உயிர்த்தெழ வில்லை !
சி. ஜெயபாரதன், கனடா
சிலுவையைத் தோளில் சுமந்து
மலைமேல் ஏறி
வலுவற்ற நிலையில்
அறையப்பட்ட தேவ தூதர்
மரித்த பிறகு,
மூன்றாம் நாளில் தோன்றி
உயிர்தெழ வில்லை !
ஆணி அடித்த கைகளில்
துளை தெரிந்தது !
ஆணி அடித்த பாதங்களில்
துளை தெரிந்தது !
சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில்
இரத்தம் இருந்தது !
குருதி சிந்தி, சிந்தி,
கும்பி வெம்பி, வெம்பி,
வந்தது பசி மயக்கம் !
தேவ தூதர் மரிக்க வில்லை !
வான் இடிந்து
பேய் மழைக் கண்ணீர் வடிக்கும் !
ஆவி போனதாய்,
ரோமர் எண்ணித் தூதர் உடலை
மூடினர் குகையில் !
மூன்றாம் நாளில் மயக்கம்
தெளிந்து,
விழித் தெழுந்தார் !
உயிர்த் தெழ வில்லை
புனித தூதர் !
+++++++++++++++++++++++
This is something quiet new.
உண்மை. முதலில் மூன்று நாள் என்பதே தவறு. வெள்ளி இரவில் இருந்து ஞாயிறு அதிகாலை வரை. ஒரு நாள் தான் ஆகிறது. அவர் சிலுவையில் மரிக்கவில்லை. மயக்கமடைந்திருக்கிறார். இறந்ததாக எண்ணி கல்லறையில் வைத்து விட்டார்கள். ஞாயிறு அதிகாலையில் மூச்சு அல்லது சப்தம் வந்ததால் உடலை வெளியே எடுத்து அவரை காப்பாற்றி விடலாம் என்று கூட இருந்தவர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.ஆனால் வழியிலேயே அவர் மரணமடைந்திருக்க வேண்டும். திரும்பவும் உடலைக் கொண்டுவர துணிவு இல்லாமல் மரணமடைந்த இடத்திலேயே அவரை அடக்கம் செய்து விட்டு திரும்பி வந்திருக்க வேண்டும். அதற்குள் அவர் உயிர்த்தெழுந்து வானுலகம் சென்று விட்டார் என்று வதந்தி பரவி விட்டதால் அது அவர்களுக்கும் வசதியாக இருந்ததால் அதையே அவர்களும் உண்மையாக்கி விட்டார்கள்.
நன்றி.
துரை எஸ்.ஜெயச்சந்திரன்.