காம சக்தி
சி. ஜெயபாரதன், கனடா
ஆக்கும் சக்தி ! ஆத்மா சிறகு !
அளவுக்கு மீறின் அழிக்கும் சக்தி !
கவரும் சக்தி ! காந்த சக்தி !
பிணைக்கும் சக்தி ! பிறப்பின் சக்தி !
துருவம் இருவகை ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீதி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !
ஈரினம் இணைந்து பூரணம் அடைவது
மனித நியதி ! மானிட வளர்ச்சி !
காமம் உடற்கு கவின்தர வல்லது !
மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,
முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,
காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !
பைரன், பாரதி, ஷெல்லி, ஷேக்ஸ்பியர்
பாரதி தாசன், கண்ண தாசன்,
வள்ளுவர், வால்மிகி, வியாச முனிவர்
பாடகி மீரா, லதாமங் கேஷ்கர்,
ஆடகி மேனகை, மாதவி, ஊர்வசி,
வைஜயந் திமாலா, கமலா, பத்மினி,
காளிதாஸ், கம்பன், கவிக்குயில் ஆண்டாள்,
ஓவியர் வர்மா, டவின்ஸி, பிகாஸோ
காமக் கடலில் நீந்தாக் கலைஞர்
பூமியில் ஏது ? காம சுரப்பிகள்
கலைத்துவ வேர்உரம், நீரும் ஆகும் !
காம மிகுதி கலைசெயத் தகுதி !
காம சக்தியைக் கட்டுப் படுத்தி,
காவியம் படைப்போர் காலனை வெல்பவர் !
ஓவியம் தீட்டுவோர் உயர்தனி மனிதர் !
நாடகம், நாட்டியம், மேடையில் படைப்போர்,
சிற்பம் செதுக்கும் அற்புதச் சிற்பி,
ஆய்வுகள் புரிவோர், அறிவியல் ஞானி !
நுண்கலை வடிப்போர் மண்புகழ் பெறுவர் !
வறுமையும் நோயும் சுரப்பியின் நஞ்சு !
காம மீறுதல் தீமையின் வித்து !
பாமர மூடன் காமச் சுரப்பியைக்
காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !
காம சுரப்பிகள் காய்ந்து போனால்
அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !
முதுமையின் கருநிழல் முழுஉடற் பாயும் !
காவியம், கலைகள், ஓவியம் ஏது ?
நுண்கலை யாவும் கண்களை மூடும் !
நடனம் ஏது ? நல்லிசை ஏது ?
முடமாய்ப் போகும் சுடரொளி ஆத்மா !
*********************
S. Jayabarathan [(jayabarathans@gmail.com) July 30, 2018 (R-4)]
கவிதை மிக அருமை .படிக்க தங்கமான கருத்துகள்.
பாராட்டுக்கு நன்றி நண்பர் கலைப் பொன்ராஜ்.
ஜெயபாரதன்
காமசக்தி கவிதை மிக அருமை.
super
kavitahi line super
பாராட்டுக்கு நன்றி நண்பர் சிவகுரு & சிவசக்தி.
சி. ஜெயபாரதன்
You completed various good points there. I did a search on the theme and found the majority of folks will have the same opinion with your blog.
You’re proper: keywords and phrases devoid of amazing articles friendly design, suggests almost nothing. I’m at the beginning in Inbound Marketing and discover your report quite brief and concise. Thanks!
மிக்க அருமை. நன்றி. வாழ்த்துக்கள்.
Stumbled to your article through yahoo and definately worth read. Thanks.
Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய