சி. ஜெயபாரதன், கனடா
புத்தாண்டு பிறந்து இப்போ
தத்தித் தவழுது ! தவறி விழுகுது !
நடந்து நிற்கப் பார்க்குது !
கடந்த ஆண்டு மறைந் தாலும்,
தடம் இன்னும் தெரியுது !
வித்தைகள் தொடருணும் !
விஞ்ஞானம் சீராய்த் தழைக்கணும் !
சித்தர்கள் தலை தூக்கணும் !
பித்தர்கள் தெளி வாகணும் !
புத்திகள் கூர்மை ஆகணும் !
யுக்திகள் புதிதாய்த் தோன்றணும் !
சண்டைகள் குறையணும் !
ஜாதிகள் கைகோர்த்து வாழணும் !
சமய இனத்தவர் ஒன்றாய் வசிக்கணும் !
பெண்களைக் கண்கள் போல் காக்கணும்.
பொரி உருண்டை ஆச்சு பூத உலகு !
திறமைகள் ஒன்றாகி வலுக்கணும்
வறுமை குன்றி வருவாய் பெருக்கணும்.
மின்சக்தி பெருகி ஆலைகள் ஓடணும்.
வேலைகள் பெருகணும்.
கூலிகள் கூடணும்.
வேளாண்மை விருத்தி ஆகணும் !
பஞ்சம் குறைந்து மிஞ்சி விளையணும் !
லஞ்ச மனிதர் அஞ்சி ஒடுங்கணும் !
நீர்வளம், நிலவளம், சூழ்வெளி
துப்புரவு செய்யணும் !
விடுதலை நாடு சீராய்த் தழைக்க,
கடமைகள் முடிக்கணும்;
கல்விக் கூடங்கள் பெருகிச்
செல்வக் கூடம் ஆவதைத் தடுக்கணும்.
நாட்டுப் பொறுப்பை நாமே ஏற்கணும் !
தேசப் பற்று நமக்குள் ஊரணும் !
தேச விருத்தி குறிக்கோள் ஆகணும் !
தேச மக்கள் நேசம் பெருகணும் !
++++++++++++
jawahar premalatha
அற்புதமான கவிதையொன்றை படைத்துப் புத்தாண்டை வரவேற்றுள்ளீர்கள். கவியுள்ளம் காண விழையும் உலகம் விரைவில் மலரட்டும். தங்கள் கனவு நிறைவேறட்டும். தங்கள் கவி மழையும் தொடர்ந்து பெய்யட்டும்.இன்னும் பல்லாயிரம் புத்தாண்டுக் கவிதைகள் தாங்கள் படைக்க இறைவனருள் நிறையட்டும்.தேச மக்களின் மீதான தங்களின் நேசம் அவர்களுக்கும் புரியட்டும்.
பிரமேலதா
பாராட்டுக்கு மிக்க நன்றி பிரேமலதா.
சி. ஜெயபாரதன்
Dear Jay, We wish you a healthy new year . Your poem really illustrates the dream of many people around the planet. We hope that at least few of them will materialize.