிந்து கொள்ள தங்களைப் போன்ற மாமனிதர்களின் இது போன்ற பங்காற்றலால்தான் முடிகிறது. தங்களது பதிவுகள் தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம்..நன்றிகள் பல பல..paramesdriver.blogspot.com

 25. நண்பர் பரமேஸ்வரன்,

  வணக்கம். உங்கள் வலைத் தளத்தில் பேரழிவுப் போராயுதங்களைப் பற்றித் தமிழில் பொதுநபருக்கு விளக்கி இருக்கும் விதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எனது வலைத் தளத்தில் https://jayabarathan.wordpress.com/ அணுசக்தியைப் பற்றிப் பல கட்டுரைகள் உள்ளன. தேவையானவற்றை எடுத்தாளுங்கள்.

  பாராட்டுக்கு நன்றி.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்.

  ++++++++++++

 26. Pingback: அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன் | திண்ணைEdit
 27. http://puthu.thinnai.com/?p=23304#comment-22245

  அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு

  – சி. ஜெயபாரதன்

  அறிவிப்புகள்

 28. http://arvindneela.blogspot.in/2007/03/blog-post_22.html

  அரவிந்தன் நீலகண்டன்

  ஜெயபாரதனின் அணுசக்தி நூல்

  சிலர் வயது முதிர்ந்தும் முதிராதது போல நடித்து திரிவார்கள். ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். தம் அனுபவ முதிர்ச்சியும் பணி தந்த ஆத்ம திருப்தியும் இணைந்து அவர்களை எந்த வயதிலும் தளராது ஆக்கப்பணி செய்திட வைக்கும். அணு தொழில்நுட்ப பொறியாளர் திரு. ஜெயபாரதன் தற்போது கனடாவில் வசிக்கிறார். அவர் எழுதிய நூல் ‘அணுசக்தி’. இந்நூல் தமிழினி மூலம் வெளிவந்துள்ளது. அன்னாருக்கு வணக்கம் கலந்த பாராட்டுக்கள். இது குறித்து திரு. ஜெயபாரதன் அவர்கள் திண்ணை இதழில் எழுதியுள்ளார்கள். அதனை கீழே அளிக்கிறேன்:

  http://arvindneela.blogspot.in/2007/03/blog-post_22.html

 29. THURSDAY, MARCH 22, 2007
  posted by அரவிந்தன் நீலகண்டன் | 10:20 PM
  +++++++++++++++
  ஜெயபாரதனின் அணுசக்தி நூல்

  சிலர் வயது முதிர்ந்தும் முதிராதது போல நடித்து திரிவார்கள். ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். தம் அனுபவ முதிர்ச்சியும் பணி தந்த ஆத்ம திருப்தியும் இணைந்து அவர்களை எந்த வயதிலும் தளராது ஆக்கப்பணி செய்திட வைக்கும். அணு தொழில்நுட்ப பொறியாளர் திரு. ஜெயபாரதன் தற்போது கனடாவில் வசிக்கிறார். அவர் எழுதிய நூல் ‘அணுசக்தி’. இந்நூல் தமிழினி மூலம் வெளிவந்துள்ளது. அன்னாருக்கு வணக்கம் கலந்த பாராட்டுக்கள். இது குறித்து திரு. ஜெயபாரதம் அவர்கள் திண்ணை இதழில் எழுதியுள்ளார்கள். அதனை கீழே அளிக்கிறேன்:

  “யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb], பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத்திலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.

  அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுக்கருப் பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.

  நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன், கனடா

  இந்நூலின் ஒரே குறை அதன் விலையாகத்தான் இருக்கும். ஆனால் நம் தமிழ் இளைஞர்களுக்கு இந்த நூல் போய் சேர வேண்டியது அவசியம். எனவே வசதியும் மனமும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் தங்கள் ஊர்ப்புற நூலகங்களுக்கு இந்த நூலை அளிக்க வேணும். சி. ஜெயபாரதன் தந்தையார் நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர். ஜெயபாரதன் அவர்கள் அறிவியல் எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த தேசபக்தரும் கூட. சுவாமி விவேகானந்தரால் உத்வேகம் பெற்றவர். பண்டித நேருவின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். தேசியத்தின் மீதும் தாம் சரி என கருதும் நிலைப்பாட்டின் மீதும் எவ்வித சமரசமும் செய்திடாத மகத்தான மனிதர். வாழ்க அவர் பணி. ஓங்குக அது மென்மேலும்.

