சி. ஜெயபாரதன், கனடா
- படைப்பாளி இல்லாது
பிரபஞ்சம் கிடையா து !
முட்டை முதலாய் இட்டதா ?
முன்பே கோழி பிறந்ததா
ஞானத் தங்கமே ? - பானை சோற்றுக்கு
பதம்ஒரு சோறு !
நுனிப் புல் மேய்ந்து
வனத்தை அறிவதோ
ஞானத் தங்கமே ? - வந்த சண்டைக்கு நழுவு !
வராத சண்டைக்குத் தழுவு !
சண்டை வந்தாலும் முடிவில்
சமாதானக் கைகொடு
ஞானத் தங்கமே ! - குருடனுக் குதவச் செவிடன் !
செவிடனுக் குதவ நொண்டி !
நொண்டிக் குதவக் குருடன் !
மண்டுக் குதவ யாருளர்
ஞானத் தங்கமே ? - போர் வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனையாய் ஆக்கு !
போர் வாள் நாட்டை ஆண்டால்
வேர்கள் எங்கே நிலைக்கும்
ஞானத் தங்கமே ? - தூரத்துப் பச்சை
பார்ப்ப தற்கு இச்சை !
கிட்டப் பார்வை குள்ளனுக்கு
எட்ட ஏணி ஏது
ஞானத் தங்கமே ? - காணாத மோதிரம் தேடக்
கை விளக்கில் திரியில்லை !
திரி இட்டதும் எண்ணை சிந்த
தீபம் ஏற்றி வழுக்கி விழுந்தான்
ஞானத் தங்கமே ? - உன்னைப் பற்றி நான் அறியேன் !
என்னைப் பற்றி நீ அறியாய் !
இல்லச் சிறையுள் மாட்டி
பல்லாங்குழி விளையா டுவோம்
ஞானத் தங்கமே ! - ஜன்னலில் முகம் பார்க்கும்
கண்ணாடி வைத்திடு !
கண்ணாடி இடத்தில் வெளிச்ச
ஜன்னலை வைத்திடு
ஞானத் தங்கமே ! - பாதிப்பேர் மூடர் என்றேன் !
பளாரென அறைந்தார் அவ்வூரில் !
பாதிப்பேர் அறிஞர் என்றேன் !
பூமாலை போட்டார் இவ்வூரில்
ஞானத் தங்கமே ! - ஈராக்கில் ஆஹாவென
எழுந்தது சுதந்திரச் சூரியன் !
குடிமக்கள் தூங்கினர் ஆரவாரக்
கூடார எல்லை வெளியில்
ஞானப் பெண்ணே ! - புதுச் செருப்பு வாங்கி
புகுத்தினான் பழைய காலை !
செருப்பு பல்லால் கடித்ததும்
நறுக்கினான் அழுக்குக் காலை
ஞானப் பெண்ணே ! - வந்த சண்டை போடவா ?
வராத சண்டை நாடவா ?
போன சண்டை கீறி விட்ட
புண்ணை ஆற்றிக் கொள்ளவா
ஞானப் பெண்ணே ? - ஆழம் தெரியாமல் காலை விடாதே !
ஒரு கால் நொண்டி
காலை விடுவானா ? அல்லது
கோலை விடுவானா
ஞானப் பெண்ணே ? - இராணுவப் படை வலக் கால் வைக்க
இடக் கால் வைத்தான் பேரன் !
பாதம் தவறியது படைக்கு,
பார் என் பேரனை என்றாள் பாட்டி ,
ஞானப் பெண்ணே ! - சுட்ட சட்டி எறிவதா ?
சுடாத சட்டி அறிவதா ?
சுட்ட சட்டி தெரிந்திட
எட்டி நிற்க முடியுமா ?
ஞானப் பெண்ணே ?
*************
S. Jayabarathan [August 7, 2018] [R-2]
REALLY EXCELLENT SIR. YOUR THINKING TOUCH MY HEART
Your poet and drama story, I like it sir
really marvelous , it is true most of not accept this one, but try to understand this matter