Dr. Homi J. Bhabha
(1909 – 1966)
சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா
“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்”
தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]
“விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன! அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக நாடாக முன்னேற வேண்டும் !”
ஜவஹர்லால் நேரு.
“இன்னும் 20 ஆண்டுகளுக்குள் உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும், இந்தியாவின் தொழில்வள நிதிப்போக்கிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது! முற்போக்கு நாடுகளின் கண்முன் தொழிற் துறைகளில் பிற்போக்கு அடைவதை வேண்டாதிருந்தால், பாரதம் அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் முற்பட வேண்டும்”.
டாக்டர் ஹோமி பாபா [1948]
“சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது”
டாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]
“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”
முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.
“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுதச் சோதனை செய்ய முடியும்.”
டாக்டர் ஹோமி பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)
இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள்
பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ஆராய்ச்சி உலைகள் [Atomic Research Reactors] முளைத் தெழுந்தன. மேலை நாடுகளில் அதற்குப் பிறகு 1950-1960 ஆண்டுகளில் அணுசக்தியை ஆக்க வினைகளுக்குப் பயன்படுத்தச், சோதனை அணு மின்சக்தி உலைகள் [Test Atomic Power Reactors] கட்டப் பட்டன. அவை வெற்றிகரமாய் இயங்கி, வாணிபத்துறை அணுசக்தி நிலையங்கள் [Commercial Atomic Power Stations] தலை தூக்கத் தொடங்கின.
இந்தியாவில் அணுவியல் துறை ஆராய்ச்சியைத் துவக்கவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் பண்டித நேரு வேட்கை கொண்டு அப்பணிகளைச் செய்ய ஓர் உன்னத விஞ்ஞானியைத் தேடினார். அப்போதுதான் டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் மொம்பையில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார்.
1958 மார்ச் 14 இல் நேரு இந்திய அணுசக்தி ஆணையகத்தை [Indian Atomic Energy Commission] நிறுவனம் செய்து ஹோமி பாபாவுக்குத் தலைவர் [Chairman] பதவியை அளித்தார். நேருவைப் போன்று டாக்டர் ஹோமி பாபாவும் ஓர் தீர்க்க தரிசியே.
நேரு விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார். இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது. அணுசக்தி நிலையத்தை நிறுவனம் செய்ய ஏறக் குறைய எல்லாச் சாதனங்களும் இந்தியாவிலே இப்போது உற்பத்தி யாகின்றன! அதுபோல் அண்டவெளி ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு. 1974 இல் பாரதம் தனது முதல் அடித்தள அணுகுண்டு வெடிப்பைச் [Underground Atomic Implosion] செய்து, உலகில் அணுகுண்டு வல்லமை யுள்ள ஆறாவது நாடாகப் பெயர் பெற்றது! அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! அப்புதிய பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர், டாக்டர் பாபா.
பாரத நாட்டு அணுவியல் துறைகளின் பிதா
டாக்டர் பாபா ஓர் உயர்ந்த நியதிப் பௌதிக விஞ்ஞானி [Theoretical Physicist]. விஞ்ஞான மேதமையுடன் தொழில் நுட்பப் பொறியியல் திறமும் [Engineering Skill] பெற்றவர். மேலும் அவர் ஓர் கட்டடக் கலைஞர் [Architect]. கலைத்துவ ஞானமும், இசையில் ஈடுபாடும் உள்ளவர். மொம்பையில் பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தை [Bhabha Atomic Research Centre] நேரில் பார்ப்பவர், பாபாவின் கலைத்துவக் கட்டட ஞானத்தை அறிந்து கொள்வர். விஞ்ஞானத்தில் அகிலக் கதிர்களைப் [Cosmic Rays] பற்றி ஆய்வுகள் செய்தவர். பரமாணுக்களின் இயக்க ஒழுக்கங்களை [Behaviour of Sub-atomic Particles] நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றுக்கு அநேக விஞ்ஞான விளக்கங்கள் அளித்துத் தெளிவாக்கியவர். இந்தியாவில் முற்போக்குப் பௌதிகக் [Advanced Physics] கல்விக்கு விதையிட்டு, அதன் விருத்திக்கும், ஆராய்ச்சிக்கும் ஆய்வுக் கூடங்கள் அமைத்தவர். பாரதத்தில் அணுவியல் விஞ்ஞான ஆய்வுக்கும், அணுசக்தி நிலையங்கள் அமைப்புக்கும் திட்டங்கள் வகுத்து அவற்றை நிறைவேற்ற ஆராய்ச்சிக் கூடங்கள், இரசாயனத் தொழிற் சாலைகள் ஆகியவற்றைப் பக்க பலமாக நிறுவனம் செய்தவர். அவரது விஞ்ஞான ஆக்கத்திற்கும், நிறுவன ஆட்சித் திறமைக்கும், அகில நாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பைப் பெற்றவர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விஞ்ஞானப் பேரவைகளில் பொறுப்பான பெரிய பதவிகள் ஏற்றவர். குறிப்பாக ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் அகிலச் சபைகளில் [Organizations for the Peaceful Uses of Atomic Energy] உயர்ந்த பதவி வகித்தவர். இந்தியாவின் பாரத ரத்னா விருதையும், இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] கௌரவ அங்கிகரிப்பையும் பெற்றவர். எந்த ஆசிய நாட்டிலும் இல்லாத மாபெரும் அணுசக்தித் துறைகளை இந்தியாவில் நிறுவி, பாரத நாட்டை முன்னணியில் நிறுத்திய டாக்டர் பாபா, பாரதத்தின் அணுவியல் துறைப் பிதாவாகப் போற்றப்படுகிறார்.
