வானியல் விஞ்ஞானிகள் நூல்

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அன்புள்ள நண்பர்களே,

“வானியல் விஞ்ஞானிகள்” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக [2001-2008] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த விஞ்ஞானிகளைப் பற்றிய பல கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன.

“வானியல் விஞ்ஞானிகள்” நூலைப் பற்றி :

இது அண்டவெளி யுகம் ! 1957 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் முதல் ஸ்புட்னிக் துணைக்கோள் பூமியைச் சுற்றத் துவங்கிய போது அண்டவெளிப் படையெடுப்பு ஆரம்பமானது ! கடந்த 500 ஆண்டுகளாக விண்வெளி விஞ்ஞானிகள் கனவு கண்டவை அது முதல் மெய்யாக நிகழத் துவங்கின ! 1969 ஆம் ஆண்டில் முதல்முதல் நீல் ஆர்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்து விண்வெளி வரலாற்றில் மகத்தான ஒரு பொன் கல்லை நிலைநாட்டினார். அடுத்து விண்வெளிக் கப்பல்கள் அனுப்பப்பட்டு பரிதி மண்டலக் கோள்கள் அனைத்தும் உளவப்பட்டன. விண்வெளியில் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கும் ஹப்பிள் தொலைநோக்கி இன்னும் பூமியைச் சுற்றி வருகிறது. செவ்வாய்க் கோள் ஆழமாக ஆராயப்பட்டு 2020 ஆண்டுகளில் மனித விண்வெளிக் கப்பல் அனுப்பி செவ்வாய்த் தளத்தை உளவ நாசா முயற்சிகள் புரிந்து வருகிறது. பூதக்கோள் வியாழனும் அதன் துணைக்கோள்களும் விண்ணுளவிகளால் ஆராயப் பட்டன, அதுபோல் சனிக்கோளும், அதன் துணைக்கோள்களும், வால்மீன்களும் உளவப் பட்டன.

இந்தச் சிறு விஞ்ஞான நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், காஸ்ஸினி, ஹியூஜென்ஸ், வில்லியம் ஹெர்ச்செல், அவரது புதல்வர் ஜான் ஹெர்ச்செல், ஐஸக் நியூட்டன், எட்மண்ட் ஹாலி, ரைட் சகோதரர்கள், ராபர்ட் கோடார்டு, எட்வின் ஹப்பிள், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஃபிரெட் ஹாயில், ஜார்ஜ் காமாவ், கார்ல் சேகன், சந்திர சேகர், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஜெயந்த் நர்லிகர் ஆகியோரது விஞ்ஞான வரலாறுகள் இடம்பெறுகின்றன. இவரைத் தவிர வேறு சில விண்வெளி விஞ்ஞானிகள் வரலாறுகளும் இருக்கின்றன. திண்ணை வார வலையிதழில் நான் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளே இவை.

என் விஞ்ஞான நூலுக்கு அணிந்துரைகள் எழுதிய திரு கி. வ. வண்ணன், முனைவர் ஐயம்பெருமாள் ஆகியோர் என் மதிப்பிற்கும், அன்புக்கும், நன்றிக்கும் உரியவர். நூலைப் படித்துச் சரிபார்த்து அரிய கருத்துகளை இருவரும் கூறிப் பிழைகள் திருத்தப்பட்டன. அரைநூற்றாண்டு குடும்ப நண்பர் திரு. கி. வ. வண்ணன் என்னுடன் பாரத அணுசக்தி ஆய்வு உலை ஸைரஸிலும் [CIRUS Research Reactor], கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்திலும் பணி புரிந்தவர். முனைவர் ஐயம்பெருமாளை எனக்கு அறிமுகப் படுத்திய கவிஞர் வைகைச் செல்வி [ஆனி ஜோஸஃபின்] அவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றி. இந்நூலைப் பொறுமையுடன் சீர்ப்படுத்திப் படங்களுடன் பின்னிச் சிறந்த விஞ்ஞான பதிப்பாக வெளியிட்ட தமிழினி அதிபர் வசந்த குமார், மணிகண்டன் அவர்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி. எனது விஞ்ஞானக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்ட திண்ணை வலையிதழ் அதிபர்கள் திரு ராஜாராம், திரு துக்காராம், பதிவுகள் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆகியோர் மூவருக்கும் எனது நன்றி. படங்கள் உதவிய அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பனின் ஈசா (ESA) மற்றும் பல்வேறு அகிலவலை விண்வெளித் துறைகளுக்கு என் நன்றி உரியதாகுக.

சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின், அண்டாரியோ
கனடா.
அக்டோபர் 20, 2008

++++++++++

நூலாசியரைப் பற்றி :

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றவர். பாம்பே பாபா அணுவியல் ய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தவர். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டவர். பயிற்சி முடிந்த பின்பு 8 ண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றியவர். அவரது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறார்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் கடந்த 45 ண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கிய விஞ்ஞானப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960 ஆண்டு முதல் அவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. அவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.

