டாக்டர் அப்துல் கலாம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
“ஏன் இங்கே செய்தியிதழ் ஊடகங்கள் இகழ்ச்சியாக எழுதி வருகின்றன? ஏன் இந்தியாவில் நமது வல்லமை ஆற்றல்களை, அடைந்த வெற்றிகளைச் சொல்ல மன உளைச்சல் அடைகிறோம்? நாம் பெருமைப்பட வேண்டிய உன்னத நாட்டைச் சேர்ந்தவர்! பிரமிக்கத்தக்க பல்வேறு வெற்றிக் கதைகள் நம்மிடம் உள்ளன. ஆனால் நாம் அவற்றை ஒப்புக்கொள்ள மறுக்கிறோமே. ஏன் ? மரணங்கள், பயங்கர மூர்க்கச் செயல்கள், நோய்கள், மனிதக் குற்றப்பாடுகள் போன்றவற்றை மட்டும் பெரிதாக அறிவித்து நமது மகத்தான வெற்றிச் சாதனைகள் அவற்றில் மூழ்கி விடுகின்றன.”
டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி
“இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”
டாக்டர் அப்துல் கலாம்.
இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்!
டாக்டர் அப்துல் கலாம்.
“புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”
டாக்டர் அப்துல் கலாம்.
“என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”
டாக்டர் அப்துல் கலாம்.
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”
டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )
“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”
டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).
பிரிட்டீஷ் இந்தியாவில் முதன்முதல் ராக்கெட் பயன்பட்ட வரலாறு
கி.பி 1044 ஆண்டை ஒட்டி இடைக்காலச் சைனாவில் முதன்முதல் ராக்கெட் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப் படுகிறது. ஆனால் 1232 இல் சைனா மங்கோலியரை எதிர்த்துப் போரிட்ட போதுதான் மெய்யாக அவை போர்க்களத்தில் நேராகப் பயன்படுத்தப் பட்டன. 1696 இல் ராபர்ட் ஆண்டர்ஸன் என்னும் ஆங்கிலேயர் எப்படி ராக்கெட் குழல்வடிவுகள் [Rocket Moulds] பண்ணுவது, எப்படி எரிசக்தி உந்து தூள்களை [Rocket Propellants] தயாரிப்பது, எப்படி அவற்றின் பரிமாணங்களைக் கணக்கிடுவது என்று விளக்கிடும் ஈரடுக்குத் தொகுப்பு நூலை எழுதினார். மைசூர் புலிமன்னர் எனப்படும் திப்பு சுல்தான் கைவசம் 1750 ஆம் ஆண்டில் 5000 எறிகணைகள் இருந்ததாகத் தெரிகிறது. 1780 இல் இந்திய அரசருடன் போரிட்ட “குண்டூர் யுத்தத்தில்” [Battle of Guntur] முதன்முதல் பிரிட்டீஷ் படைகள் இந்திய எறிகணைகளால் தாக்கப் பட்டன. 1799 ஆம் ஆண்டில் மைசூரில் பிரிட்டீஷ் ராணுவத்துடன் நடந்த போரில் ஹைதர் அலி, அவரது புலிப் புதல்வன் திப்பு சுல்தான் இருவரும் மூங்கில் கம்புகளில் கட்டி விடுத்த எறிகணை ராக்கெட்டுகள், எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்தன. திப்பு சுல்தான் தோற்றுப் போன பின்பு பிரிட்டீஷ் படையினர் ஸ்ரீரங்க பட்டணத்தில் 700 பயன்படும் எரியா ராக்கெட்டுகளையும், 9000 பயன்பட்டுக் காலியான எரிந்த ராக்கெட்டுகளையும் கண்டதாக அறியப் படுகிறது. எட்டு அங்குல நீளம், ஒன்றரை முதல் மூன்று அங்குல விட்டமுள்ள இரும்புக் குழல் எறிகணைகள் 4 அடி நீளமுள்ள மூங்கில் முனைக் கம்புகளில் கட்டப் பட்டிருந்தன. அவை எறிந்து ஏவப்படும் போது சுமார் 3000 அடித் தூரம் பாய்ந்து செல்லும். அவை யாவும் மைசூர் தாரமண்டல் பேட்டையில் தயாரிக்கப் பட்டவை.
