அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வந்த தவறான கருத்துகளுக்கு எனது பதில்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னுரை:  1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்கத்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் மரித்து பலர் கதிரியக்கத்தால் நோயுற்ற போதும், 2011 மார்ச்சில் ஜப்பான் நிலநடுக்கச் சுனாமியால் நிறுத்தமான அணுமின் உலைகள் நான்கில் வெப்பத் தணிப்பின்றி சில எருக்கோல்கள் உருகி ஹைடிரஜன் வாயு சேர்ந்து, அணு உலை மேற்கட்டடத்தில் ரசயான வெடிப்புகள் நேர்ந்த போதினும், உலகநாடுகள் தாம் இயக்கி வரும் 430 மேற்பட்ட அணு உலைகளை நிரந்தரமாய் நிறுத்தம் செய்ய வில்லை.  மாறாகப் புதிய பாடங்களைக் கற்றுக் கொண்டு, தமது அணு உலைகளை மீளாய்வு செய்து, அபாய வெப்பத் தணிப்பு முறைகளை மிகையாக்கிச் செம்மைப் படுத்தித் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

 

இந்த நோக்கில் சிந்திக்க வேண்டியது தற்போது ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சுத்தம் செய்யப் பட்டு புத்துயிர் பெற்று எழுந்து முன்னை விடக் கட்டமைப்பு செய்யப்பட்டு முற்போக்கு நகராக மாறி விட்டன. அதே போக்கில் புகுஷிமாவின் பழுதான நான்கு அணுமின் உலைகளும் சுத்தமாகப் பட்டு உருகிய எருக்கோல்கள் நீக்கப்பட்டு கவசத் தொட்டிகளுக்குள் மூடப்பட்டு புதைக்கப்படத் தயாராகும்.  அணு உலைக் கலங்கள் சீர் செய்யப்பட்டு நீக்கப்படும்.  அந்த இடத்தில் புது டிசைன் அணு உலை கட்டப்படும்.  அதற்கு ஆகும் செலவு மிகையானால் புது அணு உலை அமைப்பு நிராகரிக்கப்படும்.  பழைய அணு உலைகள் நிரந்தரமாய் மூடப்படும். இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கிவரும் 20 அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் யாருக்கும் ஆறாவது முளைத்ததாக நிரூபிக்கப்பட வில்லை.

 

 

கல்பாக்க அணுமின் சக்தி பற்றி  ஞாநியின் தவறான கருத்துகள்

எழுத்தாளர் ஞாநி கடந்த எட்டு ஆண்டுகளாக கல்பாக்க அணு உலைகள் மீது தவறாக எழுதி வருகிறார்.  அவர் எழுதிய ‘கான்சர் கல்பாக்கம்’ என்ற 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் கதிர்வீச்சின் கொடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, நிர்வாகத் துறைகளில் உள்ள ஓட்டைகளை எடுத்துக் காட்டி, மாநில அரசா அல்லது மத்திய அரசா எது அபாயப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்ட கேள்வி வரவேற்கத் தக்கதே ! ஆனால் அவர் மக்களைப் பயமுறுத்தக் கூறிய சில கடுமையான நோய் விளைவுகள் அணு உலைக் கதிர்வீச்சால் மெய்யாக நிகழ்ந்தவையா என்பது ஐயப்பாட்டுக் குரியன! மற்றும் அவரது சில கதிர்வீச்சுக் கருத்துக்கள் உயிரியல் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்பது எனது கருத்து!

 

இந்திய அணுமின் உலைகளைக் கட்டி இயக்குவதும், கண்காணிப் பதும், பராமரிப்பதும் இந்திய அரசுக்குக் கீழிருக்கும் அணுசக்தித் துறையக /நியூகிளியர் பவர் கார்பொரேசன் (DAE, Dept of Atomic Energy / NPCIL Nuclear Power Corporation of India Ltd) ஆணையகங்கள் தான். கல்பாக்கம் அணு உலைப் பணியாளிகளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிக அதிகம் என்ற தவறான கருத்தைப் பரப்பி வருவது, நியாயமான எச்சரிக்கை ஆகாது! கல்பாக்கத்தில் பணிசெய்து குறைந்த அளவுக் கதிரடி பெற்றுப் புற்று நோய் வந்து செத்துப் போனவர், ஊனக் குழந்தை பெற்றவர், பிறப்புறுப்பில் புற்று நோய் பெற்றவர், ரத்தப் புற்று நோய் பெற்றவர், குடல் புற்று நோய் அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை என்று மெய்ப்பிக்காமல் அழுத்தமாகப் பறை சாற்றுவது உயிரியல், மற்றும் கதிரியல் விஞ்ஞானத்துக்கு [Biological & Radiological Science] ஒவ்வாத வாதங்கள்!  ஓரளவு கதிரடியால் புற்றுநோய் வரலாம் என்று உயிரியல் விஞ்ஞானம் கூறினும், கல்பாக்க அணு உலைக் கதிரடியால் ஆங்கு வாழ்வோர் புற்று நோய் வந்து சாகிறார் என்பது இதுவரை நிரூபிக்கப் பட வில்லை.

 

 

ஞாநியின் 2003 ஏப்ரல் திண்ணைக் கட்டுரையில் வந்த தவறான சில கருத்துக்கள்

1. ஞாநியின் கருத்து: கல்பாக்கத்தில் ஒரு விபத்து நேர்ந்தால் போதும்! சென்னை நகரம் அவ்வளவுதான்! செர்நோபில் கதி ஏற்படும்!

 

எனது விளக்கம்: செர்நோபிள் வெடி விபத்துக்குக் காரணங்கள்:  சோதனையின் போது அடுத்தடுத்து நிகழ்ந்த பல மனிதத் தவறுகள், மூல டிசைன் கோளாறுகள், எப்போதும் கனலாக இருக்கும் திரள்கரி அடுக்கு [Moderator Graphite Pile] மிதவாக்கியாகப் பயன்பட்டது, கதிரியக்கப் பொழிவுகளை உள்ளடக்கும் கோட்டை அரண் இல்லாதது! அவ்விதக் கோர விபத்து பாரதத்தின் எந்த அணு உலையிலும் நிகழவே நிகழாது! கல்பாக்க அணுமின் உலையில் கனநீர் மிதவாக்கியாகப் பயன்படுகிறது! மேலும் நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] உள்ளதால், விபத்து நேர்ந்தாலும் கதிரியக்கப் பொழிவுகள் கோட்டையை விட்டு வெளியே தாண்டவே தாண்டா.

விபத்துக்கள் பலவிதம்! சிறு விபத்து, பெரு விபத்து, பாதுகாப்பு விபத்து, கதிர்வீச்சு விபத்து, வெப்பத் தணிப்புநீர் இழப்பு, அணு உலைக் கட்டுப்பாடு இழப்பு, அபாய கால மின்சாரம் இழப்பு இப்படிப் பல விதங்கள். கல்பாக்க அணுமின் உலையில் பெரு விபத்து நிகழ்ந்தாலும், சென்னை நகரம் அழியாது! மகாபலிபுரமும் அழியாது!  கனநீர் இயல் யுரேனிய அணு உலைகளில் சக்தி அளிப்பவை மித வேக நியூட்ரான் கள்.  அணு குண்டுகளில் வெடிப்புச் சக்தியை உண்டாக்குவது அதிவேக நியூட்ரான்கள்.

 

2. ஞாநியின் கருத்து: பயங்கர வாதிகளுக்கு அணு உலைகள் சிட்டிங் டக் [Sitting Duck] என்று சொல்லக் கூடிய எளிமையான இலக்குகள்! அதன் மீது விமானத்திலிருந்து ஒரு குண்டு போட்டால் போதும்! அணுக்கதிர் இயக்கம் சென்னையை அழித்துவிடும்!

 

எனது விளக்கம்: நாலடித் தடிப்பு கொண்டு உறுதி யாக்கப்பட்ட, முன்முறுக்கப் பட்ட இரும்புக் கம்பி கான்கிரீட் கோட்டை அரண் [4 feet thick Pre-stressed Reinforced Concrete Cotainment] மீது குண்டு போட்டுத் துளையிடுவது எளிதல்ல.  விமானத்திலிருந்து குண்டு போட்டால், அணு உலை வெடிக்காது! அணு உலைத் தானாக நிறுத்தம் ஆகி, வெப்பத்தைத் தணிப்பு ஏற்பாடு இயங்கும். அது முடங்கி போதிய நீரில்லாது போனால், எரிக்கோல்கள் உருகி, கோட்டை அரணில் சேரும்.  அரணில் ஓட்டை நேர்ந்தால் கதிரியக்கம் காற்றடிக்கும் திசையில் பரவும். சென்னையிலும், மகாபலிபுரத்திலும் கதிரியக்கப் பொழிவுகள் பெய்து, மாந்தர் கதிர்த் தீண்டலில் தாக்கப் படுவர். ஆனால் சென்னை நகரம் கதிர்வீச்சால் அழியவே அழியாது!  கதிர்மானிகளைக் கொண்டு கதிர்கள் தீண்டிய [Radioactive Contaminations] இடங்களைக் கண்டு பிடித்து, அவை நீக்கப் பட வேண்டும்! ஆங்கு வாழும் மாந்தரில் கதிரடி பட்டோரும் இருப்பார்! கதிரடி படாமல் தப்பினோரும் இருப்பார்! ஆனால் சென்னையில் உள்ள கட்டடங்கள், வீடுகள் சேதமடையா! விமானத்திலிருந்து குண்டுகள் விழுந்தால் அந்த வெடிப்பில் மடிபவர் கதிரியக்கக் கசிவில் காயப் படுபவரை விட அதிகமாய் இருக்கும்.

 

 

3. ஞாநியின் கருத்து: கல்பாக்கத்தில் விபத்து நடந்தாலே போதும்! விபத்து எதுவும் நடக்காது என்று எந்த உத்தரவாதமும் கிடையாது! அப்படி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு ? கல்பாக்கத்தில் கதிரியக்கத்தால் சுற்று வட்டாரங் களில் புற்று நோய் அதிகரித்தால், அதற்கு யார் பொறுப்பு ?

 

எனது விளக்கம்: அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தாலும் சரி, சுற்று வட்டாரத்தில் புற்று நோய் அதிகரித்தாலும் சரி, அவற்றை நேரடியாகக் கவனிப்பது, மத்திய அரசைச் சேர்ந்த அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] ஒன்றுதான். NPCIL அதை முறையாகக் கையாள மேற்பார்வை செய்வது, தனித்தியங்கும் ‘அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம் ‘[Atomic Energy Regulatory Board (AERB)]. ஆராயப் பட்ட தவறுகள் முற்றிலும் திருத்தப்படும் வரை, அணுமின் உலை இயக்க அனுமதி லைசென்ஸை முறிக்க AERB வாரியத்துக்கு முழு அதிகாரமும் உள்ளது.

