செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?


[Chernobyl Radioactive Problems After 25 Years]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அமெரிக்க அணு மின்னிலையம்

மனிதத் தவறால் விபத்துக் குள்ளாகி,

திரிமைல் தீவில்

எரிக்கோல்கள் உருகின!

ரஷ்யாவின் அணு மின்னிலையம்

மர்மச் சோதனை மூலம் வெடித்து,

செர்நோபில் அருகிலே

நிர்மூல மானது!

பாரத அணுமின் னுலைகளில்

பாதுகாப்புகள் மிகுதி! யந்திரச் சாதனம்

முறிந்து போவதும், பணியாளர்

நெறிதவறி யியக்குவதும்,

கட்டுப்பாடுகள்

தட்டுத் தடுமாறுவதும்

அபாய வேளையில் ஆற்றல் குறையாமல்

விருவிருவென ஏறுவதும்

ஒருபோதும் நேராத

அபூர்வ நிகழ்ச்சிகள் !

+++++++++++


மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு திட்டம் இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy (1840-1928)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]


முன்னுரை: 1986 ஏப்ரல் 25 தேதி ஷிஃப்டு இயக்குநரும், அதிபரும் பொறுப்பற்ற முறையில் அணுவியல் இயக்கப் பாதுகாப்பு நெறிகளை அறிந்தோ, அறியாமலோ பன்முறை முறித்தனர் [Breaches of Nuclear Safety Regulations] என்பது மன்னிக்க முடியாத இமாலயத் தவறுகள்! 1000 MWe பேராற்றல் கொண்ட செர்நோபில் விபத்துக்கு மூல காரணம் பல்வேறு டிசைன் தவறுகளாயினும், ஒழுங்காக இயங்கி வந்த அணுமின் நிலையம் 1986 ஏப்ரலில் திட்டமிட்ட சோதனையை தொடங்கா திருந்தால் அந்தக் கோர விபத்து நேர்ந்திருக்காது! அனுமதிக்கப்பட்ட முதலில் திட்டப்படிப் பின்பற்றி மாறுதல் எதுமின்றி வெற்றியாகாத சோதனையைப் பாதியிலே நிறுத்தி யிருந்தால், அந்தப் பயங்கர விபத்து நேர்ந்திருக்காது! விபத்து நிகழ்ந்ததற்கு முக்கிய காரணங்கள்:

1.  சோதனையின் முழு விளக்கங்களை சோதனைத் தலைவர் அணு உலை இயக்கப் பணியாளருடனும், பாதுகாப்பு நெறியாளருடனும் பங்கிட்டுக் கொள்ள வில்லை!

2.  திட்டமிட்டபடி சோதனை செய்ய முடியாத போது, திடீர் மாற்றங்களை அனுமதியின்றிச் செய்து, டெலிஃபோன் மூலமாகப் பணியாளருக்கு ஆணையிட்டது!

3.  பாதுகாப்பு அதிபர் அனுமதியின்றி, அணு உலைப் பாதுகாப்புச் சாதனங்களையும், அபாயத் தடுப்பு ஏற்பாடுகளையும் பணியாளர் முடமாக்கியது. அதாவது மாபெரும் மனிதத் தவறால்தான், செர்நோபில் கோர விபத்து நேர்ந்தது! குறை பாடுகள் மிக்க செர்நோபில் அணுமின் உலை கூட, மனிதத் தவறுகளுக்கு உட்படாதிருந்தால், கடந்த 25 ஆண்டுகளும் ஓடி பல்லாயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் பரிமாறி யிருக்கும்! அத்துடன் உயிரிழந்த மாந்தரும், வீடிழந்த மக்களும், நோயுற்ற சேய்களும் பூரிப்போடு நடமாடி இன்றும் வாழ்ந்து வந்திருப்பார்!

பாரதத்தின் பாதுகாப்பான அணுமின்சக்தி நிலையங்கள்


இந்தியாவில் மூன்று தரப்பட்ட அணுமின் உலைகள் உள்ளன. 1960 ஆண்டுகளில் நிறுவப்பட்ட முதல் மாடல், கொதிநீர் அணுமின் நிலையம் [Boiling Water Reactor (BWR)] எனப்படுவது. அடுத்து நிறுவப்பட்ட இரண்டாவது மாடல் அழுத்தக் கனநீர் அணுசக்தி நிலையம் [Pressuized Heavy Water Reactor (PHWR)] எனப்படுவது! மூன்றாவது கட்டப்படும் மாடல் அழுத்தநீர் அணுமிசக்தி நிலையம் [Pressurized Light Water Reactor (PWR)] எனப்படுவது. தாராப்பூரில் (மகாராஷ்டிரா) உள்ள இரட்டைக் கொதிநீர் அணுமின்சக்தி நிலையத்தை அமெரிக்காவின் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி முதன்முதலில் நிறுவியது. அடுத்த மாடலான அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங் களின் முதலிரண்டு யூனிட்டுகள் கனடாவின் உதவியால் ராஜஸ்தான் ராவட் பாட்டாவில் கட்டப்பட்டன. பிறகு அவற்றைப் போல பல இரட்டை அணுமின் நிலையங்கள் தமிழ்நாட்டில் கல்பாக்கம், டெல்லிக் கருகில் நரோரா, கர்நாடகாவில் கைகா, குஜராத்தில் கக்ரபார், ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் மேலும் இரட்டை யூனிட்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் 220 MWe மின்சார ஆற்றல் கொண்டவை.

