தொடுவானம்
சி. ஜெயபாரதன், கனடா
தோல்விப் படிகளில்
ஏறி வந்தேன், வெகு
தொலைவில்
வானம் வெளுத்ததடா !
காலச் சுழற்சியில்
கோள் உருண்டு, எழும்
காலைக் கதிரொளி
பட்டதடா !
கீழே வீழ்ந்தயென்
கால் முறியும், ஆயின்
கிட்டே எனக்கொரு
கோல் தெரியும்.
ஆழக் குழியினில்
நான் விழுந்தும், எழ
ஆர்வம் நெஞ்சினில்
மேல் எழும்பும்.
தோல்விக்குப் பின்
கற்றது
கால்பந் தளவு !
வெற்றி பெற்ற பின்
கற்றது
கடுகு அளவு !
++++++++++++++++++++++++