தாயில்லா சேய்கள்
சி. ஜெயபாரதன், கனடா
******************************
பிறப்பு உரிமையில் நான் அல்பேனிய மாது
வசிப்பு உரிமையில் நான் இந்திய மாது
உழைப்பு உரிமையில் நான் கிறித்துவ மாது
அன்னை தெரேசா.
*****************************
மண்ணை நம்பி
மரம் இருக்குது செல்லப் பாப்பா.
மழையை நம்பி
மண் இருக்குது நல்ல பாப்பா.
காற்றை நம்பி
மழை பொழியுது கண்ணு பாப்பா.
மரத்தை நம்பி
குருவி வசிக்குது கருத்த பாப்பா.
பயிரை நம்பி
பறவை தேடுது உறவு பாப்பா.
உயிரை நம்பி
உடல் உள்ளது கண்ணு பாப்பா.
உடலை நம்பி
உயிர் இருக்குது சின்ன பாப்பா.
தாயை நம்பி தொட்டிலில்
சேய் தூங்குது செல்லப் பாப்பா.
சேயை நம்பி
தாயும் பால் கொடுப்பாள்
தங்கப் பாப்பா.
பெத்த தாய் ஏன்
பெண் சிசுவை அழிப்பதெனக்
கேளு பாப்பா ?
குப்பைத் தொட்டியை
எட்டிப் பார்த்தால்
“இங்கா, இங்கா” மழலை கேட்குது
தங்கப் பாப்பா.
முதியோரைக் கண்காணிப்பு
இல்லத்திலே
தள்ளுவது ஏனென்றும்
கேளு பாப்பா?
ஊருலகில் வாழ்வதற்கு
யாரை நம்பி யார் இருக்கார்
கூறு பாப்பா ?
**********************
தமிழ் கருப்பு “வணக்கம் நான் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வாளர் பணி செய்கிறேன்.உங்களுடைய அணுயுத கட்டுரையும். பிற கட்டுரைகளையும் உங்களுடைய எண்ணங்களை படுத்திருக்கிறேன் மிக சிறந்த இன்றைய போக்கை முன்னெடுப்பதற்கு🙏 நன்றி!
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி நண்பர் தமிழ் கருப்பு. என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜியுடன் சேர்ந்து பணியாற்றியவர்.
கனிவுடன்
சி. ஜெயபாரதன்