விடியாத குடியாட்சி .. !

Indian Flag -1

சி. ஜெயபாரதன், கனடா

 

நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம்

கண் விழிக்க இன்னும்

விடி வெள்ளி எழ வில்லை !

முடிய வில்லை  இருளாட்சி !

பொருளாட்சி ஆக்கும் 

பூதப் பண முதலைகள்

மடிக்குள் வெடி மறைத்து

நடக்குது மதப்போர் !

ஏர் முனைகள் வளைக்கப் பட்டு

வாள் முனைகள் ஆயின !

கார்மேகம் இப்போ தெல்லாம்

கரியமிலம் பொழிகிறது !

 

பாரதப் பண்பாடுகள் யாவும்

நாராய்க் கிழிந்து,

வேர்கள்

கீழ்நோக்கிப் போகாது

மேல் நோக்கித் துளைக்கும் !

ழுத்தாணிகள் ஆடை நீக்கி 

ஒழுக்கம் தவறிக்

குத்தூசி களாய்க் கோலமிடும் !

பத்திர காளியின் கைச் சூலாயுதம்

பக்தரின் கைவசம் மாறும் !

பல்கலைக் கழகங்கள் வணிகச் சந்தையாய்

பண வேட்டை ஆடும்.

வேலை கிடைக்குது

கப்பம் ஒரு லட்சம் கட்டினால் !

 

கீழ் ஜாதியார் உயர் நிலைக்கு ஏறி

மேல் ஜாதி ஆகவில்லை !

மேல் ஜாதியார் கீழ் நிலைக்குப் போய்

தாழ்வு பெற்றார் !

கணினிப் பொறி வர்த்தகப் பணிகள் 

ஆயிரக் கணக்கில் பெருகி

ஏழையர், செல்வந்தர்

வேற்று மைகள் பன்மடங்கு

ஏறிப் போச்சு !

நடிப்புக்கு மதிப்பளிக்கும்

நாட்டில்

படிப்புக்கு மதிப்பில்லை !

 

மருத்துவம் பணப் பட்டம் ஆனது !

உயிர்களுக் கில்லை மதிப்பு !

உன்னைப் பெற்ற அன்னையோ  

உடன் பிறந்த தங்கையோ

நாட்டில் தனியாக

நடந்து செல்ல முடியாது  !

கருவிலே உருவாகும்

பெண் சிசுவுக்கு

மரண தண்டனை பிறப்ப தற்கு முன்பே !

பாரத மணிக்கொடி

நாராய்க் கிழிந்து போய்ப் பறக்குது !

விடியாத சுதந்திர சூரியன்

அத்தமிக்குது !

குடியாட்சியைத் தைப்பதா ?

முடிப்பதா ?

 

+++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com] (January 26, 2016) 

One thought on “விடியாத குடியாட்சி .. !

  1. Honest Officers are often transferred. Court cases-civil cases are not finalised by Judiciary in time. some cases takes usually 15-30 years. Defamation cases are filed against media and news papers. Indians had already been slave for 1000 years. Just we got independence by Gandhiji. If we play wrongly we will loss everything.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s