பிறகு அதே கனநீர் அணுமின் உலைத் தத்துவத்தி லியங்கும் ஆற்றல் மிக்க 540 MWe இரட்டை யூனிட்டுகள் தாராபூரில் புதிதாகச் சமீபத்தில் நிறுவப்பட்டுச் சிறப்பாக இயங்கி வருகின்றன. புதிதாக ராஜஸ்தான் ராவட் பாட்டாவில் அடுத்து இரட்டை யூனிட்டுகளும், கர்நாடகா கைகாவில் மேலும் இரட்டை யூனிட்டுகளும் கட்டப்பட்டு வருகின்றன. பாரத நாட்டின் அணுவியற் துறையகம் 220 MWe, 540 MWe இரட்டைக் கனநீர் அணுசக்தி நிலையங்களை நிறுவி வெற்றிகரமாக இயக்கிவரும் சமயத்தில் தற்போது ரஷ்ய டிசைன் PWR மாடலான இரட்டை அணுமின் நிலையம்: VVER-1000 தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் உள்ள கூடங்குளத்தில் நிறுவகமாகி வருகிறது. கூடங்குளத்தில் நிறுவகமாகி வரும் முற்போக்கான ரஷ்ய அணுமின்னுலை: VVER-1000, உலக மனைத்தும் இகழும் பிற்போக்கான செர்நோபில் அணுமின்னுலையைப் போன்றதில்லை!

தாராப்பூர் கொதிநீர் அணுமின்னுலை, செர்நோபில் அணுமின்னுலை வேறுபாடுகள்

தாராப்பூர் கொதிநீர் அணுமின்னுலை 1960 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி டிசைன் செய்த முதற்பிறப்பு மாடல் வகுப்பைச் [First Generation BWR Model] சேர்ந்தது. அதன் அணு உலை அழுத்தக்கலம் [Reactor Pressure Vessel] உருக்கு உலோகத்தாலானது. எரிக்கோல்கள் சிறிது செறிவான யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகளைப் [2%-3% Enriched Uranium Dioxide Pellets] பெற்றவை. உலைக்கலம் மற்றும் அதைச் சார்ந்த முக்கிய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் யாவும், ஓர் மூடிய கோள அரணுக்குள் [Dry Well Containment] அமைக்கப் பட்டுள்ளன. நியூட்ரான் மிதவாக்கியாக சாதா நீரும், வெப்பக் கடத்தியாக அதே சாதா நீரும் பயன்படுகின்றன. நீராவி அணு உலைக் கொதிகலத்திலே நேரடியாக உற்பத்தியாகிப் பிறகு டர்பைன் ஜெனனியை ஓட்ட அனுப்பப் படுகிறது. நியூட்ரான் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைக்கவும், அணு உலையை நிறுத்தவும் போரான் கார்பைடு விழுங்கிகள் பயன்படுகின்றன. தாராப்பூர் கொதிநீர் அணு உலை செர்நோபில் போன்று நேரடியாகக் கொதிகலத்தில் நீராவி உண்டாக்கும் மாடல். மேலும் செர்நோபில் அணு உலையில் எரிக்கோலாகப் பயன்படுவதும் 2%-3% செறிவு யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகளைக் கொண்டவை.

செர்நோபில் அணு உலைக்கும் தாராப்பூர் அணு உலைக்கும் இருபெரும் முக்கிய டிசைன் வேறுபாடுகள் உள்ளன:

1.  அணு உலைக்கலம் தாராப்பூரில் ஒரு பிரதமக் கோட்டைக் குமிழிக்குள் [Dry Well-Primary Containment] பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. வெடித்துப் போன செர்நோபில் அணு உலைக்குப் பாதுகாப்பாகப் பிரதமக் கோட்டை அரண் எதுவும் அமைக்கப் படாததால், யுரேனிய எரிக்கோல்களின் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறி உலகெங்கும் பரவின!