 

4. ஞாநியின் கருத்து: கல்பாக்கம், கூடங்குளம் திட்டங்கள் எல்லாமே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுக்கும் திட்டங்கள்தான் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆதாரங்கள் உண்டு! எனது விளக்கம்: அறிவியல் ஆதாரங்களை ஞாநி ஏனோ தர வில்லை! ஞாநி அவற்றையும் காட்டி யிருக்கலாம்!  அணுசக்தி விஞ்ஞானம் பஸ்மாசுரன் காலத்தில் முளைக்க வில்லை! படிக்காததால், அவனும் புதிய அணு உலை களை முடுக்கத் தெரியாமல் திருதிருவென்று விழிப்பான்! அவனுக்கும் முதலில் பயிற்சி தேவை! கல்பாக்க அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் சிறந்த பாதுகாப்புத் தன்மைகளைக் கொண்டவை. கல்பாக்க வேகப் பெருக்கி சோதனை அணு உலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாததால், ஆற்றல் குறைக்கப் பட்டு 25% [10 MWt] ஆற்றலில்தான் இப்போது இயங்கி வருகிறது!

 

 

மீண்டும் ‘கல்பாக்கம் ஞாநி ‘ [செப் 18, 2003] திண்ணைக் கட்டுரையில் அணுமின் நிலையங்கள் மீது புகார் செய்திருக்கிறார்.  ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை’ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

1.  http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

2.  http://www.npcil.nic.in/

செப் 18, 2003 திண்ணைக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல் களைக் குறிப்பிட் டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

1.  ஞாநியின் கருத்து மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக் கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை.. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும்.

எனது விளக்கம்

http://www.npcil.nic.in/

இந்திய அணுமின் உலைகளின் இயக்கம் பற்றி இந்த வலைப்பகுதியில் உள்ளது

2.  ஞாநியின் கருத்து வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள். எனது விளக்கம். இந்தியப் பாதுகாப்புக்குத் தேவையானால் பயன்படுத்த ஓர் எச்சரிக்கை ஆயுதமாக அரசாங்கம் அணு ஆயுதங்களைக் கொலுப் பெட்டியில் வைத்துள்ளது.

 

3.  ஞாநியின் கருத்து கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனது விளக்கம் இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது.  அதனால் யாரும் பாதிக்கப் படவில்லை.  கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை.  நேர்ந்த கனநீர்க் கசிவு விபத்துக்களில் நோயுற்றோர் யாருமில்லை.

 

4.  ஞாநியின் கருத்து கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்].

 

எனது விளக்கம். கல்பாக்கம் அணுமின் உலைகள் பல இந்தியச் சாதனங்கள் புதியதாக உற்பத்தி செய்து இந்தியர் கட்டி இயங்குவது.  முன்னோடிச் சோதனை அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஆரம்பத்தில் நேர்வது ஒன்றும் பெரிதல்ல ! இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன்காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதே.

இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதிகளையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கை களை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது. அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது.

அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன. கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத் தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக் குரியவை. கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

 

அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறி களைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலை களில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம்.

அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்சாலைகள், போக்கு வரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்!  ஆனால் விமானப் பயணங்கள் உடனே நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடை கிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ?

இல்லை.  காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகள் ஏற்பட்டால் பாடம் கற்றுச் செம்மைப் படுத்திய விமானங்களில் பயணம் செய்ய முன்வருகிறார். ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் 20 அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடிச் சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்!  அணுமின் உலைக் கதிரடியால், இதுவரை யாரும் புற்று நோயிலோ மற்ற நோயிலோ மரிக்கவில்லை.  அணுமின் உலைச் சூழ்வெளியில் டாக்டர் புகழேந்தி, ஞாநி பயமுறுத்தி வருவதுபோல் கல்பாக்கத்தில் யாருக்கும் ஆறாவது முளைத்த தாக எவரும் நிரூபிக்க வில்லை.

 

நான் 45 ஆண்டுகளுக்கு மேல் இந்திய & கனடா அணுமின் உலைகளில் நேரடியாக வேலை செய்து அனுபவன் பெற்றவன்.  எனது இரண்டாவது புதல்வி கனடாவில் உள்ள பிக்கரிங் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்து வருகிறாள்.  அவளது கணவரும் அருகில் உள்ள டார்லிங்டன் என்னும் வேறோர் அணுமின் நிலையத்தில் திட்ட எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  அவருக்குப் புதல்வர் இருவர்.  அணு உலையில் வேலை பார்த்து வந்த எங்களில் யாருக்கும் இதுவரை ஆறாவது விரல் முளைக்க வில்லை.  கதிரியக்கத்தால் புற்று நோயோ, மற்ற நோயோ எங்களைத் தாக்க வில்லை !  அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டு காலம் வசித்து, அங்குள்ள சூழ்வெளிக் காற்றைச் சுவாசித்து, நீரைக் குடித்து, உண்டு, உறங்கி, உறவாடி நலமுடன் வாழ்ந்து வருகிறோம்.  எங்களைப் போல் ஆயிரக் கணக்கான மாந்தர் இந்தியாவிலும், கனடாவிலும் அணுமின் உலைகள் அருகிலே பல்லாண்டுகள் பாதுகாப்பாக ஆரோக்கியமாய் வசித்து வருகிறார்.

(தொடரும்)

++++++++++++++

தகவல்:

1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006) http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007) 8. Nuclear Power Plants

& Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

12.  கேன்சர் கல்பாக்கம்: (திண்ணையில் ஞாநியின் கட்டுரை) (4/19/03) இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:

1. Atomic Power Plants Performance Reports http://www.npcil.org [Updated Sep 22, 2003]

2. Kalpakkam Nuclear Site http://www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

3. Bhabha Atomic Research Centre, Bombay http://www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations http://www.aerb.gov.in [Updated Sep 17, 2003] 4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

13. https://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html [கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html [செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ?]

16. http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India  (Nuclear Power Corporation of India) (March 12, 2012)

17. http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 24, 2012

47 thoughts on “அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வந்த தவறான கருத்துகளுக்கு எனது பதில்

 1. கல்பாக்கக் கதிர்வீச்சால் ஊழியருக்கு என்ன பாதிப்புகள் நேர்ந்தன ? விபரம் எழுதுங்கள். யூடூபில் கூறப்படும் நோய்கள் கல்பாக்கக் கதிர்வீச்சால் நேர்ந்தவை என்று நிரூபிக்க வேண்டும். இவர்கள் எப்படி கதிரடி பெற்றார் ? எங்கு வசிக்கிறார் ? கதிர்வீச்சால் ஆறாவது விரல் முளைக்கும் என்று உலகில் அணு உலை டாக்டர் யாரும் வெளியிட்ட தில்லை.

  இவை யாவும் புளுகர் டாக்டர் புகழேந்தி தவறாகக் கூறியவை.

  ஜெயபாரதன்.

  • Hello Mr. Jayabharatan,

   The viewrs shared here by you are very basic expected from any engineer ( I am an engineer too).

   In the Indian context, the public health is just taken for granted and a vast majority do not even have basic knowledge of the problems. just go and mingle with the staff in Kalpakkam . you will understand the horror stories of the problems hidden and covered by the elite engineers like us.
   in case of any accidents like japan /chernoble etc you can imagine what will happen tamilnadu? you know what happens even in minor fire and how many people die

 2. ஐயா , மிக அருமையான விளக்கங்களுடன் கட்டுரை எழுதி உள்ளீர்கள் . இப்படி தான் அணுமின் நிலையங்களை எதிர்ப்பவர்கள் எல்லாரும் தவறான தகவல்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இந்த மாதிரி சமயங்களில் உண்மையை உலகுக்கு உணர்த்தவேண்டிய இடத்தில பதிவுலகமும் இருக்கிறது .

  உங்களின் சரியான நேரத்தில் வெளியிடப்பட்ட சரியான கட்டுரைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

 3. உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை..!!

  1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

  2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

  3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

  4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

  5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

  7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

  8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

  9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

  10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

  11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

  12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா

  13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

  15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

 4. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (1999) ஒரு
  அறிவியல் கண்காட்சியை சென்னையில் பார்வை இட்டேன். அந்த கண்காட்சியில் “கல்பாக்கம் அணு உலை” பற்றிய
  அரங்கும் இருந்தது. அங்கு இருந்த கல்பாக்கம் அறிவியலரிடம் கல்பாக்கத்தில் என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன்.

  அதற்கு அவர் ஆராய்ச்சி நடப்பதாக சொன்னார். அப்ப, மின்சாரம் ? என்று கேட்டேன் … அதற்கு அவர், அது பெயருக்கு சுமார் நாற்பது மெகா வாட் கிடைக்கிறது எ…ன்று சொன்னார். தற்போது தான் அதன் 50% அளவை எட்டி
  இருக்கிறது.
  Kalpakkam Reactors operational 2 x 220

  IGCAR Kalpakkam – Indira Gandhi Centre for Atomic Reserch.

  ஒரு அணு உலை அமைக்க பத்து ஆண்டுகள் ஆகின்றன. அதனுடைய பாதி மின் உற்பத்தி அளவை எட்ட அடுத்த பத்து
  ஆண்டுகள் ஆகின்றன. உருப்படும். இப்படித்தான், கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவின் அணு மின் உற்பத்தி
  சுமார் மூன்று விழுக்காடு (3 %) நிலையை எட்டி உள்ளது. வாழ்க இந்தியா.

  ஆக இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழு அளவை எட்டவில்லை. விஞ்சானிகள் பொய் சொல்லிக்கொண்டே
  இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் லட்சம் கோடி செலவில் , பல ஆயிரம் கோடிகள் கமிசன் பெறுகிறார்கள்.

  இந்தியாவில் உள்ள இருபது அணு மின் நிலையங்களில் எந்த அணு உலையும் அதன் மின் உற்பத்தியை ஐம்பது விழுக்காடு
  அளவை தாண்ட வில்லை. கூடங்குளம் துவக்கினாலும் ஒரு அணு உலை 220 மெகா வாட் அளவு மட்டுமே தயாரிக்க
  முடியும். பாதி அளவை எட்ட இன்னும் பத்து ஆண்டுகள் ஆகலாம். ஆனால், என்னவோ கூடங்குளம் திறந்து விட்டால்
  உடனடியாக அதிக மின்சாரம் கிடைத்து தமிழகம் ஒளிரும் என்று “தினமலம்” போன்ற பொறுக்கிகள் (மத்திய அரசிடம்
  காசு வாங்கிக்கொண்டு) தொடர்ந்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன.

 5. கடந்த ஆண்டு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க ரூபாய் 25 /unit ஆவதாக சொன்னார்கள். சென்ற வாரம் (March 2012) மத்திய மரபு சாரா எரிசக்தி துறை அமைச்சர் பாரூக் அப்துல்லா “ஒரு யூனிட் தயாரிக்க சென்ற ஆண்டு ரூ 16 / unit ஆக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ 9 / unit ஆக இருக்கிறது” என்று சொன்னார். ஆக இன்னும் சில வருடங்களில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க செலவு குறையும்.

  ஆனால், இதில் ஆட்சியில் இருப்பவன் கொள்ளை அடிக்க முடியாதே ? பல்லாயிரம் கோடியை, பல லட்சம் கோடியை ஒரே இடத்தில கொட்டினால்தானே அதிகமாக கொள்ளை அடிக்க முடியும்.

  ஒரே இடத்தில் ஆயிரம் மெகா வாட் உற்பத்தி செய்து பெரு நகரங்களுக்கு கொண்டு செல்கையில் முப்பது விழுக்காடு மின் இழப்பு வேறு ஏற்படுகிறது.

 6. நண்பர் குமாரன்

  சூரியக் கதிரொளி மின்சாரம் பகலில் 8 முதல் 10 மணிநேரங்கள் கிடைக்கலாம். மழைக்காலத்தில் மின்சாரம் கிடைக்காது. இதை வைத்துத் தொடர்ந்து பகலும் இரவிலும் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகளும், கோடிக் கணக்கான வீடுகளும் எப்படித் தொடர்ந்து மின்சாரம் பெறும் ?

  உங்களுக்கு அடிப்படை மின்சார ஆற்றல் (பேஸ் லோடு பவர் Base Load Power) என்றால் என்ன வென்று தெரியமா ? அதாவது எப்போதும் தொடர்ந்து பரிமாறும் பேரளவு மின்சக்தி)

  சுவிங் லோடு பவர் (Swing Load Power) என்றால் கூடிக் குறைக்க ஏதுவான மேற்படை மின்சாரத் தேவை. காற்றாடி, சூரிய ஒளி போன்ற சிற்றளவு மின்னாற்றல்.

  சி. ஜெயபாரதன்.

 7. நண்பர் இனியன்,

  சூரியக் கதிரொளி மின்சாரம் பகலில் 8 முதல் 10 மணிநேரங்கள் கிடைக்கலாம். மழைக்காலத்தில் மின்சாரம் கிடைக்காது. இதை வைத்துத் தொடர்ந்து பகலும் இரவிலும் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகளும், கோடிக் கணக்கான வீடுகளும் எப்படித் தொடர்ந்து மின்சாரம் பெறும் ?

  உங்களுக்கு அடிப்படை மின்சார ஆற்றல் (பேஸ் லோடு பவர் Base Load Power) என்றால் என்ன வென்று தெரியமா ? அதாவது எப்போதும் தொடர்ந்து பரிமாறும் பேரளவு மின்சக்தி)

  சுவிங் லோடு பவர் (Swing Load Power) என்றால் கூடிக் குறைக்க ஏதுவான மேற்படை மின்சாரத் தேவை. காற்றாடி, சூரிய ஒளி போன்ற சிற்றளவு மின்னாற்றல்.

  2200 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க எத்தனை பெரிய தளப்பரப்பு தேவை ? சூரிய ஒளி மின்சாரம் 8 -10 மணிநேரங்கள் மட்டும் கிடைக்கலாம். மழைக்காலத்தில் மின்சாரம் கிடைக்காது. 2200 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க எவ்வளவு செலவாகும் ? அதை எப்படிச் சேமித்து வைப்பது ? அதைப் பல மைல் தூரத்துக்கு எப்படி அனுப்புவது ? அதனால் மின்வட அனுப்பு இழப்பு எவ்வளவு ?

  சி. ஜெயபாரதன்.

  +++++++++++++++++++

  • Why cant you de-centralize the need sir? S.TN is hot in all the days including rainy days, It is not the case for USA, or Russia who are away from the equator. There during winter, water too go frozen. no good sunlight… Why should we rely on their technology? We have to find the technology that suits us. Can we not generate 30mw in each taluk head quarters?

   I dont think “sun not there in the night is” a problem; if we can construct more, can we not store for night?

   Nuclear energy would have more construction cost if the govt takes necessary steps to build for disaster management. The govt does not do anything for the disaster management and it just cheats it is 100% safe that any sane person know is not correct.
   IF you construct all the facilities for the people who may suffer, get affected, the nuclear energy will no longer be cheap.

   The energy is out there for us from the day 1 the earth was born.

   S.TN (including places around kudankulam) has given away lots of land for windmills.

 8. Right now we have no better technology to kill nuclear plant and go for a suitable alternate. But this is no way an argument for going with nuclear plant

  But this is equivalent to opening our eyes and fall into the trap with our future generations in stake. Just imagine that we come to realize this mistake after 20 years like Japan and Germany are doing it now ! Can we not realize this now ?

 9. Dear Nallasivan Kanapathy,

  Are you working in the Kalpakkam Nuclear Power Complex ? I worked there as Tech Supdt for 4 years and improved its nuclear safety. There were many dedicated engineers and workers, I knew well at Kalpakkam. But there will be always 5% to 10% misfits in any industrial organization. They should be controlled, disciplined or terminated in a public safety project like the nuclear power plant.

  We cannot just close or quit the Power Plant because of some misfits.

  Regards,
  S. Jayabarathan.

 10. Dear Nallasivan Kanapathy,

  Japan & Germany have NOT permanently closed its running nuclear plants. Some old ones were shutdown & will be decommissioned.

  Japan cleaned up & rebuilt the destroyed cities Hiroshima & Nagasaki doing a Herculian task. Likewise it will improve & run again its 50 nuclear power plants.

  Regards,
  S. Jayabarathan.

 11. Lavanya Sundararajan ✆ lavanya.sundararajan@gmail.com

  9:06 AM (41 minutes ago)

  to tamizhamutham

  மொத்த இந்திய தேவையில் 2% மட்டுமே உதவும் அணு மின் உலைக்கு ஏன் இத்தனை சப்பை கட்டு?

  ++++++++++++++++

  அன்புள்ள லாவண்யா,

  உங்கள் பார்வை குறுகிய பார்வை !!!. தூரப் பார்வையன்று !!!

  2% -3% அணுமின்சாரம் = 5000 மெகாவாட். கூடங்குளம் 2000 மெகாவாட் தரும். ஆக மொத்தம் 7000 மெகாவாட்.

  7000 மெகாவாட் தரும் 22 அணுமின் நிலையத்துக்கு உபரிச் சாதனங்கள் விற்க 100 மேற்பட்ட இந்தியத் தொழிற்சாலைகள் அனுதினம் இயங்கி வருகின்றன. இவற்றை மூடுவதால் மின்னாற்றல் குறைவதுடன் ஆயிரக் கணக்கான வேலைகள் இந்தியாவில் நாசமாகும்.

  ஜெயபாரதன்

 12. How are they compensating the deficit? Cola based plants or Hydro power plants? Can you please share deatils?

  //1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?//

 13. ஜப்பானின் 50 அணுமின் உலைகள் சோதிக்கப்பட்டு செம்மையா கின்றன நிறுத்தப்பட்ட அணு உலைகள் தீய்ந்த எருக்கோல்களை வெப்பத் தணிப்பு செய்து இயங்கிக் கொண்டுதான் உள்ளன. நிரந்தரமாய் நிச்சயம் அவை மூடப்படா.

  சி. ஜெயபாரதன்.

 14. அன்புள்ள லாவண்யா,

  வெறும் காற்றாடி, சூரிய சக்தி, சாணி வாயு மட்டும் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் முழுமையாய்த் தொடர்ந்து பரிமாற முடியாது. அவை ‘சுவிங் லோடு மின்சாரம்’ மட்டும் தரும், நமக்குப் பேரளவில் மின்சாரம் தொடர்ந்து தரும் அனல் மின்சாரம், அணு மின்சாரம் தேவை ‘அடிப்படை லோடு’ தேவைக்கு. புனல் மின்சாரம் வரட்சிக் காலத்தில் குறைந்து விடும். எல்லாம் நமக்கு தேவையே.

  சூரியக் கதிரொளி மின்சாரம் பகலில் 8 முதல் 10 மணிநேரங்கள் கிடைக்கலாம். மழைக்காலத்தில் மின்சாரம் கிடைக்காது. இதை வைத்துத் தொடர்ந்து பகலும் இரவிலும் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகளும், கோடிக் கணக்கான வீடுகளும் எப்படித் தொடர்ந்து மின்சாரம் பெறும் ?

  உங்களுக்கு அடிப்படை மின்சார ஆற்றல் (பேஸ் லோடு பவர் Base Load Power) என்றால் என்ன வென்று தெரியமா ? அதாவது எப்போதும் தொடர்ந்து பரிமாறும் பேரளவு மின்சக்தி)

  சுவிங் லோடு பவர் (Swing Load Power) என்றால் கூடிக் குறைக்க ஏதுவான மேற்படை மின்சாரத் தேவை. காற்றாடி, சூரிய ஒளி போன்ற சிற்றளவு மின்னாற்றல்.

  2200 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க எத்தனை பெரிய தளப்பரப்பு தேவை ? சூரிய ஒளி மின்சாரம் 8 -10 மணிநேரங்கள் மட்டும் கிடைக்கலாம். மழைக்காலத்தில் மின்சாரம் கிடைக்காது. 2200 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க எவ்வளவு செலவாகும் ? அதை எப்படிச் சேமித்து வைப்பது ? அதைப் பல மைல் தூரத்துக்கு எப்படி அனுப்புவது ? அதனால் மின்வட அனுப்பு இழப்பு எவ்வளவு ? சொல்லுங்கள் பார்க்கலாம்.

  சி. ஜெயபாரதன்.

 15. செல்வன் ✆

  to tamizhamutham, பண்புடன்
  பசுமைவாதிகளின் பஞ்சுமிட்டாய்: சூரியசக்தி மின்சாரம்

  பசுமைவாதிகளின் பஞ்சுமிட்டாய்: சூரியசக்தி மின்சாரம்

  கட்டுரை ஆசிரியர்: ஜான் லாம்பர்க்

  மொழிபெயர்ப்பு மற்றும் மசாலா சேர்த்தல் ஆசிரியர்: செல்வன்

  மூலகட்டுரை:

  http://www.slate.com/articles/news_and_politics/project_syndicate/2012/02/why_germany_is_phasing_out_its_solar_power_subsidies_.html

  பூமி முழுக்க ஒரு வருடத்துக்கு தேவைப்படும் மின்சாரத்தை ஒருமணிநேர சூரியவெளிச்சத்தை கொண்டு அடையமுடியும். உலகம் முழுக்க தேவைப்படும் எரிசக்தியை சகாரா பாலைவனத்தில் 2.5% நிலபரப்பை சோலார் பேனலால் மூடுவதால் மட்டுமே அடைய முடியும்.!!!

  இதனால் சூரியசக்தி மின்சாரம் பசுமைவாதிகளின் இட்டுகட்டப்பட்ட புவிவெப்பம பிரச்சனையை தீர்க்கும் புதிய லேகியமாக ஆகிவிட்டது. இந்த ஜோக்கர்களின் விஷபரிட்சைக்கு ஐரோப்பிய நாடுகள் தான் பரிசோதனை கூடங்களாகின.ஜெர்மனி அரசு சூரியசக்தி மின்சாரத்துக்கு $130 பில்லியனை மானியமாக அள்ளி வழங்கியது.போனவருடம் மாத்திரம் ஜெர்மானியர்கள் 7.5 கிகாவாட் அளவு சோலார் பேனல்களை நிறுவினார்கள்.இது ஜெர்மன் அரசு கணக்குபோட்டதை விட இரு மடங்கு அதிகம்.இதன் விளைவு ஜெர்மனி மின்பயனாளர் ஒவ்வொருவருக்கும் தலா வருடம் $260 அளவு மின்கட்டணம் அதிகரித்தது.

  இதனால் ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சிலா மார்க்கலின் அமைச்சரவையில் சூரியசக்தி மின்சாரம் “பணத்தை தொலைக்கும் புதைகுழி” என்ற கூக்குரல்கள் எழ துவங்கிவிட்டன.ஜெர்மானிய பொருளாதார அமைச்சர் பிலிப் ராஸ்லர் “சூரியசக்தி மின்சாரம் நாட்டின் பொருளாதாரத்துக்கு வந்த கேடு” என புகார் கூறியுள்ளார்.

  நல்லதொரு கனவு இப்படி நைட்மேராக மாற காரணம் என்ன?

