சந்திரனைச் சுற்றும் இந்தியா !

cover-lunar-orbit-1

சி. ஜெயபாரதன், கனடா

சந்திரனைச் சுற்றுது
இந்தியத் துணைக் கோள் !
மந்திர மாய மில்லை !
தந்திர உபாய மில்லை !
சொந்தமான
இந்திய சக்தி !
பிந்திப் போயினும்
முந்தைய சக்தி ! யுக யுமாய்ச்
சிந்தையில் செழித்த
எந்தையும் தாயும்
தந்திடும் சக்தி ! ஆதி
அந்த மில்லாத சக்தி !
இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்
விந்தை யுக்தி ! பலர்
நிந்தனை புரியினும்
வந்தனை செய்வோம்
இந்தியர் நாமெலாம் !
உந்திப் பயணம் செய்த
சந்திரயான் வாழ்க !
இந்தியக் கொடி ஓங்குக !
எத்திசையும் புகழ் மணக்கும்
அப்துல் கலாம் வாழ்க !
செந்நிறக்கோள் அடுத்த பயணம் !
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்

++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 13, 2008

9 thoughts on “சந்திரனைச் சுற்றும் இந்தியா !

 1. முனைவர் ஜெயபரதன் அவர்களுக்கு,
  உங்களின் தமிழ்ப் படைப்புக்களை வளைத்தளத்தில் படிக்கும் வாய்ப்பு நண்பர் இரா.ரவியின் மூலம் கிடைத்தது. எல்லாம் மிகநன்றாக உள்ளன. நான் உங்களைப் போன்றவர்களை கோவைச் செம்மொழி மாநாட்டில் பார்த்துப் பேச வேண்டும் என விரும்புகிறேன். முன்பொரு மின்னஞ்சலும் அனுப்பியிருந்தேன். அடுத்தமாதம் நீங்கள் கோவை வருகிறீர்களா.

  அன்பன்,
  மயில்சாமி அண்ணாதுரை.

 2. மதிப்புக்குரிய முனைவர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு,

  வணக்கம் அருமை நண்பரே.

  உங்களிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் வருமென்று நான் கருத வில்லை. உங்கள் முதல் கடிதம் எப்படியோ தவறி விட்டது.

  இந்தியாவின் அற்புத விண்வெளிச் சாதனைகளை எல்லாம் நான் வலையில் எழுதி வருகிறேன். உங்கள் விடா முயற்சி, திறமையை வியந்து எழுதியிருக்கிறேன்.

  உங்கள் விண்வெளிச் சாதனைகள் இந்திய இளைஞருக்கு வழிகாட்டிகள். நிலவில் நீரிப்பதை நிரூபித்த இந்திய விண்வெளிச் சாதனைகள் உலகப் புகழ் பெறுகின்றன.

  இந்திய விண்வெளிச் சாதனைகள் :

  1. https://jayabarathan.wordpress.com/2010/02/27/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-1/

  2. https://jayabarathan.wordpress.com/2009/11/20/water-on-the-moon/

  3. https://jayabarathan.wordpress.com/2010/02/27/discovery-of-watery-ice-in-the-moon/

  நான் கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் படித்து (1952-1956) மெக்கானிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்று பெங்களூர் Indian Institute of Science இலும் மொம்பையிலும் அணுவியல் பயிற்சிக் கூடத்தில் (1958) ஓராண்டு Nuclear Physics & Engg படித்திருக்கிறேன். நான் முனைவரில்லை.

  இந்திய அணு உலைகளிலும் (25 ஆண்டுகள்) கனடா அணுமின் உலைகளிலும் (16) பணி புரிந்து இப்போது கனடாவில் ஓய்வில் இருக்கிறேன். நான் கோவைக்கு அடுத்த மாதம் வர இயலாத நிலையில் இருக்கிறேன்.

  உங்கள் பாராட்டுக் கடிதம் எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது.

  உங்கள் விண்வெளிச் சாதனைகள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்.

  ++++++++++++++++++++++++

 3. மதிப்புக்குரிய முனைவர் மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு,

  வணக்கம் அருமை நண்பரே.

  உங்களிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் வருமென்று நான் கருத வில்லை. உங்கள் முதல் கடிதம் எப்படியோ தவறி விட்டது.

  இந்தியாவின் அற்புத விண்வெளிச் சாதனைகளை எல்லாம் நான் வலையில் எழுதி வருகிறேன். உங்கள் விடா முயற்சி, திறமையை வியந்து எழுதியிருக்கிறேன்.

