நரபலி நர்த்தகி ஸாலமி

Solame Cover

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)
(Based on Oscar Wilde’s Play Salome)
(1854-1900)

சி. ஜெயபாரதன், கனடா

காட்சி -1 பாகம் -1

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=VJi8xd38zwE

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IyREn1-mCec

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=czi6qt9s_qg ]

‘கலைஞன் அழகு வடிவங்களின் படைப்பாளி. கலையின் குறிக்கோள் கலைஞனை ஒளித்து வைத்துக் கலைத்துவக்குக் காட்சி தருவது. எழில் படைப்புகளில் அவலட் சணத்தைக் காண்போர் நளினமற்ற கள்ளத் தனம் பெற்றவர்! அவ்விதம் காண்பது தவறு. அழகு வடிவுகளில் எழிலைக் காண்பவர் அனைவரும் நாகரீகப் பண்பாளர். எந்தக் கலைஞனும் எதையும் நிரூபிப்ப தில்லை! எந்தக் கலைஞனுக்கும் ஒழுக்க நெறி மீது பரிவு கிடையாது! கலைஞன் எதையும் வடித்துக் காட்ட முடியும். எல்லாக் கலைகளும் ஆழமற்று அறிவிக்கும் மேல்முகப்புச் சின்னங்களே! எல்லாக் கலைகளும் அறவே பயனற்றவை! ‘

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

image (6)

எழுத்தாள மேதை:

ஆஸ்கர் வைல்டின் வரலாறு

எழுத்தாள மேதை ஆஸ்கர் வைல்டு டப்ளின் அயர்லாந்தில் (அக்டோபர் 16, 1854) பிறந்து, பெர்னாட்ஷா வாழ்ந்த காலத்தில், கவிதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதிப் புகழ் பெற்றவர். கலைப் படைப்பு கலைத்துவப் பண்புக்கே (Art for Art ‘s sake) என்னும் நியதியில் காவியங் களைப் படைத்தவர் ஆஸ்கர் வைல்டு. அறிவு நூல் களஞ்சியங்கள் பலவற்றைப் படைத்து, இலக்கிய நகைச்சுவை ததும்பும் நாடகங்கள் எழுதிய நாகரீகக் கலைஞர் அவர். டப்ளின் டிரினிடி கல்லூரியிலும், ஆக்ஸ்போர்டு மெக்தாலன் கல்லூரியிலும் மேன்மையுடன் கற்று முதல் வகுப்பில் தேறி B.A. பட்டம் பெற்றவர். நடை, உடை, கலை யுணர்ச்சி ஆகியவற்றில் சற்று முரணான திரிந்த புத்தியும் கொண்டவர் அவர். வால்டர் பீட்டர், ஜான் ரஸ்கின் ஆகியோரின் அழகுணர்ச்சிக் கலை நயங்களில் ஆழ்ந்த பற்றும், ஆர்வமும் கொண்டு அவரது படைப்புக்களால் ஊக்கப் பட்டவர்.

அவரது முதல் வெளியீட்டுக் கவிதை நூல் (1881) பேரளவில் வரவேற்கப் பட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்கா சென்று உரையாற்றினார். அங்கு தான் அவரது நாடகம் வீரா [1883] படைப்பானது. 1884 ஆம் ஆண்டில் கான்ஸ்டன்ஸ் லாயிட் என்னும் மாதை மணந்து அவர்களுக்கு சிரில், விவியன் [Cyril, Vyvyan] என்னும் இரண்டு புதல்வர் பிறந்தனர். பிறகு 1891 இல் கோமகனார் ஆர்தர் ஸாவில்லின் குற்றம், மற்ற கதைகள் [Lord Arthur Savile ‘s Crime & Other Stories], 1888 இல் பூரித்த இளவரசன் [The Happy Prince], 1891 இல் முதல் நாவல்: டோரியன் கிரேயின் படம் [The Picture of Dorian Gray], 1892 இல் மாதுளைகளின் மாளிகை [The House of Pomegranates] ஆகியவை பின்னால் வந்த அவரது கதைப் படைப்புகள்.

ஆஸ்கர் வைல்டின் கதைகளும், கட்டுரைகளும் பலரால் மிகவும் பாராட்டப் பட்டன. அவரது உன்னத ஆக்கத் திறமை அவர் எழுதிய நாடகங்களில் வெளிப் பட்டது. லேடி விண்டர்மியரின் விசிறி [Lady Winermere ‘s Fan (1892)], படுவாவின் கோமகள் [The Duchess of Padua (1892)], ஸாலமி [Salome (1893)], ஏது மதிப்பில்லா ஒரு மாது [A woman of No Importance (1893)], ஒரு பரிபூரணக் கணவன் [An Ideal Husband (1895)], மகத்தான படைப்பாகக் கருதப் படும், மெய்யுறுதியின் முக்கியம் [The Importance of Being Earnest (1895)] ஆகியவை ஆஸ்கர் வைல்டு எழுதிய அரிய நாடகப் படைப்புகள். ஆஸ்கர் வைல்டு அக்கால மாந்தர் வெறுக்கும் ஓரினப் பாலுறவு முறைகளில் ஈடுபட்டு, குற்றம் சாட்டப்பட்டு (1895) ஈராண்டுகள் சிறையில் தள்ளப் பட்டார். அப்போது அவர் தன்னரிய பெயரையும், புகழையு மிழந்து சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டார்! சிறையில் உள்ளபோது அவர் எழுதிய சிறை அனுபவக் கவிதைப் படைப்பு, ‘சிறை அனுபவப் பாடல் ‘ [The Ballad of Reading Gaol] என்னும் நூலில் 1898 ஆம் ஆண்டில் வெளியானது. இங்கிலாந்தில் தீண்டப்படாத மனிதராய் ஒதுக்கப்பட்டு நிதிவசதி யில்லாமல் நோய்வாய்ப் பட்டு பிரான்ஸில் கடைசிக் காலங்களைக் கழித்து 1900 நவம்பர் 30 இல் ஆஸ்கர் வைல்டு காலமானார்.

image (4)

ஜொஹானன், புனித நீராட்டி ஜான்

பைபிள் வரலாற்று நூலில் கூறப்படும், புனித நீராட்டி ஜான் [Prophet: John, The Baptist] யூதப் போதகரின் மரணத்தைப் பற்றிய ஓரங்க நாடகம், ஸாலமி. ஜொஹானன் என்று அழைக்கப்படும் ஜான், கி.பி. முதல் நூற்றாண்டில் ஏசு நாதர் காலத்தில் தோன்றி, ஏசு பெருமானுக்குப் புனித நீராட்டப் பிறந்த தீர்க்க தரிசியாகப் புதிய நெறிவாக்கில் [New Testament] காணப் படுகிறது. மிகவும் பயங்கரமாகக் கொடூர முறையில் கொலை செய்யப் பட்ட, யூத மதஞானி ஜானின் நாடகம் ஸாலமியை, முதலில் ஆஸ்கர் வைல்டு பிரெஞ்ச் மொழியில் எழுதினார். 1894 இல் அதன் ஆங்கில வசனம் எழுதப் பட்டது. ஆனால் ஸாலமி முதன்முதல் பெர்லினில் 1903 ஆண்டு அரங்கேறியது! நாடகம் அங்கே வரவேற்கப் பட்டு 200 தடவைகள் காட்டப் பட்டது. ஆனால் அந்த அரிய நாடகத்தை ஆக்கிய ஆசிரியரான ஆஸ்கர் வைல்டு ஒருதடவை கூட, அப்போது காண அவர் உயிரோடு வாழவில்லை!

********

நரபலி நர்த்தகி ஸாலமி
(ஓரங்க நாடகம்)

காட்சி -1 பாகம் -1

நாடக நபர்கள்

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டு மன்னன்

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி
ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.
(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)
ஜொஹானன் (Johanan): புனித நீராட்டி, ஜான்
ஏரோதியாஸின் சேடியர், காவலர்
ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்
சேனைக் காவலர்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

image (9)
ஜொஹானன்,  புனித நீராட்டி ஜான்

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் அரச மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [புனித நீராட்டி, ஜான்] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

image (7)
John baptizing Jesus

*******************************

ஸிரியா வாலிபன்: மேலே என்னைக் கவரும் நிலவின் முகம் எப்படிக் கீழே தெரிகிறது! பொங்கி வரும் பெரு நிலவா ? புது நிலவா ? பொன்னிலவா ? எந்த நிலா எழிலாக உள்ளது ? கீழே உலவும் உயிருள்ள நிலவா ? அல்லது மேலே நகரும் உயிரில்லாத நிலவா ? உயிருள்ள நிலவைத்தான் என் ஆத்மா நாடுகிறது! ஸாலமி! ஸாலமி! ஸாலமி! எங்கிருந்து உனக்கு இத்தனை அழகு இன்று வந்தது ? என்னிரு விழிகள் இமை தட்டாமல் உன்னைத்தான் நோக்கிய வண்ணம் உள்ளன! என் நெஞ்சம் என்னை விட்டுப் போய் உன்னிடம் அடைக்கல மாகிறது! என்னுயிர் உனக்காக நீங்கவும் எத்தனிப்பு செய்கிறது! இதோ பார், என்னை! எல்லா வற்றையும் உனக்காக அர்ப்பணித்துக் கற்சிலையாய் நிற்கிறேன் கவர்ச்சி அணங்கே! திரும்பிப் பார் என்னை! ஒருமுறை பார் என்னை! ஸாலமி என் கண்மணி!

image (8)

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியைப் பார்க்காதே! அது ஓர் சுறாமீன்! காதல் புரிவதற்கு ஏற்ற மாதில்லை அவள்! முழு நிலாவைப் பார்த்தால் உனக்குப் பெண்ணைப் போல் தெரிகிறது! ஆனால் சற்று கூர்ந்து பார்! அடிவானில் பரிதி சிந்திய செந்நிறக் குருதி, வானத்தின் மீது தெறித்துள்ளது! பார்த்தாலே எனக்குப் பயமாகத் தோன்றுகிறது! ஏதோ கேடு வரப் போகிறது! ஏனோ இன்று விசித்திரமாகத் தெரிகிறது எனக்கு! பிரேதக் குழியிலிருந்து எழுவது போல் நிலா தலை நீட்டுகிறது! செத்த பெண் போல விழுந்து கிடக்கிறது, நிலா! சாகும் பிறவியை நோக்குவது போல் விழிக்கிறது சந்திரன்! கேதம் விசாரிக்க வரும் பேதை மாதைப் போல் சோகமாய் உள்ளது நிலா! உனக்குத் தெரிய வில்லையா ?

ஸிரியா வாலிபன்: எனக்கு அப்படித் தெரியவில்லை! ஸாலமி ஓர் திமிங்கலம் என்றாலும் நான் அஞ்சப் போவ தில்லை! விசித்திரப் பார்வை வெண்ணிலவுக் கில்லை! ஆனால் ஸாலமியின் வேங்கை விழிகளில் ஏதோ வேதனை தெரிகிறது! தனிமையின் கனலில் வேகிறாள் ஸாலமி! அது காதலைத் தேடும் வேதனை! கன்னிப் பெண்டிர் நெஞ்சில் கனல் பற்றி எரியும் வயதல்லவா, ஸாலமிக்கு ? அவளது விழிகள் மேலே நாடும் என்னை நோக்காமல் கீழே ஏன் சுற்றித் திரிகின்றன ? என்னை விடக் கம்பீரமான ஆடவர் மீது அவள் விழிகள் அம்புகளை ஏவுகின்றன! ஸாலமியின் கண்கள் நர்த்தனம் ஆடிப் பிறரை மயக்குகின்றன! கண்கள் வலைவீசி ஆண்களைப் பிடிக்க ஓடுகின்றன! என்னைப் பார்த்தும் பாராததுபோல் ஸாலமி நடிக்கிறாள்! அவள் கண்களின் பட்டொளி படாத ஆயிரம் பேரில் நானும் ஒருவன்!

image (1)

ஏரோதியாஸின் காவலன்: செத்த நிலவை மெதுவாகத் தூக்கி வருவது போல், மேகங்கள் ஏந்தி வருகின்றன, பார் வாலிபனே! ஏதோ கேடு விளையத்தான் வானத்தில் அப்படித் தெரிகிறது!

முதல் படையாளி: [கீழே விருந்து மாளிகையில் ஆரவாரம் கேட்கிறது] என்ன ஆரவாரம் அது! யார் போடும் கூக்குரல் அவை ? கேடு விளைவது கீழேயா அல்லது வானத்தின் மேலேயா ?

இரண்டாம் படையாளி: குடி குடித்தவர் குடில் அழிவது இடியிலே என்பது பழமொழி! குடிகாரக் கோமான்கள் போடும் கூத்தாட்டம் அவை! யாரென்றா கேட்கிறாய் ? அவர்கள் யூதர்! சிலர் பார்ஸிக்காரர், சிலர் சாதுஸீக்கள்! ஏசு கிறிஸ்துவை சிறிதும் நம்பாதவர்! ஏசு நாதர் தேவ தூதர் அல்லர் என்று புறக்கணிப்பவர்! மூச்சு விடாமல் மதச் சண்டை போடு வதில் வல்லவர்! யூதப் போதகர் ஜொஹானன் தெருவில் நின்று ஞான உரையாற்றினால், செவிகளை மூடி வீட்டுக் கதவைச் சாத்துபவர்!

முதல் படையாளி: யூதர் எதற்காக மதச் சண்டை போடுகிறார் ?

image (2)

இரண்டாம் படையாளி: எனக்குத் தெரியாது! எப்பவும் அவர்களுக்குள் சண்டைதான். கேட்பது எதனையும் ஆழ்ந்து கேட்காது மேலாகக் கேட்டு, விதண்டா வாதம் செய்பவர்! பார்ஸிக்காரர் மேலோகத் தேவதைகள் இருப்பதை நம்புகிறார்! ஆனால் சாதுஸீக்கள் தேவதைகளே கிடையா தென்று அவருடன் சண்டை செய்வார்! இப்படி தெரியாத ஒன்றை வைத்துச் சண்டை போடுவது வேடிக்கையாகத் தோன்றுகிறது எனக்கு.

ஸிரியா வாலிபன்: சண்டையால் பயனில்லை! பார்க்கிறேன் நிலவை! நோக்குவேன் ஸாலமியை! நெஞ்சில் அவள் அழகைப் படமெடுத்து நீண்ட நேரம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன்! தூங்காமல் இரவு வேளைகளில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறேன்! பகலில் நேரே அவளைப் பார்த்து மீண்டும் நெஞ்சில் படமெடுத்துக் கொள்கிறேன்!

image (5)

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! நீ பகலிரவு தூங்காமல் ஸாலமியை நினைத்துக் கொண்டே கிடந்தால், சிறிது நாட்களில் பைத்தியமாய்த் தெருவில் சுற்ற ஆரம்பித்து விடுவாய்!

ஸிரியா வாலிபன்: அப்பனே! எப்போதும் அவளை நினைக்கும் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும்!

ஏரோதியாஸின் காவலன்: ஸாலமி ஓர் அரச குமாரி! இளவரசி! நீ ஓர் குடிசைவாசி! நீ எங்கே ? அவள் எங்கே ? எப்போதும் நீ அவளையே பார்க்கிறாய்! அப்படி அவளை நீ இச்சையுடன் பார்ப்பது தவறு! நல்ல வேளை! நீ இன்னும் அந்த முற்றிய நிலைக்குப் போக வில்லை! பைத்தியம் முற்றுவதற்குள் கற்றுக்கொள் வாலிபனே! ஒரு பெண்ணை அப்படி உற்றுப் பார்ப்பது தவறு! பட்டும் படாமலும் பார்த்து அகல வேண்டும்!

image (3)

ஸிரியா வாலிபன்: நான் ஸாலமியைப் பார்ப்பது ஏன் தவறு ? நான் திருமணம் ஆகாத வாலிபன்! ஸாலமியும் மணமாகாத எழில் மங்கை! எழிலரசியை ஏழை ஆயினும் பார்ப்பது ஏன் தவறு ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் தின்று விடுவது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே, அது நியாயமா ? அதுதான் தப்பு! ஸாலமி மனைவியின் மகள்! ஸாலமி மாற்றாந் தாயிக்குப் பிறந்த சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயோதிகரான ஏரோத், தம்பி மகள் மீது வைத்த விழி வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு! நான் பார்ப்பது தவறில்லை!

ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகை மீது நின்று கொண்டு, அரசர் விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி உன் கையிலே கொடுத்து விடுவேன்.

[காட்சி-1, பாகம்-2]

****
தகவல்:

Picture Credits : Salome The Richard Opera By Richard Strauss DVD

1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
3. The Desire of Ages By: Ellen G. White
4. The Story of Jesus By: Reader ‘s Digest (1993)
5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader ‘s Digest (1994)
6. The New Testament & Psalms, Placed By the Gideons.
7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
8. http://www.ncregister.com/blog/jimmy-akin/who-was-john-the-baptist-11-things-to-know-and-share [August 28, 2013]
9. http://en.wikipedia.org/wiki/Beheading_of_St._John_the_Baptist
10. http://en.wikipedia.org/wiki/John_the_Baptist
11. http://www.pravoslavie.ru/english/52051.htm

12. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=VJi8xd38zwE

13.  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IyREn1-mCec

*********************

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)
(Based on Oscar Wilde’s Play Salome)
(1854-1900)

சி. ஜெயபாரதன், கனடா

காட்சி -1 பாகம் -2

Oscar Wilde -1

‘கலைத்துவப் படைப்புகளில் ஒழுக்க நூல், ஒழுக்கம் தவறிய நூல் என்பது கிடையாது!  நூல் முறையாக எழுதப் பட்டது அல்லது முறையற்று எழுதப் பட்டது என்றுதான் குறிப்பிடப் படும். அவ்வளவுதான். கலைஞன் தான் பின்பற்றும் நெறி வாழ்க்கை எனப்படுவது அவனைச் சார்ந்து தனித்துவம் கொண்டது.  ஆனால் கலையின் நெறிமுறை குறைபாடான ஓர் ஊடகத்தின் மூலம் பூரணத்துவப் பயன்பாட்டைப் பெற எதிர்பார்க்கிறது!  எந்தக் கலைஞனுக்கும் நெறித்துவம் மீது இரக்கம் கிடையாது.  கலைஞனிடம் உள்ள ஒழுக்கவியல் பரிவு மன்னிக்க முடியாத ஓர் எழுத்து நடைப் பண்பாடு! கலைஞன் எவனும் மனக் கோளாறுடன் எப்போதும் இருப்ப தில்லை! எதையும் அவன் தனது மொழியில் படைத்துக் காட்ட முடிகிறது. சிந்தனையும், மொழியும் கலைஞனின் இரண்டு கலையாக்கக் கருவிகள்.

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

Baptizing Jesus

ஏசுவுக்குப் புனித நீராட்டும் ஜான் 

கலைப் படைப்புக்கு நற்பண்பும், துர்க்குணமும் கலைஞனின் இருகைச் சாதனங்கள்.  கலை வடிவ ஆக்கங்களை ஆழ்ந்து நோக்கினால், எல்லாத விதக் கலைகளும் ஓரிசை ஞானியின் கலைத்துவப் படைப்புகளை ஒத்தவையே.  கலைத்துவம் உண்டாக்கும் உணர்ச்சியை நோக்கினால், அது நடிகனின் நடிப்புத் திறனைப் போன்றதுவே!  அனைத்துக் கலைகளும் தோற்றத்தில் பளிச்செனக் கவரும் வெளிப்பகட்டுச் சின்னங் களே!   அவற்றின் அடித்தளத்தில் மூழ்கி ஆய்ந்திடுவோர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார். சின்னங்களை மட்டும் படித்து அறிபவரும் விபத்தில் மாட்டிக் கொள்வர்!  கலைத்துவப் படைப்பு ஒன்றின் மீது பலவித முரண்பாடான கருத்துகள் எழுந்து எறியப் பட்டால் அந்தப் படைப்பு புதிதானது, சிக்கலானது, முக்கியமானது என்று குறிப்பிடலாம்! கலைத்துவம் காட்டுவது வாழ்க்கை யன்று; அது காண்பவர் பிம்பத்தைக் காட்டும் காட்சிக் கண்ணாடி!

ஆஸ்கர் வைல்டு, நாவல் முன்னுரை (The Picture of Dorian Gray)

John the Baptist -1

புனித நீராட்டி ஜான் ஏரோத் மன்னர் முன்

பாவங்களை விலக்கிப் புனித நீராடுவீர்!

தேவன் உமது பாவத்தை மன்னிப்பார்!

தயாரித்து வைப்பீர், பிரபுவின் பாதம்பட!

யாரோ ஒருவர் சாலையில் முழக்குவார்!

நேராக்குவீர் பயணத்துக் கேற்ற பாதைகளை!

நிரப்புவீர் பள்ளத்தை! தணிப்பீர் மேடுகளை!

நேர்பாதை ஆக்குவீர், நெளிந்து போனதை!

கரடு முரடான பாதை வழுவழுப் பாகட்டும்!

காண்பர் அனைத்து மாந்தரும்,

கடவுளின் பாவத் தீர்ப்பு!

++++++++++++

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்)

காட்சி-1, பாகம்-2

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

John preaching

John the Baptist Preaching the Public.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகை யில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக் கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

**************

ஸிரியா வாலிபன்: ஸாலமியை நான் கண்களால் பார்ப்பது ஏன் தவறு ? திருமணம் ஆகாத வாலிபன் நான்! ஸாலமியும் மணமாகாத ஓர் எழில் மங்கை!  நானோர் ஏழை ஆயினும் எழிலரசியைப் பார்ப்பது தவறா ? அதோ திருமணம் செய்த ஏரோத் மன்னர் கொத்தித் தின்பது போல் ஸாலமியைப் பார்க்கிறாரே அது மட்டும் நியாயமா ? அதுதான் தவறு! ஸாலமி அவரது குருதியில் முளைக்காத புதல்வி! மாற்றான் ஒருவனுக்கும், அவர் மனைவிக்கும் பிறந்த வேற்றுப் புத்திரி! ஸாலமி மாற்றாம் தாய் வயிற்றுச் சகோதரனின் மகள்! ஸாலமியை விட மூன்று மடங்கு வயது மூத்த ஏரோத், தனயன் மகள் மீது வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாரே அதுதான் தவறு!  நான் பார்ப்பது நேர்மையானது.  அதில் ஏதும் தவறில்லை. ஸாலமியை நான் மனதார நேசிக்கிறேன்! ஏரோதின் காமக்கனல் விழிகள் அவரது உடற்பசிக்கு ஓர் இளமானைத் தேடுகின்றன!

John the Baptist in Jail

ஏரோதியாஸின் காவலன்: [கோபமாக] வாயை மூடடா வாலிபனே! கன்னத்தில் அறைந்து விடுவேன்! அரசர் மாளிகையில் இருந்து கொண்டு, அரசர் அளித்த விருந்தைச் சுவைத்துக் கொண்டு, அரசரையே குறை சொல்கிறாயா ? மூடனே! ஓடிப்போ! ஸாலமியை முறைகெட்டுப் பார்க்கும் உன்னிரு விழிகளைப் பிடுங்கி வீதியிலே வீசி விடுவேன்.

முதற் காவலன்:  அதோ பார்! கணவர் வைத்திருக்கும் கிண்ணத்தில் மதுவை நிரப்புகிறார், மகாராணி!  நிரம்பக் குடித்து நிலை தடுமாறி நெளிகிறார் மன்னர்! மதுக்கிண்ணம் மட்டும் எப்படிக் கையிலிருந்து தவறி விழாமல் உள்ளது ?

கப்பதோசியன்: யார் மகாராணி, தெரியவில்லையே ? தங்கக் கிரீடம் தலையில் மின்னும் மாதா ? முத்து மாலை மார்பில் ஊஞ்சலாடும் முதிய மாதா ? கூந்தலில் நீலப் பொடியைத் தூவி யிருக்கும் கோமகளா ?

John baptizing Jesus

முதற் காவலன்: ஆம், ஆம் அந்த கோமகள்தான் நாட்டரசி! கலிலீ நாட்டின் ஆளுநர் ஏரோதின் இரண்டாம் மனைவி! புள்ளிமான் போல் அங்குமிங்கும் துள்ளிக் கொண்டு அனைவர் விழிகளையும் ஈர்த்துக் கொண்டிருப்பவள்தான் வாலிப எழில் இளவரசி ஸாலமி!  கோமகளின் ஏக புத்திரி! ஆனால் ஸாலமியின் நிஜத் தந்தை ஏரோத் மன்னரில்லை!

இரண்டாம் காவலன்: ஏரோத் மன்னருக்கு ஒயின் என்றால் உயிர்!  அவர் எத்தனை வகையான திராட்சை ரசம் சுவைப்பவர் தெரியுமா ? ஆனால் அவற்றில் அவருக்குப் பிடித்தது மூன்று ரகங்கள். ஒன்று ஸமத்ராஸ் தீவிலிருந்து வரவழைக்கப் பட்டது! அது ரோமானியத் தளபதி ஸீசர் மேலங்கியைப் போன்று பழுப்பு நிறத்தில் உள்ளது!

கப்பதோசியன்: என்ன ஸீசரின் மேலங்கியைப் போன்ற பழுப்பு நிறமா ? நான் ஸீசரைப் பார்த்தது மில்லை! ஸீசர் மேலங்கியைப் பார்த்தது மில்லை!

இரண்டாம் காவலன்: இரண்டாவது ஒயின் தனிச்சிறப்பாக ஸைப்பிரஸ் நகரத்திலிருந்து மன்னருக்கு வருவது. அந்த திராட்சை ரசம் தங்கத்தைப் போல் மஞ்சள் நிறத்தி லிருக்கும்.

கப்பதோசியன்: எனக்குத் தங்கம் பிடிக்கும்! எந்த அங்கத்தை ஈந்தும் நான் தங்கத்தை வாங்கத் தயார். ஆனால் மஞ்சள் நிறம் எனக்குப் பிடிக்காது! கடவுள் ஏன் தங்கத்திற்கு மங்கிப் போகும் மஞ்சள் நிறத்தை அளித்தார் ? தங்கத்துக்கு உகந்த ஊதா வண்ணத்தைக் கடவுள் பூசி யிருக்கலாம் ?

இரண்டாம் காவலன்: மன்னருக்குப் பிடித்த மூன்றாவது திராட்சை ரசம் ஸிசிலியிலிருந்து வருகிறது! அந்த ஒயின் குருதிபோல் செந்நிற முள்ளது! ஏன் அது சிவப்பாக இருக்கிற தென்று என்னைக் கேட்காதே! பால் வெள்ளையாக உள்ளது ஏன் என்று வினாவை எழுப்பும் ஆய்வாளன் நீ! யாருக்குத் தான் தங்கத்தின் மீது ஆசை யில்லை ?

நியூபியன்: என் நாட்டுத் தெய்வங்கள் நரபலி கேட்பவை! மானிடக் குருதி யென்றால் நாக்கு நான்கு முழம் நீண்டு தொங்கும்! ஆண்டுக்கு இருமுறை தெய்வத்துக்கு கோர நரபலி யிடுகிறோம்!  எங்கள் தெய்வங்களுக்கு ஐம்பது ஆண்கள், நூறு பெண்களை வருடந் தோறும் பலியிட்டுச் சமர்ப்பிக்கிறோம்! ஆயினும் எங்கள் தெய்வங்களுக்கு அவை போதா! தெய்வச் சீற்றத்தால் நாங்கள் கேட்பது எங்களுக்குக் கிடைப்ப தில்லை! நாங்கள் தெய்வ வெறுப்புக்கு ஆளாகி விட்டோம்!

கப்பதோசியன்:  என் தாய் நாட்டில் எந்த தெய்வமும் விட்டு வைக்கப்பட வில்லை! ரோமானியப் படையினர் எங்கள் எல்லா தெய்வங்களையும் நகரை விட்டே விரட்டி விட்டார்! கவலையே யில்லை! நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக் கிறேன், இப்போது! மலைப் பிரதேசங்களில் தெய்வங்கள் ஒளிந்துள்ளதாகக் கூறப் பட்டது! ஆனால் நானந்தக் கதைகளை நம்புவ தில்லை! மூன்று நாட்கள் மலைமுகப்பில் தங்கி எல்லா இடங்களிலும் தேடினேன். மனதார வேண்டி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்! தெய்வங்கள் என் கண்ணில் படவில்லை! பிறகு தெய்வங்களை நான் வாயாரத் திட்டினேன்! அப்போதும் என் வாயை மூடக் கடவுள் வரவே வில்லை! எனது நாட்டில் தெய்வம் யாவும் மறைந்து போய் விட்டன! அவை எதுவும் மனிதனின் ஊனக் கண்களுக்குக் காட்சிச் சிலையாய் வரப் போவதில்லை!

Arrest of John the baptist

கைது செய்யப்படும் புனித நீராட்டி

முதல் காவலன்: யூதர் யாவரும் கண்ணிலே காண முடியாத கடவுளைத்தான் வணங்கி வருகிறார். ஒருவருக்கும் புரியாத ஒன்றின் மீதுதான் அவர் மிக்க நம்பிக்கை வைக்கிறார்!

கப்பதோசியன்: எனக்குப் புரிய வில்லை அது. அவரது குருட்டு நம்பிக்கை நகைப்பிடமாக உள்ளது!

[கீழே பாதாளாச் சிறையிலிருந்து புனித நீராட்டி ஜானின் (ஜொஹானன்) ஆங்காரக் குரல் அழுத்தமாகக் கேட்கிறது]

ஜொஹானன்: [சிறைக் கதவை ஆட்டிப் பெருங் கூச்சலுடன்] கேளுங்கள் மானிடரே!  நீவீர் என்னைப் புறக்கணிக்கலாம்! என் வார்த்தைகளை மீறலாம்! ஆனால் அடுத்து எனக்குப் பின்னால் அதோ வீதியில் வந்து கொண்டிருக்கிறார், பாரீர்! என்னை விடப் பராக்கிரமசாலி! பெரிய தீர்க்க தரிசி! அவரது காலணியின் கயிற்றை அவிழ்க்கக் கூடத் தகுதி யில்லாதவன், நான்! அந்தப் புனிதர் வரும் போது, புறக்கணிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவு கிடைக்கும்! அவர்கள் அனைவரும் ரோஜா பூக்கள் போன்று மலர்ச்சி அடைவார்! குருடாய்ப் போனவருக்குக் கண்ணொளி கிடைத்துப் பகலிரவு மாறுபாடு தெரியப் போகிறது! செவிடாய்ப் போனவருக்குக் காதொலி செம்மையாய்க் கேட்கப் போகிறது! கைசூப்பும் கைக் குழந்தை தீயைக் கக்கும் அசுர முதலை [Dragon] வாழும் குகைமீது கை வைக்கத் துணியும்! புனிதப் போதகர் [ஏசு மகான்] பிடரி மயிரைப் பிடித்து சிங்கத்தை இழுக்கும் பேராற்றல் படைத்தவர்!

இரண்டாம் காவலன்:  புலம்புபவன் வாயை அடக்கு! அவன் ஒரு கிறுக்கன்! பித்துப் பிடித்தவன்! தாறு மாறாக, ஏட்டிக்குப் போட்டியாக எப்போதும் பேசுபவன்! சிறையிலே அவனைப் போட்டாலும், வாயைக் கட்ட முடிய வில்லை! அவன் குரலை ஒடுக்க அறுக்க வேண்டும் அவன் நாக்கை! அல்லது ஊசியால் தைக்க வேண்டும் அவன் வாயை!

முதற் காவலன்: [மனம் வெகுண்டு] அப்படிச் சொல்லாதே! அவர் ஓர் உன்னதப் போதகர்! ஒரு புனித மகான்!  அவர் ஆங்காரமாய்க் கத்தினாலும் அர்த்தமுள்ள பேச்சு.  அவருக்கு நெஞ்சில் கனிவு, பரிவு மிகுதி! அவர் ஒரு தீர்க்க தரிசி! தினமும் அவருக்கு நான்தான் தட்டிலே உணவு தருபவன். அன்போடு எனக்குத் தவறாமல் நன்றி சொல்வார்! மனிதர் அறநெறிகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும்; அறிவு வெள்ளம் கரை புரண்டு செல்லும். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்!

கப்பதோசியன்: அத்தகைய புனித மனிதருக்கு ஏனப்பா சிறைவாசம் ? அவர் பேரென்ன ? ஊரென்ன ? ஏன் அவரை அந்தப் புலிக் குகையில் அடைத்துக் கத்த விட்டிருக்கிறார் ?

முதற் காவலன்: அவரது பெயர் ஜொஹானன். போதகர் ஏசு நாதருக்குப் புனித நீராட்டிய ஜான் என்று அழைக்கப் படுகிறார். பாலை வனத்தில் எங்கோ ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். ஸெக்கரையா என்னும் பாதிரியின் ஒரே மகன் அவர். தாயார் பெயர் எலிஸபெத். வாலிப வயதில் பிள்ளை யில்லாமல் முதிய வயதில் பெற்றோருக்குப் பிறந்த ஞானக் குழந்தை அவர்! பிள்ளை யில்லாத வேளையில் தெய்வ சன்னதியில் தேவதை காபிரியல் தோன்றி, பிறக்கப் போகும் குழந்தை, பின்னால் ஏசு பிரபுக்குக் கால் தடமிட முன்பாதை விரிக்கு மென்று சொன்னது! மேலும் அந்தக் குழந்தைக்கு ஜான் என்று பெயர் வைக்கும்படிக் கூறியது.

கப்பதோசியன்: எல்லாம் ஒரு பெரிய புனை கதை போல யிருக்கிறதே! யாரிந்த ஏசு பிரபு ?

முதற் காவலன்: நானின்னும் ஜானைப் பற்றிச் சொல்லி முடிக்க வில்லை. ஏசு பெருமானைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். ஒட்டகத் தோல் உரோமத்தில் உடுத்தி யுள்ள உடை! இடுப்பில் ஓர் பட்டை! உண்ணும் உணவு என்ன வென்று தெரியுமா ? பெரிய விட்டில் பூச்சி, காட்டுத் தேன்! அவ்வளவுதான். மனிதர் திடகாத்திரமாக இருக்கிறார்! நல்ல உயரம்! கண்களில் எப்போதும் அறிவுக்கனல் பறக்கும்! ஆனால் பார்க்கச் சற்று விகாரமாகத் தோன்றுவார்! அவரைப் பின்பற்றிச் செல்லும் சீடரோ கணக்கில் அடங்கா.

குடி மயக்கத்தில் ஏரோத் மன்னன்

கப்பதோசியன்: புனித நீராட்டி என்ன சொல்கிறார் ? ஏன் ஆங்காரமாய்க் கத்துகிறார் ?

முதற் காவலன்: என்ன சொல்கிறார் என்பது எனக்கு முழுவதும் புரிய வில்லை. யாரையோ திட்டுகிறார்! கேட்டால் அச்சத்தை ஊட்டுகிறது! அடிவயிற்றைக் கலக்குகிறது நமக்கு! அவரது சொல்லடி யார் மீது படுகிறதோ, அவருக்கு நெஞ்சடிப்பு ஏற்பட்டு மயக்கத்தில் விழுந்து விடுவார்!

கப்பதோசியன்: அவரை நான் காண விரும்புகிறேன். பார்க்க முடியுமா அவரை ?

முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், அவரை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ?

காட்சி-1, பாகம்-3

சி. ஜெயபாரதன், கனடா

‘புனித நீராட வரும் நச்சுப் பரம்பரைப் பாம்புகளே! எதிர்காலக் கோபத் தவறுகளிலிருந்து பிழைத்துக் கொள்ள உங்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார், அவர்! உங்களுக்குள் சொல்லித் தீர்க்க முடியாத, பாப மன்னிப்புக்கு ஏற்ற உங்கள் செய்கைக் கனிகளை அவர்முன் கொண்டு வாரீர்! நமது கடவுள் ஆப்ரஹாம் இருக்கிறார். நான் சொல்கிறேன் உங்களுக்கு: கடவுள் அந்தத் தளத்துடன் பாலகரைத் தூக்கி, ஆப்ரஹாம் வசம் அளிப்பார். அதோ, அடிமரத்தை வெட்டக் கோடரி, தயாராய் உள்ளது! நற்கனிகள் முளைக்காத ஒவ்வொரு மரமும் வெட்டிக் கீழே தள்ளப்பட்டுத் தீக்கிரையாகப் போகிறது!

இரண்டு அங்கிகள் கொண்டவர், இல்லாதவருக்கு ஒன்றை அளிக்க வேண்டும்! உண்ண இரைச்சி மிகுதியாய் உள்ளவர், இல்லாதவருக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்! உணவுச் சாலை நடத்துவோர், தகுதிக்கு ஏற்பப் பிறரிடம் பெற்றுக் கொள்வீர்! படை வீரர் யாருடனும் வன்முறையில் நடக்காதீர்! யார் மீதும் பொய்க் குற்றம் சாட்டாதீர்! உமக்குக் கிடைக்கும் ஊதியத்தில் திருப்தி அடைவீர்! நிச்சயம் நீரை ஊற்றி உமக்கு நான் புனித நீராட்டுவேன். ஆனால் என்னை விடப் பராக்கிரசாலி ஒருவர் [ஏசுநாதர்] வரப் போகிறார்! அவரது காலணிக் கயிறைக் கூட அவிழ்க்கத் தகுதி யற்றவன் நான்! தனது புனித ஆன்மீக சக்தியால், அவர் உமக்குத் தீயால் புனித நீராட்டப் போகிறார். ‘

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johannan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. பொங்கி எழும் பூரணச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரோத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

********************

முதற் காவலன்: முடியாது! முடியவே முடியாது! ஏரோத் மன்னர் தடை போட்டிருக்கிறார், ஜொஹானனை யாரும் பார்க்கக் கூடாதென்று! மீறினால் சவுக்கடி விழும், தெரியுமா ? எதற்காக நீ ஜான் போதகரைப் பார்க்க விரும்புகிறாய் ?

கப்பதோசியன்: போதகரை நான் காண வேண்டும். கடவுளைப் பற்றி நான் அவருடன் சற்று உரையாட வேண்டும்.

முதற் காவலன்: உன்னாசை ஒருபோதும் நிறைவேறாது! மெதுவாகப் பேசு! நீ உரக்கப் பேசினால், உன்னைப் பிடித்துக் கொண்டு ஜொஹானன் கிடக்கும் சிறையில் தள்ளி விடுவார்! இது எச்சரிக்கை உனக்கு!

கப்பதோசியன்: நல்ல ஆலோசனை அது ! அப்போது சிறைக் குள்ளே ஜொஹானன் கூட, நான் பேசத் தடையிருக்கா தல்லவா ? அவரிடம் கடவுளைப் பற்றி உரையாடலாம் ! சிறைக்குப் போனாலும், ஒரு போதகரின் நிழல் என்மேல் படுவதில் பூரிப்படைவேன்! அவரது அருள்வாக்கு செவியில் படுவதைப் புண்ணியமாகக் கருதுவேன்.  அவரது நெறி மொழிகள் என் ஆத்மாவைக் கழுவினால், அதுவே எனக்குப் பாப மன்னிப்பாகும்.

முதற் காவலன்: நீ சாகும் வரை அவரோடு பேசலாம்! அல்லது ஜொஹானன் சாகும் வரை அவரோடு நீ உரையாடலாம்! கைகளைக் கட்டினாலும் உன் வாயைக் கட்ட மாட்டார்! கவலைப் படாதே. மேலும் ஜொஹானன் பேச ஆரம்பித்தால், உமது செவிகளுக்குத்தான் வேலை! வாயிக்கு வேலை யில்லை! ஆனால் உன்னாசை நிறைவேறாது! சிறைக்குப் போக வாய்ப்பில்லை உனக்கு!

ஸிரியா வாலிபன்: ஸாலமியின் மீன்விழிகள் ஏனோ வலை விரிக்கும் எனக்கு ! அவளது விழிக் கணைகள் ஒரே ஒருமுறை மேல் நோக்கி என் நெஞ்சைக் காயப் படுத்தி விட்டன! அந்தக் காயத்திற்கு அவள்தான் மருந்திட்டு ஆற்ற வேண்டும்!  எழில் கன்னி  ஸாலமியின் பட்டாம் பூச்சி விழிகள் படபடக்கும் போது, என்னிதயம் ஏனோ தடதட வென முரசடிக்கிறது!

ஏரோதியாஸின் காவலன்: புலம்பாதே வாலிபச் சிங்கமே! அந்தப் புள்ளிமான் மீது ஆசை வைக்காதீர் ! அவள் ராஜ நர்த்தகி !  அவ மீது கொள்ளும் ஆசை உனக்குப் பேராபத்தை உண்டாக்கும்! அவளது தீக்கண் பார்வை மனிதரைச் சுட்டெரிப்பவை!  உமது தீராக் காதல் ஒருதலைக் காதல்! ஒருதலைக் காதல் உனக்குத் தலைவலி தருவது!  உறக்கத்தைக் கெடுப்பது!  உயிரைச் சிறுகச் சிறுக உண்பது! உடலை எலும்புக் கூடாய் உருக்குவது! உன்னைப் போல் பலரது உயிர்களை உருக்கி விட்டவள் ஸாலமி! உன்னுயிரை அவளிடம் இழந்து விடாதே! ஸாலமி காதலிக்கத் தகுதி யற்றவள்! உன் கண்களால் அவளைத் தீண்டாதே! அவள் நிற்கும் திசையைக் கூட கண்ணால் நோக்காதே!

