தேய்பிறை மாயம் !

Lovers in Arms

சி. ஜெயபாரதன், கனடா

 

அற்றைத் திங்கள்
அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறா உப்புக் கடலில்
முத்தெடுத்தோம் !
சுற்றிச் சுற்றி மெய் மறந்தோம்
சொர்க்கப் படகில் !
வசந்த காலம் !
வளர் பிறைக் கோலம் !
கட்டினோம் நீண்ட பாலம்
கடல் அலை மீது  

எமக்குள் இருந்த
ஒற்றுமை வேர்களைப்
பற்றிக் கொண்டு
பழங்கதை பேசினோம் !
பாடினோம் ! ஆடினோம் !
படமெடுத்து நெஞ்சில் சூடினோம் !
விடியும் வரை
கனாக் கண்டோம் தோழி !
மண்ணில் தடம் படாது,
விண்ணில் பறந்தோம் !
தாகம் மிகுந்து
மோகக் கடலில் மூழ்கினோம்!

சிப்பிக்குள் முத்துண் டானது !
ஒப்புடன்
விதியின் ஆசியால் முடிந்ததெம்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் குளித்து,
சொர்க்க புரிச் சிகரம் விட்டு
இறங்கும் போது
எவர் பெருங்குடி என்று
தர்க்க புரியில்
தடம் வைத்தோம் !
முழு நிலவின் போலி அலைகள்
பழுதாக்கின
எமது மூளையை !

நேற்று மறந்த
வேற்றுமைக் கணையெல்லாம்
ஆற்றலுடன்  தாக்கின
முறிந்ததெம் மனப் பாலம் !
சேயிழைக்குப் பெருங் காயம் !
நாயக னுக்குச் சிறு காயம் !
தேய்பிறை மாயம் !
இற்றைத் திங்கள்
இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி உதயம் ஆனது !
அத்த மிக்கும் வானில்
தொத்தி எழும்
கரு நிலவு !

Crescent Moon -2

 

++++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  August  12, 2014 ( R-6)

5 thoughts on “தேய்பிறை மாயம் !

  1. Couldn?t be published any better. Reading this post reminds me of my old room mate! He always kept talking about this. I will forward this report to him. Pretty positive he will have a great read. Thanks for sharing!

  2. Wow! Your post has quite a few comments. How did you get so many people to view your post I’m envious! I’m still learning all about blogs on the net. I’m going to look around on your site to get a better understanding how to get more visable. Thanks for the help!

  3. Super-Duper internet site! I’m loving it!! Will come again again – taking you feeds also, Thanks.
    Hello. Good position. I did not anticipate this on the Wednesday. This is a good story. Thanks!

  4. Thank you for every other magnificent article. Where else could anybody get that kind of info in such a perfect method of writing? I’ve a presentation next week, and I am at the search for such info.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.