+++++++++++++++++

வானியல் விஞ்ஞானிகள்
நூல் விலை : ரூ 75
(176 பக்கங்கள்)

நூல் கிடைக்குமிடம்
தமிழினி பதிப்பகம்
63. பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை: 600014, தமிழ் நாடு
இந்தியா

+++++++++++++++++

தமிழினி பதிப்பக அதிபர் : வசந்த குமார்

ஈமெயில் : “vasantha kumar” tamizhininool@yahoo.co.in
செல் ஃபோன் : 98841-96552
பதிப்பக ஃபோன் : 2835-1410

நூல் வாங்க வசந்த குமாரிடம் நேராகத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

அல்லது http://anyindian.com/ (தமிழினி பதிப்பகம்) மின் முகவரில் காணலாம்.

++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 20, 2008

7 thoughts on “வானியல் விஞ்ஞானிகள் நூல்

 1. உங்கள் எழுத்தை/விவரங்களை மிகவும் சுவைத்துப் படித்த பலரில் நானும் ஒருவன்.
  புத்தகமாக வருவதில் மிக்க மகிழ்ச்சி.

 2. பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் வடுவூர் குமார்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்

 3. மதிப்பிற்குரிய ஐயா ஜெயபாரதன் அவர்களுக்கு,

  வணக்கம், தங்கள் அறிவியல் சார்ந்த வலைப்பூவில், அரசியல் சார்ந்து எழுதுவதற்கு முதலில் வருத்துகிறேன், என்னுடைய ” யார் இவர்களில் தேசத் தந்தை – டாக்டர்.அம்பேத்காரா? காந்தியாரா? என்கிற கட்டுரைக்கு உங்கள் எதிர்வினைகளைப் படித்தேன், மனம் வருந்தி எழுதி இருக்கிறீர்களோ என்ற தாக்கம் எனக்குள் வந்ததன் விளைவாக, உங்கள் வலைப்பூவிலே வந்து பின்னூட்டம் இடுகிறேன்.

  வயதில் பெரிய எங்கள் சக தமிழரின் மனம் புண்படும்படி எழுதி இருப்பின் மன்னிக்கவும், இருப்பினும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை, ஒப்பியல் நோக்கில் தலைவர்களைக் கொண்டு சென்றால் சில நேரங்களில் எல்லைகளை விரைவில் கொண்டு சேர்க்க முடியும், நீங்கள், இந்தச் சிறுவனின் செயல்களில் ஏதேனும் குறைகள் இருப்பின் அறியத் தரவும்.

  கருத்தியல் ரீதியில் யாரையும் புண்படுத்தாமல் கருத்துக்களை எடுத்துரைக்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்று நான் கருதுகிறேன், தங்கள் தரப்பு உணர்வுகளை மதிக்கிறேன். என்னுடைய கருத்துக்களில் தெளிவாக என்னுடைய பயணத்தை நகர்த்துகிறேன்.

  உங்கள் தமிழ் அறிவியல் பணிகள் மிக இன்றியமையாதவை, உங்கள் பணிகளில் இருந்து உங்களை கொஞ்ச நேரம் விலக வைத்ததற்கு வருந்துகிறேன். உங்களை உங்கள் கருத்துக்களை, அதன் மீதான கூற்றியலை, அதன் தரப்பு நியாயங்களை மதிக்கிறேன்.

  மீண்டும் ஒருமுறை உங்கள் தமிழ்ப் பணிகளுக்கான நன்றிகளுடன்

  மரியாதை கலந்த வணக்கங்களுடன்
  உங்கள் தமிழ்ப் பிள்ளை
  கை.அறிவழகன்

 4. எட்டாம் வகுப்புப் படித்தாலும், எட்டாக் கனியாக இருந்த சமூக நீதியை உரைத்து, எங்கள் தமிழினத்தை எட்டாத உயரங்களுக்குச் கொண்டு சென்ற தந்தை பெரியார் மட்டும் இல்லையென்றால் நீங்களும் நானும் இன்று இணையங்களில் விவாதம் செய்வோமா என்பதன் பின்னணியில் இருக்கும் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.ஊடகங்களின் சார்பு நிலைகளும், குறிப்பிட்ட சமூக மக்களின் ஆளுமையும், இன்னும் சங்கராசாரிகளைக் கூட இந்த தேசத்தில் தேசத் தந்தையாக மாற்றும் வல்லமை பொருந்தியவை என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

 5. மதிப்புக்குரிய நண்பர் திரு. கை. அறிவழகன் அவர்களுக்கு,

  வணக்கம்.

  உங்கள் கடிதம் கண்டு மனம் நெகிழ்ந்தேன். டாக்டர் அம்பேத்கார் மகாத்மா காந்தியைப் போல் இந்தியாவின் தவப் புதல்வர். அவரது மகத்தான சாதனைகளை நான் பெரிதும் மதிப்பவன். அவர் காந்திஜியை மிகவும் கீழாக இகழ்ந்து பேசி யிருந்தாலும், அம்பேத்கார் மீது எனக்குச் சிறிதும் வெறுப்பில்லை.

