கலைஞன் ! காதலன் ! கணவன் !

சி. ஜெயபாரதன், கனடா

 

உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டி,
விற்பனை செய்பவன்
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தைப் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத் துணைக் கோளாய்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !

 

உரிமைச் சிறையி லிட்டு,
உன்னை உயிருள்ள மட்டும் மறைத்து,
உள்ள மற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பொருளாய்,
ஓடும் கைப் பம்பரமாய்,
பசும் பொன்னாய்  நிறுப்பவன்
அசுரக் கணவன் !
காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்ற
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்குமா
ஓருடலில் ?

 

ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை புகும் காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் பெறும் பதிக்கு !
வீணையாய் உனை மீட்டுவோன்
கலைஞன் !
தேனிசை நாதமாய் மூழ்க்குவோன்,
கலைஞன் !
கலைமானாய் உனை மாற்றுவோன்,
கலைஞன் !
நடன மயிலாய், நாட்டியச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
மதுவாய்க் காட்டுவோன் கலைஞன் !
ஊதியம் தந்து
நாடக மாடும் கலைஞன்
வாடகை வர்த்தகன் !

 

கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுவோன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை இட்டு
உடலை மென்று விட்டு
ஓடி மறைபவன்
உன்னிச்சைக் காதலன் !

 

உன் காதலன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவன் ஒரு
காதல னில்லை !
உன் காதலன் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவனும் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞனும்
ஒரு காதல னில்லை !

 

காதலன் கணவ னானதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னானதும்
கலைக்கண் பிறரை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !

 

காரிகை முன் செல்பவன்
கணவன் !
கன்னி பின் செல்பவன்
கலைஞன் !
கைகோர்த்துச் செல்பவன்
காதலன் !
கலைஞன் ஒரு கருடன் !
காதலன் ஒரு திருடன் !
கணவன் ஒரு குருடன் !

கவர்ச்சிப் பெண்ணே ! உன்
காந்த உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளை இறைவன்
ஒருவனுக்கு அளித்திடான் !
மும்மூர்த்திகள்
வேண்டாமா  உனக்கு ?

+++++++++++++++++++

திருத்தம் (R-5)  பிப்ரவரி 9, 2015

10 thoughts on “கலைஞன் ! காதலன் ! கணவன் !

  1. அன்புள்ள குலவீரசிங்கம்

    பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  2. Dear J Jayabarathan,

    There is a say that ‘there is one poet inside a scientist and there is one scientist inside a poet’. you just proved it.

    Rgds, M. Ravikumar, Secretary, Federation of Science Clubs of Tamilnadu (FSCT), Chennai.

  3. Excellent! Your site has a ton readers. How did you get all of these viewers to see your post I’m jealous! I’m still studying all about article writing on the web. I’m going to view pages on your site to get a better idea how to attract more people. Thank you!

  4. After long time, I could see very strong rationale thoughts in poetry without sacrificing the beauty of poetry. HATS OFF sir …..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.