ஹோமி பாபாவின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு
ஹோமி பாபா ஓர் பார்ஸி குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மொம்பையில் [Bombay] பிறந்தார். அங்கே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, யந்திரப் பொறியியல் [Mechanical Engineering] பட்டம் பெற, 1927 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கான்வில் கையஸ் கல்லூரியில் [Gonville & Caius College, Cambridge] சேர்ந்தார். அங்கே அவரது கணித ஆசிரியர், பால் டிராக் [Paul Dirac (1902-1984)]. பால் டிராக் கணிதத்திலும் நியதிப் பௌதிகத்திலும் [Theoretical Physics] வல்லுநர். அவர்தான் முதன் முதலில் ஒப்புமை மின்னியல் நியதியைப் [Relativistic Electron Theory] படைத்தவர். அந்த நியதி எதிர்த்-துகள்களின் [Anti-Particles] இருப்பை முன்னறிவித்துப் பின்னால் பாஸிடிரான் [Positron] கண்டு பிடிக்க உதவியது. 1933 இல் அலை யந்திரவியல் [Wave Mechanics] துறைக்கு ஆக்கம் அளித்தற்கு இன்னொரு விஞ்ஞானியுடன், டிராக் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். அவரது கல்விப் பயிற்சி பாபாவைக் கணிதத்திலும், நியதிப் பௌதிகத்திலும் தள்ளி, விஞ்ஞானத்தில் வேட்கை மிகுந்திடச் செய்தது.
1930 இல் யந்திரப் பொறியியலில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு, கேம்பிரிடிஜ் காவென்டிஷ் ஆய்வகத்தில் [Cavendish Laboratories] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார். அப்போது ஈரோப்புக்கு விஜயம் செய்து, உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli], அணுவியல் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மி [Enrico Fermi], அணுவின் அமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr], பளு சக்திச் சமன்பாடு [Mass Energy Equation] படைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein] போன்ற ஒப்பற்ற விஞ்ஞான மேதைகளைக் கண்டு உரையாடி, அவர்களது நட்பைத் தேடிக் கொண்டார். பாலி, ஃபெர்மி, போஹ்ர், ஐன்ஸ்டைன் அத்தனை பேரும் பௌதிகப் படைப்புகளுக்காக நோபெல் பரிசு பெற்றவர்.
1935 ஆம் ஆண்டு பௌதிக விஞ்ஞானத்தில் டாக்டர் ஆஃப் ஃபிளாஸ்ஃபி [Ph.D.] பட்டம் பெற்று, 1939 ஆண்டு வரை கேம்பிரிட்ஜில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வந்தார். அப்போது இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] அங்கிகரிப்பும் பாபா பெற்றார். அதே சமயத்தில் F.R.S. பெற்ற கனடாவின் அணுவியல் மேதை, டாக்டர் W.B. லூயிஸ் [Dr. W. B. Lewis], பாபாவின் நெருங்கிய நண்பர். 1957 இல் கனடா இந்திய அணு உலை, சைரஸ் [Canada India Reactor, CIRUS] மொம்பையில் நிறுவனம் செய்யவும், ராஜஸ்தான் கோட்டா, சென்னைக் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கான்டு [CANDU] அணுசக்தி மின்சார நிலையங்கள் தோன்றுவதற்கும், பாபா-லூயிஸ் கல்லூரி நட்பு அடிகோலியது.
அகிலக்கதிர் பற்றிய அடிப்படை விஞ்ஞானச் சாதனைகள்
உயர் சக்தி பௌதிகத்தின் [High Energy Physics] பாகமான குவாண்டம் மின்னியல் கொந்தளிப்பின் [Quantum Electrodynamics] ஆரம்ப விருத்திக்கு, டாக்டர் பாபா மிகுந்த படைப்புகளை அளித்துள்ளார். அவரது முதல் விஞ்ஞான வெளியீடு, பிண்டத்தில் உயர் சக்திக் காமாக்கதிர்கள் விழுங்கப் படுவதைப் [Absorption of High Energy Gamma Rays in Matter] பற்றியது. ஒரு பிரதமக் காமாக்கதிர் எலக்டிரான் பொழிவாக [Electron Showers] மாறித் தன் சக்தியை வெளியேற்றுகிறது. பாஸிடிரானைச் [Positron] சிதறும் எலக்டிரானின் முகப் பரப்பை [Cross Section], 1935 இல் முதன் முதல் கணக்கிட்ட விஞ்ஞானி, டாக்டர் பாபா. [முகப் பரப்பு என்பது மிகச் சிறிய அணுக்கருப் பரப்பளவு. அந்தப் பரப்பளவு ஓர் அணுக்கரு இயக்கம் நிகழக் கூடும் எதிர்பார்ப்பைக் (Probabilty) கணிக்கிறது]. அந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்பு “பாபாச் சிதறல்” [Bhabha Scattering] என்று இப்போது பௌதிக விஞ்ஞானத்தில் அழைக்கப் படுகிறது.