  உங்கள் விண்வெளிச் சாதனைகள் இந்திய இளைஞருக்கு வழிகாட்டிகள். நிலவில் நீரிப்பதை நிரூபித்த இந்திய விண்வெளிச் சாதனைகள் உலகப் புகழ் பெறுகின்றன.

  இந்திய விண்வெளிச் சாதனைகள் :

  1. https://jayabarathan.wordpress.com/2010/02/27/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-1/

  2. https://jayabarathan.wordpress.com/2009/11/20/water-on-the-moon/

  3. https://jayabarathan.wordpress.com/2010/02/27/discovery-of-watery-ice-in-the-moon/

  நான் கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் படித்து (1952-1956) மெக்கானிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்று பெங்களூர் Indian Institute of Science இலும் மொம்பையிலும் அணுவியல் பயிற்சிக் கூடத்தில் (1958) ஓராண்டு Nuclear Physics & Engg படித்திருக்கிறேன். நான் முனைவரில்லை.

  இந்திய அணு உலைகளிலும் (25 ஆண்டுகள்) கனடா அணுமின் உலைகளிலும் (16) பணி புரிந்து இப்போது கனடாவில் ஓய்வில் இருக்கிறேன். நான் கோவைக்கு அடுத்த மாதம் வர இயலாத நிலையில் இருக்கிறேன்.

  உங்கள் பாராட்டுக் கடிதம் எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது. நீங்களும் கோவை அரசினர் பொறியியற் கல்லூரிப் பட்டதாரி என்று மகிழ்ச்சி அடைகிறேன்

  விண்வெளிச் சாதனைகள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்.

 4. mylswamy annadurai to me
  show details 1:22 PM (3 hours ago)

  ஐயா ஜெயபரதன் அவர்களுக்கு,

  நீங்கள் கல்லூரிப் படிப்பிலிருக்கும் போது நான் பிறந்தே இருக்கவில்லை!!

  இன்று நீங்களும் நானும் அருகருகே
  காரணம் தமிழா?
  அறிவியலா? வலைத்தளமா?
  இரா.ரவியா?
  இல்லை எல்லாமேவா?

  அன்பன்,
  மயில்சாமி அண்ணாதுரை

  M.Annadurai
  Project Director, Chandrayaan-1&2
  ISRO Satellite Centre ,Bangalore
  INDIA ,
  Pin: 560 017
  Ph:+91 80 25082462
  Fax : +91 80 25082453

 5. அருமை நண்பர் மயிலசாமி அண்ணாத்துரை அவர்களுக்கு,

  நான் டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்திப் பேரவை அதிபதியாக இருந்த காலத்தில் அவருக்குக் கீழ் பணி செய்தவன். அவர் கனடாவின் அணுமின் உலைக்கு எரு ஊட்டும் யந்திரத்தின் நுணுக்கம் அறிய என்னைக் கனடாவுக்குப் பயிற்சி பெற 1971 இல் அனுப்பியவர்.

  எனது விஞ்ஞானக் கட்டுரைகளில் டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் அப்துல் கலாம் இருவரைப் பற்றியும் எழுதியுள்ளேன்.

  ஆகவே நம்மை இணைப்பவை முதலில் விண்வெளித் தேடல் விஞ்ஞானம், தாய் மொழி தமிழ், இரா. இரவி, வலைத்தலம் ஆகிய நான்கும்.

  டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்து போது எனது விஞ்ஞானக் கட்டுரை ஒன்றுக்குப் (கடலிலிருந்து குடிநீர்) பாராட்டுகள் அனுப்பியிருந்தார்.

  நான் நாசா, ஈசா, சைனா, ஜப்பான் செய்யும் விண்வெளி ஆய்வுகளைப் போல் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகளையும் கூர்ந்து ஆவலுடன் நோக்கி வருகிறேன்.

  கடந்த 10 ஆண்டுகளாக விண்வெளி பற்றியும், அணுசக்தி உற்பத்தி பற்றியும் 350 கட்டுரைகள் என் வலையிலும், (https://jayabarathan.wordpress.com/) திண்ணையிலும் (www.thinnai.com) வந்துள்ளன.

  கோவை அரசினர் பொறியியற் கல்லூரி நூலகத்தில் 1956 மெக்கானிகல் எஞ்சினியரிங் முதல் பட்டதாரி நிரலில் என் பெயர் உள்ளது.

  நாம் தொடர்ந்து கடிதம் எழுதி வருவோம்.

  நட்புடன்,
  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.