  சூரியசக்தி இலவசம்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோலார் பேனல்கள் மிக்க விலை உயர்ந்தவை. நிலக்கரி, அணுமின்சாரம் ஆகியவற்றை விட சூரிய மின்சாரம் நான்கு மடங்கு விலை உயர்ந்தது. ஜெர்மனி பவுதீக விஞ்ஞானிகள் சங்கம் கூறூவது போல “இத்தனை கோடி செலவில் நிறுவப்பட்ட சோலார் பேனல்களால் ஜெர்மனியின் ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்தை கூட மூட வைக்க முடியவில்லை”.காரணம் ஜெர்மனியின் 1.1 மில்லியன் சோலார் அமைப்புகள் சேர்ந்து செய்யும் ஒட்டுமொத்த மின் உற்பத்தியும் மூச்சை பிடித்து கொள்ளுங்கள். ஜெர்மனியின் மின் உற்பத்தியில் வெறும் 0.3% மட்டும்தான்…..

  இத்தனை கோடிகலை கொட்டியும் எந்த பலனும் இல்லாததன் விளைவாக ஜெர்மனி பக்கத்து நாடான பிரான்சில் உற்பத்தியாகும் அணு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி இருக்கிறது.2022ல் அனைத்து அணு உலைகளையும் மூடுவோம் என அறிவித்துவிட்டு அணுமின்சாரத்தை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்வது ஜெர்மனி வேலைகளை பிரான்சுக்கு ஏற்றுமதி செய்வதுபோல் தான்.

  இத்தனை சோலார் பேனல்களை நிறுவியதால், இத்தனை கோடிகளை செலவு செய்ததால் புவிவெப்பமய பிரச்சனை எந்த அளவு தீர்ந்தது?சோலார் பேனல்களில் கொட்டப்பட்ட பணத்தால் நூறு ஆண்டுகள் கழித்து அதிகரிக்கவிருக்கும் புவிவெப்பம் 23 மணிநேரம் தள்ளி போகும் என கண்டுபிடித்துள்ளார்கள்.அதாவது உலகம் 2112 பிப்ரவரி 18ல் அடையும் வெப்பத்தை ஒரு நாள் தள்ளி 2112 பிப்ரவரி 19ல் அடையும்.இதற்கு இப்போது 130 பில்லியன் டாலர் செலவு.

  கெட்ட செய்திகள் மேலும் வருகின்றன.அதாவது கேப் அன்ட் டிரேட் விதிமுறைகளின்படி ஜெர்மனி சோலார் பேனல்களில் சேமித்த கார்பன் எமிஷன் ஐரோப்பிய யூனியன் முழுவதற்கும் சொந்தம் என்பதால் இதனால் கிரேக்கமும், ஸ்பெயினும் அதிக அளவில் கார்பனை வெளியிடலாம். ஆக ஒட்டுமொத்தத்தில் ஜெர்மனி சேமித்த கார்பனை மற்ர நாடுகள் வெளியிடுவதால் உலகம் 2112 பிப்ரவரி 18ல் அடையும் வெப்பத்தை அன்றே அடைந்துவிடும்.ஒரு நாள் கூட தள்ளிபோகாது.ஜெர்மனி வரிசெலுத்துபவர்களுக்கு 130 பில்லியன் தண்ட செலவு ஆனது மட்டும் அப்படியே இருக்கும்.

  சரி..சோலார் பேனல்கள் உற்பத்தியால் வேலைவாய்ப்புகளாவது அதிகரித்ததா என கேட்கிறீர்களா?ஆம்..சீனாவில். சோலார் பேனல்கள் பெருமளவில் உற்பத்தி ஆவது சீனாவில் என்பதால் ஜெர்மானியர்கள் கொட்டிகுவித்த பணத்தால் சீனாவில் நிறைய வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. பிரான்சில் இருந்து அணு மின்சாரத்தை வாங்குவதால் பிரான்சில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. ஜெர்மனி அணு உலைகளை 2022ல் மூட இருப்பதால் அவர்களுக்கு இதனால் வேலை இழப்பு மாத்திரமே மிச்சம். ஜெர்மனி பணமும், ஜெர்மானியர்களின் வேலைகளும் பிரான்சு, சீனாவுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரித்தன. சோலார் பேனல்களை நிறுவுதல், பழுது பார்த்தல் போன்ற வேலைகள் மட்டுமே ஜெர்மானியர்களுக்கு மிச்சம்.அந்த வேலைகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் $175,000 அளவு செலவானது என மதிப்பிடபடுகிறது.இந்த அளவு செலவில் வேலைகளை உருவாக்கியும் அதில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் இது வெறும் டெட் இன்வெஸ்ட்மெண்ட் மட்டுமே.

  ஆக மொத்தத்தில் பசுமைவாதிகளின் இட்டுகட்டப்பட்ட புவிவெப்பமய நோய்க்கு அவர்களே தயாரித்த போலிலேகியமான சூரியசக்தி மின்சாரம் புவிவெப்பயமத்தையும் குறைக்கவில்லை, மின்கட்டணத்தையும் உயர்த்தியது, மின்சாரத்தையும் கொடுக்கவில்லை, ஜெர்மனியில் இருக்கும் வேலைகளையும் அழித்து, சீனாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்பதுதான் மிச்சம். ஆனால் இதில் வியப்படைய எதுவும் இல்லை. சின்னபசங்க வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள்.ஒரு நாடே சிறுவர்களின் பேச்சை கேட்டு ஆடினால் விளைவு எப்படி இருக்கும்? இதோ இப்படிதான்.

  • ஜான் லாம்பர்க் எழுதிய கட்டுரையைச் சுட்டிக்காட்டி, ஜெர்மனி சூரியமின் திட்டத்தைக் கைவிடப்போவதாக மகிழ்கிறார் ஜெயபாரதன். ஜான் லாம்பார்க் எப்படிப்பட்டவர் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா… காற்றாலை மின்சாரம், சூரியமின்சாரம் இவையெல்லாம் சாத்தியமற்றவை என்று எழுதுவதுதான் இவருக்கு வேலை. குண்டுபல்புகளுக்குப் பதிலாக சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்துவதுகூட பயனற்றது என்று எழுதுபவர். குண்டுபல்புகளை ஒழித்துவிட்டு சிஎப்எல்-க்கு மாற வேண்டும், விரைவில் எல்ஈடி தொழில்நுட்பம் இன்னும் வர வேண்டும் என்று உலகம் முழுவதும் ஆர்வம் அதிகரித்து வருகிற இன்றைய காலகட்டத்தில் ஜான் லாம்பர்க் சொல்வதை யாரேனும் ஏற்க முடியுமா… இவரை ஜெயபாரதன் தூக்கிப்பிடிப்பதில் வியப்பு ஏதும் இல்லை. இந்தக்கட்டுரையை மட்டும் சுட்டுகிற ஜெயபாரதன், ஐரோப்பிய யூனியன் 2020க்குள் 3 சதவிகிதம், 2030க்குள் 10 சதவிகிதம் சூரியமின்சாரம் பெற இலக்கு வைத்திருக்கும் திட்டத்தை சுட்டிக்காட்ட மாட்டார் என்பதில் யாராவது வியக்க முடியுமா என்ன… ஏனென்றால், இவர் பொறியாளர் – இவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்க வேண்டும். மேலும் விவரம் அறிய விரும்புவோர் இங்கிருந்து பதிவிறக்கலாம் –
   http://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=6&ved=0CH0QFjAF&url=http%3A%2F%2Fwww.easac.eu%2Fhome%2Freports-and-statements%2Fdetail-view%2Farticle%2F%2Fconcentratin.html&ei=P0pvT8rPEIztrQeg3JmgDg&usg=AFQjCNHl9cLR5ktXjNZ0AFpw_pm87ObiRQ&sig2=gVT05aCYDZ-2PK5OV4uFRQ

 16. செல்வன் ✆

  to tamizhamutham, பண்புடன்
  பசுமைவாதிகளின் புதிய லேகியம்: காற்றாலை மின்சாரம்

  காற்றாலை மின்சாரம் பசுமைவாத அமைப்புகளால் மரபுசார் மின்சக்திக்கு (நிலக்கரி, நீர், எரிவாயு, அணு) மாற்றாக முன்வைக்கபடுகிறது. காற்றில் சுழலும் காற்றாடிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி ஆவதால் அது பசுமையானதாக கருதபடுகிறது. காற்ராலைகளை நாடெங்கும் நிறுவி மின்சாரம் எடுத்து மரபுசார் மின்சார அமைப்புக்களை நாளடைவில் மூடிவிட பசுமைவாதிகள் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு நிறைவேறுவதில் உள்ள தடைகளை மேலே உள்ள கட்டுரை விளக்குகிறது.

  காற்றாலை மின்சாரத்தில் என்ன பிரச்சனை?

  காற்று எங்கே, எப்போது அடிக்கிறது, மின்சாரம் எங்கே, எப்போது தேவைபடுகிறது என்பது தான் காற்றாலைகளில் உள்ள மிக முக்கிய பிரச்சனை. மின்சாரம் பெரும்பாலும் சென்னை,கோவை, நெல்லை மாதிரி பெருநகரங்களில் தேவைபடுகிறது. பெருநகரங்களில் காற்று அதிகம் அடிப்பதில்லை. ஆள் நடமாட்டம் குறைந்த வயல்வெளிகளில் தான் அடிக்கிறது. அதுவும் வாடைகாலத்தில் தான் காற்று மிகுதியாக அடிக்கிறது.

  இருப்பதிலேயே செலவு குறைந்த மின்சாரம் புனல் மின்சாரம். அதனால் அதிக அளவில் அணைகட்டுகள் கட்டபட்டு மின்சாரம் எடுக்கபடுகிறது. கோடை காலத்தில் ஆற்றில் நீர்வரத்து குறையும்போது கடும் மிந்தட்டுபாடு ஏற்படுவது வாடிக்கை.துரதிர்ஷ்டவசமாக கோடைகாலங்களில் காற்றும் அதிகம் அடிப்பதில்லை என்பதால் காற்றாலைகள் இம்மாதங்களில் அதிகம் மின் உற்பத்தி செய்வதில்லை.ஆக மின்சாரம் தேவைபடும் நகரங்களுக்கு, தேவைபடும் கோடை மாதங்களில் காற்றாலை மின்சாரம் கை தருவதில்லை.

  ஆரம்பகாலகட்டத்தில் காற்ராலை மின்சாரத்தை ஊக்குவிக்க தமிழக அரசு செய்த இன்னொரு செயல் அதற்கு வினையாக வந்து முடிந்தது.அதாவது கம்பனிகள் காற்றாலைகளை நிறூவ அரசு மானியம் அறிவிக்கபட்டது, கம்பனிகள் காற்றாலை மின்சாரத்தை நிறுவி அதில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு வழங்கிவிட்டு தாம் இருக்கும் இடத்தில் அந்த மின்சாரத்தை மின்வாரியத்திடமிருந்து பெற்றுகொள்ளலாம் என ஒரு சேமிப்பு திட்டத்தை அரசு அறிவித்தது.