டாக்டர் பாபா அகிலக் கதிர்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். பூமியின் மட்டத்திலும், தரைக்குக் கீழும் காணப்படும் ஆழத்தில் ஊடுறுவும் துகள்கள் [Highly Penetrating Particles] எலக்டிரான்கள் அல்ல, என்று 1937 இல் பாபா எடுத்துக் கூறினார். ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1946 இல் அக்கூற்று மெய்யானது என்று நிரூபிக்கப் பட்டது. ஆழமாய் ஊடுறுவும் அந்தத் துகள்கள் மியூ-மேஸான் [Mu-Meson] என்று பின்னால் கண்டு பிடிக்கப் பட்டன. வெக்டர் மேஸான் [Vector Meson] இருப்பதை, டாக்டர் பாபா ஒரு நியதி மூலம் எடுத்துரைத்தார்.
1938 இல் பூமியின் வாயு மண்டலத்தை அதி வேகமாய்த் தாக்கும், அகிலக் கதிர்களின் ஆயுளைக் கணித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொகுத்த “சிறப்பு ஒப்புமை நியதியின்” [Special Theory of Relativity] காலக் கொள்ளளவு மாறுபாட்டை [Time Dilation Effect] உறுதிப் படுத்தினார். அந்த முறைக்கு ஒரு பூர்வீக வழியையும் வகுத்தார். ஒப்புமை நியதி உரைத்தது போல் அதே துள்ளிய அளவு அகிலக் கதிர்களின் ஆயுட் காலம் நீடிப்பதாகக் காணப் பட்டது.
பாரத தேசத்தில் பாபா தோற்றுவித்த விஞ்ஞான ஆய்வகங்கள்
1939 இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த பாபா, யுத்தம் நடந்த காரணத்தால், மீண்டும் இங்கிலாந்துக்குப் போக முடியவில்லை. டாக்டர் பாபாவுக்குப் பெங்களூர், இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Bangalore, Indian Institute of Science] அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஓரிடம் காத்திருந்தது. அப்போது அதன் ஆணையாளர், நோபெல் பரிசு பெற்ற பாரத விஞ்ஞான மேதை, டாக்டர் சி. வி. ராமன் [Director Dr. C.V. Raman (1888-1970)]. டாக்டர் ராமன் மீது டாக்டர் பாபாவுக்கு அளவு கடந்த மதிப்பு. அவரது விஞ்ஞான மேதமை, ஆழ்ந்த முறையில் பாபாவை ஊக்கியது. பாபா பாரதத்திலே தங்க முடிவு செய்து விஞ்ஞான முற்போக்கிற்கும், பொறியியல் தொழில் விருத்திக்கும் பணிசெய்ய முற்பட்டார்.
1944 இல் தொழிற்துறை வளர்ச்சி அடைய விஞ்ஞானிகளுக்கு முற்போக்கான பௌதிகப் பயிற்சி அளிக்க ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டார். அதைப் பின்பற்றி டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் [The Tata Institute of Fundamental Research] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை டாக்டர் பாபா அதன் ஆணையாளராகப் [Director] பணியாற்றி வந்தார். ஆசியாவிலே அதி உன்னத விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடம் அது. 1952 ஆம் ஆண்டில் அடிப்படைத் துகள் மேஸான்களில் [Fundamental Particle, Mason] ஒன்றைக் கண்டு பிடித்து “மேனன் மேஸான்” [Menon Mason] என்று பெயரிட்ட பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன், இந்தியப் படைத்துறை ஆலோசகர், டாக்டர் ராஜா ராமண்ணா ஆகிய விஞ்ஞான மேதைகளை உருவாக்கியது, டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம்.
இந்தியாவில் அணுவியல் விஞ்ஞானத் துறைகள் வளர்ச்சி
டாக்டர் பாபாவின் உன்னதப் படைப்பு, பாரத தேசத்தில் நிலையாக வளர்ச்சி பெறும், உயர்ந்த ஓர் அணுவியல் துறைத்தொழில் அமைப்பு. அணு ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி மின்சார நிலையங்கள், அவற்றுக்கு ஒழுங்காக எரிப்பண்டங்கள் ஊட்டும் யுரேனியம், தோரியத் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], கான்டு அணு உலைகளுக்கு வேண்டிய மிதவாக்கி [Moderator] கனநீர் உற்பத்திச் சாலைகள் , கதிரியக்கப் பிளவுக் கழிவுகளைச் [Radioactive Fission Products] சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை [Spent Fuel Reprocessing Plant], தாதுப் பண்டத்தை மாற்றி அணு உலைக்கேற்ற எரிக்கோல் கட்டுகள் தயாரிப்பு [Nuclear Fuel Bundle Fabrication], அணுசக்தி நிலையங்களை ஆட்சி செய்ய மின்னியல் கருவிகள், மானிடர் உடல் நிலையைக் கண்காணிக்கக் கதிரியக்க மானிகள் [Control System Instrumentations, Radiation Monitors], மின்சாரச் சாதனங்கள், கன யந்திரங்கள், கொதி உலைகள், பூதப் பம்புகள், வெப்ப மாற்றிகள் போன்று ஏறக் குறைய எல்லா வித பாகங்களும் பாரத நாட்டிலே தயாராகின்றன. அணு உலைகளை இயக்கும் இளைஞர் பயிற்சி பெற அணுவியல் துறைக் கல்வி, மற்றும் பயிற்சிப் பள்ளிகள் பாரதத்தில் உள்ளன.
