ஜெயகாந்தனுக்கு இரங்கற்பா

Jeyakanthan

ஜெயகாந்தனுக்கு இரங்கற்பா

தமிழகத்தில் முதன்மை பெற்றாய்

சி. ஜெயபாரதன், கனடா

வாழ்க நீ நண்பா ! இந்த

  வையத்தமிழ் நாட்டி லெல்லாம்

பாழ்பட்ட தமிழகத்தில் உயர்ந்த

   படைப்பா ளியாய் தனித்து நின்றாய்;

தாழ்வுற்ற மனிதர் பற்றி

 தரமுடன் எழுதி வைத்தாய்;

ஆழ்ந்து சமூக நோய்கள் காட்டி

 ஆக்கத்தில் முதன்மை பெற்றாய்.

++++++++++++++

என்னே உன் இதயத் துணிச்சல் !

 என்னே உன் எழுத்தில் அழுத்தம் !

என்னே உன் பேச்சில் புரட்சி !

 என்னே உன் கற்பனை எளிமை !

என்னே உன் மனிதர் படைப்பு !

 என்னே உன் கதைகள் அமைப்பு !

என்னே உன் வாழ்வின் குறிக்கோள் !

  எழுத்திலே முதன்மை பெற்றாய்.

+++++++++++++

புத்துயிர் பெறும் தமிழ்ப் படைப்பு

 புனைகதை பெறும் மெய்வடிவம்.

பித்தர் தெருவாழ் மாந்தர்க்குன்

 பேனா மெய்யுரு அளிக்கும்;

இத்தரை வாழ் திரை நடிகர்   

 இயல்புடன் நடிக்க வைத்தாய்;

முத்திரைத் திரைப்படம் இயக்கி

முயற்சியில் முதன்மை யுற்றாய்.

+++++++++++++++++

Recent Posts

2017 ஆண்டுப் படைப்புப் பார்வைகள்

நெஞ்சின் அலைகள்

வையகத் தமிழ்வலைப் பூங்கா 

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா​

[Click View to Read the Article​]


  • Views / Titles