பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள். (The Deadly Magnetars)

Fig 1E Magnetar 1900+14

(கட்டுரை: 58)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பூதக் காந்த விண்மீன்கள்
பூதள உயிர்களை அழிப்பவை !
அசுரக் காந்த ஆற்ற லுள்ள
மரண விண்மீன்கள் !
பூமிக்கருகில் நெருங்கினால்
மக்களின்
உடற் மூலக்கூறுகளைத் திரித்து
முடமாக்கி விடும் !
உயிரினத்துக்கு
மரணம்
உண்டாக்கும் நியூட்ரான்
விண்மீன்கள் !
எரிசக்தி உள்ள
உயிர் விண்மீன்கள்
எரிசக்தி தீர்ந்த பிறகு
வறிய விண்மீனாகி
சிறிய தாகி
விரைவாகச் சுற்றிப்
பரிதி போல் திணிவு நிறைப்
பன்மடங்கு பெருத்து
ஆயுள் குறுகிச்
செத்த விண்மீன் மீண்டும்
புத்துயிர் பெறும் !

Fig 1 The Mighty Magnetars

காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism).  குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) !  அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது !  அதன் காந்த ஆற்றல் வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை (Body Molecules) உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது.

விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)

“பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் இருக்கலாம்.  அவற்றால் பூகோளத்துக்குக் கேடுகள் விளையலாம் !  அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும்.  அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன !  பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் !  அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முற்றிலும் அழிந்து (Mass Extinctions) போகலாம்.”

டோனால்டு ஃபைகர் (Donald Figer (Rochester Institute of Tecnology, USA)

Fig 1A Gamma Ray Bursts

புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்

1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர்.  அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர்.  அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை !  காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) !  அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது.  அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.

Fig 1B Magnetar SGR 1806-20

இதுவரை விண்வெளியில் 15 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன.  முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப்படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars).  இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20.  அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம்.  பூமியின் காந்த தளம் : அரை காஸ்.  மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத்துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

Fig 1F Magnetar's Magnetic Field

காந்த விண்மீன்களின் இயற்கையான அமைப்பு

பூமிக்கு அருகில் இல்லாமல் விண்வெளியில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ள இந்த வகைக் காந்த விண்மீன்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை !  பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்).  ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது.  ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது.  பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன.  காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது !  அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் !  அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் !  அவ்விதம் கணக்குப் பார்த்ததில் நமது பால்வீதியில் முடங்கிப் போன காந்த விண்மீன்கள் சுமார் 30 மில்லியனுக்கும் மிகையாக இருக்கும் என்று தெரியப்படுகிறது.

Fig 1E Magnetar's Region in Space

காந்த விண்மீன்களின் அதி தீவிரக் காந்தத் தளம்

பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களைப் போல் அசுரக் காந்த வல்லமை உடைய வேறெந்த விண்மீன்களும் இதுவரைப் பதிவு செய்யப் படவில்லை.  600 மைல் (1000 கி.மீ) தூரத்தில் ஒரு காந்த விண்மீன் இருந்தாலும் அதன் காந்த தளம் பூமியில் உள்ள உயிரினங்களைக் கொல்லும் ஆற்றல் உடையது.  அப்போது உடம்பு நீரில் உள்ள “எதிர்முனைக் காந்த துருவ அமைப்பால்” (Diamagnetism of Water) (Diamagnetism is the property of an object which causes it to create a magnetic field in opposition of an externally applied magnetic field, thus causing a repulsive effect) அது உடற் சதைகளைக் கிழித்து விடுகிறது !  பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது !  2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது !  எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன !  சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) !  அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) ! 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் ! 10^10 Teslas தீவிரத்தில் ஹைடிரஜன் அணு ஒன்றின் விட்டம் 200 மடங்கு மெலிந்து குறுகி விடும் !

Fig 1G Pulsar

காந்த விண்மீன்கள் எவ்விதம் உண்டாகுகின்றன ?

நாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கிதான் (Spitzer Space Telescope) அசுரக் காந்த விண்மீனைக் SGR (1900+14) கண்டுபிடுக்க உதவியது.  அந்த விண்மீனைச் சுற்றிலும் ஏழு ஒளியாண்டு தூரம் அகண்ட வாயு “உட்சிவப்பு ஒளிவட்டம்” (Infrared Light) இருப்பது தெரிந்தது.  ஆனால் காந்த விண்மீன் எக்ஸ்ரே ஒளியில்தான் பதிவானது.  ஒரு சூப்பர்நோவா விண்மீன் சிதைந்து நியூட்ரான் விண்மீனாகும் போது அதன் காந்த தளத்தின் ஆற்றல் நான்கு மடங்கு மிகையாகிறது !  பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட்ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள்.  சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது !  சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது !  10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது !  பிரபஞ்சத்தில் பத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்து, நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது துடிப்பு விண்மீனாகவோ (Pulsar) மாறாமல் காந்த விண்மீனாக உருவடைகிறது !

Fig 2 Making a Magnetar

மாபெரும் பிரபஞ்சப் புதிரான காமாக்கதிர் வெடிப்புகள் !

கடந்த முப்பது ஆண்டுகளாக அகிலவெளியில் திடீரென எழும்பும் புதிர்க் காட்சியான காமாக்கதிர் வெடிப்புகள் வானோக்கு விஞ்ஞானிகளைப் பெருவியப்பில் ஆழ்த்தி யிருக்கின்றன !  மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகின்றன.  சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும்.  சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும்.  ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன.  இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு !  அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது.  காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் ! சென்ற மூன்று ஆண்டுகளாக காமாக்கதிர் வெடிப்புகளின் மங்கும் எக்ஸ்-ரே, கண்ணொளி, ரேடியோ அலைகள் பற்றிய கருத்துகள் விருத்தியாகி முன்னேற்றம் அடைந்துள்ளன.  அவை யாவும் விண்மீன் தோற்றத்துக்கு முன்னோடியாகவோ அல்லது சூப்பர்நோவாவுக்கு மூலமாகவோ உள்ளன !

Fig 3 Making a Neutron Star

நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்

பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம்.  சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் !  பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன !  அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது.  விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது !  அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன.  அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

Fig 4 Spitzer Space Telescope

ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது.  அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது.  அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density).  நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும்.  நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது.  ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது !  அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !

Fig 5 Internal Structure of Neutron Star

சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் !  தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் !  இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் !  அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது.  அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது.  இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது !  கருந்துளைகள்  (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது.

Fig 6 The Magnetar Pioneers

[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html (Cosmos Gamma Ray Bursts)
11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
14 From Wikipedea – Magnetar (May 1, 2009).

******************

jayabarat@tnt21.com [May 14, 2009]

12 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள். (The Deadly Magnetars)

  1. Dear sir, It is really wonderful and nice to have like article in tamil. ( i dont know tamil typing so i am writing in english). I have added your blogs in my rss feed and everytime i use wait which is the new one you are blogging off. I am really thanking you from my heart that i could not able to search what to read and which one about these topics. It is quite wonderful to read in tamil. If you please can you make these as tamil book in pdf or even print material and please publish in the internet. There are so many people are there outside to read these things due to language difficulties so may persons are lagging. We have to make tamil language to get like these topics. Please mail me halovivek@yahoo.com or add me in yahoo. Thank you so much and GuruDheva and God bless you.
    Vivek Rajagopalan

    please write more.

    • நண்பர் விவேக் ராஜகோபாலன்,

      என்னுடைய தமிழ்நூல்கள் திண்ணை (www.thinnai.com), என் வலைக் கட்டுரைகளைத் திரட்டி எழுதியவை. திண்ணையில் 400 மேற்பட்ட படைப்புகள் உள்ளன.

      1. அணுசக்தி. 450 பக்கங்கள் ரூ. 270 தமிழினி பதிப்பகம்

      2. வானியல் விஞ்ஞானிகள். 160 பக்கங்கள் ரூ. 75 தமிழினி பதிப்பகம்

      3. தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி 140 பக்கங்கள் ரூ. 80

      மற்றவை சில அச்சில்.