இந்தியா கீழ்த்தள அணுகுண்டை 1974 மே மாதம் 18 இல் வெடித்தற்கு முன் அணுவியல் சாதனங்கள் பல, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வந்தன. அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு, அம்மூன்று நாடுகளும் வெகுண்டு அணுவியல் சாதனங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை. 1974 ஆண்டுக்குப் பிறகு அணுசக்தித் துறை விருத்தியில் பாரத நாடு தன் காலிலே நிற்கிறது! சில குறிப்பிட சாதனங்களை மட்டும் ஈரோப்பில் வாங்கிக் கொள்கிறது, இந்தியா. இவ்வாறு பல்துறைகள் இணைந்து முழுமை பெற்றுச் சீராய் இயங்கும் மாபெரும் அணுவியல் துறை அமைப்பகம், இந்தியாவைப் போல் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இல்லை!
பாரதத்தில் அணுசக்தி மின்சார நிலையங்கள் அமைப்பு
டாக்டர் பாபா முதலில் ஆராய்ச்சிகள் புரிய ஆய்வு அணு உலைகளை [Research Reactors] நிறுவினார். இந்திய விஞ்ஞானிகள் அமைத்த “அப்ஸரா” நீச்சல் தொட்டி அணு உலையும் [Swimming Pool Reactor, Apsara], கனடா இந்தியக் கூட்டுறவில் கட்டப் பட்ட “ஸைரஸ்” வெப்ப அணு உலையும் [Canada India Reactor Utility & Service, Cirus] டிராம்பே அணுசக்திக் கூடத்தில் [Atomic Energy Establishment, Trombay, Now Bhabha Atomic Research Centre] அமைக்கப் பட்டன. ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையை இயக்க 1957 இல் பல எஞ்சினியர்கள், விஞ்ஞானிகள் கனடாவில் உள்ள NRX ஆய்வு உலையில் பயிற்சி பெற அனுப்பட்டார்கள். 1960 இல் இயங்க ஆரம்பித்த ஸைரஸ் அணு உலையை, பிரதமர் நேரு திறந்து வைத்தார். துவக்க விழாவிற்கு அகில நாட்டு விஞ்ஞானிகள் பலர் (குறிப்பாக அணுவின் உள்ளமைப் விளக்கி நோபெல் பரிசு பெற்ற நீல்ஸ் போஹ்ர், Niels Bohr) வந்திருந்தனர்.
அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இரண்டாவது அணுவியல் ஆய்வுக் கூடம் [Indira Gandhi Atomic Research Centre] தோன்றியது. அங்கு வேகப் பெருக்கிச் சோதனை அணு உலையும் [Fast Breeder Test Reactor], காமினி அணு உலையும் [Kamini Reactor], இரட்டை அணுசக்தி மின்சார நிலையமும் [CANDU Model] உள்ளன. அணுசக்தி ஆராய்ச்சிக் கூடங்கள், மற்றும் அணுவியல் துணைத் தொழிற்சாலைகள் எல்லாம் அணுசக்தித் துறையகத்தின் [Dept of Atomic Energy] கீழ்ப் பணி புரிகின்றன.
அடுத்து பாபா அணுமின் சக்தி நிலையங்களை [Atomic Power Station] அமைக்க அடிகோலினார். முதலில் அமெரிக்காவின் ஆதரவில், தாராப்பூரில் கொதிநீர் அணுசக்தி மின்சார நிலையம் [Boiling Water Reactor, BWR] இரண்டை, ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி கட்டியது. ஒப்பந்தப்படி இதற்கு வேண்டிய செழிப்பு யுரேனிய [Enriched Uranium] மூலத் தாது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஹைதராபாத் எரிக்கோல் தயாரிப்புத் தொழிற்சாலையில் [Fuel Fabrication Plant] உருவானது. கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் தீவிரக் கதிரியக்கத் தீண்டல்கள் [Radioactive Contaminations] உண்டாவதால், அம்மாடல்கள் பிறகு இந்தியாவில் பெருகவில்லை. கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் பயிற்சி பெற பல எஞ்சினியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டார்கள்.
அடுத்து கனடாவின் கூட்டுறவில், கனடாவின் கான்டு [Canadian Deuterium Uranium, CANDU] மாடலில் இரட்டை அணுசக்தி மின்சார நிலையங்கள் ராஜஸ்தானில் கோட்டாவுக்கு அருகிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றுக்குத் தேவையான இயற்கை யுரேனியம் [Natural Uranium] பாரதத்தில், மிஞ்சிய அளவில் கிடைக்கிறது. கனடா இந்திய ஒப்பந்தத்தின் போது, டாக்டர் பாபா இந்தியாவிலே கான்டு எரிக்கோல் [CANDU Fuel Bundles] தயாரிக்கவும், கான்டு அணுஉலைக் கலன்களைப் புதிதாய் உற்பத்தி செய்யவும், அந்த மாடல் நிலையங்களைப் பெருக்கும் உரிமைகளையும் கனடாவிட மிருந்து முதலிலேயே வாங்கிக் கொண்டார்.
அணுமின் சக்தி உற்பத்திக்கு ஆதரவான தொழிற்சாலைகள்
2002 இல் தற்போது புதிதாக எட்டு கான்டு அணுசக்தி நிலையங்கள் இந்தியரால் கட்டப் பட்டு, அவை இயங்க ஆரம்பித்து மின்சாரத்தை பரிமாறிக் கொண்டு வருகின்றன. மேலும் புதிதாக ஆறு கான்டு அணுசக்தி நிலையங்கள் நிறுவனமாகிக் கொண்டிருக்கின்றன. மொத்தம் 13 அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. முதல் ராஜஸ்தான் கான்டு நிலையத்தில் பக்கப் பாதுகாப்புறை [End Shields] ஒன்றில் கதிரியக்க நீர் தொடர்ந்து கசிவதால், அணுஉலை இயக்கம் நிரந்தரகாக நிறுத்தப் பட்டுள்ளது.
