சி. ஜெயபாரதன், கனடா
பாரத கண்டச் சீரிளம் தமிழே !
ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !
வேர்கள் தழைத்து விழுதுகள் பெருகின !
ஈழத் தீவில் இணைமொழி நீயே !
சிங்கப் பூரினில் துணைமொழி நீயே !
மலேசிய நாட்டில் தனிமொழி யானாய் !
காசினி மீதில் மேவிய தமிழே !
வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே !
ஆத்திச் சூடி ஓளவை, ஆண்டாள்,
வையகப் புலவர் வள்ளுவர், இளங்கோ,
பாரதி, கம்பர், பாரதி தாசன்,
யாவரும் உனது மாதவப் புதல்வர் !
மலைகடல் தாண்டி அலைகளைப் போல
ஆசியா, அரேபியா, ஆஃப்ரிக்கா, ஈரோப்,
வடஅமெ ரிக்கா, கனடா புகுந்து
சொந்த மாக்கினர், செந்தமிழ் மாந்தர் !
யாதும் நாடே ! யாவரும் கேளிர் !
பாதுகாத் துன்னைப் பரப்புதல் எம்பணி !
காசினி மீதில் நேசமாய் நிலவும்
மாசிலாத் தமிழே ! வாழ்த்துவம் உனையே !
வையகத் தமிழே ! வணங்குவம் உனையே !
++++++++++
jayabarathans@gmail.com [April 7, 2008]
வையகமெங்கும் பரவட்டும், வானெங்கும் கேட்கட்டும், இத்தமிழ் வாழ்த்து,
மிக்க நன்றிகள்.
திக்கெட்டும், உலகத் தேசங்கள் அனைத்தும் செந்தமிழ் அன்னை தன் பொற்தடங்களை வேரூன்றி விட்டாள்.
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பர் ஜீவா.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
You made some nice points there. I did a search on the theme and found mainly people will agree with your blog.
Your article has really inspired me to totally change the way I write. I want to thank you for all your hard work.