உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

Egypt seizes ship that blocked Suez Canal over $900m compensation claim -  BBC News

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

********************************************

சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்கை அடைத்த எவர் கிவன் கப்பல் சிறைப்பட்டது.

எவர் கிவன் கப்பல் ஜப்பான் உரிமையாளிக்கு எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையகம் 900 மில்லியன் டாலர் நட்ட ஈட்டு நிதி தர வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது.. தற்போது எவர் கிவன் கப்பல் கிரேட் பிட்டெர் ஏரியில் [Great Bitter Lake] நிறுத்தமாகி நங்கூரம் இடப்பட்டுள்ளது. கப்பல் 400 மீடர் [1312 அடி] நீளம் உள்ளது. 220,000 டன் பளு சுமக்கும் தகுதி உடையது. 2021 மார்ச் 23 இல் பெரும் புயல் அடித்து, கப்பல் முனை திசைமாறி, கால்வாய் கரையை உடைத்து, சிக்கிக் கொண்டது. கப்பலை விடுவிக்க 1.1 மில்லிய குயூபிக் அடி [30,000 கியூபிக் மீடர்] மண் வெட்ட வேண்டிய தாயிற்று. 14 படகுகள் எவர் கவன் கப்பலை இழுக்கவோ, தள்ளவோ பயன்படுத்த வேண்டிய தாயிற்று. காற்று அடித்த வேகம் : 40 நாட்ஸ் [40 knots] [1 nautical mile = 6080 ft ]. சூயஸ் கால்வாய் ஆணையகம், கப்பல் திசை மாற்றத்துக்குப் புயல் காற்று மட்டுமல்ல காரணம், கப்பலோட்டி நிபுணர் கைத் தவறுகளும் சேர்ந்துள்ளது என்று கருதுகிறது.

Egypt seizes Ever Given ship in Suez Canal, demands compensation | Fox  Business

120 மைல் நீளக் குறுகிய கால்வாய்ப் பகுதியைக் கடக்க முடியாது, 400 மேற்பட்ட உலக நாட்டுக் கப்பல்கள், நகர முடியாது போயின. ஆறு நாட்களில், டுவீட்டரில் 145,200 புகார்கள் எழுந்தன. 133,000 பங்கு வாணிபர் பாதிப்புகள் ஏற்பட்டன. 450 உலகக் கப்பல்கள் போக்கு அனுமதி பெறாமல் காத்துக் கிடந்தன. உலக வர்த்தகம் 12% பாதிப்பு, ஒரு மில்லியன் பாரல் குரூடாயில் முடக்கம், 8% திரவ இயற்கை வாயு [Liquified Natural Gas] இழப்பு ஒவ்வொரு நாளும் ஏற்பட்டது. லாயிடு நிரல்படி [ LLyod List] நாள் ஒன்றுக்கு 9.6 பில்லியன் டாலர் வாணிப நிதி இழப்பு கணிப்பானது. [நிமிடத்துக்கு 6.7 மில்லியன் இழப்பு] . வால் வீதி வெளியீடு பதிவில் [Wall Street Journal] கப்பல் போக்குப் பளு சாதன வாடகை 47% மடங்கு ஏறியதாக அறியப் பட்டது. பொதுவாக உலக வணிக சாதனங்கள் தேங்காய்ப் பால், மேப்பில் சிரப், மோட்டார் உப சாதனங்கள், ஃபோர்க் லிஃப்டுகள், அமேசான் சாமான்கள் முடக்கம் ஆயின.

Google Sneaks In Suez Canal Easter Egg After Ship Finally Gets Unblocked -  DesignTAXI.com

View Post

2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, கால்வாய்க் குறுக்கே மாட்டி, இருபுறக் கப்பல் போக்கு வரத்தை, சுமார் 7 நாட்கள் தடை செய்தது. அது சிக்கிக் கொண்ட தோடு, 37 கப்பல்கள், வாய்க்கால் மத்தியிலும், 70 கப்பல்கள், கால்வாய் முழு தூரத்திலும் முடக்கம் ஆயின. அத்துடன் நான்கு நாட்களில் கடக்கப் போகும் 306 கப்பல் களுக்கு நுழைவு எச்சரிக்கை விடுத்து, நிறுத்தம் அடைய எதிர்பார்த்தன. எவர் கிவன் பூதக்கப்பல் கரைக்குள் புகுந்த மண் கட்டி 30,000 குபிக் மீட்டர் [1,059,000 குபிக் அடி] எடுக்க, பல்வேறு கிரேன்களும், மண் தோண்டிப் படகுகளும் இராப் பகலாய் வேலை செய்தன. மேலும் முழுநிலவுக் காலமானதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, மார்ச்சு 29 ஆம் தேதி பூதக் கப்பல் நேர்படச் செல்ல விடுதலை ஆனது. இப்போது [மார்ச் 29] 45 கப்பல்கள் இரு புறத்திலும் நகர்ந்து வருகின்றன. ஒரு நீள் கப்பல் 200 கி.மீடர் [120 மைல்] தூரக் கால்வாய் கடக்க சுமார் 12 மணி நேரம் ஆகிறது.