ஸிரியா வாலிபன்: ஸாலமி ஓரிளம் மங்கை!  பேரழகி ! வாலிபன் ஒருவனின் காதலுக்கு உகந்தவள்! அந்த ஆடவன் ஏன் நானாக இருக்கக் கூடாது ? இராப்பகலாக என் நெஞ்சில் கனலைக் கொட்டித் தூக்கத்தைக் கெடுக்கிறாள்!  ஒன்று ஸாலமியோடு பேச வேண்டும் இன்று; அல்லது பாதாள சிறைக் கைதியோடு பேச வேண்டும்.

கப்பதோசியன்:  இரண்டும் நிறைவேறாது வாலிபனே ! என்ன பயங்கரமான சிறை அது தெரியுமா ? மிருகங்கள் கூட வாழத் தகுதியற்ற குகைக் கூண்டு!  உயிரோ டிருப்பவர் தானாகச் சாவதற்கு ஏற்ற நச்சுச் சிறை அது!

இரண்டாம் காவலன்: மெய்யான வாசகம் அது! சாவதற் கேற்ற நச்சுச் சிறை! நல்ல பெயர்! உனக்குத் தெரியாது! ஏரோதின் மூத்த சகோதரர் ஃபிளிப் அந்தப் பாழும் இடத்தில்தான் சிறைப் பட்டுக் கிடந்தார்! எத்தனை வருடம் தெரியுமா ? பனிரெண்டு வருடங்கள்! அவர்தான் மகாராணி ஏரோதியாஸின் முதற் கணவர்!  பேரழகி ஸாலமியின் அருமைத் தந்தை! ஆனால் அந்தப் பாழும் சிறை அவரைக் கொல்ல வில்லை தெரியுமா ?

கப்பதோசியன்: யார் ? ஏரோதின் சகோதரரா ? ஏரோதியாஸின் முதற் கணவரா ? அவரின்று உயிரோடில்லையா ? எப்படிச் செத்தார் என்று விளக்கமாகச் சொல்!  அவருக்குப் பரிதாபப் படுகிறேன்.

இரண்டாம் காவலன்: பனிரெண்டு வருட முடிவில் என்ன செய்தார்கள் தெரியமா ? அவரது கழுத்தை நெரித்துக் கொன்று விட்டான், ஒரு காட்டுமிராண்டி!

கப்பதோசியன்: [வருத்தமுடன்] அடப் பாவிகளா ? கழுத்தை நெரித்தா கொலை செய்தான் ? யார் அந்த பயங்கரவாதி ?

இரண்டாம் காவலன்: [சிறைக்கருகே நின்ற ஒரு நீக்ரோவைக் காட்டி] அதோ நிற்கிறானே! அந்தக் கறுப்புக் குடிகாரன்தான்! காட்டுமிராண்டி! அந்த அரக்கன்தான் ஸாலமியின் தந்தையைக் கொன்றவன்!  ஏரோதியாஸின் முதற் கணவரைக் கொன்றவன்!

கப்பதோசியன்: அந்தக் கோர மரணம் மகாராணிக்குத் தெரியமா ? சகோதரர் ஏரோது மன்னருக்கு அந்தப் பயங்கரக் கொலையைப் பற்றித் தெரியுமா ?

இரண்டாம் காவலன்: [காதில் குசுகுசுத்து] ஏரோதுதான் தன் முத்திரை மோதிரத்தை அனுப்பி ஏற்பாடு செய்தவர்.

கப்பதோசியன்: என்ன ? முத்திரை மோதிரமா ?

இரண்டாம் காவலன்: அதுதான் மரண மோதிரம்! பயங்கர வாதிக்கு மரண மோதிரத்தை அனுப்பிச் சகோதரனைக் கொல்ல ஏற்பாடு செய்தது, ஏரோத் மன்னர்தான்! மனைவி ஏரோதியாஸ் அதற்கு உடந்தை!

கப்பதோசியன்: என்ன பயங்கரக் கொலை அது ? என்ன பயங்கர சகோதரர் ? என்ன பயங்கர மனைவி ? என்ன பயங்கர உலகம் இது ?

[ஸாலமி அப்போது எழுந்து படியேறி மாடிக்கு வருகிறாள்]

ஸிரியா வாலிபன்: பார், எழிலரசி ஸாலமி எழுந்து நகர்கிறாள்! விருந்து மாளிகையை விட்டுக் கோபத்துடன் சட்டென வெளி யேறுகிறாள்! முகத்தைப் பார்த்தால் கொந்தளிப்பு தெரிகிறது! படியில் ஏறி நம்மை நோக்கித்தான் வருகிறாள்!  முகம் ஏனோ வெளுத்துப் போயிருக்கிறது ? ஒருபோதும் இப்படி முகம் தெளிவற்றுச் சோகமாய்ப் போக நான் கண்டதே யில்லை!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே! ஸாலமியை உற்று நோக்காதே! அவளுக்குப் பிடிக்காது! அவளது அன்னைக்கும் பிடிக்காது! அவளை நேசிப்பவர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்!

ஸிரியா வாலிபன்:  ஸாலமி ஒரு வெள்ளி நிலா போல ஒளியை வீசுகிறாள் ! முறிந்து விழப் போகும் வெண் புறாவைப் போல, மெல்ல நடந்து வருகிறாள்!  புல்லின் இலை போல மெல்லிய தென்றலில் நடுங்குவது போல் தெரிகிறது எனக்கு!

[ஸாலமி மாடியில் வந்து நின்று பேசுகிறாள்]

ஸாலமி: [ஆங்காரமாய்] நான் தங்கப் போவதில்லை இங்கே. நின்று பேச எனக்கு நேர மில்லை. என்னையே பார்க்கிறார், ஏரோத் மன்னர்! ஏனென்று தெரியவில்லை! அருவருப்பாய் உள்ளது எனக்கு! கீழே என்னால் நிற்க முடிய வில்லை! பூச்சி போன்ற மன்னர் விழிகள் என்னை நோக்கும் போது, என் மேனியில் புழு ஏறுவது போல் புல்லரிப்பு உண்டாகிறது! உற்று நோக்கும் அவரது முட்டைக் கண்கள் ஊசி முனை போல் என்னுடலைக் குத்துகின்றன! வியப்பாக உள்ளது எனக்கு! என் அன்னையின் கணவர் எனக்குத் தந்தை போன்றவர்! என் தந்தையின் தனயன் எனக்குச் சிற்றப்பன்! ஆனால் கனிவாய்ப் பார்க்க வேண்டிய கண்கள் ஏன் கழுகாய் மாறி என்னை வட்டமிட்டுச் சுற்றுகின்றன ? இமை தட்டாமல் அவரது கண்கள் ஏன் வேட்டைக்குக் கிளம்பி விட்டன ? குள்ள நரி ஆட்டை விரட்டுவது போல், அவர் விழிகள் என்னைத் துரத்துகின்றன. அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை! கீழே நான் நானாக நிற்க முடிய வில்லை! மேலே நான் மூச்செடுக்க முடிகிறது!  இப்போது என் உள்ளத்தில் எனக்கோர் ஐயம் எழுகிறது. அது உண்மையாக இருக்குமோ ?

ஸிரியா வாலிபன்: [ஸாலமி அருகில் கனிவுடன் வந்து] ஸாலமி! நிலவையும் மிஞ்சி நீ மிக்க ஒளி வீசுகிறாய்! பொங்கிவரும் பெருநிலவும் உன் முன் மங்கித்தான் தோன்றுகிறது! நீ வந்த பிறகு இந்த மாடித் தளத்தில் பளிச்சென வெளிச்சம் தெரிகிறது. வாலிபன் ஒருவன் உன் வாசலில் வீணை மீட்டிய வண்ணம் உனக்காக நின்று கொண்டிருக்கிறான்!

ஸாலமி: எங்கே அந்த வாலிபன் ? வீணையின் ஓசை என் காதில் படவில்லையே! நான் அவனைப் பார்க்க வேண்டும்! மாடி மீது வீசும் இளந் தென்றல் இனிமையாக உள்ளது! முள்ளம்பன்றிகளின் ஊசிப் பார்வையிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறேன்! இங்கே நான் மூச்செடுக்க முடிகிறது! துள்ளிடும் தென்றல் என் மேனியைத் தழுவி இன்னிசை பாடுகிறது! ஜெருசலப் பகுதிலிருந்து வந்த யூதர்கள் கீழே ஆடம்பரச் சடங்குகள் வேண்டுமென்று சண்டை யிட்டு ஒருவரை ஒருவர் பிய்த்துக் கிழிக்கிறார்! காட்டுமிராண்டிகள் குடித்துக் கொண்டு ஒயினை ஒருவர் வாயில் ஒருவர் ஊற்றிக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்! ஓவியப் பொம்மை போன்ற கிரேக்கர் சிலைகள் போல் மாந்தர் மெளனமாய் அமர்ந்துள்ளார்! எகிப்தியர் நீண்ட அங்கிகளை அணிந்து கொண்டு பூதங்களைப் போலத் திரிகிறார்! திமிர்பிடித்த ரோமானியர் கெட்ட வார்த்தைகளில் யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறார்! ஏதோ தாங்கள் பெரிய செல்வக் கோமான் போல, நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் நிற்கிறார்! அவரைப் பார்க்கவே அருவருப்பாக உள்ளது எனக்கு! முற்றிலும் நான் வெறுக்கிறேன் ரோமானியரை!

ஸிரியா வாலிபன்: [கையில் வீணையை எடுத்து] இளவரசி! இந்த ஆசனத்தில் அமர்வீரா ? நான் வீணை வாசிக்கிறேன். இந்த வீணையின் இன்னிசை உங்கள் எழிலை இன்னும் மிகையாக்கும்!

ஏரோதியாஸின் காவலன்: வாலிபனே ! இளவரசியிடம் அப்படி நீ பேசாதே! இளவரசியை வைத்த கண் வாங்காமல் அப்படிப் பார்க்காதே! ஏதோ இன்று பெரும் இன்னல் நேரப் போவதாய்த் தோன்றுகிறது எனக்கு!

ஸாலமி: [வானில் நிலவை உற்று நோக்கி] நிலவைப் போல் நானும் மேக மண்டலத்தில் மிதக்க வேண்டும்! பொங்கும் நிலா எப்படிப் பொலிவுடன் தெரிகிறது இன்று ? தங்க நாணயம் போல் தகதக வென்று மிளிர்கிறது, பொங்கு நிலா! வானத் தெப்பத்தில் மிதக்கும் மோன நிலா உள்ளத்தில் தேனைப் பொழிகிறது! வெண்ணிலா ஒரு தூய கன்னியாகத் துலங்குகிறது! நிச்சயம் நிலா ஒரு பச்சிளம் கன்னிதான்! ஆம் அதில் சற்றேனும் ஐயமில்லை! நிலவும் என்னைப் போலொரு தனித்த கன்னியே! என்னைப் போல் நிலவும் கறையற்ற ஓர் கன்னியே! நிலவும் என்னைப் போல் ஆடவருக்குத் தன்னை அர்ப்பணிக்காத ஓரிளம் கன்னியே!

[கீழே சிறையிலிருந்து மறுபடியும் ஜொஹானன் கூக்குரல் முழங்குகிறது]

ஜொஹானன்: [உரத்த குரலில்] யாவரும் கேளீர்! அதோ! புதுப் போதகர் உம்மை நோக்கி வருகிறார்! கடவுளின் புத்திரர் அருகே வந்து விட்டார்! மனிதக் குதிரைகள் [Centaurs (A Horse with a Man’s Head)] நதிக்குள்ளே ஒளிந்து கொள்ளும்! கடற் தேவதைகள் [Nymphs (Sea Goddesses)] காட்டு வனாந்திர மரங்களில் ஒளிந்து கொள்ளும்! மானிடருக்குப் புனித நீராட்டத் தகுதி யுடையர் அவர் ஒருவரே!  ஆம், அவர் ஒருவரே !

ஸாலமி: [வியப்போடு] யாரது அப்படி உரக்கப் பேசுவது ? யார் வரப் போவதாய் அறிவிக்கப் படுகிறது ?

இரண்டாம் காவலன்: ஓ! அவர்தான் போதகர்! சிறைக்குள் மன்னர் அடைத்திருக்கும் ஜொஹானன்! ஏரோத் மன்னருக்கு அச்சம் ஊட்டும் ஜான், போதகர்! ஏரோதியாஸ் தூக்கத்தைக் கெடுக்கும் ஜான் போதகர்! அவர் புனித நீராட்டிய ஏசுப் போதகர் வரப் போவதை அறிவிக்கிறார்!

ஸாலமி: [ஆர்வமுடன்] நான் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை! காண வேண்டும் நான் அந்த ஞானியை!

ஸிரியா வாலிபன்: வேண்டாம் ஸாலமி! வேண்டாம்! அவரை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! நீ பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்டால் நீயும் பாபம் செய்யத் துணிவாய்!

ஸாலமி:  நான் அவரைக் காண வேண்டும் இன்று !

****

நரபலி நர்த்தகி ஸாலமி

(ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-4)

‘வாழ்க்கையில் புரியும் அறநெறிப் பணிகள் யாவும், பரிவு உணர்ச்சியற்ற மாந்தருக்கு மூடச் செயல்களாகத் தோன்றும்! ஆனால் அது மிகச் சிறிய எதிர்ச் சிந்தனை !  சிலுவையிலே அறையப் பட்ட எளியவரை விட, அவ்விதம் ஆணியடித்த வலியவர் மீது நான் மிகவும் கவலைப் படுகிறேன். ‘

டேவிட் பார்க்கின்ஸ் கைச்சுவடி (மார்ச் 4, 1934)

‘நீதி வழங்கும் நாள் வரும்போது, பீடத்தின் மேலிருந்து ஒருவரின் பாபச் செயல்கள் யாவும் உரக்க வாசிக்கப் படும் என்று மாந்தர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!  அவ்விதம் பலமாக முழக்கி ஒருவரின் பாபத்தை உலகுக்கு வெளியிடுபவர் தேவலோக விசாரணை வழக்காளர் அல்லர்! ஆனால் பாபிகளின் அந்தரங்க ஆத்மாவே அவருக்கு அறிவுரை புகட்டும் என்பதை நான் தெளிவாக நம்புகிறேன்! ‘

‘கடந்து போன வாழ்க்கையை ஒருவர் மீண்டும் வாழ ஏங்குவது மாபெரும் தவறு!  குதிரை திசைபோக்குக் கயிறைப் பிடித்துக் கொண்டு ஒருவர் குதிரையைப் பின்புறம் நோக்கிச் சவாரி செய்ய முயல்வது முடியாத செயலாகும் ! ‘

டேவிட் பார்க்கின்ஸ்.

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee]

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [புனித நீராட்டி, ஜான்] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக் கிறான். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.

***********************

ஸாலமி: [ஆர்வமுடன்] நான் இதுவரைப் பார்த்ததே யில்லை அந்தப் போதகரை!  காண வேண்டும் நான் அந்த ஞானியை! யார் போய் அவரை மாடிக்கு அழைத்து வர முடியும் ?

ஸிரியா வாலிபன்: வேண்டாம்  ஸாலமி !  வேண்டாம்! புனித நீராட்டி ஜானை நீ கண்ணால் காணக் கூடாது! பாபம் செய்தாவள் நீ! உனக்குப் புனித நீராட்டம் தேவை யில்லை! பாபம் செய்தவர்தான் அவரைப் பார்க்க வேண்டும்! அவர் கரத்தால் புனித நீராட வேண்டுவோர், அவரைக் காணலாம்! நீ விரும்பினாலும், அவர் புனித நீரூற்ற மறுத்து உன்னைப் புறக்கணிப்பார்! நீ  அவரைப் பார்த்தால், உன்னைப் பாபங்கள் தீண்டிவிடும்! அவர் கண்பட்ட கவர்ச்சியில் நீயும் பாபம் செய்யத் துணிவாய்! அவரைத் தேடி நீ செல்லாதே!

DVD Image -16

ஸாலமி: நானவர் முகத்தை ஒருமுறைக் காண வேண்டும்! அவர் வாலிபரா அல்லது ஏரோத் போல் வயோதிகாரா என்று அறிய வேண்டும்!  அவர் ஓர் அழகான ஆடவரா என்று காண ஆவல் உள்ளது எனக்கு ! திருமணமாகி அவருக்கோர் மனைவி யிருந்தால், அவர் திருமுகத்தைப் பார்க்க மாட்டேன்!

[கீழே சிறையிலிருந்து மீண்டும் ஜொஹானன் கூக்குரல் உரக்கக் கேட்கிறது]

ஜொஹானன்: [பலத்த குரலில்] அறிவு கெட்ட மாதே! இது துரோகம்! கட்டிய கணவனின் கழுத்தை நெரித்து விட்டு, மாற்றான் மார்பில் தலை வைக்கும் உனக்கு எப்படித் தூக்கம் வருகிறது ? துரோகிகளே! உங்கள் கை அளிக்கும் உணவைத் தொடமாட்டேன்! உங்கள் கை ஊற்றும் நீரை அருந்த மாட்டேன்! எனக்கும் பெரிய போதகர் இங்கே வரப் போகிறார். உங்களைத் தராசில் வைத்து நிறுக்கப் போகிறார் அவர்! பாவிகளே! புனித நீராட்டுவதற்குப் பதிலாக உம்மைத் தீயால் குளிப்பாட்டப் போகிறார்! அவர் முன்னே வராதீர்! அவர் வருவதற்கு முன்பே துரோகிகளே, எங்காவது ஓடிப் போவீர்!

DVD Image -17

ஸாலமி: [ஐயத்துடன், பரபரப்புற்று] யாரைத் திட்டுகிறார் போதகர் ? கட்டிய கணவரின் கழுத்தை நெரித்தவள், யாரவள் ? மாற்றான் மார்பில் தலை வைத்துக் கிடப்பவள், யாரவள் ? ஓ! என் அன்னையைத் திட்டுவது போல் தெரிகிறது! நியாய மற்ற பழிகளை என் அன்னை மீது போடுகிறார்! என் தந்தையின் கழுத்தை என் தாய் நெரிக்க வில்லை! அபாண்டப் பழி அது! என் தாயை ஏனவர் வெறுக்கிறார் ? சொல்லால் அடித்து என் தாயை ஏன் கொல்லாமல் கொல்கிறார்!

இரண்டாம் காவலன்: உண்மைதான் இளவரசி! போதகர் பழியை மகாராணி மீது போடுவது தவறு! நியாய மற்றது! உங்கள் தந்தை கழுத்தை நெரித்துக் கொன்றவன் ஓர் வன்முறைக் கருப்பன்!

ஸாலமி: கிரேக்க, ரோமானியர், யூதர், எகிப்திய விருந்தினர் முன்பாக, என் தாய் மீது பழிசுமத்தி இழிவு படுத்துவது நியாமா ?

DVD Image -18

[அப்போது அரண்மனைச் சேவகன் வந்து, ஒருவன் ஸாலமியை வணங்குகிறான்]

அரண்மனைக் காவலன்: இளவரசி! தங்களை ஆடலரங்கு வரும்படி மன்னர் வேண்டிக் கொள்கிறார்.

ஸிரியா வாலிபன்: இளவரசி! போகாதீர் அங்கே என்று வேண்டுகிறேன்! ஆடலரசி ஆடும் அரங்க மில்லை அது! ஆடு மாடுகள் ஆடும் வன அரங்கு! போகாதீர் அங்கே! போனால் ஆபத்து நேருமென்று தோன்றுகிறது எனக்கு!

ஸாலமி: [சேவகனைப் பார்த்து] நான் வர விரும்ப வில்லை என்று மன்னருக்கு எடுத்துச் சொல்! போ! நானங்கு வரப் போவதில்லை! [சேவகன் திரும்பிச் செல்கிறான்]  ஜான் போதகர் கூன் விழுந்த வயோதிகரா ? அல்லது நெஞ்சம் நிமிர்ந்த வாலிபரா ? உடல் உறுதி பெற்ற மனிதரா ?

DVD Image -19

இரண்டாம் காவலன்: ஜொஹானன் முதுகு வளைந்த வயோதிகர் அல்லர்! தலை நரைத்துத் தள்ளாடும் கிழவர் அல்லர்!  ஆம், அவர் ஓர் வாலிபர்தான்! உடல் உறுதி மட்டுமில்லை, மன உறுதியும் பெற்றவர்!  அவர் மண்டைக்குள்ளே ஓர் அரிய அறிவுக் களஞ்சியம் உள்ளது! பாபிகளைப் பம்பரமாக ஆட்டிப் பாபங்களை நீக்குபவர்! அவரது ஊசிக் கண்கள் யாருடைய உள்ளத்தையும் ஊடுருவிச் சென்று, உண்மைகளைக் குத்தூசி போல் இழுத்து வரும் கூர்மை கொண்டவை!

ஸாலமி: வாலிபர் என்றால் அந்தப் போதகர் கவர்ச்சியைப் பார்க்க விரும்புகிறேன்.

ஸிரியா வாலிபன்: இளவரசி!  உங்களை மன்னர் அழைக்கிறார். போதகரா ? அல்லது வேந்தரா ? யாரைப் பார்ப்பது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். சிறையில் கிடப்பது செம்மறி ஆடு!  ஆனால் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்வது சிங்கம்! இந்த இரண்டில் எது பாதுகாப்பானது என்று நான் சொல்கிறேன். ஆட்டோடு நரகத்தில் அடைபடுவதை விட சிங்கத்துடன் சொர்க்கத்தில் வாழ்வது மேல்!  சிங்கம் உங்களுடைய எழிலை ஆராதனை செய்கிறது!  ஆடு உங்கள் பாவங்களை ஆழ்ந்து கணக்கெடுத்து, தீக்குளிக்க வைத்து விடும்! மீண்டும் சொல்கிறேன்.  போதகரைக் காண வேண்டாம் இளவரசி! காலை வாரி விழ வைப்பவர் போதகர்! அழைப்பை ஏற்றுக் கொண்டு ஏரோத் மன்னர் முன் ஆடுங்கள்! உங்கள் காலில் பூக்களை இட்டு பூஜிப்பவர் ஏரோத் மன்னர்!

DVD Image -22

ஜொஹானன்: [உரத்த குரலில்] நெறி கெட்ட மாந்தரே! கூத்தடிக்க வேண்டாம்! கும்மாளம் போட வேண்டாம்! குடியும், கொண்டாட்டமும் வேண்டாம்! உங்களை அடித்தவன் கோல் உடைந்து விட்டது! பாம்பு வயிற்றில் பிறந்த பூரான்கள், பறவை யினத்தைக் கொத்திக் தின்னப் போகின்றன! குடித்த வெறியில் மனமாறி அடுத்தவன் மனைவிமேல் காமப்படும் அறிவிலிகளே! உங்களுக்கு அறிவு புகட்ட அதோ வருகிறார் ஒரு மகாத்மா! உங்கள் பாவக் குருதியால் அவர் கால்களைக் கழுவிப் புனிதம் பெறச் செல்லுவீர்!

ஸாலமி: [மனம் மகிழ்ந்து] என்ன புனிதமான போதனை! என் தாயை அவர் வெறுத்தாலும், பிறரை அவர் நேசிக்கிறார். அந்தப் போதகரை நான் நிச்சயம் காண வேண்டும்! [முதற் காவலனைப் பார்த்து] அழைத்து வா அந்த மகாத்மாவை! கண்குளிரக் காண வேண்டும் அந்த கண்ணியவானை!

முதற் காவலன்: [மிகுந்த பயத்துடன்] இளவரசி! அப்படிச் செய்தால், ஏரோத் மன்னர் என் தலையை வாளால் அறுத்து விடுவார்! யாரும் போதகருடன் பேசக் கூடாது, யாரும் அவரைத் தொடக் கூடாது என்பது அரசரின் ஆணை! அதை மீறச் சொல்ல வேண்டாம், இளவரசி! [ஸாலமி காலில் விழுகிறான்] என்னை மன்னித்து விடுங்கள்.

DVD Image -20

ஸிரியா வாலிபன்: இளவரசி! மன்னர் உத்தரவை மதிக்கும்படி வேண்டுகிறேன். அவரது அழைப்பை ஏற்று விருந்து மாளிகைக்குப் போவதுதான் நல்லது! மன்னர் கட்டளையை மதித்து, போதகரைப் பாராது செல்வது மிகவும் நல்லது! அரசரது கோபத்திலிருந்து நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம்!

ஸாலமி: அரசருக்குப் பயந்தவர் நீவீர்! எனக்குச் சிறிதும் பயம் கிடையாது! [இரண்டாம் காவலனைப் பார்த்து] நீ போ! நீ போய் அந்த போதகரை அழைத்துவா!

இரண்டாம் காவலன்: [மண்டியிட்டு] இளவரசி! காலில் விழுந்து வேண்டுகிறேன். என்னால் அதைச் செய்ய முடியாது! நாங்கள் உயிரோடும், உடலோடும் வீடு திரும்ப வேண்டும்!

ஸாலமி: [படியில் பாதி தூரம் இறங்கி, குனிந்து சிறைையைக் கண்ணோட்ட மிட்டு] எத்தகைய இருட்டுச் சிறையாக உள்ளது ? அனுதாபப் படுகிறேன்! இந்தக் கருங்குகையில் மிருகம் கூட வாழாது! போதகரை இந்தப் புதைப்பு பூமியிலா அடைப்பது ? [காவலனைப் பார்த்து] உன் செவியில் விழுகிறதா ? போதகரை அந்த குகையிலிருந்து வெளியே அழைத்து வா. அவர் இன்னும் உயிரோடு உள்ளாரா என்று பார்க்க வேண்டும்! அவரது கண்கள் இன்னும் குருடாகாமல் உள்ளனவா என்று காண வேண்டும்! அவரது உடம்பு எலும்புக் கூடாக நடமாடி வருகிறதா வென்று நோக்க வேண்டும்!

dvdimage -21

முதற் காவலன்: இளவரசி! போதகரை அழைத்து வந்தால், எங்கள் தலையற்ற முண்டம்தான் இன்று வீடு திரும்பும்! உத்தரவின்றி தனியே நாங்கள் செய்யும் பணி யில்லை இது! அரசர் ஆணையை நாங்கள் மீற முடியாது! மீறவும் கூடாது. சிறைக் கதவைத் திறக்க அனுமதி அளிப்பவர் அரசர். அவரைத் தயவு பண்ணிக் கேளுங்கள்! எங்கள் அற்ப உயிர் உங்கள் கையில் உள்ளது! எங்கள் அற்ப உயிருக்கு சொற்ப ஆயுளைத் தராதீர்!

ஸாலமி: [ஸிரியா வாலிபனைக் கனிவுடன் பார்த்து] வாலிபனே! என்னை மகிழ்விக்க நீ வீணை மீட்கிறாய். உன் வீணையின் கானம் ஒளிந்திருக்கும் என் பெண்மையை வெளிப்படுத்தி விட்டது! என் கண்கள் மறுபடியும் காதலனைத் தேடுகின்றன! என்னை மகிழ்விக்கப் போதகரை அழைத்து வருவாயா ? உனதினிய வீணை இசைவெள்ளம் காய்ந்து போவதற்குள், அந்த மகாத்மாவை அழைத்து வருவாயா ? எனது காந்த விழிகளுக்கு நீ காத்திருப்பது எனக்குத் தெரியாம லில்லை! எனக்காக அதைச் செய்வாயா ? என் அன்னை போதருக்கு அஞ்சுகிறாள்! என் சித்தப்பா போதகரைக் கண்டு நடுங்கிறார்! அவரைப் போல் நீயும் போதகருக்குப் பயப்படுகிறாயா ? என்னைக் காதலிப்பவன், என்னை வேண்டுபவன் ஒரு வீரனாகத்தான் இருப்பான்! நீ ஒரு மாவீரன் அல்லவா! நீயுமா அரசருக்கு அஞ்சுகிறாய் ? நான் உன்னருகில் உள்ள போது நீ யாருக்கும் அஞ்ச வேண்டிய தில்லை! உன் தலைக்குக் கத்தி வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்! போ, போதகரை அழைத்து வரச் செல்வாயா ?

DVD Image -23

ஏரோதியாசின் காவலன்: [நடுங்கிக் கொண்டு] அந்தோ! வேண்டாம் இளவரசி! போதகரை அழைத்து வந்தால், பேராபத்து நிகழக் போவதாய்த் தோன்றுது எனக்கு!

ஸிரியா வாலிபன்: அரசருக்கு அஞ்ச வில்லை இளவரசி! நான் யாருக்கும் அஞ்சாதவன்! ஆனால் இளவரசிக்கு அஞ்சுகிறேன் நான்! அவளது சுடர்விழிகள் பட்டால் சுடப்பட்டு விழும் ஓர் ஆண் பறவை நான்! அந்தச் சிறைக் கதவை யாரும் திறக்கக் கூடாது என்பது ஏரோதின் கட்டளை! மன்னருக்கு அஞ்சா விட்டாலும், மன்னரின் ஆணைக்குக் கட்டுப் படுபவன் நான்!

ஸாலமி: மன்னருக்கு அஞ்சாத வாலிபனே! என்னை மகிழ்விக்க நீயிதைச் செய்ய வேண்டும்! நீ மெய்யாக என்னை நேசித்தால் நீயிதைச் செய்ய வேண்டும்! உனக்கு என் வெகுமதி கிடைக்கும்! என்ன வெகுமதி அளிப்பேன் என்பதை நாளை உன்னைத் தனியே சந்திக்கும் போது சொல்வேன்! அங்காடி வழியே மாலையில் நான் போகும் போது, வழி நெடுவே பூக்களை சிந்திச் செல்வேன், உனக்காக! என்னிருப்பிடம் அறிந்து என்னைச் சந்திக்க வா! மறக்காமல் வா, நாளை மாலை!

ஸிரியா வாலிபன்: இளவரசி! நானிதைச் செய்ய மாட்டேன்! செய்ய மாட்டேன்! செய்யவே மாட்டேன்! ஆனால் உங்களைத் தனியே சந்திக்க ஆவல்! போதகரை அழைத்து வராவிட்டால், என்னைச் சந்திக்க விரும்புவீரா ?

DVD Image -24

ஸாலமி: [அழுத்தமாக] வேலை முதலில், கூலி பின்னால்! பணியை மறுத்தால் கூலியும் நிறுத்தப்படும்! [கனிவுடன்] மன்னருக்கு அஞ்சாத நீ ஒருவன்தான் ஆணையை மீறி அப்பணியைச் செய்ய முடியும் எனக்கு! நிச்சயம் நீ எனக்குச் செய்வாய் என்பதை நான் அறிவேன். நாளை நான் தூக்கு ரதத்தில் முகத்திரை யிட்டுச் செல்லும் போது, நீ உன் வீட்டு வாசல் முன் நில்! நான் முகத்திரை நீக்கி உன்னைப் பார்த்துப் புன்னகை செய்வேன்! பார்! என்னைப் பார்! வாலிபனே! உன்னைப் பார்க்கும் என்னைப் பார்! என் காந்த விழிகளைப் பார்த்துச் சொல்! நீ எனக்காகச் செய்வாய் என்று உன்னிதயம் சொல்கிறது! நீ என் வேண்டுதலை மறுக்கக் கூடாது என்று உன்மனம் எதிர்க்கிறது மெய்யாக!

ஸிரியா வாலிபன்: [தாளில் எழுதிக் கையெழுத்திட்டு, மூன்றாம் காவலனிடம்] போ! வாயில் காப்போனிடம் காட்டிப் போதகரை மேல் மாடிக்கு அழைத்து வா! மாண்புமிகு இளவரசி மன்றாடி வேண்டுகிறார்! வேறு யாரிடமும் இதைக் காட்டாதே! சீக்கிரம் போ! யாருக்கும் தெரியாமல் அழைத்து வா! இளவரசியின் விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டும்.

ஸாலமி: [புன்னகையுடன் ஓடிப் போய்க் கனிவுடன் வாலிபன் கண்ணத்தில் முத்தமிட்டு] நீதான் என் உண்மைக் காதலன்! உயிருக்கு அஞ்சாதவன்! மன்னருக்கு அஞ்சாதவன்! மாவீரன்! நீ என் கனவுகளில் வந்து எனக்கின்பம் அளிப்பாய்! உன் பெயர் என்ன, வாலிபனே! உன்னை நான் என்றும் மறக்க மாட்டேன்.

DVD Image -26

ஸிரியா வாலிபன்: [பூரிப்படைந்து, கண்ணத்தைத் தடவி] வெகுமதி இப்போதே கிடைத்து விட்டது! ஸாலமி நேசிக்கிறாள் என்னை! என் பெயரைக் கேட்கிறாள்! சொல்கிறேன், என் பெயர் நாராபாத்! நாராபாத் ஸாலமியின் காதலன்! நினைக்கும் போதே நெஞ்சில் தேன் ஊறுகிறது! யாரும் இதுவரை என்னை முத்த மிட்ட தில்லை! ஸாலமி! உனக்காக நான் எதையும் செய்வேன்! என் உயிரையும் உனக்காகக் கொடுக்கத் தயார்!

ஏரோதியாஸின் காவலன்: காரிருள் மேகம் கப்பி வெண்ணிலவு கருநிலவாய்ப் போனது! ஏதோ ஓர் அபாயம் நேரப் போவது எனக்குத் தெரிகிறது! பொன்னிலவு என் கண்களுக்குப் புண்ணிலவாய்த் தோன்றுகிறது!

வாலிபன் நாராபாத்: அப்படியில்லை நண்பனே! முகத்திரை யிட்ட வெண்ணிலவு திரைநீக்கி என்னை முத்த மிடுகிறது! மேகத்தில் மறைந்தாலும், பொன்னிலவின் ஒளித்திரட்சி குறைவ தில்லை!

[ஜொஹானன் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்டு மாடி மீது மெதுவாய் ஏறி நடந்து வருகிறார். ஸாலமி பார்த்ததும் திடுக்கிட்டுப் பின்வாங்குகிறாள்.]

DVD Image -25

ஸாலமி: [பயந்து பரிவுடன்] போதகரே! இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டார்! காரிருட் சிறையில் மூடிய உங்கள் கண்களுக்கு ஒளியேறட்டும்! முடமாய்ப் போன உங்கள் கால்கள் விடுதலைப் பூமியில் நடமாடட்டும்! குடிப்பதற்கு ஏதாவது பானம் வேண்டுமா ? உண்பதற்கு ஏதாவது உணவு வேண்டுமா ? கேளுங்கள்.

ஜொஹானன்: [பரிவோடு ஸாலமியைப் பார்த்து] அன்பைப் பொழியும் மங்கையே! எனக்கு தற்போது வேண்டியது, உண்டி யில்லை! நான் வேண்டுவது விடுதலை! செய்ய வேண்டிய அருட் பணிகள் எனக்கு அநேகம் உள்ளன! உன் தந்தை என்னைப் பிடித்து ஏனோ சிறையில் தள்ளி யிருக்கிறார்! தூய நீரருந்தி நீண்ட நாட்கள் ஆகின்றன! ஒரு குடம் நீரைக் கொண்டு வா! குடித்தது போக எஞ்சியதை நான் என் தலையில் ஊற்றிப் புனித நீராட வேண்டும்! குளத்தில் நான் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டன! யாரும் மாளிகையில் என்னுடன் இப்படிப் பரிவுடன் பேசிய தில்லை! கருங்குகையில் அடைபட்ட இந்த மனிதனை ஏனம்மா அழைத்து வந்தாய் ? உன் தந்தையின் பகைவனை ஏனம்மா இப்படி வரவேற்கிறாய் ? உன்னருமைத் தாய் வெறுக்கும் ஒரு வழிப்போக்கன் மீது ஏனம்மா உனக்குப் பரிவும், பாசமும் உண்டாகிறது ?

++++++++++++

காட்சி -1 பாகம் -5

‘நிலவின் மீது எட்டி என்னால் கையை வைக்க முடிந்தது! பூதள மட்டத்திற்குச் சற்று மேலே சிறிதளவு உயரம் ஏற முயல்வதில் என்ன பயன் உண்டு ? ‘

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

‘எப்போதெல்லாம் நான் கூறுவதை மாந்தர் ஒப்புக்கொள்கிறாரோ, அப்போதெல்லாம் நான் ஏதோ தவறாகச் சொல்லி விட்டதாக உணர்கிறேன்! ‘

ஆஸ்கர் வைல்டு

‘அவள் அளப்பரிய மன இச்சை கொண்ட மாது! ஒவ்வொரு வாய்ப்பிலும் அவள் இன்பத்தைத் தேடிச் செல்லும் முறை, காய்ந்த பாலை வனத்தில் நீர் கண்டுபிடிப்பதைப் போல் புரிந்து கொள்ள முடியாது! மேலும் விசித்திரமானது! ‘

‘என் அன்னையின் கடந்த கால வஞ்சக வாழ்க்கையைப் பற்றி எனக்குச் சிறிதேனும் கவலை யில்லை! அது எத்தனை கோரச் செயலாகக் கருதப் பட்டாலும், என் எதிர்கால நல்வாழ்வுக்கு அவள் புரிந்ததாக எண்ணிக் கொள்வேன். ‘

டேவிட் பார்க்கின்ஸ் [1934].

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் ஜுடேயா நாட்டில் காலிலீயின் ஆளுநர் ஏரோதியாஸ்: ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்புகிறாள்!

****

ஜொஹானன்: [பரிவோடு ஸாலமியைப் பார்த்து] அன்பைப் பொழியும் மங்கையே! எனக்கு தற்போது வேண்டியது, உண்டி யில்லை! நான் வேண்டுவது விடுதலை! செய்ய வேண்டிய அருட் பணிகள் அநேகம் உள்ளன! உன் தந்தை என்னைப் பிடித்து ஏனோ சிறையில் தள்ளி யிருக்கிறார்! தூய நீரருந்தி நீண்ட நாட்கள் ஆகின்றன! ஒரு குடம் நீரைக் கொண்டு வா! குடித்ததுப் போக எஞ்சியதை என் தலையில் ஊற்றி நானே புனித நீராட வேண்டும்! குளத்தில் நான் குளித்துப் பல நாட்கள் ஆகி விட்டன! யாரும் மாளிகையில் என்னுடன் இப்படிப் பரிவுடன் பேசியதில்லை! கருங்குகையில் அடைபட்ட இந்த மனிதனை ஏனம்மா வெளியில் அழைத்து வந்தாய் ? உன் தந்தையின் பகைவனை ஏனம்மா இப்படி வரவேற்கிறாய் ? உன் அருமைத் தாய் வெறுக்கும் ஒரு வழிப்போக்கன் மீது ஏனம்மா உனக்குப் பரிவும், பாசமும் உண்டாகிறது ?

நீ யார் ? எதற்காக இங்கு என்னை அழைத்து வந்தாய் ?

ஸாலமி: சொல்ல மாட்டேன்! யாரென்று சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது! நான் யாரென்று தெரியாமல் நடமாடுவதே நல்லது! நான் யாராய் இருந்தால் என்ன ? உங்களுடன் எனக்குப் பேச விருப்பம்! ஆனால் உங்களுக்கு விடுதலை அளிக்க முடியாது, என்னால்!

ஜொஹானன்: [சற்று கோபத்துடன்] யாரென்று சொல்ல நீயேன் தயங்குகிறாய் ? யாரென்று சொல்ல நீயேன் வெட்கப் படுகிறாய் ? உன்னைப் போல் வெட்கப் பட்டு ஒளிபவர் சிலர் இங்கே உலவி வருகிறார்! நீ அந்தப் பரம்பரையைச் சேர்ந்தவளா ? அருவருக்கத் தக்க கிண்ணத்தில் துரோக ஒயினை நிரப்பிக் குடித்து வருபவன் எங்கே உள்ளான் ? கொண்டு வந்து நிறுத்துவீர் அவனை! ஒருநாள் குடிமக்கள் முன்பாக விழுந்து சாகப் போகும், வெள்ளி அங்கி அணிந்தவ மனிதன் எங்கே இருக்கிறான் ? வெளியே இழுத்து வாருவீர் அவனை! எனக்கும் பெரியவர், இந்த நாட்டுக்கு அறிவூட்டப் பிறந்தவர் வருகிறார்! அரச மாளிகை முன்பாகவும், தெரு வீடுகள் முன்பாகவும் அறநெறி முழக்கி வருபவர், அவனுக்கும் தீர்ப்பளிக்கப் போகிறார்!

ஸாலமி: யாரைப் பற்றிக் கூறுகிறார் ? புரிய வில்லை எனக்கு! யார் தீர்ப்பளிக்க வந்து கொண்டிருக்கிறார் ?

ஸிரியா வாலிபன்: எனக்குத் தெரிய வில்லை இளவரசி.

இரண்டாம் காவலன்: ஜொஹானன் முன்பு புனித நீராட்டிய ஏசுக் கிறிஸ்து இங்கு வருவதைக் கூறுகிறார்.

ஜொஹானன்: கொலை செய்தாள் ராஜ மாது ஒருத்தி! கணவன் கழுத்தை நெரிக்க வழி வகுத்த அந்த ராணியை எங்கே ? இழுத்து வருவீர் இங்கே! காம இச்சையில் கண்களை யிழந்து, காதலன் மடி மீது கண் துயிலும் அந்த காரிகையை எங்கே ? கொண்டு வருவீர் அந்த மாதை! புதிய போதகர் அவளுக்குப் பாபத் தீர்ப்பு அளிப்பார்!

ஸாலமி: அரசாங்க ராணியா ? ஐயமின்றி என்னருமைத் தாயைத்தான் தூற்றுகிறார்! அவமானப் படுத்துகிறார்! அது எனக்கும்தான் அவதூறு! அன்னையைத் திட்டினால் என்ன ? அவள் பெற்ற என்னைத் திட்டினால் என்ன ? இரண்டும் ஒன்றுதான்!