2.  தாராப்பூர் கொதிநீர் அணு உலையில், வெப்பக்கடத்தி நீர் வற்றிப் போனால், நியூட்ரான் பெருக்கம் தானாகக் குறைந்து வெப்பசக்தி ஆற்றல் விரைவாகத் தணிகிறது [Negative Void Coefficient]. தாராப்பூர் அணு உலை நியூட்ரான்களை மிதமாக்கி யுரேனியத்தைப் பிளக்கும் மிதிவாக்கித் திரவமும் [Moderator] சாதா நீரே. அதாவது மிதவாக்கி நீரும், வெப்பக் கடத்தி நீரும் ஒரே சாதா நீராக இருப்பதால், அணு உலைக்குள் நீர் மட்டம் குறையும் போது, நியூட்ரான் எண்ணிக்கைத் தானாகக் குன்றி வெப்பசக்தியும் குறைகிறது. ஆனால் செர்நோபில் அணு உலையில் மிதவாக்கியாகப் பயன்படுவது 1700 டன் கரித்திரட்டு எனப்படும் கிராஃபைட் [Graphite] கட்டிகள்.  செர்நோபில் உலைக்கலத்தில் நீர் மட்டம் தணியும் போது கிராஃபைட்டால் மிதமாக்கப்படும் நியூட்ரான் எண்ணிக்கை மிகையாகி, வெப்பசக்தி ஆற்றல் விரைவில் மீறிப் பன்மடங்கு [Positive Void Coefficient] ஏறுகிறது! ஆனால் தாராப்பூர் கொதிநீர் உலை மாடலில் அவ்விதப் பயங்கர வெப்ப எழுச்சி எப்போதும் நேர்வ தில்லை!

அழுத்தக் கனநீர் அணுமின்னுலை, செர்நோபில் அணுமின்னுலை வேறுபாடுகள்

கனடாவின் டிசைனான காண்டு மாடல் [CANDU (Canada Deuterium, Uranium)] எனப்படும் கனநீர் அணுமின் நிலையங்கள் மொத்தம் 20 [2010 வரை] பாரத நாட்டில் நிறுவப்பட்டு, அவற்றில் 20 நிலையங்கள் தற்போது அணுசக்தியைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. டியூடிரியம் (Deuterium) எனப்படும் கன ஹைடிரஜன் சாதா ஹைடிரஜனை விடச் சற்று கனமானது. டியூடிரிய [D2 Molecule] அணுக்கருவில் ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் உள்ளன. சாதா ஹைடிரஜன் [H2 Molecule] அணுக்கருவில் ஒரு புரோட்டான் மட்டுமே உள்ளது. அதாவது ஒரு நீர் மூலக்கூறின் அணுநிறை [Atomic Mass of H2O (2+16)] 18 என்று கணிக்கும் போது கனநீர் மூலக்கூறின் அணுநிறை [Atomic Mass of D2O (4+16)] 20. இயற்கை நீரிலும், கடல் நீரிலும் கனநீர் 6400 இல் 1 பாகமாகக் கலந்துள்ளது. பேரளவு திரண்டுள்ள கனநீர்த் திரவம் மனித உடலுக்கு நச்சுத் திரவமாகக் [Toxic Liquid in Higher Concentration] கருதப்படுகிறது!

கனநீர் அணுமின் உலைகளின் எரிக்கோல்களில் செறிவாக்கப் படாத இயற்கையான யுரேனிய டையாக்ஸைடு வில்லைகள் [Natural Uranium Dioxide Pellets] பயன்படுகின்றன. நியூட்ரான் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியகவும் இரண்டு தனித்தனிச் சுற்றுகளில் கனநீர் பயன்படுகிறது. நீராவி அணு உலைக்கலத்தில் உண்டா காது, நீராவி ஜெனனியில் [Steam Generator] உற்பத்தியாகி டர்பைன் ஜெனனியை ஓட்டுகிறது. நியூட்ரான் விழுங்கியாகவும், அணு உலையை நிறுத்தவும் போரான் கலவைகள் அல்லது காட்மியம் கோல்கள் [Boron Carbide or Cadmium Rods] பயன்படுகின்றன. கனநீர் அணுமின்னுலைகளில் வெப்பக் கடத்தி நீரிழப்பால், வெப்பசக்தி மீறும் குறை யிருப்பதால் [Positive Void Coefficient] கடோலினியக் கலவைத் திரவம் [Gadolinium Compound] நியூட்ரான் விரைவு விழுங்கிகளாக மிதவாக்கிக் கனநீரில் செலுத்தப் படுகின்றது.

செர்நோபில் அணுமின் நிலையம் போலின்றிப் பாரதத்தின் கனநீர் அணுமின் உலைகள் அனைத்தும் ஒரு பெரும் காங்கிரீட் கோட்டை அரணுக்குள்ளே அமைக்கப் பட்டுள்ளன. அவற்றிலும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகள் இரட்டைக் கோட்டை அரணில் அடக்கப் பட்டுள்ளன. அணுமின் நிலையங்களை நெறிகளைப் பின்பற்றிச் செம்மையாக இயக்கவும், கண்காணிக்கவும் பொறியாளரும், பணியாளரும் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறார். அவருக்கு மெய்யான பயிற்சிகள் தருவதற்குப் போலி அணுமின் நிலைய ஆட்சி அரங்கம் [Reactor Operation Similator Panels] பயிற்சிப் பள்ளித் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செர்நோபில் அணுமின் உலை இயக்குநர் போன்று, அரைகுறை அறிவுடன் நெறிகள் பலவற்றை முறித்த, போதுமான பயிற்சி யில்லாத பணியாளரைப் பாரத அணுமின் நிலையங்களில் காண்பது வெகு அபூர்வம்.

