சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் பணிந்து துதிக்கின்றேன் – விண்டுபோய்
இற்றுவிழும் மாந்தர் இணைந்து பணிபுரிய
வற்றாத் திறனூட்ட வா.
கற்றதனால் பெற்ற பயன் ஏது படைப்பாளி
அற்புதத்தைக் காணாத போது ?
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட காண்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டி ருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை இருபத்தி ஏழு தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுவிலே ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன் [நாடகம்], சாக்ரடிஸ் [நாடகம்], ஆயுத மனிதன், [நெப்போலியன்], ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள். காதல் நாற்பது, பிரபஞ்சத்தின் மகத்தான புதிர்கள் : தொகுப்பு – 1 & தொகுப்பு – 2. அண்டவெளிப் பயணங்கள், விழித்தெழுக என் தேசம் [கவிதைத் தொகுப்பு] ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். [Echo of Nature] [Environmental Poems]
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறைக்குச் சென்றவர். பிரதமர் இந்திரா காந்தியின் தியாகி தாமிரப் பட்டயம் பெற்றவர். பெற்றவர். முதல்வர் காமராஜர் அளித்த தியாகிகள் ஓய்வு ஊதியம் பெற்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது வலைதளமான (https://jayabarathan.wordpress.com/) ‘நெஞ்சின் அலைகள்’ என்பதிலும் (http://www.thinnai.com/) திண்ணை வலைப் பதிவிலும் அண்டவெளிப் பயணங்கள் பற்றியும் அணுசக்தி பற்றியும் விஞ்ஞான மேதைகளைப் பற்றியும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்க கிடைக்கின்றன. அவற்றில் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் :
* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ?
*பாரத அணுவியல் துறை விருத்தி விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா
+பாரத விண்வெளித் தேடல் விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாய்.
*பாரத ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்
* பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா
* ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
* இந்தியாவின் முதல் விஞ்ஞானத் தமிழ்ப் பெண்மணி
* கணித மேதை ராமானுஜன்
* முதல் விஞ்ஞானி கலிலியோ
* விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர்
* விஞ்ஞானி ஜெயந் நர்லிகர்
*இந்திய அணுமின்சக்தி நிலையங்கள்
*இந்திய அண்டவெளித் தேடல் முயற்சிகள்
* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் !
‘அணுசக்தி’ நூலில் அணுசக்தியின் ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் தயக்கமின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்களும், எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல் கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றிய விபரங்களும் உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங் களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப்பட்டுள்ளன.
‘வானியல் விஞ்ஞானிகள்’ என்ற இரண்டாம் நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், காஸ்ஸினி, ஹியூஜென்ஸ், வில்லியம் ஹெர்ச்செல், அவரது புதல்வர் ஜான் ஹெர்ச்செல், ஐஸக் நியூட்டன், எட்மண்ட் ஹாலி, ரைட் சகோதரர்கள், ராபர்ட் கோடார்டு, எட்வின் ஹப்பிள், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஃபிரெட் ஹாயில், ஜார்ஜ் காமாவ், கார்ல் சேகன், சந்திர சேகர், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஜெயந்த் நர்லிகர், மேலும் சிலரின் விஞ்ஞான வரலாறுகள் இடம்பெறுகின்றன.
பல நாடகங்களையும் சிறுகதைகளையும், கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ள எனது படைப்புகள் :
1. தாகூரின் கீதாஞ்சலி மற்றும் பிற கவிதைகள்
2. கலீல் கிப்ரான் கவிதைகள்
3. பாப்லோ நெருடாவின் கவிதைகள்
3A ரூமியின் கவிதைகள்
3B வால்ட் விட்மன் வசன கவிதைகள்.
4. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர், ஆண்டனி & கிளியோபாத்ரா ஆகிய நாடகங்கள்
5. பெர்னாட்ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா, உன்னத மனிதன், ஆயுத மனிதன், எழ்மைக் காப்பணிச் சேவகி, மேடம் மோனிகாவின் வேடம் ஆகிய நாடகங்கள்
6. காற்றினிலே வரும் கீதங்கள் என மீராபாயின் பாடல்கள்
7. எலிஸ்பெத் பிரௌனிங் கவிதைகள்
8. ஆப்ராஹாம் லிங்கன் பற்றிய வரலாற்று தொடர் நாடகம்
9. ‘சாக்ரடிஸின் மரணம்’ என்ற மூவங்க நாடகம் (தமிழாக்கம்)
10. சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)
11. நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (தமிழாக்கம்)
12. எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)
13. பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) (தமிழாக்கம்)
14. உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) (தமிழாக்கம்)
15. ஆயுத மனிதன் (பெர்னாட் ஷா) (தமிழாக்கம்)
16. எழ்மைக் காப்பணிச் சேககி (பெர்னாட் ஷா) (தமிழாக்கம்)
17. மேடம் மோனிகாவின் வேடம். (பெர்னாட் ஷா) (தமிழாக்கம்)
இவை மட்டுமல்லாமல் சீதாயணம் (ஓரங்க நாடகம்), முக்கோணத்தில் மூன்று கிளிகள் (குறுநாவல்), முடிவை நோக்கி, ஒரு பனை வளைகிறது, என் விழியில் நீ இருந்தாய், எமனோடு சண்டையிட்ட பால்காரி ஆகிய சிறுகதைகளையும், பல கவிதைகளையும இயற்றியுள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
URL : https://jayabarathan.wordpress.com/ (My Web Page )
++++++++++++++++++++++++++++++++++++++++++
படைப்பு வகைகள்
* அணுசக்தி (30)
* அண்டவெளிப் பயணங்கள் (87)
* கட்டுரைகள் (15)
* கதைகள் (7)
* கவிதைகள் (26)
* கீதாஞ்சலி (8)
* நாடகங்கள் (7)
* விஞ்ஞான மேதைகள் (37)
* விஞ்ஞானம் (155)
++++++++++++++++++++
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
நெஞ்சின் ஒளிஅலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்
எஞ்சி நிலைக்கும் இருள்.
*************************
நட்சத்திர வாரத்தில் உண்மையில் ஒரு நட்சத்திரம்!
உங்கள் சிறந்த படைப்புக்களாக நீங்கள் கருதுவதை பகிருங்கள்…
நன்றி..
ஐயா அவர்களுக்குப் பணிவன்பான வணக்கம்.தங்களுக்கு நட்சத்திர வார வாழ்த்துக்களும்,வந்தனைகளும்.தங்களின் அறிவியல் கட்டுரைகள் அறிவுப்பூர்வமாகவும், நாங்கள் அறியாததாகவுமான பிரமாதமான பொது அறிவு வழங்கும் பயனுள்ள கட்டுரைகள்.கொஞ்ச நாளாகத் (தமிழமுதம் குழுமத் தொடர்புக்குப்பிறகு) தொடர்ந்து படித்து வருவதுடன் குழந்தைகளையும் படிக்கச்சொல்கிறேன்.
நன்றி ஐயா!
அன்புமிக்க சாந்தி லக்ஸ்மன்,
உங்கள் பாராட்டுகளுக்கு என் உளங்கனிந்த நன்றி.
அன்புடன்
ஜெயபாரதன்.
தங்களின் அறிவியல் பணி மிகவும் போற்றத்தக்கதாக உள்ளது!! தங்களைப்போன்ற அறிவியல் அறிஞர்கள் வலையுலகில் இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை!
வியக்க வைக்கும் வண்ணம் பல சாதனைகளை செய்துள்ளீர்கள். தொடர்ந்து செய்தும் வருகிறீர்கள். வணங்குகிறேன்.
தமிழுக்கு கிடைத்த மிக அரிதான விசயங்கள் உங்கள் படைப்புகள் தமிழருக்கும் பெருமையே, நன்றி.
வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் சுய விபரமே மலைக்க வைக்கிறது.
நட்சத்திர வாரத்தில் உங்கள் பதிவுகள் மேலும் சிறப்பாக அமையும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்; இடுகைகளை எதிர்நோக்கி….
அய்யா திரு ஜெயபாரதனாரே
அணுசக்தி – இதனைக் கையாளும் திறமை படைத்த தாங்கள் தமிழிலும் கலக்குவது கண்டு பிரமிக்கிறோம். நாங்கள் வாழும் மதுரையைச் சார்ந்தவர் என்னும் போது பெருமை அடைகிறோம்.
தாங்கள் படித்த இயந்திர இயல் பொறியியல் படிப்பு நானும் படித்தவன் என்பதாலும் – மும்பையில் உள்ள பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் வேலைக்குச் சேர 1972ல் அழைப்பு வந்ததாலும் – சக பதிவரானதாலும் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி மதுரை நண்பர் சீனா.
முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த மதுரை வாசிகள் இப்போது வலைச் சங்கம் வைத்து உலகத் தமிழ் வளர்க்கிறோம்.
அன்புடன்,
ஜெயபாரதன்
உங்கள் பல கட்டுரைகளை பதிவுகளிலும் சஞ்சிகைகளிலும் படித்து வருகிறேன்.இப்பொழுது உங்கள் பற்றிய விபரங்களையும் அறிந்து மகிழ்கிறேன்.
இந்த வார நட்சத்திரமாக உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
I have been reading you in Thinnai. Very useful and interesting articles. Wish you will continue your service to Tamil speaking world for a long long time.
Meantime, may I know, is Jeyabharatan your nick or real name?
S. Jayabarathan is my real name. Thanks for the compliments.
Regards,
S. Jayabarathan
from N. Ganesan
reply-to tamilmanram@googlegroups.com
to தமிழமுதம்
cctamilmanram@googlegroups.com
dateMon, Feb 22, 2010 at 9:02 AM
subject[தமிழ் மன்றம்] Re: Some Questions Regarding : தமிழ் மணம் நட்சத்திர அழைப்பு (Tamil Manam Star Invitation) *
On Feb 22, 6:08 am, சி. ஜெயபாரதன் wrote:
> அன்பார்ந்த நண்பர்களே,
>
> தமிழ்மணம் சங்கப் பலகை இவ்வாரத் தாரகையாக எனக்கோர் சிறப்பிடம் அளித்துள்ளது.
>
> http://www.tamilmanam.net/
>
> அன்புடன்,
> சி. ஜெயபாரதன்.
உங்கள் பெயரைப் பரிந்துரைத்து அடியேன் அனுப்பினேன்.
7000 பதிவுகள் உள்ள தமிழ்மணத்தில் பல நூற்றுக்கணக்கான்
புதிய வாசகர்கள் நட்சத்திரங்களுக்கு அமையும் அம்பலமேடை!
இன்னும் யார், யார் நட்சத்திரம் ஆகவேண்டும் என்று
எனக்கு தமிழமுத (அ) கூகுள்குழு எதிலிருந்தும்
நண்பர்கள் எல்லோரும் அனுப்பினால்
முற்செலுத்துகிறேன்.
பல்லாயிரம் பதிவர்களில் சிறப்பாக ஒருதுறையில்
எழுதுவோருக்கு விண்மீன் விருது!
சென்ற வாரம் சுரேகா எழுதிய அருமையான
பதிவுகளைப் பார்த்திருப்பீர்கள். ஞானாலயா
நூலகம் பற்றிய பதிவை இராம்கி எழுதியிருந்தார்.
அதை நட்சத்திர வாரப் பதிவாக்கியிருந்தார் சுரேகா.
வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
அன்புமிக்க நண்பர் நா. கணேசன்,
மறைமுகமாக மகத்தான ஒரு பணியை எனது படைப்புகளுக்கு அளித்த உங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றி.
நட்புடன்,
சி. ஜெயபாரதன்
Mani Manivannan to tamilmanram, anbudan
show details 11:56 AM (1 hour ago)
On 2/22/10, சி. ஜெயபாரதன் wrote:
அன்பார்ந்த நண்பர்களே,
தமிழ்மணம் சங்கப் பலகை இவ்வாரத் தாரகையாக எனக்கோர் சிறப்பிடம் அளித்துள்ளது.
http://www.tamilmanam.net/
+++++++++++++
மதிப்பிற்குரிய பெரியவர் ஜெயபாரதன் அவர்களுக்கு,
தமிழ்மணத் தாரகையானதற்கு வாழ்த்துகள்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தைக் கட்டிக் கொண்டு இருந்த போது (1974 அல்லது 1976) அதை எங்கள் வகுப்பு மாணவர்களுடன் சுற்றிப் பார்த்த நினைவு இருக்கிறது. 1974 போக்ரான் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் நாடே இந்தியாவின் அணுசக்தி, அணு ஆயுத வல்லமை பற்றிப் பெருமிதம் கொண்டிருந்தது. 1971 வங்கதேசப் போருக்குப் பின்னர் தொடர்ந்து இவை நடந்ததால் இந்தியாவே ஒரு குட்டி வல்லரசு ஆகிவிட்டது போன்ற ஒரு மகிழ்ச்சி.