      பிடியெஃப் பைலில் மாற்ற நேரமில்லை நண்பரே. நீங்கள் விரும்பும் கட்டுரைகளை நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.

      பாராட்டுக்கு மிக்க நன்றி.

      அன்புடன்,
      சி. ஜெயபாரதன்

  2. அன்பின் டாக்டர் ஜெயபாரதன்,

    நான் உங்களின் விஞ்ஞானக்கட்டுரைகளை விரும்பி படிக்கும் ஒரு வாசகன். இந்த பூதக் காந்த விண்மீன்களின் இறுதியான படுவேக சுழற்சியை இப்படி ஒப்பிடலாம். அதாவது நாம் தீபாவளியின் போது கொளுத்தும் சங்கு சக்கரமானது முதலில் அதன் முழு எரிபொருளுடன் ஆரம்பத்தில் மெதுவாக சுழல ஆரம்பித்து பிறகு முடுக்கமடைந்து சுழன்று அதன் முழு எரிபொருளும் தீர்ந்தாலும் அதன் ஆரம்ப வேகத்தை விட சும்மா ‘விர்ர்ர்ர்ர்ர்’ என வேகமாக சுழன்று பிறகு அடங்கும். ஆக பூதக் காந்த விண்மீனும் ஒரு வான சங்கு சக்கரம் தான். :-))).

    நாங்கள் ஆழிப்பேரலையை (சுனாமி) முன் கூட்டியே கணித்து அதை மக்களிடம் உடனே செல்லிடபேசியின் குறுந்தகவல் வாயிலாக சேர்ப்பித்து உயிர்களை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் இணைய தளம் http://www.iibc.in/itws/ இதன் மூலம் sep 12 2007 earthquake ஏற்ப்பட்ட சில மணித்துளிகளில் அறிந்து உடனே கடற்கரையோர மக்களை அப்புறப்படுத்தினோம். இது தற்போது மக்களிடையே அடிக்கடி பரப்பப்படும் ஆழிப்பேரலை பற்றிய வதந்தீகளில் இருந்தும் காக்க உதவுகிறது. மேலும் இறைவன் நாடினால் எதிர்காலத்தில் இதைக்கொண்டு பெரும் உயிர் சேதத்தை தவிர்க்க இயலும் என நம்புகிறோம்.

    நான் இதை எழுதுவதற்கான முக்கிய காரணம், இதுவரை ஆழிப்பேரலையை (சுனாமி) மட்டுமே முன்கூட்டி கணிக்க நவீன விஞ்ஞானத்தால் இயலுகிறது. ஆனால் அதற்கு பெருமளவு காரணமான ஆழ்கடல் பூகம்பத்தை இது வரை எவராலும் முன்கூட்டியே கணிக்க இயலவில்லை. ஆழ்கடல் பூகம்பம் என்றில்லை. நிலத்தில் ஏற்படும் பூகம்பத்தையும் சேர்த்து தான். ஆதலால் தான் ஒவ்வொரு பூகம்பத்திலும் நிறைய உயிர்களை இழக்கின்றோம். மனித சரித்திரத்தில் February 4, 1975 M7.3 Haicheng earthquake – ஐ மட்டுமே ஒரு நாள் முன்னரே கணிக்க இயன்றது. அதனால் பெரும் உயிர் சேதத்தையும் தவிர்க்க முடிந்தது. அதற்கு பிறகு இது வரை இயலவில்லை. இது தான் நமது தற்போதைய நிலை. நான் எதையும் ஆழ்ந்து நோக்குபவன். இந்த பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க இயலுமா எனபதை சிறுவயது முதலே பல வழிமுறைகளில் முயற்சி செய்துவருகின்றேன்.

    அதில் ஒன்றாக இந்த வானத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கும் பூமியில் ஏற்படும் பெரும் பூகம்பங்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று ஆராய்ந்து வருகின்றேன். உதாரணமாக டிசம்பர் 26 2004 -ல் ஏற்ப்பட்ட பெரும் பூகம்பத்திற்கு முன் நம் பூமிக்கு மிக அருகில் 99942_Apophis (2004 MN4) மோதும்படி வந்தது. பிறகு விலகி சென்று விட்டது. அதன் சுட்டி http://en.wikipedia.org/wiki/99942_Apophis . ஆனால் மறுபடியும் எதிர்காலத்தில் பூமிக்கு இன்னும் இதைவிட மிக நெருக்கமாக அது வரும் வாய்ப்பும் உள்ளது. அந்த 2004 வருடம் இது போல நிறைய NEO -க்கள் கண்டறியப்பட்டன.