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From: [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org]

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Report By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By: Grigori Medvedev [1991]

12 The Aftermath of Chernobyl By Grigori Medvedev [1993]

13 How Safe? Three Mile Island, Chernobyl & Beyond By: James Megaw [1987]

14 Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Assessment of Radiological & Health Impact [2002 Update]

15 Nuclear Safety & The G7 Summit Reports (1991-2000) -A Contradiction in Terms? [http://archive.greenpeace.org/~comms/nukes/chernob/rep01.html (Nov 5, 2003)]

16. Safety Benefits of Risk Assessment at the U.S. Nuclear Power Plants [http://www.nei.org/ (March 2002)]

17. Nuclear Power, From Physics to Politics By: Laurence Pringle [1979]

18. Chernobyl: The True Scale of Accident, Joint News Release By: WHO/IAEA/UNDP -20 Years Later a UN Report Provides Definite Answers & Ways to Repair Lives [2005] [www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/print.html]

19. Energy Bill Speeds up Nuclear Proliferation, Stifles Competition from Renewable Energy

[www.world-wire.com/news]

20. Chernobyl’s Legacy: Health, Environmental & Socio-Economic Impacts By: Chernobyl Forum [WHO, IAEA, UNDP, FAO, NNEP, UN-OCHA, UNSCEAR, World Bank, Govts of Belarus, Russia, Ukraine (2003-2005)] Second Revised Edition. – Later Enlarged 600 Page Report (Sep 5, 2005).

21. Chernobyl’s Legacy: Health Impacts By K.S. Parthasarathy, Former AREB Secretary [www.thehindu.com/] Sep 15, 2005.

22. BBC News, Chernobyl’s Legacy Still Undecided By Mark Kinver BBC Science Reporter [Apr 24, 2006]

23. Chernobyl Reactor Accident 1986 By: Robert Johnson [May 11, 2005]

24. The Nuclear History Site/Historical Safety Record Vi Lenin – Chernobyl

25. Nuclear Energy Agency (NEA), France: Chernobyl Accident Sequence, The RBMK Reactor, Events Leading to the Accident, The Graphite Fire [2002 Update]

26  RBMK Reactors – Nuclear Issues Briefing Paper # 64A [Feb 2002]

27.  http://www.theatlantic.com/infocus/2011/03/the-chernobyl-disaster-25-years-ago/100033/  (Mar 23, 2011)

28. Development of Improved Safety with the Russian VVER-1000 Reactor Plant [Kudungalam Model] Following Three Mile Island & Chernobyl Reactor Accidents By: Valery P. Novak, Alexander K. Podshibyakin & Mikhail P. Rogov.

******************

jayabarat@tnt21.com [November 24, 2011] (R-1)

32 thoughts on “செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா ?

  1. //செர்நோபில் அணுமின் நிலையம் போலின்றிப் பாரதத்தின் கனநீர் அணுமின் உலைகள் அனைத்தும் ஒரு பெரும் காங்கிரீட் கோட்டை அரணுக்குள்ளே அமைக்கப் பட்டுள்ளன. அவற்றிலும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகள் இரட்டைக் கோட்டை அரணில் அடக்கப் பட்டுள்ளன. //

    என்னதான் திடமான நோயற்ற உடம்பு என்றாலும் ஒரு கார் வேகமாக மோதினாலோ, துப்பாக்கியால் சுட்டாலோ ஆள் க்ளோஸ்.

    திடமான காங்க்ரெட் ஓகே, ஆனால் அணு உலைக்கு தண்ணீர் செல்லும் பாதை தகர்கப்பட்டாலோ, தண்ணீர் வரத்து நின்று போனாலோ அணு உலை சூடாகி அதுவே உருகிவிடும், எதிரி நாடுகள் அணு உலையைத் தாக்க அதன் தண்ணீர் பாதையைத் தாக்கினாலே முடிந்துவிடும். நாடுகளுக்கிடையேயான போரில் முதலில் தாக்கப்படுவது மின்சாரம் உற்பத்தியாகும் இடங்கள் தான், பூகம்பம் வந்தால் தாங்கும் என்று சொல்லுபவர்கள், எதிரி நாடுகளால் ஆபத்து இல்லை என்று சொல்ல முடியவில்லையே ஏன் ?

  2. நண்பர் கோவி. கண்ணன்,

    கூடங்குளம் அணுமின் உலைக்கு அபாயத் தணிப்பு முறைகள் எவ்விதம் இயங்கின்றன என்று என் வலையில் சில கட்டுரைகள் உள்ள்ன. படித்த பிறகு கேள்வி கேட்க வாருங்கள்..

    https://jayabarathan.wordpress.com/

    ஜெயபாரதன்.