  இது கம்பனிகளுக்கு நல்ல லாபமாகவும், அரசுக்கு பேரிழப்பாகவும் அமைந்தது.காரணம் என்னவெனில் தமிழக மின்வாரியம் மின்சாரத்தை விவசாயிகளுக்கு இலவசமாகவும், வீடுகளுக்கு சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 1.10 ரூபாய் விலையிலும் வழங்குகிறது. காற்றாலை மின்சாரத்தை கம்பனிகளிடம் யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் என்ற விலையில் வாங்குகிறது. ஆக வீடுகள், விவசாயிகள் ஆகியோருக்கு விற்கும் யூனிட் ஒவ்வொன்றிலும் அரசுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை கம்பனிகளிடம் அதிக மின்கட்டணம் வசூலித்துதான் (யூனிட்டுக்கு 5.75) அரசு சமாளித்து வந்தது.

  கம்பனிகள் காற்றாலைகளை நிறுவியதும் மின்சாரம் அதிகம் தேவைபடாத வாடைகாலத்தில் அவை பெரும் அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்தன.அதை அரசுக்கு கொடுத்துவிட்டு வருடம் முழுவதும் அந்த மின்சாரத்தை அரசிடம் வாங்கின. ஆக சென்னையில் இருக்கும் கம்பனி கன்யாகுமரி அருகே ஆரல்வாழ்ய்மொழியியில் காற்ராலையை நிறுவி வாடைகாலத்தில் ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து அரசுக்கு கொடுத்துவிட்டு சென்னையில் ஆயிரம் யூனிட் மின்சாரத்தை பெற்றுகொண்டது. வாடை, மழை காலங்களில் மின் தட்டுபாடு குறைவு என்பதால் அந்த மின்சாரத்தால் அரசுக்கு பலனேதும் இல்லை. முக்கியமாக உற்பத்தி செய்த மின்சாரத்தை சேமிக்க இயலாது என்பதால் அதிக மின்சாரம் அரசின் கையிருப்பில் இருந்தால் அதை சேமிக்க இயலாது. தேவைக்கு மேல் உற்பத்தி ஆன ஒவ்வொரு யூனிட்டும் வீண்தான்.

  இன்னொரு உதாரணம் சொல்லவேண்டுமெனில் “கிராமத்தில் இருக்கும் என் வீட்டு கிணற்று நீரை பஞ்சாயத்துக்கு வழங்கிவிட்டு அதே அளவு நீரை சென்னை குடிநீர் வாரியத்திடம் பெற்றுகொள்வது”. மழைகாலத்தில் நான் ஆயிரகணகான லிட்டர் நீரை பஞ்சாயத்துக்கு வழங்குவேன். பஞ்சாயத்து என் வீட்டில் இருந்து குடிநீர் தொட்டிக்கு செலவு செய்து குழாய் அமைத்து நீரை கொண்டு செல்லும். மழைகாலத்தில் நான் அளிக்கும் நீரால் எந்த பயனும் இல்லை. அதே சமயம் கடும் குடிநீர் தட்டுபாடு இருக்கும் சென்னையில் அதே அளவு நீரை நான் ஜம் என பெற்றுகொள்வேன்.

  இதை விட முக்கிய பிரச்சனை என்னவெனில் காற்ராலைகளில் உருவாகும் மின்சாரத்தை க்ரிட்டுகள் மூலம் தேவைபடும் இடங்களுக்கு வினியோகம் செய்வது. சுண்டைகாய் கால்பணம், சுமைகூலி முக்கால் பனம் என்பதற்கேற்ப காற்ராலை சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்தாலும் அதை க்ரிட்டுக்கு கொண்டு செல்ல கம்பிகள் நிறுவுதல், நிலம் கையகபடுத்தல் என அரசுக்கு ஏகபட்ட செலவு. உதாரணமாக கோவை நெகமத்தில் நூறு காற்ராலைகள் இயங்கி மின்சாரம் எடுக்கின்றன. அந்த மின்சாரத்தை சரியாக வினியோகிக்க மின் நிலையத்தை நெகமத்தில் அமைக்க முடியாது.காரணம் காற்ராலை சீசனல் மின்சாரம். வருடத்தில் 3 மாதம் மட்டுமே இயங்கும்.இதை நம்பி என்னவென மின்நிலையத்தை அமைப்பது?அதனால் கம்பிகளை நிறுவி மின்சாரத்தை கோவை மின்நிலையத்துக்கு அனுப்பி அதில் 40% டிரான்ஸ்மிஷன் லாஸ் ஆகும்.பல சமயம் இம்மாதிரி க்ரிட் பிரச்சனையால் காற்ராலை மின்சாரம் உற்பத்தி ஆனாலும் அதை அரசால் எங்கும் வினியோகம் செய்ய இயலாமல் அது வீண் மட்டுமே ஆனது.

  யோசித்து பாருங்கள். ஊருக்கு ஒதுக்குபுரமாக பட்டிகாட்டு பகுதியில் நூறு காற்றாலை வருடம் நான்கு மாதம் ஓடும். அதை நகருக்கு கொண்டுசெல்ல அரசு ஏகபட்ட செலவு செய்யவேண்டும். நிலம் கையகபடுத்தி, கம்பிகளை நூற்றுகணகான மைல்கள் இழுத்து மின் நிலையங்கள் திவாலாகும் நிலையை இது உருவாக்கியது.கம்பனிகள் ஜாலியாக இம்மாதிரி பயனற்ற இடத்தில், பயனற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்து சென்னை மாதிரி இடங்களில் நம்பகமான அணுமின்சாரம், நிலக்கரி மின்சாரம் ஆகியவற்றை பெற்றுகொண்டன. வருமானத்துக்கு வருமானம் நஷ்டம், செலவுக்கு செலவும் தண்டம்.

  கூட்டி கழித்து கணக்குபோட்டு தமிழக அரசு மின்சேமிப்பு முறையை ரத்து செய்துவிட்டது.பலகோடி ரூபாய்களை நிலுவையில் வைத்தும் விட்டது. அரசின் இம்மாதிரி மானியத்தை நம்பி துவக்கபட்ட காற்ராலைகள் மூடபடும் நிலையும் உருவாகிவிட்டது.

  பசுமை இயக்கத்தினரின் கனவு மின்சாரமான காற்றாலை மின்சாரம் தமிழகத்தில் அம்பேலான கதை இதுவே.காற்றாடிகளை நம்பி அணு உலையை மூட சொல்லும் கோமாளிகளுக்கு தான் அன்றே “அரசனை நம்பி புருஷனை கைவிடுதல்” என்ற பழமொழியை தமிழ் மூதறிஞர்கள் சொல்லி வைத்தார்கள்.இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை..அந்த மேலோர் சொன்னதை மறந்தார்!

 17. அலெக்ஸ், குமரன், வேல்முருன் போன்றவர்களின் கேள்விகளுக்கெல்லாம் இவர் பதில் சொல்லவே மாட்டார். புகழேந்தி புளுகுகிறார் என்றால், பகிரங்கமாக உலாவரும் பதிவுகள் வெளியிட்டவர்கள்மீது அணுசக்தி நிறுவனம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கல்பாக்கத்தில் கதிர்வீச்சால்தான் நிகழ்ந்தது என்று கேட்கிறாரே, கதிர்வீச்சால் நிகழவில்லை என்று கனடாவில் உட்கார்ந்து கொண்டு இவர் மட்டும் எப்படிக் கூறுகிறார். ஜப்பானில் அணுமின் உலைகளுக்கு எதிராக இயக்கம் தீவிரமடைந்து வருகிறதைப் பற்றியும் பேசவே மாட்டார். இந்திய அணுமின் நிலையங்கள் உண்மையில் அவற்றின் திறனளவுக்கு உற்பத்தி செய்ததே இல்லையே என்று கேட்டால் அதற்கும் இவர் பதில் சொல்ல மாட்டார். அணுஉலைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமது இயந்திரக் கோளாறுகளுக்கு பொறுப்பேற்கும் நிபந்தனையை ஏன் விலக்கக் கோருகின்றன என்றால் அதற்கும் பதிலளிக்க மாட்டார். உலகில் எந்தக் காப்பீட்டு நிறுவனமும் ஏன் அணுஉலைகளுக்கு காப்பீடு வழங்குவதில்லை என்பதற்கும் பதிலளிக்க மாட்டார். சூரியஒளி மின்சாரத்தை பலமைல் தூரத்திற்கு அனுப்புவதற்கு வழி்த்தட இழப்பு ஏற்படுமாம், அணுமின்சாரத்தை அனுப்பும்போது இழப்பு ஏற்படாதோ… இது பொறியாளர் சொல்கிற பதிலாம்… அணுமின் உபரித் தொழிற்சாலைகளை மூடினால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை போகுமாம். பதிலாக காற்றாலை மின்சாரத்தில் இன்னும் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைக்குமே… உண்மையில் அணுமின் நிலையங்களை மூடினால் பாதிக்கப்படுவது இவர் பணியாற்றி வந்த காண்டு போன்ற அணுஉலை நிறுவனங்கள்தான். அதனால்தான் இவர் இந்தக் கூப்பாடு போடுகிறார். வாழ்க இவரது தேசபக்தி… படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான்.

 18. நான் திண்ணைக்கு வாரக் கட்டுரை எழுதுகிறேன். அலெக்ஸ், குமரன், வேல்முருன் போன்றவர்களின் வினாக்களுக்குப் பதில் கொடுக்கிறேன். பொறுப்பீர் சற்று.

  ஜெயபாரதன்

  +++++++++++++++++++

 19. ok Let us enjoy the current world with all the luxuries for us with nuclear power and screw up the world for future generation. let our children end up with nuclear /genetic mutation ,cancer issues etc. ( I know personally three people who have worked in Kalpakkam retired with cancer )

  Nuclear power is the best in the world. Germans and Japanese are fools by abandoning it. We are more smarter and let us embrace it whole heartedly!
  you cannot convince any body with a closed mind !!!!

 20. //==============//
  அன்புள்ள லாவண்யா,

  உங்கள் பார்வை குறுகிய பார்வை !!!. தூரப் பார்வையன்று !!!

  2% -3% அணுமின்சாரம் = 5000 மெகாவாட். கூடங்குளம் 2000 மெகாவாட் தரும். ஆக மொத்தம் 7000 மெகாவாட்.

  7000 மெகாவாட் தரும் 22 அணுமின் நிலையத்துக்கு உபரிச் சாதங்கள் விற்க 100 மேற்பட்ட இந்தியத் தொழிற்சாலைகள் அனுதினம் இயங்கி வருகின்றன. இவற்றை மூடுவதால் மின்னாற்றல் குறைவதுடன் ஆயிரக் கணக்கான வேலைகள் இந்தியாவில் நாசமாகும்.

  ஜெயபாரதன்
  ///////////////////////=======

  ஐயா,

  நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால், 22 அணு உலைகள் சேர்ந்து, 7000 மெகா வாட் தான் தருகின்றன. ஒரு அணு உலை அமைக்க குறைந்தது, 10000 கோடி என்று வைத்துக் கொண்டாலும், மொத்தம், 22 கோடிகள் செலவாகி இருக்கின்றன. இவ்வளவு செலவு செய்தும், தமிழ்நாட்டு தேவையைக்கூட (13,000 mw) உங்களால (விஞ்ஞானிகளால்) பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனை விலை குறைவு என்று வேறு சொல்லுகிறீர்கள்… நீங்க ஒரு பெரிய விஞ்ஞானி பாஸ்.