ஸிரியா வாலிபன்: இல்லை! இல்லை இளவரசி! உங்களை அவர் திட்ட வில்லை! எந்தப் பாபமும் செய்யாதவர் நீங்கள்! எந்தப் பழியும் இல்லாதவர் நீங்கள்! அப்பழுக்கற்ற மங்கை நீங்கள்! தப்பாக உங்களை அவருடன் இணைத்துக் கொள்ள வேண்டாம்!

ஸாலமி: வாலிப நண்பனே! அவர் பழி சுமத்துவது என் அன்னையை! அதை என்னால் தாங்க முடியாது! அவருக்கு என் அன்னை மீது ஏனிந்த வெறுப்பு ?

ஜொஹானன்: எங்கே அந்த இழிவுற்ற மாது ? உன்னத ஆடம்பர உடையில், வெள்ளி உலோகக் காப்பி [Helmet] வைத்துப் பொன்னங்கி அணிந்து வல்லமை கொண்ட, வாலிப எகிப்தியனுக்குத் தன்னை ஒப்படைத்த அந்த பெண்ணை எங்கே ? மாற்றான் மாளிகைப் பூமெத்தையில் துயில் கொள்ளும் அந்த மமதை பிடித்த மாதைக் கொண்டு வருவீர்! பாபத்தீர்ப்பளிக்க போதகர் வருகிறார். அவரிடம் அந்த மாது பாப மன்னிப்புக் கேட்டு மன்றாட வேண்டும்! அவள் மன்னிப்புக் கேட்க மறுத்தாலும் ஏசுப் போதகர் பேசும் நெறி மொழிகள் அவள் செவிப்பறையில் ஆலயமணி போல் அடித்துக் கொண்டிருக்கும். இழுத்து வாருங்கள் அந்த அழுக்கு மாதை!

ஸாலமி: [மனம் வருந்தி காதுகளை மூடி] ஐயோ! தாங்க முடியாத வார்த்தைகள்! பயங்கர மனிதர்!

ஸிரியா வாலிபன்: இங்கே நிற்காதீர் இளவரசியாரே! உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! ஜொஹானன் வார்த்தைகள் கூரிய வாளைப் போன்றவை! மனிதரைப் பாவிகளாக்கிக் கொல்லும் பண்பைக் கொண்டவை!

ஸாலமி: அவரது கண்கள்தான் கூரிய ஊசிகளாகத் தோன்றுகின்றன எனக்கு! முகத்தில் இரண்டு குழிகளைத் தோண்டி அவற்றில் அக்கினிக் குஞ்சுகள் உள்ளன போல் தெரிகிறது! கருங்குகையில் கனல் பற்றிய இரண்டு விபரீதமான எரி நட்சத்திரம் உள்ளது போல் தெரிகிறது! மறுபடியும் அன்னையைத் திட்டுவாரா ? அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?

ஸிரியா வாலிபன்: அவரது வாயை யாராலும் மூட முடியாது! அவர் உங்கள் தாயைப் பற்றி அடுத்தும் அலற மாட்டார் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்! ஆனால் அதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடைவதைப் பார்த்து, என்னிதயம் பற்றி எரிகிறது! ஆகவே நீங்கள் இங்கு நிற்பது தகாது! இந்த இடத்தை விட்டு நீங்குவதுதான் சாலச் சிறந்தது!

ஸாலமி: காலத்தையும், வாலிபத்தையும் எப்படி வீணாகக் கழிக்கிறார், இந்த போதகர்! தகதக வென்று தந்தச் சிங்கம் போல், மனிதர் கம்பீரமாக நடக்கிறார்! மலைபோல் எழுந்த தோள்கள்! படர்ந்த மார்பு! உயர்ந்த வடிவம்! காடுபோல் வளர்ந்த தலைமயிர்! தங்க நாணயம் போல் மனிதர் மினுக்கிறார்! அவரைப் பார்த்தால் பிரமச்சாரி போல் தெரிகிறது! கறுத்த முகத்திலும் எப்படி ஒளி வீசுகிறது ? நான் அருகில் சென்று அவரைக் காண வேண்டும்! என் கண்களால் அவரது கண்களைக் கவ்வ வேண்டும்! என் காந்த சக்தி அவரைக் கட்டி யிழுக்க வேண்டும்! வலையில் அவரை மீனாய்ப் பிடித்துக் கைப் பொம்மையாய் வைத்துக் கொள்ள வேண்டும்!

ஸிரியா வாலிபன்: இளவரசி! இளவரசி! வேண்டாம், அவரை அண்டிச் செல்ல வேண்டாம்! என்னுடல் நடுங்குகிறது! சிங்கத்தின் வாயிக்கு முன் முயல் குட்டி போனால், முயலுக்குத்தான் ஆபத்து!

ஜொஹானன்: மறுபடியும் கேட்கிறேன்! யாரிந்த மங்கை ? என்னை ஏன் அப்படி உற்று நோக்குகிறாள் ? என்னை அவள் பார்க்கக் கூடாது! அவளது பார்வையில் பரிவு மாறி, பகட்டு தெரிகிறது! கண்களில் கனிவு மாறிக் கவர்ச்சி தெரிகிறது! எதற்காக அவளது வெள்ளி விழிகள் என்னை விரட்டுகின்றன ? அவள் யாரென்று அறிய நான் விழைய வில்லை! அவளைப் போகச் சொல்வீர்! அவளிடம் பேசவோ, அவள் அருகில் நிற்கவோ விரும்ப மில்லை எனக்கு! யாரென்று கேட்டாலும் சொல்லத் தயங்குகிறாள் அந்த மங்கை!

ஸாலமி: [பணிவுடன்] போதக மகானே! நான் யாரென்று சொன்னால், என்னை வெறுக்கக் கூடாது நீங்கள்! தெரிந்தால் திட்டக் கூடாது நீங்கள்! என்னை வெறுப்ப தில்லை என்றால் நான் யாரென்று சொல்லுவேன்!

ஜொஹானன்: நான் யாரையும் வெறுப்பவன் அல்லன்! ஆனால் பாபங்கள், பாவங்களைச் செய்த பாபிகளைச்

சபிக்கிறேன்! எதற்காக ? வரப் போகும் போதகர் முன் வந்து பாபத் தீர்ப்பு பெற்றுக் கொள்ளாமல், பயந்து ஒளிந்து கொள்ளும் பாபிகளை வெளியே வர அழைக்கிறேன்! பெண்ணே! ஏன் அஞ்சுகிறாய் ? பாபம் ஏதேனும் நீ செய்திருக்காயா ?

ஸாலமி: அருமைப் போதகரே! நான் எந்தப் பாபமும் புரியாதவள். நான் யாருக்குப் பிறந்தவள் என்று தெரிந்தால் உங்கள் ஆங்காரம் பெருகும் என்று அஞ்சுகிறேன்!

ஜொஹானன்: பாபம் ஏதும் புரியாத பாவையே! நீ யாரென்று சொல் முதலில்!

ஸாலமி: நான் ஸாலமி! ஏரோதியாஸின் ஏக புதல்வி! ஜுடேயாவின் இளவரசி!

ஜொஹானன்: ஓ! நீ பாப மாதின் புதல்வியா ? அப்படியானால் அருகில் வராதே! அப்புறம் செல்! பாபிலோன் புதல்வியே! கடவுள் தேர்ந்தெடுத்த மாந்தர் முன் நீ நிற்காதே! உன் அன்னை அநியாய ஒயினைப் பூமியெங்கும் சிந்தி விட்டவள்! அவள் புரிந்த பாபத்தின் அழுகுரல் மேலே போய் கடவுளின் காதிலும் பட்டு விட்டது! ஆனால் உன் மீது எனக்குச் சினமில்லை! என் கோபம் பாபியான உன் அன்னை மீதுதான்! ஆனாலும் நீ தள்ளி நில்! உன் நிழல் என் மீது விழக் கூடாது! உன் கண்ணால் என்னைத் தீண்டாதே!

ஸாலமி: என் மீது பரிவு காட்டுங்கள்! என் அன்னையின் பாபத்துக்கு நான் பொறுப்பாளி யில்லை! என் கண்ணால் உங்களைக் காணக் கூடாது என்று தண்டிக்க வேண்டாம் என்னை! என் நிழல் உங்கள் மீது படா விட்டாலும், உங்கள் நிழல் என் மீது படட்டும்! என் கால்களைக் கட்டி நிறுத்திக் கொண்டாலும், நீங்கள் எனக்குப் புனித நீராட்டுங்கள்! உங்கள் கனிவு பொழிகள் என் நெஞ்சை நிரப்பட்டும்! என் செவிகளில் தேனாக இனிக்கட்டும்!

ஸிரியா வாலிபன்: இளவரசி! இளவரசி! அவரை நினைக்காதீர்! ஏதோ அபாயம் நிகழ்வதற்கு அடித்தளம் அமைவது போல் தெரிகிறது! வேண்டாம் எழிலரசி!

ஸாலமி: போதகத் தூதரே! ஓதுவீர் உங்கள் புனித மொழிகளை! கேட்டு என் காதுகள் குளிரட்டும்! நான் என்ன செய்ய வேண்டு மென்று சொல்லுவீர்! உங்கள் ஆணைப்படி செய்வேன்!

ஜொஹானன்: ஸோடோம் நகரப் பெண்ணே! தள்ளி நில்! என்னருகே வராதே! முகத் திரையால் உன் முகத்தை மூடிக் கொள்! உன் முகத்தை நான் காண மாட்டேன்! தலையில் சாம்பலைக் கொட்டிக் கொண்டு, நீ பாலை வனத்துக்குச் சென்று கடவுளின் புதல்வரைத் தேடு! போ! தாமதிக்காதே!

ஸாலமி: யாரவர் அந்த கடவுளின் புதல்வர் ? அவர் உங்களைப் போன்ற ஆண் அழகரா ?

ஜொஹானன்: அழகைத் தேடும் மங்கையே! அது அறியாமை! அழகு ஒரு வானவில்! அது நிலை யற்றது! அழகை விட்டு நிலையான அறிவைத் தேடு! என்னைப் பின்பற்றி வா! அரண்மனை ஆடல் அரங்கில் மரண தேவனை எழுப்பும் முரசு தட்டப் படுகிறது! மங்கையே! மரண தேவனின் நிழல்பட்ட அந்த மாளிகையை விட்டு வெளியேறு!

ஸிரியா வாலிபன்: வேண்டாம், இளவரசி! வேண்டாம்! மரண தேவன் நிழல் கீழே யில்லை! அவனது நிழல் மாடிக்கு வந்து விட்டது! போதகர் பின்னே போக வேண்டாம்! அவர் பின்னே மயங்கிப் போவதுதான் ஆபத்தானது! நான் சொல்வதைக் கேளுங்கள்!

++++++++++++++++++++++++

 [காட்சி-1, பாகம்-6]

‘உன்னதக் கலைஞன் எவனும் கலைப் பொருட்களின் உண்மையான வடிவத்தையோ அல்லது பண்பையோ ஒருபோதும் காண்பதில்லை! அவ்விதம் நோக்கக் துவங்கினால், அவனைக் கலைஞனாக கருதுவது உடனே நிறுத்தப்பட்டு விடும். ‘

‘உண்மை எனப்படுவது புனிதமானது மில்லை! எளிமையானது மில்லை! ‘

‘சமூகம் குற்றவாளியைக் கூட மன்னித்து விடுகிறது! ஆனால் கனவு காண்பவனை ஒருபோதும் மன்னிப்ப தில்லை! ‘

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

இல்லற உறவில் வஞ்சகம் புரிபவர்,

பொல்லா நாக்கில் தேன்மொழி பொழிபவர்!

நச்சுப் பாதைப் போக்கினில் அழிபவர்!

பைபிள் பழமொழியிலிருந்து

+++++++++++++++++++++

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன! மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்! சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.

**********************

ஜொஹானன்: [ஸாலமியைப் பார்த்து] அழகைத் தேடும் மங்கையே! அது அறியாமை என்றுணர்! அழகு ஒரு வானவில்! அதற்கு ஆயுள் குறைவு! அது நிலையற்று மறைவது! அழகை விட்டு நிலையான அறிவைத் தேடு! என்னைப் பின்பற்றி வா! கீழே அரண்மனை ஆடல் அரங்கில் மரண தேவனை எழுப்பும் முரசும் தட்டப் படுகிறது! மங்கையே! மரண தேவனின் நிழல்படும் அந்த மாளிகையை விட்டு வெளியேறு! கீழே உலவி வந்த நீயும் மரண தேவனின் நிழலை மிதித்திருக்கிறாய்!

ஸாலமி: என் கண்களுக்கு மரண தேவனின் நிழல் தெரிய வில்லை! அவனது நிழல் எங்கிருந்தால், எனக்கென்ன ?

ஸிரியா வாலிபன்: அவ்விதம் நினைக்க வேண்டாம், இளவரசி! மரண தேவன் நிழல் கீழே யில்லை! அவனது நிழல் மாடிக்கு வந்து விட்டது! போதகர் பின்னே போக வேண்டாம்! அரண்மனை வாசி அல்லர் அவர்! அவர் சிறைவாசி! போதகரின் நிழலும் உங்கள் மீது விழ வேண்டாம்! மரண தேவன் நிழலை விடப் போதகரின் நிழல் பயங்கர மானது! அதன் பின்னே மயங்கிப் போவதுதான் ஆபத்தானது! நான் சொல்வதைக் கேளுங்கள்! நீங்கள் அவரைப் பின்பற்றினால், மரண தேவன் புத்துயிர் பெற்று உங்கள் பின்னே தொடர்வான்! அவனது காரிருள் நிழலில் கால் வைக்க வேண்டாம்! மரண தேவன் ஓரிடத்துக்கு வந்து விட்டால், வெறுங்கையுடன் அவன் மீள மாட்டான்! யாராவது ஓருயிரைப் பற்றிச் செல்வான்! எனக்குப் பயமாய் உள்ளது இள்வரசி! எந்த உயிருக்கு இன்று இறுதி நாளோ, நான் அறியேன்!

ஸாலமி: அஞ்சாத நெஞ்சன் இப்படி உயிருக்கு அஞ்சுவானா ? வாலிபனே! போகிற உயிரை நிறுத்த முடியுமா ? மரண தேவன் வலிமை மிக்கவன்! அவனது கை வாளுக்குத் தப்பியவர் யாருமில்லை! ஆனால் நான் பூஜிப்பது காதல் தேவனை! வாலிபனே! மரண தேவனை மறந்து, என்னைப் போல் காதல் தேவனை வரவேற்பாய்!

ஜொஹானன்: மரண தேவனை வரவேற்பவர் என்னருகே உள்ளது தெரிகிறது, எனக்கு! [மேல்நோக்கி] கையில் வாளேந்தி நிற்கும் கடவுளின் தூதனே! எதற்காக உன் வாளைத் தீட்டுகிறாய் ? பாழாய்ப் போகும் இந்தப் பாப மாளிகையில் யாருயிரைப் பற்றிச் செல்ல வந்திருக்கிறாய் ? வெள்ளி மேலங்கியில் மாண்டு விழப் போகும் மனிதனுக்கு இன்னும் அந்த மரண வேளை வரவில்லை!

ஸாலமி: [ஆர்வமுடன்] ஜொஹானன்! நீங்கள் போடும் புதிர் எனக்கு விளங்க வில்லை! புரியும்படி புதிரைப் புலப்படுத்துவீரா ?

ஜொஹானன்: ஸாலமி! என்னிடம் எதையும் கேட்காதே! எதுவும் பேசாதே! என் பெயரை உன் நாக்கில் உச்சரிக்காதே! என் முகத்தை உன் விழிகளால் நோக்காதே! நீயொரு கவர்ச்சி பெற்ற பிறவி! நானொரு கவர்ச்சி யற்ற துறவி!

ஸாலமி: உங்கள் கவர்ச்சி யற்ற தன்மையே என்னைக் கவரும்படி தூண்டுகிறது! ஏனிப்படி உங்கள் வாலிபத்தை நாசப்படுத்த விரும்புகிறீர் ? அத்துடன் என் வாலிபத்தையும் ஏன் ஏளனம் செய்கிறீர் ? மல்லிகைப் பூவைப் போல் வெள்ளை யானது உங்கள் மேனி! சிற்பி செதுக்கிய செப்புரு போன்றது உங்கள் உடற்கட்டு! ஜூடேயா மலை மீதுள்ள வெண்மையான பனிக்கட்டி போல் மின்னுகிறது உங்கள் தோற்றம்! அரேபியா நாட்டரசியின் தோட்டத்து வெண் ரோஜாக்கள் கூட தோற்றுப் போகும், உங்கள் வெள்ளை நிறத்திற்கு! பொழுது புலர்ந்ததும் கடல்நீர் மீது பளிச்சிடும், பரிதி வெண்ணிறம் உம் வெள்ளை நிறத்தைக் கண்டு வெட்க மடையும்! பசும்பாலின் வெண்மை நிறங் கூட உம்முடைய வெள்ளைக்கு ஈடாகாது! வெண்புறா ஒன்று உங்கள் தோள் மீது அமர விரும்புகிறது!

ஜொஹானன்: தள்ளி நில், வெண்புறாவே! வெள்ளை நிறத்தின் மீது மோகம் உனக்கு! நீ ஒரு நிறவெறி மங்கை! நிற்காதே என்முன்! மயக்கம் தருமிந்த மேனியின் வெண்ணிறம், பாலை வனத்தில் நடக்கும் போது காக்கை நிறமாகக் கருகிவிடும்! அதை நோக்கும் போது உனது கண்களில் கரிய மேகம் சூழ்ந்து, கனல் பற்றி விடும்! நிறத்தை வைத்து எடைபோடும் மங்கையே! நிற்காதே என்முன்! பெண்ணால்தான் தீய செய்கை யாவும் பூவுலகில் உண்டாயின! உன் விழிகளின் கணைகளை வேறு திக்கில் திருப்பி விடு! அவை ஒன்றும் என்னைத் தீண்டா! உன் புண்மொழிகள் என் செவியில் விழா! உன் பொய்மொழிகள் என் நெஞ்சைத் தொடா! கூர்மையான உன் ஆயுதங்கள் என் முன்பு மழுங்கிப் போய்விடும்! அவற்றை என்மீது ஏவி சோதனைச் செய்யாதே!

ஸாலமி: [வெறுப்புடன்] போதகரே! நான் முதலில் சொன்னது தவறு! பார்த்தால் உமது மேனி அருவருப்பை உண்டாக்குகிறது! குஷ்ட ரோகியைப் போல் தெரிகிறீர்! கட்டு வீரியன் பாம்புகள் ஊர்ந்து நெளிந்தது போல் தெரியும் சுண்ணாம்புச் சுவர் உமது உடல்! தேளினங்கள் கூடுகட்டிய சுண்ணாம்புக் குழிகள்! பயங்கரமாய்த் தெரிகிறது உமது உடல் தோற்றம்! பார்க்கப் பிடிக்க வில்லை பாறை போன்ற உமது மார்பை! ஆனால் என்னைக் கவர்வது, உமது தலை மயிர்! காடாக வளர்ந்து கனியாகக் காய்த்த, கருந் திராட்சைக் கொத்துபோல் தெரிகிறது! நிலவு முழுதும் மறைந்து போன அமாவாசைக் காரிருள் போல் உமது மயிர் காட்சி தருகிறது! உலகிலே கறுத்துப் போன உமது கரிய மயிரைப் போல், நான் எதுவும் கண்டதில்லை! அக்கரிய மயிரைத் தொட்டுப் பார்க்க ஆசை எனக்கு! எத்தனை அழகாக இருக்கிறது!

ஜொஹானன்: எட்டி நில் மங்கையே! கரத்தை நீட்டி என் சிரத்தைத் தொட உனக்கு அனுமதி யில்லை! அவமரியாதை புரியாதே கடவுளின் ஆலயத்தை!

ஸாலமி: நான் சொன்னது முற்றிலும் தப்பு! உமது தலை மயிர் காட்டுக் குப்பை போல் உள்ளது! குட்டிப் பாம்புகள் புற்றைக் கட்டி உள்ளது போல் தெரிகிறது! பாம்பாட்டி ஊதுகுழலில் ஊதித் தலைதூக்கும் நாகங்கள் போல் உமது மயிர்கள் உள்ளன! உமது மயிரைப் பிடிக்க வில்லை எனக்கு! என்னைக் கவர்வது உமது திருவாய்! நுங்குச் சுளைகள் போல் மென்மையான அதரங்கள்! முத்தமிடத் தகுதி பெற்ற உதடுகள்! முத்தமிட்டால் தேனூறும் கனிச் சுளைகள்! முத்தமிட்டால் திகட்டாத அமுதூறும் பலாச் சுளைகள்! செக்கச் சிவந்த உதடுகள்! அவ்விதம் சிவந்த அதரங்களைக் கண்டதில்லை நான்! அவ்வித உதடுகளை முத்தமிட்ட தில்லை நான்! அந்த அமுத அதரங்களை முத்தமிட ஆசை! ஆயினும் அனுமதி கேட்ட மனமில்லை! அருகில் வந்து முத்தமிடப் போகிறேன்!

[ஜொஹானனை நோக்கி வருகிறாள்]

ஜொஹானன்: அண்டி வராதே அகந்தைப் பெண்ணே! மதி கெட்டலையும் மங்கையே! அங்கேயே நில்! பித்துப் பிடித்து முத்தி விட்ட பேதைப் பெண்ணே! முத்தமிடவா எத்தனிக்கிறாய்! செத்து விட்டதா உன் சிந்தனை ? எதற்காக என்னைக் கொண்டு வந்து, இப்படி இழிவு செய்கிறாய் ? நித்தமும் வேதனைப்படும் பாபத்தைத் தேடுகிறாய்! தாயைப் போல பிள்ளை! கட்டிய கணவனை எற்றி விட்டு, மாற்றானுடன் படுத்து உறங்குகிறாள் உன் அன்னை! அந்தப் பாதகிக்குப் பிறந்த அகந்தைப் புதல்வி, பாபத்தில் என்னையும் தள்ள முனைகிறாள்!

ஸாலமி: ஜொஹானன்! போதும் உபதேசம்! துடிக்கிறது மனது! தடுக்காதீர் என்னை! கொடுக்க வேண்டும் ஒரு முத்தம்! ஒரு முத்தம் இல்லை! இரு முத்தம்! இல்லை! பல முத்தம்! [ஆசையோடு ஜொஹானனை நெருங்கிறாள்]

ஸிரியா வாலிபன்: [இடை மறித்து] இளவரசி வேண்டாம் இந்த அக்கினிப் பரீட்சை! உங்களை வெறுக்கும் ஒருவரை முத்தமிடக் கட்டாயப் படுத்துவது தப்பு! தப்பு! தப்பு!

ஸாலமி: [வாலிபனை விலக்கிக் கொண்டு] தள்ளி நில் வாலிபனே! என் விருப்பத்தைத் தடை செய்ய நீயார் ? குறுக்கே வராதே! அப்புறம் செல்!

ஸிரியா வாலிபன்: [குறுக்கே தடுத்து] அரச குமாரி! அந்த சாதுவைத் தொட வேண்டுமானால், என் செத்த உடல் மீதுதான் நீங்கள் நடக்க வேண்டும்! [கையில் தன் கத்தியை எடுக்கிறான்]. அவரை நீங்கள் முத்தமிடப் போவது சரியில்லை! அது மாபெரும் தப்பு!

இரண்டாம் காவலன்: வேண்டாம்! கத்தியை எடுக்காதே!

ஸாலமி: [ஆத்திரமுற்று] என்னுடன் போட்டியா போடுகிறாய்! உயிரைப் போக்கிக் கொள்வதாய் என்னைப் பயமுறுத்துகிறாயா ? என்னிடம் அது பலிக்காது! தள்ளி நில்! என்னைத் தடுக்காதே! [அவனைத் தள்ளிக் கொண்டு செல்ல முற்படுகிறாள்]

ஸிரியா வாலிபன்: [கத்திக் கொண்டு] என்ன செய்யத் துணிந்து விட்டாய் ஸாலமி ? நீ அவரைத் தொட்டால், என்னுயிர் அதைத் தாங்கிக் கொள்ளாது! என்னுயிர் ஈந்து உன்னுயிர் காப்பேன்! என்னுயிர் ஈந்து சாதுவைக் காப்பேன்! [கத்தியால் நெஞ்சைக் குத்திக் கொண்டு கீழே சாய்கிறான்]

[முதற் காவலன், இரண்டாம் காவலன், ஏரோதியாஸின் காவலன் அனைவரும் ஓடிவந்து வாலிபனைச் சுற்றி வருந்துகின்றனர்]

இரண்டாம் காவலன்: பாருங்கள், வாலிபன் தன்னையே குத்திக் கொண்டான்! பொங்கி எழுகிறது குருதி!

ஜொஹானன்: [அலறிக் கொண்டு, கீழே வாலிபன் பக்கத்தில் அமர்ந்து] அடிப் பாவி! உன்மேல் உயிரை வைத்திருக்கும் உன் காதலனைக் கொன்று விட்டாயே! உன் பரம்பரை அனைத்தும் பாபப் பிறவிகளா ? உங்கள் பரம்பரை நிழல் படும் இடமெல்லாம் பாபத்தின் கறைகள் நீளுகின்றன! அவனிட்ட எச்சரிக்கை எல்லாம் உன் செவியில் படவில்லையா ? மரண தேவனின் நிழல் வாலிபன் மீதா விழவேண்டும் ? பாபத்தைச் செய்த பாவையே, உன் பரம்பரைக்கே பாபத் தீர்ப்பு கிடைக்குமா ?

+++++++++++++++++

[காட்சி-1, பாகம்-7]

“இந்த உலகிலே இரண்டு விதமானத் துன்பமய விளைவுகள் மட்டுமே நிகழ்கின்றன!  ஒன்று: இச்சைவுடன் வேண்டிச் செல்வது ஒருவனுக்குக் கிடைக்காமல் போவது!  மற்றொன்று: இச்சையுடன் தேடிச் செல்வது, ஒருவனுக்குக் கிடைத்து விடுவது.”

“நம்மில் பலர் கழிவோடையில் மூழ்கிக் கிடக்கிறோம்!  ஆனால் நம்மில் சிலர் மட்டும் வானை நோக்கி விண்மீன்களைப் பார்க்கிறோம்.”

“முதியோரானதும் எல்லாவற்றையும் நம்புகிறார்!  மத்திம வயதில் ஒவ்வொன்றையும் சந்தேகிக்கிறார்!  வாலிப வயதில் அனைத்தையும் அறிய முனைகிறார்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

உன் தொட்டி நீரை நீ மட்டும் குடி! ஊறுகின்ற  

உன் கிணற்று நீரை நீ மட்டும் அருந்து!

பொங்கி வழிந்துன் ஊற்றுகள் தெருவில் ஓடினால், 

பொதுப் பாதையில் கரை புரண்டோ டினால்,

அதுவும் உனக்கே உரியதா கட்டும்! அந்நீரை

வேற்றானுடன் பகிர்ந்து கொள்ளுதல் தவறு!

உன் புனித ஊற்றுநீர் ஆசிகள் பெறட்டும்!

உன்னரும் மனையாள் உனக்கு மட்டும் உரியவள்!

அன்புக் குரிய உன் எழில் மனையாளின்

பொன்னுடல் உனக்கு மட்டும் சொந்தம்!

வஞ்சக மங்கையர் வசீகர உடல் தேடித்

தஞ்சம் அடைதல் தவறு! தவறு!

 

 

பைபிள் பழமொழியிலிருந்து

+++++++++++++++++++++++++++++++

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ·பிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(·பிளிப்: ஏரோத் ஆன்டிபாஸ¤க்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் :  நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.  இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள்.  அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.

*********************

இரண்டாம் காவலன்:  பாருங்கள், ஸிரியா வாலிபன், அப்பாவி தன்னையே குத்திக் கொண்டான்! பாவம், ஸாலமி மீது காதல் கொண்டவன் மாண்டு விட்டான்!  பொங்கி எழுகிறது குருதி!  மாண்டது ஸாலமியின் காதலன் மட்டு மில்லை!  மாண்டது மன்னரின் காப்டன்!  சமீபத்தில்தான் அவனை ஏரோத் மன்னர் காப்டனாய் நியமித்தார்!  ஆறாய் ஓடும் குருதியைக் கண்டால் மயக்கம் வருகிறது எனக்கு!

ஜொஹானன்:  [அலறிக் கொண்டு, கீழே வாலிபன் பக்கத்தில் அமர்ந்து]  அடிப் பாபி மகளே!  உன்மேல் உயிரை வைத்திருக்கும் உன்னருமைக் காதலனைக் கொன்று விட்டாயே!  உன் பரம்பரை அனைத்தும் பாபப் பிறவிகளா?  உங்கள் பரம்பரை நிழல் படும் இடமெல்லாம் பாபத்தின் கறைகள்தானா?  அவனிட்ட எச்சரிக்கை எல்லாம் உன் செவியில் படவில்லையா?  கடைசியில் மரண தேவனின் நிழல் உன் காதலன் மீதா விழவேண்டும்?  பாபத்தைச் செய்த பாவையே, உன் பரம்பரைக்கே பாபத் தீர்ப்பு கிடைக்குமா?  பாபத்தைச் சுமக்கும் உன்தாய், ஒரு பாபப் பிறவியைத்தான் பெற்றிருக்கிறாள்!

[ஸாலமி சற்று கவலையுடன் வாலிபனை உற்று நோக்குகிறாள்.  அவள் கண்களில் கண்ணீர் பெருகுகிறது]

ஸாலமி: [வருத்தமுடன் வாலிபன் அருகில் குனிந்து]  ஆம் வாலிபன் என்னைக் காதலித்தான்!  அது உண்மைக் காதல்தான்!  ஆனால் வாலிபன் சாவுக்கு என்னைக் காரணம் காட்டாதீர்!  என் மீது பழியைப் போடாதீர்!  என்மேல் காதல் கொண்ட வாலிபனுக்காக என் கண்கள் கண்ணீரை வடிக்கின்றன!  அவன் உடம்பிலிருந்து குருதி வெளியேறும் போது, என்னுடலில் குருதி கொதிக்கத்தான் செய்கிறது!  எனக்காக அவன் உயிரை ஏன் போக்கிக் கொள்ள வேண்டும்?  [ஜொஹானனைப் பார்த்து]  நான் ஒருவனைத்தான் நேசிக்க வேண்டுமா?  அதுவும் அவனை மட்டும்தான் நான் காதலிக்க வேண்டுமா?  என் மனம் மாறும் போது என் காதற் கண்கள் வேறொருவன் மீது பாய்கின்றன!  என்னால் அதைத் தடுக்க முடியவில்லை!  வாலிபன் அதை தடுக்க முனைந்தான்!  அவன் உயிரை அழித்துக் கொண்டாலும், என் மனம் ஏனோ மாறவில்லை!  போதகரே!  உங்கள் மீது எனக்குப் பரிவும், பாசமும், பற்றும் எப்படியோ உண்டாகி விட்டது!  வாலிபனுக்கு அது ஏனோ பிடிக்க வில்லை!  நானதற்கு என்ன செய்வேன்?  நான் ஒருவனை விரும்புவதும், அவனை அடுத்த வினாடி வெறுப்பதும் என்னுரிமை!  சிறிது நேரத்துக்கு முன்பு, வாலிபனைக் காதலித்தேன்!  அக்காதல் அத்தமனம் விட்டது! பொழுது புலர்வதுபோல் எனது புதிய காதல் உதயமாகி விட்டது! ஆனால் நானிப்போது விரும்புவது உங்களைத்தான்!  உங்கள் ஒருவரைத்தான்!  [எழுகிறாள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு]  நானிங்கு அடுத்து விடப் போகும் கண்ணீர் உங்களுக்குத்தான்!

ஜொஹானன்: [எழுந்து நின்று]  துரோகி ஏரோதியாஸின் புதல்வியே!  உன் கண்ணீர்க் கணைகளை என் மீது ஏவி விடாமல், உன் கைவசமே வைத்துக்கொள்!  என்ன நடந்து விட்டது என்று உனக்குப் புரிய வில்லையா?  உன் மனம் எங்கோ மேகத்தில் மிதந்து கொண்டிருக்கிறது!  அது அறுந்து அடுத்து யார் மீது விழப் போகிறதோ?  நான் சொன்னது நினைவில் இருக்கிறதா?  அரண்மனையில் மரண முரசம் அடிப்பது என் காதில் விழுந்த தென்று கூறினேன்!  ஆனால் அது உன் காதில் விழவில்லை!  மரண தேவன் நிழல் மாடிக்கு வந்துவிட்டது என்று எச்சரித்தேன்!  அதுவும் உனக்குப் புரியவில்லை!  மரண தேவன் ஓருயிரைப் பிடித்த பின்பும், மாடியை விட்டு ஏனோ அவனது நிழல் இன்னும் போகவில்லை!

ஸாலமி:  போதகரே!  மரண தேவனுக்கு நான் அஞ்ச வில்லை!  யாருக்கும் நானொரு வஞ்சகம் செய்ய வில்லை!  என் மீது உங்கள் சாபம் விழ வேண்டாம்!  உமது புனித உதடுகள் என் அதரங்களை  ஈர்க்கின்றன!  அவற்றை முத்தமிட எனக்கு அனுமதி கிடைக்குமா?

ஜொஹானன்:  வஞ்சகி வயிற்றில் உதித்த மகளே!  தள்ளி நில்!  உன்னைப் பாபத்திலிருந்து விடுவிப்பவன் நான் அல்லன்!  உத்தமர் அவரைத் தவிர உன்னைக் காப்பவர் யாருமில்லை!  போ! என் பின்னால் வராமல் அவரைத் தேடிப் போ!  காலிலீயிக்குப் போகும் படகில் அவர் ஏறி உள்ளார்.  சீடரும் அவருடன் செல்கிறார்.  கடல் கரைக்குச் சென்று நீ மண்டியிட்டு, அவர் பெயரை உச்சரித்து அன்புடன் விளித்திடு!  அழைப்பவரிடம் வருபவர் அவர்.  உன்னை நோக்கி வரும் போது, உன் சிரம் தாழ்த்திப் பாப மன்னிப்புக் கேள்!

ஸாலமி:  போதகரே! நானென்ன பாபம் செய்தேன், புனிதரிடம் மன்னிப்புக் கேட்க?  உங்களை நான் நேசிக்கிறேன்!  அது ஓர் பாபமா?  சொல்லுங்கள், அது ஓர் குற்றமா?  ஸாலமியை ஏற்றுக் கொள்வீர்! [அருகில் செல்கிறாள்].  என்னைப் பாருங்கள்!  என் அழகைப் பாருங்கள்!  உங்கள் வாலிபத்தை வீணாக்கலாமா?

ஜொஹானன்:  வாலிபப் பெண்ணே!  பொய்யான வாசகத்தை என்னிடம் பேசாதே!  உன் நேசம் பொல்லாதது! உன் பாசம் வில்லங்க மானது!  போதகனை நேசிக்க உனக்குத் தகுதி யில்லை!  என் தேகத்தை நீ நேசிக்கிறாய்!  தேய்ந்து மூப்புறு மிந்த உடலை நீ மோகிக்கிறாய்!  இல்லற வாழ்வில் பந்தமற்ற நான் ஒரு பரதேசி!  அவன் மேல் பாசமும், பற்றும் வைப்பது பாபச் செயல்! அந்த உத்தமர்தான் உன் மனதைச் சுத்தம் செய்பவர்!

ஸாலமி:  ஸாலமி என்று என்னை ஆசைடன் அழைத்தால் என்ன?  வாலிபப் பெண்ணே என்று விளிப்பது மனப் புண்ணை உண்டாக்குகிறது!  ஜொஹானன், ஏற்றுக் கொள்வீர் என்னை!  என்னை ஏற்றுக் கொண்டால், உமக்கு விடுதலை கிடைக்க நான் வழி செய்வேன்!  சிறைக்குள் விலங்கைப் போல் செத்துப் போக வேண்டாம்!

ஜொஹானன்:  பாபப் பெண்ணே!  தூரச் செல்! எனக்குக் குடும்ப வாழ்க்கையும் ஒரு சிறைதான்!  சின்னச் சிறையை விட்டுப் பெரிய சிறையில் என்னைத் தள்ளுகிறாய்!  உன் பெயரை என்னாவால் உச்சரிக்க மாட்டேன்! என் பெயரை நீயும் உரைக்கத் தகுதியற்றவள்! என்னை விடுவிக்க உன்னால் முடியாது!  எனக்கு விடுதலை அளிக்கும் வேந்தன் மேல் உலகில் உள்ளான்!  அவன் ஒருவனே விடுதலை தர வல்லவன்!  பாபப் பட்ட அன்னை வயிற்றுப் பெண்ணே, என் கோபத்தைக் கிளறி விடாதே! இங்கு நான் இனியும் நிற்கக் கூடாது!  நான் கீழே போகிறேன்! [ஜொஹானன் கீழே படிகளில் இறங்க முனைகிறார்]

ஸாலமி:  நான் முத்தமிடத் தகுதியற்றவள் என்றா என்னை ஒதுக்கிச் செய்கிறீர்!  ஒரு முத்தம் அளித்து விட்டுப் போவீர், போதகரே!  [ஜொஹானன் முன் சென்று கைகளை நீட்டித் தடுக்கிறாள்]

[ஸாலமியின் கைகளை ஒதுக்கிக் கொண்டு, ஜொஹானன் படிகளில் கீழிறங்கிச் சிறைக்குள் நுழைகிறார்.  காவலர் அவரை பின் தொடர்ந்து, கைவிலங்கு, கால் விலங்கிட்டுக் கதவைப் பூட்டுகிறார்]

முதற் காவலன்: [மரணமடைந்த வாலிபனைப் பார்த்து]  வாலிபன் உடலைத் தூக்கிப் போக வேண்டும்.  ஏரோத் மன்னருக்குத் தெரிந்தால் ஆபத்து!  செத்த உடலைப் பார்த்தால் மன்னர் சீற்ற மடைவார்!  சீக்கிரம் உடலைத் தூக்கி அப்புறப் படுத்த வேண்டும்.  அல்லது எங்காவது முதலில் மறைக்க வேண்டும்.

ஏறோதியாஸின் காவலன்:  [மனம் வருந்தி]  ஸிரியா வாலிபன் எனக்குச் சகோதரனைப் போன்றவன்!  சொல்லப் போனால் சகோதரனை விட பாச பந்தம் உடையவன்.  மாலை வேளைகளில் ஆற்றோரமாய் பலமுறை உலாவி வந்திருக்கிறோம்.  அவனது குரல் இனியது, புல்லாங்குழல் போல.

இரண்டாம் காவலன்:  ஆம், நீ சொல்வது சரிதான்.  உடலை எங்காவது மறைக்க வேண்டும். ஏரோத் மன்னர் கண்ணிலும் படக் கூடாது!  மரணச் செய்தி மன்னர் காதிலும் விழக் கூடாது!

முதற் காவலன்:  மேல் மாடிக்கு ஏரோத் மன்னர் வர மாட்டார்.  வந்தாலும் அவர் கண்ணில் படாமல் உடலை மாடியிலே மறைக்கலாம்!  ஆனால் குருதிக் கறையை எப்படித் துடைப்பது?  காய்ந்து போகும் சிவப்புக் கறையை முதலில் கழுவ வேண்டும்.

இரண்டாம் காவலன்:  [மெதுவான குரலில்]  எதுவும் பேசாதே!  அதோ ஏரோத் மன்னரும், அரசியும் மேல் மாடிக்கு வருகிறார்கள்!  சும்மா வெறும் துணியைப் போட்டு முகத்தை முதலில் மூடு.

மூன்றாம் காவலன்:  [விரைப்பாக நின்று அறிவிக்கிறான்]  மாண்புமிகு மன்னர் வருகிறார்!  மாண்புமிகு அரசியும் வருகிறார்!  ஒதுங்கி ஓரத்தில் நில்லுங்கள்.

[ஏரோத், ஏரோதியாஸ் மாடிக்கு வருகிறார்கள்.  அனைவரும் எழுந்து நின்று தலை தாழ்த்தி வணங்குகிறார்.  ஸாலமி ஓரத்தில் ஒதுங்கித் தம்பதிகளை பார்த்தும், பார்க்காமலும் முகத்தை திருப்பி வேறு திசையில் நோக்குகிறாள்]

ஏரோத்: [அங்கு மிங்கும் நோக்கி]  எங்கே ஸாலமி?  மேல் மாடிக்கு ஏறி வந்தவள் எங்கே போய்விட்டாள்?

நடன மாளிகைக்கு வரும்படி நான் சொல்லி யிருந்தேனே!  [அவளைக் கண்டு]  ஏரோதியாஸ்! அதோ பார்!  அங்கே யிருக்கிறாள், ஸாலமி!

ஏரோதியாஸ்:  [சற்று கோபத்துடன்]  ஸாலமி ஏன் தேட வேண்டும்?  என் மகள் மீது உமது கண்கள் விழக் கூடாது!  அவள் உங்களுக்கும் மகளைப் போன்றவள்!  எப்போதும் அவளை நீங்கள் நோக்கும் பார்வை எனக்குப் பிடிக்கவில்லை!  உங்கள் மோகக் கண்கள் அவள் மீது பட வேண்டாம்.

ஏரோத்: ஸாலமி உனக்குப் புதல்வி! எனக்குப் பிறந்தவள் இல்லை! அவளைப் போல் ஓர் அழகுத் தேவதையைப் பெற்ற உனக்கு என் வெகுமதி உண்டு.