  3. Well Done Mr. Jayabarathan!!!

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களுக்கு பதில் சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்… தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்துங்கள்….

    சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டு எல்லா சுகங்களையும் அனுபவித்து கொண்டு இந்தியா முன்னேறவே கூடாது (அப்பொழுதுதான் டாலர் மதிப்பு ரூபாய்க்கு எதிராக ஏறிக்கொண்டே போகும்) என்று ஒரு சிலர் கருத்து சொல்வார்கள்…

  4. Excellent explanation sir.

    Really learned people like you are the ones that should talk on scientific matters. Unfortunately half baked one’s who do not understand anything in science but can write pages and pages of nonsense politics and sectarian crap are now the people that are giving opinions on this subject.

    India needs opinions from people like you sir. Not from politically motivated and half educated cinema commentators!

  5. Dear Friend,

    Tamil Nadu politician buy the people & win the elections by giving sewing machines, sarees or laptops. Please look at thousands of poor fishermen who were brought out to oppose Kudungulum. It appears they were all given a lot of money, food & vans to travel.

    Cine star Jayalalitha will destroy Tamil Nadu economy & infra-structure, delaying the 15,000 crore 2000 mw nuclear power station without any foresight.

    Everyday India’s taxpayers lose money at the rate of minimum 100,000 dollars per day without producing electricity.

    Thanks for your compliments.

    Regards,
    Jayabarathan

  6. Thanks for your reply sir.

    The current tribe of politicians here are hell bent in destroying Tamilnadu. If you watch carefully and closely both the DMK and the ADMK governments do not really oppose the nuclear powerplant. In fact Jayalalitha got scared of being branded anti fishermen and hence changed tack. I am not sure if Karunanidhi had raised such a pitch against the reactor. He will not because more or less both DMK and ADMK have got aligned to the national politics.

    That leaves unscrupulous rabble rousers like Ramadas, Thiruma, Seeman and other people who thrive by being political parasites all along. Vaiko who is certainly decent has now become a political orphan. So he needs something to hold on and this nuclear issue is an opportunity for him. Looks like the ways of the political traders such as Ramadass and Thiruma are the only option left for him. Poor him. The man who everyone thought will rescue DMK from Karunanidhi and family is now left with no one to resuce him. He now relies on Koodankulam to rescue him.

    Apart from this there seem to be a very motivated opposition from the Christian clergy in those parts. Its quite surprising as in most of the cases the christian groups, especially the catholic diocese do not take such an obdurate stand. Also, they are indeed amenable for discussion. All the more, the general Christian population does not go by what their church will say. The church also understands it . Being the case, their attitude here is quite surprising! Something thing seems wrong here. Is the church dancing to someone’s or some other country’s tune? I dont know and I cant work on a conspiracy theory. But it certainly looks fishy!

    As it turns I heard the more or less the protests has fizzled out. Only a few Christians hold banners led by Udayakumar (this Dr Udayakumar turns out to be some one who got his doctorate for political science and nothing to do with Natural science. Also his prominent works are about writing against Hindu religion which expains the backing he receives from certain sections of the church).

    Having said that ultimately the government will prevail. read yesterday that large number of non christians are trying to organize a parallel group to pin point the Church’s interference and support to this whole farce. Both the central and state governments will start pulling the strings and the remainig few will also run away in a week or two from now.

    Lets hope it ends fast and without any disturbance.

  7. //Infra-structure, delaying the 15,000 crore 2000 mw nuclear power station without any foresight.

    //Everyday India’s taxpayers lose money at the rate of minimum 100,000 dollars per day without producing electricity.

    Former HOD, Bharathidasan university says 1 lakh crore has been given as tax soups in Tamil nadu alone.

    நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன், பிறகுதான் விஞ்ஞானி. நிச்சயம் ஒரு நாள் அணு உலை செயல்படும். அன்று இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்ல முயற்சித்தால் பகிரங்கமாக எதிர்பீர்களா அல்லது விஞ்ஞானி என்று ஒதுங்கி கொள்ளுவீர்களா?

    பெரியார் அணைக்காக இதுவரை குரல் கொடுதுள்ளீர்களா? தமிழர் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துள்ளீர்களா?

    நெய்வேலி மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் இருந்து கர்நாடகாவுக்கு 11 கோடி யூனிட் மின்சாரமும், கேரளாவிற்கு 9 கோடி யூனிட் மின்சாரமும், ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரமும் செல்கிறது. இப்படியாக நாள்தோறும் தமிழ்நாட்டில் இருந்து 26 கோடி யூனிட் மின்சாரம் செல்கிறது. தமிழ்நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட். நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு மட்டும் பயன்பட வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கு மின்சாரச் சிக்கலே வராது. ஆனால் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்றவை அந்தந்த தேசிய இனங்களுக்கு மட்டுமே சொந்தம் என அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். காவிரியில் இருந்து கூட அணை இனி தாங்காது எனும் போதுதான் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்படுகிறது

    இவை எல்லாம் உங்களுக்கு தெரியமா?