  சி. ஜெயபாரதன், கனடா
  அணுசக்தி நூல் விலை : ரூ 270 (450 பக்கங்கள்)
  நூல் கிடைக்குமிடம்
  தமிழினி பதிப்பகம்
  63. பீட்டர்ஸ் சாலை,
  ராயப்பேட்டை,
  சென்னை: 600014

  :
  Blogger Muse (# 5279076) said…

  மதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களது கட்டுரைகளை திண்ணையில் படித்து சிலாகித்து வந்துள்ளேன். அணுசக்தி பற்றிய ஒரு தெளிவான ஓவர்வியூவை அளிக்கின்ற கட்டுரைகள் அவை. அவை ஒரு புத்தகமாக வந்துள்ளது வரப்ரசாதம்.

  அவரது கட்டுரைகளைப் பாராட்டி இரண்டு மெயில்கள் அனுப்புவதைவிட அவரது புத்தகத்தை வாங்குவதும், பரிசளிப்பதும் சரியாக அவரை சிலாகிக்க வழிவகுக்கும். இந்த லிஸ்ட்டில் தற்போது இருக்கும் கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸுமுடன் இதுவும் சேர்ந்து கொண்டது.

  அறிவியற் தமிழ் வாழ்க. அறிஞர் வாழ்க. அவரை வியக்கும் அணுக்கர் வாழ்க.

  இந்த புத்தகத்தை ஆன் லைனில் வாங்க இயலுமா? உதாரணமாக, எனி இந்தியன்?

  அந்தத் தகவல்கள் கிடைத்தால் தன்யனாவேன்.
  12:40 AM, March 23, 2007

 30. பார்த்ததும் படித்ததும்
  Thursday, October 31, 2013
  தமிழில் முதல் அணுசக்தி நூல் – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

  அன்புள்ள நண்பர்களே,

  “அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த 41 கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் எனது முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது.

  “யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb]. பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும்.

  உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத் திலும், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகளிலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.

  அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன.

  ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.

  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன்.

  அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன்

  பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது.

  25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

  அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன.

  கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.

  எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

  எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன், கனடா
  +++++++++++++

  அணுசக்தி நூல் விலை : ரூ 270
  (415 பக்கங்கள்)
  நூல் கிடைக்குமிடம்
  தமிழினி பதிப்பகம்
  63. பீட்டர்ஸ் சாலை,
  ராயப்பேட்டை,
  சென்னை: 600014, தமிழ் நாடு
  இந்தியா
  ************************
  தமிழினி பதிப்பகம் அதிபர் வசந்த குமார்
  ஈமெயில் : “vasantha kumar” tamizhininool@yahoo.co.in
  செல் ஃபோன் : 98841-96552
  ஆஃபீஸ் போன் : 2835-1410
  நூல் வாங்க வசந்த குமாரிடம் நேராகத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
  +++++++++++++++++++
  இவரது வலைத்தளம் :

  https://jayabarathan.wordpress.com/atomic-energy-book/ [முதல் அணுசக்தி நூல்]

  “அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய் ” என்று இறைவனைச் சுட்டுகின்றார், விநாயகர் அகவலில் ஒளவையார். அணுவைப் பிளக்கமுடியும் என்று அன்றே கண்டவன் தமிழ. அண்ட சராசரங்கள் ஆயிரம் கோடி என்றவன் தமிழன். இன்று பல சூரியக் குடும்பங்கள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பற்றி தமிழில் வலைப்பூவில் எழுதிவரும் மதுரையைச் சார்ந்த பெரியவர், கனடா வாழ் அன்பர், ஜெயபாரதன்

  அணுவின் ஆற்றல் குறித்து ஆங்கிலம் உட்பட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன . ஆனால், தகுதியும் திறமையும் பெற்ற அணுவியல் அறிஞர் ஜெய பாரதன்.தமிழில் அற்புதமாக எழுதியிருக்கின்றார்,