    இப்போது உங்களின் இந்த பதிவின் வாயிலாக அந்த ஆழிப்பேரலைக்கு பின் டிசம்பர் 27 2004 அன்று இந்த SGR 1806-20 நிகழ்வு ஏற்ப்பட்டுள்ளதை அறிந்தேன். இதன் சுட்டி http://en.wikipedia.org/wiki/SGR_1806-20 . இவற்றின் நிகழ்விற்க்கும், நமது பூமியில் ஏற்ப்பட்ட அந்த 2004 இந்தியப்பெருங்கடல் ஆழிப்பேரலைக்கு காரணமான பெரும் பூகம்பத்திற்க்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இது பற்றி யாரவது ஆராய்ந்து உள்ளனரா? மேலும் பூமியைப்பற்றி நிலவியல் விஞ்ஞானிகளும், வானத்தைப்பற்றி வானவியல் விஞ்ஞானிகளும் மட்டுமே அறிந்து வைத்துள்ளனார். இரு சாராருக்கும் இடையே
    ஒருங்கிணைப்பு இருந்தால் தான் இது சாத்தியம். இதுவரை இருப்பதாக தெரியவில்லை. ஆகவே இந்த முறையில் ஆராய்பவர்கள் இருந்தால் எனக்கு அடையாளம்
    காட்டுங்களேன். உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து மிகுந்த நன்மை கிடைக்கும். விலங்கினங்களில் தேனீ, எறும்பு, கரையான் அல்லது கறையான் (இதில் எது சரியானது?) போல மனிதனும் கூட்டாக (காலனி) வசிக்கும் தன்மையுடையவன். ஆகவே இதை கூட்டு முயற்சியாலேயே கண்டுபிடிக்க இயலும்
    என கருதுகின்றேன்.

    என் கருத்தானது பூமியின் காந்தப்புலத்திற்கு பங்கம் வரும் போது பெரும் பூகம்பங்கள் ஏற்படுகிறது எனபதாகும். இதற்கேற்ப அமெரிக்காவின் நாஸாவில் தற்போது பூமியின் வானவெளியில் ஏற்படும் மின்காந்த மண்டலத்தில் ஏற்ப்படும் மாற்றங்களுக்கும் , பூமியில் ஏற்படும் பூகம்பத்திற்க்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் வரும் ஜீலை 22 ஆம் திகதி 2009 அன்று நிகழும் சூரிய கிரகணத்தின் போது பசிபிக் கடலிலுள்ள Tonga தீவிற்கு அருகில் ஒரு பூகம்பம் ஏற்ப்பட்டு அதனால் மாபெரும் ஆழிப்பேரலை உண்டாகி அது Malaysia (Sabah & Sarawak), Singapore, Maldives, Australia, Mauritius, Si Lanka, India, Indonesia, Philippines போன்ற தேசங்களை தாக்கும் என ஒரு மின்னஞ்சல் உலவுவதாக பதிவர் ரிஷான் ஷெரீப்பிடம் இருந்து வந்த தகவல் மூலம் அறிகின்றேன். அதற்கு நான் அளித்த பதில்,

    ” இந்த ஜீலை 22 2009 அன்று ஏற்பட போவதாக வந்த தகவலைப்பற்றி ஒரு வரியில் சொல்வதால் விஞ்ஞானம் இந்த அளவு வளரவில்லை. இது வரையிலும் நிலஅதிர்ச்சிகளை முன்கூட்டியே அறிய இயலவில்லை. ஆதலால் தான் தற்போது இத்தாலியில் 300-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தோம். ஆனால் அதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானம் இதுவரை ஈடுபட்டிருக்கின்றது. மேலும் சூரிய கிரகணத்தின் போது பூகம்பம் ஏற்படும் என்பதற்கு சரியான விஞ்ஞான ஆதாரம் கிடையாது. ஆனால் 26 தேதிகளில் பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதை வரலாறு குறித்து வைத்துள்ளது. அப்படியே இந்த பூகம்பம் ஏற்பட்டாலும் Mauritius, Sri Lanka, India போன்ற நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது. காரணம். பூகோள அமைப்பு அப்படி. ”