  8. //சிங்கப்பூரில் வாழ்ந்துகொண்டு எல்லா சுகங்களையும் அனுபவித்து கொண்டு இந்தியா முன்னேறவே கூடாது (அப்பொழுதுதான் டாலர் மதிப்பு ரூபாய்க்கு எதிராக ஏறிக்கொண்டே போகும்) என்று ஒரு சிலர் கருத்து சொல்வார்கள்…

    தவறான கருத்து.
    இந்தியாவை மிக வேகமாக மேற்குலகின் காலனியாக்க அனைத்தும் காங்கிரெஸ் செய்து வருகிறது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.

  9. நண்பரே,

    நெய்வேலி, கல்பாக்கம் அணு ஆய்வுக் கூடம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை இந்தியர் வரிப்பணத்தில் கட்டப் பட்டவை, தமிழரின் வரிப் பணம் மட்டுமல்ல. அவை இந்தியாவின் பொதுச் சொத்துக்கள்.

    ஜெயபாரதன்

    • //இந்தியர் வரிப்பணத்தில் கட்டப் பட்டவை, தமிழரின் வரிப் பணம் மட்டுமல்ல. அவை இந்தியாவின் பொதுச் சொத்துக்கள்.

      தங்கள் பதிலுக்கு நன்றி. அவை இந்தியாவின் பொதுச் சொத்துக்கள் என்பதையும் ஒத்துக்கொள்ளுகிறேன். அனால ஏன் கேள்வியே இதுதான்:
      ஆனால் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு போன்றவை அந்தந்த தேசிய இனங்களுக்கு மட்டுமே சொந்தம் என அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். காவிரியில் இருந்து கூட அணை இனி தாங்காது எனும் போதுதான் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்துவிடப்படுகிறது. கோர்ட் உத்தரவையும் அவை மதிப்பது இல்லை. இன்னும் நிறைய சொல்லலாம். பிறகு ஏன் இங்கு அணு உலை அமைத்து எல்லோருக்கும் மின்சாரம் தரவேண்டும்

      //இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்ல முயற்சித்தால் பகிரங்கமாக எதிர்பீர்களா அல்லது விஞ்ஞானி என்று ஒதுங்கி கொள்ளுவீர்களா?

      இதற்க்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

  10. நண்பரே

    நமது தற்போதைய பிரச்சனை கூடங்குளம் அணுமின் உலைத் துவக்கம்.
    அது முதலில் இயங்கித் தமிழருக்கு மின்சாரம் எந்த அளவாயினும் தரட்டும்.

    பிறகு அந்த அளவைத் தமிழர் கட்டுப் படுத்துவோம்.

    ஜெயபாரதன்

  11. செர்நோபிள் ஒரு துரதிர்ஷ்டம் வருந்ததக்க சம்பவம். ஆனால் அதை வைத்து “பூதம்” காட்டுவது தவறு என்று பதிவு எளிதாக விளக்குகிறது- கூடங்குளம் புகாஷிமா ஆகாது என்ற முந்தைய பதிவுகள் போல. பதிவின் சாராம்சம், செர்நோபிள் காரணத்தை விளக்க உதவும்.

    பதிவிற்கு நன்றி.

    அணு உலை பாதுகாப்பு சம்பந்தமாக அதன் வல்லுநர்களே உறுதியளித்த பிறகு, காலங்காலமாக இருக்கும் எதிர்ப்பு வாதத்தை புது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்காமல் அதை வைப்பது தவறு என்றே படுகிறது.

  12. யுரேனியம் என்ற தனிமம் அளப்பறிய ஆற்றலை கொண்டது தான் ஆனால் அதை வெட்டியெடுக்கப்படும் போதும் பயன் படுத்தபடும் போதும் ஆபத்துநிறைந்தது தான் என்பது நமதுஅனுபவம் எனவே மனிதகுலத்துக்கு விரோதமான அணு ஆற்றல் தேவையில்லை என்பதே சரியானது மாற்று வழியை பற்றி சிந்திப்பதே தேவையானது.
    பாம்பு என்றால் பயம் எனவே அடித்துவிடு அல்லது காட்டில் கொண்டு போய் விடு .விசம் உள்ள,விசம் இல்லாத, கடிக்கும்,கடிக்காத,கூன்டுக்குள் இருக்கிறது என்ற வேறுபாடேதேவையில்லை .

  13. செர்நோபில் விபத்துக்குப் பின்பு இன்றுவரை அங்கு நடைந்துக் கொண்டிருக்கின்ற அழிவைப் பற்றி ஏன் உங்கள் பதிவில் எந்த குறிப்பும் இல்லை. அதாவது செர்நோபில்லை சுற்றயுள்ள மக்களளுக்கு ஏற்பட்ட விளைவு மற்றும் இறப்பின் பற்றிய குறிப்பு எதுவும் இல்லையே ஏன்? (செர்நோபில்லை மையமாகக் கொண்டு இப்பதிவுத் தீட்டப்பட்டுள்ளது).

