சி. ஜெயபாரதன், கனடா
புத்தாண்டு பிறந்து இப்போ
தத்தித் தவழுது ! தாவி எழுகுது !
நடந்து நிற்கப் பார்க்குது !
கடந்த ஆண்டு மறைந் தாலும்,
தடம் இன்னும் போக வில்லை !
போர்கள் தொடருது !
காயங்கள் ஆற வில்லை !
சீர்மை, நேர்மை, ஓர்மை பரவப்
பாலங்கள் கட்ட வேணும்.
வித்தைகள் தொடருணும் !
விஞ்ஞானம் சீராய்த் தழைக்கணும் !
சித்தர்கள் தலை தூக்கணும் !
பித்தர்கள் தெளி வாகணும் !
புத்திகள் கூர்மை ஆகணும் !
யுக்திகள் புதிதாய்த் தோன்றணும் !
மதச் சண்டை, மொழிச் சண்டை ஓயணும் !
மனித நேயம் உருவாக
இனங்கள் கைகோர்த்து வாழணும் !
பெண்டிரைக் கண்கள் போல் காக்கணும்.
பொரி உருண்டை ஆச்சு பூகோளம் !
கொரோனா தீட்டு நோய் உலகத்தாரை
ஒரே குலமாய் ஒன்று படுத்தும்.
திறமைகள் ஒன்றாகி எதிர்க்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருக்கணும்.
மின்சக்தி பெருகி ஆலைகள் ஓடணும்.
வேலைகள் பெருகணும்.
கூலிகள் கூடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைந்து மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி ஒடுங்கணும் !
நீர்வளம், நிலவளம், சூழ்வெளி மூன்றும்
மாந்தரே துப்புரவு செய்யணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
கடமைகள் முடிக்கணும்;
கல்விக் கூடங்கள் யாவும்
செல்வக் கூடம் ஆவதைத் தடுக்கணும்.
நாட்டுப் பொறுப்பை நாமே ஏற்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊரணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
++++++++++++
ஐயா வணக்கம்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
தாங்கள் மற்றும் தங்கள் குடும்பம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Sent from Yahoo Mail on Android
உயரிய சிந்தனை. நம் உலகம் சிறந்த நிலைக்கு உயரும். தங்களின் சொல்வன்மையில் உயிர்த்தது நனவில் நிகழும் ¡¡¡
இனிய பாராட்டு காமாட்சி.
சி.ஜெயபாரதன்