பூரணச் சுதந்திரம் யாருக்கு ?

cover-image-indian-flag.jpg

சி. ஜெயபாரதன், கனடா

 

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டிப்
போராடினோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
பூகம்பம் நிற்காமல்
மும்மூர்த்தி யானது
பங்களா தேசமாய் !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
கண்ணன் குளிக்கும் மாதர்
புடவை
களவாடு வான் !
பூரணச் சுதந்திரம் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுச் சேலையைப்
பலர்முன்
பற்றி இழுப்பான்
துச்சாதனன் !
பூரணச் சுதந்திரம் ஒரு குருச்சேத்திரம் !

ஆலயத்தை இரவில் தகர்த்து
வேரறுப்பது
பூரணச் சுதந்திரம் !
பாதிரியார் உடையில்
தீ வைப்பது
வேதியர் சுதந்திரம் !
ரயில் பெட்டிகளை எரித்துச்
சவப் பெட்டி ஆக்குவது
நவயுகச் சுதந்திரம் !
கும்ப மேளாவில் சாமியார்
அம்மணமாய்ப் போவார் !
பூரண விடுதலை மத
யானைகளை அவிழ்த்து விடும் !

விட்டு விடுதலை ஆகும்
சுதந்திரம் !
விலங்கு போட்டுக் கொள்ளும்
சுதந்திரம் !
கட்டவிழ்த்தோடும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுதந்திரம்
சுட்ட பழமா ? அல்லது
சுடாத பழமா ?

எட்டித் தொட முடியாச்
சிகரத்தில்
சீராக வளரும்
பூரணச் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மதச் சுதந்திரத்தில்
மோகன் தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலைக்குக்
கடும் தவமிருக்கிறார்
போலிச் சாமியார் !

++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 15, 2009  (R-4)

4 thoughts on “பூரணச் சுதந்திரம் யாருக்கு ?

  1. Hmm it looks like your blog ate my first comment (it was super long) so I guess I’ll just sum it up what I submitted and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog writer but I’m still new to everything. Do you have any points for novice blog writers? I’d certainly appreciate it.

  2. Somebody necessarily lend a hand to make severely posts I would state. This is the first time I frequented your web page and up to now? I surprised with the research you made to create this actual publish extraordinary. Great job!

  3. Hmm Well I was just searching on yahoo and just came across your site, in general I just only visit websites and retrieve my needed info but this time the useful information that you posted in this post urged me to post here and appreciate your diligent work. I just bookmarked your site. Thank you again.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.