ஏரோதியாஸ்:  வெகுமதி வாங்கிக் கொண்டு என் பெண்ணை உமக்கு விற்பதா?  கேவலமாக யிருக்கிறது!  என்னை ஏமாற்றியது போல் என் மகளையும் ஏமாற்றிவிட வேண்டாம்!  உமது கண்களில் காம இமைகள் நடன மிடுகின்றன!  உம்மிடமிருந்து ஸாலமியை எப்படிக் காப்பது என்று தெரியவில்லை எனக்கு.

ஏரோத்:  அஞ்சாதே!  உன் மகளுக்கு எந்த விபத்தும் நேராது!  அவளது நளின நடனத்தைக் காண விரும்புகிறேன்.  வேறெதற்கும் நானவளைத் தேடவில்லை.  ரோமாபுரி விருந்தினருக்கு ஸாலமியின் நளின நடனத்தைக் காட்ட விரும்புகிறேன்! .. அதோ நிலவைப் பார்!  நிலவைப் பார்த்தால் ஓர் விபரீதக் காட்சி தெரிகிறது!  அப்படி உனக்குத் தெரியவில்லையா?  காதலனைத் தேடி அலையும், ஒரு கன்னியைப் போல் உலவுகிறது, நிலவு! ஆடை அணியாமல் அமண நிலையில், உலா வருகிறது நிலா!  நிர்வாண நிலவுக்கு உடை அணிய, முகில் துணியைக் கொண்டு நெருங்குகிறது.  ஆனால் நிலவு உடை அணியாமல் நகர்ந்து கொண்டே செல்கிறது.  குடிகாரி போல் மேக மண்டலத்தில் தடுமாறுகிறது நிலவு!  காதலனைக் கவர நிலவு தன்னுடலைக் காட்டி வருவது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?

ஏரோதியாஸ்:  அப்படித் தெரிய வில்லை எனக்கு!  நிலவு நிலவாக உலவுகிறது!  நிலவு குடிகாரி போல் தெரியவில்லை!  குடிகாரர் போல் உளறுபவர் நீங்கள் ஒருவர்தான்!  நிர்வாண வடிவில் இருப்பது நிலவில்லை!  அமணமா யிருப்பது உங்கள் உள்ளம்!  உங்கள் கண்கள் நிர்வாணத்தைத் தேடி அலைகின்றன! வாருங்கள் கீழே போவோம்!  இங்கு வேலை எதுவுமில்லை நமக்கு!

ஏரோத்:  நீ கீழே போ!  நானிங்கு இளந் தென்றலை நுகர வேண்டும்.  கீழே மாளிகை சூடேறி விட்டது!  சூட்டைத் தாங்க முடியவில்லை என்னால்!  புதிய ஒயினைச் சுவைக்க வேண்டும்.  புதிய ஸிஸிலி ஒயினை, ஸீஸரின் பிரதான அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.  ஸாலமி அவர் முன்பாக நடனமாடி அவரைப் பூரிக்கச் செய்ய வேண்டும்.

ஏரோதியாஸ்:  உங்களைப் பூரிக்கச் செய்ய வேண்டும்.  எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் ஏனிங்கு தங்க நினைப்பது என்று.  ஸீஸரின் அதிகாரிகளை மயங்க வைத்து ஏதோ பெற முயற்சி செய்கிறீர்.  ஸாலமியைப் பகடைக் காயாக உருட்டி, அவரைச் சூதாட்டத்தில் வெல்ல நினைக்கிறீர்!

ஏரோத்: வேண்டாம், கீழே போகாதே, வா!  என்னருகில் வந்து நில்!  அப்போதுதான் ஸாலமி நம் பக்கத்தில் வருவாள்!  பொங்கி வரும் பெரு நிலவு போல, பூரித்த அவள் மேனியைக் கண்டு வீனஸ் அணங்கு கூட மோகிப்பாள்!  அழகுப் போட்டியிட வெட்கப் படுவாள்!  [நடக்கும் போது செங்குருதியில் கால் வழுக்கி]  என்ன?  இங்கே செங்குருதி ஆறாய் ஓடி யிருக்கிறது?  அது ஒரு கெட்ட சகுனம் அல்லவா?  இது மானிடக் குருதியா?  அல்லது விலங்கின் குருதியா? …. [சற்று உற்று நோக்கி]  ஆ! ஈதென்ன உடல்?  குத்துப் பட்டுக் கிடக்கிறதே?  செத்த உடலா என் காலடியில்?  [காவலரைப் பார்த்து]  செத்துக் கிடப்பவன் யார்?  மகத்தான விருந்தினர் முன்பு இப்படி ஒரு மரணக் காட்சியா?  யாரிவன்? [காவலரைப் பார்த்து]  முகத்துணியை நீக்கு!  யாரென்று நான் பார்க்க வேண்டும்!

முதற் காவலன்:  [முன் வந்து வணங்கி] மாண்புமிகு மன்னரே! நமது காப்டன்! ஸிரியா வாலிபன்!  மூன்று நாட்களுக்கு முன்பு தாங்கள் காப்டனாய் நியமித்த மாவீரன், நாராபாத்!

ஏரோத்:  அவனைக் குத்திக் கொல்லக் கட்டளை யிட்டதாக நினைவில்லை எனக்கு!

இரண்டாம் காவலன்:  மாண்புமிகு மன்னரே!  தன் கத்தியால் தானே தன்னைத் குத்திக் கொண்டார்!  யாரும் நம் காப்டனைக் கொல்ல வில்லை!

ஏரோத்: என்ன காரணம்?  எதற்காகத் தன்னையே குத்திக் கொண்டான்?  வியப்பாக யிருக்கிறது!  நமது காவலருக்குக் காப்பாளியான காப்டன், மரணம் அடையக் காரண மிருக்க வேண்டும்!  ஏன் குத்திக் கொண்டான்?  நடந்ததை நான் அறிய வேண்டும்!

இரண்டாம் காவலன்: மாண்புமிகு மன்னரே!  காரணம் எங்களுக்குத் தெரியாது.  தன் கையால் குத்திக் கொண்டதை மட்டும் நாங்கள் பார்த்தோம்.  காரணம் அறியோம்!

ஏரோத்:  ஆச்சரியமாய் இருக்கிறதே!  உங்களுக்குத் தெரியாதா?  அப்படியானால் யாருக்குத்தான் தெரியும்?

முதற் காவலன்: போதகர், ஜொஹானனுக்குத் தெரியும்!

ஏரோத்:  என்ன போதகரா?  கீழே இருட்டுச் சிறையில் விலங்கிடப் பட்டுக் கண்கள் அவிந்த போன அப்பாவிப் போதகரா?  அவருக்கு எப்படித் தெரியும்?  நிச்சயமாக அவர் காரணமாக யிருக்க மாட்டார்!

முதற் காவலன்:  சிறிது நேரத்துக்கு முன்பு, போதகர் மாடிக்கு அழைத்து வரப்பட்டார்!  ஸிரியா வாலிபன் மரண மடைந்ததை நேராகப் பார்த்தவர் அவர்! பார்த்து வேதனைப் பட்டவர் அவர்!  அவர் ஒருவருக்குத்தான் காரணம் தெரியும்!

ஏரோத்:  [ஆத்திரமுற்று, ஆவேசமாய்]  என்ன?  என்னைக் குழப்புகிறீர்!  போதகரை மேல் மாடிக்கு யார் இழுத்து வந்தது?  எனக்குத் தெரியாமல், என் கட்டளை யின்றிப் போதகரை அழைத்து வந்தவன் யார்?  யார் அந்த மூர்க்கன்?  சொல்லுங்கள், அவனைக் குத்திக் கொல்கிறேன், என் வாளால்!  [வாளை உருவுகிறார்]

[அத்தனைக் காவலரும் அஞ்சி நடுங்கிறார்கள்.  ஸாலமி ஏரோதை கடைக்கண்ணால் நோக்குகிறாள்.]

+++++++++++++++++

[காட்சி-1, பாகம்-8 ]

“நான் மெச்சத் தக்க, கவர்ச்சி மிக்க மூன்று மாதர்கள்:  விக்டோரியா ராணி, ஸாரா பெர்ன்ஹார்ட், லில்லி லாங்க்டிரி [Queen Victoria, Sarah Bernhardt, Lillie Langtry]. முதலில் கூறியவர்:  மேன்மை மிளிரும் பெருமிதம் கொண்டவர்;  இரண்டாமவர்:  உள்ளத்தைக் கனிய வைக்கும் இனிய குரலை உடையவர்;  மூன்றாமவர்:  காந்த சக்தி கொண்ட பூரண எழில் மேனி உடையவர்.  அம்மூவரில் எவரையேனும் நான் பூரிப்புடன் திருமணம் புரிந்திருப்பேன்.”

“ஒருவர் என்னைப் புகழும் போது, எனக்குப் பணிவுத் தன்மை உண்டாகுகிறது!  ஆனால் ஒருவர் என்னை இகழும் போது, நான் வானத்தின் மேலேறி விண்மீன்களைத் தொட்டு விட்டதாய் உணர்கிறேன்.”

“ஒவ்வொரு மேதைக்கும் இப்போதெல்லாம் சீடர்கள் பெருகி வருகிறார்கள்!  ஆனால் சுயசரிதை எழுதுபவன், எப்போதும் ஜூதாஸ்தான் [Judas]!”

“ஒரு புதிய நண்பனை நான் வாழ்க்கையில் உண்டாக்கிக் கொள்வது நடக்காத ஒரு நிகழ்ச்சி!  ஆனால் நான் மரணம் அடைந்த பின், சில நண்பர் ஏற்படுவதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.”

“உலகம் அறிந்தவற்றுள், கலைப் படைப்பு ஒன்றுதான் ஒருவரின் தனித்துவப் பண்பைத் தீவிரமாய்க் காட்ட வல்லது.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

மடிமேல் கனலை வைப்பதோ மனிதன்?

தொடையைச் சுட்டு எரித்திடும் முடிவில்!

எரியும் நிலக்கரி மேல்நட மாடினால்,

கரித்திடும் கால்கள் பிழைத்திட முடியுமா?

மாற்றான் வீட்டு மாதுடன் படுப்போன் 

தூற்றப் பட்டு தண்டனை பெறுவான்!

 

பைபிள் பழமொழியிலிருந்து.

+++++++++++++++++++++

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர்

ஏரோதியாஸ் : ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ·பிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(·பிளிப்: ஏரோத் ஆன்டிபாஸ¤க்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் : ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் :  நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் :  வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

+++++++++++++++++++++

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.  இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள்.  அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன் ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.

*********************

ஏரோத்:  [ஆத்திரமுற்று, ஆவேசமாய்]  என்ன?  என்னைக் குழப்புகிறீர்!  போதகரை மேல் மாடிக்கு யார் இழுத்து வந்தது?  எனக்குத் தெரியாமல் அழைத்து வந்தவன் யார்?  என் அனுமதி யின்றிப் போதகரை அழைத்து வந்தவன் யார்?  யார் அந்த மூர்க்கன்?  சொல்லுங்கள், குத்திக் கொல்கிறேன் அவனை, என் வாளால்! [வாளை உருவுகிறார்.  அத்தனைக் காவலரும் அஞ்சி நடுங்குகிறார்கள்.  ஸாலமி ஏரோதை கடைக்கண்ணால் நோக்குகிறாள்.]

முதற்காவலன்: [பயந்துகொண்டு]  நானில்லை!  மாண்புமிகு மன்னரே!

இரண்டாம் காவலன்: [பயந்துகொண்டு]  நானில்லை!  மாண்புமிகு மன்னரே!

மூன்றாம் காவலன்: [பயந்துகொண்டு]  நானில்லை!  மாண்புமிகு மன்னரே!

ஏரோத்: பிறகு யார் செய்தது?  [எரோதின் கண்கள் ஸாலிமியின் மீது விழுகின்றன]  யார்? ஸாலமி! சொல் உனக்குத் தெரியாமா?  உண்மையைச் சொல்!  சிறையில் கிடந்த போதகரை மாடிக்கு அழைத்து வந்தவன் யார்?  ஸாலமி!  உன்முகம் சொல்கிறது, உனக்குத் தெரியும் என்று!  [ஸாலமி அருகில் செல்கிறார்]

ஸாலமி:  [அஞ்சாமல்]  அழைத்து வந்தவனும் ஓர் ஆடவன்!  அழைக்க வேண்டாம் என்று தடுத்தவனும் ஓர் ஆடவன்!  ஆனால் அழைக்கச் சொன்ன …..!

ஏரோத்: [கொதிப்புடன்] யாரடா போதகரைச் சிறையிலிருந்து அழைத்து வந்தவன்?  யாரடா அதைத் தடுத்தவன்?

மூன்றாம் காவலன்:  [அலறி ஓடிப் போய் ஸாலமி காலில் விழுந்து]  இளவரசி! என்னுயிரைக் காப்பாற்றுங்கள்!  நான் குற்றவாளி யில்லை என்று மன்னரிடம் சொல்லுங்கள்!

ஏரோத்: [மூன்றாம் காவலனை மிதித்து]  அற்பப் புழுவே என்ன காரியம் செய்தாய்?  உன்னைத் துண்டு துண்டாய் வெட்டிக் கழுகுக்குப் போடுகிறேன்! …. ஸாலமி! புதிராக உள்ளது! ஏன் அவன் உன் காலில் விழுகிறான்?  என் காலில் அல்லவா அவன் விழ வேண்டும்?  அயோக்கியப் பயலே! உன் ஆயுள் முடிந்தது!  [வாளை ஓங்குகிறார்.]

ஸாலமி: [ஏரோதின் கையைத் தடுத்து]:  அவன் நிரபராதி.  அவனைக் கொல்ல வேண்டாம்!  கட்டளை போட்டவள் நான்!  கடமையைச் செய்தவன் காவலன்!  போதகரை அழைத்து வரச் சொன்னவள் நான்!  அவன் அழைத்து வந்தான், என் ஆணைக்குக் கட்டுப்பட்டு!  அவனைக் கொல்வது நியாய மில்லை!

ஏரோத்: [காலை அழுத்திக் கொண்டு, உச்சச் குரலில்]  ஏனடா என்னிடம் அனுமதி வாங்க வில்லை? ஸாலமி!  நீயா அழைத்துவரச் வந்தாய்?  ஏன்? ஏன்? ஏன்?  [ஏரோதியாஸைப் பார்த்து]  பார்த்தாயா உன் பெண்ணை!  சிறையில் அடைத்திருக்கும் போதகரை, அழைத்து வந்திருக்கிறாள் மாடிக்கு! என் அனுமதி யின்றி, எனக்குத் தெரியாமல் ஒரு சிறைக் கைதியை வெளியே கொண்டு வந்திருக்கிறாள்!  இது ஓர் துரோகச் செயல்!  உன் மகள் ஒரு ராஜ துரோகி! எப்படிப் பட்ட பெண்ணைப் பெற்றிருக்கிறாய்? எப்படி அவளைத் தண்டிப்ப தென்று நீ சொல்!  அவள் செய்த குற்றம் மிகப் பெரியது! பெரும் தண்டனைக் குரியது! சொல், எப்படித் தண்டிக்கலாம் ஸாலமியை?  [மனைவியை நெருங்குகிறார்]

ஏரோதியாஸ்: [கேலியாக]  சிறிது நேரத்துக்கு முன்புதான், எழில் மங்கையைப் பெற்றுத் தந்த என்னைப் பாராட்டினீர்!  இப்போது எப்படி அவளைத் தண்டிக்கலாம் என்று என்னைக் கேட்கிறீர்.  எந்த தண்டனையும் வேண்டாம்!  நான் தாங்கிக் கொள்ள மாட்டேன்.  அவள் விளையாட்டுப் பிள்ளை!  தெரியாமல் தவறு செய்து விட்டாள்!  மன்னித்து விடுங்கள், எனக்காக!

ஏரோத்:  அவளா விளையாட்டுப் பிள்ளை ?  அவள் கண் சிமிட்டினால், அத்தனை ஆடவனும் அடிமையாய் ஆகி அவளது காலணியைத் துடைப்பான்!  அவள் கையை அசைத்தால், ரோமாபுரி மன்னனும் அவள் முன் மண்டி யிடுவார்!  ஆயினும் ஸாலமி தண்டனைக் குரியவள்!  [ஸாலமியைப் பார்த்து]  கண்ணே, ஸாலமி! காரணம் தெரிய வேண்டும் எனக்கு! எதற்காகப் போதகரை அழைத்து வந்தாய்?  உண்மை எனக்குத் தெரிய வேண்டும்!  சொல், ஸாலமி சொல்! .. தாமதிக்காதே!

ஸாலமி: [தயக்கமுடன் தணிவாக] உண்மைக் காரணத்தைச் சொன்னால் தண்டனை கிடைக்குமா? தண்டனை கொடுத்தால் நான் உண்மையைச் சொல்ல மாட்டேன்!

ஏரோத்: ஸாலமி! பொய் சொன்னால் பெரிய தண்டனை!  உண்மையைச் சொன்னால் சிறிய தண்டனை!

ஸாலமி:  பெரிய தண்டனை என்றால் என்ன?  சிறிய தண்டனை என்றால் என்ன?  தண்டனையைத் தெரிந்து கொண்டுதான் நான் பதிலைச் சொல்வேன்!

ஏரோத்:  பெரிய தண்டனை என்ன தெரியுமா?  சிறையில் தள்ளுவது!  குறைந்தது பத்து வருடமாவது, நீ சிறைவாசம் செய்ய வேண்டும்!

ஸாலமி: சிறைவாசம் என்றால் ஜொஹானன் கிடக்கும் சிறையில் என்னைத் தள்ளுவீரா?  சிறிய தண்டனை என்பது என்ன?

ஏரோத்:  எப்போதிருந்து உனக்குப் போதகர் மீது ஆசை வந்தது?  செத்துக் கிடக்கும் ஸிரியா வாலிபன் அல்லவா உன்மேல் பித்தாகக் கிடந்தான்!  உனக்கும் அவன் மீது ஒரு கண்ணிருந்தது.  அப்பாவி ஸிரியன் ஏன் தன்னையே குத்திக் கொண்டான் என்பது தெரியவில்லை!  கம்பீரமான தோற்ற முடையவன்!  பராக்கிரமம் பெற்றவன்!  காப்டனாகப் பதவி ஏற்றவன்!  அவனை ஒதுக்கி விட்டாயா?  போதகர் மீது உனக்கு ஆசையா?  வியப்பாக உள்ளது!  உன் காதலை ஏற்றுக் கொள்ளும் குடும்ப மனிதர் அல்லர் அவர்!  அவர் ஒரு நாடோடி அல்லவா?

ஸாலமி:  ஆம்!  அந்த ஞானிமேல் எனக்குக் காதல்! பேச ஆரம்பித்தால் அறிவு வெள்ளம் கொட்டும் அந்தப் போகதர் மீதுதான் காதல்!  கண்களில் ஒளிரும் காந்த ஒளி! தங்கம் போன்ற மேனியில்தான் எத்தகைய காந்தக் கவர்ச்சி!  அவரை நான் பார்த்தது கிடையாது.  நேராகப் பார்க்கத்தான் மாடிக்கு அவரை அழைத்து வரச் சொன்னேன்!  அவரது கண்ணொளி என்மீது பட்டதும் உடல் பொங்கி எழுந்தது!  என்னாசையை மறைக்க முடிய வில்லை!  நானவரை முத்தமிட விரும்பினேன்!

எர்ரோதியாஸ்: [கோபத்துடன்]  அறிவு கெட்ட பெண்ணே! உன் தாயை வெறுக்கும் ஒரு சாதுவின் மேலா உனக்கு விருப்பம்!  உன் அன்னையைக் கண்டபடி திட்டும் ஒரு பரதேசி மீதா உனக்கு ஆசை?  உன்மேல் விருப்பம் கொண்ட ஸிரியா வாலிபனை ஏன் ஒதுக்கினாய்? .. அவன் பெரும் காப்டன் அல்லவா?  அப்படி நீ ஒதுக்கியதால் தாங்க முடியாமல், வாலிபன் தற்கொலை செய்து கொண்டானா? … ஸாலமி! சொல்!  வாலிபன் மரணத்துக்கு நீதான் காரணமா?

ஸாலமி:  [சீற்றத்துடன்]  நான் யாருடைய தற்கொலைக்கும் காரணமில்லை!  காப்டனுக்கு என்மீது காதல்! எனக்கு ஜொஹானன் மீது மோகம்!  ஆனால் போதகர் என் காதலைப் புறக்கணித்தார்!  வாலிபன் காதலை நான் புறக்கணித்தேன்!  இதுதான் இங்கு நடந்தது!  ஆனால் வாலிபன் தற்கொலைக்கு நான் காரண மில்லை!

ஏரோத்:  போதகர் கோபப்பட்டு உன்மீது சாபமிட வில்லையா?  எழலரசியின் பரிவை நாடுபவ ரில்லை!  எனக்குத் தெரியும் அவர் யாரென்று.  [பணிப் பெண்ணைப் பார்த்து]  யாரங்கே?  கொண்டுவா ஒயினை!  ஸிஸிலி ஒயினை!  [ஸாலமியைப் பார்த்து]  ஸாலமி! வா! வந்து என்னருகில் உட்கார்!  என்னுடன் ஒயின் அருந்து!  ஸிஸிலியின் ஒயின் நிரம்பச் சுவையாய் இருக்கும்!  ரோமா புரியிலிருந்து பேரரசர் சீஸர் பிரியமாக அனுப்பிய ஒயினிது!  அருகில் வா!  உன்னினிய அதரங்கள் அதில் திளைக்கட்டும்!  [பணிப் பெண்டிர் தட்டில் ஒயினைக் கொண்டு வருகிறார்கள்.]

ஸாலமி: [வெறுப்புடன்] வேண்டாம், தாகமில்லை எனக்கு!

ஏரோத்:  பார்த்தாயா உன்னருமை மகளை?  என்னையே உதாசீனப் படுத்துகிறாள்!

ஏரோதியாஸ்:  ஸாலமியைத் தீக்கண்களால் தீண்ட வேண்டாம் என்று உங்களுக்கு எத்தனை தடவை சொல்வது?  அவள் செய்வதுதான் முறையானது!  நான் உங்கள் அருகில் உள்ள போது, ஸாலமியை ஏன் கூப்பிட வேண்டும்?

ஏரோத்:  [பணிப் பெண்ணைப் பார்த்து]  கொண்டு வா கனிகளை! நன்கு பழுத்த கனிகளாய் எடுத்துக் கொண்டவா!  [ஸாலமியைப் பார்த்து]  வா, ஸாலமி!  என்னுடன் கனியைப் பகிர்ந்து தின்ன வா!  நீ கடித்த கனியை எனக்குக் கொடு!  நானதைச் சுவைத்துத் தின்னும் வாய்ப்பைக் கொடு!

ஸாலமி:  [வெறுப்புடன்]  எனக்குக் கனிகள் வேண்டாம்!  நான் கடித்த கனியை உமக்குத் தரப் போவதில்லை!  நான் கடித்த கனி எனக்குச் சொந்தம்!  பிறருக்குச் சொந்த மில்லை அது!

ஏரொத்: பார்த்தயா உன்னருமை மகளை!  எப்படி அடம் பிடிக்கிறாள் என்னிடமே?  அப்படி வளர்த்திருக்கிறாய் நீ!

ஏரோதியாஸ்:  ஏன்?  அதில் என்ன தப்பு?  நானும் என் மகளும் பரம்பரையாய் அரச குடும்பத்திலிருந்து வந்தவர்!  ஆனால் நீங்கள் எப்படி?  உமது தந்தை ஓர் ஒட்டக வர்த்தகர்! அதிலும் அவர் ஒரு பாலைவனக் கள்ளர்!  கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்!

ஏரோத்:  போதும்!  மூடு வாயை!  பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது போதும்! … [ஸாலமியைப் பார்த்து]  வா, ஸாலமி!  வந்து என்னருகில் உட்கார்!  உன் அன்னையின் ஆசனத்தை உனக்குத் தருகிறேன்!  என்னருகில் நீ அமர்ந்து, உன் அன்னைக்கு ஓய்வைக் கொடு!  அவளுக்கு வயதாகி விட்டது!  நீ வாலிபக் குமரி!  ஆசனத்தை அலங்கரிக்கும் வயது!  என்னுள்ளம் குளிர என்னருகில் உட்கார மாட்டாயா?  உனக்கென என்னாசனம் காத்திருக்கிறது!  உன் காதலனும் மாண்டு விட்டான்!  நீ விரும்பும் போதகரும் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்!  உன்னை நேசிப்பவன் நான் ஒருவனே! உன் வாலிபத்துக்கும், வனப்புக்கும் ஒருபெரும் வாய்ப்பு வருகிறது!  வா கண்மணி வா!  உனக்காக என் நெஞ்சு துடிக்கிறது!  உன்னழகிய மேனி என்னை மயக்குகிறது!  ஸாலமி! உன் கடைக்கண் பார்வைக்கு என்ன வெகுமதி கேட்பாய்?  என்னருகில் அமர என்ன பரிசைக் கேட்பாய்?  உண்மையைச் சொன்னதால் உனக்குத் தண்டனை சிறியது!

ஸாலமி:  என் அன்னை இருக்குமிடம் எனக்குரிய தில்லை!  என் அன்னையின் ஆசனம் எனக்குத் தேவை யில்லை!  அதென்ன சிறிய தண்டனை எனக்கு?

ஏர்ரொத்:  ரோமாபுரி அதிகாரிகள் முன்பாக நீ மயில்போல் ஆட வேண்டும்!  என் கண்களில் கனல் கொந்தளிக்க நீ பாம்பு நடனம் புரிய வேண்டும்!  அதுதான் நான் தரும் தண்டனை உனக்கு!  ஸாலமி!  உன்னாடலை இன்று நான் கண்டு களிக்க வேண்டும்!

ஏரோதியாஸ்:  என் மகள் மயில்போல் ஆட மாட்டாள்!  பாம்பு நடனம் புரிய மாட்டாள்!  பாம்பாட்டி முன்பு ஆட மாட்டாள்!  என் ஆசனத்தைப் பிடுங்கி என் மகளுக்குத் தருவதாய் எப்படி நீங்கள் ஆசை ஊட்டலாம்?  உங்கள் ஆசை ஒருபோதும் நிறைவேறாது!

ஜொஹானன் குரல்: [உச்சமாகக் கத்தி]  பாபிகளே! காலம் வந்து விட்டது, உங்களுக்கு! நான் முன்னறிவிப்பு செய்த தருணம் வந்து விட்டது!  உங்களுக்கு எச்சரிக்கை விட்ட வேளை வந்து விட்டது!  முடிவு காலம் யாருக்கோ நெருங்கி வந்து விட்டது!

ஏரோதியாஸ்: [கோபத்துடன், காவலரைப் பார்த்து]  அவர் வாயை மூடுங்கள் துணியால்!  அவர் விடுகின்ற எச்சரிக்கை எனக்கு!  எனக்குக் கேட்கவே வெறுப்பாக உள்ளது!  என்னை அவமானப் படுத்துகிறார் அவர்! பொல்லாத போதகர் வாயை அடக்க வேண்டும்!

+++++++++++++++++++++++

[காட்சி-1, பாகம்-9]

“கடவுள் எப்படித் தன் வேலைகளைச் செய்கிறார் என்று எவரும் சொல்ல முடியாது!  அவரது வழிமுறைகள் யாவும் இருட்டானவை!  நாம் தீயவை என்பவை நல்லவையாக இருக்கலாம்! நல்லவை என்று நாம் நினைப்பவை தீயவையாக இருக்கலாம்!  எவற்றைப் பற்றியும் தெளிந்த அறிவு நமக்கில்லை!  அவனுடைய விதிக்கு நாம் தலை வணங்குவதைத் தவிர வேறு வழியில்லை!  ஏனெனில் கடவுள் மிக்க பராக்கிரமம் படைத்தவர்!  வலியோனையும், மெலியோனையும் ஒன்றாகக் கருதித் துண்டு துண்டாக்க நறுக்குகிறார் கடவுள்!  ஏனென்றால் எந்த மனிதனையும் மதிப்பதில்லை கடவுள்.”

“கலைப் படைப்பு வாழ்க்கையைப் பிரதிபலிப்பது என்பதை விட, கலையை வாழ்க்கை எதிரொலிக்கிறது என்பது ஒரு பொதுக் கோட்பாடு என்று சொல்ல விரும்புகிறேன்.”

“ஓர் ஆடவனின் முகம் அவனுடைய சுயசரிதை!  ஆனால் ஒரு மாதின் முகம் அவளுடைய புனைகதைப் படைப்பு.”

“நாகரீக வளர்ச்சிப் படிகள் நடுவில் குறுக்கிடாது, காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து நேரே ஒழுக்கநெறிச் சிதைவுக்கு வழுக்கிய ஒரே நாடு அமெரிக்காதான்!”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

கூட்டைக் கலைத்து

வீட்டுப் புறாவை வெளியேற்றும்

வஞ்சனை மாதின் வசீகரப்

பஞ்சனையில் பள்ளி கொள்ளும், 

நெஞ்சமே! நிம்மதி

கொஞ்சமு மில்லை உனக்கு!

 

பைபிள் பழமொழியிலிருந்து.

+++++++++++++++++++++

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ·பிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(·பிளிப்: ஏரோத் ஆன்டிபாஸ¤க்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் :  நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

யூதர்கள்: மூவர்.

+++++++++++++++++++++

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.  இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள்.  அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஜொஹானன் மீது ஏரோதியாஸ் கோபப் படுகிறார்.

*********************

ஜொஹானன் குரல்: [உச்சமாகக் கத்தி]  பாபிகளே! விழித்தெழுவீர்!  காலம் வந்து விட்டது, உங்களுக்கு! நான் முன்னறிவிப்பு செய்த தருணம் வந்து விட்டது!  உங்களுக்கு எச்சரிக்கை விட்ட வேளை வந்து விட்டது!  முடிவுக் காலம் யாருக்கோ நெருங்கி வந்து விட்டது!  தேவர் மகனைத் தெரிசிக்கச் செல்வீர்!

ஏரோதியாஸ்: [கோபத்துடன், காவலரைப் பார்த்து]  அவரது வாயை மூடுங்கள் துணியால்!  அவர் விடுகின்ற எச்சரிக்கை எனக்குத்தான்!  கேட்கவே வெறுப்பாக உள்ளது! என்னை அவமானப் படுத்துகிறார் பரதேசி!  பொல்லாத போதகர் பல்லை உடைக்க வேண்டும்!

ஏரோத்: [அமைதியாக] அவர் மீது சினம் கொள்ளாதே! அவர் உன்னைப் பற்றிப் பேசவில்லை! உன்னை அவமானம் செய்யவு மில்லை!  மேலும் அவர் ஒரு போதகர்!  பொதுவாக எச்சரிப்பது பொதுநபரை! உன்னை யில்லை!  போதகரை நான் சிறைப்படுத்தினாலும், அவர் மீது எனக்கு மதிப்புண்டு!  புனித மனிதர் அவர்!

ஏரோதியாஸ்:  எனக்குப் போதகர் மீது நம்பிக்கை யில்லை!  அவரது புலம்பல் எனக்குத் தலைவலி உண்டாக்குகிறது!  எதிர்காலத்தை எப்படி ஒருவரால் கூற முடியும்?  அதுவும் முன்னதாக! எவராலும் கணிக்க இயலாது!  ஐயமின்றி அவர் குத்திக் காட்டுவது என்னைத்தான்!  உமக்கு அவரைக் கண்டால் அச்சம் உண்டாகுகிறது! அந்த அச்சத்தை மதிப்பு என்று என்னிடம் மூடி மறைக்க வேண்டாம்! எனக்குத் தெரியும், அவர்மேல் உமக்கு உள்ளது அச்சம்!  அஞ்சி அஞ்சிச் சாகும் நீங்களா எனக்கு ஆறுதல் கூறுவது?  நான் யாருக்கும் அஞ்சாதவள்!  அதனால் போதகர் பொய் வேடத்தை நான் நம்புவது மில்லை!  உம்மைப் போல்  அவரை நான் மதிப்பது மில்லை!

ஏரோத்:  போதகரிடம் எனக்குள்ளது பயமில்லை!  போதகரிடம் எனக்குள்ளது பரிவு, பணிவு, பாசம்!  எந்த மனிதனுக்கும் பயப்படுபவன் நானில்லை!  நீ அவருக்குப் பயப்படுவதால்தான் அவர் எச்சரிக்கையைக் கேட்டு நடுங்குகிறாய்!  அவரது வார்த்தைகள் உன் நெஞ்சில் ஊசிகளாய்க் குத்துகின்றன!  அவரது சொற்கள் என்னைக் குத்த வில்லையே!

ஏரோதியாஸ்:  கண்ணாளா!  அவர் ஏவி விடும் சொற் கணைகள் எனக்கு மட்டுமில்லை!  உமக்கும்தான்!  என்னை வஞ்சகி என்று வீதியில் அவர் வெடித்துப் பேசியதை என் செவிகள் கேட்டுள்ளன!  வஞ்சகியை மணந்த உங்களையும் அவர் தாக்குவது உமக்குப் புரியவில்லை!  உமக்கு அவரிடம் பயமில்லையா?  நான் சொல்கிறேன்!  அவருக்கு அஞ்ச வில்லை என்றால், ஏனவரைச் சிறையில் அடைத்து வைக்கிறீர்? விடுதலை செய்து வெளியே அனுப்புங்களேன்! [ஏரோத் தலையை யாட்டி மறுக்கிறார்] சரி, வேண்டாம்!  போதகரைப் பிடித்துப் போக யூதர் ஒருவர், ஆறு மாதமாய் உம்மைக் கெஞ்சுகிறாரே!  அவர் வசம் ஒப்பிவித்தால் என்ன?  அரண்மனை மாளிகையில் அவர் காத்திருக்கிறார்!  உபத்திரப் பரதேசியை ஒழித்துக் கட்ட நல்ல வழி உள்ளதே!  போதகரை யூதர் கையில் ஒப்படைத்து விடுவீர்!

முதல் யூதன்:  உண்மை மன்னரே!  உங்களுக்குத் தொல்லை வேண்டாம்! மகாராணிக்கும் தலைவலி தீரும்! அலறிக் கூப்பாடு போடும் அந்த போதகரை எங்களிடம் விட்டுவிடுவது நல்லது!  அவமதிக்கும் அவர் வாயைத் தைத்து விடுகிறோம் நிரந்தரமாக!  நிமிர்ந்த அவர் முதுகை முறித்துக் குனிய வைக்கிறோம்!  நீண்ட அவர் உயரத்தைப் பாதி ஆக்குகிறோம்.  ரோமாபுரிக் காலிஸியத்தில் சிங்கத்துடன் போரிட விட்டு விடுகிறோம்!  போதகரை யூதர் கைவசம் ஒப்படைப்பீர் மன்னரே!

ஏரோத்:  [கோபத்துடன்]  போதும் நிறுத்து!  அது படுகொலை!  மகாப் பாவம்!  போதகர் மதிப்புக் குரியவர்!  ஆதரிக்கப்பட வேண்டுய சாது அவர்! அவர் உயிரைக் கொல்ல உமக்குத் தகுதி யில்லை!  அவரைக் கொல்ல ஆட்கள் இல்லையா இங்கு!  குரங்குகள் கையில் பூமாலையைக் கொடுப்பதா?  முதலையின் வாயில் போதகரைப் போடப் போவதில்லை!  அவர் ஒரு புனித மனிதர்!  கடவுளைக் கண்ட மானிடர் அவர்!

இரண்டாம் யூதன்:  மாண்புமிகு மன்னா, அப்படி ஒருவர் கிடையாதே!  கடவுளைக் கண்ட மனிதன் இங்கில்லை!  அதுவும் போதகர் நிச்சயம் கடவுளைத் தெரிசித்தவராக இருக்க முடியாது!  யூதரின் போதகர் எளைஜாவுக்குப் [Elijah] பிறகு கடவுளைக் கண்டவர் வேறு யாருமில்லை!  கடைசியாக நேருக்கு நேர் கடவுளைத் தெரிசித்தவர் அவர் ஒருவரே!  இந்த காலத்தில் கடவுள் யாரிடமும் தன்னைக் காட்டிக் கொள்வதில்லை!  கடவுள் தன்னை எப்போதும் மறைத்துக் கொள்கிறார்.  அதனால்தான் நாட்டில் பேரிடர்கள் ஏற்படுகின்றன!

மூன்றாம் யூதன்:  ஆம், எளைஜா மெய்யாகக் கடவுளைக் கண்டார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?  எல்லாம் ஒரு கதைதான்!  பொதுமக்கள் பரம்பரையாய்க் கூறிவரும் பொய்க் கதைகள்!  அவர் கடவுளின் நிழலைப் பார்த்திருப்பார் என்பது என் கருத்து!  ஒருபோதும் எளைஜா கடவுளைக் கண்டிருக்க முடியாது!

இரண்டாம் யூதன்:  நீவீர் சொல்வது தவறு!  கடவுள் எப்போதும் மறைந்து கொள்வதில்லை.  அங்கிங் கெனாதபடி கடவுள் எங்கும் தன்னைக் காட்டிக் கொள்கிறார். நன்நெறியில் கடவுள் உள்ளதுபோல், தீய வினையிலும் கடவுள் இருக்கிறார்.  உம்மைப் போன்ற நம்பிக்கை அற்றவன் கடவுளைக் காண முடியாது!  எளைஜா மோன்ற தீர்க்க தெரிசிகள் முன்பாக கனல் வடிவத்தில் காட்சி தருகிறார் கடவுள்!  நமது வழிகாட்டி மோஸஸ் முன்பாகக் கடவுள் கனல் வடிவத்தில் காட்சி அளித்து, பத்துக் கட்டளைப் பாறையைப் படைக்க வில்லையா?

மூன்றாம் யூதன்:  “கடவுள் எப்படித் தன் வேலைகளைச் செய்கிறார் என்று எவரும் சொல்ல முடியாது! அவரது வழிமுறைகள் யாவும் இருட்டானவை!  நாம் தீயவை என்பவை நல்லவையாக இருக்கலாம்! நல்லவை என்று நாம் நினைப்பவை தீயவையாக இருக்கலாம்!  எவற்றைப் பற்றியும் தெளிந்த அறிவு நமக்கில்லை!  அவனுடைய விதிக்கு நாம் தலை வணங்குவதைத் தவிர வேறு வழியில்லை!  ஏனெனில் கடவுள் மிக்க பராக்கிரமம் படைத்தவர்!  வலியோனையும், மெலியோனையும் ஒன்றாகக் கருதித் துண்டு துண்டாக நறுக்குகிறார் கடவுள்!  ஏனென்றால் எந்த மனிதனையும் மதிப்பதில்லை கடவுள்.”

முதல் யூதன்:  நீர் சொல்வது உண்மைதான்!  கடவுள் ஒரு பயங்கர வாதி!  செக்கில் தேங்காய் அறைப்பது போல் வலியோனையும், மெலியோனையும் ஒன்றாய்க் கருதித் துண்டு துண்டாக முறிக்கிறான்!  ஆனால் மனிதன் தன் ஊனக் கண்களால் கடவுளை இதுவரைக் கண்ட தில்லை!  எளைஜாவைத் தவிர எவரும் கடவுளைப் பார்த்த தில்லை என்று நானும் சொல்கிறேன்!

ஏரோதியாஸ்:  [கோபத்துடன்]  போதகர் வாய் மூடியுள்ள போது, யூதர் வாய்கள் ஏன் புலம்புகின்றன?  வாயை மூடச் சொல்லுங்கள்!  கடவுளைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?  யார் பார்த்தார், யார் பார்க்க வில்லை என்று ஏன் போராடாடுகிறார்?  யூதர் பார்த்தாலும், பார்க்கா விட்டாலும் கடவுள் எங்கோ இருக்கிறார் என்பது உண்மை!  எளைஜாவைப் பற்றியும் யூதருக்குள் தர்க்கமா?

ஏரோத்:  நான் கேள்விப் பட்டது, ஜொஹானன்தான் யூதரின் மெய்யான எளைஜா வென்று!

இரண்டாம் யூதன்:  அப்படி யிருக்க முடியாது!  முன்னூறு ஆண்டுகளுக்கு போதகர் எளைஜா யூதர்கள் நடுவே உபதேசித்து வந்தார்.  அவர் ஜொஹானன் உருவத்தில் நிச்சயம் வர முடியாது!

நாஜரீன்:  உறுதியாகச் சொல்லுகிறேன், ஜொஹானன்தான் போதகர் எளைஜா!

முதல் யூதன்:  எளைஜாவைப் போல் தெரிந்தாலும், ஜொஹானன் எளைஜாவின் மதிப்பையும் நிலையையும் பெற மாட்டார்!

ஜொஹானன் குரல் [கீழிருந்து வருகிறது]  கேளுங்கள் பாபிகளே!  தேவன் உங்களுக்குத் தீர்ப்பளிக்கும் தினம் நெருங்கி விட்டது!  உலகைக் காப்பாற்றப் போகும் உத்தமரின் கால் தடம் மலைமேல் நடக்கும் அரவம் என் செவில் விழுகின்றது!  அவர் உம்மை நோக்கி இங்கே வருகிறார்!

ஏரோத்:  உலகைப் காப்பாற்றப் போகும் உத்தமர் என்றால், யாரவர்?  அத்தனை பெரிய அதிபதி யார்?

டைஜில்லினஸ்: எங்கள் ரோமாபுரித் தளபதி ஸீஸரைத்தான் ஜொஹானன் குறிப்பிடுகிறார்!

