காப்டன் ! என் காப்டன் !

Cover Image Walt Whitman-1

மூலம் : வால்ட் விட்மன்
(1819-1892)
(புல்லின் இலைகள்)

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

ஓ காப்டன் ! ஓ என் காப்டன் !
ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !
கப்பல் தளங்கள் தப்பின சூறாவளி !
தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !
அருகே துறைமுகம், ஆலய மணி ஓசை !
வெற்றிக் கொண்டாட்டம்  மக்களிடையே !
ஓ என் நெஞ்சே ! ஓ என் நெஞ்சே !
ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !
கப்பல் தளத்தில் கவிழ்ந்து கிடக்கிறார்
காப்டன் மரித்து சில்லிட்டுப் போய் !

ஓ காப்டன் ! ஓ என் காப்டன் !
எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !
எழுவாய் ! கொடி பறக்குது உனக்காய் !
சங்க நாதம் முழங்குது உனக்காய் !
தோரணம், மலர் வளையம் உனக்காய் !
காத்திருக்குது கூட்டம் கடற் கரையில் !
அழைப்பது மக்கள் உன்னைத் தான் !
ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !
உன் தலைக் கடியே என்னிரு கைகள் !
பாரீர் காப்டன் ! என்னரும் தந்தையே !
கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !
சில்லிட்டுக் கிடக்குதும் சிதைந்த உடல் !

மௌன மாகி விட்டார் என் காப்டன் !
வெளுத்த உதடுகள் ! முடங்கிய உடல் !
என் கைத் தொடுகை  பிதா உணர வில்லை !
இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !
கட்டினார் நங்கூரம் கப்பலுக்கு !  முடிந்த
பயங்கரப் பயணத்தில் குறிக்கோள் வென்றது !
கொண்டாடும் கடற்கரை ! ஆலய மணி ஓசை !
தடுமாற்றம், துக்கம் என் கப்பல் தளத்திலே !
சில்லிட்டு கிடக்கிறார் வீழ்ந்தென் காப்டன்
செத்த உடலாய்க் கப்பல் தளத்திலே !

++++++++++

Abraham Lincoln -1

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 5, 2018) [R-2]

5 thoughts on “காப்டன் ! என் காப்டன் !

  • jayasree shanker
   12:25 AM (12 hours ago)
   Reply

   ஒவ்வொரு வரியும் பாசத்தால் சோகத்தில் இன்னொரு வரியைத் தாங்கிப் பிடித்து இழுத்து வந்து சோகக் காவியத்தை மேடையில் நிமிர்ந்து நிற்க வைத்திருக்க்றது.

   பாராட்டுக்கள் .
   என்றும் அன்புடன்,

   ஜெயஸ்ரீ ஷங்கர்.

 1. தேமொழி via googlegroups.com
  2:02 AM (10 hours ago)
  Reply

  சிறுவயதில் ஆங்கிலத்தில் படித்த கவிதை. உருவகத்திற்காகவும், Elegy என்றும் போற்றப்பட்டு சொல்லிக் கொடுக்கப்பட்ட கவிதையை தமிழில் உங்கள் மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  எளிமையான வரிகள் அதே உணர்வுகளை அருமையாகப் பிரதிபலிக்கின்றன ஐயா.

  உமர் கய்யாமின் வரிகளை இனிமையாக மொழி பெயர்த்த (வெய்யில் கேற்ற நிழலுண்டு; வீசும் தென்றல் காற்றுண்டு) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகளுக்கு இணையானது.

  நன்றி

  அன்புடன்
  தேமொழி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.