சுயநலம்
சி. ஜெயபாரதன், கனடா
சுயநலம் நமது பிறப்புரிமை !
குருதியில் கலந்தது !
கூடப் பிறந்தது !
மனித ஆணிவேர் ஆவது !
சுதந்திரம் மனிதர் இறப்புரிமை !
பறி போவது ! மரிப்பது !
அதோ, அந்தோ !
புலி வருது ! புலி வருது !
புலிக்குப் பயந்தவர் என்மேல்
படுத்துக் கொள்வீர் !
கடவுள் படைப்பிலே
பெண் சுயநலம் !
ஆண் பொது நலம் !
ஆயினும் சுயநலம் இல்லையேல்
பொது நலம் இல்லை !
அன்னை தெரேசாவின்
காப்பில்லம் பொது நலமா ?
ஆத்மீகச் சுயநலம்,
மனச் சாந்தி !
சுயநலம் வளர்பிறை !
பொது நலம் தேய்பிறை !
வளர்பிறை, தேய்பிறை ஒருவித
ஒளிச்சுழற்சி மாயை !
நீர்க் குமிழியாய்
மேல் மிதக்கும் பொது நலம் !
நுனி மட்டும் தெரிய
பனிப் பாறைப் பெருங்குடல்
மூழ்கிடும் சுயநலமாய் !
முதல் மந்திரி
தனக்குப் போட்ட மாலைக்கு
தையல் மெஷின் கொடை அளிப்பார்
தன் பயணம் தொடர !
சுதந்திரம் என்பது பொதுநலமா ?
சுயநலமா ?
சுதந்திரம் பொதுநலச்
சுயநலம்
பொது நலத்தைப் பிளந்துள்ளே
பார்த்தேன்
பதுங்கி விழித்திருந்தது
சுயநலச் சிங்கம் !
பொதுநலம் விரியும் ஆலமரம்
சுயநலம் விழுது !
மேடையில்
தன் வாடை மணக்க
பொன்னாடை போர்த்துவார்
முன்னோடி மனிதர் !
சுயநலம் ஒரு செங்கல் !
பொதுநலம் கட்டிய கோபுரம் !
புவி வியப்பான
தாஜ்மகாலைக் கட்டியது
ஷாஜஹானின் சுய நலமா ?
பொது நலமா ?
++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 13, 2018 [R-2]
Incredible! Your blog has a lot readers. How did you get all of these people to see your blog I’m very jealous! I’m still learning all about posting articles on the internet. I’m going to look around on your blog to get a better idea how to achieve success. Thanks for the help!
A really usefull blog – big thanks I wish you will not mind me blogging about this article on my website I will also leave a linkback Thanks
பதிவுக்கு நன்றி. செய்தி தொகுப்பு மனதில் ஏறுகின்றது
Thanks a lot . please publish a Tamil book .
Thanks
Arumugam
Singapore
Respected Sir, I think that the Goddess Saraswathi would live in your soul.In simple words,your poet play a very emotional role.It is so because of the effort your father made and the way of thinking you extract from the great man your father.Both are the example charcter of the words THIRUVALLUVAR.,Your blessing is essential for us sir .
Respected sir,I think that the God Saraswathi devi would live in your soul. i pray to god for your healthylife.sir,this informations are veryuseful to us,how can we download this.please tell any idea to me.
அருமையான கவிதை… கடவுள் படைப்பில்பெண் சுயநலம் !
ஆண் பொதுநலம் ! இந்த வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய