பேரழிவுப் போராயுதம் !


சி. ஜெயபாரதன், கனடா

பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுக நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
அணு ஆயுத வெடிப்பில்
புகை மண்டலம்
சூழ்வெளியில் பரவிச்
சூடேறும் பூகோளம் ! அல்லது
பரிதி ஒளியை மறைத்து
குளிர்ப் பூமி உண்டாகும் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
புது யுகச் சூட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (August 6/9  2010)  Japan Bombing Days

7 thoughts on “பேரழிவுப் போராயுதம் !

 1. Thinnai.com Sunday August 15, 2010

  ஜெயபாரதன் கவிதை பற்றி

  நந்திதா
  வணக்கம்

  அணு ஆயுத வெடிப்பில்
  புகை மண்டலம்
  சூழ்வெளியில் பரவிப்
  பரிதி ஒளியை மறைத்து
  குளிர்ப் பூமி உண்டாகும் !
  புத்தர் பிறந்த நாட்டிலே
  புனிதர் காந்தி வீட்டிலே
  புது யுகச் சூட்டிலே
  மனித நேயம்
  வரண்டு போன
  வல்லரசுகள் பின் சென்று
  பாரத அன்னைக்குப்
  பேரழிவுப்
  போரா யுதத்தை
  ஆரமாய்
  அணிவிக்க லாமா ?

  ****************

  என்ன அற்புதமான வார்த்தைப் பொழிவுகள் !!!!!!!!

  அறிஞர் பெருந்தகை ஜெயபாரதன் அவர்களைப் பெற்றதில் பாரத அன்னை நிச்சயம் மகிழ்வாள், என்னுடைய வணக்கங்களும் பாராட்டுக்களும், ஐயா இன்னும் மனிதம் சாகவில்லை என்பதற்கு நீங்களே ஒரு சாட்சி.

  அன்புடன்
  நந்திதா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.