பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சுருக்க விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள் (Compact Stars & Preon Stars)

Fig 1 Atom Protons & Quarks

(கட்டுரை: 62 பாகம் -1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிரபஞ்சப் பெருவெடிப்பு வேளையில்
பொரித்த சிசுக் குஞ்சுகளில்
பிரியான் நுண்துகள்கள்
ஒருவித மூலாதாரப்
பரமாணுக்கள் !
பரிதி விண்மீன் போல்
ஒளிவீசும்
அரிய விண்மீன்கள் கோடி கோடி !
அவற்றின் உருவம் எல்லாம்
அசுர வடிவங்கள் !
ஆயினும் திணிவு நிறை குன்றியவை !
நியூட்ரான் விண்மீன்களின்
நிறை பெருத்தாலும்
உருவம் சிறியது ! ஆனால்
பிரியான் துகள்கள் நிரம்பிய
கடுகு விண்மீன்கள்
எலுமிச்சை போலிருக்கும் !
அசுரத் திணிவும், அபார நிறையும்
கணிக்க முடியாது ! அவை
கரும் பிண்டத்தின் களஞ்சியம் !
கருந்துளை போல் காண முடியாது
கடுகு விண்மீனை !
பரிதியும் நாலரை பில்லியன்
வருடங்கள் கழிந்தொரு
பிரியான் விண்மீனாகும் ! விண்மீன்
பரிணாமத் தளர்ச்சியின்
இறுதி நிலை அது !

மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி இயக்கங்கள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

Fig 1A Subatomic Particlesஇருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட அடிப்படைப் பரமாணுக்கள் (Subatomic Particles).  கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன.  1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது.  புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

கிளாஸ் ரித் & ஆன்டிரியா சேஃபர் (Klaus Rith & Andreas Schafer)

“இதுவரை யாரும் அவற்றைப் பார்த்தில்லை ! குவார்க் அல்லது நியூட்ரினோ (Quark or Neutrino) போன்று நுண்ணியதும், வெகு வேகமாகச் செல்வதுமான துகள்களைப் பார்க்கப் போவதுமில்லை !  அவற்றின் வடிவத்தை அறிந்தால்தான் இவற்றைப் போல் அவை உள்ளன என்று கூறித் தர்க்க மிடலாம். !”

பேராசிரியர் ஜான் ஹென்ரிக் ஆன்டர்ஸன் (University of Michigan’s School of Art & Design)

Fig 1B Quarks Photons & Gluons“துகள் பௌதிக இயல்புநிலை மாதிரியில் (Standard Model of Particle Physics) நிலைத்துவம் பெறும் சுருக்க விண்மீன்களின் திணிவு நிறைக்கு ஓர் உச்ச வரம்பு (Upper Limit to the Density of Stable Compact Stars) உள்ளது ! ஆனால் பிரியான்கள் (Preons) வடிவத்தில் இன்னும் மிகையாய் நுண்ணிய அடிப்படைப் பரமாணுக்கள் இருப்பின் அந்த வரம்புத் திணிவைக் கடந்து மீண்டும் நிலைத்துவம் (Stability) உறுதிப்படுத்த படலாம் !”

ஜோஹான் ஹான்ஸன் & ·பெரடிரிக் ஸான்டின், லுலீயா தொழில் நுணுக்கப் பல்கலைக் கழகம், ஸ்வீடன் (June 8, 2004)

சுருக்க விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள் (Compact Stars & Preon Stars)

வானியல் விஞ்ஞானத்தில் “சுருக்க விண்மீன்கள்” எனக் குறிப்பிடப்படும் நான்கு விண்மீன்கள் : வெண்குள்ளி, நியூட்ரான் விண்மீன், விந்தை விண்மீன், அல்லது கருந்துளை (White Dwarf, Neutron Star, Exotic Star or Black Hole).  ஒரு விண்மீனின் இயற் பண்பாடை அறியாத போது அது சுருக்க விண்மீன் குழுவில் சேர்க்கப்படுகிறது.  ஆனால் சுருக்க விண்மீன் பெருநிறை கொண்டு, அசுரத் திணிவு பெற்று சிறு ஆரமுடைய விண்மீனாக விஞ்ஞானிகள் அனுமானம் செய்கிறார். (A Compact Star is massive, dense & has a small size).  சுருக்க விண்மீன்கள் விண்மீன் பரிணாமத் தளர்ச்சியின் முடிவுப் புள்ளி ! (Compact Stars form Endpoint of Stellar Evolution).  அவற்றை இந்தக் கட்டுரையில் நான் “கடுகு விண்மீன்கள்” என்று குறிப்பிட விரும்புகிறேன்.