அணு உலைகளுக்குத் தேவையான மூலத் தாதுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], [Uranium Corporation of India Ltd], எரிக்கோல் தயாரிக்கும் கூடங்கள் [Nuclear Fuel Complex], கழிவு எருக்களைச் சுத்தீகரிக்கும் தொழிற்சாலைகள் [Fuel Reprocessing Plants], கனநீர் உற்பத்திச் சாலைகள் , உலைக்கலன், உலைச் சாதனங்கள் உற்பத்திக்கு கன மின்சாரச் சாதனத் தொழிற்கூடம் [Bharath Heavy Electricals, Bhopal], [Larson & Tubro], [KSP Poona], அணுஉலை இயக்கக் கருவிகள், கதிரியக்க மானிகள் தயாரிக்கும் கூடங்கள் [Electronic Corporation of India Ltd] போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.
1955 இல் ஜெனிவாவில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவைக்கு [United Nations Conference on the Peaceful Uses of Atomic Energy] டாக்டர் பாபா தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பட்டார். 1960 முதல் 1963 வரை அகில நாடுகளின் தூய & பயன்படும் பௌதிக ஐக்கிய அவைக்குத் [International Union of Pure & Applied Physics] தலைவராகப் பணியாற்றினார். 1964 இல் நடந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவையில், முன்னேறும் நாடுகளைப் பார்த்து, “மின்சக்தி இல்லாமைப் போல் செலவு மிக்க எந்த மின்சக்தியும் இல்லை” [No power is as costly as no power] என்று பாபா கூறிய ஒரு பொன்மொழியை உலக நாடுகள் எடுத்துப் பறைசாற்றின.
பாரதத்தின் அணுவியல் மேதை பாபாவின் மரணம்
1962 அக்டோபர் 26 இல் சைனா இந்தியாவின் மீது படையெடுத்து வடக்கே சில பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு போனது. பாரதம் எதிர்க்க வலுவற்றுத் தோல்வி யுற்றுக் தலை குனிய நேரிட்டது! பண்டித நேரு 1964 மே 27 இல் காலமாகி, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அடுத்து சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவைப் பயமுறுத்தியது!
டாக்டர் பாபா, பாரதம் வலுவடைய பிரதமரை ஒப்ப வைத்து, அணு ஆயுதம் உண்டாக்க அடிகோலினார். பின்னால் ஹோமி சேத்னா [Homi Sethna] காலத்தில் அணுகுண்டு தயாரிக்கப் பட்டு கீழ்த்தள வெடிப்புச் [Underground Implosion] சோதனை 1974 மே மாதம் 18 இல் ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் நிறைவேறியது.
1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடர் மான்ட் பிளாங்கில் [Mont Blanc] விமானம் மோதி, டாக்டர் பாபா தனது 57 ஆம் வயதில் அகால மரணம் எய்தினார். பாரதம் ஓர் அரிய விஞ்ஞான மேதையை இழந்தது. அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன. 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இந்திய அணுசக்தித் துறையின் மாபெரும் புதிய காண்டு 540 MWe அணுமின் நிலையம் தாராப்பூரில் “பூரணம்” [Criticality] அடைந்துள்ளது, மகத்தான சாதனையாகக் கருதப்படுகிறது.
தற்போது 17 அணுமின் நிலையங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. தாராப்பூரின் இரட்டைப் புதிய நிலையங்கள் (2 x 500 MWe) மின்னாற்றல் இன்னும் சில மாதங்களில் பரிமாறும் போது, மொத்தம் 3960 MWe மின்சாரம் அனுப்பப்படும். அடுத்து 8 அணுமின் நிலையங்கள் பாரதத்தில் கட்டுமானமாகி வருகின்றன. அவை எதிர்பார்க்கும் 2008 ஆம் ஆண்டில் மின்சக்தி உற்பத்தி செய்யும் போது மொத்த ஆற்றல் 6780 MWe ஆகப் பெருகி, கி.பி. 2020 இல் 20,000 MWe மின்சார ஆற்றலை அடையும் குறிக்கோள் நிறைவேறும்.
டாக்டர் பாபா திருமணம் செய்து கொள்ள வில்லை. அவரது அன்பு இல்லத்தரசி விஞ்ஞானம் ஒன்றுதான்! நேரடிப் பார்வையில் அவர் மொம்பையில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது. இந்திய அணுவியல் தொழிற் துறைகளின் பொற்காலத்திற்கு, டாக்டர் பாபாவின் பணிகள் பேரொளி அளித்துள்ளன என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.