ஏரோத்:  உங்கள் ரோமாபுரித் தளபதி ஸீஸர் எங்கே ஜுடேயாவுக்கு வருகிறார்?  நேற்றுத்தான் எனக்குக் கடிதம் வந்துள்ளது!  ஸீஸர் ஜுடேயாவுக்கு வருவதாகத் தகவல் அதில் கிடையாது.  டைஜில்லி! நீ ரோமாபுரியில் உள்ளபோது, இங்கு ஸீஸர் விஜயம் செய்யப் போவதைப் பற்றி எதுவும் அறிந்தாயா?

டைஜில்லினஸ்:  நான் ஒன்றும் அதைப் பற்றி அறிய வில்லை!  உலகத்தைக் காப்போன் என்னும் பட்டம் மாவீரர் ஸீஸருக்கு வழங்கப் பட்டதைத்தான் நான் சொல்கிறேன்!  வேறொன்று மில்லை!

ஏரோத்:  ஆனாலும் ரோமாபுரி மாவீரர் ஸீஸர் எம் நாட்டுக்கு வரப் போவதில்லை!  அவர் வரவும் முடியாது!  ஸீஸருக்கு எலும்பு முட்டு வலி என்பதாகக் கேள்விப் பட்டேன்.  யானைக்கால் நோய் பீடித்திருப்பதாகவும் கேள்விப் பட்டேன்!  மேலும் ரோமில் உள்நாட்டுப் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்றும் கேள்விப் பட்டேன்!  ரோமை விட்டு எந்த தளபதி நீங்குகிறானோ, அவன் ரோமை யிழப்பான் என்பது முதுமொழி! ஸீஸர் வரவே முடியாது!  உறுதியாகச் சொல்கிறேன்.

++++++++++++++++

[காட்சி-1, பாகம்-10]

பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும்

தேவ தூதனாய்ப் பிறக்குது!

ஆயின் பின்னால் ஓர் அயோக்கியனாய்

மாறிப் போவது வருந்தத் தக்கது!”

 

இம்ரி மடாக் ஹங்கேரி நாடக மேதை [Imre Mada’ch (1829-1864)]

கேளாய் மகனே! வாலிபம் போகுது!

எந்தன் மகனே! இதுதான் தருணம்!

தனித்தது போதும்! தாமதம் ஏனினி?

சிந்தனை செய்திடு! சீக்கரம் தேர்ந்தெடு!

இனித்த முடைய மனைவியைத் தெரிந்தெடு!

எனப் பணித்தார் தந்தை.

 

அது சரி அப்பா! யாருடைய மனைவியை? என

மெதுவாய்க் கேட்டான் மைந்தன்!    

தாமஸ் மூர், ஐரிஷ் கவிஞர் [Thomas Moore (1779-1852)]

“ஆணுக்கும், பெண்ணுக்கும் நட்பு உண்டாக முடியாது!  அவருக்கிடையே உண்டாவது:  இச்சை, பரிவு, பகைமை, காதல், மோதல், காமம், சமர்ப்பணம், மதிப்பு, வழிபாடு;  ஆனால் நட்பில்லை!”

“பெர்னாட் ஷாவுக்குப் பகைவர் ஏற்படும் அளவுக்குப் பேரும் புகழும் கிடைக்க வில்லை!  அதே சமயம் அவரது நண்பர் எவரும் அவரை விரும்புவதில்லை.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

வஞ்சகி வாயில் ஊறிடும் தேன்துளிகள்!

வாய்மொழி யாவும் மெழுகினும் மென்மொழிகள்!

முதலில் இனிப்பவை! முடிவில் கசப்பவை!

இருபுறம் கூரியப் போர்வாள் போன்றவள்!

கோர முடிவுக்கு முனையும் கரங்கள்!

நேராய்க் காலடி வைப்பதிடு காட்டில்!

நெறியிலா வாழ்வென நினைந்திட மாட்டாள்!

முறிந்திடும் வாழ்வை அறிந்திட மாட்டாள்!

பைபிள் பழமொழியிலிருந்து.

நாடக நபர்கள்:

ஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee

ஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி

ஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ·பிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.

(·பிளிப்: ஏரோத் ஆன்டிபாஸ¤க்கு மாற்றாந்தாய் சகோதரன்)

ஜொஹானன் (Johanan): ஜான், புனித நீராட்டி

ஏரோதியாஸின் சேடியர், காவலர்

ஸிரியா வாலிபன் :  நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்

சேனைக் காவலர்.

கப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.

நியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.

யூதர்கள்: மூவர்.

நாஸரீன் [Nazarene], மற்றும் ரோமாபுரி டைஜெல்லினஸ் [Tigellinus]

+++++++++++++++++++

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.  இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள்.  அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.

*********************

ஏரோத்:  ஆனாலும் ரோமாபுரித் தளபதி ஸீஸர் எம் நாட்டுக்கு வரப் போவதில்லை!  அவர் வரவும் முடியாது!  ஸீஸருக்கு எலும்பு முட்டுவலி என்பதாகக் கேள்விப் பட்டேன்.  யானைக்கால் நோய் பீடித்திருப்பதாகவும் கேள்விப் பட்டேன்!  மேலும் ரோமில் உள்நாட்டுப் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்றும் கேள்விப் பட்டேன்!  ரோமை விட்டு எந்த தளபதி நீங்குகிறானோ, அவன் ரோமை யிழப்பான் என்பது முதுமொழி! ஸீஸர் வரவே முடியாது!  உறுதியாகச் சொல்கிறேன்.

நாஸரீன்:  போதகர் எச்சரிக்கை விடுவது ஸீஸருக்கில்லை!  அவை உங்களில் ஒருவருக்கு!  எவருக்கோ எனக்குத் தெரியாது!

ஏரோத்:  என்ன?  மாவீரர் ஸீஸருக்கு எச்சரிக்கை இல்லை என்றால், பிறகு யாருக்கு?

நாஸரீன்:  வரப் போகும் தேவ தூதரை வரவேற்கும்படி முன் அறிவிப்பு செய்கிறார்!  அதற்கும் ரோமாபுரி ஸீஸருக்கும் எந்த உடன்பாடு கிடையாது!

முதல் யூதன்:  தேவ தூதர் எனப்படுபவர் வரப் போவதில்லை!  ஏனெனில் கடவுளின் தூதர் இன்னும் யூதர் பூமியில் பிறக்கவே யில்லை!  ஜொஹானன் யாரோ ஒருவரைச் சொல்கிறார்!  அவரை நாங்கள் கடவுளின் தூதராக ஏற்றுக் கொண்டது மில்லை! போற்றிப் பின்பற்றுவது மில்லை!

நாஸரீன்:  அறிவில்லாமல் உளராதே!  கடவுளின் தூதர் வருகிறார் என்பது உண்மையே!  யார் தெரியுமா? ஜொஹானன் புனித நீராட்டிய ஏசு நாதர்! மெய்யாகவே அவர் ஒரு தேவ தூதர்!  ஐயமின்றி அவர் மாபெரும் குரு!  அவர் வந்த வழியெல்லாம் விந்தை புரிந்து வருகிறார்!  அற்புதங்கள் புரிந்து வருகிறார்!  அறநெறி விதிகளை மக்களுக்கு உபதேசித்து வருகிறார்!  மக்கள் பலர் மந்தையாக அவர் பின்னால் போகிறார்!  பலர் அவரது சீடராகச் சேர்ந்திருக்கிறார்!

ஏரோதியாஸ்: [கொல்லெனச் சிரித்து]  ஹோ! ஹோ!  அற்புதங்களா?  மனிதன் செய்கிறானா?  எங்கே அற்புதங்கள் நடக்கின்றன?  எனக்கு அற்புதங்கள் மீது துளிகூட நம்பிக்கை யில்லை! போலித்தனத்தை எல்லாம் அற்புதம் என்று பொதுமக்கள் நம்புகிறார், குருட்டுத்தனமாக!  மந்திர வித்தைகள், விந்தை அற்புதங்கள் எல்லாம் காட்டி, ஆள்சேர்க்கும் கூட்டத்தார் அவர்கள்!

முதல் நாஸரீன்:  மாண்புமிகு ராணியாரே! ஏசு நாதர் ஒரு தேவ தூதர்!  அவர் அற்புதம் செய்ததை நான் நேராகக் கண்டவன்!  அவை மெய்யாக நடந்தவை!  காலிலீ ஊர்ப்புறத்தில் நடந்த திருமணப் பந்தியில் அருந்தும் ஒயின் இல்லாமல் போகவே, அவர் நீரை ஒயினாக மாற்றினார்!  அந்த திருமண விழாப் பந்தியில் ஒயின் குடித்த சிலர் எனது உற்றார், உறவினர்!  அவர்கள் என்னிடம் கூறிய உண்மை அற்புதம் அது!  காபர்நாம் என்னுமிடத்தில் குஷ்டரோகி இரண்டு பேர் மீதுக் கனிவு கொண்டு கைகளால் தடவிச் சுகமாக்கினாராம்!

இரண்டாம் நாஸரீன்:  இல்லை!  இல்லை!  காபர்நாம் ஊர்ப்புறத்தில் குருடருக்குக் கண்ணொளியைக் கொடுத்தார். குஷ்டரோகி அல்லர் அவர்!

முதல் நாஸரீன்:  நீ சொல்வது தப்பு. நலமாக்கப் பட்ட அவர்கள் மெய்யாகத் தொழுநோய் பீடித்தவர்!  நீ சொல்வது போல் குருடர்களுக்கும் கண்ணொளி அளித்துள்ளார், ஆம் வேறு ஓரிடத்தில்!  அவை மட்டுமல்ல! மலை மேலேறி அவர் தேவதைகளோடு உரையாடி வந்திருக்கிறார், தெரியுமா?

சாதுஸி:  அறிவு கெட்டவனே!  தேவதைகள் எங்குமே கிடையாது!  அவர் சும்மா மலையேறி வந்திருக்கிறார்!  நாம் அதே மலைமேல் ஏறிப் போயிருக்கிறேன்!  என் கண்களுக்குத் தேவரோ, தேவதையோ தென்பட வில்லை!  அவர் கண்ணில் தெரிந்தால், ஏன் என் கண்களில் தெரிய வில்லை!

பார்ஸி:  அப்பனே! நீ சொல்வது தப்பு!  தேவதைகள் வானில் உள்ளார்!  ஆனால் அந்த காலநடைப் பரதேசி தேவதைகள் கூடப் பேசியதை நான் நம்ப மாட்டேன்!

ஏரோதியாஸ்:  [வெறுப்புடன்]  ஏனிந்த மூடர்கள் கேனத்தனமாய் இப்படிச் சச்சரவு உண்டாக்கிச் சண்டை போட்டு என் மண்டைக்குத் தலைவலியைத் தருகிறார்?

இரண்டாம் நாஸரீன்:  மாண்புமிகு மன்னரே!  செத்தவரைக் கூட அவர் பிழைக்க வைத்திருக்கிறார்.  யூதர் ஆலயக் குரு ஜெய்ரஸின் மரித்த மகளை உயிர்ப்பித்திருக்கிறார்.  மரணப் படுக்கையில் பனிரெண்டு வயது மகள் கிடக்கும் போது பேதலித்த தந்தை, அவர் முன்பு மண்டியிட்டு மகளைக் காப்பாற்றும்படிக் கதறிக் கேட்டார்!  ஏசு நாதர் ஜெய்ரஸ் வீட்டுக்கு விரைந்து செல்லும் போதே, மகள் செத்து விட்டதாகச் செய்தி எட்டியது!  ஆயினும் தன்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்லும்படி ஜெய்ரஸை வேண்டினார்!  மரித்து விட்ட மகளைக் கண்டு கதறிய ஜெய்ரஸைப் பார்த்து ஏசு நாதர் சொன்னார்,”அழாதீர்கள்! அவள் சாகவில்லை! தூங்கிக் கொண்டிருக்கிறாள்.  அவ்வளவுதான்!”  அவள் அருகே சென்று அவளை எழுந்திட ஆணையிட்டார்!  ஆச்சரியப் படும்படி அவள் உயிர்த்து எழுந்தாள்!  அவளுக்கு உண்ண உணவு அளிக்கவும், அந்த நிகழ்ச்சியை யாருக்கும் தெரிவிக்கக் கூடாதென்றும் ஏசு நாதர் கேட்டுக் கொண்டார்.  ஜெய்ரஸ் பூரித்துப் போனார்!  பொதுமக்கள் வியப்படைந்து போனார்!

ஏரோத்:  [கோபமாக] என்ன செத்தவளை அவர் உயிர்ப்பித்தாரா?  எப்படி?  அவரென்ன கடவுளா?  என்னால் நம்ப முடிய வில்லையே!

முதல் நாஸரீன்:  ஆம் மன்னரே!  ஏசு நாதர் செத்துப் போன ஜெய்ரஸ் மகளை உயிர்ப்பித்து எழுப்பியது உண்மைதான்!  அந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமில்லை!  அதுபோல் பிறகும் இருவருக்கு உயிரை மீட்டுத் தந்திருக்கிறார்!

ஏரோத்: [மிகவும் கவனமுடன்]  அவர்கள் யார்?  செத்தவரை உயிர்ப்பித்து மீண்டும் பிழைக்க வைப்பது தவறான மனிதப் பணி!  என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத புனிதப் பணி!  செத்தவ ரெல்லாம் பிழைத்து மீண்டும் வாழ வந்தால், என் நாட்டில் பஞ்சம் உண்டாகிவிடும்!  உண்ண உணவில்லாமல் போகும்!  குடிக்க நீரில்லாமல் போகும்!  இருக்க வீடில்லாமல் போகும்!  மக்கள் தொகை ஏறிக்கொண்டே போய்விடும்!

+++++++++++++++++++++

[காட்சி-1, பாகம்-11]

“ஒளிமயமான எதிர்காலம் உள்ள ஆடவரைப் பிடிக்கிறது எனக்கு!  அதுபோல் கடந்த காலம் சிறப்பாக உள்ள மாதரின் மீதும் பெரு மதிப்புள்ளது எனக்கு.”

“இந்த உலகம் ஆடவருக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது!  பெண்டிருக்காக அமைக்கப் படவில்லை.”

“மாதர்கள் எதனையும் கண்டுபிடித்திடுவார்கள், வெளிப்படையாகத் தெரிவதைத் தவிர.”

“பெண்டிர் பரிவுடன் நேசிக்கப்பட வேண்டியவர், புரிந்து கொள்ளப் படுபவர் அல்லர்.”

“வயது இலக்கம் 35 மாதருக்குக் கவர்ச்சியான வயது!  லண்டன் நகரில் தமது சுய விருப்பப்படி என்றும் 35 வயதிலே நிலைத்து நிற்கும் மாதர் ஏராளமாக நிரம்பி யிருக்கிறார்!”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

“என்னை யாரென்று பொதுமக்கள் நினைக்கிறார்?” என்று கேட்டார் ஏசு கிறிஸ்து.  “புனித நீராட்டி ஜான் என்பவர் சிலர்;  தேவதூதர் எளையாஸ் என்பவர் சிலர்;  பூர்வீகத் தூதர் மீண்டும் பூமியில் உதித்திருக்கிறார் என்று கூறுவாரும் உள்ளார்,” என்றனர் அவரது சீடர்கள்.

பைபிள் வாசகம்

வஞ்சகி வரும் வழியை விட்டு ஒதுங்கிடு, அவள்

வாசற் கதவு முன் நடப்பதையும் நிறுத்திடு!

உள்ளத்தை, உடலைத் தந்திட மறுத்திடு! அவளுடன்

வாழ்நாளை வீண்நாளாக ஒருங்கே வெறுத்திடு!

உடல் நாடினும், உள்ளம் தேடினும் அவள்

மடியில் உறங்கும் சுகத்தை என்றும் துறந்திடு!

 

பைபிள் பழமொழியிலிருந்து.

+++++++++++++++++++++

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.  இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள்.  அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.

*********************

ஏரோத்: [மிகவும் கவனமுடன்]  அந்த தூதர் யார்?  செத்தவரைப் பிழைக்கும் தேவதூதரா?  நான் தெரிந்தாக வேண்டும் அவரைப் பற்றி!  செத்தவரை உயிர்ப்பித்து மீண்டும் பிழைக்க வைப்பது தவறான மனிதப் பணி!  என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கோரப் பணி!  செத்தவ ரெல்லாம் பிழைத்து மீண்டும் வாழ வந்தால், என் நாட்டில் பஞ்சம் உண்டாகி விடும்!  வாழத் தளமின்றி நாடு சுருங்கிப் போகும்! உண்ண உணவில்லாமல் மண்ணைத் தின்னும்படி திண்டாட வேண்டும்!  குடிக்க நீரில்லாமல் போகும்!  இருக்க வீடில்லாமல் போகும்!  மக்கள் தொகை ஏறிக்கொண்டே போய்விடும்!

முதல் நாஸ்ரீன்:  மாண்புமிகு மன்னா!  மடிந்தவர் எல்லோரையும் தூதர் உயிர்ப்பிக்க மாட்டார்!  அது அவரது தொழிலன்று!  அவர் இதுவரை பிழைக்க வைத்திருக்கும் மாந்தர் மூன்று அல்லது நான்கு பேர்!  அவ்வளவுதான்!  இதனால் நாட்டில் இடத் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு வந்திடும் என்று தாங்கள் அஞ்ச வேண்டாம்!  சிந்தித்துச் செயல்படும் சேவைப் பணியாளர் அவர்!

ஏரோத்:  ஒருவர் உயிர்ப்பித்து எழுந்தால் என்ன?  மூவர் உயிர்ப்பித்து எழுந்தால் என்ன?  எனக்கு எல்லாம் தவறாகத்தான் தெரிகிறது!  செத்தவன் எவனும் மீளக் கூடாது!  அதுதான் கடவுளின் கட்டளை! கடவுளின் நியதி!  கடவுள் உயிரனங்களைப் படைக்கிறார்!  மாந்தரது பணிகள் முடிந்தபின், கடவுள் அவரது உயிரை எடுத்துக் கொள்கிறார்! தேவ தூதர் எவரும் கடவுளின் பணியில் குறுக்கிடக் கூடாது!  மனிதர் பிறப்பு, வளர்ப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வரும் கடவுள் பணியைத் தூதர் எவரும் தோளில் சுமக்கக் கூடாது!  எங்கே உபதேசம் செய்து வருகிறார் அந்த தூதர்?  நான் அவரைக் காண வேண்டும்!  அழைத்து வருவீரா?

ஜொஹானன் குரல்:  [உரத்த குரலில்]  அதோ அவர் உம்மைத் தேடி வருகிறார்!  நீ தேடிச் செல்ல வேண்டிய தில்லை!  யார் அழைப்பினும் அவர் வருவார்!  ஆனால் அவரிடம் வஞ்சகர் மன்னிப்புக் கேட்க வேண்டும், முதலில்!  பாபிகளே! உங்கள் வஞ்சகப் பாவங்களைக் கழுவத் தயாராகக் காத்திருப்பீர்!  அடுத்தவர் கூட்டைக் கலைக்காதீர்!  அடுத்தவர் பொருள் மீது ஆசை வைக்காதீர்!  அடுத்தவன் படுக்கையைத் தேடாதீர்!

ஏரோதியாஸ்:  [ஆங்காரமாய்]  மறைமுகமாகப் பரதேசி என்னைத்தான் சுட்டிக் காட்டுகிறார்!  அவரது நாக்கை அறுக்க வேண்டும்!  செய்வீரா எனக்காக?

ஏரோத்:  புனித நாக்கால் அவர் திட்டுவது உன்னை யில்லை!  எவரையோ திட்டினால் உன்னை என்று மனதில் ஏன் வேதனைப் படுகிறாய்?  அவர் உன்னதப் போதகர்!  அவரை நான் துயர்ப்படுத்த மாட்டேன்!  இப்போது நான் தேடுவது செத்தவரை உயிர்ப்பிக்கும் தேவதூதரை!

இரண்டாம் நாஸரீன்:  மாண்புமிகு மன்னா!  தாங்கள் தேவ தூதரைத் தேடிச் செல்லத் தேவையில்லை!  நம்மைக் காண அவர் வருகிறார் என்பது முற்றிலும் உண்மை!  எல்லாத் தளங்களுக்கும் அவர் போகிறார்!  அவர் இப்போது சமேரியாவில் உபதேசித்து வருகிறார்!

முதல் யூதர்:  அந்த தூதர் போலி வேசக்காரர் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்!  சமேரியாவைத் தேடிச் சென்று உபதேசிப்பவர் நிச்சயம் புனிதத் தூதராக இருக்க முடியாது!  சமேரிய மாந்தர் சாபக் கேடானாவர்!  அவர்கள் மனமார ஆலயத்துக்கு எதுவும் சமர்ப்பணம் செய்யாதவர்!  யூத ஆலயத்தை மதிக்காத சூதர்கள்!  அவருக்குப் போதனை செய்பவர் போலிப் பரதேசியாகத்தான் இருக்க முடியும்!

இரண்டாம் நாஸ்ரீன்:  தூதர் சமேரியாவை விட்டுச் சென்று சில நாட்கள் ஆகி விட்டன!  நான் கேள்விப் பட்டது, அவர் ஜெரூஸலத்தின் அருகே உபதேசித்து வருகிறார் என்று.

முதல் நாஸரீன்:  இல்லை!  அவர் அங்கே யில்லை!  ஜெரூஸலத்திலிருந்துதான் நான் வருகிறேன்!  சென்ற இரண்டு மாதங்களாக அவர் மறைவில் எங்கோ யிருக்கிறார்!  அவரைப் பற்றி எந்த தகவலு மில்லை!

ஏரோத்:  அதைப் பற்றி எனக்குக் கவலை யில்லை.  அவரைக் கண்டுபிடித்து, “செத்தவரை உயிர்ப்பிக்க வேண்டாம்” என்று நான் சொல்லும் தீர்மான உரையைக் கூற வேண்டும். குஷ்ட ரோகியைக் குணமாக்கினார்!  எனக்குக் கவலை யில்லை!  குருடருக்குக் கண்ணொளி கொடுத்தார்!  நான் அதைத் தடுக்க வில்லை!  திருமணப் பந்தியில் நீரை ஒயினாக்கினார்!  அந்த அற்புதங்கள் புரிந்ததை நான் தடுக்க வில்லை!  மாறாக நான் பூரிப்படைகிறேன்!  ஆனால் செத்தவனை அவர் உயிர்ப்பித்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!  அது பயங்கர நிகழ்ச்சி!  அதை நான் தடுக்க முற்படுவேன்!

ஜொஹானன் குரல்:  [உரத்த குரலில்]  வஞ்சகியே!  விலைமகளே! வாலிபரை வசீகரிக்கும் வனப்பு மாதே!  பொன்விழிகள் மின்னும் பாபிலோன் புத்திரியே!  மனிதர் கூட்டைக் கலைக்காதே! கடவுள் சொல்கிறார்!  அவளை எதிர்க்கும் ஆயிரக் கணக்கான மானிடரே, வாருங்கள்!  வரிசையாக வந்து கற்களை எடுத்து அவள் மீது வீசி எறிவீர்!

ஏரோதியாஸ்: [கோபத்துடன்] அன்பே! அவர் வாயைக் களிமண்ணால் அடைக்க வேண்டும்!  உத்தர விடுங்கள்!  அவரது நாக்கு ஒரு மலைப் பாம்பு!  நீளும் அந்தப் பாம்பை அடிக்க வேண்டும்!  என்னை அருவருப்புடன் பார்க்கின்றன அவரது கண்கள்!  பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் அவற்றைக் குத்த வேண்டும்!  அரண்மனைக் கஞ்சியைக் குடித்துக் கொண்டு, நம்மீதே காரி உமிழும் அந்த பரதேசியைத் தடியால் அடிக்க வேண்டும்!  நமது சிறையில் படுத்துக் கொண்டு நமது நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சும் பயங்கரவாதி!  என்னைத் திட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஏனிப்படி நிற்கிறீர்?  காவலரை அனுப்பி சவுக்கால் அடிக்க ஆணை யிடுங்கள்!  அல்லது இன்று தூக்கம் வராதெனக்கு!  [கோவென அழுகிறாள்]

ஏரோத்:  [கனிவாக]  கண்மணி! அழாதே!  அவர் உன்னைத் திட்ட வில்லை!  போதகர் வாயைக் கட்டிப் போட முடியாது!  ஏன் திட்டுகிறாய் என்று தட்டிக் கேட்க முடியாது! கோபக்கார மனிதர் அவர்!  புனித மனிதரைச் சவுக்கால் அடிப்பது பாபம்!  நான் ஆணையிட முடியாது!  அவர் உலகில் எதற்காகப் பிறந்தாரோ, அந்த பணியைச் செய்து வருகிறார். உனக்காக அவரைச் சிறையில் பிடித்துப் போட்டிருக்கிறேன்.  அதற்கு மேல் என்னால் தண்டிக்க முடியாது அவரை!

ஜொஹானன் குரல்:  வஞ்சகியைக் கல்லால் அடித்துக் கொல்வீர்!  அப்படித்தான் தீயவரைப் பூமியிலிருந்து அகற்ற வேண்டும்!  தண்டனையைப் பார்த்துப் பாபம் புரிபவர் தயங்குவார்!  எப்படி நெறியுடன் வாழ வேண்டு மென்று, மற்ற பெண்கள் உடனே கற்றுக் கொள்வார்!  வஞ்சகி நடந்து வந்த பாதையில், மற்ற பெண்டிர் தடம் வைக்கப் பயப்படுவார்!

ஏரோதியாஸ்: [மனம் வெதும்பி]  பார்த்தீரா?  பார்த்தீரா?  மறுபடியும் என்னைப் பற்றியே பேசி அவமானம் செய்கிறார்! உமக்குப் புரிய வில்லையா?  என்னைக் கல்லால் அடித்துக் கொல்லச் சொல்கிறார்!  பிறர் கல்லால் என்னை அடித்துக் கொல்வதை வேடிக்கை பார்ப்பீரா? அல்லது அந்த பரதேசிக்கு நிரந்தர விடுதலை தருவீரா?  ஆமாம்!  அவருக்கு நாம் தர வேண்டும் நிரந்தர விடுதலை!  அல்லது அவர் எனக்கு நிரந்தர விடுதலை கொடுத்து விடுவார்!

ஏரோத்:  அவர் உன் பெயரைச் சொல்லிக் கல்லால் அடிக்கச் சொல்ல வில்லை!  நீயாக நினைத்து ஏன் வேதனைப் படுகிறாய்?  பாவம்!  அவருக்கு நிரந்தர விடுதலை தரச் சொல்கிறாயே!  அது தவறு!

ஏரோதியாஸ்:  என் பெயரைச் சொல்லா விட்டால் என்ன?  அவர் திட்டுவது நானில்லை என்று ஏன் மழுப்புகிறீர்?  அவர் அவமதிப்பது உங்கள் மனைவியை!  உங்கள் கண்மணியை!  அதாவது மறைமுகமாக உங்களை!  என்னைக் குத்திக் காட்டினாலும் புண்படுத்துவது மன்னரை! மகா மன்னரை!  என்னருமைக் கணவரை!

ஏரோத்:  அவர் என்னை இழிவு செய்வதாக நான் நினைக்க வில்லை! ஆமாம், ஐயமின்றி நீ என் கண்மணி!  என்னருமை மனைவி நீ!  ஆனால் அதற்கு முன்பு என் தமையனின் மனைவி நீ!

ஏரோதியாஸ்:  நீங்கள்தான் என் முதற் கணவரிடமிருந்து என்னைப் பறித்து வந்தவர்! தம்பதிகளாக இருந்த எங்கள் கூட்டை உடைத்து என்னருமைக் கணவரைப் பிரித்தீர்!  ஆருயிர்க் கணவனைச் சிறைப் படுத்தினீர்!  கூட்டிலிருந்து அண்ணன் மனைவியைக் களவாடிக் கொண்டுவந்து உங்கள் அரண்மனைச் சிறையிட்டீர்!  அதனால் பரதேசி உங்களைத்தான் திட்ட வேண்டும்!  என்னை ஏன் அனுதினம் அவமானம் செய்கிறார்?

ஏரோத்:  நீயே எனக்குரியவள்!  என் தமையனை விட நானே பராக்கிரமசாலி!  உன் முதற் கணவனை விட நானே சகலகலா வல்லவன்!  சரி! சரி! அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை.  போதகர் குமுறலுக்கு அது காரணமாக இருக்கலாம்!  நாம் அதைப் பேசி நமக்குள் இப்போது சண்டை, சச்சரவு வேண்டாம்!  ரோமானிய அதிகாரிகள் முன்பு நமது அழுக்குத் துணிகளைத் துவைக்க வேண்டாம்! …. சேடியரே!  இந்த மதுக் கிண்ணங்களை நிரப்புங்கள்!  மாலைப் பொழுது மயங்கிப் போகிறது! காலைப் பொழுது வரும்வரை ஆடிப் பாடிக் களிப்போம்! … ஸாலமியின் ஆடலைப் பார்க்க வேண்டும்!  ஸாலமியின் தளிர் மேனி நெளிந்து அவள் பாம்பு நடனம் அரங்கேற வேண்டும்.  ரோமாபுரி விருந்தினர் மனம் நோகாமல் நாம் பார்த்துக் கொள்வது அவசியம். … எங்கே ஸாலமி! … அழைத்துவா அந்த நிலத்துவ நிலாவை!  பூச்சூடிய நிலவுக்கு நான் பொன்னாடை போர்த்துகிறேன்!

ஏரோதியாஸ்:  [சினத்துடன்]  மறுபடியும் உங்களின் கழுகுக் கண்கள் ஸாலமியை ஏன் தேடுகின்றன? .. பாம்பு நடனம் ஆடப் பாவையர் எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார் இங்கே? … ஆனால் ஸாலமி ஏதோ கவலையி லிருக்கிறாள்! … அவளைக் கட்டாயப் படுத்த வேண்டாம்.  அவளுக்கு ஓய்வு தேவை!

ஏரொத்:  ஸாலமிக்கு என்ன கவலை?  தாயிக்குத் தெரிய வேண்டாமா?  போயவளைக் கேள்!  அவள் இன்று எங்கள் முன்னால் ஆட வேண்டும்!  சாமர்த்தியமாகப் பேசி ரோமானியிர் முன்பு ஆடச் சொல்!  போ, கண்மணி போ!

ஏரோதியாஸ்:  முடியாது!  நானதை அனுமதிக்க மாட்டேன்!  குடித்து ஆடிக் கொண்டிருக்கும் ரோமானியர் முன்பு என் வாலிபப் பெண் ஆடுவது எனக்குப் பிடிக்க வில்லை!  நான் அதை அனுமதிக்க மாட்டேன்!

ஏரொத்: ஸாலமி! இன்று எங்களுக்கு நடன விருந்தளிக்க வேண்டும்!  நீ தடை செய்யாதே அதை! …[ஸாலமியின் அருகில் சென்று]  …. ஸாலமி!  ஸாலமி!  அழகிய மயிலே!  ஆடவா!  அன்பு மயிலே!  ஆடவா! கண்ணுக்கு விருந்தளிக்க மின்னல் போல் ஆடவா!  எழிலணங்கே எங்கள் முன் ஆடவா!  எனக்கொரு கனிவு முத்தம் தா!  கண்ணுக்கு விருந்தளிக்க வா!  காளையரைக் கண்ணால் அடித்துக் காயப் படுத்து!  கண்ணே!  கனிரசமே!  கவர்ச்சி மாதே!  ஆடவா!  உன்னழகை மின்னலாய்ப் பின்ன வா!

++++++++++++++++++++++++++++

[காட்சி-1, பாகம்-12]

“இச்சையுடன் தேடும் அளவற்ற இன்பமும், நெறிதவறி விளையும் எல்லையிலாத் துன்பத்தைப் போலவே மனிதனின் வலிமையைச் சிதைக்கிறது!”

கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]

“எனது அதிபதி எனக்குள்ளிருந்து என்னை நடத்தி வழிகாட்டி வருகிறான்”.

அட்டில்லா ஜோஸ·ப்

“பிறக்கும் போது மனித ஆத்மா முதியதாய்த் தோன்றிப் பிறகு இளமையாய் நீடிக்கிறது!  வாழ்க்கையின் நகைச்சுவை அதுதான்!  உடல் பிறக்கும் போது இளமையாக இருந்து, பின்னால் மூப்பு நிலை அடைகிறது!  வாழ்க்கையின் துன்பியல் முடிவு அதுதான்!

“நீ கிரேக்கனாக இருக்க விரும்பினால், உனக்கு உடை தேவையில்லை!  இடைக்கால மனிதனாக இருக்க விரும்பினால் உடல் உனக்குத் தேவையில்லை!  கடைசியாக நவீன மானிடனாக நீ வாழ விரும்பின், உனக்கு ஆத்மா ஒன்று வேண்டிய தில்லை.

இடைக்காலத்தில் வாழ விரும்பும் உணர்ச்சி மட்டும், நம்மிடையே தற்போது முற்றிலும் அற்று விட்டது!  ஆனால் உடை யில்லாத கிரேக்க உணர்வுதான் மெய்யான ஓர் நவீனத் தன்மை படைத்தது!”

“என்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு பள்ளிச் சிறுவனின் கனவாகவேதான் கழிந்தது!  உண்மையான வாழ்வு இன்றிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.”

“நாடகத்தைக் காண்பவன் காட்சியை வரவேற்கும் ஈர்ப்பு உணர்ச்சியுடன் அமர்ந்திருக்க வேண்டும்.  ஏனெனில் அவனது நெஞ்சின் வீணையை மீட்டுத்தான், படைப்பு மேதைத் தன் நாடகத்தை அரங்கேற்றுகிறான்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.

ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.  இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள்.  அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.

*********************

ஏரோதியாஸ்:  நானதை அனுமதிக்க மாட்டேன்!  குடித்து ஆடிக் கொண்டிருக்கும் ரோமானியர் முன்பு என் கன்னிப் பெண் ஆடுவது எனக்குப் பிடிக்க வில்லை!  நான் அதை அனுமதிக்க மாட்டேன்!

ஏரொத்: எரோதியாஸ் நீ தலையிடாதே! நான் ஸாலமியோடு பேசுகிறேன்!  இன்று எழிலரசி எங்களுக்கு நடன விருந்தளிக்க வேண்டும்!  நீ தடை செய்யாதே! …[ஸாலமியின் அருகில் சென்று]  …. ஸாலமி!  ஸாலமி!  அழகிய மயிலே!  ஆடவா!  அன்பு மயிலே!  ஆடவா! எழிலணங்கே எங்கள் முன் ஆடவா! எனக்கொரு கனிவு முத்தம் தா!  கண்ணுக்கு விருந்தளிக்க மின்னலாய் ஆடவா!  காளையரைக் கண்ணால் வெட்டி நெஞ்சைக் கலக்க வா!  கண்ணே!  கனிரசமே! கவர்ச்சி மானே! கானகத் தேனே! ஆடவா!  உன்னழகை மின்னலாய்ப் பின்ன வா!  வானத்து வெண்ணிலாவே, கானகத்துக்குப் புள்ளி மானே!  ஆடவா! அருகில் வா! அன்பே வா!  ஆடும் ஆட்டத்தில் ஆடவர் மதியை மயக்கு!

ஏரொதியாஸ்:  அவள் என்னருமைப் புதல்வி!  உங்களை மயக்கும் மந்திரக்காரியா?  உமது மலிவான மாளிகை நர்த்தகி அல்லள்!  ஆடவர் அவைதனில் அவள் ஆடுவதை நான் வெறுக்கிறேன்!  அதுவும் உங்கள் முன்னால் உடலை நெளித்துக் கொண்டு அவள் ஆடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!  அதை உறுதியாக நான் தடுப்பேன்.

ஜொஹானன் குரல்: [அழுத்தமாக]  அதோ பாரீர் மானிடரே!  வருது, பிரளயம் வருது!  உம்மை நோக்கி வருது!  உறுதியாக வருது!  உம்மைத் தாக்கப் போகுது!  பரிதி காரிருள் மயமாகிக் கருங் கூந்தல் நிறமாகி மாறிப் போகும் அந்திக் காலம் வருகிறது!  அந்தப் பிரளயக் காலத்தில், சந்திரன் செந்நிறத்தில் குருதி போலிருக்கும்.  வானத்து விண்மீன்கள் அனைத்தும், மரத்தில் அற்று விழும் பழுக்காத அத்திபோல் மண்தரையில் அறுந்து விழும்!  பூலோக மன்னர் அச்சம் மிகுந்து ஒடுங்கிப் போய் ஒளிவார், சிலர் அழிவார்!

ஏரோதியாஸ்:  ஆஹா! என்ன அபத்தமான காட்சி வருவதாகச் சொல்கிறார்?  அந்த காரிருள் முடிவு காலத்தைக் காண நான் காத்திருக்கிறேன்.  பரிதி எரிந்து கரிந்து போகுமாம்!  நிலவு சிவந்து, வெந்து போகுதாம்!  விண்மீன்கள் மண்மேல் வந்து பழம்போல் விழுமாம்!  என்ன மடத்தனமான முன்னறிவிப்பு?  போதகர் குடிகாரன் போல் பேசுகிறார்.  நான் வரப் போகாத பிரளயத்துக்கு அஞ்சவில்லை!  ஆனால் போதகரின் தேள் நாக்குக்கு அஞ்சுகிறேன்!  அருவருக்கத் தக்க அவரது குரலை வெறுக்கிறேன்!  வாயை மூடச் சொல்லி கட்டளை யிடுவீரா?  என் தலைவலி மீளாதிருக்கும்!  போன தலைவலி வருகிறது!

ஏரோத்:  முடியாது!  அவர் வாயை யாரும் மூட முடியாது!  என்ன சொல்கிறார் என்பது எனக்கே புரியவில்லை?  உன்னைப் பற்றி அவர் எதுவும் உரைக்க வில்லை!  வரப் போகும் ஏதோ ஓர் கெட்ட சகுன எச்சரிக்கை செய்கிறார்.  அதை முன்னுரைக்கிறார்!  நம்புவதால்தான் உனக்குத் தலைவலி!

ஏரோதியாஸ்:  கெட்ட சகுனத்தை நான் நம்புவதில்லை!  குடிகாரன் கூட தன் பழைய கதையை உளறுவான்!  மூளை கெட்டுப் போனதால், போதகர் கெட்ட சகுனங்களைக் கூறுகிறார்!  பரிதி எப்போதும் கருமை அடையாது!  வெண்ணிலவு ஒருபோதும் செந்நில வாகாது!  விண்மீன்கள் எக்காரணத்தாலும் மண்மீது விழப் போவதில்லை.  அப்படிக் குடிகாரன் கூட உளற மாட்டான்! …… [யோசனையுடன் ஆமாம்!  எப்போது கெட்ட சகுனம் வரப் போகிற தென்று போதகர் கூறினாரா?

ஏரோத்:  போதகர் சொல்வதை நீ நம்புவ தில்லை.  எப்போது பிரளயம் வரும் என்று ஏன் கவலைப் படுகிறாய்? ஏனதை அறிந்து கொள்ள விரும்புகிறாய்?

ஏரொதியாஸ்:  நான் ஒன்றும் அவற்றை நம்ப வில்லை!  ஆனால் பிரளயம் ஒருவேளை வந்தால் என்ன நிகழும் என்று அறிந்து கொள்வதை விட, அது எப்போது வரும் என்பதை அறிவது நல்லது!  ஆனாலும் எனக்குக் கெட்ட சகுனங்களில் நம்பிக்கை யில்லை!  குடிகாரன் உளறல் விடிந்தால் தெரியும்!  ஆனால் போதகர் புளுகு உலகம் முடிந்த அன்றைக்குத்தான் தெரியும்!

ஏரொத்:  போதகர் குடித்திருப்பது கடவுளின் புனித ஒயின்!  அவர் வாக்குகள் என்றும் பொய்ப்ப தில்லை!  அனைத்தும் மெய்யானவை!  விரும்புவர் வாக்கை ஏற்றுக் கொள்ளலாம்!  வேண்டாதவர் காதை மூடிக் கொள்ளலாம்!

ஏரோதியாஸ்:  கடவுள் அளித்த அந்த புனித ஒயின் எந்த தோட்டத்தில் கிடைக்கிறது?  அவருக்கு மட்டும் அது எப்படிக் கிடைக்கிறது!  மன்னராகிய உங்களுக்கு ஏன் கிடைக்கவில்லை?

ஏரொத்: [ஸாலமி நகரும் வழிமேல் விழியைத் திருப்பி]  எனக்கு ஏன் கிடைக்காது?  மனதில் நினைத்ததை அடைபவன் நான்!  ஸாலமி! போகாதே! பார் என்னை! பாதையைத் திருப்பு.  உனக்காக என் நடன மேடை காத்திருக்கிறது!  உனக்காக இசை வாசிக்க வாத்தியக் கருவிகள் தயாராக உள்ளன!  உனக்காக என் நெஞ்சக் கதவுகள் திறந்துள்ளன!  என் கண்விழிகள் உன்னையே வட்டமிட்டு வருகின்றன!  உன் சுட்டுமிரு விழிச்சுடரைச் சுழல விட்டு என் நெஞ்சக் கனலை மூட்டிவிடு!

ஏரொதியாஸ்:  ஸாலமி ஆட ஆரம்பித்தால் யாரெல்லாம் தணிலில் எரியப் போகிறாரோ?  நீங்கள் யாரும் எரிந்து போகக் கூடாது!  யார் எரிந்து போக வேண்டும் என்று என் யந்திரம் வேலை செய்கிறது!  பிரபு! என் கட்டளை யிது.  நீங்கள் ஸாலமியைத் தேடி விரட்டுவது எனக்குக் கேவலமாய்த் தெரிகிறது!