Fig 1C Fundamental Particles

சுருக்க விண்மீன்கள் விண்மீன் பரிணாமத் தளர்ச்சியின் முடிவுப் புள்ளி என்றால் என்ன ?  ஒரு விண்மீன் ஒளிவீசித் தன் எரிசக்தியைப் படிப்படியாக இழக்கிறது.  அதன் கதிர்வீச்சுத் தளத்தின் இழப்பு ஒளியை உண்டாக்கி ஈடு செய்து கொள்கிறது.  விண்மீன் தனது எரிசக்தி முழுவதையும் தீர்த்து மரண விண்மீனாக மாறும் போது அதன் உட்கரு வெப்ப வாயு அழுத்தம் விண்மீன் நிறையைத் தாங்க முடியாது (அதாவது ஈர்ப்பற்றிலின் இழுப்பை எதிர்க்க இயலாது) திணிவு அடர்த்தியாகி விண்மீன் முறிந்து சுருக்க நிலை அடைகிறது !  வாயுப் பிண்டம் முடிவில் திடவ நிலை அடைகிறது ! (Gas —> Solid State).  அதாவது சாதாரண விண்மீன் முடிவில் பரிணாமத் தளர்ச்சி நிலை முடிவடைந்து குறுகிச் சுருக்க விண்மீன் ஆகிறது !

துகள் பௌதிக இயல்புநிலை மாதிரியில் (Standard Model of Particle Physics) நிலைத்துவம் பெறும் சுருக்க விண்மீன்களின் திணிவு நிறைக்கு ஓர் உச்ச வரம்பு (Upper Limit to the Density of Stable Compact Stars) உள்ளது ! ஆனால் பிரியான்கள் வடிவத்தில் இன்னும் மிகையாய் நுண்ணிய மூலாதரப் பரமாணுக்கள் இருப்பின் அந்த வரம்புத் திணிவைக் கடந்து மீண்டும் நிலைத்துவம் (Stability) உறுதிப்படுத்த படலாம் !

Fig 1D Preon Star Relative Diameter & Density

எரிவாயு தீர்வு நிலை அடையும் போது இயங்கும் ஃபெர்மியானிக் பிரியான்கள் (Fermionic Preons) நிலைத்துவச் சுருக்க விண்மீன்கள் (Stable Compact Stars) உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டுகிறார் !  அந்தத் திணிவு நியூட்ரான் விண்மீன்களின் திணிவு, குவார்க் விண்மீன்களின் திணிவை விட (Density of Neutron Stars & Quark Stars) மிஞ்சியதாக இருக்கும் ! அந்த வகை விண்மீன்களை விஞ்ஞானிகள் “பிரியான் விண்மீன்கள்” என்று குறிப்பிடுகிறார்.

பிரியான் விண்மீன்கள் வெண்குள்ளி (White Dwarfs), நியூட்ரான் விண்மீன்களை விடச் சிறியவை !  அவற்றின் இருக்கை வானியல் விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் பெறுகிறது !  காரணம் : பிரியான் விண்மீன்கள் குளிர்ந்த கரும் பிண்டத்துக்கு மூலக் களஞ்சியமாக இருக்கிறது.  அதி உயர் சக்தி அகிலக்கதிர்கள் (Ultra-high Energy Cosmic Rays) உண்டாகும் சேமிப்புக் களமாக உள்ளது !  குவார்க், லெப்டான் துகள்களின் (Quarks & Leptons) உட்கருவில் இருக்கும் அடிப்படை நுண் துகள்கள் “பிரியான்கள்” எனப்படுபவை.  “பிரியான் விண்மீன்” (Preon Star) எனப்படுவது ஒருவகையான அனுமானச் சுருக்க விண்மீனே (Hypothetical Compact Star) !  அவற்றைக் காமாக் கதிர்களின் ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு முறையில் (Gravitational Lensing of Gamma Rays) காணலாம்.  புதிரான கருந்துளைகளின் மர்ம இருப்பைக் காண எதிர்காலத்தில் பிரியான் விண்மீன்களே உதவி புரியும்.

Fig 1E Quarks & Leptons

சுருக்க விண்மீன்கள் மரண விதிக்குத் தப்பியவை !