  -முருகன்

 21. // அலெக்ஸ், குமரன், வேல்முருன் போன்றவர்களின் கேள்விகளுக்கெல்லாம் இவர் பதில் சொல்லவே மாட்டார்.
  //நான் திண்ணைக்கு வாரக் கட்டுரை எழுதுகிறேன். அலெக்ஸ், குமரன், வேல்முருன் போன்றவர்களின் வினாக்களுக்குப் பதில் கொடுக்கிறேன். பொறுப்பீர் சற்று.

  நல்லா ரூம் போட்டு யோசிக்கனும்ல..கேட்ட கேள்விகள் அப்படி..ஜெயபாரதன்..இங்கு யாரோ ஒருவர் பின்னூட்டத்தில் சொன்னதுபோல் நீங்கள் சொல்லும் சப்பைகட்டுக்கள் எந்த பொறியாளரும் அல்லது இது குறித்து படிப்பறிவு உள்ள எவரும் நினைத்தால் சொல்லக்கூடியது..

  உங்களுக்குத் தேவை அறிவியலோடு கூடிய ஆன்மிகம்..சோற்றுக்கு மாரடிக்கும் மனதை கழட்டி வைத்து விட்டு ஒரு மனிதனாக “அலெக்ஸ்” அவர்களின் நேரடியான கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற இயலாது என்றே எண்ணுகிறேன் ..இப்படி நான் சொல்லுவதை உங்களால் புரிந்து கொள்ளக் கூட இயலாது என்பது தான் சோகம்..
  எங்கோ கனடாவில் வாழும் நீங்கள் எம் தென் தமிழகம் சுடுகாடாக போக வாய்ப்பு இல்லையென்ற கருத்தைக் கூற என்ன யோக்கியதை உள்ளது?

 22. please do not say this kudankullam plant is built to provide electric supply to Tamilnadu. I lived in sadras close to kalpakkam. there I have seen very very poor eletricity supply. most of them supplied to other states. even this kudankulam plant is built close to kerala. And bascally this plant posed to bult in kerala.but made it close to their state they want electrcity but not risk. we are the “pandy Tamil” we will not ask anything? Even after this plant Tamilnadu sholud beg Central government.

 23. நீங்கள் பல வருடங்களாக குடும்பத்துடன் அணு உலை அருகில் வசிக்கிறேன் எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்கிறீர்கள் ,தினம் ஒரு பாக்கெட் சிகரெட் புகைக்கும் என் நண்பனிடம் , இது கெடுதல் இல்லையா என்று கேட்டதற்கு சொன்னான் ,என் தந்தை ஐம்பது வருடங்களாக புகை பிடிக்கிறார் ,என் தாத்தா எண்பது வயது வரை புகை பிடித்தார் அவர்ககளுக்கு ஒன்று ஆகவில்லை ,அதனால் எனக்கும் ஒன்றும் ஆகாது.உங்கள் இருவரின் கருத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

 24. //I worked there as Tech Supdt for 4 years and improved its nuclear safety.
  மிகவும் வேடிக்கையான பதில்.
  இங்கொன்றும் அங்கொன்றுமாக Google வலை தளத்தில் கிடைத்த செய்திகளை,தமிழாக்கம் செய்து வெளியிட்டு கொண்டு ஞானி அவர்களுக்கு பதிலடி கொடுத்ததாக மார் தட்டிகொள்ளவேண்டம்.
  உங்களுக்கு போதுமான அறிவு இருந்திருந்தால் அலெக்ஸ், குமரன், வேல்முருன்- இவர்களின் கேள்விக்கு அப்போதே பதில் கொடுத்திருந்திருபீர்கள்.
  பாவம், நீங்கள் போய் திண்ணையில் உக்கார்ந்துவிட்டீர்கள் …

 25. அலெக்ஸ் வினாக்களுக்கு என் பதில்

  1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

  ஜப்பானில் 52 அணு உலைகள் நிறுத்த நிலையில் சோதிக்கப்பட்டுச் செப்பனிடப் படுகின்றன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு மூடப்பட்ட ஒரே அணு உலை செர்நோபில் நாலாவது யூனிட் ஒன்றுதான். புகுஷிமா விபத்துக்குப் பிறகு உலகில் ஓர் அணு உலை கூட மூடப்பட வில்லை. நிறுத்திய அணு உலைகளில் வெப்பம் தணிப்பு நிகழ்ந்து இயங்கிய நிலையில் அவை யாவும் உயிருடன் உள்ளன. நிறுத்திய அணு உலைக்கும், மூடிய அணு உலைக்கும் வேறுபாடு உள்ளது.

  +++++++++++++++++

  2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

  இந்திய அணு உலைகளில் கதிரடி வீசும் சிறு விபத்துகள் நிகழ்வது உண்மைதான். உலகில் இயங்கும் 430 அணு உலைகளிலும் நேர்ந்துள்ளன. இவற்றால் பாதிப்பு நேருவதில்லை. இந்தச் சிறு தவறுகளால் அணு உலைகள் மூடப் படுவதில்லை. காரணங்கள் ஆய்வு செய்யப் பட்டு அதே தவறு மீளாமல் கண்காணிப்பர்.

  ++++++++++++++++++

  3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

  டாகடர் அப்துல் கலாம் கூறிய 57 மரண நபர்கள் விபத்தின் போதும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் உயிரிழந்தவர். கார்பசாவ் கூறியது 25 வருட மொத்த எண்ணிக்கைமிருவர் கூற்றும் மெய்யே.

  ++++++++++

  4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

  கதிரியக்கத் தீவிர அளவே புற்றுநோய் விளைவைத் தூண்டுவது. சிறியதளவு கதிரடியை உடல் தாங்கிக் கொள்ளும். குமரிக்கரை மணலில் தோரியம் உள்ள மானசைட் மணல் ஏராளமாய் இருக்கிறது. அங்கே வாழும் தமிழரும், கேரளா மக்களும் திடகாத்திரமாய் இருக்கிறார். தோரியம் எடுக்கும் ஆலையும் அங்கே உள்ளது. கல்பாக்கத்தின் அருகே வாழ்பவர் சிலர் கதிரடி பட்டுப் புற்று நோயால் மடிகிறார் என்பதை டாகடர் சாந்தா மறுத்துள்ளார்.

  ++++++++++++

  5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது;அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மை யானால்,இப்போது அங்கே ஆயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  அமெரிக்காவிலும் கனடாவிலும் ஏராளமான அணு உலைகள் ஆற்றின் கரையிலும், ஏரிக் கரையிலும் ஜனத்தொகை மிக்க நகரங்களின் அருகில்தான் உள்ளன. ஜனத்தொகை பெருகினால் அணு உலையை நகர்த்திச் செல்ல முடியாது.

  +++++++++++++++++++++

  6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

  1974 அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு மேலை நாடுகள் இந்தியாவுக்கு அணு உலைச் சாதனங்களை விற்க மறுத்து விட்டன. அதனால் இந்தியா தன் காலில் நிற்க வேண்டியதாயிற்று. 1974 இல் இந்தியாவிடம் இருந்தவை 4 அணுமின் உலைகள். 2012 இல் இப்போது உள்ளவை 20. 1988 இல் ரஷ்யா மட்டும் 1000 மெகாவாட் இரட்டை அணுமின் உலைகள் கட்ட கூடங்குளத்தில் முன்வந்தது. தாராப்பூரில் 500 மெகாவாட் இரட்டை கனநீர் அணு உலைகளை இந்தியா முழுக்க முழுக்க சுய முற்சியில் செய்து இயக்கியது ஒருமகத்தான சாதனை.

  ++++++++++++

  7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

  இது விபரம் தெரியாத மூடர் கூறும் தவறான கருத்து.

  See this site for all the details [http://164.100.50.51/ (Nuclear Power Corporation of India Ltd)]

  ++++++++++

  8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

  தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.

  +++++++++

  9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

  தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.

  ++++++++++++++++

  10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

  தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை.

  +++++++++++++++

  11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

  ரஷ்யச் சாதனங்கள் உள்ள கூடங்குளம் அணுமின் உலைகள் இயங்கட்டும் முதலில். ஊழல் இல்லாத நிர்வாகம் எங்கே உள்ளது ?

  ++++++

  12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவ்ட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத்தெரியுமா

  தவறான யூகம். இதற்கு ஆதாரங்கள் ஏதுவும் இல்லை. கற்பனைக்கு எல்லை இல்லை.

  ++++++++++++++++

  13.உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள் காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  இந்தியா அரசு ஆயுள் காப்பீடுக்குத் தன் அணு உலைகளுக்குப் பொறுப்பேற்று உள்ளது. மற்ற நாடுகளுக்கு நாம் நியாயம் கூற முடியாது. தேவைக்கு அந்நிய அணு உலை வாங்குவது இந்தியா. அதன் நிபந்தனையை அந்நிய நாடு ஒப்புக் கொள்ளா விட்டால் என்ன ?

  ++++++++

  14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

  இந்தியா தன் தேசீயப் பாதுகாப்புக்குத் தனிப்பட்ட விதியை வைத்துள்ளது அதை யார் குறை கூறினால் என்ன ? புகார் செய்தால் என்ன ? யாரும் மாற்ற முடியாது. கோபாலகிருஷ்ணன் கட்டுப்பாட்டை அமெரிக்க முறையில் மாற்ற விழைகிறார். இந்தியப் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் விதிமுறைகள் ஏற்றதல்ல.

  +++++++++

  15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  அந்த அதிகாரிகளைக் கேளுங்கள்

  +++++++++++++++++

  16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  கூடங்குளம் இப்போது இயங்கப் போகிறது. ஆனால் அணு விஞ்ஞானி உதயகுமாரை எந்த விஞ்ஞானியும் மாற்றிவிட முடியாது.

  ++++++++++++++++
  சி. ஜெயபாரதன்

  • 1. ஜப்பானில் அணுஉலைகள் சோதிக்கப்படுகின்றன, அங்கே அதிகரித்து வரும் மக்களின் எதிர்ப்பையும் மீறி விரைவில் இயக்கப்படும் என்றே வைத்துக்கொள்வோம். வலுவான அணுசக்தி நெறிப்படுத்து ஆணையம் ஒன்றை உருவாக்குவது பற்றி தீவிர ஆலோசனை நடந்து வருகிறது அங்கே. மேலும் விவரங்களுக்கு நாளைய செய்திகளைப் பார்க்கவும். அதுவும் எப்படி – அணுஉலை நிறுவனங்களின் தாக்கத்திற்கு ஆளாகாத, முழு சுதந்திரம் கொண்ட நெறிப்படுத்தும் ஆணையம். ஒழுங்குக்குப் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள் என்பது உலகுக்கே தெரியும். அவர்களே மறுபரிசீலனை செய்து பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வலிமையான நெறிப்படுத்து முகமை அமைக்கப் போகிறார்கள். நம் இந்தியாவில் குற்றவாளி, வழக்குரைஞர், சாட்சி, நீதிபதி எல்லாம் ஒருவரேதான் – இங்கே ஜப்பானை உதாரணம் காட்ட எந்தத் தகுதியும் இல்லை.

   2. இந்திய அணுஉலைகளில் விபத்தே ஏற்பட்டதில்லை என்பதிலிருந்து கீழே இறங்கி இப்போது விபத்துகள் ஏற்படத்தான் செய்கின்றன…. ஆனால் கதிரடியால் யாரும் உயிரிழந்ததில்லை என்று சாக்குப்போக்கு சொல்கிறீர்கள். ஜப்பானில்கூட உயிரிழந்தவர்கள் உண்மையில் எத்தனை பேர் என்ற முழுமையான தகவல் இதுவரை தெரியாது. இங்கே என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதை எவரும் ஊகித்துக்கொள்ளலாம்.