ஏரோத்: [ஸாலமியின் அருகில் சென்று கையைப் பற்றி]  ஸாலமி! பூமிக்கு வந்த நிலவே!  ராஜ நர்த்தகி நீ! எனக்காக நடனமிடு! என் நெஞ்சில் நடன மிட்டது போதும்;  நீ என் பஞ்சணையில் நடனமிடு!  கெஞ்சுகிறேன் உன்னை! ஒருமுறை ஆடு!  ஒரே முறை ஆடு! இரண்டாம் முறை ஆட வேண்டாம்.  முதலும் முடிவும் அதுதான்!

ஏரோதியாஸ்:  நான் அனுமதிக்காமல் என் மகள் உங்கள் முன் ஆட மாட்டாள்!

ஸாலமி: [ஏரோத்தைப் பார்த்தும், பாராமல் அப்புறம் நோக்கி]  எனக்கு நடனமிட எவ்வித விருப்ப மில்லை!  உங்கள் ராஜ நர்த்தகி நானில்லை!  மாளிகை நடன மங்கை நானில்லை!  உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் பெண்ணணங்கு நானில்லை!  உமக்கு என் நடனம் ஒரு பொழுதுபோக்கு!  அதிலே ஒருதுளிப் பயனுமில்லை எனக்கு!  நடனமிட நான் எதற்கு?  விருப்ப மில்லை என்றால் விட்டுவிட வேண்டாமா?

ஏரோதியாஸ்:  பிரபு!  அவளைக் கட்டாயப் படுத்த வேண்டாம்!  விருப்ப மில்லை என்று சொல்கிறாள்.

ஏரோத்: விருப்ப முள்ளது எனக்கு!  ஸாலமி கண்ணே! கண்மணியே!  என் விருப்பத்தை மனதார ஏற்றுக் கொள்! …. ஏற்றுக் கொள்ளா விட்டால் … என்ன நடக்கும் தெரியமா?

ஸாலமி:  [ஏளனமாக நோக்கி]  ஏற்றுக் கொள்ளா விட்டால் என்ன செய்வீர்?

ஏரோத்:  [சற்று பொய்க் கோபத்துடன்]  ஆடவேண்டும் என்று ஆணை யிடுவேன் உனக்கு!

ஸாலமி: [நிஜக் கோபத்துடன்]  ஆணைக்கு நான் அடிபணியா விட்டால், அப்புறம் என்ன செய்வீர்?

எரோத்:  உன்னைச் சிறையிலிடுவேன்!  ஆனால் தேவகன்னி, உன்னைச் சித்திரவதை செய்ய மாட்டேன்! வணங்கத் தக்க வண்ண மயில் நீ!  அரண்மனைக்கு ஒளியூட்டும் வைர ஆபரணம் நீ!  உன்னைச் சிறை செய்து கொஞ்சுவேன்!  என்னுடன், என்னாசனத்தில் அமர வேண்டிய எழில் அணங்கு நீ!

ஸாலமி:  சிறைக்குப் போக நான் மறுத்தால் பிறகு என்ன செய்வீர்?

ஏரோத்:  சிறைக்குப் போ வென்று உன்னை அதட்டுவேன்!  மறுத்தால் உன்னைத் தூக்கிவந்து என் மெத்தையில் கிடத்தி உன்னைக் கொஞ்சுவேன்.  அணைப்பேன்.  அதுதான் தண்டனை!

ஸாலமி:  [சற்று குறும்பாக]  ஓ! அப்படிப்பட்ட தண்டனையா? .. உங்களுக்கு அடுத்த பக்கத்தில் என் அன்னை படுத்துள்ள போதா?  வேடிக்கையாக இருக்கிறதே! … [விழுந்து விழுந்து சிரிக்கிறாள்]

ஏரோத்:  ஸாலமி! ஏன் சிரிக்கிறாய்?  ஏன் சிரிக்கிறாய்?

+++++++++++++++++++++++++++++

[காட்சி-1, பாகம்-13]

“மானிட வனப்பு என்பது மேன்மையான ஓர் இயற்கைப் படைப்பே!  அதற்கு வார்த்தைகள் மூலம் விளக்கம் எதுவும் தேவைப் படாததால், மெய்யாக அது மேதமையை விடவும் உயரிய ஒரு மேம்பாடே!  பரிதியின் வெளிச்சத்தைப் போன்றோ, வசந்த காலத்தைப் போன்றோ அல்லது கருங்குளத்தில் பிரதிபலிக்கும் வெண்ணிலவின் பிம்பத்தைப் போன்றோ, வனப்பும் உலக மயத்தின் ஓர் மெய்த்துவமாகும்.”

“மனிதனின் முகம் அவனது சுயசரிதை!  பெண்ணின் முகமோ அவள் ஒப்பனை செய்யும் புனைகதை!”

“ஒரு கலைத்துவப் படைப்பானது, மனிதரின் தனித்துவ உணர்ச்சியில் உண்டாக்கப்படும் ஓர் மகத்துவ நிகழ்ச்சி.”

“எல்லா சீர்கெட்ட கவிதைகளும் உள்ளத்தின் அசலான உணர்விலிருந்துதான் உதிக்கின்றன.”

“குறிப்பணி ஒன்றுக்காக, ஒருவன் தன் உயிரைத் தியாகம் செய்வதினால், அப்பணி மெய்யானதாகி விடாது.”

“பேராசை என்பது ஒருவகைக் கிருமியே!  அதிலிருந்துதான் பெருந்தன்மை என்னும் பண்பே வளர்ச்சி யுற்று வருகிறது!”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.  இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொகானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள்.  அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.

*********************

ஏரோத்:  சிறையில் தள்ளி உனக்கு ஆயுள் தண்டனை விதிப்பேன்!  இரவில் உன்னைத் தூக்கிவந்து, மாளிகையில் என்னுடைவள் ஆக்கிக் கொள்வேன்!  மெத்தையில் உன்னைக் கிடத்தி எந்நேரமும் உன்னுடன் கொஞ்சுவேன்.  அதுதான் நானுனக்கு அளிக்கும் ஆயுள் தண்டனை!

ஸாலமி:  [சற்று குறும்பாக]  ஓ! அப்படிப் பட்ட ஆயுள் தண்டனையா? ..அதெப்படி?  உங்களுக்கு அடுத்த பக்கத்தில் என்னருமைத் தாய் படுத்துள்ள போதா?  வேடிக்கையாக இருக்கிறதே! … [விழுந்து விழுந்து சிரிக்கிறாள்]

ஏரோத்:  ஸாலமி! ஏன் சிரிக்கிறாய்?  ஏன் சிரிக்கிறாய்?

ஸாலமி:  மன்னரே!  நான் என்ன உங்கள் உல்லாசபுரி வனிதையா?  கட்டிய மனைவி பக்கத்தி லிருக்க, கன்னி நான் உமக்குச் சுகம்தரும் சொப்பன சுந்தரியா?  வேடிக்கையாய் இருக்கிறதே! [சிரிக்கிறாள்]

ஏரோத்:  ஸாலமி!  உன்னை நான் பட்டத்து ராணியாக ஏற்றுக் கொள்கிறேன்!

ஸாலமி:  மன்னரே!  என்னைவிட மூன்று மடங்கு வயது உங்களுக்கு! மேலும் எந்த நாட்டிலே, எந்த மன்னன் தாயையும் அவளது சேயையும் ஒருங்கே மணந்து பட்டத்து ராணிகளாகப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தான்?  வேடிக்கையாய் இருக்கிறதே!  என்னை உரிமை ஆக்கிக் கொள்ள உமக்கு தகுதி யில்லை! வயது மில்லை! எனக்கீடு கொடுக்கும் வாலிபமு மில்லை! என்னைக் கவரும் வனப்பு மில்லை! [சிரிக்கிறாள்]

ஏர்ரொத்: என் நெஞ்சில் அரங்கேறிய நீ, என் முன்பாவது ஆடவா!  எனக்குரிமை ஆகா விட்டாலும், ஆடி மகிழ்வித்து மனக்கவலை தீர்த்திடு!  இன்றிரவு ஆனந்த மயமாய் உள்ளது.  இன்றுபோல் என்றும் நான் இன்ப மயத்தில் களித்த தில்லை!  ஸாலமி!  நீ யின்றைக்கு ஆட வேண்டும்!  இனிமேல் நீ ஆட வேண்டாம்!

ஸாலமி:  நானின்று ஆட விரும்ப வில்லை!  நாளை வேண்டு மானால் உங்கள் முன்பு நர்த்தனம் புரிகிறேன்.

ஏரோத்:  இல்லை, நீயின்றுதான் ஆட வேண்டும்.  அதுதான் என் வேண்டுகோள்! அதுதான் என் ஆசை!  நாளைக்கு நீ ஆட வேண்டிய கட்டாய மில்லை.  ரோமாபுரித் தீரர் சீஸர் என்னை நேசிக்கிறார்.  ஏராளமான  பரிசுகளை எனக்கு அனுப்பி யிருக்கிறார். அவற்றை நானுனக்கு வெகுமதியாக அளிக்கிறேன்!  நீயெனக்கு உடலை நெளித்து ஆடிக் காட்டு.  உன் அங்கங்களில் தங்க ஆரங்கள் குலுங்க நர்த்தனம் புரி!

ஜொஹானன் குரல்:  [பலமாகக் கேட்கிறது]  அவன் கிரீடம் அணிந்து ஆசனத்தில் அமர வேண்டும்!  செந்நிற உடை அணிந்து கம்பீரமாகத் தோன்ற வேண்டும்!  அவன் கையிலுள்ள பொற்கிண்ணத்தில் நிரம்பி வழிகிறது வஞ்சக மதுபானம்!  தேளைப் போல் கொட்டித் தேவ தூதன் அவனைச் சீர்குலைப்பான்!  மண் புழுக்கள் அவன் உடலைத் தின்னப் போகின்றன!

ஏரோதியாஸ்:  போதகர் சொல்வதைக் கேட்டீரா?  அவர் தூற்றுவது இப்போது உம்மை!  நல்ல மனிதர்! என்னை விட்டுவிட்டார்!  புழுக்கள் உம்மை உணவாய்த் தின்னப் போகிறதாம்!  கேட்கவே அருவருப்பாய் உள்ளது!  புழுக்கள் என் பதியைத் தின்பதை நான் எப்படிச் சகித்துக் கொள்வேன்?  அவர் உம்மை அடித்தாலும், வலிப்பது எனக்குத்தான்!  உமக்கில்லை!  மேலும் அவர் என்னை திட்டும் போது உமக்கு ஏன் அவர் மீது வெறுப்பு உண்டாவ தில்லை?

ஏரோத்:  கண்மணி!  புழுக்கள் என்னைப் புசிக்கப் போவதாய் அவர் சொல்ல வில்லை.  யாரை நோக்கி அவர் திட்டுகிறார் என்றே எனக்குத் தெரியாது.  நீ நினைப்பதுபோல் அவர் உன்னையும் திட்டுவ தில்லை.  அவர் என்னைத் தாக்குவதே யில்லை.  அவர் சொன்னது, தமையன் மனைவியை நான் களவாடி வந்தது பாபச் செயல் என்பதுதான்!  அவர் சுட்டிக் காட்டியது முற்றிலும் சரிதான்.  அது அவரது நெறி! காரணம் தெரிந்து கொள், நீ ஒரு மலடி!

ஏரோதியாஸ்:  [கோபத்துடன்] கண்ணாளா, என்ன சொன்னீர்?  நானா மலடி?  அறிவோடுதான் பேசுகிறீரா? உமது கண்முன்னால் நிற்கும் கன்னி யார்?  உமது நெஞ்சைத் துடிக்க வைக்கும் மான்விழியாள் யார்?  உமது உள்ளத்தைக் கிள்ளி விட்டு உறக்கத்தை கலைப்பவள் யார்?  பத்து மாதம் நான் சுமந்து பெற்று வளர்த்து விட்ட பைங்கிளி!  நானா மலடி?  சொல்லப் போனால் நீங்கள்தான் மலடன்!  ஓர் ஆண் மலடன்! எனக்குக் குழந்தை உண்டு!  உமக்குக் குழந்தை யில்லை!  இதுவரை யில்லை!  அடிமைப் பெண்களிடம் நீங்கள் உறவு கொண்டாலும் அவர்களுக்கும் பிள்ளை பிறக்க வில்லை!  அதுவே நிரூப்பிக்கிறது நீங்கள் முழுக்க முழுக்க மலடன் என்பதை!  நான் மலடி என்று உங்கள் வாயால் சொல்லாதீர்!  மலடன் நீங்கள்தான்!  எனக்கு எந்தக் குறையுமில்லை!  குறையுள்ளவர் நீங்கள்!

ஏரோத்:  போதும் நிறுத்து! நீதான் மலடி!  என்னை மணந்த பின், என்னோடு கலந்தபின் ஏனுனக்குப் பிள்ளை உண்டாக வில்லை?  போதகர் சொல்கிறார், நமது திருமணம் மெய்த் திருமண மில்லை என்று!  நமது திருமணம் சட்ட நெறிக்கு முரணானது!  அதனால் தீய விளைவுகள் உண்டாகலாம்.  அவர் உரைப்பது உண்மைபோல் தெரிகிறது எனக்கு!  அது உண்மை என்றே உணர்கிறேன்!  அதைக் கேட்டதில் பூரிப்புதான்.  பிள்ளையற்ற திருமணம் பாதி இல்வாழ்க்கைதான்!  எந்தக் குறையும் எனக்கில்லை! எனக்கு எல்லா நிறைவுகளும் உள்ளன!

ஏரொதியாஸ்:  ஆம் உண்மை!  நீங்களின்று மிகவும் ஆனந்தமாக உள்ளீர்கள்.  நகைச் சுவையுடன் பேசி எது உண்மை, எது உண்மை யில்லை என்று அழாகாக வாதாடுகிறீர்கள். … சரி தர்க்கமினி வேண்டாம்.  நாம் அரண்மனைக்குச் செல்வோம்.  நள்ளிரவாகப் போகிறது!  மறக்க வேண்டாம், நாளை நாம் வேட்டையாடச் செல்லும் தினம்.  ஓய்வெடுக்க வேண்டும்!  உள்ளே செல்வோமா?  வாருங்கள் [கையைப் பற்றி இழுக்கிறாள்]

ஏரோத்:  [ஸாலமியை அழைத்து]  ஸாலமி, ஸாலமி!  அருகில் வா என்னிடம்!  ஆடவா என்னுடன்!  உன்னாட்டத்தைக் காணாமல் நானின்று உறங்க முடியாது!  என்னுறக்கத்தைக் கலைப்பதில் உனக்கு அத்தனை ஆனந்தமா?  உன் காலில் விழுந்து கெஞ்சவா?  [ஓடிச்சென்று ஸால்மிமுன் மண்டி யிட்டு]  பெண்ணணங்கே!  பேரெழில் அணங்கே!  உனக்காக, உன் நளின நடனத்துக்காகத் துடிக்குது என் நெஞ்சம்!  ஆட வாராயோ மாடப் புறாவே! மான்விழியே! பெண்மயிலே! என் மனக்கவலை தீர்க்க உன் நடனக்கலை அரங்கேற்று!  எனக்காக இன்றைய தினம் நீ ஆடிப் பாடினால், உனக்கு வெகுமதி அளிப்பேன்!  மணியாரங்கள் அளிப்பேன்!  என்னாட்டில் பாதியைக் கூட பரிசாக அளிப்பேன்!  நீ என்ன கேட்டாலும், மறுக்காமல் தருவேன்!  ஆடவா அன்னக் கிளியே!  அருகில் வா பொற்கிளியே!”  [எழுந்து நிற்கிறார்]

ஏரோதியாஸ்:  ஆடப் போகாதே ஸாலமி!  அம்மா சொல்வதைக் கேள்!  அவர் ஊதும் மகுடிக்கு மயங்கி அடிமை ஆகாதே ஸாலமி!  உன்னை ஆட வைத்து, என்னைப் புறக்கணிக்கிறார்!  உன்னைத் தனதாக்கி என்னைத் தண்டிக்கிறார்!  நீ களிப்புடன் ஆடும் போது, என் கண்களில் ஆறாய் நீர் வழியும்!

ஸாலமி: [சற்று யோசித்து அருகில் வந்து]  நான் என்ன கேட்டாலும் அளிப்பீரா மன்னரே?  கேட்பதைத் தருவதாய் மெய்யாக வாக்களிப்பீரா?  அல்லது உறுதி அளித்து விட்டுப் பிறகு கேட்டதும் தர மறுப்பீரா?

ஏரோதியாஸ்:  ஸாலமி!  ஸாலமி!  அச்சமின்றி நீ என்ன செய்யத் துணிந்து விட்டாய்?  எனக்குப் பயமாக இருக்கிறது!  என் கணவர் பாம்புக்கு மகுடம் ஊதுகிறார்!  பாம்பு வீறுகொண்டு எழுந்து யாரையோ இங்கே தீண்டப் போகிறது!  அச்சமாக உள்ளது, ஸாலமி!

+++++++++++++++

[காட்சி-1, பாகம்-14 ]

“என் கண்மணியே! என்னருமைக் காதலியே!  பெண்டிரில் பேரெழில் மிக்க மங்கையே!  ஃபாரோ வேந்தன் தேர்க் குதிரைபோல் கம்பீரமாய்த் தோன்றுகிறாய்!  உன்னெழில் பொற் கன்னங்கள் கழுத்தணிகளின் ஒளியில் மின்னுகின்றன!  நானுனக்கு மேலும் பொன்னிலும், வெள்ளியிலும் ஆரங்கள் செய்து அணிவிப்பேன்.  அழகு பார்ப்பேன்.”

சாலமன் பாடல் [Song of Solomon]

“அலைபோன்ற உன் கூந்தலில் காற்றடிக்கும் போதும், தரையில் உதிர்ந்த இலைகள் உன் பாதங்களில் பட்டுக் கலகலக்கும் போதும் நான் இலையுதிர் காலத்துக் காற்றின் துடிப்புணர்ச்சியை நுகர்கிறேன்.”

டெர்ரி ரோவ், கனடா கவிஞர் [Terry Rowe].   

“பேராசை யானது ஒருவனைத் தோல்வி முடிவுக்குத் தள்ளிவிடும் கடைசி அடைக்கலம்!”

“நம்மை நாமே கட்டுப்படுத்தி நடத்திக் கொள்வதுதான் மேலான நமது பேரிச்சையா யிருக்க வேண்டும்!  அதுவே நம் ஒவ்வொருவரும் பெறத்தக்க ஓர் உன்னத அரசாங்கம்!  மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் அறிவு, மிகுந்து வளரும் பெருந்தன்மை, மேலாகப் புரியும் பற்பல பணிகள் ஆகியவைதான் மனித இனத்தின் மெய்யான முன்னேற்றம்.”

“அந்தோ!  நான் உயிரிழக்க நேர்வதுபோல் அறிகிறேன், என்னால் கட்டுப்படுத்த முடியாத வழிமுறைகளால்.”

“அறக்கொடை [Charity] முறைகள் வாழ்க்கையில் பல்வேறு பாபங்களை விளைக்கத் தூண்டுகின்றன.”

“தேச வெறி மானிடச் சீர்கேடுகளின் மூலமான நெறிப்பாடு.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

+++++++++++++++++++++++

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.  ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான்.  ராணி அதைத் தடுக்கிறாள்.

*********************

எரோதியாஸ்:  ஸாலமி!  நீ நடனம் ஆடுவதை நான் தடுப்பேன்.  தாய் சொல் தட்டாதே! தாய் சொல் மீறினால் தவறு நேரும் என்று அச்சம் உண்டாகிறது எனக்கு!

ஸாலமி: [சற்று யோசித்து அருகில் வந்து]  அன்னையே!  நான் நடனம் புரிய ஆசைப் படுகிறேன்.  என்னைத் தடுக்காதே! …. [ஏரோத்தைப் பார்த்து]  நான் என்ன கேட்டாலும் அளிப்பீரா மன்னரே?  கேட்பதை நிச்சயம் தருவதாய் வாக்களிப்பீரா?  அதற்கு உறுதி அளிப்பீரா? அல்லது உறுதி அளித்து விட்டுக் கேட்டதும் பிறகு மறுப்பீரா?

ஏரோத்:  உறுதி அளிக்கிறேன் ஸாலமி!  என்ன வேண்டுமானாலும் கேள்!  கேட்டது கிடைக்கும் உனக்கு!  ஆனால் நீ ஆட வேண்டும் எனக்கு!  மதுக் கிண்ணத்தில் உன் நடனம் வியர்வையாய்ச் சொட்டி நான் பானமாக சுவைக்க வேண்டும்.

ஏரோதியாஸ்:  ஸாலமி! ஸாலமி!  ஆடாதே நீ!  மோசம் போகாதே நீ!  கேளாதே எதையும்!  நீ என்ன செய்யத் துணிந்து விட்டாய்?  உனக்குத் தெரிய வில்லை! எனக்குப் பயமாக இருக்கிறது!  உனக்கு ஆசை காட்டித் தனக்கு ஆதாயம் தேடுகிறார்!  பாம்பாட்டி மகுடம் ஊதிப் புற்றில் உறங்கும் பாம்பை எழுப்புகிறார்!  வீறுகொண்டு சீறும் பாம்பு யாரையோ தீண்டப் போகிறது!  அச்சமாக உள்ளது, ஸாலமி!  ஏற்கெனவே உன்னால் ஒருவன் மாலையில் உயிரைப் பலி செய்துள்ளான்!  யாரினியும் பலியாகப் போகிறார்?  ஆடாதே நீ!  கேளாதே எதையும்!  மோசம் போகாதே நீ!

ஏரோத்:  ஸாலமி! தாய் சொல்லைக் கேளாதே! உன் அன்னை சொல் எனக்குப் புண்ணை உண்டாக்கும்!  உனக்கு வெறுமை உண்டாக்கும்!  அவளுக்கு உன்மேல் பொறாமை வந்து விட்டது!  பாதி நாட்டைக் கூடப் பரிசாகத் தருகிறேன்!  சரியென்று சொல்!  பிறகு என் பட்டத்து இளவரசி ஆக்குவேன், சட்டென ஒப்புக்கொள்!  சிட்டுப் புறாவே!  நீ நடனம் ஆடினால் என் நெஞ்சில் தேனாறும்!  உனக்குப் பாதி நாடு!  உட்காரப் பொன்னாசனம்!  சிரசில் வைரக் கிரீடம்!  வேறென்ன வேண்டும்?  பாதி நாடு, பொன்னாசனம், வைரக் கிரீடம் மகளுக்கு வேண்டா மென்று ஒரு தாய் தடுப்பாளா?  பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கிறாள் உன் தாய்!  உனக்குச் சீரும் செல்வாக்கும், பேரும் புகழும் சேர்வதை நிறுத்த முற்படுகிறாள் உன் தாய்!  நான் சொல்வதை நீ கேட்டால் செல்வக் குமரி ஆவாய்!  உன் தாய் சொல்வதைக் கேட்டால், நாய் வாழ்க்கைதான் உனக்கு!  எது வேண்டும் சொல் மயிலே!

ஸாலமி:  [ஏரோத் அருகில் வந்து கண்ணால் மயக்கி]  மயில் ஆடும் முன்பாக உறுதி அளிப்பீரா?  நான் எது கேட்பினும் கொடுப்பீரா?

ஏரோத்:  எது வேண்டுமானாலும் கேள்! [சிரித்துக் கொண்டு] ஆனால் என்னுயிரைக் கேட்காதே!  உன் கண் விழிகளின் நிழலில் நான் களைப்பாற வேண்டும்.

ஸாலமி:  உங்கள் உயிரைக் கேட்கப் போவதில்லை!  ஆனால் …..

ஏரோதியாஸ்:  ஸாலமி!  அவர் இச்சைக்கு இணங்காதே!  எனக்கு மோசடி செய்தார்!  உனக்கு இப்போது வலை விரிக்கிறார்!  ஆபரணங்களைக் காட்டி உன்னை மயக்குகிறார்.  அதற்கு ஒப்புதல் அளிக்காதே, ஸாலமி!  நீர்மேல் எழுதும் அவரது உறுதிக்கு எந்தப் பொருளு மில்லை!

ஏரொத்:  உறுதி அளிக்கிறேன், ஸாலமி.  உறுதி அளிக்கிறேன்.  உன்னாசை ஆபரணத்தைக் கேள்.  அது உன் மயில் கழுத்தை அலங்கரிக்க வேண்டும்.

ஸாலமி:  எதன் மீது உமது உறுதியை உரைப்பீர், மன்னரே?

ஏரோத்: ஸாலமி, கேள்! என் மீதாணை, என் மண் மீதாணை, என் கிரீடம் மீதாணை, என் மனைவி மீதாணை [ஏரோதியாஸ் முகத்தைக் கோணுகிறாள்], நான் வணங்கும் தெய்வங்கள் மீதாணை. நீ விரும்பும் எதையும் தரும் இதயம் எனக்கு.  நாட்டில் பாதி போதுமா கண்மணி?  நர்த்தனம் புரிவாயா நீ?  சொல் பெண்மயிலே உன்னைப் பொன்மயிலாய் ஆக்குகிறேன்! ஏன் பேசாமல் சிந்திக்கிறாய்?  வேறு எதைக் கேட்கப் போகிறாய்?

ஸாலமி: [அன்னையை அருகி, மெதுவாக]  அன்னையே! பாதி நாடு போதுமா?  மன்னரிடம் வேறு என்ன கேட்பது?

ஏரோதியாஸ்:  [ஸாலமி காதில் ஏதோ முணு முணுக்கிறாள்]

ஸாலமி:  [மிரட்சியுடன்] ஐயோ அன்னையே!  நானதைக் கேட்க மாட்டேன்!  அந்தப் பாபம் எனக்கு வேண்டாம்!

ஏரோதியாஸ்:  மன்னரிடம் அதை மட்டும் கேள், மகளே.  பாதி நாடு நமக்கு எதற்கு?  எனக்கு வேதனை குறைய வேண்டும்.  மன்னருக்கும் நிம்மதி வாழ்வு கிடைக்கும்.  உன் பெயருக்கும் கறை உண்டாகாது!

ஸாலமி:  முடியாது, நான் கேட்க முடியாது. [முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்] பயங்கரப் பரிசு அது!

ஏரோதியாஸ்:  அப்படிக் கேட்கா விட்டால் நீ ஆடக் கூடாது.  உனக்கு ஆட அனுமதி கிடையாது.  நான் விரும்பும் வெகுமதியை நீ கேளா விட்டால், எனக்கு நிம்மதி யில்லை!  உனக்கும் நிம்மதி கிட்டாது!

ஏரோத்:  [அலுப்படைந்து]  தாயும், மகளும் கூடி என்ன பேசினீர்?  பாதி நாடு போதாதா?  ஸாலமி! உன் காதில் ஏரோதியாஸ் என்ன உபதேசம் செய்தாள்?  ஸாலமி நீ பட்டத்து ராணியாய் என் பக்கத்தில் அமர்வாய்!  பட்டத்து ராணியாய்ப் பல்லக்கில் பவனி வருவாய்!  உல்லாச புரியில் சல்லாபம் செய்வாய்!  நானின்று ஆனந்தமாய் இருக்கிறேன், ஸாலமி நடனமாடப் போகிறாள் என்று!  கேள், ஸாலமி, உனக்கு என்ன வேண்டும்?  தாமதம் ஏன்?  தாய் சொல்வதைக் கேளாதே!  உன் உள்ளம் சொல்வதைக் கேள்!  நீ ஆட்டத்தை துவக்கு!  ஆடியதும் வெகுமதி கைமேல் கிடைக்கும்!

ஏரோதியாஸ்: ஸாலமி!  நான் சொன்னதைக் கொடுத்தால் நடனம் ஆடலாம் நீ!  அல்லாவிடில் மறுத்து விடு.

ஸாலமி:  [பரபரப்புடன் திரும்பி]  ஆடுவதாய்த் தீர்மானித்து விட்டேன், அன்னையே!  ஆடை மாற்ற வேண்டும். மங்கிப் போன முகத்தைப் பொங்கி வரும் நிலவாய்ப் புதுப்பித்து ஒப்பனை செய்ய வேண்டும்.  வேர்த்துப் போன முகத்தைக் கழுவி விழிகளுக்கு காந்த மையிட வேண்டும்.  களைத்து நிற்கும் கால்களில் சலங்கை பூட்ட வேண்டும்.  சேடிகள் நறுமணச் சாந்துகளைக் கொண்டு வர வேண்டும்!  ஆடும்போது என் நறுமணம் மாளிகை பூராவும் பரவ வேண்டும்!  அரங்கத்தில் ரோமாபுரிப் பணியாளர் உடையெல்லாம் அந்த மணம் நுழைய வேண்டும்.  பாதாளச் சிறையில் அழுக்கேறிய போதகர் மேனியிலும் பட்டு புதுமணம் அளிக்க வேண்டும்.  அரண்மனை வாத்தியக் குழுவைத் தயார் செய்யுங்கள் மன்னரே!  ஆடுவதாய்த் தீர்மானித்து விட்டேன், அன்னையே [ஒப்பனை அறைக்குள் நுழைகிறாள்].

ஏரோதியாஸ்:  தாய் சொன்னதை நினைவில் வைத்துக் கொள், ஸாலமி!  நடனம் முக்கியமில்லை!  பரிசுதான் முக்கியம்.  நாட்டிய நங்கைக்கு வெகுமதிதான் பிரதானம்.  நடன மயக்கத்தில் கடமையை மறந்துவிடாதே!

ஏரோத்:  தாயும், மகளும் என்ன பேசிக் கொண்டீர்கள்?  ஸாலமி காதில் எனக்கெதிராக எதையாவது ஓதி விட்டாயா?  அவள் என்ன கேட்க வேண்டும் என்று ஏதாவது சொல்லிக் கொடுக்கிறாயா?

ஏரோதியாஸ்:  அவள் கேட்பதை நீங்கள் கொடுக்கத்தான் வேண்டும்.  மறுத்தால் நானும் அவளுடன் சேர்ந்து உங்களோடு வாதாடுவேன். சண்டை போடுவேன்.

ஏரோத்:  போடுகிற பீடத்தை பார்த்தால், நாடு முழுவதும் கேட்பதாகத் திட்டமா?  நாட்டைப் பிடுங்கிக் கொண்டு தாயும் மகளும் காட்டுக்கு என்னை ஓட்டத் திட்டமா?  நாட்டை மூதேவி உன் கையிலும், ஒய்யாரி உன் மகள் மடியிலும் போட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று கனவு காணாதே!  பாதி நாட்டுக்கு மேல் பரிசு தர மாட்டேன்!

ஏரோதியாஸ்:  ஸாலமி, முழு நாடு கேட்க மாட்டாள்!  நாட்டை பிடுங்கி உங்களை ஓட்டும் திட்டமுமில்லை.  நாங்கள் நாட்டை ஆளும் திட்டமுமில்லை!  பயப்படாதீர்கள்!  நங்கையர் எங்களுக்கு நாடாள ஆசை கிடையாது, ஆற்றலும் கிடையாது.  ஸாலமி கேட்கப் போவது சிறிய வெகுமதி!  எளிய வெகுமதி!  மலிவு வெகுமதி. ஆனால் அப்பரிசு உமக்கும், எனக்கும் வேண்டாதது!  ஸாலமி காதலிப்பது!  நானும் வேண்டும் வேண்டாதது!

ஏரோத்:  [கோபத்துடன்] என்ன புதிராகப் பேசுகிறாய்! புரியவில்லை! சிறிய வெகுமதி! எளிய வெகுமதி! மலிவு வெகுமதி!  நான் வேண்டாதது! நீ வேண்டாதது!  ஸாலமி காதலிப்பது!  நீ வேண்டும் வேண்டாதது!  …. ஏனிப்படிக் குழப்புகிறாய்?  குழம்பிப் போன நீ, என்னையும் குழப்புகிறாய்!  எளிய பரிசைக் கேட்க ஏன் ஸாலமி காதில் முணுமுணுத்தாய்?  என் காதில் விழாமல் ஏன் பார்த்துக் கொண்டாய்?  தாயும், மகளும் சேர்ந்து எனக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்ய சதி பண்ணுகிறீர்!  ஆமாம் சதிதான் அது!  என்ன ரகசியச் சதி அது?  சொல், சொல், சொல்!

++++++++++++++++++

[காட்சி-1, பாகம்-15 ]

மயிலாடு கின்ற திங்கே!

மயங்கிடுது விழிக ளிங்கே!

மானாடு கின்ற திங்கே!

மனதாடி மகிழ்வ திங்கே!

தானாடும் தலைக ளிங்கே!

தடம்புரளும் உடல்க ளிங்கே!

தீராத மோக மிங்கே!

தீர்த்திடுவாள் பாவை யிங்கே!

***************

கடவுள் மனித சந்ததியை உருவாக்க பெண்ணுக்குப் பொறுப்பைக் கொடுத்தது. “நான் மட்டும் தாய்ப்பணியைத் தனியாகக் தாங்கிக் கொள்ள முடியாது” என்று அலறினாள் பெண். “துணைப் பிறவியாக, உனக்கொரு கருவியாக உதவி செய்ய ஆணை அளிக்குகிறேன் என்று கூறியது கடவுள்.  உனது கவர்ச்சிக் கணைகளை ஏவி அவனை அடிமையாக்கிப் பணி புரிய உடன் வைத்துக்கொள்” என்றது. ஆடவன் முழுமையாக ஒப்ப வில்லை அதற்கு! “பெண் கவர்ச்சியால் என்னை ஆதிக்கம் செய்வாள்! பழிவாங்க அவளை நான் கைப் பதுமையாய் ஆக்கி ஆட்டி வைப்பேன்,” என்று ஆங்காரமாய்க் கூறினான் ஆடவன்!

***************

“என்னைக் காதல் மொழியில் மயக்கிடு!  உன்னைப் பின்தொடர்வேன். மன்னர் தன் மாளிகைக்கு என்னை அழைத்துள்ளார்!  ஆனந்தக் கடலில் மூழ்கி ஆடிப்பாடி மகிழ்வேன். மதுபானத்தை விட மன்னரின் காதல் சொற்களை நாடுவேன்.  நேர்மையான காதல் மீது தீராத மோகம் எனக்கு.”

சாலமன் பாடல் [Song of Solomon]

“இல்லை. அங்கிருந்து தப்பவே முடியாது.  நரகமும் உடனிருக்கும் ஒரு சொர்க்கபுரி எங்கும் கிடையாது.  நமது உள்ளத்திலே எழும் மாயப் பிசாசின் மடத்தனக் கோளாறுகளை எடுத்துக் கொள்ளும் ஞானம் எதுவுமில்லை.  சாத்தானின் ஒவ்வொரு குரோத ரோமமும், சிறகும் தூக்கி வெளியே எறியப்பட வேண்டும்”

ஜியார்ஜ் மாக்டானல்டு

வான் உயர்ந்த உன்னத கோபுரங்கள் எல்லாம் மண் தரையிலிருந்தான் எழும்பி யுள்ளன.

சைனீஸ் பழமொழி

கடவுள் ஒவ்வொரு பறவைக்கும் உணவு அளிக்கிறார். ஆனால் அதனுடைய கூட்டுக்குள்ளே அவர் உணவைப் போடுவ தில்லை.

டேனிஷ் பழமொழி

“ஒவ்வொரு புனிதருக்கும் ஓர் இறந்த காலம் உண்டு.  அது போலின்றி ஒவ்வொரு பாபிக்கும் ஓர் எதிர்காலம் உள்ளது.”

“வெறுப்புக்கும் கண்கள் குருடு, காதலைப் போல.”

“உணர்ச்சியுடன் வரையப்படும் ஒவ்வொரு முகத்தோற்ற ஓவியமும் [Portrait] ஓவியரின் தோற்றமே தவிர உட்கார்ந்திருப்பவரின் தோற்றமன்று.”

“மனிதர் பலியாகும் கவர்ச்சி வசப்பாடுகளுக்கு [Temptations] அவரது பலவீனம் காரணமன்று.  நான் சொல்கிறேன்:  பயங்கர வசப்பாடுகள் பலவற்றின் வாசற் படியேறிப் பலியாக மிக்க உந்துதலும், துணிச்சலும், மன வலுவும் வேண்டும்.”

“மனச்சாட்சியும் கோழைத்தனமும் மெய்யாக ஒன்றுதான்.  மனச்சாட்சி என்பது வர்த்தகத் துறையில் மனிதரிடும் பெயர்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.  ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.  ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான்.  ராணி அதைத் தடுக்கிறாள்.  முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள்.

*********************

ஏரோத்:  [கோபத்துடன்] என்ன புதிராகப் பேசுகிறாய்! புரியவில்லை! சிறிய வெகுமதி! எளிய வெகுமதி! மலிவு வெகுமதி!  நான் வேண்டாதது!  நீ வேண்டாதது!  ஸாலமி காதலிப்பது! …. ஏனிப்படிக் குழப்புகிறாய்?  குழம்பிப் போன நீ, என்னையும் குழப்புகிறாய்!  எளிய பரிசைக் கேட்பாள் என்றால் ஏன் ஸாலமி காதில் அதை முணுமுணுத்தாய்?  என் காதில் விழாமல் ஏனதை ஒளித்துக் கொண்டாய்?  தாயும், மகளும் சேர்ந்து எனக்குப் பிடிக்காத ஒன்றைக் கேட்கச் செய்ய சதி பண்ணுகிறீர்!  ஆமாம் சதிதான் அது!  என்ன ரகசியப் பரிசு அது?  சொல், அதுவென்ன அதிசயப் பரிசு?  சொல், சொல்!

ஏரோதியாஸ்:  ஸாலமியே அதை உங்களிடம் கேட்பாள். வெகுமதியைக் கேட்கப் போவது அவள்!  எனக்கா கேட்கும் உரிமை அளித்தீர்கள்?  நானிந்த பரிசுப் போட்டியில் தலையிட வில்லை!  ஆனால் அவளிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.  அது என் விருப்பம்.  அவள் விருப்பம் என்னவோ, யாருக்குத் தெரியும்?

ஏரோத்:  அதோ பார்!  சலங்கை கட்டி, உடல் குலுங்க ஸாலமி வந்து விட்டாள்!  உட்கார்! நீயும் நடன விருந்தைக் கண்டுகளி! [ஸாலமியைப் பார்த்து] நாட்டியப் பாவையே! உன் காலணிகள் எங்கே?  அன்னத்தின் தூவியான உன் பொற் பாதங்கள் வெறும் தளத்தில் படலாமா? [சற்று கவலையுடன்]  காற் தடங்கள் குருதிக் கறை படிந்த தளத்தில் படியலாமா?  ஸாலமி!  குருதிக் கறை தன்னைக் கழுவ வேண்டாமா?  அது தீய சகுன மாயிற்றே!

ஸாலமி:  எனது பாதங்களில் குருதிக் கறை படவில்லை மன்னரே!  கறைபட்ட காலணிகளை கழற்றித் தீயில் போட்டு விட்டேன்!  ஆனால் கறை பட்டுப் போனது என்னிதயம்!  பாதங்கள் அல்ல.  பாத அணிகள் எனக்குத் தேவை யில்ல, நாட்டியம் ஆடுகையில்!  எனக்குத் தீய சகுனத்தில் நம்பிக்கை யில்லை!  குருதியில் கால் பட்டால் என்ன?  கை பட்டால் என்ன?  உடம்பே குருதியால் உயிர்ப்பிக்கப் படும் போது, கால் வேறா? கை வேறா? மெய் வேறா?  எல்லாம் ஒரே குளத்தில் மிதப்பவை!  ஒருவன்  உயிர் கொடுத்தான்!  குருதி கொடுக்க வில்லை.  புனித உயிர் போய் விட்டது!  ஆனால் எனக்கின்னும் மோகம் உள்ளது.  வாலிபன் மீதில்லை!  வேறொருவர் மீது காதல்!  என்மேல் மோகம் கொண்ட வாலிபன் தன்னுயிரைத் தானம் செய்தான்!  நான் மோகம் கொண்ட காதலர் எனக்கு வேண்டும்!  அவரை வேறு ஒருத்தி தீண்டக் கூடாது!  அதுவரை என் தாகம் அடங்காது!  என் மோகம் முடங்காது!

ஏரோதியாஸ்:  அவள் குருதிமேல் ஆடினால் உங்களுக்கு என்ன தீய சகுனம்?  ஸாலமிக்கு ஆசை காட்டி ஆட வைப்பதில் தோல்வி அடைந்தீர்!  அதில் வெற்றி பெற அவளுக்கு வெகுமதி தருவாய்க் கூறி உறுதி அளித்தீர்?

ஏரோத்:  போதகர் சொன்னது மெய்யாகப் போனது!  பார், செந்நிறத்தில் மூழ்கி விட்டது வெண்ணிலா!  செந்நிற மாகும் வெண்ணிலா உன் கண்களுக்குத் தெரிகிறதா?

ஏரோதியாஸ்:  ஆம், தெரிகிறது எனக்கு.  விண்மீன்கள் அத்திக் காய்கள் போல வானிலிருந்து வீழ்கின்றன!  மேற்கே கீழ்வானம் சிவந்து, வெண்ணிலவைச் செந்நிலவாக வரைகிறது பரிதி!  பூகோளத்தின் மன்னர்கள் வேதனப் படுகிறர் என்பது உண்மைதான்!  போதகர் சொன்னதில் அது ஒன்றுதான் மெய்யானது.  வாருங்கள் உள்ளே போகலாம்.  நோயில் விழுந்தவர் போல் நீங்கள் காணப்படுகிறீர்!  நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.

ஜொஹானன் குரல்: [உச்சக் குரலில்] ஏடாம் நகரிலிருந்து வருபவர் யார் தெரியுமா?  பாஸ்ரா நகரிலிருந்து வருபவர் யாரென்று தெரியுமா?  அறிந்து கொள்வீர்.  பழுப்பு நிற உடை அணிந்தவர் அந்த மனிதர்!  ஒளி பொருந்திய கண்களையும், மினுமினுக்கும் மேனியையும் படைத்தவர் அவர்!  நடையில் மிடுக்குடன் நடப்பவர் அவர்!  குருதியில் நனைந்த உனது உடை எங்கே?  மெருகுடன் ஓளிரும் அவரது மேனி எங்கே?

ஏரோதியாஸ்:  போதகர் பேச்சைக் கேட்டால் பைத்தியம் பிடிக்கிறது எனக்கு!  முதலில் அவரது வாயைக் கட்டாமல், என் மகள் ஆடப் போவதில்லை!  உமது விழுங்கும் கண்கள் முன்பாக ஸாலமி ஆடுவதை நான் அனுமதிக்கப் போவ தில்லை. [எழுகிறாள்]

ஏரோத்:  நீ எங்கும் போகாமல் முதலில் உட்கார். ஸாலமி ஆடப் போவது உண்மை!  நடனத்தை நீயும் அமர்ந்து ரசிக்க வேண்டும்.  அவள் ஆட்டத்தைக் காணாமல் நானிந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை!

[ஸாலமி நர்த்தகி போல் ஒப்பனை செய்து கொண்டு அரங்கிற்கு வருகிறாள்.  அனைவரும் நிசப்தமாக அமர்கிறார்கள்]

ஸாலமியின் தோழி:  மாண்புமிகு மன்னரே!  ஸாலமி இளவரசி ஆடப் போகிறார்! [வாத்திய ஒலிகள் வாசிக்கப் படுகின்றன.  சேடியர் பாடுகிறார். ஸாலமி ஆடத் துவங்கிறாள்.  அவையோர் ரசிக்கிறார்கள்.]

மயிலாடு கின்ற திங்கே!

மயங்கிடுது விழிக ளிங்கே!

மானாடு கின்ற திங்கே!

மனதாடி மகிழ்வ திங்கே!

தானாடும் தலைக ளிங்கே!

தடம்புரளும் உடல்க ளிங்கே!

தீராத மோக மிங்கே!

தீர்த்திடுவாள் பாவை யிங்கே!

[ஸாலமி பாட்டுக்கும், தாளத்திற்கும் ஏற்ப வளைந்து, நெளிந்து, மேனி குலுக்கி ஆடுகிறாள்]

ஏரோத்:  ஆஹா, ஸாலமி! என்ன ஒயிலாக ஆடுகிறாய்!  தேவ மயில் போல் ஆடுகிறய்!  புள்ளி மான்போல் துள்ளி ஓடுகிறாய்!  நெஞ்சத்தில் தேனை ஊற்றுகிறது உனது நெளிவாட்டம்!  நெஞ்சைத் துடிக்க வைக்கிறது உனது நர்த்தனம்!  மின்னல் போல் வெட்டுகிறது உன் பொன்னுடல்!  உன் காந்தக் கண்ணொளி என் உள்ளத்தைக் கவ்வுகிறது!  கேள் ஸாலமி, கேள்!  உன் வெகுமதியைக் கேள்!  விலை மதிப்பற்ற வைரக் கழுத்தணியா?  கண்கவரும் பொன் ஆபரணங்களா?  மாட மாளிகையா?  ஆடலரசியே கேள்!  கேட்டது கிடைக்கும் உறுதியாக!

ஸாலமி:  [ஆடிக்கொண்டே]  கேட்டது கிடைக்குமா?  உறுதியாகக் கிடைக்குமா?  கேட்கவா நான்?  எனக்கு வேண்டியது, விலை மதிப்பற்ற நகைகள் அல்ல!  மாட மாளிகை அல்ல! பாதி நாட்டைக் கேட்க வில்லை!  நான் கேட்கப் போவது ……!

ஏரோத்:  [வியப்பாக, வேதனையுடன்]  கண்மணி ஸாலமி!  இவை யெல்லாம் வேண்டாமா?  பிறகு கொடுப்பதற்கு என்னிடம் வேறு எதுவுமில்லை, ஸாலமி!  இவைதான் என்னிடமிருப்பவை.  வேறென்ன கேட்கப் போகிறாய் நீ?

ஸாலமி:  [நடனத்தை சற்று நிறுத்தி]  தலை!  எனக்கு வேண்டியது, தலை!  வெறும் தலை!  வாளால் சீவிய தலை!  ஜொகானன் தலை!  வெள்ளித் தாம்பாளத்தில் போதகரின் தலை!  துண்டிக்கப் பட்ட தலை!  குருதில் மூழ்கிய தலை!  நான் காதலித்தவர் தலை!

ஏரோத்:  [பயங்கரக் குரலில்]  அடி பாவி!  அடி பாதகி!  என்ன கேட்டாய்?  புனித போதகர் தலையா?

[தலை சுற்றி ஆசனத்திலிருந்து கீழே விழுகிறார். காவலர் அருகில் போய் ஏரோதைப் பிடித்துக் கொண்டு கவனிக்கிறார்கள்]

+++++++++++++++++++

[காட்சி-1, பாகம்-16]

மயிலாடி ஓய்ந்த திங்கே!

மாற்றி விட்டாள் மதியை யிங்கே!

மானாடி முடிந்த திங்கே!

மன்னவரின் பரிசை எங்கே?

தானாக ஆணை யிடு,

தட்டிலவர் தலையைக் கொடு!

நானாகக் கேட் பதை நீ

நடுங்காமல் முடித்து விடு!

++++++++++

“புதல்வருக்குள்ளே, காட்டு வெளியிடை மரங்களுக்கு ஊடே வளர்ந்த ஆப்பிள் மரம் போன்றவன், என்னரும் காதலன். அவனது நிழலில் அமர்ந்து நான் பூரிப்புடன் சுகங் காண்கிறேன். அவனது கனி என் சுவைக்கு ஏற்றதாக இனிமை தருகிறது.”

“என் காதலன் எனக்கு மட்டும் உரிமை யானவன்.  அதுபோல் நான் அவனுக்கு மட்டும் உரியவள்.  அவன் அல்லி மலர்களின் ஊடே என் பசிக்கிரை தருகிறான்.”

சாலமன் பாடல் [Song of Solomon]

“ஒரு மாது அடுத்த முறை திருமணம் செய்யும் காரணம், அவள் முதல் கணவனை வெறுத்ததால்.  ஆனால் ஓர் ஆடவன் மறுமணம் செய்வதற்குக் காரணம், அவன் முதல் மனைவியை ஆராதனை செய்ததால்.  மாதர் தம் அதிர்ஷ்டத்தை நம்பி திருமணத்தை முயல்கிறார். ஆனால் ஆடவர் திருமணத்தில் வெற்றி பெறுவதைச் சூதாடும் முடிவாக [Risk] நோக்குகிறார்.”

“கடவுள் நம்மைத் தண்டிக்க விரும்பும் போது, நாம் கேட்கும் வரங்களை அது அளிக்கிறது.”

“பெண் மீதிச்சை கொண்டு ஆண் முயலும் போது, அவனை எதிர்த்துத் தள்ளுகிறாள்!  ஆனால் அவளை விட்டு ஆண் விலகிச் சென்றால் அவனைத் தடுத்து நிறுத்துகிறாள்!”

“பெண்டிர் நேசிக்கப் பட வேண்டியவர்; புரிந்து கொள்ளப் படுபவர் அல்லர்.”

“ஒவ்வொரு மனிதனும் தான் காதலிக்கும் பெண்ணை ஒருவகையில் அழிக்கிறான்! எல்லாரும் இதைக் கேட்க வேண்டும்!  சிலர் கசப்பான பார்வையில் காட்டுகிறார்!  சிலர் கவர்ச்சியான மொழியில் உரைப்பார்!  கோழைகள் முத்தமிட்டுச் செய்வார்!  தீரர்கள் தம் வாளால் செய்வார்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.  ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான்.  ராணி அதைத் தடுக்கிறாள்.  முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள்.  ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன?  கோர வெகுமதி!  வெள்ளித் தாம்பாளத்தில் ஜொகானன் தலை!

*********************

ஸாலமி:  [நடனத்தை சற்று நிறுத்தி]  எனக்கு வேண்டியது தலை!  வெறும் தலை போதும்!  வாளால் சீவிய தலை! யாருடைய தலை?  ஜொகானன் தலை!  கர்வம் கொண்ட கர்த்தரின் தலை! துண்டிக்கப் பட்ட தலை!  குருதில் மூழ்கிய தலை!  நான் காதலித்தவர் தலை!  வெள்ளித் தாம்பாளத்தில் ஜொஹானன் தலை வேண்டும்!

ஏரோத்:  [பயங்கரக் குரலில்]  அடி பாவி!  அடி பாதகி!  என்ன கேட்டாய்?  புனித மனிதர் தலையா? [தலை சுற்றி ஆசனத்திலிருந்து கீழே விழுகிறார்.]  காவலர் அருகில் போய் ஏரோதைப் பிடித்துக் கொண்டு கவனிக்கிறார்கள். ஏரோதியாஸ் எழுந்து கணவர் பக்கத்தில் மண்டி யிடுகிறாள்.]

ஏரோதியாஸ்: [ஸாலமியை நோக்கி] ஸாலமி!  நான் வேடிக்கையாய்ச் சொன்னதை நிஜமாக எடுத்துக் கொள்வாயா?  அறிவு கெட்ட மகளே!  அதிர்ச்சி வருமாறு இப்படியா திடீரென்று கேட்பது?  மன்னருக்கு எதுவும் வந்து விட்டால் என் கதி என்னாகும்?  உன் கதி என்னவாகும்?  சற்று சிந்தித்துப் பார்த்தாயா?  நம்மிருவருக்கும் எதிர்காலம், கேடு காலம்!

ஸாலமி: [ஆச்சரியப் பட்டு] ஓ! நீ வேடிக்கையாகக் கேட்டாயா?  எனக்குத் தெரியாதே!  நீ மெய்யாக நினைத்ததாக நான் நிஜமாக நம்பினேன்!  புனிதர் எனது சொத்து!  அவர் மீது மாலை முதல் எனக்கொரு பித்து!  நீ ஏன் அவர் கழுத்தைப் பிடித்தாய் என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் நான் ஏன் அவர் தலையைத் தேடுகிறேன் என்பது உனக்குத் தெரியாது.

ஏரோத்: [மெதுவாகக் கண் திறந்து மெல்ல எழுகிறான்.  படியில் அமர்ந்து கொண்டு, ஸாலமியைப் பார்த்துக் கனிவு மொழிகளில்] ஸாலமி! என் கண்மணி! ஒரு வெள்ளி தட்டா?  ஓராயிரம் வெள்ளித் தட்டுகள் தருகிறேன்!  கறை பிடிக்கும் போகும் வெள்ளி தட்டு எதற்கு?  தகதகவென மினுக்கும் தங்கத் தட்டு தருகிறேன்! எத்தனை வேண்டும் கேள்!

ஸாலமி:  சரி, தங்கத் தட்டே தாருங்கள்!  வெள்ளித் தட்டு வேண்டாம்.  ஒரு தட்டு போதும் எனக்கு!  ஆனால் தங்கத் தட்டில் ஜொகானன் தலை வேண்டும்!

ஏரோத்: [கோபத்தைக் காட்டி மெதுவாக] ஸாலமி! தாய்ச்சொல் தட்டாமல் கேட்டாய்!  அது உன் வாய்ச்சொல் என்று சொல்கிறாய்!  ஆச்சரிய மாயிருக்கே!  உண்மையைச் சொல்!  அது தாய்ச்சொல்லா?  அல்லது உன் வாய்ச்சொல்லா?  யார் மூல காரண மென்று நானறிய வேண்டும்!

ஸாலமி:  நான் தாய்ச்சொல்லைத் தட்டுபவள்!  என் மனதில் தூங்கிக் கிடந்த வேட்கையைத் தூண்டி விட்டவள் என் அன்னை!  நன்றி தாயே! நன்றி.  நானிப்போது கேட்கும் தலைப்பரிசு உனக்கில்லை தாயே, எனக்கு!  உனக்காக நீ வேண்டினாலும், எனக்காக நான் கேட்பது தலைப்பரிசு!  முதலில் நானும் தயங்கினேன்!  கேட்கத் தடுமாறினேன்!  என்னை முறிக்கி விட்டவள் நீ!  மூட்டி விட்டவள் நீ!  விலை மதிப்பில்லாத தலைப்பரிசில் உனக்கும் சிறிது பங்குண்டு!  ஏனிப்போது பயப்படுகிறாய்!  பின்வாங்குகிறாய்!  அஞ்சாமல் கேள் என்று எனக்கு நெஞ்சுறுதி திணித்தவள் நீ அல்லவா?  வீரத்தாயே!  நீதான் எனக்குத் தூண்! என்னோடு சேர்ந்து கொள்!  வரட்டும் தலைப்பரிசு தங்கத் தட்டிலே!

ஏரோத்: [இருவர் முன்பாக மண்டி யிட்டு] தாயும் சேயும் சேர்ந்து கொண்டு அப்பாவியின் தலையை அறுத்துத் தண்டிக்க அப்படி என்ன தவறிழைத்தார்?  அவர் ஒரு நாடோடி! அவர் ஓர் அனாதை! ஏழை! ஆசை யில்லாதவர்!  பாச பந்தமில்லாதவர்!  அவர் தலையை அறுத்துப் போடுவதில் உங்களுக்கு வரும் ஆதாயம் என்ன?

ஸாலமி:  [ஏளனமாக நோக்கி]  மன்னாதி மன்னரே! சொல்லுங்கள்! என்ன தவறிழைத்தற்காக நீங்கள் அவரைச் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்?  கொள்ளிக் கட்டையை தலைக் கருகில் வைத்திருப்பவர் யார்?  அவரது சாபச் சொற்கள் அன்னையின் காதில் விழும்படி காலடியில் வைத்தது யார்?  ஒவ்வொரு தினமும் என்னருமைத் தாயின் உறக்கத்தைக் கலைத்தவர் யார்?  என்னிளம் நெஞ்சில் காதலை விதைக்கப் போதகரை கண்ணெதிரே கவர்ந்திட வைத்தவர் யார்?

ஏரோத்: [கனிவாக] ஸாலமி!  குற்றவாளி நான்தான்!  ஒப்புக் கொள்கிறேன்!  உண்ண உணவின்றி, தங்குமிடமின்றி, ஊர் ஊராய்ச் சுற்றி உபதேசித்து வந்த போதருக்கு ஓரிடமிங்கு அளித்தேன்! அரசாங்க விருந்தாளியாக, அறிவுரை கேட்பதற்காக அழைத்து வந்தேன்!  அடைத்துப் போட்டேன்!  திட்டினார் என்னை!  பொறுத்துக் கொண்டேன்!  பாபி என்றார் என் மனைவி ஏரோதியாஸை!  மன்னித்தேன் அவரை!  ஆனாலும் நானவரைக் கொல்ல விரும்ப வில்லை!  கோபட்ட நான் கொன்றிருக்கலாம்!  ஆனாலும் நான் கொல்ல வில்லை!  நீங்களிருவரும் சேர்ந்து கொண்டு அவரது தலையை அறுக்கச் சொல்கிறீர்!  என்னால் முடியாது!  அந்த உத்தமர் தலையை வாளால் அறுக்க உத்தரவு தர முடியாது!

ஏரோதியாஸ்:  என் தலை மீது கைவைத்துச் சத்தியம் செய்தீர்!  மறுக்கிறீர் இப்போது.  மறந்து போனீரா?  என் தலைமேல் உறுதி மொழி உரைத்தது உண்மையா?  அல்லது அவரது தலையை அறுக்காமல் தப்பிக் கொள்ள முயல்வது உண்மையா?

ஸாலமி:  [மன்னரைக் கவர்ச்சியாக நோக்கி அருகில் சென்று, மடிமீது அமர்ந்து கன்னத்தைத் தடவுகிறாள்]  எனது நளின நடனம் கண்டு களித்தது போதாதா?  மறுபடியும் ஆடவா?  நடன மாது நான் வேறு என்ன செய்தால் ஜொகானன் தலைப்பரிசு தருவீர்? [மதுக்கிண்ணத்தைப் பார்த்து]  உங்கள் மதுக்கிண்ணம் காலியாக உள்ளதே!  நான் அதை நிரப்புகிறேன்!  தெளிவற்ற உள்ளம் மதுபானம் அருந்தினால் தெளிவுற்றுத் தேர்ச்சி அடையும்!  [பக்கத்தில் உள்ள மதுக் கூஜாவை எடுத்துக் கிண்ணத்தில் ஊற்றுகிறாள்]  அருந்துவீர் மன்னரே! தள்ளாடும் உங்களை மதுப்பானம்தான் நிமிர்த்தி உட்காரச் செய்யும்! [மதுக்கிண்ணத்தை எடுத்து ஏரோத் வாயில் ஊட்டுகிறாள்]  என் தந்தக் கையில் தரும் மது தனிச் சுவையாக யில்லையா?

ஏரோத்:  [மதுவைச் சுவைத்துக் கொண்டே விழிகள் மூட]  சொர்க்கபுரி அரசியே!  மதுவை விட உன் மேனிக் கனலே சுகம் தருகிறது!  உலையிலிட்ட இரும்பாய் உருக்குகிறது! [ஸாலமியைத் தன்னுடன் அணைத்துக் கொள்கிறான்]  ஸாலமி!  என்னை விட்டு நீ விலகாதே!  கண்மணி!  உன்னையேதான் இராப் பகலாக நினைத்துக் கொண்டிருந்தேன்.  கழுத்தணியாக என்னை அணிந்து கொள்!  இந்த இனிய நேரத்தை நிரந்தர மாக்குவாயா?

ஸாலமி: [கெஞ்சலுடன்]  நிச்சயம் செய்வேன் மன்னா, ஜொகானன் தலையைக் கொய்து தட்டில் கொண்டு வந்தால்!  உறுதி மொழி தருகிறேன் உங்களுக்கு?  என் உறுதி மொழி வலுவானது!  உங்கள் உறுதி மொழிக்கு முதுகெலும்பு கிடையாது!  மண் புழுவைப் போல் அது நெளிவது!

ஏரோத்: [கோபமாக ஸாலமியைத் தள்ளி விட்டு எழுந்து]  ஸாலமி! அது நடக்காது!  உன் வெகுமதியை மாற்றிக் கேள்!  போதகர் புனித கர்த்தா!  என் அரண்மனையில் அவரது சிரம் துண்டிக்கப் படாது!  வேறு ஏதாகிலும் கேள்!  உன்னை மணந்து கொள்ளவா?  கேள் உன்னை மணந்து கொள்கிறேன்!  உன்னைப் பட்டத்தரசி ஆக்கவா?  கேள், உன்னைப் பட்டத்தரசியாய் அறிவிக்கிறேன்!  உனக்கோர் மாட மாளிகை, கூட கோபுரம் வேண்டுமா?  கேள், உனக்குச் சொர்க்க மாளிகை கட்டித் தருகிறேன்!  அற்பத் தலைக்கு ஆசைப் படுகிறாய்!  என்னால் செய்ய முடியாத சிரச் சேதம் செய்யத் தூண்டுகிறாய்!  தாயும், மகளும் சேர்ந்து ஓர் புனிதரைக் கொல்ல திட்டம் போடுகிறீர்!  ஏன்?  எதற்கு?  எதற்கு?  என்ன பாபம் செய்தார் அவர் உங்களுக்கு?

[காட்சி-1, பாகம்-17]

மயிலாடிக் கேட்கு மிங்கே!

மன்னருக்கு அதிர்ச்சி யிங்கே!

மான் விழையும் பரிசை எங்கே?

மன்னர் தர மறுப்ப திங்கே!

வீணாகப் பிடிவாத மிங்கே

வெள்ளித் தட்டில் சிரசு எங்கே?

தேனாகப் பேசி விட்டுத்,

திணருகிறார் மன்ன ரிங்கே!

+++++++++++++++

“காதலானது நீண்ட காலத் தோழமையாலும், நெருக்கமுடன் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதாலும் உண்டாவது என்று சொல்வது தவறு!  ஆத்மீகப் பிணைப்பில் பிறப்பதுதான் உன்னதக் காதல்.  நொடிப் பொழுதில் அப்பிணைப்பு உருவாகிப் பிடித்துக் கொள்ள வில்லை என்றால் எத்தனை ஆண்டுகளிலும், ஏன் எத்தனை பிறவிகளிலும் அது தோன்றப் போவதில்லை!”

“கனவுகள், சாதனை ஆசைகள் எதுவுமில்லாத செல்வக் குழுவினருடன் வாழ்வதைக் காட்டிலும், தாழ்ந்த குடியினரிடையே ஒளிக்கண் [Vision] கொண்டு நிறைவேறக் கூடிய கனவுகளைத் தொடரவே நான் விழைகிறேன்.”

கலில் கிப்ரான் [Kahlil Gibrahn (1883-1931)]

“ஓர் எழுத்தாள மேதையின் மகத்தான படைப்புகளில் அவரது ஆத்மாவின் இரகசியங்கள், வாழ்வின் ஒவ்வோர் அனுபவம், மற்றும் அவரது மனத்தின் தரப்பாடும் [Quality of Mind] காணப்படும்.”

“பிரச்சனைகள் வரும் போது சிலர் மதக் குருக்களை அணுகுவர்; சிலர் கவிதை எழுதப் போவார்; நான் நண்பரை அண்டிப் போவேன்.”

வெர்ஜீனியா உல்ஃப் [Virginia Woolf (1882-1941)] 

ஒளிவீசிய அவள் பொன் கூந்தல்,

கறை படிந்து துருப் பிடிக்கிறது! 

நளினம் மிக்கவள், இளமை பெற்றவள்,

களி மண்ணாய்ப் போகிறாள்!

 

சவப்பெட்டியும், கனக்கும் கற்களும்

அமுக்கும் அவளது மேனியை!

தவிக்கு தென் நெஞ்சு தனியாக!

தங்கை ஓய்வெடுத் துறங்குகிறாள்!

 

அமைதி! அமைதி! அச்செவிகள் கேளா,

கீதமோ, பாக்களோ அச்செவிகள் கேளா!

என்னுடை வாழ்வும் புதைந்த திங்கே,

மண்மூடிப் போன மயான பூமியில்!

[ஒன்பது வயது தங்கை ஐஸொலா நோயில் மரித்த போது ஆஸ்கர் வைல்டு எழுதியது]

“பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது என் வகுப்புத் தோழர்களால் நானொரு ஞானச் சிறுவனாகக் கருதப் பட்டேன்.  அதற்குக் காரணம்: போட்டி ஒன்று வைத்தால் மூன்று நூலடுக்கு நாவலை அரை மணி நேரத்தில் படித்து முடித்து, அதன் கதைக்கருவைச் சொல்லி விடுவேன்.  ஒரு மணி நேரத்தில் படித்து முடித்தால் கதையில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதோடு, சிறப்பு வசனங்களையும் எடுத்துக் கூற முடியும்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் விலங்கிடப் பட்டுத் தனியே சிறையில் கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொஹானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.  ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான்.  ராணி அதைத் தடுக்கிறாள்.  முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள்.  ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன?  கோர வெகுமதி!  வெள்ளித் தாம்பாளத்தில் ஜொகானன் தலை!

*********************

ஏரோத்: [கோபமாக ஸாலமியைத் தள்ளி விட்டு எழுந்து]  ஸாலமி! அது நடக்காது!  உன் வெகுமதியை மாற்றிக் கேள்!  போதகர் புவியில் வாழ வேண்டிய ஓர் புனித கர்த்தா!  என் அரண்மனையில் அவரது சிரம் துண்டிக்கப் படாது!  என் ஆணையில் அது நிறைவேறாது!  வேறு ஏதாகிலும் கேள்! …கண்மணி!  தேன்மொழி!  உன்னை நான் மணந்து கொள்ளவா?  கேள், உன்னை மணந்து கொள்கிறேன்!  உன்னைப் பட்டத்தரசி ஆக்கவா?  கேள், உன்னைப் பட்டத்தரசியாய் அறிவிக்கிறேன்!  உனக்கோர் மாட மாளிகை, கூட கோபுரம் வேண்டுமா?  கேள், உன்னத சொர்க்க மாளிகை கட்டித் தருகிறேன்!  அற்பத் தலைக்கு ஆசைப் படுகிறாய்!  என்னால் செய்ய முடியாத சிரச் சேதம் செய்யத் தூண்டுகிறாய்!  தாயும், மகளும் சேர்ந்து ஓர் புனிதரைக் கொல்ல திட்டம் போடுகிறீர்!  எதற்கு?  எதற்கு அவரைச் சிரச் சேதம் செய்ய வேண்டும்?  என்ன பாபம் செய்தார் அவர் உங்களுக்கு?

ஏரோதியாஸ்: [ஆத்திரமோடு] என்ன பாபம் அவர் செய்தாரா? நல்ல கேள்வி யிது.  என்னைப் பிறரிடமிருந்து பறித்துக் கொள்ள, நீங்கள் என்ன செய்தீர் தெரியுமல்லவா?  என் முதல் பதியைக் கொன்று போட்டீர்!  நீங்கள் பிறன் மனைவியைக் பறித்துக் கொண்டீர்!  அது பாபமா?  அது தர்மமா?  சொல்லுங்கள். அது தவறு என்று தம்பட்டம் அடித்தவரைப் பிடித்துச் சிறையில் அடைத்து விட்டீர்!  அப்படியும் அவர் நச்சு வாயை மூட முடிந்ததா?  வெளியே ஊதிக் கொண்டிருந்த சங்கை, வீட்டுக்குள்ளே ஒலிக்க வைத்தீர்! போதகர் உம்மைத் திட்டியது போதாமல் எம்மையும் திட்டிக் குவிக்கிறார்!  உம்மைத் திட்டியதற்குச் சிறைவாச தண்டனை கொடுத்தீர்!  ஆனால் எம்மைத் திட்டியதற்கு … ?  என்ன தண்டனை?

ஏரோத்:  என்னைத் திட்டியது உண்மை!  ஆனால் அத்தவறுக்குத் தலையை அறுக்க தண்டனை நான் கொடுக்க வில்லை!  நீயும், உன் மகளும் கேட்கும் தண்டனை, தவறுக்கு ஏற்ற தண்டனை யில்லை!

ஏரோதியாஸ்:  நீங்கள் முதலிலேயே அவர் தலையைக் கொய்திருந்தால், எங்கள் மானம், மதிப்பு காப்பாற்றப் பட்டிருக்கும். அவரைச் சிரச்சேதம் செய்ய நாங்கள் போராட வேண்டிய தில்லை. என் மகள் கேட்ட வெகுமதியைக் கொடுப்பது உங்கள் கடமை! உறுதி அளித்து விட்டு மறுப்பது நீதியா? நியாயமா? நெறியா?  சொல்வீர் மன்னவரும் நீரோ? என் மேல் என் மகளுக்கு நேசம், பாசம், மிகுந்துள்ளது!  நான் சொன்னபடிக் கேட்டாள்.  என் மானத்தைக் காப்பாற்றக் கேட்டாள்.  கணவரா யினும் உமக்கு நான் கூறும் காரணம் புரியவில்லை!  நீவீர் என் மானத்தைக் காப்பதில் ஆவல் காட்ட வில்லை!  சொல்வீர், கணவரும் நீரோ?  என் புதல்வி என்னை எப்போதும் கைவிட மாட்டாள்.  என் மானத்தைக் காப்பது உங்கள் பொறுப்பல்லவா?

ஏரோத்:  தாயும் மகளும் சேர்ந்து உங்கள் சுயநலப் பாதுகாப்புக்காக என்னைக் கொலைகாரனாய் ஆக்கிவிட முற்படுகிறீர். தவறைச் செய்ய வைத்து தப்பிக் கொள்ள முற்படுகிறீர்.  பாப வினையில் பங்கு பெறாமல் பலாபலனை மட்டும் அனுபவிக்கத் துணிந்து விட்டீர்.

ஏரோதியாஸ்:  ஏன் அப்படிச் சொல்கிறீர்?  உங்கள் பாபத்தில் எனக்கும் பங்குண்டு.  என் மகளுக்கும் பங்குண்டு.  உங்கள் தண்டிப்பில் எனக்கும் பங்கு உண்டு.  நாங்கள் தப்பிச் செல்ல விரும்ப வில்லை.

ஸாலமி:  ஆமாம் மன்னா!  உங்கள் பாபத்தில் எனது கூட்டுறவும் உண்டு!  கவலை வேண்டாம்.  போதகர் சொர்க்கபுரிக்குப் போவார் நிச்சயம்.  நாமெல்லாம் போவது நரகத்துக்குத் தானே! … அதெல்லாம் போகட்டும்.  முதலில் நான் கேட்ட வெகுமதி வெள்ளித் தட்டில் வரட்டும்!  பாபத்தைப் பிறகு பங்கிட்டுக் கொள்வோம்!  உத்தரவிடுவீர் மன்னரே!  வேலை செய்தவன் வியர்வை உலர்வதற்குள் வெகுமதியைக் கொடுக்க வேண்டும் என்னும் முதுமொழி உங்களுக்குத் தெரியாதா?

ஏரோத்:  [ஸாலமியைப் பார்த்து]  பிடிவாதம் செய்யாதே ஸாலமி!  போதகர் தலையைத் துண்டிக்க என் மனம் தயங்குகிறது! தவறு நிகழக் கூடாதென்று என் மனம் தவிக்கிறது!  கண்மணி!  என் காதலைப் பெற்றவள் நீ!  என் பட்டத்து ராணியாய்ப் பக்கத்தில் அமரத் தகுதி பெற்றவள் நீ!  நான் பணிந்து கேட்கிறேன்.  போதகர் தலைக்குப் பதிலாக வேறு எதனையும் கேள்!  அவசரப் பட்டு நாம் தவறு செய்யக் கூடாது.  மீள முடியாமல் பிறகு தவிக்கக் கூடாது.  மூடத்தனமாக மாட்டிக் கொள்ளக் கூடாது!

ஸாலமி:  சரியாகச் சொன்னீர்கள்!  மூடத்தனமாக நான் மாட்டிக் கொள்ள வில்லை!  மாட்டிக் கொண்டது நீங்கள் [சிரிக்கிறாள்].  போட்டியில் யாரும் என்னை வெல்ல முடியாது மன்னரே!  கேட்டதைக் கொடுத்தால்  நான் பூரிப்படைவேன். உறுதி தந்த உங்களுக்கு நிம்மதி!  உறக்க மில்லாத என் அன்னைக்கு நிம்மதி!  வெகுமதி பெறும் எனக்கும் நிம்மதி!  மூன்று பேருக்கும் நிம்மதி!  கடைசியில் போதகருக்கும் நிம்மதி!  சிறையிலிருந்து நிரந்தர விடுதலை!  உங்கள் மறுப்பால் நால்வரின் அமைதிக்குப் பங்கம் விளைகிறது.

ஏரோத்: [மகிழ்ச்சியுடன்] ஸாலமி! என்னிடம் ஏராளமாய் எமரால்டு கற்கள் உள்ளன!  வித விதமான பதக்கங்கள் உள்ளன.  ரோமாபுரித் தளபதி சீஸர் வைத்திருக்கும் எமரால்டை விட எனது எமரால்டு கற்கள் மிகவும் பெரியவை!  உலக எமரால்டு எல்லாவற்றையும் விடப் பெரியதென்று பொற்கொல்லன் உறுதி சொன்னான்.  விலை உயர்ந்தவை!  வேண்டுமா கேள்!  எத்தனை வேண்டும் கேள்!  உன் மேனி முழுவதும் எமரால்டு கற்களால் ஆடை செய்து அணிவிக்கிறேன்.

ஸாலமி:  எனக்கு எதற்கு ஆபரணம்?  என்னழகுக்கு எந்த அணியும் தேவை யில்லை! நான் வேண்டுவது தலை!  ஜொகானன் தலை!  வெள்ளித் தட்டில் அவரது தலை!  விலை மலிவான ஒற்றைத் தலை!  விலைக்கு விற்க முடியாத அற்பத் தலை!  எனக்கு எதற்கு எமரால்டு கற்கள்?  செத்துப் போன என் தந்தை எனக்கு விட்டுப் போன எமரால்டுகள் உங்கள் எமரால்டு போன்று பெரியவை, விலை உயர்ந்தவை!  எனக்கு எதற்கு உமது எமரால்டுகள்?  என் அன்னைக்குச் சேர்ந்தவை அவை! எனக்குத் தேவை யில்லை அவை!

ஏரோத்:  [கவலையுடன்]  ஸாலமி!  நீ பேராசைக்காரி என்பது தெரியாமல் போனது.  நீ ஒரு பேய் என்பது எனக்குத் தெரியாமல் போனது!  நான் உன்னை நேசித்தது தப்பு!  உன்னழகில் மயங்கியது தப்பு!  உன்னழகை வைத்து நீ பகடை ஆடும் பாவை என்று அறியாமல் போனது தப்பு!  மதுவருந்தி மதிகெட்டுப் போனது தப்பு!  பரிவு, பாசமில்லாத மங்கை மீது மோகம் கொண்டது தப்பு! [தலையில் அடித்து விம்முகிறான்].

ஸாலமி:  என்னழகில் அந்த வாலிபன் மயங்கினான்.  அவன் தன்னுயிரையே வெகுமதியாக அளித்தான், அவன் கையாலே!  மன்னரே என்னழகில் மயங்கி என்முன் மண்டியிட்டார்!  அதற்கு வெகுமதி எனக்குக் கிடைத்தே ஆக வேண்டும்.  ஆனால் என் பேரழகு மயக்க முடியாமல் போனது, ஒரே ஒருவரை!  ஜொகானனை!  தேக்கு உத்தரம் போன்ற உடம்பும், தெய்வீகத் தோற்றமும் உள்ள அக்காட்டு மனிதர் என்னைக் கவர்ந்தார்!  ஒளிவீசும் அந்த ஞானக் கண்கள் ஏனோ என் மேனியை நாடவில்லை!  ஆனால் என் நெஞ்சம் அவரிடம் அடிமை ஆனது!  என் கால்கள் என்னை அறியாமல் அவரிடம் மண்டி யிட்டன!  என் கைகள் எனக்குத் தெரியாமல் அவரைத் தழுவிடச் சென்றன.  என் கண்கள் என்னை விட்டு அவரை முற்றுகை யிட்டன!  என் ஆத்மா அவரது உருக்குக் கவசத்தை ஊடுறுவ முடியாமல் வலுவிழந்தது!  கண்கள் காதல் நிறைவேறாது கண்ணீர் விட்டன! ….ஆனால் என்னால் தாங்க முடியாதது புறக்கணிப்பு!  அதுவும் ஆடவன் ஒருவன் புரியும் புறக்கணிப்பு!  என் ஏமாந்த ஆத்மா பலிவாங்கப் புறப்பட்டு விட்டது!  உள்ளே உறங்கிக் கொண்டிருந்த வேங்கை எழுத்து விட்டது!  அதற்குத் தீனி கிடைக்கா விட்டால் என்னையே தின்றுவிடும்!  மன்னரே ஆணை யிடுவீர்!  வெள்ளித் தட்டில் வரட்டும் தலை!

++++++++++++

[காட்சி-1, பாகம்-18]

மான் வேங்கை ஆன திங்கே!

மயில் மாறிப் போன திங்கே!

தேன்மொழி வாய் நீளு மிங்கே!

தீங்கிழைப்பாரள் கை ஓங்கு மிங்கே!

எங்கும் ஞானிக்கு கத்தி உண்டோ?

இரக்க மற்ற அரக்க ரிங்கே!

நங்கையின் சீற்றம் பொங்கு திங்கே!

நரபலிக் கான பூசை யிங்கோ?

+++++++++++++++

“தனிப்பட்ட முறையில் கலைத்துவப் படைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் போது நான் பேருவகை அடைகிறேன்.  வேறு எத்துறைகளிலும் பெற முடியாத பூரிப்பு உணர்வை அவை எனக்கு அளிக்கின்றன.”

“சுயநல இச்சைகளை முதன்மையாக நிறைவேற்ற முற்படும் ஒருவரது வாழ்க்கை சீக்கிரமாக அல்லது தாமதமாகச் சீர்கேட்டில் முடிந்து கசப்பான ஏமாற்றத்தில் அவரைத் தள்ளிவிடும்!”

“மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையை நீ விரும்பினால், ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்ல உன்னைப் பிணைத்துக் கொள்.  மனிதருக்காகவோ அல்லது பொருளுக்காகவோ வேண்டிப் போகாதே!”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

“சொர்க்கபுரி அதோ உள்ளது, அந்த கதவுக்குப் பின்புறத்தில், அல்லது பக்கத்து அறையில்!  ஆனால் அதன் சாவியைத் தொலைத்து விட்டேன் நான்!  ஒருவேளை சாவியை எங்கோ தவறாக வைத்து விட்டேனோ தெரிய வில்லை!”

“பிறப்பும், மரணமும் வீரத்தனத்தின் இரண்டு மகத்தான உச்சரிப்பு வார்த்தைகள்.”

“ஆசை பாதி வாழ்க்கை!  ஆனால் கவனமின்மை (Indifference) பாதி மரணம்!”

கலில் கிப்ரான் [Kahlil Gibrahn (1883-1931)]

“பெண்ணை எந்த குறையுமற்ற பூரணியாக எண்ணும் ஓர் ஆடவனுடன் எப்படி ஒரு பெண்ணானவள் ஆனந்தமா யிருக்க எதிர்பார்க்க முடியும்?”

“நான் எதனையும் எதிர்த்துத் தடுக்க முடியும், கவர்ச்சி வசப்பாடு [Temptation] ஒன்றைத் தவிர!”

“என் நெருங்கிய நண்பர்களைக் கவர்ச்சியான அவரது தோற்றத்துக்காகவும், தோழர்களை அவரது நற்பண்புக்காகவும், பகவர்களை அவரது மேதமை ஞானத்துக்காகவும் தேர்ந்தெடுக்கிறேன்.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.  ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான்.  ராணி அதைத் தடுக்கிறாள்.  முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன?  பயங்கர வெகுமதி ஒன்று!  வெள்ளித் தாம்பாளத்தில் ஜொஹானன் தலை!  போதர் மீது பேரளவு மதிப்பு வைத்துள்ள ஏரோத் அவ்விதம் செய்ய மறுக்கிறான்.

*********************

ஸாலமி: என் பேரழகு மயக்க முடியாமல் போனது ஒருவரை, ஒரே ஒருவரை!  போதகர் ஜொகானனை!  தேக்கு மர உத்தரம் போன்ற கரங்கள்!  தெய்வீகப் பார்வை உள்ள கண்கள்!  ஆனால் மலைக் குகையில் வாழும் காட்டு மனிதர்!  அந்த காட்டு மனிதர்தான் என்னைக் கவர்ந்தார்!  ஆனால் அவர் என்னை நாடவில்லை!  எதிலும் அவருக்கு நாட்டமுமில்லை!  அதனால் என் நெஞ்சம் அடிமை ஆனது அவரிடம்!  என் கால்கள் என்னை அறியாமல் அவர்முன் மண்டி யிட்டன!  என் கைகள் எனக்குத் தெரியாமல் அவரைத் தழுவிடச் சென்றன.  என் கண்கள் யாரையும் பாராது அவரையே முற்றுகை யிட்டன!  என்னழகு அவரை அபகரிக்க முடியாமல் வலுவிழந்தது!  என்ன, என் கவர்ச்சிக்குப் பெரும் தோல்வியா?  எனக்கொரு தோல்வியா?  தோல்வியை ஏற்றுக் கொண்டு தொய்ந்து செல்பவள் ஸாலமி யில்லை!  வெற்றியை அடையாது ஒதுங்கிச் செல்பவள் ஸாலமி யில்லை!  அவர் நெஞ்சை என் கண்கள் எரிப்பதற்குப் பதிலாக, அவர் கண்கள் என் நெஞ்சைச் சுட்டெரித்தன!  என்னையும் மீறிக் காதல் நிறைவேறாது கண்கள் கண்ணீர் விட்டன! ….என்னால் தாங்க முடியாத ஒன்று புறக்கணிப்பு!  அதுவும் நான் விரும்பும் ஆடவர் ஒருவரின் புறக்கணிப்பு!  ஏமாந்து தவிக்கும் என் ஆத்மா பலிவாங்கப் புறப்பட்டது!  உள்ளே உறங்கிக் கொண்டிருந்த வேங்கை, விழித்தெழுந்தது!  அதைத் தடுக்க முன்வருவோர் என்னுடன் போருக்கு வரத் தயாராக வேண்டும்!  பசித்துப் பாயவரும் வேங்கைக்குத் தீனி கிடைக்கா விட்டால், அது என்னையே தின்றுவிடும்!  மன்னரே! உம்மைத் தின்பதற்குள், காவலருக்கு ஆணை யிடுவீர்!  வாளெடுத்து வீசட்டும்!  வெள்ளித் தட்டில் பொத்தென்று விழட்டும் தலை!  குருதி பொங்கப் புனிதர் சிரசைக் காண வேண்டும். [ஸாலமிக்கு மூச்சு வாங்குகிறது]

ஏரோத்:  [மதி மயக்கமுற்று, கலக்கமுடன்]  மயிலென்று உன்னை நினைத்தேன்! துள்ளி வரும் புள்ளி மானென்று உன்னை நினைத்தேன். வண்ணச் சிறகேந்தும் பட்டாம் பூச்சியாக உன்னை நினைத்தேன்!  பொங்கிவரும் பொன்னிலவு என்று உன்னை நினைத்தேன்.  கண்ணைக் கவரும் வண்ண மயமான வானவில் என்று நினைத்தேன்!  ஆனால் நீ காட்டு விலங்காய் மனிதரை வேட்டையாட விரும்புகிறாய்!  என்ன விந்தை?   நீ வெறி பிடித்த வேங்கை என்று தெரியாமல் போனதே!  ஸாலமி நீ ஒரு பெண்ணா?  அன்றி நரபலி தேடும் பேய் பிசாசா?