சுருக்க விண்மீன்களின் கட்டமைப்பு (Structure) வெப்ப உஷ்ணத்துக்கு அப்பாற்பட்டது ! பல்லாண்டு காலம் சுருக்க விண்மீன்கள் மினுமினுத்துக் கொண்டு குளிர்ச்சி நிலை அடைந்து வரும் !  அதுவே விண்மீன் பரிணாமத் தளர்ச்சி முற்றுப் புள்ளி அல்லது சமாதி நிலை என்று குறிப்பிடப் படுகிறது !  விண்மீனில் வேறு விதத்தில் உண்டாகும் வாயு அழுத்தம் காலம் கடந்தாலும் மாறுவதில்லை.  முடிவில் எல்லா விண்மீன்களும் முற்றிலும் மினுமினுக்காது சுருக்க விண்மீனாய் மாறிச் சமாதி நிலை அடைகின்றன !  அண்டக் கோள்கள், முறிவுக் கோள்கள், வால்மீன்கள் (Planets, Asteroids & Comets) போன்றவை “சுருக்க அண்டங்கள்” (Compact Objects) என்று குறிப்பிடப் படுகின்றன.  ஆனால் அவை மூன்றும் விண்மீன்கள் போன்று வெப்ப நிலை பெறாமல் எப்போதும் விண்வெளியில் தணிந்த உஷ்ணத்தில் குளிர்க் கோள்களாகவே சுற்றி வருகின்றன !  பிரபஞ்சத்தில் அனைத்து விண்மீன்களும், பிண்டங்களும் முடிவில் “கோள்கள், வெண்குள்ளிகள், நியூட்ரான் விண்மீன்கள், முரண்/விந்தை விண்மீன்கள், கருந்துளை” (Planets-like, White Dwarfs, Neutron Stars, Exotic Stars & Black Hole) எனப்படும் ஐந்து விதச் சுருக்க அண்டங்களாக மாறுகின்றன !

Fig 1F White Dwarfs

கோள்களில் பூதக்கோள் வியாழன் (Planet Jupiter) பரிதி மணடலத்திலே எல்லாவற்றியும் விட பெருநிறை கொண்டு திணிவு குன்றிய குளிர்க் கோளம்.  ஆனால் பேரளவு நிறை கொண்ட வெண்குள்ளிகள் பெருநிறை கொண்ட குளிர்க் கோள்களை விட வடிவத்தில் சிறியவை !  நமது பரிதியைப் போல் சுமார் இரண்டு மடங்கு நிறை கொண்ட நியூட்ரான் விண்மீன்கள் 10 அல்லது 20 கி.மீ. (6 -12 மைல் விட்டம்) விட்டத்தில் சிறுத்து திணிவு மிக்க (Highly Dense & Small) சுருக்க விண்மீனாக முடிவில் முடத்துவ நிலை அடைகிறது !

முரண் விண்மீன்கள். விந்தை விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்

1. முரண் விண்மீன்கள் (Exotic Stars) :

நியூட்ரான் விண்மீன்களின் உச்சநிறைப் பெருக்குக்கு ஒரு வரையறை உள்ளது.  அந்த எல்லை நிறை தற்போது நமது பரிதியைப் போல் மூன்று மடங்கு என்று நிர்ணயமாகி யுள்ளது.  துல்லியமான அளவு திணிவு அதிகமான நியூட்ரான்களின் (Neutrons at High Density) இடையே ஏற்படும் விசைகளைப் பொருத்தது.  மிகையான நிறை சேர்ந்து அந்த வரையறை அடைந்து புதிய சமநிலைத்துவம் (New Equilibrium) காணப்படும்.  இந்த நிலை முரண் விண்மீன்களைக் (Exotic Stars) குறிப்பிடுகிறது.

Fig 1G Fermions

2. விந்தை விண்மீன்கள் : (Strange Stars)

குவார்க் விண்மீன்கள் (Quark Stars) அல்லது விந்தை விண்மீன்கள் (Strange Stars) என்று குறிப்பிடப் படுபவை நியூட்ரான் விண்மீன்களின் திணிவுக்கும் (Density of Neutron Star) அகிலவெளி விண்மீன் கருந்துளைகளின் திணிவுக்கும் (Density of Stellar Black Holes) இடைப்பட்டவை !  அவற்றில் நியூட்ரான்கள் குவார்க்களின் உள்ளமைப்புத் துகள்களாய்ப் பிரிவு நிலை எய்திடும் (Decompose into constituents).  அந்த விண்மீன் இன்னும் நிறை சேர்ந்தால் மேலும் சுருங்கிப் போய் ஒரு புதிய நிலையில் பிழைத்துக் கொள்கிறது.  அதுவே பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பரமாணுவாய்த் (Largest Nucleon of the Universe) தலைதூக்குகிறது !

