



பூகோளம் முன்னிலைக்கு மீளாது !
காலவெளி ஒருபோக்கில்
மாறிப் போச்சு !
வாலிப வனப்பு அதற்கினி
மீளாது !
நூறாண்டு போராடி நாம்
காரணங்கள்
களை எடுத்தாலும்,
முன்னிலைக்கு
மீளாது ! மீளாது! மீளாது
பூகோளம் !
சூடேறிப் போச்சு நமது
பூகோளம் !
வீடேறி வந்திருச்சு
சீர்கேடு ! .
நாடெல்லாம் முடமாயி
நாசமாகப் போச்சு !
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?
நூறாண்டுக்கு
முன்னிருந்த நிலைக்கு பூமி
மாறாது !
போன வாலிபம் பூமிக்கு
வாராது ! மீளாது !
பூமி சுற்றச்சு பூகம்பத்தால்
சாய்ந்து போச்சு !
நிமிர்த்த முடியாது ஆயிரம்
கோடரியால் !
எரிமலை பொங்கி எழுந்து
கனல் குழம்பு
கொட்டி ஆறாய், ஆறாய் ஓடுது !
விஷ வாயுக்கள்
சூழ்வெளியை நிரப்புது !
பூகோளம் முன்னிலைக்கு
மீளாது
ஒருபோதும் !
===========================
2021 காப்பு-26 [COP-26] பேரரங்கம் செய்த தீர்மானங்கள்
- வரம்பு குறிக்கோள் உஷ்ணம் 1.5 C என்பது மாறவில்லை.
- ஆண்டுக்கு 1.4 பில்லியன் டன் கரிவாயுக் குறைப்பு நல்ல முயற்சி.
- சைனா உலகப் பூகோளக் கரி வெளியேற்றத்தில் 30% பங்கு பொறுப்பு
- மற்ற நாடுகள் 70% அளவுக்குப் பொறுப்பு.
- சைனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் நிலக்கரி பயன்படுத்தி வருகின்றன. [2021] காப்பு-26 பேரரங்கில் ரஷ்யா, சைனா கலந்து கொள்ளவில்லை.
- சைனா பேரளவு சூரிய, காற்றாடி எரிசக்தி மீள்புதிப்பு சாதனங்கள், எலெக்டிரிக் வாகனங்கள், பஸ்கள் பயன்படுத்தி வருகிறது.
- இந்தியப் பிரதமர் மோடி 2070 ஆண்டில்தான் பூஜிய விஷவாயுச் சூழ்வெளி இந்தியாவில் கொண்டுவர இயலும் என்று அறிவித்தார்.
- ரஷ்ய & சைனப் பிரதிநிதிகள் 2060 ஆண்டுக்குள் பூஜிய விஷ வாயுக் கடைப்பிடிப்பு என அறிவித்தார்.
- ஓர் ஆண்டுக்கு 1.4 பில்ல்லியன் டன் கரிவாயு வெளிவீச்சு குறைப்புத் திட்டம் பூஜிய விஷ வாயுச் சூழ்வெளியை 2050 இல் நிறைவேற்றும்.
- இப்போதுள்ள நிலமை நீடிப்பு, மேலும் வெளிவீச்சுகளைக் குறைக்காமை இன்னும் 11 ஆண்டுகளில் வரம்பு உஷ்ணம் 1.5 டிகிரி செல்சியசுக்கு எட்டிவிடும். இது 50% அனுமான அறிவிப்பு.
தகவல்
- https://ukcop26.org/
- https://headtopics.com/uk/cop26-leaders-under-pressure-to-find-climate-breakthrough-bbc-news-22355891
S. Jayabarathan [ November 6, 2021 ] [R-0]
Pingback: கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மா
Pingback: கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மா
Very nice and informative blog. I like so much
(Make Money Online).