யாரந்த நீதிபதி ?

சி. ஜெயபாரதன், கனடா

cover-saddams-death.jpg

எவன் உங்களில் தூயவன்,
அவன் மட்டும்
முன்வந்து
இந்தக் கல்லை எடுத்து
வேசியின் மீது
வீசட்டும் என்று
ஏசு பெருமான்
வேண்டிக் கொண்டார்!
வெள்ளை மாளிகை வேந்தர்
பேரழிவுப் போராயுதம்
வேராக உருவாக்கி விழுதாக்கி
விற்றுப் பணமாக்கி
நேராகப் பிணமாக்கும்
பேராற்றல் பிதா,
ஆயிரம், ஆயிரம்
பிரளயக் கணை பெருக்கி
பிறருக்குப்
பாதை காட்டிய
பார்த்த சாரதி!
ஹிரோஷிமா, நாகசாகி மீது
கோரக்
குண்டுகள் வீசியப்
பூதப் பேரரசு!
துச்சக் காசுக்கு
நச்சு வாயுப்
பிச்சு வாக்களை
சதாமுக்கு விற்ற நண்பன்!
வியட்நாம் மாந்தர் மேல்
விஷ வாயு
வில்லைகளை
விமானத்தின் மூலம் கொட்டிய
விடுதலைக் காப்பாளிகள்!
இந்த அரக்க வம்சம்
எப்படிக்
கட்டளை இடலாம்,
கயிற்றைக் கொடுத்துச்
சதாம்
கழுத்தை நசுக்க?

***********

15 thoughts on “யாரந்த நீதிபதி ?

  1. அன்புள்ள ஜெயபாரதன்,

    தமிழ்மணத்தில் உங்களைக் காண மகிழ்ச்சி! தமிழ்மணத்தில் அன்றாடம் உலவும் ஏராளமான தமிழ்ப் பதிவர்களும் வாசிப்பாளர்களும் உங்கள் ஆக்கங்களாலும் அறிவியல் கட்டுரைகளாலும் பயனடையும் நாள் இதோ விரைவில்!

    அடுத்த கட்டமாக, உங்கள் வலைப்பதிவுகள் ஒவ்வொன்றும் புதிய இடுகைகள் பட்டியலில் வரச் செய்யலாம். ஒவ்வொரு பதிவையும் எழுதியபின்னும், தமிழ்மணம் முகப்பில் சிவப்பு நிறத்தில் தெரியும் “யு.ஆர்.எல். இடுக” என்பதன் அருகில் உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பூ முகவரியான https://jayabarathan.wordpress.com என்பதை இட்டு “அளி” என்ற பொத்தானை அழுத்தி ஒவ்வொரு இடுகையையும் வகைப்படுத்தினால் (category தெரிவு செய்தால்) இந்தக் கட்டம் வெற்றி பெறும். அனைவரையும் சென்றடையும்.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    சேதுக்கரசி

  2. வலைப்பதிவுலகிற்கு வந்தமைக்கு வரவேற்புகள்!

    தெளிவான கேள்வி! என்றாவது ஒரு நாள் பதில் சொல்லித்தானாக வேண்டும்!
    அதுவரை உலகத்தோரை விட்டுவைக்க எண்ணமிருப்பதாக தெரியவில்லை!

  3. அன்பு ஜயபரதன் வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.சில நாடுகள் தம்மிடம் இருக்கும் அழுக்கைத் துடைக்காமல் மற்றவர்களின் அழுக்கைக் கண்டு தண்டனையும் கொடுக்கிறார்கள் மனது
    வருந்துகிறது அன்புடன் விசாலம்

  4. I really enjoyed reading the history of personalities and their unique contributions. I have known the author for a long time. He has proved that creativity has no limits. V.P.Velu

  5. I was very happy to search out this web-site.I wanted to thanks in your time for this glorious learn!! I definitely having fun with every little bit of it and I have you bookmarked to check out new stuff you weblog post.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.