3. பிரியான் விண்மீன்கள் : (Preon Stars)

ஒரு காலத்தில் அணுவின் மூலாதாரத் துகள்கள் என்று தீர்மானிக்க பட்ட புரோட்டான்களும், நியூட்ரான்களும் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் அவ்விதம் அல்ல என்று கருத்து மாறியது.  புரோட்டானிலும், நியூட்ரானிலும் பல்வேறு குவார்க்குகள் இணைந்துள்ளன என்று பின்னால் அறியப்பட்டது.  ஆனால் இப்போது குவார்க்குகளும், லெப்டான்களும் (Quarks & Leptons) அணுவின் அடைப்படைத் துகள்கள் என்று கருதப்படாமல் வேறு சில நுண்துகள்கள் சேர்ந்தவை என்று நுண்துகள் பௌதிக (Particle Physics) விஞ்ஞானிகள் கூறுகிறார் !  குவார்க்கிலும், லெப்டானிலும் “பிரியான்” (Preons) எனப்படும் நுண்துகள்கள் இணைந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  அது மட்டுமல்ல !  திணிவு நிறை பெருத்த பிரியான் விண்மீன்கள் (Highy Dense & Small Preon Stars) விண்வெளியில் இருக்கின்றன என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது !  நமது பரிதியின் வடிவம் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பத்தில் ஒரு பகுதியாகச் சுருங்கி அதன் ஆரம் (Radius) ஒரு மீடர் அல்லது அதற்கும் குறைந்து “சுருக்க விண்மீன்” அல்லது “கடுகு விண்மீனாக” மாறிவிடும் !  அதாவது நமது பரிதி வருங்காலத்தில் எழப் போகும் ஒரு பிரியான் விண்மீன் !  அந்தக் கடுகு விண்மீனின் திணிவு : (Density 10^20 gram/cubic cm.) என்று கணிக்கப்படுகிறது.  அதற்கும் மேலாகி திணிவு (Density 10^30 gram/cubic cm) அளவை எட்டி விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !

Fig 2 Compact Stars

4. கருந்துளைகள் (Black Holes)

நமது சோதனையை தொடர்ந்து இன்னும் நிறையைச் “சுருக்க விண்மீனில்” சேர்த்தால் சமநிலை வரையறையைத் தாண்டித் திணிவு நிறை முறிவு நிலைக் கட்டத்துக்கு ஏறுகிறது !  விண்மீனின் அழுத்தம் உட்புற ஈர்ப்பு இழுப்புக்கு எதிராய் ஈடு கொடுக்க இயலாது, விண்மீனின் கவர்ச்சி உச்ச அபாய நிலை அடைந்து ஒரு சில மில்லி வினாடிகளில் தகர்க்கப் படுகிறது !  அப்போது மேற்தள  விடுதலை வேகம் (Escape Velocity at the Surface) மூன்றில் ஒரு பங்காக இருந்த ஒளிவேகம், முழுமையாக ஒளி வேகத்தையும் மிஞ்சுகிறது !  எந்தப் பிண்டமும் ஒளி வேகத்தில் திடப் பொருளாக இருக்க முடியாது !  அதாவது விண்மீனின் திணிவுப் பிண்டம் சிதைந்து ஒளிச்சக்தியாகி ஒரு கருந்துளை உருவாகிறது !  அப்போது அந்த நிகழ்ச்சித் தொடுவானில் புலப்படாத ஆனால் கருவிகளுக்குத் தெரியும் ஒற்றை அரங்கு விழுங்கியாக உண்டாகிறது !  அதுவே ஒற்றைப் புள்ளியாக அல்லது ஒற்றை ஈர்ப்பு அரங்காக (Gravitational Singularity) அமைக்கப் படுகிறது !

பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் துகள்கள்

1960-1970 ஆண்டுக்களில் அடிப்படைத் துகள்கள் பற்றிய பூர்வீக அணுவியல் அமைப்புச் சித்தாந்தம், பின்னால் வந்த விஞ்ஞானிகளால் திருத்தப் பட்டது.  பிரபஞ்சத்தின் புதிய அடிப்படைத் துகள்களில் முதலாகக் “குவார்க்குகள்” (Quarks) என்பவை அறியப் பட்டது.  குவார்க்குகளை அசுர வலுவுடன் பிணைத்துள்ள “குளுவான்” (Gluon) பற்றி அறியப்பட்டன.  ஆறு வகையான குவார்க்குகள் இருப்பது தெரிய வந்தது.  அதாவது குவார்க்குகள் << மேல், கீழ், நளினம், நூதனம், உச்சம், நீச்சம் >> (Up, Down, Charm, Strange, Top, Bottom) என்று ஆறு விதத்தில் நினைவில் நிற்கும் எளிய பெயர்களில் குறிப்பிடப் பட்டன.  பளுவின்றி மெலிந்த குவார்க்குகள் “மேல்,” “கீழ்” என்று இரு விதத்தில் இருப்பவை.  குவார்க்குகள் இரண்டும் பொதுவாக அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றில் இருப்பவை.

Fig 3 Neutron Star Inner Structure

தற்போதிருக்கும் விஞ்ஞானக் கருவிகளால் அளக்க முடியாதபடிக் குவார்க்குகள் மிக மிக நுண்ணியவை.  அவற்றின் பளுவை நிறுக்க முடியாது.  குவார்க்குகளைப் பிரிக்க முடியாது.  ஒரு புரோட்டானைப் பிளக்க முயலும் போது, குவார்க்குகள் பத்து டன் விசை வலுவுடன் ஒட்டிக் கொள்கின்றன.  அவை மிக நுட்பமாக இருப்பதால் புரோட்டானுள் பில்லியனில் ஓரளவான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.  புரோட்டான் பளுவிலும் மிகச் சிறிய விகிதமாகக் குவார்க் உள்ளது.  புரோட்டானில் குவார்க்குகள் அடைத்துக் கொண்ட சிற்றிடம் போகக் காலியாகக் கிடக்கும் இடத்தில் இருப்பதென்ன என்னும் வினா எழுகிறது.  அந்தக் காலி மனையில்தான் குளுவான் எனப்படும் பிசின் குவார்க்குகளைப் பிணைக்கும் ஒட்டு விசையாக நிரப்பிக் கொண்டுள்ளது !  அத்தகைய குவார்க், குளுவான் பிசினே பிரபஞ்சத்தின் 98% பளுவாகவும் பரவியுள்ளது !  இயற்கையானது கோடான கோடி முறைகளில் பளுவில்லா குவார்க்குகளையும், வலுவான குளுவான்களால் பிணைத்துப் பிரபஞ்சத்தைப் படைத்துள்ளது !

(தொடரூம்)
+++++++++++

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html (Gamma Ray Bursts)
10 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801031&format=html (Neutron Stars)
10 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905121&format=html (Death Stars)
10(d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905281&format=html (Harmful Death Stars)
10(e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801171&format=html (The Fundamental Particles of the Universe)
11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
14 From Wikipedea – Magnetar (May 1, 2009).
15 Space & Earth – Integral Looks at Earth to Seek Source ogf Cosmic Radiation (Mar 16, 2006)
16 BBC News – NASA’s Eye on the Violent Cosmos By Paul Rincon [June 6, 2008]
17 BBC News – A Glimpse of Ancient Dying Stars By Victoria Gill (Sep 7, 2009)
18 Astronomy – Gammy Rays from Monster Stars By Philips Plait (Feb 7, 2007)
19 Thunderbolt Info – Magnetic Monsters (May 22, 2009)
20 Astronomy Magazine – In Search of the Galaxy’s Magnetic Monsters By : Steve Nadis (September 2009)
21 Preon Trinity – A New Model of Leptons & Quarks (October 12, 1999)
22 Nuggets of New Physics By D. Aguilar (November 20 2007)
23 WWW.Physorg.com – Subatomic Particles Quarks, Photons & gluons (June 30, 2005)
22 Science Direct – Preon Stars – A New Class of Cosmic Compact Objects By Johan Hansson & Fredrik Sandin. Lulea University of Technology, Sweden (June 8, 2004)
23 Compact Stars By Wikipedia (August 10, 2009)
24 Daily Galaxy – The Odd Case of Preon Stars (August 17, 2009)

++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) (August 20, 2009)

6 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சுருக்க விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள் (Compact Stars & Preon Stars)

  1. Pingback: பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] | நெஞ்சின் அலைகள்

  2. Pingback: பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] | திண்ணை

      • தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி சமைத்ததில்லை
        தானாக எம்மொழியும் வளர்ந்ததில்லை
        அறிவியல் தமிழ் வளர்க்கும் தங்கள் பணி மகத்தான பணி
        புத்துணர்வுடன் தொடரட்டும்.

  3. Pingback: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.