    செர்நோபில்லை விட பாதுக்கப்புமிக்கது என்றால் விபத்து ஏற்படாதா?

    சாதுகோடாவில் (இந்தியாவின் யுரேனிய சுரங்கம்) வேலை செய்யும் ஒப்பந்தப் பணியாளர்கள் மிகையனோர் புற்றுநோயால் இறப்பது எப்படி? நிரந்தர அலுவலர்களுக்கு 45 கிலோமீட்டர் தள்ளி உணவு சமைப்பது ஏன்? சுற்றிவுள்ள 40 கிராம மக்கள் புற்றுநோயால், தைராயுடு நோயால் பாதிக்கபடுவது ஏன்? அங்கு குழந்தைகள் ஊனமாகப் பிறப்பது ஏன்?

    யுரேனிய மஞ்சள் கட்டிகளிலிருந்து யுரேனிய கம்பிகள் செய்யும் தொழிற்சலையை (ஐதராபாத்தில் உள்ளது) சுற்றயுள்ள 12 கிராம மக்களை UCIL நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டாமென்று எச்சரித்தது ஏன்?

    செர்நோபில்லை விட பாதுக்கப்புமிக்கது என்றால் கூடங்குளம் மக்களால் கேட்கப்பட்ட ஐயத்துக்கு பதில் சொல்லாதது ஏன்?

  14. நண்பர் சிவநேசன்,

    பாதுகாப்பான தீ மனிதனுக்குத் தேவையான தீங்கு, அணுசக்தியும் அதுபோல்தான். கடந்த 60 ஆண்டுகளாக 420 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் 30 நாடுகளில் செர்நோபில். புகுஷிமாவில் நேர்ந்த கோர விபத்துக்களுக்குப் பிறகும் இயங்கி வருகின்றன. அணுகுண்டு வீழ்ந்து நாசமான ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள், சுத்தம் செய்ய்பட்டு சொர்க்கபுரிபோல் புத்துயிர் பெற்றுள்ளன. ஈழத் தீவில் பாதியுள்ள தென்கொரியாவில் 1000 மெகாவாட் அணுமின் உலைகள் நான்கு இயங்கி வருகின்றன.

    சி. ஜெயபாரதன்.

    +++++++++++++++++++

  15. நண்பர் சத்தியநாராயணன்,

    செர்நோபில் பற்றி 10 மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நான் 45 வருடம் அணுமின் உலைகளில் 25 ஆண்டுகள் இந்தியாவிலும், கனடாவில் 16 ஆண்டுகள் பணி செய்து அவற்றின் அருகில் வசித்து வருகிறேன். என் மகள் எஞ்சினிராக இப்போது அணுமின் உலையில் பணி செய்கிறாள்

    இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில், அடுத்து அடுத்து இயங்கி வரும் அணுமின் உலைகளில் ஜாதுகூட தொழிற்சாலை உட்பட இதுவரை யாரும் கதிரடி பட்டு மரணம் அடைய வில்லை. கதிரடி பட்டுப் புற்று நோயில் மடிய வில்லை. நீங்கள் அவற்றை நிரூபித்துக் காட்ட முடியுமா ?

    ஐரோப்பா, வட அமெரிக்கா,. கனடாவில் ஆயிரக் கணக்கான யூனியன் ஊழியர் அணுமின் உலைகளில் 60 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். புற்று நோயில் ஒருவர் அணுமின் உலையில் மடிந்தால் கூட யூனியன் தொழிற்சாலை அதிபதிகளைச் சுட்டு விடுவார்.

    சி. ஜெயபாரதன்.

    • /* இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில், அடுத்து அடுத்து இயங்கி வரும் அணுமின் உலைகளில் ஜாதுகூட தொழிற்சாலை உட்பட இதுவரை யாரும் கதிரடி பட்டு மரணம் அடைய வில்லை. கதிரடி பட்டுப் புற்று நோயில் மடிய வில்லை. நீங்கள் அவற்றை நிரூபித்துக் காட்ட முடியுமா? */

      இதை உங்களால் நிரூபித்துக் காட்ட முடியுமா?

      கூகுளில் தேடவும், போதுமான ஆதாரம் கிடைக்கும், கிடைக்கவில்லை என்றால் சொல்லவும் நாங்கள் தருகிறோம்.

