நியூட்டன் படைப்பு விதிகள்

image.png

சி. ஜெயபாரதன், கனடா

*******

பிரபஞ்ச பெருவெடிப்பு 

நியதி 

பிழையாகப் போச்சு !

ஒற்றைப் புள்ளி மூல முடிச்சு

துவக்கம்

எப்படி அவிழ்ந்தது ?

தானாய்,  

உள்ளியங்கி வெடித்தது

எப்படி

நியூட்டன் புற இயக்கி 

ஏதும் இல்லாமல் ?

ஊதிப் பெருகும் பிரபஞ்ச

பலூன் 

ஊசி குத்தி

பஞ்சர் ஆகிப் போச்சு ! 

நியூட்டன் விதிகளை மீறிய 

பெரு வெடிப்பு

நியதி

பியூட்டி இழந்து போச்சு !

ஒற்றைத் திணிவை

உடைக்க முதல்

புற இயக்கி எங்கே ?

உள்வெடிப்பை உந்து வதற்கு 

புற இயக்கி எங்கே ?

பிரபஞ்சம் உருவாக நூற்றுக்கும்

மேலான

மூலகங்கள், பல்கோடி  

மூலக்கூறுகள் 

பெருகி பிணைக்க

அக இயக்கிகள் எங்கே ?

பயிரினம்

பல்கோடி உயிரினம் தோன்ற

உயிரியக்கி எங்கே ?

இயற்கை வினைப்பாடு தொடர 

தேவை யான,

பேராற்றல்  ஊட்டும்

பிரமாண்ட புற இயக்கி எங்கே ?

படைப்பு விதிகள்

ஆக்கிய

நியூட்டன் ஏற்க மாட்டான் !

பெரு வெடிப்பு நியதிக்கு

வித்தில்லை,  ஆணி

வேரில்லை ! 

விதையும் இல்லை !

*************