அணுசக்தியும் எங்களுக்குக் கல்லூரிப் பாடமாக (ஒரு சில பக்கங்கள்) இருந்ததால் எங்கள் ஆசிரியர் எங்களைக் கல்பாக்கத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போதெல்லாம், சென்னைக்கும், மாமல்லபுரத்துக்கும் வெகு அருகில் இவ்வளவு பெரிய அணுமின் நிலையத்தை வைப்பது சரியா, அருகில் இருக்கும் ஊர் மக்களின் உடல் நலத்தைக் கண்காணிப்பது தேவையா, அணுமின் நிலையங்களின் வாழ்நாளுக்குப் பிறகு, அவற்றை எப்படிக் கவனிப்பது போன்ற கேள்விகள் யாருக்கும் எழவில்லை.
இன்றும்கூட கல்பாக்கத்து அருகில் வாழும் மக்களிடையே புற்றுநோய் பற்றிய ஆய்வுகள் சரியாகச் செய்யப்பட்டுள்ளனவா, இல்லை, இவையெல்லாம் நாட்டுப் பாதுகாப்பு என்ற போர்வையில் மறைக்கப் பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை.
சுனாமி தாக்குதலால் அணுமின் நிலையத்துக்கு என்ன சேதம் ஆனது போன்ற செய்திகளும் அவ்வளவாக வெளிவரவில்லை.
அமெரிக்கா செல்லும் வரை, அணுமின் நிலையம் போன்ற ஆபத்தான சக்திகள் அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். திரீ மைல் ஐலண்டு அணுமின் நிலைய விபத்துக்குப் பின், அணுசக்தியின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை பெரிதும் குறைந்து விட்டது.
இருந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்த விபத்துகள் பற்றிய செய்திகள் ஓரளவுக்கு உடனுக்குடன் வெளிவந்தன. அணுமின் நிலையத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள மக்களின் உடல் நலம் பற்றியும் தொடர்ந்து ஆய்ந்து வந்திருக்கிறார்கள்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர்களுக்குத் தாங்கள் எப்படிப் பட்ட பெரும் சக்தியின் அருகில் இருந்து வேலை செய்கிறோம் என்று தெரிந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. அரசு உடமையான அணுசக்தி நிலையங்களைக் கண்காணிப்பவர்களும் அரசைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள் என்பதால், அங்கு ஏதேனும் கோளாறு நடந்தாலும் செய்திகளை வெளியே விடுவார்களா எனத் தெரியவில்லை.
பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தான், சீனா, சிறீ லங்கா போன்ற எதிரிகளின் தாக்குதல் பற்றிய கவலையும் உண்டு.
அணுமின் நிலையங்கள் பெருநகரங்களுக்கு அருகில், கலை நகரங்களுக்கு அருகில் வைப்பதை இனிமேலாவது தவிர்ப்பார்களா?
இப்போது அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவே மீண்டும் அணுமின் நிலையங்களைத் தொடங்க முயல்வதால், அணுமின் சக்திக்கு மீண்டும் மௌசு கூடலாம்.
உங்களைப் போன்ற அணுசக்தி நிபுணர் ஒருவர் அணுசக்தி பற்றி எழுதும் கட்டுரைகள் நல்ல விளக்கம் தருகின்றன.
நன்றி,
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
http://kural.blogspot.com
நட்சத்திர வாழ்த்துக்கள்.
பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
சி. ஜெயபாரதன் to tamilmanram, tamizhamutham, anbudan
show details 11:10 PM (11 hours ago)
பாராட்டுக்கு நன்றி நண்பர் மணிவண்ணன்.
///அணுசக்தியும் எங்களுக்குக் கல்லூரிப் பாடமாக (ஒரு சில பக்கங்கள்) இருந்ததால் எங்கள் ஆசிரியர் எங்களைக் கல்பாக்கத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போதெல்லாம், சென்னைக்கும், மாமல்லபுரத்துக்கும் வெகு அருகில் இவ்வளவு பெரிய அணுமின் நிலையத்தை வைப்பது சரியா, அருகில் இருக்கும் ஊர் மக்களின் உடல் நலத்தைக் கண்காணிப்பது தேவையா, அணுமின் நிலையங்களின் வாழ்நாளுக்குப் பிறகு, அவற்றை எப்படிக் கவனிப்பது போன்ற கேள்விகள் யாருக்கும் எழவில்லை.////
////இன்றும்கூட கல்பாக்கத்து அருகில் வாழும் மக்களிடையே புற்றுநோய் பற்றிய ஆய்வுகள் சரியாகச் செய்யப்பட்டுள்ளனவா, இல்லை, இவையெல்லாம் நாட்டுப் பாதுகாப்பு என்ற போர்வையில் மறைக்கப் பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை.////
/////அணுமின் நிலையங்கள் பெருநகரங்களுக்கு அருகில், கலைநகரங்களுக்கு அருகில் வைப்பதை இனிமேலாவது தவிர்ப்பார்களா? ////
திரிமைல் அணுமின் விபத்து, செர்நோபில் விபத்து அனுபவம் இருப்பதால், புதிதாகக் கட்டப்படும் அணுமின் நிலையங்கள் மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ள இடங்களில் உருவாகும்.