      /* ஐரோப்பா, வட அமெரிக்கா,. கனடாவில் ஆயிரக் கணக்கான யூனியன் ஊழியர் அணுமின் உலைகளில் 60 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். புற்று நோயில் ஒருவர் அணுமின் உலையில் மடிந்தால் கூட யூனியன் தொழிற்சாலை அதிபதிகளைச் சுட்டு விடுவார். */

      புகுசிமோ விபத்துக்கு பின்பு சப்பான், சுவிசர்லாந்து, செர்மனி போன்ற நாடுகள் அணுமின் உலைகளை படிபடியாக குறைப்போம் என்று சொன்னது ஏன்?

  16. 1. கூகுளில் எந்த அணுசக்தி தொழிற்சாலையில், யார், எப்போது, எந்த அளவு கதிரடி பட்டு நிரூபிக்கப் பட்டிருந்தால் மட்டும் அதை அனுப்புங்கள்.

    2. புகுஷிமா விபத்துக்குப் பிறகு கூடங்குளம் தவிர வேறு இயங்கி வரும் எந்த அணுமின் நிலையமும் நிறுத்தம் அடைய வில்லை. சில நாடுகள் எதிர்காலத்தில் நிறுத்துவோம் என்று வெளி யிட்டிருப்பது மாறிப்போகும் அரசியல் முடிவுகள்.

    3. பல நாடுகளில் புதிய அணுமின் உலைகள் கட்டுவது கூட நிறுத்தப் பட வில்லை.

    சி. ஜெயபாரதன்

  17. /* இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில், அடுத்து அடுத்து இயங்கி வரும் அணுமின் உலைகளில் ஜாதுகூட தொழிற்சாலை உட்பட இதுவரை யாரும் கதிரடி பட்டு மரணம் அடைய வில்லை. கதிரடி பட்டுப் புற்று நோயில் மடிய வில்லை. நீங்கள் அவற்றை நிரூபித்துக் காட்ட முடியுமா? */

    http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp

    மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பு:

    Ask for statistics on cancer-related deaths among workers and the local public health centre refuses our requests on grounds classifying the information as sensitive. The DAE medical officer, Dr Vijaya, claims that the number of cancer cases in the township is an insignificant 244 over a 10-year period. Local activists contest the figure and say that the official list excludes many deaths. The cause of death is often changed to keep numbers down. Activists and DAE officials also do not see eye-to-eye on the causes of diseases that are prevalent here.

  18. எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தாங்க,

    நாட்டின் முன்னணி வளர்ச்சி நிறுவனகள், தொழிர்ச் சாலைகள் அனைத்தும் முக்கிய நகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் கட்டும் போது ஏன் இந்த அணுஉலையை மட்டும் கட்டுவதில்லை

    சரி அணு உலை அமைக்கப் படும் இடத்தில் அதிகபட்சம் எவ்வளவு மக்கள் இருக்க வேண்டும், எதாவது விதிமுறை இருக்கிறதா?

  19. http://base.d-p-h.info/fr/fiches/dph/fiche-dph-8855.html

    மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பு:
    According to Ghanshyam Birouli, an anti-uranium mining activist based in Jaduguda, the symptoms of radiation are more prominent in the generation born after uranium mining started in Jaduguda. Ghanshyam’s own father, who was a labourer in the mines, died of lung cancer. The carelessness of UCIL in disposing the mining waste materials coupled with lack of knowledge about radiation among the tribals have exposed them to high levels of radiation.

  20. http://www.wise-uranium.org/umopjdg.html

    மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பு:
    According to the survey, more children – about 9.5 per cent of the newborns – are dying each year due to extreme physical deformity, primary sterility is becoming common with 9.6 per cent of women not being able to conceive even three years after marriage. Cancer deaths in nearby villages are about 2.87 per cent and 68.33 per cent people are dying before the age of 62. (The Telegraph March 2, 2008)

  21. http://rpd.oxfordjournals.org/content/early/2010/12/23/rpd.ncq496.abstract

    மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறிப்பு:
    it was estimated that the average radiation dose from all exposure pathways to the public living in villages around the mining complex is 2.5 mSv y−1 and around 50 % contributed due to inhalation of radon and its progeny. The external radiation dose due to terrestrial and cosmic activity is estimated to be 1.1 mSv y−1, which is 40 % of the total dose and ingestion dose contributes only 3% to the total dose.

  22. மேலே உள்ள சுட்டியில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள்:

    In the absence of any independent study, anecdotal evidence suggests that the mine workers in Jaduguda are suffering from an epidemic of lung cancer, skin diseases and other chronic ailments. Besides, nobody knows how many people have died so far.

    The UCIL however claims that it has not noticed any effects of radiation on its workforce; notwithstanding the records of 17 workers who died in 1994, 14 in 1995, 19 in 1996and 21 in 1997.

    The amount of Caesium-137 in tailing dam number 1 is 10 times higher than inother areas of Jaduguda. Caesium-137 is a radioactive isotope that’s formedmainly by nuclear fission and its presence at a uranium mine waste dump siteraises several disturbing points.

    The air-gamma dose at the tailing dams exceeds 10mSv/y (1.1_Sv/h). Thisfigure, however is very high and dangerous.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s