********************
India’s operating nuclear power reactors:
Reactor | State | Type | MWe net, each | Commercial operation | Safeguards status |
Tarapur 1 & 2 | Maharashtra | BWR | 150 | 1969 | item-specific |
Kaiga 1 & 2 | Karnataka | PHWR | 202 | 1999-2000 | |
Kaiga 3 | Karnataka | PHWR | 202 | 2007 | |
Kakrapar 1 & 2 | Gujarat | PHWR | 202 | 1993-95 | in 2012 under new agreement |
Kalpakkam 1 & 2 (MAPS) | Tamil Nadu | PHWR | 202 | 1984-86 | |
Narora 1 & 2 | Uttar Pradesh | PHWR | 202 | 1991-92 | in 2014 under new agreement |
Rajasthan 1 | Rajasthan | PHWR | 90 | 1973 | item-specific |
Rajasthan 2 | Rajasthan | PHWR | 187 | 1981 | item-specific |
Rajasthan 3 & 4 | Rajasthan | PHWR | 202 | 1999-2000 | early 2010 under new agreement |
Rajasthan 5 | Rajasthan | PHWR | 202 | Feb 2010 | Oct 2009 under new agreement |
Tarapur 3 & 4 | Maharashtra | PHWR | 490 | 2006, 05 | |
Total (18) | 3981 MWe |
Kalpakkam also known as Madras/MAPS
Rajasthan/RAPS is located at Rawatbhata and sometimes called that
Kaiga = KGS, Kakrapar = KAPS, Narora = NAPS
dates are for start of commercial operation.
India’s nuclear power reactors under construction:
Reactor | Type | MWe net, each | Project control | Commercial operation due | Safeguards status |
Kaiga 4 | PHWR | 202 MWe | NPCIL | 3/2010 | |
Rajasthan 6 | PHWR | 202 MWe | NPCIL | 2/2010 | Oct 2009 under new agreement |
Kudankulam 1 | PWR (VVER) | 950 MWe | NPCIL | 9/2010 | item-specific |
Kudankulam 2 | PWR (VVER) | 950 MWe | NPCIL | 3/2011 | item-specific |
Kalpakkam PFBR | FBR | 470 MWe | Bhavini | 9/2011 | – |
Total (5) | 2774 MWe |
Rajasthan/RAPS also known as Rawatbhata
dates are for start of commercial operation.
Power reactors planned or firmly proposed
Reactor | State | Type | MWe net, each | Project control | Start construct | Start operation |
Kakrapar 3 | Gujarat | PHWR | 640 | NPCIL | 2010? | 2014 |
Kakrapar 4 | Gujarat | PHWR | 640 | NPCIL | 2010? | 2014 |
Rajasthan 7 | Rajasthan | PHWR | 640 | NPCIL | 2010? | 2014 |
Rajasthan 8 | Rajasthan | PHWR | 640 | NPCIL | 2010? | 2014 |
Kudankulam 3 | Tamil Nadu | PWR – AES 92 or AES-2006 | 1050-1200 | NPCIL | late 2010? | 2017 |
Kudankulam 4 | Tamil Nadu | PWR – AES 92 or AES-2006 | 1050-1200 | NPCIL | 2011? | 2017 |
Jaitapur 1 & 2 | Maharashtra | PWR – EPR | 1600 | NPCIL | by 2012 | 2017-18 |
Kaiga 5 & 6 | Karnataka | PWR | 1000/1500 | NPCIL | by 2012 | |
Kudankulam 5 & 6 | Tamil Nadu | PWR – AES 92 or AES-2006 | 1050-1200 | NPCIL | 2012? | 2017 |
Kudankulam 7 & 8 | Tamil Nadu | PWR – AES 92 or AES-2006 | 1050-1200 | NPCIL | 2012? | 2017 |
? | PWR x 2 | 1000 | NPCIL/NTPC | by 2012? | 2014 | |
Jaitapur 3 & 4 | Maharashtra | PWR – EPR | 1600 | NPCIL | by 2016 | |
Kumharia | Haryana | PHWR x 4 | 640 | NPCIL | by 2012? | |
Bargi | Madhya Pradesh | PHWR x 2 | 640 | NPCIL | ||
Kalpakkam 2 & 3 | Tamil Nadu | FBR x 2 | 470 | Bhavini | 2017 | |
? | ? | FBR x 2 | 470 | Bhavini | 2017 | |
? | AHWR | 300 | NPCIL | by 2012 | 2020 | |
Subtotal | 29 units | 25,800 MWe | ||||
Jaitapur 5 & 6 | Maharashtra | 6 x EPR | 1600 | NPCIL | ||
Markandi (Pati Sonapur) | Orissa | PWR 6000 MWe | ||||
Mithi Virdi 1-6, Saurashtra region | Gujarat | 6 x AP1000 | 1250 | |||
Pulivendula | Andhra Pradesh | PWR? | 2×1000 | NPCIL 51%, AP Genco 49% | ||
Kovvada 1-6 | Andhra Pradesh | 6 x ESBWR | 1350-1550 | |||
Haripur 1-4 | West Bengal | PWR x 4 VVER-1200 | 1200 | 2017 | 2022? |
For WNA reactor table: first 23 units ‘planned’, next (estimated) 15 ‘proposed’.
The AEC has said that India now has “a significant technological capability in PWRs and NPCIL has worked out an Indian PWR design” which will be unveiled soon – perhaps 2010.
Nuclear Energy Parks
In line with past practice such as at the eight-unit Rajasthan nuclear plant, NPCIL intends to set up five further “Nuclear Energy Parks”, each with a capacity for up to eight new-generation reactors of 1,000 MWe, six reactors of 1600 MWe or simply 10,000 MWe at a single location. By 2032, 40-45 GWe would be provided from these five. NPCIL says it is confident of being able to start work by 2012 on at least four new reactors at all four sites designated for imported plants.
The new energy parks are to be:
Kudankulam in Tamil Nadu: three more pairs of Russian VVER units, making 9200 MWe.
Jaitapur in Maharashtra: Preliminary work at is likely soon with six of Areva’s EPR reactors in view, making 9600 MWe.