ஸாலமி:  மதுக் கிண்ணத்திலிருந்த மயக்க பானமெல்லாம் உங்கள் மண்டையில் நிரம்பி வேலை செய்கிறது!  கவிஞனைப் போல் என்னை இத்தனை அழகாகப் பாராட்டுவதைக் கேட்டு என் நெஞ்சம் பாகாய் உருகுகிறது!  மன்னரே!  ஆமாம் நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மை!  நளினமான அந்த மயில் கேட்பதைக் கொடுத்தால் என்ன?  துள்ளி வரும் மான் விரும்பும் வெள்ளித் தட்டைத் தந்தால் என்ன?  பறந்து செல்லும் பட்டாம் பூச்சி கேட்கும் புனித விருந்தளித்தால் என்ன?  பொங்கி வரும் பொன்னிலவுக்கு வெகுதி கொடுக்க ஏன் தயக்கம்?  வண்ண மயமான வானவில்லுக்கு மனதைப் பறி கொடுத்த மன்னர், பரிசளிக்க ஏன் தயக்கம்? …[கோபமாகக் கத்துகிறாள்]  மன்னரே!  வெகுமதி வேண்டும் எனக்கு!  வெள்ளித் தட்டில் வேண்டும் எனக்கு!  வேண்டும், வேண்டும், வேண்டும் ஜொஹானன் தலை!

ஏரோதியாஸ்:  [ஆத்திரமுடன்] அப்படி அடித்துக் கேள் ஸாலமி! எப்படி அழுத்தமாகப் பேசுகிறாய்?  பெற்றவள் உள்ளம் குளிர்கிறது மகளே!  நீ கேட்பதை அவர் கொடுக்கத்தான் வேண்டும்.

ஏரோத்:  மூடு வாயை, மகாராணி!  நீ ஒரு முட்டாள்!  ஆனால் ஸாலமி உன்னை விட அறிவாளி!  அவள் சினம் கொண்டாலும் சற்று சிந்திப்பவள்!  உன்னைப் போல் போதகரை நிந்திப்பவ ளில்லை ஸாலமி!  தெரியுமா புனித போதகரைக் காதலிக்கிறாள் ஸாலமி!  போதகர் தன்னை நோக்கிப் புன்னகை புரிய மாட்டாரா என்று ஏங்குகிறாள் ஸாலமி. [ஸாலமியைப் பார்த்து]  கண்மணி!  போதகரைக் கண்டு நேராகப் பேசினால் என்ன?  காதல் கவிதையை உன் காந்த விழிகள் எழுதட்டும்!  மீண்டும், மீண்டும் முயன்றால் ஆண்டவன் கூட மயங்கி விடுவார்!  முயற்சியைக் கைவிடாதே!

ஸாலமி: [அப்புறம் பார்த்துக் கொண்டு]  மன்னரே!  என் அன்னை முட்டாளுமில்லை!  நான் ஓர் அறிவாளியுமில்லை!  ஜொகானன்தான் ஒரு பேரரறிவாளி!  அவர் என்னை நிராகரித்து விட்டார்!  மீண்டும் அவரைக் கண்ணால் நான் தீண்ட முடியாது!  அவரை உயிரோடு நான் பிடிக்க முடியாது!  ஒளிமிக்க அந்த கண்கள் வேண்டும் எனக்கு!  உன்னத அந்த மூளை வேண்டும் எனக்கு!  உத்தரம் போன்ற அந்த உடம்பு வேண்டாம் எனக்கு!  என்னையே உற்று நோக்கும் அந்த ஒளிக் கண்கள் வேண்டும் எனக்கு!  கட்டளை யிடுங்கள் மன்னரே!  அவரது மூடாத கண்களைக் காண வேண்டும்!  காத்திருக்க முடியாது என்னால்!

ஏரோத்: [கண்களில் கண்ணீர் பொங்க, ஆசனத்தில் மயங்கியபடி] .. அவள் கேட்டதைக் கொடுத்து விடுங்கள். அவள் ஆங்காரத் தாயின் வேங்கை மகள்!  நரபலி வெறிகொண்ட நங்கை அவள்!  கொடுத்து விடுங்கள் வேண்டும் வெகுமதியை!

[முதற் காவலன் வந்து வணங்கி நிற்கிறான். மகாராணி ஏரோதியாஸ் ஏரோதின் கைவிரலில் பூண்ட மரண மோதிரத்தைக் கழற்றிக் காவலன் கையில் தருகிறாள்.  உடனே அந்த மரண மோதிரத்தை எடுத்துச் சென்று, காவலன் சிரச்சேதம் செய்யும் கொலையாளியிடம் கொடுக்கிறான்]

ஏரோத்: ….[மது மயக்கத்தில்]  யார் என் மோதிரத்தை உருவி எடுத்தது?  என்னிடது கைவிரலில் ஒரு மோதிரம் இருந்ததே!  எங்கே அதைக் காணோம்?  … யார் எனது ஒயினைக் குடித்தது?  எனது மதுக்கிண்ணம் காலியாக உள்ளதே!  நிரம்பிய கிண்ணம் வெறுமையாய்க் கிடக்குதே!  யாரோ அதை முழுவதும் குடித்து விட்டார்!  ஏதோ கேடுகாலம் வரப் போகுதா?  பயமாக உள்ளது எனக்கு! … மன்னன் யாருக்கும் வரம் தருவாய் வாக்களிக்கக் கூடாது!  அதிலும் உறுதி அளிக்கக் கூடாது!  நாட்டியக்காரி நளினத்தில் மயங்கி விடக் கூடாது! … நர்த்தகிக்கு வெகுமதி கொடுத்தாலும் சீர்கேடு!  வெகுமதியை மறுத்தாலும் சீர்கேடு!  கடவுளே!  அறிவு கெட்ட எனக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாய்?  [முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு அழுகிறான்]

[கொலையாளி மரண மோதிரமோடு சிறைச்சாலை நோக்கிப் போகிறான்]

[காட்சி-1, பாகம்-19]

நர்த்தகியின் போர் வெற்றி யிங்கே!

எங்கணும் சோகம் பரவு திங்கே!

புனித நீராட்டி தலை சாயு மிங்கே!

நரபலி நர்த்தகி முடிவு மிங்கே!

+++++++++++++++

“வெல்ல முடியாத மரணமே! எவருக்கும் விட்டுக் கொடுக்காத மரணமே!  உனக்கு எதிராக நான் தாவிக் குதிப்பேன்.”

“மனிதரில் ஆண்பால், பெண்பால் என்று தனியாகத் தோன்றினாலும், மெய்யாக இருபாலரிடமும் பாலியற் பண்பு பின்னிய கலவையாகவே காணப்படுகிறது.  ஒவ்வொரு மானிடப் பிறவியிலும் ஆண்பாலியல் தன்மையும், பெண்பாலியல் தன்மையும் ஒன்றை ஒன்று எடுத்தாண்டு கொள்கிறது. ஆடை உடுப்பில் ஆண்-பெண் அடையாளம் காணப் பட்டாலும் உடைகளுக்கு உள்ளிருக்கும் பாலியல் பண்புகளை வெளி உடுப்புகள் காட்டும் உருவம் தெரிவிப்பதில்லை!”

“வீட்டுக்குள் நுழைய முடியாதபடி மூடி வெளியே ஒருவர் தடுக்கப் படுவதுதான் கொடுமையானது என்று நான் நினைத்த காலமுண்டு.  ஆனால் வீட்டுக்குள்ளே ஒருவர் அடைபட்டு, வெளியேறாதபடி பூட்டப் படுவதுதான் அதைவிட மிகக் கோரமானது என்று கண்டு கொண்டதும் உண்டு.”

வெர்ஜீனியா உல்ஃப் [Virginia Woolf (1882-1941)]

“வெய்யிலில் நின்று உடல் காயாது, தென்றலில் உலவி உள்ளம் உருகாது, வெறுமனே செத்துப் போவதில் எந்த பயனுமில்லை!  அந்த அனுபவங்களுக்குப் பிறகு நம் உறுப்புக்களைப் பூமியே மூடி விட்டாலும், உறுதியாக நடனம் ஆடலாம் நாம்.”

“பரிவு, பாசம், பற்று எதுவுமில்லா ஒரு வாழ்க்கை கனிகளோ, பூக்களோ அற்ற மரத்துக்கு ஒப்பானது.”

“உன் கனவுகளில் நீ நம்பிக்கை வைத்துடு.  ஏனெனில் அவற்றில்தான் உன் சொர்க்க வாசல் மறைந்து உள்ளது.”

கலில் கிப்ரான் [Kahlil Gibrahn (1883-1931)]

“உணர்ச்சிகளைப் போல் ஆத்மாவைக் குணப்படுத்தும் மருந்து வேறு எதுவுமில்லை!  அதன் மறுபக்கமாக ஆத்மாவைப் போல் உணர்ச்சிகளைப் பண்படுத்தும் ஓர் ஆற்றல் வேறு எதுவுமில்லை.”

“எந்த உன்னதக் கலைஞனும் பொருட்களை மெய்யாக உள்ளபடிக் காண்பதில்லை எப்போதும்.  அவ்விதம் காண்பானாகில், அவன் உயர்ந்த கலைஞன் எனக் கருதப்படுவது நிறுத்தமாகும்.”

“மரணம் ஒன்றைத் தவிர தற்காலத்தில் ஒருவன் எதிலிருந்தும் தப்பிக் கொள்ள முடியும்.  அதுபோல் அவன் முழுவதும் வாழ்ந்து நீங்க முடியும் பேரும், புகழும் பெற முடியாமலே!”

“கலைகளில் உன்னத மானது நாடகக் கலை என்பது நான் அதன்மேல் கொண்டிருக்கும் மதிப்பு.  அந்த உன்னதக் கலை மூலமாகத்தான், ஒரு மனிதன் மனிதப் பண்புடன் வாழும் உணர்வை அடுத்தவனுடன் விரைவில் பங்கிட்டுக் கொள்ள முடிகிறது.”

ஆஸ்கர் வைல்டு [1854-1900]

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொகானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொகானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.  ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான்.  ராணி அதைத் தடுக்கிறாள்.  முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன?  பயங்கர வெகுமதி ஒன்று!  வெள்ளித் தாம்பாளத்தில் ஜொஹானன் தலை!  போதர் மீது பேரளவு மதிப்பு வைத்துள்ள ஏரோத் அவ்விதம் செய்ய மறுக்கிறான்.  ஆனால் மரண மோதிரத்தை ஏரோதின் விரலிலிருந்து உருவி, ஏரோதியாஸ் ஆணையை நிறைவேற்றக் காவலரைச் சிறைச்சாலைக்கு அனுப்புகிறாள்.  கொலையாளி கட்டளையை நிறைவேற்றுகிறான்.

*********************

ஏரோத்: ….[மது மயக்கத்தில்]  யார் என் மோதிரத்தை உருவி எடுத்தது?  என்னிடது கைவிரலில் ஒரு மோதிரம் இருந்ததே!  எங்கே அதைக் காணோம்? …[மதுக் கிண்ணத்தைப் பார்த்து] யார் எனது ஒயினைக் குடித்தது?  என் மதுக்கிண்ணம் காலியாக உள்ளதே!  நிரம்பிய கிண்ணம் வெறுமையாய்க் கிடக்குதே!  யாரோ என் மதுவைக் குடித்து விட்டார்! .. யாரோ என்னைக் களவாடி விட்டார்?  யாரோ என்னை மோசடி செய்து விட்டார்? .. ஏதோ கேடுகாலம் வரப் போகுது!  பயமாக உள்ளது எனக்கு! … மன்னன் யாருக்கும் தெரியாத பரிசைத் தருவாய் வாக்களிக்கக் கூடாது!  அதிலும் உறுதி அளிக்கக் கூடாது!  நாட்டியக்காரி நளினத்தில் மதி மயங்கக் கூடாது!  கடவுளே!  என்ன செய்வேன் நான்? …. நர்த்தகிக்கு நான் வெகுமதியைக் கொடுத்தாலும் சீர்கேடு!  வெகுமதியை நான் மறுத்தாலும் சீர்கேடு!  கடவுளே!  மூளை குழம்பிப் போகிறது எனக்கு!  [உரக்க அலறி]  அடே! காவலா! நில்!  சிறை நோக்கிப் போகாதே! சிரச் சேதம் செய்யாதே! .. ஸாலமி! புனிதரைக் கொல்லாதே!  அவரது தலையை அறுப்பது பாபம்!  அவருக்குத் தண்டனை கொடுக்க நீயோ, நானோ யாரும் தகுதி அற்றவர்!  ஸாலமி! சிந்தித்துப் பார்!  புனிதரின் சிரசு உனக்கு எதற்கு?  நரபலியிட்ட நர்த்தகி என்று வரலாற்றில் பெரும் புகழ் பெறவா?  நிறுத்து அந்தக் காவலனை! .. போன உயிர் மீளாது!  வெட்டிய தலை மீண்டும் சேராது!  நீ செய்வது மாபெரும் பாபம்!  மன்னிக்க முடியாத பாபம்!  செய்த பாபத்தைக் கழுவ முடியாது!  சீக்கிரம் நிறுத்து காவலனை! [முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு அழுகிறான்]

ஏரோதியாஸ்:  ஸாலமி செய்வது எமக்கும், உமக்கும் நல்லது!  நிம்மதி!  நிரந்தர நிம்மதி!  நிம்மதி யில்லாமல் செய்பவர் போதகர்!  போய் ஒழியட்டும் அந்த போதகர்!  நாட்டுக்கு நல்லவர் அவர்!  ஆனால் நமக்குப் பகைவர்!

ஏரோத்:  .. ஐயோ! ஏதோ ஒரு பெருங்கேடு வாசல் முன் வந்து நிற்குது!  உனக்கும், எனக்கும் கேடு காலம் வருகுது! … ஏரோதியாஸ்!  அவளைத் தூண்டி விடாதே!.. கண்மணி ஸாலமி!  நிறுத்து காவலனை!

ஸாலமி: [காவலனைப் பின் தொடர்ந்து செல்கிறாள். சிறைக்கருகே மறைவில் நின்று கவலையோடு] என்ன?  எந்த அரவமும் கேட்கவில்லை!  போனவன் வாள் உருவிய அரவம் கேட்கவில்லை!  போதகர் அலறல் குரல் கேட்கவில்லை!  தலை தரையில் வீழ்ந்த அரவம் கேட்கவில்லை!  காவலன் வாளை உறையிலிட்ட அரவம் கேட்கவில்லை!  [மறைவில் நின்று காவலனை விளித்து]  …. காவலனே! என்ன செய்கிறாய்?  சொன்னதைச் செய்!  போதகர் தலையைத் துண்டித்துக் கொண்டுவா? [சேடியைப் பார்த்து] போடி! போய் வெள்ளித் தட்டைக் கொடு!  [சேடி தட்டைக் கொண்டு வருகிறாள்]  தட்டைக் காவலனிடம் கொடு! உள்ளே போய்ப் பாரடி!  காவலன் என்ன செய்கிறான் என்று பார்த்து வந்து சொல்லடி!

முதல் சேடி:  இளவரசி! தட்டைக் கொடுக்கிறேன்!  தலை வெட்டுவதை என்னால் பார்க்க முடியாது! என்னுயிர் போய் விடும்!  உயிர் துடிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!

ஸாலமி:  அடீ பயந்தவளே!  ஆட்டுத் தலையை வெட்டுவதைப் போல்தான் அதுவும்!  சிந்தும் குருதி எல்லாம் சிவப்பாகத் தானிருக்கும்!  குருதியைக் கண்டு அஞ்சலாமா?  … போடி! உள்ளேப் போய்ப் பார், என்ன நடக்கிற தென்று?  எந்த அரவமும் கேட்கவில்லை!  கொலையாளி உருவிய வாளை வீசப் பயப்படுகிறானா?  எட்டிப் பாரடி, என்ன நடக்கிறதென்று?   ஒரே மௌனச் சமாதியாக உள்ளது.  …. ஆ!  இப்போது ஏதோ விழும் அரவம் கேட்கிறது!  உருண்டோடும் அரவம் கேட்கிறது!  ஆனால் ஜொகானன் அலறும் அரவம் கேட்கவில்லை!  அவர் போடும் அரவத்தால் அரண்மணைத் தூண்கள் ஆடுமே!  ஏன் வாயடைத்துப் போனார்?  என்ன வென்று தெரியவில்லை?  ஆனால் அந்தக் கொலையாளி போகும் போதே தயங்கித் தயங்கித்தான் போனான்.  வாளிருந்தும் அவன் ஒரு கோழை.  உள்ளே நுழைந்த கோழையைப் போதகர் மீறித் தள்ளி விட்டாரா? … [மன்னரிடம் போய்] மன்னரே!  கொலையாளி எதுவும் செய்யாது சிலையாக நிற்கிறான்!  அனுப்புங்கள் உங்கள் படை வீரரை.  உங்கள் ஆணையை நிறைவேற்றும் சிங்க வீரரை அனுப்புங்கள்!  கொலையாளி போதகர் முன் தலை வணங்கி நிற்பது போல் தெரிகிறது.  தலை கொய்துவா வென்று அனுப்பினால், தலை குனியும் காவலனுக்கு என்ன தண்டனை அளிப்பது?  மன்னரே அனுப்புங்கள் படை வீரரை. … [சேடி படை வீரருடன் வருகிறாள்]  காவலரே!  மாண்பு மிகு மன்னர் மரண மோதிரத்தை அனுப்பியுள்ளார்.  சிறைப்பட்ட ஜொகானன் தலையைத் தட்டில் கொண்டு வருவீர்!  அது மன்னரிட்ட கட்டளை!

[காவலர் சிறை நோக்கி வேகமாகச் செல்கிறார். எதிரே கரிய கொலையாளி கையில் தட்டுடன் மெதுவாக வருகிறான்.  குருதியில் கிடக்கும் ஜொகானன் தலையைக் கண்ட ஸாலமி புன்னகை புரிகிறாள்.  கையில் வெள்ளித் தட்டை வெடுக்கெனப் பிடுங்கிச் செல்கிறாள்.  ஏரோத் பார்க்க விரும்பாது முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.  ஏரோதியாஸ் முகம் மலர்ந்து, விசிறியால் வீசிக் கொள்கிறாள்.  அருகில் உள்ள சேடியர் கைகளால் முகத்தை மூடிக் கொள்கிறார்.  காவலர் தலை குனிந்து, வருத்தமுடன் பின் வாங்குகிறார்.  நாஸரீன் மண்டிக்காலிட்டு மேல் நோக்கி வணங்குகிறான்.]

ஏரோத்: [கண்ணீர் பெருக]  கடவுளே! என்ன சீர்கேடு நடந்து விட்டது?  நிமிர்ந்து நோக்கும் புனிதர் தலை தணிந்து போனதே!  உண்மை நெறி பேசிய வாய் ஊமையாகி விட்டதே!  ஒளிவீசும் கண்கள் விழியிழந்து போயினவே!  எச்சரிக்கை விட்ட உதடுகள் உச்சரிப்பை மறந்தனவே!  பாபங்களைக் கேட்ட செவிகளின் பாதை மூடிப் போனதுவே!

ஏரோதியாஸ்:  நிம்மதியாக உறங்குகிறார் போதகர்!  அவரை எழுப்பாதீர்!  அவரது உறக்கத்தால் எனக்கும் நிம்மதி!  கலக்க மற்ற உறக்கம் எனக்கும் கிடைக்கும்!  அவரது ஆத்மாவின் நிரந்தர உறக்கத்தில் எத்தனை ஆத்மாக்களுக்கு நிம்மதி உண்டாகுது?  எல்லாருக்கும் நிம்மதி அளித்த ஸாலமியின் திறமையைப் பாராட்ட வேண்டும்.  எத்தனை முறை அவளுக்கு நன்றி சொன்னாலும் போதாது.

ஏரோத்:  நாட்டில் மனிதர் பாபத்தை எடுத்துச் சொல்ல இனியாருமில்லை!  வேலியற்ற வயலாகப் போயின என் நிலங்கள்.  கண்காணிக்கும் புனிதரை யிழந்தனர் என் குடிமக்கள்!

ஸாலமி:  [வெள்ளித் தட்டை மேஜையில் வைத்து நாற்காலியில் எதிரே அமர்கிறாள்.  தாய் ஏரோதியாஸ் அவளுக்கு வலப் புறத்தில் உட்காருகிறாள்]  நான் காதலித்த முகமிதுதான்!  முத்தமிட என்னை முதலில் தடுத்த முகமிதுதான்!  இப்போது யார் தடுப்பார் என்னை?  உமது உதடுகளை நான் ஆயிரம் தடை முத்தமிடலாம். முதலில் நான் உமது அடிமை!  இப்போது நீவீர் எனது அடிமை!  எனக்கு வணக்கமிடும் உமது தலை!  உமது சினக் கண்களின் இமைகள் மூடியுள்ளன. என்னைக் கண்டதும் தீப்பற்றிய கண்கள் குளிர்ந்து போய் நிரந்தர தூக்கத்தில் விழுந்துள்ளன!  உமது விழிகள் உறங்கி எழ மாட்டா!  உமது உலகிலினி பகல் கிடையாது!  பரிதி உதிக்காது!  நிலவு விழிக்காது!  விண்மீன்கள் கண்சிமிட்டா! எப்போதும் விடியாத இரவுதான்!  ஜொகானன்!  ஒருமுறை கண்களைத் திறந்து பாருங்கள்!  உமக்கும் எனக்கும் கடைசியில் பிணைப்பு ஏற்பட்டு விட்டது!  நீவீர் எப்போதும் எனக்குச் சொந்தமானவர்!  என்னை விழித்துப் பார்க்க உமக்கென்ன வெட்கமா?  பயமா?  தயக்கமா?  உமது உன்னத வாழ்க்கையோடு என் அற்ப வாழ்வும் பிரிக்க முடியாதபடி பிணைந்து விட்டது!  ஜொகானனை மக்கள் நினைக்கும் போது யாருமினி ஸாலமியை மறக்க முடியாது!  உன்னைத்தான் நான் நாடினேன்!  உன்னைத்தான் நான் நேசித்தேன்!  உன்னைத்தான் என்னுடன் பிணைத்துக் கொள்ள வேண்டினேன்!  மற்ற அனைவரையும் நான் வெறுத்தேன்!  புறக்கணித்தேன்!  விரட்டி அடித்தேன்!  உத்தரச் சிலைபோல் உறுதியான உம்முடல் மீதுதான் ஆசை வைத்தேன். என்னைச் சித்திரவதை செய்த உம்முடை விழிகள், மூடிப்போய் மீண்டும் சித்திரவதை செய்கின்றன!

+++++++++++++++++

[காட்சி-1, பாகம்-20]

“நான் சொல்கிறேன் உமக்கு!  பெண்டிருக்குப் பிறந்த புத்திரரில் புனித நீராட்டி ஜானை விட உன்னதப் போதகர் இதுவரை உதிக்க வில்லை.”

பைபிள் நூல்

சிறு மெழுகுவர்த்தி ஒன்று,

இரு முனையிலும் எரிந்தது!

முடிவிலாத் தூரம்!

காலச் சக்கரம் சுழலுது!

கைகுலுப்பு! ஒருவாய் மதுக் குடிப்பு!

நமக்கும் இவற்றில் பங்குண்டு,

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்!

பறந்து செல் கர்வப் பறவையே!

விடுதலை உனக்கு முடிவிலே!

சார்லி டேனியல்ஸ், பாடகர் [1936-XXXX]

எதற்கும் ஒரு காலநேரம் உண்டு!

பூமியில் ஒவ்வோர் நிகழ்ச்சிக்கும் காலமுண்டு!

பிறப்பதற்கு ஒரு நேரம்!

இறப்பதற்கு ஒரு நேரம்!

நடுவதற்கு ஒரு நேரம்! நட்டதைப்

பிடுங்கிட வருவதோர் நேரம்!

மரணப் படுத்த ஒரு நேரம்!

ஆறுதல் அளிக்க ஒரு நேரம்!

அணைத்திட ஒரு நேரம்!

அழுதிட ஒரு நேரம்!

பைபிள் பொன்மொழி [Ecclesiastes]

மரண வருவதற்கு நான்

காத்துக் கொண்டு நிற்க வில்லை!

ஆதலால் அவனே நிற்கிறான்,

பரிவுடன் பொறுத்து எனக்காக!

வாகனம் சுமந்தது எம்மிருவர் மட்டுமே,

நிரந்தர மீளாத் தூக்கம்!

 

எமிலி டிக்கின்ஸன் [Emily Dickinson (1830-1886)]

வாழ்வு மெய்யானது! வாழ்வு முடிவாவது!

வாழ்வின் குறிக்கோள் இடுகா டில்லை!

மண்ணில் எழும்பி நீ வாழ்வது!

மண்ணில் திரும்பி நீ மீள்வது !

மரிப்பே யில்லை ஆத்மா வுக்கு!

ஹென்ரி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ

நேரம்:

அந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை.  முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.

காட்சி அமைப்பு:

ஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம்.  கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை.  வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது.  ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.  அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள்.  ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன!  மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள்.  ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொகானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார்.

இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது.  ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார்!  சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது.  போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.  ஜொகானன் ஸாலமியை உதறித் தள்ளி சிறைக்கு மீள்கிறார்.  ஏரோத் மன்னன், ஸாலமியைத் தேடி அவரது மனைவி ஏரோதியாஸ் ஆகியோர் புடைசூழ மாடிக்கு வருகிறார்.  ஸாலமியை நாடும் ஏரோதை ராணி கண்டிக்கிறாள். ஏரோதியாஸின் மேல் சாபமிடும் ஜொஹானன் மீது ராணி ஏரோதியாஸ் கோபப் படுகிறாள்.  ஸாலமியின் மேனி எழிலில் மயங்கி ஏரோத் தன்முன் நடனம் ஆடும்படிக் கெஞ்சுகிறான்.  ராணி அதைத் தடுக்கிறாள்.  முடிவில் வெகுமதி தருவதாய் ஏரோத் உறுதி மொழி கொடுத்ததும், ஸாலமி நடனம் ஆட ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அவள் கேட்கும் வெகுமதி என்ன?  பயங்கர வெகுமதி ஒன்று!  வெள்ளித் தாம்பாளத்தில் ஜொஹானன் தலை!  போதர் மீது பேரளவு மதிப்பு வைத்துள்ள ஏரோத் அவ்விதம் செய்ய மறுக்கிறான்.  ஆனால் மரண மோதிரத்தை ஏரோதின் விரலிலிருந்து உருவி, ஏரோதியாஸ் ஆணையை நிறைவேற்றக் காவலரைச் சிறைச்சாலைக்கு அனுப்புகிறாள்.  கொலையாளி கட்டளையை நிறைவேற்றுகிறான்.  கடைசியில் தண்டனை பெறுகிறாள் ஸாலமி!

*********************

ஸாலமி:  [வெள்ளித் தட்டை மேஜையில் வைத்து நாற்காலியில் எதிரே அமர்கிறாள்.  தாய் ஏரோதியாஸ் அவளுக்கு வலப் புறத்தில் உட்காருகிறாள்]  நான் காதலித்த முகமிதுதான்!  முத்தமிட என்னை முதலில் தடுத்த முகமிதுதான்!  இப்போது யார் தடுப்பார் என்னை?  உமது உதடுகளை நான் ஆயிரம் தடை முத்தமிடலாம். முதலில் நான் உமது அடிமை!  இப்போது நீவீர் எனது அடிமை!  எனக்கு வணக்கமிடும் உமது தலை!  உமது சினக் கண்களின் இமைகள் மூடியுள்ளன. என்னைக் கண்டதும் தீப்பற்றிய கண்கள் குளிர்ந்து போய் நிரந்தர தூக்கத்தில் விழுந்துள்ளன!  உமது விழிகள் உறங்கி எழ மாட்டா!  உமது உலகிலினி பகல் கிடையாது!  பரிதி உதிக்காது!  நிலவு விழிக்காது!  விண்மீன்கள் கண்சிமிட்டா! எப்போதும் விடியாத இரவுதான்!  ஜொகானன்!  ஒருமுறை கண்களைத் திறந்து பாருங்கள்!  உமக்கும் எனக்கும் கடைசியில் பிணைப்பு ஏற்பட்டு விட்டது!  நீவீர் எப்போதும் எனக்குச் சொந்தமானவர்!  என்னை விழித்துப் பார்க்க உமக்கென்ன வெட்கமா?  பயமா?  தயக்கமா?  உமது உன்னத வாழ்க்கையோடு என் அற்ப வாழ்வும் பிரிக்க முடியாதபடி பிணைந்து விட்டது!  ஜொகானனை மக்கள் நினைக்கும் போது யாருமினி ஸாலமியை மறக்க முடியாது!  உன்னைத்தான் நான் நாடினேன்!  உன்னைத்தான் நான் நேசித்தேன்!  உன்னைத்தான் என்னுடன் பிணைத்துக் கொள்ள வேண்டினேன்!  மற்ற அனைவரையும் வெறுத்தேன்!  புறக்கணித்தேன்!  விரட்டி அடித்தேன்!  உத்தரச் சிலைபோல் உறுதியான உம்முடல் மீதுதான் ஆசை வைத்தேன். என்னைச் சித்திரவதை செய்த உம்முடை விழிகள், மூடிப்போய் மீண்டும் என்னைச் சித்திரவதை செய்கின்றன!

ஏரோத்: மதி கெட்ட பெண்ணே! உன் காதலரைக் கொன்று விட்டாயே!  உயிரோடிருந்தால் உன் காதலாராய் என்றென்றும் உன் முன்னே நிற்பாரே!  காதல் பொங்கி வழியும் போது, சாதலில் முடிவதா?  உன் காதல் நிறைவேறாத போது, சாதலில் மறைய வேண்டுமா?  காதலின் சிகரத்தில் ஏறிய நீ, உன் காதலைப் புதைக்க வேண்டுமா?  உன் காதற் கிளி உன் தோளில் அமர வில்லையானால், அதன் கழுத்தைத் திருகி கையில் வைத்துக் கொள்வதா?  பெண்ணா நீ!  பாசம், பரிவு, பந்தம், பற்று எல்லாம் அற்றுப் போன நீ பெண்ணா?  உயிர்ச் சிசுவை கருவில் உருவாக்கிப் பாலூட்டி வளர்க்கும் பெண்ணா நீ?  இல்லை! பெண்ணில்லை நீ!  பிசாசுகள் உள்ளதை நம்பாத நான், இப்போது நம்புகிறேன்!  உன்னைப் போன்ற பெண்ணைத்தான் பிசாசு என்று நான் சொல்கிறேன்!  புனிதர் தலையை அறுத்துப் பூரிப்படையும் ஒருத்தி பெண்ணாக வாழ முடியுமா?

ஸாலமி: [புன்முறுவலுடன்]  மன்னரே!  போர்க்களத்தில் வாள் வீசி மனிதரின் தலைகளை அறுவடை செய்து மன்னரா என்னைப் பிசாசு என்று விளிக்கிறீர்?  ஏற்றுக் கொள்கிறேன், உமது பட்டத்தை!  ஒரு தலையை அறுத்தவள் பிசாசுதான்!  ஓராயிரம் தலை அறுத்தவருக்கு என்ன பட்டம் அளிப்பீர் மன்னரே!  சொல்லுங்கள்!  போதகரைப் பிடித்து சிறையில் தள்ளியவர் தாங்கள்தான்!  என்னருமைத் தாயின் மானத்தை வாங்கப் போதரைப் பேச விட்டது தாங்கள்தான்!  என் கண்களில் காண வைத்துப் போதகர் என்னுள்ளத்தைக் கவர வைத்தது தாங்கள்தான்!  என் காதல் நிறைவேறாமல் போகக் காரணமாக இருந்ததும் தாங்கள்தான்!  போதகர் என்னைப் புறக்கணித்த  காரணம்,  நான் வஞ்சகர் ஒருவரின் மாளிகையில் வாழ்ந்ததுதான்!  போதகர் கொலைக்கு வழி செய்தவர் தாங்கள்தான்!  ஜொகானன் கொலைக்கு உங்கள் பங்கு முக்கால்வாசி!  என் பங்கு கால்வாசிதான்!

ஏரோத்:  [கோபத்துடன்] ஸாலமி! நீ ஒரு கொலைகாரி!  தெரிந்துகொள்! சிறைப் படுத்தினாலும் எனக்குப் போதகர் மீது பெருமதிப்பு உண்டு!  பேரிரக்கம் உண்டு! ஒருபோதும் சிரச்சேதம் செய்ய என் மனம் உடன்படாது!  நீ ஒரு கொலைகாரி!  பரிவற்ற பாவை!  பாசமற்ற நாசகி!  பாபம் செய்ய அஞ்சாதவள்!  நீ ஒரு கொலைகாரி!  புனிதரைக் கொலை செய்த நீ தண்டிக்கப்பட வேண்டியவள்!  உன்னை நான் சும்மா விடப் போவதில்லை!

ஸாலமி:  அப்படியா?  நான் கொலைகாரி என்றால் நீங்களும் கொலைகாரர்தான்!  என் தந்தையைக் கொன்ற கொலைகாரர் தாங்கள்!  பிறன் மனைவியைக் களவாடிய கள்வர் தாங்கள்தான்!  தண்டிக்கப்பட வேண்டியவர் யார்?  நானா? அல்லது நீங்களா?

ஏரோதியாஸ்: ஸாலமிக்குத் தண்டனை இடுவதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்! என்னருமைக் கணவரைக் கொன்று என்னைத் தனிப்படுத்தினீர்!  இப்போது என் புதல்விக்குத் தண்டனை யிட்டு எனக்கு ஆறாத் துயரை விளைவிக்கப் போகிறீர்!

ஏரொத்:  உன் முதல் கணவனைக் கொல்ல நீயும் உடந்தையாக இருந்ததை மறந்து விட்டாயோ மடந்தையே!  உன் கணவன் கொலைக்கு நீயும் காரணம்!  உன் முதற் கணவனுக்கு உன் மேல் ஆசை!  ஆனால் உனக்கு என்மேல் ஆசை!  உன் கணவன் கொலைக்கு பாதிக் காரணம் நீ!  ஐயமின்றி உன் பங்கு பாதி!  உன் பாதி உடந்தையை ஒளித்து வைக்கப் பார்க்காதே!  நான் போதகரை மதித்தேன்! அவர் மீது எனக்குப் பரிவும், பற்றும், பாசமும் உண்டு!  புனிதர் மீது எனக்கு எப்போதும் பகையில்லை!  வெறுப்பில்லை!

ஸாலமி:  ஜொகானனை நான் நெஞ்சார நேசித்தேன்!  தந்தத்தில் செதுக்கிய அவரது உடம்பை பூசித்தேன்!  அவரது அகன்ற மார்பில் பள்ளி கொள்ளத் துடித்தேன்!  அவரது அழகிய அதரங்களை முத்தமிட நினைத்தேன்!  முற்பட்டேன்!  முதலில் தோற்றேன்!  முடிவில் வென்றேன்!  எத்தனை முறை வேண்டுமானாலும் நானின்று முத்தமிடாலாம்!  இதோ என் முதல் முத்தம்!  [ஜொகானன் வாயில் முத்தமிட்டுப் பூரிப்படைகிறாள்.  அவளது வாயில் குருதி ஒட்டிக் கொள்கிறது]  என்னைத் தடுப்பவர் யாருமில்லை!  இதோ என் இரண்டாம் முத்தம்!  [முத்தமிடுகிறாள். வாயில் குருதி மிகையாக ஒட்டிக் கொள்கிறது]  நீவீர் எனக்குச் சொந்தம்!  எனக்கு மட்டும் சொந்தம்!  எத்தனை முத்தம் வேண்டும் உமக்கு?

ஏரோத்:  [கோபத்துடன் அருவருப்புடன் பார்த்து]  நிறுத்து ஸாலமி! நிறுத்து! உன்னைப் பார்க்கச் சகிக்க வில்லை!  மான் வேட்டை ஆடிய சிறுத்தை போல் நீ தெரிகிறாய்!  உன் காதல் நாடகத்தை நிறுத்து!  பார்க்கச் சகிக்க வில்லை எனக்கு!

ஸாலமி:  என் உடற்பசியை எழுப்பியவர் ஜொகானன்!  என் தாகத்தை மதுவோ, பழச் சுவைநீரோ தணிக்க முடியாது!  என் தீக்கனலைத் தணிப்பது ஜொகானன் மோக உடல் மட்டுமே!  நானொரு கன்னி!  என் கன்னித் தன்மையைக் களவாடியவர் ஜொஹானன்! நான் கற்புடையவள்! என் குருதிக் குழல்களில் கனலை மூட்டியவர் அவர்!  என்னை நேசித்திருந்தால், அவர் தலை இப்போது நேராக நின்று காதல் மொழிகளை உதிர்க்கும்!

ஏரோத்:  [ஏரோதியாஸைப் பார்த்து]  பார், உன் மகளைப் பார்!  நரபலிக் குருதி அருந்தும் அரக்கியைப் பார்!  நான் சொல்கிறேன்!  அவள் ஓர் அரக்கி!  ஆயிரம் தடவை சொல்வேன், நீ ஏற்றுக் கொள்ளா விட்டால்!  அவள் குற்றம் புரிந்தவள்!  கொலைக் குற்றம் புரிந்தவள்!  அவள் செய்த கொலைக் குற்றத்துக்கு, முற்றிலும் உடைந்தையாக உதவியவள் நீ!  ஆனால் நான் தண்டிக்கப் போவது உன்னை யில்லை!  உன் மகளை!  உன்னருமை மகளை!  படுகொலை செய்த பாதகியை!  விடுதலையான புனிதரின் உதடுகளை முத்தமிட்டு விளையாடும் உன் போக்கிரி மகளைத் தண்டிக்கப் போகிறேன்!

ஏரோதியாஸ்:  [அழுத்தமாக]  என் மகள் எனக்கோர் உன்னத உதவி செய்திருக்கிறாள்!  மகிழ்ச்சி அடைகிறேன் நான்!  என் மகளுக்கு எதுவும் நேரக்கூடாது!  என் மகளுக்கு தண்டனை தர உங்களுக்கு உரிமை யில்லை!  அவள் கேட்ட வெகுமதிக்காக அவளைத் தண்டிக்க வேண்டுமா?

ஸாலமி:  அன்னையே! என்னாசை நிறைவேறி விட்டது!  யாருக்கும் நான் அஞ்சேன்!  யாருக்கும் நான் அஞ்சேன்! உன்னாசையும் நிறைவேறி விட்டது!

ஏரோத்:  [கோபத்துடன்]  இப்போது என்னாசை நிறைவேறப் போகிறது!  உன் மகள் ஒரு குற்றவாளி!  அவளுக்குத் தண்டனை தராவிட்டால் என் தலை வெடித்து விடும்!  எனக்குத் தூக்கமில்லை!  என்னாட்டுக்கு ஏதோ கேடு காலம் வரப் போகிறது. [காவலரை நோக்கி]  காவலரே! தீவட்டி விளக்குகளை அணைத்து விடுங்கள்!  காரிருளில் செய்ய வேண்டிய வேலையிது!  கத்தியை உருவுங்கள்!  அதோ! வாயில் குருதி சொட்டும் அந்த அரக்கியின் சிரத்தை வெட்டி எறியுங்கள்!  புனிதருக்கு அளித்த அதே தண்டனையை நான் அவளுக்கும் தருகிறேன்!  ஸாலமி வாழக் கூடாது!  அவளது காதலருடன் அவளும் சேரட்டும்!  போதகரைப் பின்பற்றி ஏகட்டும் ஸாலமி!  என் கண்முன்னே அவள் உயிரோடு உலவக் கூடாது!  கொல்லுங்கள் ஸாலமியை!  தப்பிச் செல்ல விட்டு விடாதீர்! [காவலர் விரட்ட ஸாலமி அலறிக் கொண்டு ஓடுகிறாள்!  காவலரைத் தடுக்க ஏரோதியாஸ் பின்னால் ஓடுகிறாள்.]  கொல்லுவீர் ஸாலமியை!  கொல்லுவீர் ஸாலமியை!

(திரை மூடுகிறது)

(முற்றும்)

**********************************

தகவல்

  1. Salome from The Plays of Oscar Wilde, The Modern Library, New York
  2. The Greatest Man Who Ever Lived By: Watch Tower Bible (1991)
  3. The Desire of Ages By: Ellen G. White
  4. The Story of Jesus By: Reader’s Digest (1993)
  5. Who is Who in the Bible, An Illustrated Biographical Dictionary By Reader’s Digest (1994)
  6. The New Testament & Psalms, Placed By the Gideons.
  7. The Original New Testament By Hugh J. Schonfield (1998)
  8. Encyclopaedia of Britannica [1978]
  9. Student Bible, The New International Version (2002)

10 The Artist’s Way (A Spiritual Path to Higher Creativity) By: Julia Cameron (1992)

11 Oscar Wilde By Richard Ellmann [1988]

12 Collected Works of Oscar Wilde [1997]

********************