  தென்னகக் கோயில்களில் அரூப ரூபத்தில் சிவன் எழுந்தருளியுள்ள இடம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் திருப்பெருந்துறை. இங்கு
  தீபாராதனை போன்ற சடங்குகள் கிடையாது. மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் நேரில் எழுந்தருளி ஞானம் தந்த இடம் என்கிறது புராணம்.
  இவை எல்லாம் உண்மையோ இல்லையோ இங்கிருக்கும் சிற்பங்கள் உயிர்த்துடிப்புடன் திகழ்பவை. இந்தச் சிற்பங்கள் தமிழ்நாட்டின் செல்வங்கள் இவற்றை எந்தத் திராவிடமும் அழித்துவிட இயலாது. இவற்றின் உயிர்த்துடிப்பைக் காணாத கண்கள் கண்களே அல்ல. பார்த்து ரசிக்காதவன் தமிழனும் அல்ல என்று கூறுவார்கள் பெருந்தச்சர்கள். ( ஸ்தபதிகள் )
  அதுபோன்று அறிவியலில் நாட்டமுடைய – அணுவைப்பற்றித் தெரிந்து கொள்ளவிரும்பும் ஒவ்வொரு தமிழனும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளுமளவிற்கு வெளிவந்துள்ள அணு சக்தி நூல், தமிழை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனும் அவசியம் படிக்க வேண்டியதொன்றாகும். என்று உறுதியாகக் கூறலாம்.

  கூடங்குளம் நம்மைப் படாதபாடு படுத்துகின்றது. நேற்று பெங்களூரிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் டீசல் டாங் வெடித்ததால் முற்றிலுமாக எரிந்து 45 பேர் மரணித்துள்ளனர். பத்தடி தூரத்தில் கூட மரணம் நிகழலாம் என்கிறது ஓர் சீனத்துக் கவிதை.
  அணு ஆபத்தானதுதான். ஆபத்துக்களையும் விளக்குகின்றார். ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்றும் சவால் விடுகின்றார்.கூடங்குளம் குழப்பத்திற்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும். அவசியம் படிக்க வேண்டியதொரு அறிவியல் நூல்.”அணு சக்தி “

 31. இவரது வலைத்தளம் :

  https://jayabarathan.wordpress.com/atomic-energy-book/ [முதல் அணுசக்தி நூல்]

Leave a Reply

38 thoughts on “தமிழில் முழுமையான முதல் அணுசக்தி நூல்

 1. தமிழ் மட்டுமே எளிதாகப்படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய எனக்கும், என்னைப் போன்றோருக்கும், தங்களின் படைப்புக்கள் பெரும் வரம்.
  அறிவியல் தமிழ்ப்பணி தொய்வின்றித் தொடரட்டும். தியாகராசன் கணேசர் M.Sc.(strathclyde);C.Chem.(Lon);FRSC (Lond)-எழுதிய அணுசக்தியின் கதை-ஹிரோஷிமா முதல் கல்பாக்கம் வரை. (1988) என்ற நூலும் நினைவுக்கு வருகின்றது.நன்றியுடன்.

  • பாராட்டுக்கு நன்றி நண்பர் இராமசாமி.

   அன்புடன்
   சி. ஜெயபாரதன்.

 2. உங்கள் வலை பதிப்புகள் நல்ல பயன் உள்ளதாக உள்ளன, தாங்கள் தங்கள்
  படிப்பு சம்பந்தமாக வழி காட்டுதல் முறைகள் எழுத வேண்டும் என்று மிக தாழ்மயுடன்
  வேண்டுகிறன்

  • Please let me know if you’re looking for a article writer for your site. You have some really great articles and I think I would be a good asset. If you ever want to take some of the load off, I’d really like to write some content for your blog in exchange for a link back to mine. Please send me an e-mail if interested. Thanks!

 3. அணுசக்தியைப் பற்றி முதல் நூல் “அணுவைப்பற்றி” என்ற தலைப்பில் 1968 ம் ஆண்டு மும்பையில் அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களால் மும்பை தமிழ் சங்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளான வெங்கட் ராஜ், நம்பி மற்றும் சிலரால் எழுதப்பட்டது.

  1996 ல் அணுசக்தி கலை மன்றத்தால் ” தேசிய மேம்பாட்டில் அணுசக்தியின் மகத்தான பங்கு” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு எனது முயற்சியால் நடத்தப்பட்டது. உங்களது நூலை படிக்க முயற்சியால் நடத்தப்பட்டது. உங்களது நூலை படிக்க ஆவலாயுள்ளேன்.

