புத்தாண்டு பிறந்த​து !

Image result for new year 2020"

சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டு பிறந்தது ! நமக்கு

புத்தாண்டு பிறந்தது​ ​!

கடந்த ஆண்டு மறையுது, ஆயினும்

​தடம்​ இன்னும் ​தெரியுது !

வித்தைகள் சிறந்து ஓங்கணும் !

விஞ்ஞானம் தழைக்கணும் !​

வேலைகள் பெருகணும் !

வீணர்கள் தேறணும் !

சித்தர்கள் ​புதிதாய்ப் ​பிறக்கணும் !

பித்தர்கள் தெளிவாகணும் !

​புத்திகள் கூர்மை ஆகணும் !

யுக்திகள்​ புதிதாய்த் தோன்றணும்.

சண்டைகள் ​குறையணும் !

​ஜாதிகள் சேர்ந்து வாழணும் ! ​

சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கணும் !

பொரி​ உருண்டை ஆச்சு பூத உலகம் !

திறமைகள் ஒன்றாகி​ வலுக்கணும்

வறுமை குன்றி வருவாய் பெருகணும்.

மின்சக்தி பெருகி யந்திரங்கள்​ ஓடணும்.

வேளாண்மை விருத்தி ஆகணும் !

பஞ்சம் குறைய மிஞ்சி விளையணும் !

லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !

நீர்வளம், நிலவளம், சூழ்வெளி

துப்புரவு செய்யணும் !​

விடுதலை நாடு சீராய்த் தழைக்க,

கடமைகள் முடிக்கணும்; நாட்டுப்

பொறுப்புகள் ஏற்கணும் !

தேசப் பற்று நமக்குள் ஊறணும் !

தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !

தேச மக்கள் நேசம் பெருகணும் !

++++++++++++

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.