    அந்த மின்னஞ்சலின் முழுவிவரம் இங்கே http://gnuismail.googlepages.com/rishan_email_communication.pdf

    ஆகவே இந்த ஆராய்ச்சிக்கு உங்களால் முடிந்த உதவி புரியவும். உங்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும்.

    with care and love,
    Muhammad Ismail .H, PHD,
    http://www.gnuismail.blogspot.com

  3. மதிப்புக்குரிய நண்பர் டாக்டர் முகமது இஸ்மாயில்,

    நல்ல ஆழமான ஆராய்ச்சி. நான் ஆத்மீகத் துறையில் உதிக்கும் மிரக்கல்களைத் (Miracles) தவிர இயற்கையில் ஏற்படுவதாக நினைக்கும் மிரக்கல்களை நம்புவதில்லை. நான் காரண-காரிய (Cause & Effect Theory) நியதியை நம்புபவன். பூமியின் உள்ளே உட்கருவுக்குள் தீக்குழம்பு கொந்தளித்தாலும், பூகம்பத்தைக் கருவில் தூண்டும் காரணி எது என்னும் வினா எழுகிறது.

    விண்வெளியில் ஏற்படும் அண்டக் கோள்களின் ஈர்ப்பு விசை மாறுபாடாலும், நியூட்ரான் விண்மீன்களின் அதி தீவிரக் காந்த மண்டலப் பெயர்ச்சியாலும், அடிக்கும் திசையாலும், அவற்றின் காமாக் கதிர் வெடிப்பு எழுச்சியாலும், பூமியின் உள்ளமைப்பில் திடீரென மாறுபாடுகள் உண்டாகலாம் என்னும் உங்கள் அரிய கோட்பாடை நான் ஒப்புக் கொண்டு வரவேற்கிறேன்.

    மேலும் அவற்றுக்கு இயற்கையின் திருவிளையாடல்கள் போன்ற சான்றுகள் உண்டா என்று நானும் தேடித் தகவல் தருகிறேன்.

    (நான் டாக்டர் பட்டம் பெற்றவன் அல்லன்.)

    இந்த “பூகம்பக் கோட்பாடை” எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  4. மதிப்புக்குரிய நண்பர் டாக்டர் முகமது இஸ்மாயில்,

    உங்கள் சுனாமி எச்சரிக்கைத் தளத்தையும் (http://www.iibc.in/itws/) பணியையும் பார்த்துப் பெருமைப் படுகிறேன்.

    தென்னாசிய நாடுகளுக்கு நிச்சயம் அது ஓர் உன்னத மனித நேயப் பணி என்று கூறி என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

    உங்கள் மனித நேயப் பணி தொடரட்டும்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  5. அற்புதமாக இருக்கின்றன.. தமிழ் உலகிற்கு தேவையான – இது போன்ற இன்னும் பல தர எனது வாழ்த்துக்கள்..

  6. பாராட்டுக்கு நன்றி நண்பரே.

    உங்கள் வலைத்தளமும் சிறப்பாக உள்ளது. தொடருங்கள் உங்கள் கணனிப் பணியை.

    முடிந்தால் யூனிகோடு/ டிஸ்கி அச்சடிப்புப் பலகை ஒன்றையும் உங்கள் வலைப்பக்கத்தில் இணைத்தால் பயனுள்ளதாகும்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  7. அன்பின் சி. ஜெயபாரதன் அய்யா,

