ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !
சி. ஜெயபாரதன், கனடா
சிலுவையைத் தோளில் சுமந்து
மலைமேல் ஏறி
வலுவற்ற நிலையில் ஆணியால்
அறையப்பட்ட தேவ தூதர்
மரித்த பிறகு,
மூன்றாம் நாளில் தோன்றி
உயிர்த் தெழ வில்லை !
ஆணி அடித்த கைகளில்
துளை தெரிகிறது !
ஆணி அடித்த பாதங்களில்
துளை தெரிகிறது !
சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில்
இரத்தம் தெரிகிறது !
குருதி சிந்தி, சிந்தி,
கும்பி வெம்பி, வெம்பி,
வந்தது பசி மயக்கம் !
தேவ தூதர் மரிக்க வில்லை !
வான் இடிந்து
பேய் மழைக் கண்ணீர் வடிக்கும் !
ஆவி போனதாய்,
ரோமர் எண்ணித் தூதர் உடலைக்
மூடினர் குகையில் !
மூன்றாம் நாளில் மயக்கம்
தெளிந்தது,
தூங்கி எழுந்து, பல் துலக்கப்
போனார்
புனித தூதர் !
+++++++++++++++++++++++