மைசூர்ப் போருக்குப் பிறகு 1804 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் வில்லியம் காங்கிரீவ் [William Congreve] என்பவர் திப்பு சுல்தான் பயன்படுத்திய எறிகணையைக் காப்பி எடுத்து விருத்தி செய்து 9000 அடி தூரம் செல்லும்படி மேம்படுத்தினார். அந்த எறிகணைகள் 1812-1815 ஆண்டுகளில் அமெரிக்க சுதந்திரப் போருக்குப் பிறகு அமெரிக்க-கனடாச் சண்டையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பிரிட்டன் பயன்படுத்தியதாக அறியப் படுகிறது. வில்லியம் காங்கிரீவ் தனது ராக்கெட்டில் இரும்புக் குழலும், கருப்புத் தூளுமிட்டு, ஏவுநிறையைச் சமப்படுத்த 16 அடிக் கம்பைப் பயன்படுத்தினார். 1806 இல் பிரிட்டீஷ் கப்பல் படையினர் காங்கிரீட் ராக்கெட்டுகளைக் பிரெஞ்ச் வீரன் நெப்போலியன் படைகள் மீது வீசினர். அடுத்து ஈரோப்பில் 1807 ஆண்டில் கோபன்ஹேகனுக்கு (டென்மார்க்) எதிராக 25,000 காங்கிரீவ் எறிகணைகள் உந்தி எறியப்பட்டன. பிறகு வில்லியம் ஹேல் [William Hale] என்னும் அடுத்தோர் பிரிட்டீஷ் நிபுணர் கம்புகளற்ற எறிகணைகளை ஆக்கினார். அமெரிக்க ராணுவம் 1846-1848 ஆண்டுகளில் நடந்த மெக்ஸிகன் போரிலும், ஆப்ரஹாம் லிங்கன் காலத்து உள்நாட்டுப் போரிலும் [Civil War (1861-1865)] காங்கிரீவ் ராக்கெட்டுகள் பயன்பட்டதாகத் தெரிகிறது.
டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் ராக்கெட் திட்டங்கள்
1982 ஆம் ஆண்டில் ராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய ராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் ராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் ஏவுகணைத் திட்டங்களின் பெயர்கள் என்ன ?
1. நாக ஏவுகணை – ராணுவ டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை (NAG – An Anti-Tank Guided Missile)
2. பிருத்வி ஏவுகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளத் தாக்கு ஏவுகணை – (Prithvi – A Surface-to-Surface Battle Field Missile)
3. ஆகாய ஏவுகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile)
4. திரிசூல் ஏவுகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை (Trishul – A Quick Reaction Surface-to-Air Missile with a Shorter Range)
5. அக்கினி ஏவுகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest)
துணைக்கோள் ஏவும் ராக்கெட் திட்டத்தில் (SLV-3) கூட்டுப் பணிசெய்து டாக்டர் அப்துல் கலாம் பெற்ற அனுபவம் தனித்துறை-பொதுத்துறை தொழில் நிறுவாகங்களை இணைத்து ஏவுகணைச் சாதனங்கள் செய்யப் பாதை வகுத்தது. அச்சமயத்தில் திட்ட நிர்வாகத் தலைவராக இருந்த அப்துல் கலாம் மற்ற நிதிப் பொறுப்பு, நிர்வாக ஆணைப் பணிகளின் பொறுப்புகளைக் கீழிருந்த மேலதிகாரிகளிடம் விட்டுவிட்டு முக்கிய வினைகளை மட்டும் தான் மேற்கொண்டார்.