Mithi Virdi (or Chayamithi Virdi) in Gujarat: to host US technology (Westinghouse AP1000).
Kovvada in Andhra Pradesh: to host US technology (GE Hitachi ESBWR – possibly ABWR).
Haripur in West Bengal: to host four further Russian VVER-1200 units, making 4800 MWe.
At Markandi (Pati Sonapur) in Orissa there are plans for up to 6000 MWe of PWR capacity. Major industrial developments are planned in that area and Orissa was the first Indian state to privatise electricity generation and transmission. State demand is expected to reach 20 billion kWh/yr by 2010.
At Kumharia in Haryana the AEC had approved the state’s proposal for a 2800 MWe nuclear power plant and the site is apparently earmarked for four indigenous 700 MWe PHWR units. The northern state of Haryana is one of the country’s most industrialized and has a demand of 8900 MWe, but currently generates less than 2000 MWe and imports 4000 MWe. The village of Kumharia is in Fatehabad district and the plant may be paid for by the state government or the Haryana Power Generation Corp.
Bargi in Madhya Pradesh is also designated for two indigenous 700 MWe PHWR units.
The AEC has also mentioned possible new nuclear power plants in Bihar and Jharkhand.
*************
Information :
http://www.world-nuclear.org/info/inf53.html (Nuclear Power in India) (World Nuclear Association Report) Revised on March 13, 2010
http://www.npcil.nic.in/ (Nuclear Power Corporation India Ltd)
http://www.hinduonnet.com/fline/fl2207/stories/20050408001104500.htm (India’s largest nuclear power reactor reaches criticality months ahead of schedule, marking another milestone in its march towards technological self-reliance.)
https://jayabarathan.wordpress.com/2009/08/15/nuclear-power-21st-century/ (21- Century Nuclear Power)
http://www.globalsecurity.org/wmd/world/india/reactor.htm (India’s Nuclear Power Reactors)
http://www.dae.gov.in/publ/doc11/page%202.htm (India’s Energy Vision)
http://nuclearweaponarchive.org/India/Bhabha.html (Dr. Homi Bhabha)
*******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 18, 2010)
Very good.. i like very much.. I got lot of information..
This article gives a very concise view of the Status of Atomic science in India. I learned a lot about Electricity production and unit cost at various reactors. How does Indian cost per K/Wh compares with USA , Canada, Japan, France and Russia. I am just curious. We have to convert to Dollars on everything to look at comparative cost. I just talked with friends in Coimbatore. It is very hot and everybody is complaining about the “Power cut” at critical times. India should develop a national policy of self sufficiency and target. Infrastructure development is only possible with leadership and vision. V.P.Veluswamy
Dear Dr. Veluswamy,
India has got the Knowledge, manpower, wealth & experience to design, manufacture, construct, commission & operate a Nuclear Power Plant of 500 MWe capacity in 5 years. Also it builds multiple units (Min four) in one location. Hence cost was drastically reduced if the Plant life is extended to 30 to 35 years. In India the labour is cheaper. it does not have comparative cost estimates with foreign countries, as it now buys the Natural Uranium fuel from outside.
Bhabha coined the famous Quotation which has been taken by the IAEA, in Austria as its Power Motto : ” No power is as costly as no power.”
The Anti-Nukes have their own Quotation : ” No power is as costly as Nuclear Power.”
Both Quotations are true. Original investment is high in Nuclear Plants. But on the long run, Nuclear Power is cheaper, if the Plant life is extended to 30 or 35 years. Even if it is costlier in India, it is worth to build now than later to produce electricity.
Regards,
S. Jayabarathan
This is a very revealing article. It is a very concise review and I appreciated the life history of the Architect of the Indian atomic infrastructure.
I remember how bad I felt when I heard about the plane disaster . I still feel that this was a planned sabotage. I may not know the details. But it is still my feeling.
Anyhow I appreciated the development after his demise. This shows that the country can absorb disasters and still proceed with further developments. The inherent capacity of any organization is always challenged when the leader is gone. But the resiliency for progress has been exemplary. V.P.Veluswamy
Dear Mr Jayabarathan,
Great article.
Mr Bhaba was a great figure and a pioneer. Pandit Nehru trusted Bhaba and both shared a common ground and strong belief that India has got all in it to be a power in science inspite of the near destitution that prevailed in India at that time (thanks the British stripping of India of almost everything).
If you do not know, Dr, Bhaba and his team were also pretty keen to go in for the A-Bomb just to prove to the world that India was a country with a strong science base which unfortunately became so backward in most parts due to the colonial policies of the british conquerors.
He along with many others were keen to set right the image of India in the global arena. Since one could not build an economy so fast from scratch to prove to the world that this is a wealthy country, the only way to prove to the world immediaty was through acheivement in science, which you like it or not was to be through a A-bomb.
I had read a now de-classified report of briefing by CIA chief in 1998 after the Indian A-Bomb test. Answering to a commitee as to why Indian A-Bomb program was not smelt by American intelligence, he was clearly making a point that the Indian bomb program was clearly local and did not involve inputs from any other power. The way he said it was that, India was doing this project which obviously cannot be known by USA or other powers as it was done inside India. The point is many of the scientists that were involved in this second test were also sishyas of Dr. Bhaba. Of course other leading figures in this operation like former president Dr. Abdul Kalam were sishyas of Dr. Vikram Sarabhai, who also was the head of India’s nuclear group after Dr. Bhaba, apart from being the head of India’s space program!