ஒருவாரம் சூயஸ் கடல் மார்க்கப் போக்கு தடைப்பட்டதால், உலக நாடுகளின் வாணிப இழப்பு நிதி நாள் ஒன்றுக்கு சுமார் 9.6 பில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது. அத்துடன் உலக நாடுகளில் பெட்ரோல் விலை ஏறும். மற்றும் சாதனங்கள், பொருட்கள் விலை ஏறும்.

https://www.bbc.com/news/av-embeds/56743556/vpid/p09c5m7t

The Suez Canal: A Critical Waterway Comes to a Halt
சூயஸ் கால்வாய் அடைப்பால் வாணிப வருவாய்ப் பேரிழப்பு
Suez Canal Map | Suez, Map, Egypt map
சூயஸ் கால்வாய் குறுகிய அகற்சி [120 மைல்]
The Routes around Africa

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய கால்வாய்!

கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர் களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்ப பட்டது.

Countries along the Suez
கடல் மார்க்க சூயஸ் கால்வாய் அமைப்பு வரைபடம்

இந்தியாவுக்கும் ஈரோப்பிற்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப்பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது! அந்த நூறு மைல்களைக் கடக்க ஒரு கப்பலுக்குச் சுமார் 15 மணி நேரம் எடுக்கிறது. பத்தாண்டு களாக 2.4 மில்லியன் பணியாளிகள் அல்லும் பகலும் பணி செய்து, கட்டிய கடற்பாதை அது! கால்வாய் பூரணமாக 125,000 நபர்கள் உயிரைப் பலி கொடுத்துள்ளதாக அறியப் படுகிறது! டோக்கியோ, ராட்டர்டாம் [ஹாலந்து] கடற் பயண தூரத்தை 23% சதவீதம் சூயஸ் கால்வாய் குறைக்கிறது! செளதி அரேபியா துறைமுகம் ஜெட்டாவி லிருந்து [Jeddah], கருங்கடல் துறைமுகம் கான்ஸ்டென்ஸா வுக்குச் [Constanza] செல்லும் கப்பல், சூயல் மூலமாகச் சென்றால் 86% தூரத்தைத் தவிர்க்கிறது! அதுபோல் ஆஃபிரிக்கா முனை வழியாகக் கப்பல் லண்டனிலிருந்து பம்பாயிக்குச் சென்றால் 12,400 மைல்! ஆனால் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றால் லண்டன், பம்பாய் கடல் தூரம்: 7270 மைலாகச் சுருங்குகிறது.

Map showing Suez Canal and location of Ever Given in the Great Bitter Lake (30 March 2021)
The Ever Given shown stuck then released in the Suez Canal
Graphic showing how tugs could be used to refloat the Ever Given by pulling the ship away from the banks of the Suez canal.
Graphic showing how dredgers could be used by salvage teams will attempt to refloat the Ever Given, using suction to remove sand and silt from below the vessel.
A digger attempts to remove earth around the bow of the Ever Given, which is blocking the Suez Canal, Egypt (25 March 2021)
Picture taken from a nearby tugboat after it's been moved

தகவல்:

2. https://www.bbc.com/news/56523659

3. https://www.bbc.com/news/av-embeds/56743556/vpid/p09c5m7t

4. https://www.bloomberg.com/news/articles/2021-04-13/egypt-seizes-ever-given-pending-900m-compensation

5. https://www.foxbusiness.com/markets/egypt-seizes-ever-given-ship-in-suez-canal-demands-compensation

***********************************************************

S. Jayabarathan [jayabarathans@gmail.com/] April 18, 2021 [R-1]

1 thought on “உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.

  1. Pingback: உலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.