  அதே போல் பெரியார் தமிழ் நாட்டின் தவப் புதல்வர். அவரும் காந்திஜியைப் பல சமயங்களில் கீழாகப் பேசி யிருக்கிறார். சுதந்திர நாளைத் துக்க தினமாகக் கொண்டாடியது எனக்கு வருத்தம் உண்டாக்குகிறது.

  ஏனென்றால் நாடு விடுதலை அடைய வில்லை யானால் நீங்களும் நானும் இன்னும் அடிமைகளாய்க் கிடப்போம் அல்லவா ?

  அம்பேத்காரையும் பெரியாரையும் பாராட்டுங்கள். காந்திஜீயுடன் அவர்களை ஒப்பிட்டு காந்திஜீயை ஏன் கீழே தள்ள வேண்டும் ? மூன்று பேரும் மக்களுக்கு நன்மை செய்தவர்.

  நமக்குள் நட்பு வளரட்டும். பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்.

 6. மதிப்புக்குரிய நண்பர் திரு. கை. அறிவழகன் அவர்களுக்கு,
  வணக்கம்.

  தந்தை பெரியார் தமிழ்நாட்டில் சமூகச் சீர்திருத்தம் செய்ததை நான் மறக்கவில்லை. மறுக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் விடுதலை பெறப் போராடிய காந்திஜி மீது பலருக்கு ஏனோ வெறுப்புள்ளது.

  விடுதலை பெற்ற பிறகு தமிழ்நாடு உட்பட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் நாட்டினர் முன்னேற கல்வி, கலாச்சாரம், விஞ்ஞானம், தொழிற் துறைகள், மின்சார நிலையங்கள், பேரணைகள், கன யந்திர உற்பத்திச் சாலைகள் உண்டாக “நாட்டுத் தொழில்வள அமைப்புகளை” [Infrastucture] உழைத்தவர் ஜவஹர்லால் நேரு. இந்திய அரசியல் சாஸனம் எழுத டாக்டர் அம்பேத்காரை நியமித்தவரே நேருதான்.

  பெரியாரை நினைக்கும் போது காந்திஜீயையும், நேருவையும் முதலில் நாம் மறக்காமல் இருக்க வேண்டும் என்பது என் பணிவான எண்ணம்.

  நமக்குள் நட்பு வளரட்டும் நண்பரே.

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்.

 7. மதிப்புக்குரிய நண்பர் திரு. கை. அறிவழகன் அவர்களுக்கு,
  வணக்கம்.

  இந்திய விடுதலைப் போராட்டத்தில் “வெள்ளையனே வெளியேறு ! வந்தே மாதரம்” என்று முழக்கி அந்நிய ஆடை எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற அகிம்சா வழியில் போராடிச் சிறைசென்ற காந்திஜீயே இந்திய விடுதலைப் பிதா என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள்.

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்

  ++++++++++++++++

  From ( http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html )

  Spring 1894: ·Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.

  1901: ·Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.

  1904: ·Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”

  July 31, 1907: ·The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon called satyagraha, or “soul-force.”

  January 11, 1908: ·Gandhi is arrested and sentenced to two months in prison.

  October 10, 1908: ·Gandhi is arrested again, spends a month in jail.

  1909: ·Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.

  November 13, 1913: ·Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.

  June 30, 1914: ·Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.

  May 25, 1915: ·Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.

  April 6, 1919: ·Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.

  April 13, 1919: ·Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.

  August 1, 1920: ·Gandhi calls for a period of non-cooperation across India.

  March 10, 1922: ·Gandhi is arrested for sedition.

  March 1922-January 1924: ·Gandhi remains in prison.

  1924-1928: ·Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.

  1925: ·Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.

  February-August 1928: ·Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.

  January 26, 1930: ·Gandhi publishes the Declaration of Independence of India.

  March 2, 1931: ·Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.

  March 12-April 6, 1931: ·Gandhi leads his Salt March to the sea.

  May 5, 1931: ·Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.

  January 1931: ·British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference(Congress asks Gandhi to be this representative).

  Autumn 1931: ·Gandhi participates in the Round Table Conference in Britain.

  January 4, 1932: ·Gandhi is arrested for sedition, and held without a trial.

  September 20-25, 1932: ·Gandhi fasts in prison to protest the treatment of untouchables.

  1934-38: ·Gandhi avoids politics, travels in rural India.

  1935: ·Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.

  September 1939: ·World War II begins, lasting until 1945.

  March 22, 1942: ·Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.

  August 8, 1942: ·The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.

  August 1942: ·Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.

  February 10 to March 2, 1943: ·Gandhi fasts while imprisoned, to protest British rule.

  May 6, 1944: ·Gandhi is released from the Aga Khan’s palace.

  Summer 1944: ·Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.

  May 16, 1946: ·British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.

  March 1947: ·Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.

  August 15, 1947: ·Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.

  August-December 1948: ·India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.

  January 30, 1948: ·Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu Nationalist.

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.