There is one authoritative book about Indian nuclear program called “Indian Nuclear Bomb” written by George Perkovich which talks in detail about Dr. Homi Bhaba!
Keep your good work in telling the world about science.
Nandri
நண்பர் நோ,
“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுதச் சோதனை செய்ய முடியும்.”
டாக்டர் ஹோமி பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)
நான் முதல் அணுகுண்டுக்குத் தேவையான புளுடோனியம் உண்டாக்கிய மொம்பை ஸைரஸ் ஆய்வு அணு உலையில் 1957-1966 இல் பணி செய்தவன். எனக்கு நீங்கள் கூறியவை எல்லாம் தெரியும்.
முதல் அணுகுண்டு, இரண்டாம் அணுகுண்டுகளைத் தயாரித்தவர் டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் ஹோமி பாபாவின் சீடர்.
https://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/
நட்புடன்,
சி. ஜெயபாரதன்.
kodeeswaran.r@gmail.com
Very useful and excellent information..Thank you.
—
Regards,
Kodeeswaran.
“Our lives begin to end the day we become silent about things that matter ”
http://www.paprefuture.blogspot.com/
Dear Mr Jayabarathan,
Thanks for sharing your back ground. No doubt you have such a grip on the subject.
I suggest you write in a book in Tamil on the evolution of Indian nuclear developments. Will make many common and non scientific people understand the work and of course the science and people behind this.
Regards
No
Just one more note – On the point of Dr. Bhaba telling to Nehru that he would be ready with the bomb quickly if clearance will be given by Nehru, I read in some sources that this might have been an exageration on the part of Dr. Bhaba. He seemed to have overestimated certain things which actually was not up to the level that was required. Wish you could throw some light on that.
Dear Friend NO,
Dr. Homi Bhabha made that A-Bomb statement after Nehru’s death (1965) when China exploded its first A-Bomb.
Nehru would not have encouraged A-Bomb making. It was probably initiated when Indira Gandhi was ruling as P.M. after Lal Bhadur Shasthri.
I have written books on Atomic Energy.
https://jayabarathan.wordpress.com/atomic-energy-book/
Regards,
Jayabarathan
Dear Friend NO
////Just one more note – On the point of Dr. Bhabha telling to Nehru that he would be ready with the bomb quickly if clearance will be given by Nehru, I read in some sources that this might have been an exaggeration on the part of Dr. Bhabha. He seemed to have overestimated certain things which actually was not up to the level that was required. Wish you could throw some light on that.////
This opinion was not correct. When Dr. Homi Bhabha made the statement, he was fully capable of creating the A-Bomb, as the Plutonium Plant had enough Plutonium to make the A-Bomb. He was a mechanical Engineer as well as a nuclear physicist.
BARC & TIFR have a high level of intellectual scientists & engineers in India.
Regards,
S. Jayabarathan
அன்பான நண்பர் திரு ஜெயபாரதன்,
பதில்களுக்கு நன்றி! தமிழில் மேலும் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துகள்! இந்திய அணு சக்தி துறை விஞ்ஞானிகள் மிக்க திறம் வாய்ந்தவர்கள் என்பதில் துளி சந்தேகம் இல்லை! நம்முடைய் Atomic science மற்றும் space agencies எந்த ஒரு வளர்ந்த நாட்டுக்கும் சவால் விடும் திறம் படைத்தது என்பதை நான் அறிவேன்!
உங்களின் எழுத்துகள் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம்! அதற்கு காரணம் இருக்கிறது. தமிழ் பதிவுகள் எழுதுபவர்களில் 99% கண்டதை எழுதி காலம் தள்ளுபவர்களாக இருக்கிறார்கள்! Of course, அதில் சிறிதளவும் தவறில்லை ஏனென்றால் அவர்கள் நினைப்பதை அவர்கள் எழுதுகிறார்கள், அது அவர்களின் உரிமை, மேலும் ஒத்த கருத்துடையவர்கள் அதையும் படிக்கிறார்கள், அதுவும் அவர்களின் உரிமை!
ஆனாலும், நான் சுமார் ஒரு வருடமாக அலசி பார்த்தவரையில் தமிழ் பதிவுலகில் the mediocre, mal-intentioned, menaingless, misfits and all other types of “intelectual pretenders” வந்து குடி ஏறி குப்பைகளை அள்ளி போட்டு கொண்டிருக்கிறார்கள்! Of course, அதிலும் தவறில்லை. அவர்கள் நினைப்பதை சரி என்று எழுதுகிறார்கள்!
இருந்தாலும் தமிழ் பதிவுலகில் படிக்க மட்டும் செய்யும் பலருக்கு நல்ல, நாணயமான எழுத்துக்களும் இங்கே எழுதப்படுகின்றன என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது! என்னை பொறுத்தவரையில் உங்களை போன்ற உண்மையான அறிவாளிகள், விபரம் அறிந்தவர்கள் மட்டுமே அதை செய்ய முடியும்!
ஒளியை பரப்புங்கள்! தமிழ் இணையதள சமுதாயம் அரைகுரைகளால் ஆக்கப்பட்டது அல்ல என்பதை உங்களின் எழுத்துகளின் மூலம் சொல்லுங்கள்!
வாழுத்துகள்! வாழ்க உங்கள் தமிழ் பணி!!
நன்றி
I just like the helpful info you provide in your articles. I’ll bookmark your blog and check once more here frequently. I’m reasonably certain I will be told plenty of new stuff right here! Good luck for the following!