காம சக்தி

kama-sakthi

சி. ஜெயபாரதன், கனடா


பூக்கும் மலரில் பொங்கும் தேனது !
ஆக்கும் சக்தி !  ஆத்ம சக்தி !
அளவு மீறின் அழிக்கும் சக்தி !
கதிரலைச் சக்தி ! காந்த சக்தி !
துருவம் இரண்டு ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீதி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !

வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !
ஈரினம் இணைந்து பூரணம் அடைவது
மனித நியதி ! மானிட வளர்ச்சி !
காமம் உடற்கு கவின்தர வல்லது !
மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,
முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,
காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !

பைரன், பாரதி, ஷெல்லி, ஷேக்ஸ்பியர்
பாரதி தாசன், கண்ண தாசன்,
வள்ளுவர், வால்மிகி, வியாச முனிவர்
பாடகி மீரா, லதாமங் கேஷ்கர்,
ஆடகி மேனகை, மாதவி, ஊர்வசி,
வைஜயந்தி மாலா, கமலா, பத்மினி,
காளிதாஸ், கம்பன், கவிக்குயில் ஆண்டாள்,
காமக் கடலில் நீந்தாக் கலைஞர்
பூமியில் ஏது ? காம சுரப்பிகள்
கலைத்துவ வேர், உரம், நீரும் ஆகும் !

காம மிகுதி கலைசெயத் தகுதி !
காம சக்தியைக் கட்டுப் படுத்தி,
காவியம் படைப்போர் காலனை வெல்வார் !
ஓவியம் தீட்டுவோர் உயர்தனி மனிதர் !
நாடகம், நாட்டியம், பாடல் படைப்போர்,
சிற்பம் செதுக்கும் அற்புதச் சிற்பி,
ஆய்வுகள் புரிவோர், அறிவியல் ஞானி !
நுண்கலை வடிப்போர் மண்புகழ் பெறுவர் !

வறுமையும் நோயும் சுரப்பியின் நஞ்சு !
காமம் மீறுதல் தீமையின் விதைகள் !
பாமர மூடன் காமச் சுரப்பியைக்
காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !
காம சுரப்பிகள் காய்ந்து போனால்
அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !
முதுமையின் கருநிழல் முழுஉடற் பாயும் !
காவியம், கலைகள், ஓவியம் ஏது ?
நுண்கலை யாவும் கண்களை மூடும் !
நடனம் ஏது ? நல்லிசை ஏது ?
முடமாய்ப் போகும் நடமிடும் ஆத்மா !

*********************
S. Jayabarathan [(jayabarathans@gmail.com) March 13, 2014 (R-4)]

24 thoughts on “காம சக்தி

  1. உண்மைக் கவிதை-கவிதையில் சத்தியம். இந்த உண்ம புரிந்துவிட்டால் சிக்கலே இல்லையே. இது புரியாததும், புரிந்து கொள்ள மறுப்பதும், புரிந்ததுபோல் நடிப்பதும் மேலும் இதை சந்தைப் பொருளாக்குவதுமே இன்றயப் பிரச்சனை.

    கண்ணன்.

  2. I can say one thing about this poem. Only a person who knows and enjoys reading Tamil can understand the silky smoothness of this masterpiece. Like Kannadasan, Jeyabarathan’s verses flow like a stream.

    I really enjoyed reading and re-reading these lines again and again just to feel the smoothness and depth. I am amazed to find that an astro-physicist like Mr. Jeyabarathan found time to pen the poem in his native tongue Tamil. As a Tamizhan I congratulate thiru. Jeyabarathan.

  3. Dear Kannapiran,

    Thanks for your greetings. If one decides to write in Tamil or in English & enjoys the art of creative writing, one voluntarily learns the creative process in all forms of art : Poetry, Paintings, Drama, Articles, Story and Science. Each form of art has its own uniqueness, expressive merit & limit.

    Where do you live & work ? Please tell me about yourself.

    With Kind Regards,
    S. Jayabarathan.

  4. ரொம்ப அழகான கவிதை..அகவல் நடை. கருத்தும் உண்மையும்
    கலவிபோல் கைகோத்துச் செல்கின்றன…கவிஞர் எந்தன், உந்தன்..எனும் சொற்களைத்தவிர்த்து என்றன், உன்றன் எனப் பயன்படுத்த்வேணும்.(இது என் வேண்டுகோள்).தமிழுக்கு அதுவே அழகு.,யாரோ கட்சிக்காரங்க உந்தன் என்று சொல்லப்போக அது எப்படிச்சீரழிக்கிறது தமிழை..பாரீர்!,
    யோகியார் வேதம்

  5. அணுவை பிளந்தால் அருபெரும் சக்தி
    காமம் உணர்ந்தால் அதுபெரும் சக்தி..
    விளக்கத் தயங்கும் விசயமிது
    விளங்கி விட்டால் வசியமது

    கவிதைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…

    அன்புடன்,
    செல்வேந்திரன்

  6. Pingback: 2010 ஆண்டில் “நெஞ்சின் அலைகள்” வாசகர் கண்ணோட்டம் « நெஞ்சின் அலைகள்

  7. This domain seems to get a large ammount of visitors. How do you get traffic to it? It offers a nice unique spin on things. I guess having something real or substantial to give info on is the most important factor.

  8. This page appears to get a large ammount of visitors. How do you advertise it? It gives a nice unique spin on things. I guess having something authentic or substantial to say is the most important thing.

  9. Incredible! Your blog has quite a few readers. How did you get all of these bloggers to view your blog I’m very jealous! I’m still learning all about blogs on the internet. I’m going to view pages on your website to get a better idea how to attract more people. Thank you!

  10. I would like to thnkx for the efforts you have put in writing this site. I am hoping the same high-grade web site post from you in the upcoming as well. Actually your creative writing skills has inspired me to get my own website now. Really the blogging is spreading its wings fast. Your write up is a great example of it.

  11. i couldn;t agree a lot more with the school thesis statement! also, blogs which are written enjoy a rocket research blueprint can flip audience away fast. They may standing for certain keywords and phrases, but in the lengthy run no one should read it!

  12. அன்புள்ள ஐயா,
    தாங்கள் அறிவியலில் தான் வல்லவர் என நினைத்தால் அனைத்திலும் தங்கள் வல்லமை ஒளிர்கிறது.
    வாழ்த்துக்கள்

    மாதவ பாரதி

    • பாராட்டுக்கு மிக்க நன்றி அம்மா,

      உங்கள் உன்னத தமிழ்நடையே ஒர் எழுத்தாளர் என்று எனக்கு சொல்லாமல் சொல்கிறது. நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் ? எங்கிருந்து எழுதுகிறீர்கள் ?

      அன்புடன்,

      சி. ஜெயபாரதன்.

  13. Pingback: இதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2017) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா

  14. Pingback: 2019 ஆண்டில் வையகத் தமிழ் வாசகர் பார்வைகள் படிப்புகள் & பயன்பாடுகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வைய

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.