 4. தேடலில் வாழும் என் போன்றோருக்கு இது மிகவும் பயன் உள்ளது.
  ஆங்கிலத்தில் தான் இதுவரை படித்து அரைகுறையாக விளங்கிக்கொண்டேன் . இனி இதில் உள்ள சந்தேகம் தீரும் என நினைக்கிறேன் .

  நன்றி

  நன்றி

  நன்றி

 5. This blog seems to recieve a great deal of visitors. How do you promote it? It offers a nice individual spin on things. I guess having something useful or substantial to give info on is the most important thing.

 6. I’d be inclined to cut a deal with you on this. Which is not something I usually do! I enjoy reading a post that will make people think. Also, thanks for allowing me to comment!

 7. Amazing! Your post has a bunch comment posts. How did you get all of these people to see your article I’m jealous! I’m still learning all about article writing on the net. I’m going to look around on your site to get a better idea how to achieve success. Thanks for the help!

 8. கிட்டத்தட்ட 75வது வயதிலும் அயராது எழுதி சாதனை படைப்பதோடு ஒரு முன்னுதாரணமாகவும் தமிழர் ஜெயபாரதன் ஐயா..

  மிக்க மகிழ்ச்சியும் பெருமையும்,…

  மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா..

 9. நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகள்! அபாரம், இத்தனை அறிவியற் கட்டுரைகள் தமிழில் எழுதிய உங்கள் ஆக்கப் பணிக்கு என் வணக்கங்கள், ஐயா!

 10. Pingback: தமிழில் முதல் அணுசக்தி நூல்

 11. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தங்களது தமிழ்ப்பணி வாழ்க!வளர்க!!
  என் போன்ற ஓட்டுனர் பணி புரியும் கடைநிலை ஊழியரும் அணு அறிவியல் பற்றிய பல அரிய செய்திகள் அறிந்து கொள்ள தங்களைப் போன்ற மாமனிதர்களின் இது போன்ற பங்காற்றலால்தான் முடிகிறது. தங்களது பதிவுகள் தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம்..நன்றிகள் பல பல..paramesdriver.blogspot.com

 12. நண்பர் பரமேஸ்வரன்,

  வணக்கம். உங்கள் வலைத் தளத்தில் பேரழிவுப் போராயுதங்களைப் பற்றித் தமிழில் பொதுநபருக்கு விளக்கி இருக்கும் விதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எனது வலைத் தளத்தில் https://jayabarathan.wordpress.com/ அணுசக்தியைப் பற்றிப் பல கட்டுரைகள் உள்ளன. தேவையானவற்றை எடுத்தாளுங்கள்.

  பாராட்டுக்கு நன்றி.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்.

  ++++++++++++

 13. Pingback: அணுவிலே ஆற்றல் நூல் வெளியீடு – சி. ஜெயபாரதன் | திண்ணை

 14. http://arvindneela.blogspot.in/2007/03/blog-post_22.html

  அரவிந்தன் நீலகண்டன்

  ஜெயபாரதனின் அணுசக்தி நூல்

  சிலர் வயது முதிர்ந்தும் முதிராதது போல நடித்து திரிவார்கள். ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். தம் அனுபவ முதிர்ச்சியும் பணி தந்த ஆத்ம திருப்தியும் இணைந்து அவர்களை எந்த வயதிலும் தளராது ஆக்கப்பணி செய்திட வைக்கும். அணு தொழில்நுட்ப பொறியாளர் திரு. ஜெயபாரதன் தற்போது கனடாவில் வசிக்கிறார். அவர் எழுதிய நூல் ‘அணுசக்தி’. இந்நூல் தமிழினி மூலம் வெளிவந்துள்ளது. அன்னாருக்கு வணக்கம் கலந்த பாராட்டுக்கள். இது குறித்து திரு. ஜெயபாரதன் அவர்கள் திண்ணை இதழில் எழுதியுள்ளார்கள். அதனை கீழே அளிக்கிறேன்:

