ராமாலயம் யாருக்கு ? 

image.png

ராமாலயம் யாருக்கு ? 

சி. ஜெயபாரதன், கனடா 

இந்து கோயிலை இடித்து 

வந்தேறி வேந்தர்  

தம் கோயில் கட்டினார் முன்பு. 

புத்தர் பிறந்த பூமியில் 

மெத்தச் செலவில், வில் வேந்தன், 

வித்தகன் ராமனுக்கு 

உத்தம னுக்கு 

கட்டுகிறார் இப்போது 

ஓர் உன்னத  ராமாலாயம் ! 

கோயில் உள்ளே வைக்கும்  சிலைகள் 

ஒன்றா ? இரண்டா ? 

சேர்ந்தா ?  தனித்தா ? 

 மதுரையில் ஏனோ தனிமை 

 மீனாட்சி ! 

பொய் புனைந்தான்,கம்பன் ! 

கம்ப ராமன் 

காசினி மைந்தன் 

ஈசன் அல்லன். 

ஒற்றை மா மனிதன் ராமன் ! 

ஏக பத்தினி வேந்தன் 

நீதி வழங்காது  

சீதைக்கு கடும் தண்டனை

இட்ட மேதை ! 

ராமாலயம் கட்டுவது 

கம்ப ராம னுக்கு இல்லை,  

சீதா ராமனுக்கு ! 

******************************* 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.