சி. ஜெயபாரதன், கனடா
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !
கையில் இருப்பதைக் கவனமாய்
வைத்துகொள் !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரண சுதந்திரம் புவியில்
ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர்முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம் பாரதக்
குருச்சேத்திரம் !
ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரண சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவயுகச் சுதந்திரம் !
பூரண சுதந்திரத்தில்
மதம் பிடித்த யானைகள்
ஊரைச் சூறையாடும் !
விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விலங்கு போட்டுக் கொள்ளும்
சுதந்திரம் !
கட்டவிழ்த்தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட பழமா அல்லது
சுடாத பழமா
சுதந்திரம் ?
எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராகத் தோன்றும் பாரத
பூரண சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர் ஒருவர்,
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டித்
தவமிருக்கிறார்
போலிச் சாமியார் !
+++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 27, 2020 (R-7)
realy superb sir
பாராட்டுக்கு நன்றி அம்மா. உங்கள் பெயர் தெரியவில்லை எனக்கு.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
அருமையான படைப்பு..
பாராட்டுக்கு நன்றி ரகு.
நட்புடன்,
சி. ஜெயபாரதன்
Thank you for some other informative website. Where else may just I get that type of information written in such an ideal means? I’ve a mission that I’m just now operating on, and I have been on the glance out for such information.