நான் 50 ஆண்டுகளுக்கு மேல் கதிரியக்கச் சூழ்வெளியில் கவனமாக உண்டு உறங்கி, சுவாசித்து ஒரே நீரைக் குடித்து அணு உலை அருகில் 5000 மேற்பட்ட குடும்பங்களோடு வசித்து வந்தேன்.
என் பொறியியல் படித்த புதல்வி, அவளது கணவர் இருவரும் கனடாவில் அணுமின் நிலையங்களில் கதிரியக்கச் சூழ்வெளியில் 15 ஆண்டுகள் ஊழியம் செய்து வருகிறார். அவருக்கு இரு பிள்ளைகள்.
இதுவரை எனக்கோ, என்னைச் சார்ந்தோருக்கோ கதிர்வீச்சால் எந்த நோய், குறைபாடுகள் இல்லை. கல்பாக்கம் நகரியத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கிறார். யாருக்கும் நோய் நொடிகள் இல்லை.
கல்பாக்கத்தில் வசிப்போருக்கு ஆறாவது விரல் முளைக்கிறது, புற்று நோய் வருகிறது என்று ஞாநியும், காலஞ்சென்ற அசுரனும், டாக்டர் புகழேந்தியும், டாக்டர் ராமதாசும் புளுகு விட்டுக் கொண்டிருந்தார். நான் அவருக்கு எழுதிய பதில்களை விரும்பினால் அனுப்புகிறேன்.
கனடாவில் அணுமின் நிலையத்தின் 15 மைல் தூரத்தில் 20,000 பேருக்கு மேல் அதே நீரைக் குடித்து, அதே காற்றைச் சுவாசித்து 45 ஆண்டுகளாக நோயின்றி வசிக்கிறார்.
அணுமின் உலைகளுக்கு அருகில் ஓடும் குடிநீர், கடல்நீர், காற்று யாவும் அனுதினமும் சுய இயக்கக் கருவிகள் மூலம் தொடர்ந்தும் மூன்று அல்லது நான்கு முறை செயற்கை மூலமும் சோதிக்கப் படுகின்றன.
++++++++++++++++++++
சுனாமி தாக்குதலால் அணுமின் நிலையத்துக்கு என்ன சேதம் ஆனது போன்ற செய்திகளும் அவ்வளவாக வெளிவரவில்லை.
கல்பாக்கம் வலைப் பகுதியில் விபரங்கள் வந்ததை நான் படித்தேன்.
////பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தான், சீனா, சிறீ லங்கா போன்ற எதிரிகளின் தாக்குதல் பற்றிய கவலையும் உண்டு.////
தற்போது 24 மணிநேர ராணுவப் பாதுகாப்பு உள்ளது.
பூகம்பம், சுனாமி நேரும் ஜப்பானில் அணுகுண்டின் பாதிப்பை இப்போதும் அடைந்து வந்தாலும் அவர்கள் 54 அணுமின் நிலையங்களை இயக்கி மின்சக்தி உற்பத்தி செய்து வருகிறார்.
அன்புடன்,
ஜெயபாரதன்
+++++++++++++
Pingback: 2010 ஆண்டில் “நெஞ்சின் அலைகள்” வாசகர் கண்ணோட்டம் « நெஞ்சின் அலைகள்
Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: 2017 ஆண்டுப் பார்வைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா
Pingback: அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி | . . . . . நெஞ்சின்
Pingback: அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி | . . . . . நெஞ்சின்
Pingback: அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி | . . . . . நெஞ்சின்
Pingback: அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி | . . . . . நெஞ்சின்
Pingback: Mudukulathur » ஆங்கில “இயல்கள்”
Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய
Pingback: 2020 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வை