தங்க ஊசிகள் …. !
சி. ஜெயபாரதன், கனடா
தங்க ஊசி குத்தினால்
வலிக்காது
தாங்கிக் கொள்வாய் !
குருதி வந்தாலும்
மருந்திட்டுக் கொள்வாய் !
அங்கும், இங்கும்
எங்கும் தயாராகுது
தங்க ஊசி !
காதறுந்த ஊசி !
காந்தம் இழுக்காத ஊசி !
இரு புறமும் ஊசி முனை !
கடையில் கிடைக்காது
வீட்டுத் தோட்டத்தில்
களை யாக வளர்க்கப் படுவது !
காளையின்
கொம்பைச் சீவி விடுவது
அம்மா அப்பா !
தையல் யந்திரத்தில் உடை
தைக்காது !
கண்ணைக் குத்தும்
பெண்ணைக் குத்தும்
கையில் குத்தும்
மெய்யில் குத்தும்
பொய் அதற்குத் தேனில் ஊறிய
பொரி உருண்டை !
தங்க ஊசி தனி யாக
இருந்தாலும்
ஈராயிரம் பொன் !
உடைந்தாலும்
ஓராயிரம் பொன் !
+++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 3, 2012
அன்பின் கவிஞருக்கு ,
இன்றைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகளை தங்க ஊசியாக பாவித்து
எழுதி இருக்கும் இந்தக் கவிதை தங்களின் அபாரமான கற்பனைத் திறனைக்
காட்டியிருக்கிறது.
தாங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்…!
தாங்கள் சொல்வது போலவே “கொம்பைச் சீவி விடுவோர் பெற்றோர்களே”
நிகழ்காலத்தை தங்களின் குழந்தைகளின் கையிலே ரிமோட்டாகக் கொடுத்து விட்டு
கடந்த காலத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போதே… எதிர்காலம் உடைந்து
போன தங்கஊசிகளையே கையில் தரும் அவலம் வந்து சேருமோ?
பொறுத்திருந்து பார்க்க வேண்டுமா? இல்லை உடனே காத்துக் கொள்ள வேண்டுமா?
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
அன்புமிக்க ஜெயஶ்ரீ,
தங்க ஊசியின் கை, கால்களில் பெற்றோர் விலங்கிட வேண்டும். அனுதினக் கண்காணிப்பு தேவை.
சி. ஜெயபாரதன்.
++++