(தொடரும்)
தகவல்:
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
16 Missile Test By India [February 5, 2007]
17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/]
22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html]
24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 17, 2007)
Excellent n usefull article. :)
போற்றுதலுக்குறிய ஐயா,
உங்களை போற்றி வணங்குகிறேன்,
உங்களின் வலைப்பூ பற்றி எழுதவோ பாராட்டவோ எனக்கு இன்னமும் தகுதி பெறவில்லையென்ற உண்மையை எனக்கு உணர்த்தும் வண்ணம் பல விஷயங்களை பலவேறு கோணங்களிலிருந்து நீங்கள் எழுதியுள்ளீர்..
எப்படி எனது பின்னூட்டங்களிடுவது என்று திக்குமுக்காடுகிறேன், இது சத்தியம்!
கம்பரையும், கலாமையாவையும், தாகூர் ஐயாவையும் ஒரே நேரத்தில் சந்தித்துப் பேச எனக்கிருந்த ஆசை உங்களின் வலைப்பு நிறைவேற்றியது.
நெஞ்சார்ந்த நன்றிகள் பல
வாழ்த்த வயதோ அனுபவமோ அடியேனுக்கு இல்லை
ஆதலால்…
வணங்கி மகிழ்கிறேன்.
பாசமுடன்
என் சுரேஷ்
respected sir
i came to know about ur site through my friend
last day i red ur articles i don’t have word to express my feelings
also don’t have the age to wish u. really i am proud to read ur articles.
thank u
பாராட்டுக்கு நன்றி நண்பரே
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
Wonder ful web site I take some note thanks sir
mr.Dr.Kalam is wonderful gift of India. He is Example of yongest generation, he is very powerfulman of india.
mr.Dr.kalam is wonderful man of the world. i love very much. Wonderful website i take some notes. Thank you sir.
Dear Friend Senthil,
Dr. Abdul Kalam is a true Patriot & a real Visionary like Mahatma Gandhi & Pandit Nehru who really built up this great country India to shine among the world nations.
Regards,
S. Jayabarathan
I love abdul kalam sir he is the best example in new generation inculding me
hello
proudly can say i was born from tamil nadu where my great legend dr.a.p.j.abdul kalam born. because of his basement youth pillar like us stand strongly. and challenging developed nation without any fear
என் இனிய தமிழனே!
வாழ்த்துக்கள் பல……..
அகிலமே நிமிர்ந்து பார்க்க செய்திருக்கிறாய். மாமேதையே
வாழ்த்துக்கள்… வாழ்த்துக்கள்…
வாழ்த்த வயதுதான் இல்லை ஆனால் உள்ளம் உள்ளது. ஆகவே தான் அகில உலக மனிதர்களின் உள்ளங்களை கொள்ளைக் கொண்டீர்கள்
அன்புடனும்-மரியாதையுடனும்
எம்.ஆர்.டேவிட்ராஜ்
அன்புள்ள நண்பர் டேவிட்ராஜ்,
கனிந்த பாராட்டுக்கு எனது பணிவான நன்றி.
பாரத நாட்டுக்குப் புத்துயிர் அளித்துப் பாரிலே முன்னிறுத்திய மகாத்மா காந்தி, பண்டித நேரு பரம்பரையில் பிறந்த தேசீயப் புதல்வர் டாக்டர் அப்துல் கலாம்.
நட்புடன்,
சி. ஜெயபாரதன்
I love Dr. A.P.J Abdul Kalam sir . . He is an example of youngest generation.. I love Abdul kalam sir so much..
Dear Yamunadevi,
We must be all proud of having a Living Rocket Scientist Dr. Abdul Kalam who comes in the tradition of Mahatma Gandhi, Pandit Nehru, Dr. C.V. Raman, The Atomic Scientist Dr. Homi Bhabha, Space Pioneer Dr. Vikram Sarabhai & Mathematician Ramanujan who are the building blocks of our great country India.
Kind Regards,
Jayabarathan
I Like So Much For APJ Abdul Kalam.
Its like you read my mind! You appear to grasp so much approximately this, such as you wrote the guide in it or something. I believe that you just could do with some percent to power the message home a little bit, however other than that, this is magnificent blog. A great read. I will certainly be back.
Pingback: பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய் | நெஞ்சின் அலைகள்
Pingback: பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய் | திண்ணை