  http://arvindneela.blogspot.in/2007/03/blog-post_22.html

 15. THURSDAY, MARCH 22, 2007
  posted by அரவிந்தன் நீலகண்டன் | 10:20 PM
  +++++++++++++++
  ஜெயபாரதனின் அணுசக்தி நூல்

  சிலர் வயது முதிர்ந்தும் முதிராதது போல நடித்து திரிவார்கள். ஆனால் வேறு சிலர் இருக்கிறார்கள். தம் அனுபவ முதிர்ச்சியும் பணி தந்த ஆத்ம திருப்தியும் இணைந்து அவர்களை எந்த வயதிலும் தளராது ஆக்கப்பணி செய்திட வைக்கும். அணு தொழில்நுட்ப பொறியாளர் திரு. ஜெயபாரதன் தற்போது கனடாவில் வசிக்கிறார். அவர் எழுதிய நூல் ‘அணுசக்தி’. இந்நூல் தமிழினி மூலம் வெளிவந்துள்ளது. அன்னாருக்கு வணக்கம் கலந்த பாராட்டுக்கள். இது குறித்து திரு. ஜெயபாரதம் அவர்கள் திண்ணை இதழில் எழுதியுள்ளார்கள். அதனை கீழே அளிக்கிறேன்:

  “யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb], பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத்திலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.

  அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுக்கருப் பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.

  நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன், கனடா

  இந்நூலின் ஒரே குறை அதன் விலையாகத்தான் இருக்கும். ஆனால் நம் தமிழ் இளைஞர்களுக்கு இந்த நூல் போய் சேர வேண்டியது அவசியம். எனவே வசதியும் மனமும் கொண்ட ஒவ்வொரு தமிழரும் தங்கள் ஊர்ப்புற நூலகங்களுக்கு இந்த நூலை அளிக்க வேணும். சி. ஜெயபாரதன் தந்தையார் நாட்டு விடுதலைக்காக சிறை சென்றவர். ஜெயபாரதன் அவர்கள் அறிவியல் எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த தேசபக்தரும் கூட. சுவாமி விவேகானந்தரால் உத்வேகம் பெற்றவர். பண்டித நேருவின் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர். தேசியத்தின் மீதும் தாம் சரி என கருதும் நிலைப்பாட்டின் மீதும் எவ்வித சமரசமும் செய்திடாத மகத்தான மனிதர். வாழ்க அவர் பணி. ஓங்குக அது மென்மேலும்.

  சி. ஜெயபாரதன், கனடா
  அணுசக்தி நூல் விலை : ரூ 270 (450 பக்கங்கள்)
  நூல் கிடைக்குமிடம்
  தமிழினி பதிப்பகம்
  63. பீட்டர்ஸ் சாலை,
  ராயப்பேட்டை,
  சென்னை: 600014

  posted by அரவிந்தன் நீலகண்டன் | 10:20 PM
  +++++++++++++++

  :
  Blogger Muse (# 5279076) said…

  மதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களது கட்டுரைகளை திண்ணையில் படித்து சிலாகித்து வந்துள்ளேன். அணுசக்தி பற்றிய ஒரு தெளிவான ஓவர்வியூவை அளிக்கின்ற கட்டுரைகள் அவை. அவை ஒரு புத்தகமாக வந்துள்ளது வரப்ரசாதம்.

  அவரது கட்டுரைகளைப் பாராட்டி இரண்டு மெயில்கள் அனுப்புவதைவிட அவரது புத்தகத்தை வாங்குவதும், பரிசளிப்பதும் சரியாக அவரை சிலாகிக்க வழிவகுக்கும். இந்த லிஸ்ட்டில் தற்போது இருக்கும் கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸுமுடன் இதுவும் சேர்ந்து கொண்டது.

  அறிவியற் தமிழ் வாழ்க. அறிஞர் வாழ்க. அவரை வியக்கும் அணுக்கர் வாழ்க.

  இந்த புத்தகத்தை ஆன் லைனில் வாங்க இயலுமா? உதாரணமாக, எனி இந்தியன்?

  அந்தத் தகவல்கள் கிடைத்தால் தன்யனாவேன்.
  12:40 AM, March 23, 2007

 16. பார்த்ததும் படித்ததும்
  Thursday, October 31, 2013
  தமிழில் முதல் அணுசக்தி நூல் – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

  அன்புள்ள நண்பர்களே,

  “அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த 41 கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் எனது முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது.

