காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா

***********************

வானகம் எனக்கு போதி மரம்
வைர முத்துவின் ஞான ரதம்
வையகம் மக்கள் ஆதி வரம்
வள்ளுவம் எனக்கு வாழ்வு அறம்
.

காலவெளி எனக்கு ஓர் நூலகம்
கடவுள் படைப்பி லக்கண நாடகம்
ஐன்ஸ்டீன் கண்ட இறைப் பீடகம்
அகரத்தில் தொடரும் மூல ஏடகம்
.

கற்பது எனக்கு முதற்படி
காசினி அனுபவம் மேற்படி
படிப்பது முதுமையில் கைத்தடி
பயணம் வள்ளுவர் நூற்படி.

காலம் எனக்கு திசைகாட்டி
காவியம் எனக்கு வழிகாட்டி
ஞாலம் எனக்கோர் ஆலயம்
ஞானம் என்போர் ஆயுதம்.

===============