    தங்களின் விளக்கமான பதிலுக்கும் தங்களின் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி. பிறகு இந்த SGR 1806-20 பற்றி பல வியப்பான தகவல்கள் கிடைத்தது. இது நம்மிடமிருந்து கிட்டதட்ட 50,000 ஒளிவருட தொலைவில் உள்ளது. எனக்கு இது பற்றி பல கேள்விகள் உள்ளது. தயை கூர்ந்து பதிலளிக்கவும். இந்த இடுகையை நான் பல இடங்களில் சுட்டியாக தந்துள்ளேன். ஆகவே இதை பலர் படித்து பார்த்து விளங்கிக்கொள்ள இயலும். நாங்கள் அறிந்தவரை இந்த பிரபஞ்சத்தில் ஒளிதான் வேகமாக பயணிக்க்கூடிய ஒன்றாகும். ஆனால் இந்த காந்த சக்தியும் ஒளியின் வேகத்திற்கு பயணிக்குமா?

    1. ஒளியே இங்கிருந்து வருவதற்கு 50,000 ஒளியாண்டுகள் ஆகும் போது இந்த காந்தப்புயல் எப்படி 27 December 2004 அன்று நம் பூமியின் மேல் தாக்கியது?

    2. இந்த காந்த புயலானது 27 December 2004 லிருந்து சுமார் 50,000 ஒளியாண்டுகளுக்கு முன்னர் உருவானாதாக இருக்குமா?

    3. அப்படியென்றால் இந்த நிகழ்வானாது நம் பூமியே தோன்றுவதற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்றா?

    விளக்கம் பெற காத்திருக்கும்,

    Muhammad Ismail .H, PHD,

    குறிப்பு :நானும் டாக்டர் பட்டம் பெற்றவனல்ல. பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுவது Ph.D ஆகும். என்னுடைய PHD ஆனது Passed Higher secondary with Difficulty ஆகும். ;-) :-). ஆமாம். நான் +2 படித்து முடித்த்தே பெரும் பாடு தான். காரணம் பொருளாதாரம் தான். எனது அறிவைப் பெருக்க இந்த பொருள் ஆதாரமாக இருக்க மறுத்து விட்டது. ஆனால் இறைவன் மறுக்கவில்லை. ஆதலால் பொருளுக்கு பஞ்சம் இருந்தாலும் அறிவுக்கு பஞ்சமில்லை. :-)

  8. அன்புமிக்க நண்பர் முகமது இஸ்மாயில்,

    ஒளி, ஒலி, காந்தம், ஈர்ப்பு, கதிர்வீச்சு ஆகியவை யாவும் சக்தியின் பல்வேறு தோற்றத்தின் வெவ்வேறு வகைகள்.

    இதுவரை ஒளி, ஒலி இரண்டின் வேகத்தைவிஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்.

    ஈர்ப்பாற்றலுக்கு வேகம் இல்லை.

    கதிர்வீச்சு, கதிரியக்கம், ரேடியோ அலைகள், எக்ஸ்-ரே என்பவை மின்காந்த அலைகள்.

    இவற்றின் அலை நீளம் வெவ்வேறானவை, வேகம் ஒளியை ஒட்டியது.

    ஆனால் மின்காந்தப் பட்டை எல்லையற்ற அலை நீளங்கள் அல்லது அதிர்வுகள் (in Electromagnetic Spectrum there are Limitless range of wave lengths or frequencies) கொண்டது.

    ஆயினும் இவையாவும் ஒளிபோல் விண்மீனிலிருந்து பல்வேறு ஒளியாண்டு தூரங்களைக் கடந்துதான் வரவேண்டும்.

    //// இந்த காந்த புயலானது 27 December 2004 லிருந்து சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானாதாக இருக்குமா? ///

    ஆமாம்.

    ஒளியாண்டு என்பது தூரம். ஒளிவேகம் : 186,000 mps

    50,000 ஒளியாண்டு தூரத்தை ஒளி வேகத்தால் வகுத்தால் =

    50,000 Light-years / 18600 mps = 50,000 years.

    அன்புடன்,
    சி, ஜெயபாரதன்

  9. I am newbie for this site. Really it is amazing.

    Please dont leave this work ever. Your hard word will leads to glitter of our tamil students. May god bless you Mr. Jayabarathan sir…

  10. Hi there. Very nice website!! Guy .. Beautiful .. Superb .. I will bookmark your web site and take the feeds additionally…I am happy to locate numerous useful information here in the post. Thank you for sharing.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s