   3. 57 மரண நபர்கள் விபத்தின் போதும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் உயிரிழந்தவர் என்று அப்துல் கலாம் கூறவில்லை. அப்துல் கலாம் சொன்னது இதுதான் – “செர்னோபில் அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் கேன்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 4000 பேர்கள் என்றும், நேரடியாக இறந்தவர்கள் 57 பேர்கள் என்றும் UNSCEAR என்ற அமைப்பு கணித்திருக்கிறது.”
   அணுஉலை கதிரியக்கத்தினால் ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அணுஉலை விபத்தின் உயிரிழப்புகளில் விஞ்ஞானிகள் சேர்க்க மாட்டார்கள் போலும்.

   4. குமரிப் பகுதியில் தோரியம் இருப்பது பற்றிய விழிப்புணர்வே இப்போதுதான் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் பற்றிய ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றால்தான் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்புகள் உள்ளன என்பது தெரிய வரும். சாந்தா அம்மையாரைப் பொறுத்தவரை, கதிரியக்கத்தால் புற்றுநோய் வராது என்று சொல்லும அளவுக்குப் போய்விட்டார்.

   5. அமெரிக்காவிலும் கனடாவிலும் கண்காணிப்பு அமைப்புகள் வலுவாக அமைக்கப்பட்டு தீவிரமாக இயங்குகின்றன. த்ரீமைல் தீவு விபத்துக்குப் பிறகு ஒரு லட்சம் கோடி டாலர் செல்வு செய்து கசிவை சுத்தம் செய்தார்கள். அதை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது.

   6. திரிக்கப்பட்ட தகவல். 1974இல் அணுவெடி சோதனைக்குப் பிறகு அணுஉலைகளை விற்க மறுத்து விட்டன என்றால் 1981, 84, 86, 91, 92, 93 என்று தொடர்ச்சியாக அணுஉலைகள் எப்படி உருவாயின… சரி, தடை விலகியபிறகு உருவானவை என்றே வைத்துக்கொண்டாலும், மன்மோகன்-அலுவாலியா கூட்டணி அறிமுகம் செய்த உலகமயமாக்கம் தொடங்கி 20 ஆண்டுகளில் சுமார் 12 உலைகள் நிறுவப்பட்டு இருபது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அணுஉலை மின்சாரத்தின் சராசரி உற்பத்தி 60 சதவிகிதம்தான். இத்தனை ஆண்டுகளாக அதிகரிக்காத உற்பத்தி விகிதம் இப்போது கூடங்குளம் வந்ததும் அதிகரித்து விடுமா என்ன… ஒருவேளை கூடங்குளத்திலிருந்து வேறு அணு உலைகளுக்கு கடன் கொடுத்து அதன் கணக்கில் காட்டப்படுமோ என்னவோ…

   7 – 8. இது விவரம் அறிந்த விஞ்ஞானி கூறும் தவறான தகவல். இணைத்துள்ள சுட்டியில் முழுதகவல் கிடைக்காது. சரியான தகவல் பெற
   http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=75
   கல்பாக்கத்தின் உற்பத்தித் திறனை எவரும் இங்கே பார்த்துக்கொள்ளலாம் – சராசரி 50 சதவிகிதத்துக்கும் குறைவுதான். இப்போதுதான் 65ஐ எட்டியுள்ளதாக காட்டப்படுகிறது. கூடங்குளம் என்ன லட்சணத்தில் இயங்கப்போகிறது என்பதை நாமும் பார்க்கத்தானே போகிறோம்… நாராயணசாமிகளுக்குக் கவலை இல்லை. நாளுக்கு ஒரு அறிக்கை விட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம். உங்களைப் போன்றவர்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.

   9. மழுப்பல். இதுகுறித்து ஆய்வு செய்யப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் தைரியம் இல்லாததால் வருகிற பதில்.

   10. இதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது பொய். கூடங்குளம் அணுஉலை பற்றிய விளக்க வரைபடம் ஒன்று அதன் வலைதளத்தில் இருக்கிறது. எதிர்பார்க்கப்படும் சுனாமியின் ஆபத்து என்று சுட்டிக்காட்டியிருப்பது வெறும் 5.4 மீட்டர்தான். அதற்காக 8 மீட்டர் உயர பாதுகாப்பு இருப்பதாகத்தான் அது காட்டுகிறது. உண்மையில் 2004 சுனாமியின் உயரம் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

   11. ஆக, இங்கும் ஊழல் இருக்கிறது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இந்த ஊழல் நிர்வாகம்தான் பாதுகாப்பான அணுஉலைகளை அமைக்கப்போகிறது இல்லையா.!!

   12. தவறான யூகம் அல்ல, நியாயமான அச்சம். ஜப்பானில்கூட யாரும் இப்படி ஒரு சுநாமி வரும் என்று கற்பனைகூட செய்திருக்கவில்லைதான். இயற்கைச் சீற்றங்கள் லாஜிக் பார்ப்பதில்லை.

   13. இது என்ன பதில் என்று புரியவில்லை. இந்திய அரசின் அணு உலைகளுக்கு இந்திய அரசே காப்பீடா… அதாவது, ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டால் இந்திய அரசுதான் இழப்பீடு தர வேண்டும் என்பதுதானே பொருள். அது வெளிநாட்டு இயந்திரத்தின் கோளாறாக இருந்தாலும் இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் இல்லையா… இதைத்தானே எல்லாரும் எதிர்க்கிறார்கள்.

   14. இந்தியாவுக்கு அமெரிக்க வழிமுறைகள் ஏற்றதில்லையா… அது எப்படி… என்னதான் வல்லாதிக்க நாடாக இருந்தாலும் நெறிப்படுத்து முறைகள் அங்கே சற்று வலுவாக உள்ளன என்பதாலா… அமெரிக்காவில் அதிகம் மூடி மறைக்க முடியாது, இந்தியாவில் எல்லாவற்றையும் மூடி மறைக்கலாம் என்பதாலா… மற்றதெற்கெல்லாம் அமெரிக்கா வேண்டும். கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் என்றால் மட்டும் அமெரிக்கவழிமுறை இந்தியாவுக்கு ஒத்துவராது, இல்லையா… நல்ல வாதம் ஐயா இது. அப்போதுதானே அணுஉலை நிறுவனங்கள் தம் இச்சைப்படி எல்லாவற்றையும் சாதித்துக்கொள்ள முடியும்…

   15. ஏன் இப்படி ஆத்திரப்படுகிறீர்கள்… பதில் இல்லை என்பதாலா… நீங்கள் தூக்கிப்பிடித்த லாம்பார்க் குரலுடன் உங்கள் குரலும் ஒத்திசைகிறது என்பது பகிரங்கமாகி விட்டது என்பதாலா…

   16. அதுதான் தெரிகிறதே… நாங்கள் யாருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்ல, நாங்கள்தான் எல்லாம் அறிந்தவர்கள்… நாங்கள் போட்டதுதான் திட்டம், நாங்கள் வைத்ததுதான் சட்டம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எது லாபம் தருவதோ அதுதான் நாட்டுக்கு நல்லது. எவருடைய கேள்வியும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது.

   ஆணவத்தால் வரும் அறியாமை, அறியாமையால் வரும் ஆணவம் – இரண்டுமே ஆபத்தானவை.

   மனச்சாட்சியையும் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன் என்று கூறுவதைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்….

   நன்றி.

  • /////

   3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

   டாகடர் அப்துல் கலாம் கூறிய 57 மரண நபர்கள் விபத்தின் போதும் ஓரிரு மாதங்களுக்குப் பிறகும் உயிரிழந்தவர். கார்பசாவ் கூறியது 25 வருட மொத்த எண்ணிக்கைமிருவர் கூற்றும் மெய்யே.

   /////

   என்னது… கோர்பசேவ் 25 வருடங்களுக்கு பின்னால் 2000 பேர் இறந்ததாக கூறினாரா?

   1. An UNSCEAR report places the total confirmed deaths from radiation at 64 as of 2008.

   2. The World Health Organization (WHO) estimates that the death toll could reach 4,000 civilian deaths, a figure which does not include military clean-up worker casualties.
   3. The Union of Concerned Scientists estimate that for the broader population there will be 50,000 excess cancer cases resulting in 25,000 excess cancer deaths.
   4. The 2006 TORCH report predicted 30,000 to 60,000 cancer deaths as a result of Chernobyl fallout.

   5. A Greenpeace report puts this figure at 200,000 or more.

   இது எல்லாம் என்னங்கண்ணா? சாரி … விஞ்ஞானிங்கண்ணா ?

   ======================

   ஒரே ஒரு சந்தேகம் … ?

   அணுக் கழிவுகளைப் பற்றி இந்த தேச பக்தி வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் என்றால்…
   1. அப்துல் கலாம் : அணுக் கழிவுகளை கூடங்குளம் வளாகத்திலேயே புதைத்துவிடுவார்கள்.
   2. நாராயணசாமி: அணுக் கழிவுகளை ரயில் மூலம் தாராப்பூர் எடுத்துச் சென்று விடுவார்கள்.
   3. கூடங்குளம் இயக்குனர்: அணுக் கழிவுகளை ரஷ்யாவுக்கே எடுத்துச்செல்லப்படும்.

   இதுல எது சரின்னு ரொம்ப ரொம்ப படிச்சு, பாமர மக்களை எல்லாம் கிறுக்காக்கிக் கொண்டு இருக்கும் விஞ்ஞானிகள் பதில் சொல்லுங்கள்.

   இவர்கள் இப்படி எல்லாம் சொல்லவில்லை…அதற்கு ஆதாரம் இல்லை என்ற சால்ஜாப்பு வேண்டாம். ஆதாரம் உள்ளதால்தான் இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

 26. அருண்,

  நான் 45 ஆண்டுகளுக்கு மேல் 12 இந்திய / கனடா அணு உலைகளில் பணியாற்றியவன். ஆயிரக் கணக்கான சக ஊழியரையும் சேர்த்துப் பேசுகிறேன்.

  ஜெயபாரதன்.

 27. <> இது என் வாசகம் இல்லை.

  திண்ணையில் இந்திய / உலக அணு உலை விபத்துக்கள் பலவற்றை நான் எழுதி வந்திருக்கிறேன்.

  ஜெயபாரதன்

  • மன்னிக்க. அது உங்கள் வாசகம் இல்லை என்றே வைத்துக்கொள்கிறேன். மற்ற கேள்விகளுக்கு… ஜப்பானில் உருவாக்கப்படுகிற நெறிப்படுத்து வாரியம் போல இங்கே சுதந்திரமான அமைப்பு உருவாக்கப்படாதது… அப்துல் கலாம் கூறியது பற்றி தவறான தகவலை முன்வைத்தது… இந்திய அணு உலைகள் ஒருகாலத்திலும் அவற்றின் உற்பத்தித் திறனை எட்டியதில்லை, என்பது குறித்து… கடலில் எரிமலை மற்றும் கூடங்குளம் பகுதியின் புவியியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படாதது குறித்து… கூடங்குளம் வலைதளத்தில் சுனாமி ஆபத்து பற்றிய தகவல் குறித்து…

   ஐயா… நீங்கள் உண்மையிலேயே அணுஉலை அறிவியலில் மிகத் தேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் அதற்காக பலவற்றை மறைத்தும் சிலவற்றை மழுப்பியும் அணுஉலைக்கு ஆதரவாக எழுதினால் கேள்விகள் எழத்தான் செய்யும்.