  “யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb]. பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும்.

  உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத் திலும், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகளிலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.

  அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன.

  ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.

  நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.

  என்னைப் பற்றி :

  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன்.

  அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன்

  பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது.

  25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

  அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன.

  கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.

  எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

  எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன், கனடா
  +++++++++++++

  அணுசக்தி நூல் விலை : ரூ 270
  (415 பக்கங்கள்)
  நூல் கிடைக்குமிடம்
  தமிழினி பதிப்பகம்
  63. பீட்டர்ஸ் சாலை,
  ராயப்பேட்டை,
  சென்னை: 600014, தமிழ் நாடு
  இந்தியா
  ************************
  தமிழினி பதிப்பகம் அதிபர் வசந்த குமார்
  ஈமெயில் : “vasantha kumar” tamizhininool@yahoo.co.in
  செல் ஃபோன் : 98841-96552
  ஆஃபீஸ் போன் : 2835-1410
  நூல் வாங்க வசந்த குமாரிடம் நேராகத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
  +++++++++++++++++++
  இவரது வலைத்தளம் :

  https://jayabarathan.wordpress.com/atomic-energy-book/ [முதல் அணுசக்தி நூல்]

  “அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய் ” என்று இறைவனைச் சுட்டுகின்றார், விநாயகர் அகவலில் ஒளவையார். அணுவைப் பிளக்கமுடியும் என்று அன்றே கண்டவன் தமிழ. அண்ட சராசரங்கள் ஆயிரம் கோடி என்றவன் தமிழன். இன்று பல சூரியக் குடும்பங்கள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் பற்றி தமிழில் வலைப்பூவில் எழுதிவரும் மதுரையைச் சார்ந்த பெரியவர், கனடா வாழ் அன்பர், ஜெயபாரதன்

  அணுவின் ஆற்றல் குறித்து ஆங்கிலம் உட்பட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன . ஆனால், தகுதியும் திறமையும் பெற்ற அணுவியல் அறிஞர் ஜெய பாரதன்.தமிழில் அற்புதமாக எழுதியிருக்கின்றார்,

  தென்னகக் கோயில்களில் அரூப ரூபத்தில் சிவன் எழுந்தருளியுள்ள இடம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் திருப்பெருந்துறை. இங்கு
  தீபாராதனை போன்ற சடங்குகள் கிடையாது. மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் நேரில் எழுந்தருளி ஞானம் தந்த இடம் என்கிறது புராணம்.
  இவை எல்லாம் உண்மையோ இல்லையோ இங்கிருக்கும் சிற்பங்கள் உயிர்த்துடிப்புடன் திகழ்பவை. இந்தச் சிற்பங்கள் தமிழ்நாட்டின் செல்வங்கள் இவற்றை எந்தத் திராவிடமும் அழித்துவிட இயலாது. இவற்றின் உயிர்த்துடிப்பைக் காணாத கண்கள் கண்களே அல்ல. பார்த்து ரசிக்காதவன் தமிழனும் அல்ல என்று கூறுவார்கள் பெருந்தச்சர்கள். ( ஸ்தபதிகள் )
  அதுபோன்று அறிவியலில் நாட்டமுடைய – அணுவைப்பற்றித் தெரிந்து கொள்ளவிரும்பும் ஒவ்வொரு தமிழனும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளுமளவிற்கு வெளிவந்துள்ள அணு சக்தி நூல், தமிழை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனும் அவசியம் படிக்க வேண்டியதொன்றாகும். என்று உறுதியாகக் கூறலாம்.

  கூடங்குளம் நம்மைப் படாதபாடு படுத்துகின்றது. நேற்று பெங்களூரிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் டீசல் டாங் வெடித்ததால் முற்றிலுமாக எரிந்து 45 பேர் மரணித்துள்ளனர். பத்தடி தூரத்தில் கூட மரணம் நிகழலாம் என்கிறது ஓர் சீனத்துக் கவிதை.
  அணு ஆபத்தானதுதான். ஆபத்துக்களையும் விளக்குகின்றார். ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்றும் சவால் விடுகின்றார்.கூடங்குளம் குழப்பத்திற்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும். அவசியம் படிக்க வேண்டியதொரு அறிவியல் நூல்.”அணு சக்தி “

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.