சி. ஜெயபாரதன், கனடா
பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா எழில்மேனி அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு!
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராம
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை அரங்கேறி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் !
மேலும் மரிப்பார் ! மரிப்பார்!
நாடு நகரம்
வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கடத்தப் பட்டார் வேறூர்,
கைப்பையுடன்
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
இரண்டாம்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம்!
+++++++++++++++++++
[செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]
++++++++++++++++++++++
[S. Jayabarathan jayabarathans@gmail.com] (August 6, 2017) [R-2]
ஹம் அவ்ளோ பெரிய அப்பா டக்கர்களான ரசியக்காரன் சப்பான்காரன். அவனுங்களெல்லாம் சொந்த நாட்டு உலைகளை எவ்ளோ கவனமா கட்டியிருப்பானுங்க. அவனுங்களாலேயே விபத்து தவிர்க்க முடியல. இதில மக்களுக்கு ஒழுங்கா கக்கூசு கூட ஊழலில்லாம கட்டித்தர முடியாத பெருச்சாளிகள் எங்களை அணு உலை பாதுகாப்பு என்று நம்ப வேண்டுமாம். மக்கா. அங்கங்கே காட்டும் புதிய பாலம் கூட இடிந்து இடிந்து விழுகிறது.
ஆண்டவா கூடங்குளம் எப்போதோ. இதில வெளிநாட்டுக்காரனுக்கு விபத்து நடந்த பொறுப்பில்லை என சட்டம் வேற. போபால் ஆண்டர்சனை அன்று களவாக
தப்ப வைத்தது. இன்று வெளிப்படையாக சட்டம்.
நீங்கள் அணுவை புரிந்தது போல் இந்த நாய்களின் அரசியலையும் புரிந்து கொள்ளவேண்டுமென்பதே அடியேன் அவா.
தங்களின் படிப்புக்கு மதிப்பளிக்கிறேன். தமிழ் பற்றுக்கு மதிப்பளிக்கிறேன்.
கலாம் ஐயா போல் இந்த நாய்களின் அரசவைக் கோமாளி ரேஞ்சிலே இருக்கவேண்டாமென்பதே என் விருப்பம். ஏனெனில் குவாண்டம் மெக்கானிக்ஸ் புரிந்த உங்களுக்கு இதுவும் புரியும் என்றே நினைக்கிறேன். உங்கள் பக்கத்திலும் எழுதுங்கள். அணு உலை எவ்ளோ ஆபத்து என்று. ஹைட்ரோகார்பன் எடுப்பது எப்படி நிலத்தை மலடாக்கும் என்று. செவ்வாய்க்கு வாணம் விடும் பணத்தை வேறு எதற்குப் பாவிக்கலாம் என்று.
தங்களின் படிப்புக்கு மதிப்பளிக்கிறேன். தமிழ் பற்றுக்கு மதிப்பளிக்கிறேன்.
இந்த விண்வெளி திடடம் வேலை வாய்ப்பு கொண்டுவரும் போன்ற நகைச்சுவைகள் வேண்டாமே.
நண்பர் ராஜ்,
உலகிலே பொறிநுணுக்கத் திறமையுள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானில்தான் மெத்த கவனிப்பின்றி பயங்கர மூன்று அணு உலை விபத்துகள் நேர்ந்துள்ளன. இந்தியாவில் டில்லிக்கு அருகில் உள்ள நரோரா அணுமின் உலையில் டர்பைன் முறிவு சுழலியால் தீப்பற்றி வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அணுமின்சக்தி உலை பாதுகாப்பாக நிறுத்தம் ஆனது. இந்திய அணுமின் உலைகளில் செம்மையான பாதுகாப்புச் சாதனங்கள் உள்ளன. இராப் பகலாய்க் கண்காணிக்கும் நிபுரணர் இருக்கிறார். கூடங்குள அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்க, முப்பக்கக் கண்காணிப்பு நிறுவகங்கள் உள்ளன. இந்திய அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் [Atomic Energy Regulatory Board], ரஷ்ய அணுசக்திக் கட்டுப்பாடு நிறுவகம், அகில நாட்டு அணுசக்தி பேரவை [International Atomic Energy Agency (IAEA)].
போபால் இரசாயன தொழிற்சாலைக்கு உலகில், இந்தியாவில் இத்தகைய பாதுகாப்பு, கண்காணிப்பு, பயிற்சி ஏற்பாடுகள் கிடையா.
என் வலையில் அணுசக்தி பற்றி, கதிரியக்கம் பற்றி, அபாயங்கள் பற்றி பல கட்டுரைகள் உள்ளன. அணுமின்சக்தி நிறைபாடு, குறைபாடு பற்றி மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.
சி. ஜெயபாரதன்