   திருப்தியான பயன் தந்ததில்லை என்று தெரிந்தும் அணுஉலைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய அரசு கொட்டிக்கொண்டிருப்பது எதற்காக… மாற்று வழிகள் பற்றி ஆராய சிறிதும் முனைப்புக் காட்டாதது எதனால்… அண்மை பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டது எவ்வளவு, அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்கியது எவ்வளவு என்று சிறிதேனும் ஆராய்ந்து பார்த்தீர்களா… நியூக்ளியர் லயபிலிடி விஷயத்தில் மன்மோகன் அரசு என்னென்ன தகிடுதத்தங்களை எல்லாம் செய்தது என்பது உங்களுக்குத் தெரியாதா… பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி நாடாளுமன்றத்தில் தன் திட்டத்தை நிறைவேற்றியது குறித்து வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது தெரியாதா… அவ்வளவு கீழ்த்தரமான முறையில் தன் பிடிவாதத்தை நிறைவேற்றிக் கொள்ள காங்கிரஸ் அரசு முனைப்புக் காட்டியதும் காட்டி வருவதும் எதற்காக…

   இத்தனை கேள்விகளுக்கும் பதில் ஒருநாள் வெளியாகும். நாட்டு நலன் அல்ல, சுயநலமும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு காவடி தூக்கும் நோக்கமும்தான் காரணம் என்பது புரியும். ஸ்விஸ் வங்கியில் எத்தனை லட்சம் கோடிகள் யார் யார் வைத்திருக்கிறார்கள் என்பது என் ஆயுள்காலத்தில் தெரியாமல் போகலாம். ஆனால் என் வாரிசுகளின் காலத்தில் நிச்சயம் வெளியாகும்.

   உங்கள் கட்டுரை ஒன்று அஞ்சல்வழி பரப்பப்பட்டு வருகிறது. அதுகுறித்து என் கேள்விகள் அடங்கிய பதிவு –

   http://pudhiavan.blogspot.com/2012/03/blog-post_27.html

   இங்கும் சில கேள்விகள் உள்ளன. பதிலளிக்கலாம்.

 28. திரு ஜெயபாரதன்,

  நான் என் நண்பன் என்று கூறியது ஒரு எடுத்துகாட்டு மட்டுமே, புகைபிடிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் அவர்குக்கான நியாயம் இருக்கும்.world health organisation once gave a report saying xx Million people died because of cancer caused by smoking,MALBORO took that report for their brand promotion saying the remaining xx billion people are still safe.
  நீங்கள் கூறுவது போல் நடந்தால்,என் நண்பன் மற்றும் அவனை போன்று தினம் ஒரு பாக்கெட புகை பிடிபவர்களும் சேர்ந்து பேரணி செல்லலாம் ,நாங்களும் 50 வருடங்களாக புகை பிடிக்கிறோம் நாங்கள் நலம் ,நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள் என்று.

  உங்கள் கனடா,அமெரிக்கா,ஜப்பான் போல அல்ல இந்தியா ,இங்கு RTI act ,என்று ஒரு சட்டம் இல்லையென்றால் புன்னகை அரசி பட்டம் வாங்கிய K.R.விஜயாவுக்கு ,சிரிக்க தெரியாது என்று அரசாங்கம் கூறினால் நாங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் .

 29. நண்பர் அருண்,

  30 மேற்பட்ட உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் உலைகளைத் “தேவையான தீங்குகள்” என்று தெளிவாகத் தெரிந்துதான் இயக்கி வருகின்றன, பேரளவு மின்சக்தி கிடைப்பதால்.

  அணுமின் உலைகள் இன்னும் 25 – 50 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், கதிர்வீச்சில்லாத அணுப்பிணைவு (Nuclear Fusion Power) நிலையம் வாணிப ரீதியாக வரும்வரை.

  மதுவும், சிகரெட்டும் கோடான கோடி ரூபாய் வருமானம் தருவதால் அவற்றைத் தமிழக அரசாங்கம் நிறுத்துமா வென்று கேளுங்கள்.
  .

  சி. ஜெயபாரதன்.

  • ஐயா,
   1. – 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் வித்தியாசம் இல்லையா… இந்தியாவில் அணுஉலைகளிலிருந்து எப்போது பேரளவு மின்சாரம் கிடைத்தது…

   2. – நமக்கு அடுத்த தலைமுறைகள் அதை முடிவு செய்யட்டும்.

   3. – உங்கள் கேள்வியைப் படித்ததும் எப்படி இருந்த நான்…. என்ற வசனம்தான் நினைவு வந்தது. இப்படி பாமரத்தனமான கேள்வியை முன்வைக்கிறீர்கள். உணர்ச்சி மிகுதியாலோ என்னவோ கேட்க வந்ததையும் தெளிவாகக் கேட்கவில்லை.

   மதுவும் சிகரெட்டும் தீங்குதருபவைதானே, அவற்றை நிறுத்தச்சொல்லுங்கள் என்பதுதான் நீங்கள் சொல்ல வந்தது என்று நினைக்கிறேன்.

   மதுவும் சிகரெட்டும் நிச்சயம் தீங்கு தருபவைதான். ஆனால் மது, அதை அருந்துபவனை மட்டும் பாதிப்பது. அதிகபட்சமாக அவன் குடும்பத்தைப் பாதிப்பது – அவன் பொருளாதார ரீதியாக பின்தங்கியவனாக இருந்தால். சிகரெட்டும் அப்படியே. கூடுதலாக இப்போது பாஸிவ் ஸ்மோகிங் பற்றி அதிகம் பேசப்படுவதால், சிகரெட் குடிப்பவனுக்குப் பக்கத்தில் இருப்பவர்களையும் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அதற்காக சட்டமியற்றப்பட்டு பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்தாயிற்று இந்தியாவில். ரயிலில், பூங்காக்களில், பேருந்துகளில், ஓட்டல்களில், பேருந்து நிறுத்தங்களில் புகைப்பவர்களை இன்று பார்க்கவே முடியாது.

   ஆனால், பல்லாயிரம்பேரை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு, பலப்பல தலைமுறைகளுக்குப் பாதிக்கக்கூடிய அணுஉலையை இந்த சிகரெட்-மதுவுடன் ஒப்பிடும் அளவுக்கு எளிமைப்படுத்தி விட்டீர்களே விஞ்ஞானி ஐயா…

   • ஷா….அவர்களே….மக்களுக்கு புரிய வேணாமா???மக்கள் பாஷையிலா பேசுறாராமா….

 30. திரு ஜெயபாரதன்,

  தீ சுடும் என்று தெரிந்தே கை வைபவனை பற்றி நமக்கு கவலை இல்லை , ஆனால் இந்த தீ ரொம்ப நல்லது இதை தொட்டால் சுடாது நல்ல குளுகுளு-நு இருக்கும் என்று சொல்வதையே அரசாங்கம் செய்கிறது.

  நீங்கள் அணு விபத்தையும் சாலை விபத்தையும் ஒப்பிட்டத்தால் தான் நான் புகை தீங்கையும் அணு தீங்கையும் ஒப்பிடேன். இரண்டு நேர்மாறானது.

  மற்றபடி தேவையான தீங்குகள் தேவையில்லாத தீங்குகள் எல்லாம் விஞ்ஞானிகள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

 31. //////கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

  ரஷ்யச் சாதனங்கள் உள்ள கூடங்குளம் அணுமின் உலைகள் இயங்கட்டும் முதலில். ஊழல் இல்லாத நிர்வாகம் எங்கே உள்ளது ?

  ++++++///////

  சார்….இப்படி சொல்லக் கூச்சமாக இல்லையா சார்…!!!அதையும் ஃபேஷன்னு
  ஒத்துக்கச் சொல்லுறீங்களா…இது வரைக்கும் நாங்க பட்டது போதும் சார்..இன்னும் ஏமாத்த முடியாது…!!!அதாவது நாங்க தெரிஞ்சுக்கிட்டே ஊழல் நடந்த இந்த அணு உலையை அனுமதிக்கனும் அப்படித்தானே…ஏன் சார் இந்த உலை வெறி….சாரி…கொலை வெறி…இந்த ஒரு பதில் போதும் சார்…அணு விஞ்ஞானம் தெரியாதவர்கள் கூட எதிர்க்க ஆரம்பித்தி விடுவார்கள்..!!!அதுக்கு நீங்க உளராமலே இருந்திருக்கலாம்..சாரி எழுதாமலே இருந்து இருக்கலாம் ..ஓவராக அறிவியல் படிச்சா இப்படித்தான்…

 32. ஐரோப்பாவில் ரஷ்ய மாடல் VVER-1000 மாடல் அணுமின் உலைகள் நல்ல முறையில் இயங்குகின்றன. ரஷ்ய அணுவியல் விஞ்ஞானப் பொறி நுணுக்கத் தொழில் இரண்டாம் தரப் படைப்புகள் அல்ல.

  இந்திய அணுமின் இயக்க அனுபவம் 50 ஆண்டு நீடிப்பு, 20 மேற்பட்ட அணுமின் உலைகள் இயக்கம். அதுபோல் 30 உலக நாடுகள் 430 மேற்பட்ட அணுமின் நிலையங்களை இயக்கி மின்சாரம் பெறுகின்றன.

  சி. ஜெயபாரதன்.

  +++++++++++++++++++

 33. I know the basics and i am for atomic energy though i know what is a renewable energy etc ! Some people dont even know what is a variable load an how an AC current can not be saved ! DC power by solar to be converted into A/c then transmision, loss, energy payback.. so many issues are there and non of the ppl has any background on it ! So i keep mum ! Many even dont even know what a million year halflife period and how it less lethal than the one with few days of Halflife ! None know the scram procedures! None know how the sentimenttal issue involved in the chernble issue .. the shift change and the experiment started with a new team etc etc ! none know what the negative void coefficiency etc etc ! Better the basics are learnt and then they can argue ! But i dont have that much patience ! lol ! Lot of gud infos but the mistrust on govr has got some reasons !

 34. Pingback: அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள் | ஒத்திசைவு...

 35. ஒத்திசைவு…

  அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள்
  16/03/2014

  எது எப்படியோ — ஞாநி அவர்களுடைய ஒரு தவறான கருத்தினை யாராவது சுட்டிக் காட்டினால், அதனைத் திருத்திக் கொள்கிறாரா என்பதும் எனக்குச் சந்தேகமே. நான், மிக நீளமாக ஒரு ஞாநி-எதிர்க் கட்டுரை எழுதலாமா என நினைத்தேன். ஆனால்…

  உதாரணத்துக்கு – சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதியுள்ள இந்த நீளக் கட்டுரையைப் பொறுமையாகப் படியுங்கள்: அணு உலை எதிர்ப்பாளி ஞாநி பரப்பி வரும் தவறான கருத்துக்கள்

  ஜெயபாரதன் அவர்கள் – பொறுமையாக, அழகாக வாதங்களைக் கோர்த்து ஞா நி அவர்களின் வாதங்களை, வாதமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். May Jeyabharathan’s tribe increase!

  http://othisaivu.wordpress.com/2014/03/16/post-343/

 36. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.